Wednesday, May 17, 2017

தந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்

   
சமீபத்தில் வெளியான  +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளிபடுத்தும் சமயத்தில் நமக்கு அறிமுகமானார் 1192 மதிப்பெண் எடுத்த ரிஹானா பாத்திமா.


ரிஹானா, கம்பம் பகுதியை சார்ந்தவர். தந்தை இஷாக் மளிகைக்கடை நடத்திவருகிறார்.  அவரிடம் முதலில் பேசினோம்.

"எங்கத்தா படிச்சது 4வது வரை, நான் பத்தாவது வரை படிச்சிருக்கேன், என் மனைவி பிஏ படிச்சிருக்காங்க, மளிகைக்கடை நடத்திட்டு வரேன். மூத்தப்பொண்ணு நல்லா படிச்சுச்சு.   கட்ஆப் மார்க் வச்சு  மதுரை மெடிக்கல் காலேஜ்ல படிச்சுட்டிருக்காங்க, 2வது பொண்ணுதான் ரிஹானா.   கம்பத்துல தான் முதல்ல படிச்சுச்சு. நல்ல மார்க் எடுத்துட்டிருந்தாங்க,  அக்கா மாதிரியே தங்கச்சியையும் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்துடணும்னு தான் ஆசை எனக்கு, அதனால நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுல தரமான ஸ்கூல்ல சேர்த்துவிட்டேன். வித்யா விகாஸ்ல படிச்சாங்க. 1192 மார்க் எடுத்திருக்காங்க, நீட் எக்சாம் எழுதியிருக்காங்க" என வரிசையாய் எல்லாம் விவரித்தார். 
ரிஹானா பற்றி பேசத்தான் வந்தோம். ஆனால் ரிஹானாக்கு முன்பே ஒரு மருத்துவரை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது அறிந்து ஆச்சர்யப்பட்டோம்.  மீண்டும் தொடர்ந்தார்
"மூத்தப்பொண்ணு உம்மு ரீஷ்மன்  நல்லா படிச்சுச்சு, இன்னும் 20 மார்க் வாங்கினாங்கன்னா மெடிக்கல் கட்ஆப் கிடைக்கும்னு என் மனைவியின் உறவினர் என்னிடம் சொல்லி  மூத்தப்பெண்ணை வேறு ஸ்கூலில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது எனக்கு கட்ஆப் ன்னா என்னன்னு தெரியாது, சரி இப்படி சொல்றாங்களேன்னு நானும்  முயற்சி பண்ணி சேர்த்தேன். +2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தாங்க. இப்போது மதுரையில் தங்கி படிக்கிறாங்க". 
லகரங்கள் கொட்டினால் தான்  மருத்துவராக முடியும் என்ற கோட்பாட்டை உடைத்தெறிந்த  இரு மாணவிகளும்  தன் மேற்படிப்புக்காக முதலீடு செய்ததெல்லாம்  படிப்பை  மட்டுமே. 

ரிஹானாவிடம் பேசினோம்,  மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்மந்தமேயில்லை என்பது உண்மையோ இல்லையோ,  ஆனால் ரிஹானா  தன் மதிபெண்களைப்போலவே மிக மதிநுட்பமான பெண்ணாய் பேசினார்.   

எந்த ஸ்கூல்ல படிச்சீங்க, வருங்கால லட்சியம் என்ன போன்ற சம்பிரதாய  கேள்விகளுக்கு வேலை இல்லை. அதைவிடவும் வாயடைக்கும் விதமாய் நிறைய  பேசினார்.

நீட் எக்சாம்  தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு தான் இல்லையா?
தேர்வு கஷ்டம் தான். இறுதி நேரத்தில் சொன்னதால் முன்னேற்பாடுகள் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். ஆனா அடுத்த வருஷம் கண்டிப்பா நம்ம மாணவர்கள்  ஈசியா இந்த தேர்வை எதிர்கொள்வார்கள்.  
நீட் எக்சாம் எப்படி எழுதுனீங்க?
நீட் தேர்வுக்காக  அத்தா தனியாக கோச்சிங் க்ளாஸ் அனுப்பினாங்க.  நல்லா எழுதியிருக்கேன். ஆனால் தேர்ச்சியாக அது போதாது.
என்ன இப்படி சொல்றீங்க ? அக்காவை மாதிரி டாக்டராவது தான் உங்களின் லட்சியமும் கூட, ஆனால் மார்க் இத்தனை வாங்கியும் அக்காப்போல் எளிதாக   மெடிக்கல் சீட் கிடைக்காது போலையே? ரொம்ப மெனக்கெடவேண்டி இருக்குமோ?  
இந்த பயிற்சியில் கலந்துகொண்ட எல்லா மாணவர்களும் நான் எதிர்பார்க்கும் மார்க் அளவில் தான் எடுத்திருக்க முடியும் என சொல்கிறார்கள்.  அந்தளவுக்கு சவாலான விஷயமாக தான் தேர்வு இருந்தது. எனினும் நான் விடப்போவதில்லை. ஒரு வருசம் தீவிரமாய் பயிற்சி எடுத்து அடுத்த வருடம் நீட் எக்சாம் எழுதி எப்படியும்  மெடிக்கல் பீல்ட்ல அத்தாவின் ஆசையை நிறைவேற்றுவேன். 
நீட்டை நீங்க விடப்போறதா இல்லை, பாராட்டுக்கள்.   உங்க ஊர் கம்பம் என்றாலும்,  திருச்செங்கோடுல படிச்சிருக்கீங்க. நாமக்கல் கல்வி வட்டாரம்  படிப்பு விஷயத்தில் மாணவர்களை ரொம்ப அழுத்தங்களுக்குள்ளாக்கும்   அம்சம் தானே? 
கம்பத்துல படிச்சுட்டிருக்கும் போதே என் மார்க் பார்த்துட்டு அத்தா, அதை விடவும் தரமான ஸ்கூலில் சேர்க்க ஆசைப்பட்டாங்க. நாமக்கல் கல்வி முறை பற்றி எனக்கு நல்லாவே தெரியும். என்னால் மார்க் அதிகம் வாங்க முடியும் எனும்போது அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எனக்கு பொருட்டே அல்ல என மனதளவில் முதலில் என்னை தயார்படுத்திக்கிட்டேன்.  ஆனால் அங்கே சென்ற பின் அப்படி எதுவும் எனக்கு தோன்றவில்லை. நல்ல மார்க் எடுக்கணும்னுதான் இந்த ஸ்கூலில் சேர்த்துவிடுறாங்க, நல்ல மார்க் எடுக்க முடியாதவங்களுக்கு ஸ்கூல் நடைமுறைகள் கஷ்ட்டமாகத்தான் இருக்கும். நான் எந்த அழுத்தமும் எதிர்கொண்டதில்லை. 
ரொம்ப தெளிவா பேசுறீங்க,  என்னதான்  நம் குடும்ப சூழல் காரணமாக நாம்  கட்டுகோப்பாய் இருந்தாலும்  ஹாஸ்ட்டல் முறை என வரும்போது பல வழிகளில் மாணவ மாணவிகளின் வாழ்க்கை சூழல் மாறிடுதே? 
சேர்க்கும் போதே தரமான ஸ்கூலில் சேர்ப்பதுடன், தரமான நிர்வாக முறை கொண்ட ஹாஸ்ட்டலில் தேடி சேர்ப்பதும் பெற்றோரின் கடமை தான்.   எத்தனையோ ஸ்கூல் இருந்தும் கூட  வெளியூரில் தங்கி படிப்பதால் பெண்கள் தனியே படிக்கும் வித்யாவிகாஸ்-ல் சேர்க்க நினைத்தது மட்டுமல்லாமல், அதிலும் சரியான ஹாஸ்ட்டலை தரம் பிரிச்சு தந்தார்கள் என் பெற்றோர்கள்.   இறையச்சமும், பெற்றோர்களின்  அறிவார்ந்த இடத்தேர்வும் இருந்தால் எந்த மாணவ மாணவிகளும்  தடம் மாறமாட்டாங்க. ஏனோதானோன்னு பிள்ளை வளர்த்து கடமைக்கு வெளியூர் ஸ்கூலில் படிக்க வச்சா நீங்க சொன்ன  சூழல் நிலவலாம்.  
மாஷா அல்லாஹ், படிப்பு விஷயத்தில் உங்கள் பெற்றோர்களின் முயற்சி ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது. அது மற்ற  பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கும் முன்னுதாரணம். ஆனாலும் அவர்கள் புறக்காரணிகளால் அதாவது உறவினர்கள் நண்பர்கள் ஆகியவற்றால் குழம்பியிருக்கக்கூடும் தானே?

