சிறகுகள் விரியட்டும்...


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பதிவுலகில் நிறைய பெண்கள் தனித்தனியாக பிளாக் வைத்து இருந்தாலும் அவர்களால் கவிதை , கட்டுரை, சமையல் குறிப்புகள் கொடுக்க முடிந்தாலும் பெரும்பாலும் இஸ்லாம் தவிர்த்த மாற்று மத சகோதர சகோதரிகளின் உள்ளத்தில் இன்னும் இஸ்லாமில் பெண்களுக்கிடையில் முழுமையான அளவுக்கு சுதந்திரம் இல்லை என்ற மனப்போக்கு இருக்கிறது . இதை பதிவுலகில் கேலி கிண்டலுடன் பல இடங்களில் ஒரு விவாதமாகவே நடந்தும் வருகிறது.
அத்தகைய மனப்போக்கிற்கு பெரும்பாலும் ஆண்களே அதிகம் பதில் கொடுத்து வந்தாலும், இஸ்லாமிய பெண்களால் மட்டுமே தனி குழுவாக தகுந்த பதில் கொடுக்க ஒரு பிளாக் தேவைப்பட்ட இக்காலத்தில் இந்த இஸ்லாமிய பெண்மணி வெளிவந்திருப்பது காலத்தின் அவசியம் ...!!
இதன் மூலம் இஸ்லாமில் பெண்களுக்குள்ள உரிமைகள் , அவர்கள் நடந்துக்கொள்ளும் முறை இனி முழு உத்வேகத்தில் வெளிவரும் என்று நிச்சயமாக நம்பலாம் . இது பெண்களுக்காக பெண்களே முன்னின்று நடத்துவதால் அனானியாக , ஆண்கள் பெண்கள் பெயரில் போலியாக உலாவருவதும் தடுக்கப்படும்.
ஆக இது ஒட்டு மொத்த இஸ்லாமிய பெண்மணிகளின் ஓங்கிய குரலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் .இன்னும் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட அளவில் சிந்தனைகள் , நகைச்சுவைகள் , வரலாற்று பின்னணிகள் , விழிப்புணர்வு கட்டுரைகள் அனைத்தும் இந்த பிளாகில் வெளிவரும்.

முக்கிய குறிப்பு:  பங்கெடுக்க ஆர்வமிருக்கும் இஸ்லாமியப் பெண்கள்  மெயில் மூலம் அல்லது பின்னூட்டம் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களின் ஆக்கங்களும் இதில் வெளியிடப்படும். அனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com  . இந்த முயற்சியை இறைவன் வெற்றியாக்க துஆ செய்யுங்கள். தெரிந்தவர்களிடத்தில் இந்த ப்ளாக்கை பற்றி அறிமுகம் செய்யுங்கள்

சிறகுகள் விரியட்டும்

வஸ்ஸலாம்

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

al qur'an 03 :104