ஆமாம்.  சொந்தக்காரங்க சொல்லத்தான் செஞ்சாங்க "பொம்பளப்புள்ளையை ஏன் இவ்வளவு தூரம் அனுப்பி படிக்க வைக்கிற. ஊர்லையே நல்ல ஸ்கூலில் படிக்க வைக்கலாமே"ன்னு. அத்தா யோசிக்கத்தான் செஞ்சாங்க, என்றாலும் எங்கள் கல்வி மேம்பாட்டில் அவருக்கு அக்கறை இருந்தது,  எங்கள் கல்வி வீணாகி விடக்கூடாது என்ற வருத்தமும் இருந்தது. தேடி தேடி நல்ல ஸ்கூல் தேர்ந்தெடுத்து தந்தாங்க.  அதிகம் படிப்பறிவு இல்லாத நிலையில் எங்கள் மேல்படிப்புக்கு என்ன விஷயங்கள் செய்யணும்னு தேடி தேடி ஒவ்வொருவரிடமும் விசாரிச்சாங்க. வெளியூர்க்கு புள்ளையை படிக்க அனுப்பினாலே ஒழுக்கம் விஷயத்தில் கெட்டுப்போய்டுவாங்க என்ற அழுத்தங்களையும் தாண்டி எங்களை அவங்க நம்பினாங்க. அதுக்கு அவங்க வளர்ப்பு முறையில்  வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். 
நம் சமுதாயப் பெண்கள் இப்போது  அதிகம்  கல்வி விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். உங்கள் பார்வையில் எப்படி தெரிகிறது?
இன்னும் மாற்றம் வரணும். நல்ல மதிப்பெண் பெற்றும் பிள்ளைகளின் படிப்பை பாதியிலேயே  நிறுத்திவிடக்கூடிய பெற்றோர்கள்  இன்னும் இருக்காங்க.   அடுத்து என்ன படிக்கலாம்னு தெரியாம கூட பலர் இருக்காங்க.   என்னை பொறுத்தவரைக்கும் இந்த விழிப்புணர்வு போதாது. 
நல்லமாற்றம் கிடைக்கணும்னா என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
பெண்களுக்கு கல்வியை கட்டாயமாக்குவதோடல்லாமல் உயர்கல்விக்கும் அவங்களை தயார்ப்படுத்தனும். நிறைய பெற்றோர்கள் தயங்குவதே நம்ம புள்ளையை யாரும் தப்பா பேசிடுவாங்களோ என்பதற்காகத்தான். இந்த எண்ணம்லாம் அகலணும்.   என் அம்மா பிஏ படிச்சாங்க, அதனால்   அத்தாவுக்கும் புரியவச்சு எங்களை இந்த நிலையில் நிறுத்தியிருக்காங்க. நானும் அக்காவும் எல்கேஜில இருந்து எந்த டியூசனும் போனதில்லை, அம்மாவே எங்களுக்குச் சொல்லி கொடுப்பாங்க. அதுவே எங்களுக்கு போதுமானதாக இருந்துச்சு.  அவங்க படிச்சதுனால தான் தன் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடிஞ்சது. அதே போல், நம் சமுதாய மக்கள் தம் பெண்மக்களை  அதிக கல்வி கொடுக்க முன்வரணும், இவங்களை பார்த்து மற்ற பெற்றோர்களும் தம் பெண் பிள்ளையை தைரியமாக படிக்க வைப்பார்கள். இது தொடர் நிகழ்வாகும்போது நம்  சமுதாயமும் கல்வியில் மேன்மையான இடத்தை அடையும். 
ரொம்ப அருமையா பேசுனீங்க ரிஹானா.  ஹிஜாப் பேணி சாதனை படைக்க எந்நாளும் எங்கள் பிரார்த்தனையில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் இடம்பிடிப்பீர்கள்.  தனக்கு மட்டும் பெருமை சேர்க்கும் மகள்களாக அல்லாமல் சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய குழந்தைகளாக உங்களையும்  உங்கள் அக்காவையும் வளர்த்துக் கொண்டு வந்துள்ள  உங்கள் பெற்றோர்கள் நம் சமுதாயத்தின் மற்ற பெண்களுக்கும் உங்களை முன்மாதிரியாக்கியிருக்கிறார்கள். நீங்கள் சொன்னது போலவே  நிச்சயம் உங்களைப் பார்த்து, பல பெற்றோர்களுக்கும் தம் மகளை உயர்கல்விக்கு  அனுப்பும் ஆசை இப்போது அதிகரிக்கும். மென்மேலும் பல சாதனைகள் படைத்திட வாழ்த்துகள். உங்களின் ஒவ்வொரு  சாதனைக்கு பின்னும், உங்கள் சாதனையை எங்கள் இஸ்லாமியப்பெண்மணி.காம்மில் பதிந்திடவும் மறக்காதீர்கள். 

ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 
________________________________

மிக அழகிய உரையாடலாக அமைந்தது ரிஹானாவுடன் பேசியது. பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தவும் செய்தார்கள். அவருடனும் அவர் தந்தையுடனும் பேசியதில்  உள்வாங்கக்கூடிய ஆழமான விஷயமும் இருந்தது. அதிலொன்று, உங்கள் வீட்டுக் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறக்கூடியவர்களாக இருக்கலாம், அதை கொண்டு திருப்திப்பட்டுக்கொள்வதை விடுத்து  அவர்களின் அறிவுக்கும் தகுதிக்கும் தகுந்தபடி  களத்தை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொன்னார்கள்.

ஒரு அழகிய  ஹதீஸ்ஸுடன் நிறைவுக்கு வருவோம் ,

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127)


பேட்டியும் ஆக்கமும்,
ஆமினா முஹம்மத்
-----------------------------------------------

நன்றி : 
அறிமுகம்  செய்தவர் - சகோதரர் இத்ரிஸ்
read more "தந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்"

Tuesday, May 09, 2017

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா??? - எழுதியவர். Shakila Kadher

"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம்.எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன்-7:10) என்பது இறைவாக்கு.

அப்படியானால் இந்த பூமியை. மட்டுமே மனிதர்கள் வசிக்குமிடமாக அமைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது.

பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

எங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராணவாயு நீர் ஆகியவை உள்ளதோ அங்கே தான் உயிர்கள் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.

புதன் கோளில் காற்று மண்டலம் இல்லை.மற்ற கோள்களை விட இங்கு வெப்பம அதிகம். இந்தக் கோளின் அதிகபட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் பூமியின் ஈர்ப்பு விசையைப்போல் 3 ல் 1 பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு உள்ளது. இதனால் இதில் மனிதனால் வாழ முடியாது.

வெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தை போல 11 மடங்கு அதிகம். இங்கு உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனும் இல்லை.

சூரியனிலிருந்து 23 கோடி தூரத்தில் உள்ளது செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்ஸைடு செந்நிறமாகக் காட்டுகிறது. இதனால் இதற்கு செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.

பூமியில் உள்ள காற்றில் 100ல் 1பங்கு காற்று தான் இதில் உள்ளது. அந்தக் காற்றில் கூடஒரு சதவீத அளவே ஆக்ஸிஜன் உள்ளது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.வியாழன் கோளிலும் மனிதன் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போல பாறைக் கோளாக இல்லாமல் வாயுக் கோளாக உள்ளது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது.இங்கு சென்றால் நம் எடை 2 1/2 மடங்கு அதிகரிக்கும்.நம் எடையை நாம் தாங்க முடியாத நிலை ஏற்படும்.

சனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது.இங்கு வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க. முடியாது.யுரேனஸ், நெப்டியூன் , புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.

பூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத்தேவையான நீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது.எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது.

பூமி வசிக்கும் இடமாக இருப்பது பற்றிய பல வியப்பான தகவல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

உயிரினங்கள் வாழ வேண்டுமெனில் உடல் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வெப்பம் இருப்பது அவசியமானது.

சூரிய ஒளிக்கற்றையில் அபாயகரமான மின் காந்தக் கதிர்கள் புற ஊதாக்கதிர்கள் அடங்கியுள்ளது.

சூரியனிடமிருந்து பெறப்படும் வெப்பம் நேரடியாக மனிதர்களின் உடலில் பட்டால் அவற்றிலிருந்து வெளிப்படுகின்ற புற ஊதாக்கதிர்களால் மனிதனும் பிற உயிரினங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஓசோன் எனும் படலத்தை பூமியைச் சுற்றி வளையம் போல் அமைத்தான் இறைவன் அது
மட்டுமல்ல, சூரியனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தக்க வைத்துக்கொள்ளக் கூடிய வளிமண்டலமும் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.

மேலும் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றும்போது 23.4 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது.இப்படி சுற்றுவதால் தான் கோடைக்காலம், குளிர் காலம் வசந்தகாலம் என பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன.ஆண்டு முழுவதும் சீரான வெப்பமோ அல்லது குளிரோ இருந்தாலும் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.

மொத்தத்தில் மனிதன் வாழ்வதற்கு சாதகமான,வசதியான வாழ்விடம் அல்லாஹ் சொல்வது போல "பூமி " மட்டுமே.. !! சுப்ஹானல்லாஹ்.,. !!!
read more "மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???"

Monday, May 01, 2017

மறுவாழ்வு


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்..

மறுவாழ்வு - அறிவியல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கட்டுரை - எழுதியவர். சகோதரி ஹுஸைனம்மா


அலறிக் கொண்டே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பிரேக் அடித்து நிலைய வாசல் முன் நின்றது.... வேக வேகமாக வந்த ஊழியர்கள், ”சிறப்பு நோயாளியை” ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி, சிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். தயாராக இருந்த மருத்துவர்கள், தம் பணியைத் தொடங்கினார்கள்.
அது என்ன சிறப்பு நோயாளி? முதலில், வந்தது நோயாளியே அல்ல, நோயால் இறந்து போய்விட்ட பிணம்!! இதென்ன மற்றொரு “ரமணா” கதையா என்று யோசிக்கிறீர்களா? இல்லை, உயிர்போன பின்புதான் இங்கு கொண்டு வருவார்கள். ஆகையால் ஏமாற்று வேலை ஒன்றும் இல்லை. எனில், என்ன செய்கிறார்கள் உயிரற்ற உடலை வைத்து? உறுப்பு மாற்று சிகிச்சையா? மூச்...அதெல்லாம் செய்ய முடியாது இங்கு.
முதலில் அந்த உடலில் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி.... வெயிட், வெயிட்!! எம்பால்மிங்-லாம் இல்லை.... இது வேற லெவல்... பொறுமையா வாசிங்க! இரத்தத்தை முழுமையாக வெளியேற்றிவிட்டு, உடல் பாகங்கள் உறைந்து போகாதிருக்கவும், கெட்டுப் போகாதிருக்கவும் தேவையான சிறப்பு மருந்து கலவையை உடலின் ஒவ்வொரு இண்டு இடுக்குக்கும் பரவுமாறு செலுத்துவார்கள். இப்போது, கண்ணாடி போல உள்ளிருப்பது தெரியக்கூடிய “vitreous" நிலைக்கு மாறியிருக்கும் உடலை, பெரிய ஃப்ளாஸ்க் போன்ற குடுவையில், -196 டிகிரி செல்சியஸில் இருக்கும் திரவ நைட்ரஜனில் வைப்பார்கள். இப்போ குடுவையை மூடிவிட்டுப் போய்விடுவார்கள்.
எப்போ திறப்பார்கள், உடலை எப்போ வெளியே எடுப்பார்கள்? யாருக்குத் தெரியும்? உள்ளே வைக்கும் அவர்களுக்கே தெரியாது எனும்போது, உங்களுக்கும் எனக்கும் எப்படித் தெரியும்?
என்ன குழப்புதா? இறந்து போன இந்த உடல், “CRYONICS” என்ற முறையில் கடுங்குளிர் நிலையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது!! ஆனால், இது எம்பால்மிங் அல்ல. எம்பால்மிங் உடலை அடக்கம் செய்யும் வரை பாதுகாப்பதற்காகச் செய்யப்படுவது. “CRYONICS” என்பது - தொடர்ந்து வாசிக்குமுன் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் - இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் வரை அவ்வுடலைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்க செய்யபடுவது!!
ஙே....!!! ஆனால், அதுதான் உண்மை!!
#CRYONICS” என்றால் மிக மிக மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பது (குறைந்த பட்சம் -136 டிகிரி செல்ஷியஸ்) என்று பொருள். 1962-ல் Robert Ettinger என்பவர், இறந்து போனவரை உயிர்ப்பிக்கும் மருத்துவ முன்னேற்றம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்றும், அந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்போது, உயிர்ப்பிப்பதற்காக இறந்த உடல்களை உறைய வைத்து பாதுகாக்கலாம் என்றும் The Prospect of Immortality என்ற தனது புத்தகத்தில் எழுதினார். அதற்கு முன்பும், பின்புமான ஆய்வுகளைத் தொடர்ந்து, முதல் உடல் 1967-ல் உறைய வைக்கப்பட்டது.


தற்போது, இந்த “உயிர்ப்பித்தல்” ஐடியா அமரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்காவில் இரண்டு நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவில் ஒரு நிறுவனம் இந்தச் “சேவையை” வழங்கிவருகின்றன. அமெரிக்காவின் Alcor Life Extension Foundation நிறுவனம், முழு உடலைப் பாதுகாக்க $200,000 -மும், தலையை மட்டும் பாதுகாக்க $80,000 One time fees ஆக வாங்குகிறது. ரஷ்யாவின் KrioRus நிறுவனம் உடலுக்கு $36,000, தலைக்கு $18,000 கட்டணம் பெறுகிறது.
தலைதானே உடலுக்குப் பிரதானம். மூளையில்தான் எல்லா செய்திகள் - தகவல்கள் -அறிவுசார் விஷயங்கள் பதிந்து காணப்படுகின்றன. உயிர்வாழ, மூளை மிக அவசியம். அல்லது மூளை மட்டுமாவது அவசியம் என்பதால், பொருளாதார காரணம் கருதி தலையை மட்டும் பாதுகாக்கிறார்கள். உயிர்ப்பிக்கும் தொழில் நுட்பம் வந்ததும், மூளையிலிருக்கும் தகவல்களை ஒரு ரோபோவில் டவுன்லோட் செய்து ரோபாவாக வாழலாமாம்!! அட, நீங்க சுவத்துல தலைய முட்டிக்காதீங்க.... உங்க மூளை சேதாரமாச்சுன்னா பதப்படுத்த முடியாது!!
இறந்தவரை உயிர்ப்பித்தல் என்பது எவ்வளவுக்கு சாத்தியம் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி எனச் சொல்லலாம். சென்ற நூற்றாண்டில் சாத்தியமேயில்லை என்று உறுதியாக நம்பப்பட்ட எத்தனையோ விஷயங்கள் சாத்தியமாகும் அளவுக்கு இன்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருக்கிறது உலகம். ஆனால், எப்போது சாத்தியமாகும் என்பதும் விடை தெரியாத கேள்வியே.
சிக்கலான அறுவை சிகிச்சைகளின்போது, மூளைக்கு இரத்தம் செலுத்த முடியாத நிலையில், பாதிப்பிலிருந்து பாதுகாக்க, மூளையை +20டிகிரி செல்ஷியஸுக்குக் கீழ் குளிர வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஹைப்போதெர்மியா என்ற இந்த முறையில், அதிகபட்சம் அரை மணி நேரம் வரை அவ்வாறு வைத்திருக்கலாம்.
மாரடைப்பால் நின்று விடும் சில இருதயங்கள், அதிக அளவில் மின் அதிர்வு கொடுத்து மீண்டும் இயங்க வைத்திருக்கிறார்கள்.
மேலும், தற்போதைய மருத்துவ உலகில், விந்தணு, கருமுட்டை, embryo என்ற ஆரம்பநிலை கரு போன்றவை உறைநிலையில் வைக்கப்பட்டு, பின் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தப் படுகின்றன.
ஆகையால், பிற்காலத்தில் இதுவும் நடக்கலாம் என்று நம்புபவர்களும் உண்டு. பிறப்பும், இறப்பும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரங்கள். அவற்றை மனிதன் வெற்றிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அப்படியே செய்தாலும், முழுமையாக இராது. சில குறைபாடுகளோடுதான் சாத்தியம் என்போரும் உண்டு.
தொழில்நுட்ப ரீதியாக முடிந்தாலும், உளவியல் ரீதியாக இத்திட்டம் மன நலப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இறந்த ஒருவரை, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழித்து உயிர்ப்பிக்கும்போது, அக்கால கட்டத்தோடு அவரால் பொருந்திப் போக முடியாது என்றும், தனக்குத் தெரிந்த யாருமே இல்லாத உலகில் உயிர்வாழ்வது மிகுந்த மன நெருக்கடியையே அவருக்குத் தரும்; ஆகவே இத்திட்டம் தொடரக்கூடாது என்றும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
மனிதனுக்கு இறந்தவனை உயிர்ப்பிக்க வேண்டுமானால், இறந்த உடல் தேவை. அதற்கான தொழில்நுட்பங்கள் தேவை. எல்லாம் சரியாக இருந்தாலும், முழுமையாக வெற்றியடைவார்கள் என்றும் சொல்ல முடியாது.
ஆனால், இறந்த உடல் முழுதும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும், எரிந்து போனாலும், எதுவுமே இல்லாமல் மனிதர்களை உயிர்ப்பிப்பவன் இறைவன் ஒருவனே!! ஆனால், மனிதர்களின் அறிவை நம்புபவர்களால், இறைவனின் ஆற்றலை நம்பமுடியாது போகிறது!!
56:47. மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
read more "மறுவாழ்வு"

Monday, April 17, 2017

வலி நிவாரணி

டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

வலி நிவாரணி - ஆஸ்பிரின் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு (இரண்டாமிடம் பெற்ற கட்டுரை) - எழுதியவர்.Nadhira Deen


நம் வாழ்வின் வழியெங்கும் வரும் விதம், விதமான வலிகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டியுள்ளது.

வலி என்பது மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல், இறப்பு வரை ஏதாவது ஒரு வகையில் கூடவே பயணம் செய்யும் அசவுகரியம். அடுக்கடுக்காய் தொல்லை தரும் அவஸ்தை. ஆளையே முடக்கி போடும் வல்லமை பெற்றது.

நம்மை அணு , அணுவாய் சித்திரவதை செய்யும் வலி முதல், ஆட்கொல்லி நோய்கள் வரை அல்லாஹ் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை.

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை...என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி பாகம் 7…அத்தியாயம் 71: ஹதீஸ் எண் 582)

கற்கால மனிதர்கள் வலி என்பது கடவுளின் தண்டனை என்றே நம்பினர். எனவே கடவுளுக்கு விலங்குகளை பலியிடுவதன் மூலமும், வேண்டுதல்கள் மற்றும் ஒலி எழுப்பும் கருவிகள் மூலம் கெட்ட ஆவியை பயமுறுத்தி வலியை குணமாக்க முயற்சித்தனர். தென் அமெரிக்கர்கள் முரட்டுத்தனமான trepanation எனப்படும் தலையில் துளையிடும் முறையை வலி போக்க பயன்படுத்தியுள்ளனர்.

அதன் பின் வந்த பண்டைய காலங்களில் வலியிலிருந்து தப்பிக்கவும், நிவாரணம் பெறவும் பல வகையான மருத்துவ முறைகள் உபயோகிப்பட்டுள்ளன. 

அவற்றில் ஒன்று நபி ஸல் அவர்கள் செய்த, பரிந்துரைத்த குருதி உறிஞ்சியெடுத்தல் எனப்பட்ட ஹிஜாமா. இம்முறையை சீனர்கள், எகிப்தியர்கள் மற்றும் ரோமர்களும் கடைபிடித்துள்ளனர்.

16-ஆம் நூற்றாண்டில் ஓபியம், மார்ஃபைன் போன்ற போதை மருந்துகளை வலி நிவாரணியாக பயன்படுத்தும் வழக்கமிருந்தது. இவை சிறந்த பயனைத் தந்தாலும் அந்த போதைக்கு மக்களை அடிமையாக்கியது.
இவ்வாறு சென்று கொண்டிருந்த வலி மருத்துவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர் ஹிப்போக்ரடீஸ். வில்லோ மரத்தின் மரப் பட்டையில் சிறு பகுதியை வாயில் வைத்து சூயிங்கம் போல மென்றால் வலி குணமானதை கண்டறிந்தார். அவ்வாறு மெல்லும்போது பிரசவ வலி கூட குறைந்ததாம். வில்லோ மரத்தின் பட்டைகளில் சாலிசைலிக் அமிலம் உள்ளது என்பதையும், அது வலியையும் , காய்ச்சலையும் போக்க உதவுகிறது என்பதையும் அப்போது விஞ்ஞானிகள் தெளிவாக தெரிந்து வைத்திருக்கவில்லை.
ஆனால் சோதனையாக இச்சாறு பக்க விளைவை ஏற்படுத்தியது . உபயோகித்தவர்களுக்கு தலைவலி போய் வயிற்றுவலி வந்தது. 1899 -ல் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சார்லஸ் ஜெர்ஹார்ட் ( Charless Gerhardt ) என்பவர் இந்த சாலிசைக்ளிக் அமிலத்தோடு அசிடைல் குளோரைடு என்னும் ரசாயனத்தை சேர்த்தால் பக்க விளைவு வருவதை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார். ஆனால் இதை தயாரிக்க அதிகமான நாட்கள் பிடித்ததால் அந்த முயற்சியை கை விட்டார்.


அதே பாதையில் இன்னொரு விஞ்ஞானியும் ஆராய்ச்சி செய்தார். அவர் பேயர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த ஃபெலிக்ஸ் ஹாஃப் மேன். இவர் 1868 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஜெர்மானிய ஊரில் பிறந்தவர்.

தொழிலதிபரான இவரின் தந்தை மூட்டு வலியால் வேதனைப்படுவதை பார்க்க இயலாமலேயே இவர் இவ்வாராய்ச்சியில் தீவிரமானார்..மூட்டுவலிக்கு சாலிசலைட் மருந்தை தொடர்ந்து உட்கொண்ட இவரின் தந்தை கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சாலிசைக்ளிக் அமிலத்தின் அமிலத்தன்மையை குறைக்க `அசிட்டைல்' என்ற ரசாயனப் பொருளை கலந்து , அந்த மாத்திரையின் தீமையை குறைத்தார்.

இதைத் தொடர்ந்து எளிதாக தயாரிக்க முடிந்த அசிட்டைல்சாலிசைக்ளிக் அமிலம் உதயமானது. வருடக்கணக்காக வலியில் சிரமப்பட்ட ஹாஃப்மேனின் தந்தைக்கு இம் மருந்து சிறந்த நிவாரணத்தை அளித்தது.

ஆஸ்பிரின் என்ற பெயரில் இம் மருந்து உலகப் புகழ் பெற்றது. 1899- ல் ஜூலையில் பேயர் நிறுவனம் இதை பவுடராக சந்தைப்படுத்தியது. பின்பு 1914 ஆம் ஆண்டிலிருந்து மாத்திரைகளாகவும் கிடைக்க ஆரம்பித்தது.

இம் மாத்திரையின் வலி குறைக்கும் அறிவியல் பின்னணி, பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜான் வேன் என்பவரால் 1971- ல் கண்டுபிடிக்கப்பட்டது.

மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு ஆஸ்பிரின் சாப்பிட்டால் மாரடைப்பை தடுக்கலாம் என்று 1940 களின் இறுதியில், லாரன்ஸ் க்ரேவன் ( Laurence Craven ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வலி நிவாரணியாக பயன்படுவதை விட, இதய நோய்களை தடுக்கும் மருந்தாகவே ஆஸ்பிரின் அதிகமாக பயன்படுகிறது.

இதய மருத்துவர் , உயர் இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரும் அபாயத்திலிருந்த என் அம்மாவுக்கு பரிந்துரைத்து ,அவர்கள் பல வருடங்கள் ஆஸ்பிரின் எடுத்து கொண்டு ஆரோக்கியமாய் வாழ்ந்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

விண்வெளி வீரர்களின் பெட்டியிலும் இடம் பெற்றிருந்த பெருமை ஆஸ்பிரினுக்குள்ளது.

அத்துடன் அல்சைமர் நோய் , குழந்தையின்மை, புற்றுநோய், திடீரென பார்வை பறி போகும் நிலை போன்றவற்றிற்கெல்லாம் ஆஸ்பிரின் பலனளிக்கிறது..இது மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பிரினை சாப்பிடுமுன் கவனிக்க வேண்டியவை :
ஹீமோஃபீலியா, வயிறு சம்பந்தமான உள்ளுறுப்புகளில் இரத்தம் கசியும் பிரச்சனை உள்ளவர்கள், (நான் ஸ்டீராய்டல் ஆன்டி இன்ஃப்ளம்மேட்டரி ட்ரக்) NSAID வலி நிவாரணி மாத்திரைகளுக்கு அலர்ஜியாகும் உடல்நிலை உடையவர்கள், மற்றும் ஃப்ளு, சின்னம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட இள வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்க கூடாது.

மேலும் Reye's syndrome என்ற மோசமான பாதிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் தன்மையுள்ளதால் கவனத்துடன் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் ஆஸ்பிரின் எடுப்பது நல்லதல்ல.
இன்றும் உலகில் அதிகமாக விற்பனையாகும் மாத்திரைகளில் ஒன்றாக ஆஸ்பிரின் உள்ளது.

எழுதியவர் சகோதரி. Nadhira Deen


ஆதார சுட்டிகள் :
read more "வலி நிவாரணி "

Monday, April 10, 2017

மின்னல் பற்றிய ஆராய்ச்சி


டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

தன் மகளின் பள்ளிப் பாட புத்தகத்தின் அனுபவத்துடன் மின்னல் பற்றி தனது அறிவியல் ஆராய்ச்சியை துவங்கும் சகோதரி.Umm Afnan (மூன்றாமிடம் பிடித்த கட்டுரை) 


மின்னல் 


போனவாரம் என் சின்ன மகள் பள்ளிக்கு போய் வந்து அம்மா உனக்கு ஒரு இன்ட்றஸ்ட்டிங்க் ஸ்டோரி சொல்லவா என கண்கள் விரிய கேட்டாள் சொல்லுடா தங்கம் என்றேன்.....அப்போ எனக்கு இப்படி எழுத தோணல, ஆனால் அவள் பள்ளியில் நடந்த பாடத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தவுடன் , அறிவியல் பற்றி எழுத சொன்னாங்களே போனவாரம் மகள் சொன்னதை எழுதலாமே என தோன்றியது. அதன் விளைவாக உருவானதே மின்னல் பற்றிய ஆராய்ச்சி பதிவு.

ஹைஃபா: இன்னைக்கு எங்க டீச்சர் மின்னல் பற்றி பாடம் எடுத்தாங்கமா செம இன்ட்றஸ்ட்டிங்க்கா இருந்துச்சு நீயும் கேளேன் என மகள் விழிகள் விரிய சொல்லவும் நான் கேட்க ஆரம்பித்தேன்.
ஹைஃபா: எப்படி உருவாகுது தெரியுமா?
நான்: தெரியாதே...
ஹைஃபா:: மேகங்கள் மூலம்தான் உருவாகுதாம். ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன இவை இரண்டும் உரசுவதாலேயே நமக்கு மின்னல் தெரிகிறதாம் வேகமான இடி சத்தத்தையும் நாம் கேட்கிறோம் என்று டீச்சர் சொன்னாங்கமா.
இடியின் சத்தம் நம் காதுகளை எட்டும் முன் மின்னலோட வெளிச்சத்தை நாம் பார்க்க முடியும் என கூறி அதன் வேகம் பற்றி சொன்னாங்க. எனக்கு புரியல, ஆனால் இரண்டும் ஒன்றுதான் பட் ஒலியை லேட்டாகவும் ஒளியை விரைவாகவும் பார்க்கிறோம் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.

( மின்னல் ஒளியோட வேகம் பூமியை அடைய எடுத்துகொள்ளும் வேகம் ஒரு வினாடிக்கு 300000000 மீட்டராம், இடியோட ஒலி பூமியை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு வினாடிக்கு 340 மீட்டராம்)

இப்படி ஏற்படும் இந்த மின்சாரம் பூமிக்கு வருகிறது
இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது ,அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன.


கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 "ஈ" அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 ) இந்த அளவுக்கு வெளியாகும்
பூமிக்கு வரக்கூடிய மின்சாரம் தனக்கு அருகில் எது இருக்கிறதோ அதன் மீது முதலில் படும்.
எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமான விஷயங்கள் என் மகள் தான் கற்றதை என்னிடம் சொன்னாள்.

எச்சரிக்கை


ஹைஃபாமின்னலை பார்த்தால் நாம் என்ன செய்யனும் தெரியுமா உயரமான கட்டிடங்கள் அருகில் நிற்க கூடாது, அதன் அருகில் தாழ்வான கட்டிடம் இருந்தால்  நிற்கலாம்.

உயரமான மரங்களருகில் நிற்க கூடாது, அதன் அருகில் உயரம் கம்மியான மரமிருந்தால் நிற்கலாம். வெட்டவெளியான பூமியில் நம் பாடி பார்ட் எதுவும் படாமல் செப்பல் போட்டிருந்தால் செப்பல் மட்டும் பூமியில் படற மாதிரி உட்காரலாம். அப்பதான் நமக்கு மின்னலிலிருந்து வெளிப்படும் மின்சாரத்தால் பாதிப்பில்லை

நான்: ஏன் உயரத்திற்க்கு பக்கத்தில் நின்றால் தாக்கும், வெட்டவெளியில் தாக்கும்? உயரம் கம்மி பில்டிங் பக்கத்தில் இருந்தால் நிற்கலாம்னு சொல்றியே ஏன்? நாம் ஃப்ளைட் உயரமாதானே பறக்கிறோம் காரில் வெட்ட வெளியில் போகிறோம் அப்ப ஏன் தாக்கவில்லை?
ஹைஃபா: சின்ன சிரிப்புடன் ஹய்யோ அம்மா தனக்கு நியரஸ்ட்டா எது இருக்கோ அதன் மேலதான் மின்சாரம் படும் உயரமான பில்டிங்ல படும் அப்ப பக்கத்துல நீ நிற்க கூடாது.
கார் மற்றும் ஃபிளைட்டில் பெயின்டுக்கு உள்ளே பிளாஸ்டிக் மேற்பரப்பு வச்சுதான் தான் தயாரிப்பாங்க. அறிவியலை படிச்சுட்டுதான் அவங்க பிரிகாஷனோட தயாரிப்பாங்க.
வெட்டவெளில நீ நடக்கும்போது செப்பல் போட்டிருந்தா உன்னை மின்சாரம் தாக்காது. அந்த சமயம் பூமியில் உன் பாடி பார்ட்ஸ் எது பட்டாலும் அம்புட்டுதான்
நான்: ஹைஃபா!!!!!! 
இப்பதான் என் அம்மம்மா மேகம் இருண்டால் திட்டுவது நினைவுக்கு வருது. வானம் கருக்குது மின்னல் வெட்டும் பச்சை மரத்துக்கு கீழே நிக்காதீங்க வெளியே தனியா போகாதீங்க எதாச்சும் ஒரு மரத்துக்கு கீழே ஒதுங்காதீங்க இப்படிலாம் சொல்வாங்க.

துஆவும் ஓத சொல்வாங்க.

ஏனு கேட்டால் தென்னைமரம், பனை மரத்துல இடி இறங்கும்னு சொல்வாங்க. நானும் அது போன்ற சமயங்களில் சில நேரம் மரங்கள் எரிவதை கண்ணால பார்த்து இருக்கிறேன்.மின்னலில் உருவாகும் மின்னூட்டதின் கசிவினால் ஏற்படும் ஷாக்லதான் மரம் எறிஞ்சுச்சுனு இப்பதான் புரியுது மகளே!!

மின்னல் தாக்கி விவசாயி சாவுனு படிச்சிருக்கேன், அவங்க செருப்பு போடாமத்தான் எங்க காலத்துல நடப்பாங்க ஹைஃபா
ஹைஃபா: ஓஹ் அப்ப கிரேன்டகிரேன்ட்மாக்கு தெரிஞ்ச பாதுகாப்பு கூட உனக்கு தெரியலை வெரிகுட் மம்மி.
(மேற்கூறியது அனைத்தும் கடந்த வாரம் நடந்தது)

இன்று காலை 
நான்: அல்லாஹ் குர்ஆனில் மின்னலை பற்றி சொன்னதையும் படிக்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு ஹைஃபா!!!
ஹைஃபா: மா கிரியேசன்ஸ் தான் இப்படி ஒன்று ஒன்றா ஆராய்ச்சி செய்து கண்டு பிடிக்கனும், ஆச்சரியபடனும். அவன் அனைத்துக்கும் கிரியேட்டர்மா ஹி நோஸ் ஆல் மா.....
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43)
அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13)
மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம்.
வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன.
ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது.
ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது.
வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது.
மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான்.
மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப்படுகின்றது.
சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்!
(மிஃராஜ் போன புராக் பற்றி புகாரியில் 3207)
புராக் எனும் மின்னல் வேக வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது என அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக ஹதீதில் பதியப்பட்டிருக்கிறது.

நாம் மின்னலின் வேகத்தை பார்த்தோம். ஒரே இரவில் இந்த வேகம் இருந்ததாலேயே விண்வெளிக்கு போய் நபியவர்கள் திரும்பி இருக்காங்க அல்லாஹு அக்பர்.  சுப்ஹானல்லாஹ்...
மின்னல் வெட்டும் போதும், இடி இடிக்கும் போதும் நபி(ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதினார்கள்.
اَللّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَاتُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذالِك

பொருள்- யாஅல்லாஹ்.. உனது கோபாத்தால் எங்களைக் கொன்று விடாதே, உனது வேதனையால் எங்களை அழித்து விடாதே.. மாறாக அதற்கு முன் எங்களுக்கு நலத்தைத் தருவாயாக...(திர்மிதீ)

யா அல்லாஹ் அனைத்து பிள்ளைகளுக்கு ஈருலகக் கல்வியிலும் விளக்கத்தை பெறும் ஆற்றலை தருவாயாக ஆமீன்.

read more "மின்னல் பற்றிய ஆராய்ச்சி"

Thursday, March 23, 2017

வரதட்சணையும் பெண்களும்


கோபிநாத் அந்த பெண்களை நோக்கி உங்களுக்கு உரைக்கவே இல்லயா..வரதட்சணை க்கு எதிராக ஒரு போரை நடத்திய சமுதாயத்தில் இந்த எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது என்று கேட்கிறார்..

ஆக்சுவலி அவர் அந்த கேள்வியை தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்..

அங்கொன்றும் இங்கொன்றுமாக இது போன்று நினைக்கும் பெண்களை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் அமர்த்தி என்னமோ எல்லா பெண்களுமே இப்படித்தான் போல என்ற மனநிலையை பிம்பப்படுத்தியுள்ள நீயா நானாவைப் பார்த்துதான் இந்த கேள்வி கேட்கப்பட வேண்டும்.

இதை தொடர்ந்து சகோதரி ஹுசைனம்மா தன்  பேஸ்புக் பக்கத்தில் பதிந்த கருத்து கவனத்தை ஈர்த்தது. அதை அப்படியே கீழே தருகிறேன் :
நான் கல்லூரி படிக்கும்போது, அத்தையின் கல்லூரித் தோழியின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். “கிராண்டாக”வே நடந்தது திருமணம். அத்தையுடன் மற்ற தோழிகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் பேச்சிடையே அடிபட்ட ஒரு வார்த்தை என் கவனத்தை ஈர்த்தது - “விடுதலைப் பத்திரம்”!! அப்போது கேட்க முடியாததால், பின்னர் கல்லூரி தோழிகளிடம் கேட்டபோது விளக்கம் கிடைத்தது. திருமணமாகிச் செல்லும் பெண் - தன் தந்தை மற்றும் சகோதரர்களின் சொத்துக்களின் மீது தனக்கு எந்தப் பாத்தியதையும் கிடையாது என எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்வதே “விடுதலைப் பத்திரம்”!! அவளுக்குச் சேர வேண்டியதை எல்லாம் திருமணத்தின்போதே கணக்குப் பார்த்தோ, பார்க்காமலோ பிரித்துக் கொடுத்துவிட்டு, அதன் பிறகு மீதி இருக்கும் சொத்துக்களை அவள் எவ்விதத்திலும் உரிமை கோராமல் இருக்க உதவும் பாதுகாப்பு கவசம் இந்த ’விடுதலைப் பத்திரம்”. இது எந்தெந்த சமூகங்களில் வழக்கம் என்பதெல்லாம் தெரியவில்லை. பொதுவாக இந்து மற்றும் கிறிஸ்தவ சமூகங்களில் இது செல்லுபடியாகும் என்று நினக்கிறேன். 
என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண், வேறு சாதியில் ஒருவரை காதலித்ததால், அவரைத் திருமணம் செய்வதற்கான நிபந்தனையாக இப்பத்திரம் எழுதிக் கொடுத்தார்.
இஸ்லாமிய சமூகங்களில் இரத்த பந்தங்களை இம்மாதிரி விடுதலைப் பத்திரங்களினால் இரத்து செய்து விட முடியாது என்பதால் முஸ்லிம்களிடையே அது பரவவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும், அதற்கும் (இபிகோ படி) வேறு வழிமுறைகள் கண்டுபிடித்திருப்பார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது, அப்பெண்கள் பேசியதன் பின்ணணி புரிந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருதரப்பிலும் தவறுகள் உள்ளன.
இதெற்கெல்லாம் ஒரே தீர்வு, திருமணங்கள் மிக மிக மிக எளிமையாக்கப்பட வேண்டும். சீர்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவைகளையும் செய்துவிட்டு, சொத்தும் கொடுக்க வேண்டும் என்பதால்தான் பிரச்னையே வருகிறது. பெற்றோர் எல்லா பிள்ளைகளுக்கும் - ஆண், பெண் பேதமின்றி - அன்பை மட்டுமல்ல, செய்யும் செலவுகளையும் சமமாகச் செய்ய வேண்டும்!! 
தன் பிள்ளைகளில் தனக்குப் பிடித்த ஒரு மகனுக்கு மட்டும் ஒரு ஒட்டகம் பரிசளிக்கப் போவதாகச் சொன்ன ஒரு தந்தையிடம், நபியவர்கள், “என்னே!! அநீதிக்குத் துணை நிற்கவா என்னை சாட்சியம் கூற அழைத்தீர்??!! உமது மக்களிடம் பாரபட்சத்துடன் நடந்து இறைவனின் அதிருப்திக்கு ஆளாகாதீர்!! #உம்_மக்கள்_அனைவரும்_உம்மிடம்_ஒரேவிதமாக_பாசமும்_மரியாதையும்_செலுத்த_வேண்டும் என்று நீர் விரும்பவில்லையா?” என்று கோபத்துடன் வினா எழுப்பினார்கள். 

இதே பதிவின் கீழ் சகோதரி ஆமினா முஹம்மத் தன் கருத்தை பதிவிட்டிருந்தார் இப்படியாக,
சீர் , நகை, நட்டு, வரதட்சணை , மறுவீடு, வளகாப்பு , புள்ள பெக்க சீரு, , பிரசவ செலவு, அந்த புள்ளைக்கு காது குத்து சீர், சுன்னத் க்கு தாய்மாமன் சீர், பொண்ணு வயசுக்கு வந்தா அதுக்கும் சீரு, அந்த புள்ளைக்கு கல்யாணம் ஆனா கூட தாய்மாமன் சீர் னு - மொத்தமா மொட்டையடிக்காம இருந்தா சொத்தை விட்டு தர சகோதரனுக்கோ, தந்தைக்கோ கொஞ்சமாச்சும் மனசாட்சி வரும்! 
காலம் முழுக்க தன் சகோதரி க்கு அவளின் புகுந்த வீட்டில் பெருமையாக பேசப்பட சகோதரன் எப்போதும் செலவு செய்ய வேண்டியவனாக இருக்கிறான். 
இம்புட்டும் செஞ்சு கொடுத்துட்டு சொத்தும் வேணும்னு ஒரு பெண் எதிர்பார்ப்பது ரொம்ப அபத்தம் தானே! அதே மனநிலை தான் பெண்ணுக்கும் இருக்கும்... நமக்கு இதெல்லாம் செய்றதோட பெத்தவங்க கடமை முடிச்சுக்குவாங்க, அதுனால நமக்கு சேரவேண்டியதை நாம் தான் கரெக்ட்டா புடுங்கணும்னு அவளின் சுயநலம் வேலை செய்யத்தூண்டிவிடும் ! 
இருதரப்பின் பரஸ்பர புரிதல், மனசாட்சி இப்போதைக்கு ஒரு தீர்வு... சமூகமாற்றம் நிரந்தர தீர்வு !

நிகழ்ச்சிக்கு வருவோம்..(நிஜமாகவே இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் அந்த பெண்களின் சொந்த கருத்தாக இருந்தால்.. 

வெறுமனே பெண்களை குறை சொல்லக்கூடாது என்பதால் அலுவலகத்தில் திருமணம் ஆகாத சில பெண்களிடம் இந்த கேள்வியைக் கேட்டபோது அனைவருமே அப்படி எந்த எதிர்பார்ப்பும் தங்களுக்கு இல்லை என்றே ஒருமித்து கூறினர்.

இதுதான் உண்மை. நிதர்சனம்..99.99 சதவீதம் பெண்கள் தங்கள் பெற்றோர்கள் சிரமப்படுவதை விரும்புவதில்லை. மீதமுள்ள .01% பெண்களை 'பொறுக்கி' வந்து நிகழ்ச்சிக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர்.

அதிலும் பேசிய பல பெண்கள் தங்கள் பெற்றோர்கள் கடனாளி ஆனாலும் பரவாயில்லை, சகோதரன் கஷ்டப்பட்டாலும் கவலையில்லை., சாகுற வரைக்கும் பென்சன் வரும்ல... உயிரோட இருக்கப்பவே எழுதிக் குடுத்துடணும்.. கணவனை என்னோட என் வீட்ல வச்சுக்குக்குவேன் என்று சொல்வது எல்லாம் மிகைப்படுத்தப்பட்டதாகவே தோன்றுகின்றது. உண்மையிலேயே அப்பெண்களின் மனநிலை அதுதான் என்றால் அது பிறழ்ந்த மனநிலைதான் என்பதில் சந்தேகமே இல்லை..

கல்வி பெற்ற திமிரில் பேசுகின்றார்கள் என்றால் சிறப்பு விருந்தினர் ராஜி சொல்லியது போல, கல்வி எந்தவித மாற்றத்தையும் இன்றைய இளைஞர்கள் மனதில் ஏற்படுத்தவில்லை..மேலும் மேலும் பண மோகம் பிடித்த பிசாசுகளாகவே உருமாற்றியுள்ளன..

இங்கே ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன். வரதட்சணையை ஒழித்து மஹர் எனும் மணக்கொடை மூலம் தான் பெற்ற உரிமையை ஒரு முஸ்லிம் பெண் தனது அறிவைப் பெருக்கும் ஐம்பது புத்தகங்களை வாங்கித் தருமாறு மணமகனிடம் வைத்த கோரிக்கை மூலம் புதுமை புகுத்தினார். இதுதான் உண்மையான கல்வி மூலம் பெற்ற மாற்றமாக இருக்கமுடியும்..

தஞ்சாவூர் தாய் சொன்னது போல தன்னைச் சார்ந்தவர்களைப் பற்றி கவலை கொள்ளாமல், தான், எனது என்ற சிந்தனை மட்டுமே மேலோங்கியுள்ள இந்த பெண்கள் மூலம் உருவாகும் எதிர்கால சமுதாயத்தின் நிலையை மிகவும் வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

அடுத்தவர் உழைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ விரும்பும் இத்தகைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களது கணவன் எதும் ப்ரச்னையில் சிக்கி இந்த சுகபோகத்தை இழக்க நேரிட்டால் அந்த கணவனது நிலை மிகவும் பரிதாபம்.. தற்கொலை அல்லது விவாகரத்து இதுவே அவர்களது முன் இருக்கும் வாய்ப்புகள் என்றால் அது மிகையல்ல..

தங்களது பெற்றோர்களையே இப்படி சிரமப்படுத்த நினைக்கும் இத்தகைய பெண்கள் நாளை மாமியாராக மாறும்போது நிலை என்னாவது..?

இறைவா இந்த பெண்களுக்கும் பெண் குழந்தைகளையே பிறக்கச் செய்வாயாக.. இந்த நிகழ்ச்சியை அந்த குழந்தைகள் பார்க்கச் செய்வாயாக என்று உதடுகள் என்னையறியாமல் பிரார்த்திப்பது எனக்கு மட்டும்தானா..?

நடிப்பாகவே இருந்தாலும் என்னால் இவ்வளவுதான் சார் பண்ண முடியும் என்று கண்ணீருடன் பேசிய அந்தத் தாயின் வார்த்தைகள் இன்றைய பெரும்பான்மை நடுத்தர குடும்பத்து பெற்றோர்களின் நிலையை எடுத்தியம்புகின்றது..

நான் கொடுத்த கார்ல என் பொண்ணு வர்றான்னு சொல்றதுல எனக்கு எந்த பெருமையும் இல்ல..

இவ்ளோ கேக்குறறீங்கள்ல, அதுக்கு ஏத்த மாதிரி எதும் வேல பாக்குறீங்களா.. போத்திக்கிட்டு தூங்குறாங்க சார்.. நச்..நாக்கைப் புடுங்கிக்கலாம்.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது புயலாக மாறிவிட்டுள்ள தென்றல்களையும் படிதாண்டி வந்துவிட்ட பாரதியின் புதுமைப் பெண்களையும் பெற்றுவிட்ட சமுகம் பாரதிதாசன் வர்ணித்த குடும்ப விளக்குகளை இழந்துவிட்டோமோ என்ற அச்சம் ஏற்படாமல் இல்லை.

என்னதான் மகன்கள் தாம் தம் எதிர்காலம் என்ற நம்பிக்கை பெற்றோரிடம் இருந்தாலும், கடைசிகாலத்தில் பாசத்தை எதிர்பார்ப்பது மகள்களிடமிருந்து தான். பெற்றவர்களுக்காக உங்கள் உள்ளங்களை அவர்கள் அளவுக்கு இல்லையென்றாலும் கொஞ்சமேனும் விசாலமாக்கிக்கொள்ளுங்கள் மகள்களே!

இறுதியாக ஒண்ணே ஒண்ணு..

இந்த பாழாய்ப் போன வரதட்சணையால் முப்பது வயதைக் கடந்தும் தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு பெற்றோர்களுடனே வாழும் ஆயிரக்கணக்கான முதிர்கன்னிகளின் பாதங்களை இந்த பெண்கள் கழுவினால் இவர்களின் மனநிலை சுத்தமாகலாம்..

ஆக்கம் ,
ஷாரா ஹசன் ,
சென்னை. 
read more "வரதட்சணையும் பெண்களும்"

Wednesday, February 01, 2017

ஹிஜாப் பெண்களுக்கு மட்டும்தானா?          “ஹிஜாப்என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. அநேக முஸ்லிம்களின் சமூக வலைத்தள பக்கங்களில் ஹிஜாப்போட்ட பெண்களின் படங்களுடன், ஹிஜாப் அணிவதால் விளையும் நன்மைகளும், போதிய பாதுகாப்பான உடை அணியாத பெண்களுக்கு நேரும் ஆபத்துகளும் கடமையுணர்வோடு எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன

ஹிஜாப் என்றால் என்ன?

 
ஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் (curtain, barrier, screen, veil,  partition) என்று பல பொருட்கள் உண்டு. திரைஎன்ற அர்த்தம் இருப்பதால், து பெண்களுக்கான ஒன்றாக மட்டுமே கருதப்பட்டுவிட்டது போலும்!

ஹிஜாப் என்பது ஒரு தடுப்பு. எதற்கான தடுப்பு

எல்லாவற்றிற்கும் - எண்ணங்கள், செயல்கள், இச்சைகள், ஆடைகள் என ஐம்புலன்களுக்குமான தடுப்பு. வரம்பு மீற அனுமதிக்காத தடுப்பு. யாருக்கெல்லாம் ஹிஜாப் பொருந்தும்? "கற்புஎப்படி இருபாலருக்கும் பொதுவான ஒரு நிலையோ, அதுபோல இஸ்லாத்தில் ஹிஜாப்பும் இருபாலருக்கும் உரியதாகும்

ஃபோட்டோ ஷாப் உதவியோடு, மோடி என்றால் க்ளீன் கவர்னென்ஸ்என்று பதிய வைத்தது போல, ‘ஹிஜாப்என்றால் பெண்ணிற்கான கட்டுப்பாடுமட்டுமே என்ற எண்ணத்தை அனைவர் மனதிலும் ஆழப் பதிய வைத்துவிட்டார்கள். உண்மை அதுவல்ல. ஆடையில் மட்டுமல்ல கட்டுப்பாடு, பார்வை, செயல்கள், எண்ணங்களுக்கும் கட்டுப்பாடு உண்டு - ஆண் பெண் இருவருக்குமே.

டை என்று வரும்போது, ஆடையின் நீள-அகலத்தில் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமான கட்டுப்பாடுகள். மற்றபடி, இறுக்கமானவை - மெல்லியவை - வசீகரிக்கும் தன்மை கொண்டவை - எதிர்பாலினத்தைப் போல காட்டும் உடை - ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் இருதரப்பிற்கும் உண்டு.

ஆண்களுக்கு பெண்களைப் போல முழு உடலையும் மறைப்பது கட்டாயமில்லை என்ற போதிலும், அவசியமின்றி உடலை வெளிப்படுத்துவதும் தவிர்க்கப் படவேண்டியதே என்பது இந்த நபிமொழியின் வாயிலாய் அறிந்துகொள்ளலாம்

'இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக அண்ணலார் மூன்று முறை கூறினார்கள்.

முழுமையான ஆடை அணியுமளவு வசதி பெற்ற ஒருவர், தரையில் இழுபடும்படி ஆடையை இழுத்துக் கொண்டு வந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை இது. இந்நாளில் ஆடைக்கு வசதியற்றவர் என்ற நிலையில் இல்லாதபோதும், கை, தொடை, இடுப்பு போன்றவை வெளியே தெரிந்துகொண்டிருக்க, தரையில் இழுபடும்படி உடை உடுத்தும் நாகரீகக் கோமாளிகள் அறிந்துகொள்ள வேண்டிய அறிவுரையாகும் இது!!

டைக்கு மட்டுமல்ல கட்டுப்பாடு!!ஆண் பெண் இருவரின் “பார்வை”க்கு இருக்கும் கட்டுப்பாடுதான் மிக முக்கியமானது. குர் ஆனில், ஆண் – பெண் இருவருக்குமான வரம்புகளைக் கூறும்போது, இறைவன் முதலில் ஆணுக்கே கட்டளையிடுகிறான்:

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக!  அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத் தலங்களை (கற்பை) பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு மிக பரிசுத்தமான செயலாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 24:30)ஆடை, எண்ணங்கள், செயல்களின் வரம்பு மீறாதீர்கள் என்று நேரடியாகச் சொல்லாமல், ”பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு”  கூறுவது ஏன்? பார்வை – அதுதான் தவறுகளின் தொடக்கப் புள்ளி!! பார்வையைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், நிச்சயம் அது மற்ற தவறுகளுக்கு இழுத்துச் சென்றுவிடும். 

கண்களும் விபச்சாரம் செய்கின்றன.


‘கண்களின் விபச்சாரம் பார்வை என்பதும் நபிமொழி. இன்றைய உலகில் இது எத்தனை உண்மை? பெண்கள் எங்கு சென்றாலும், அவர்களை ஆண்களின் பார்வைகள் பின் தொடருகிறது. அதைத் தவிர்க்கச் சொன்னால் உடனே, “நாங்க பார்க்கணும்னுதானே பெண்கள் இப்படி ஆடை அணிகிறார்கள்” என்று பதில் வரும்!!

பெண்களின் ஆடையைப் பொறுத்து பார்வையைத் தாழ்த்துமாறு ”சாய்ஸ்” கொடுக்கவில்லை இறைவன். மற்ற தவறுகளுக்கு இடம்கொடாமல் இருக்கவே பார்வையைத் தாழ்த்துமாறு உத்தரவிடுகிறான். 

பி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் அன்னியப் பெண் மீது திடீரெனப் பார்வை பட்டுவிட்டால் உடனே பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். அவள் மீது இரண்டாவது பார்வையைச் செலுத்தாதீர்கள். முதல் பார்வை உம்முடையது; இரண்டாது பார்வை உம்முடையதன்று. மாறாக, ஷைத்தானுடையது"

தற்செயலாகப் பார்ப்பது தவறில்லை. ஆனால், உடனே பார்வையைத் திருப்பிக் கொள்ளவேண்டும். இல்லாமல், போனால், விளைவுகளுக்கான தண்டனைகளில் உங்களுக்கும் பங்குண்டு. ”அழகிகள் பிடிபட்டனர்” என்று பெண்களை மட்டுமே சிறையில் தள்ளும் இ.பி.கோ. போன்றது அல்ல இஸ்லாமியச் சட்டம்!! இருதரப்புக்குமே கடும் தண்டனை உண்டு!! கவனம்!! 

குர் ஆனில், இன்னின்ன உறவல்லாத ஆண்களின் முன்பு பெண்கள் ஹிஜாப் இன்றி வரக்கூடாது எனக் கூறப்பட்டுள்ள வசனத்தை (24:31) எடுத்துக் கொண்டு, பெண்களுக்கு எச்சரிக்கைகளை அள்ளி வீசும் ஆண்களுக்கு, அதில் கூறப்பட்டுள்ள உறவு முறையில் இல்லாத பெண்களைத் தான் ஏறிட்டுப் பார்ப்பதும் பாவமே என்கிற எண்ணம் வாராது போனது ஏன்?


ன்னும், பெண்களைத் தொடுவதிலிருந்தும் விலகிக் கொள்ள ஆண்களுக்குத்தான் உத்தரவிடப்படுகிறது. "உங்களில் ஒருவர் தனக்கு அந்நியமான  பெண்களைத் தொடுவதைவிட அவர் இரும்பினாலான ஊசியால் தனது தலையில் அடித்து காயம் எற்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்

திருமதி. மிஷெல் ஒபாமா, சவூதி சென்றபோது அவருக்கு அங்குள்ள அமைச்சர்கள் கைகொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். அதற்கு காரணம் இந்த வழிகாட்டலே.

எந்த ஆடவரும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம், ஏனெனில் சைத்தான் அவர்களில் மூன்றாமவனாக ஆகிவிடுகிறான்என்ற நபிமொழியும், அவ்வாறு தனிமையான சந்தர்ப்பம் அமைந்தால், அங்கிருந்து விலகிச் சொல்லும் பொறுப்பு ஆண்களுடையதே என்று தெரிவிக்கிறது. 

மூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய பல கட்டளைகளும் ஆண்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தும், பெண்களுக்கு நேரும் பாலியல் வன்முறைகளுக்கு அவர்களையே பொறுப்பாக்கி பலிகடா ஆக்குகின்றனர். பெண்களில் பெரும்பாலோனோர், தம்முடைய ஆடைகளில் கவனம் செலுத்தவே செய்கின்றனர். இருந்தும், பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு ஆண்கள் தமக்கு விதிக்கப்பட்ட ஹிஜாபைப் பேணாததே முழுமுதற் காரணம் என்பதை மறுக்கவே முடியாது. ஆம், ஆண்கள் தம் “பார்வை”யை முதற்கண் தடுத்துக் கொண்டால், பாலியல் குற்றங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்கப்பட்டுவிடும். இது, முஸ்லிம் ஆண்களுக்கான அறிவுரை மட்டுமல்ல, அனைத்து ஆண்களுக்கும் பொருத்தமானது. 

·    ஸ்லாமிய வரலாறு முழுதும் பெண்களுக்கான பாடங்கள் மட்டுமே இருப்பதாக கருதிக் கொண்டிருக்கும் ஆண்கள்,  வரலாற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கட்டும். யூசுஃப் (அலை) நபியை ஒரு அழகிய பெண் அழைத்தபோதும், மறுத்தால் சிறையில் அடைத்து வஞ்சிக்கப்படுவோம் என்று தெரிந்தும், இறைவனுக்கு மட்டுமே அஞ்சி மறுத்த வரலாறு ஆண்களுக்கானதுதான்.

·  வழியில் கண்ட பெண்ணை ஒரு ஆண் வைத்த கண் வாங்காமல் பார்த்தபோது, அந்த ஆணின் முகத்தைத்தான் நபிகளார் தன் கையால் பிடித்துத் திருப்பி விட்டாரே ஒழிய, அந்தப் பெண்ணைக் கடிந்து கொள்ளவில்லை!!

· உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் மனைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்" என்பதுதான் பொது இடங்களில் உணர்ச்சி வயப்படும் சூழ்நிலை ஏற்படும்போது  பின்பற்ற வேண்டிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரை. இங்கும் ஆண்களுக்கே கட்டுப்பாடு அறிவுறுத்தப்பட்டுள்ளது!!

ஆகவே ஆண்களே, மாற்றத்தை உங்களிடமிருந்து துவங்குங்கள். பார்ப்பதற்கு நீங்கள் தயார் இல்லையெனும்போது, பார்க்கப்படுவதற்காகவே ஆடை அணிகிறார்கள் என்று நீங்கள் சொல்பவர்களும் திருந்திவிடுவார்கள்!! 

பெண்களே, உங்களின் உடல் கடைவீதிப் பொருள் அல்ல, அழகாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு. உணர்வும், அறிவும், பலமும் கொண்டு ஆணுக்கு நிகரான வலிமையான படைப்பினம் என்பதை மறந்து உங்களே நீங்களே விற்பனைக்குள்ளாக்காதீர்கள்.

ரு கைகள் இணைந்தால்தான் ஓசை” என்பதாக, சமூகத்தில் பாதுகாப்பும், அமைதியும் நிலவ, ஆண் – பெண் இருதரப்புமே தம் பணியைச் சரியாகச் செய்தல் வேண்டும். பெண்கள் மட்டுமே சரியாக இருந்துவிட்டால் உலகில் எல்லாம் சீர்திருந்திவிடும் என்றால், இஸ்லாத்தில் முறையற்ற உறவு, பாலியல் வன்முறை, விபச்சாரம் ஆகியவற்றிற்கான தண்டனைகளுக்கான தேவையே இருந்திருக்காதே!! 

சாமானிய ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் கடமையை விட, சமூகத்தின் ஊடகங்கள் மூலம் எப்பொருளுக்கும் கவர்ச்சியூட்டி, போதைப்பொருள் போலாக்கி, ஆபாசத்தை அடையாளமாக்கி விளம்பரப்படுத்துபவர்களும் கவனிக்க வேண்டும், உங்களின் பொருள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக எங்கோ ஒரு மனதின் மூலையில் பாவத்தை விதைக்க வேண்டுமா?? யாரோ ஒரு பெண்ணின் அல்லது சிறுகுழந்தையின் வாழ்க்கை சீரழிய வேண்டுமா?? குடும்ப, சமூகப் பொறுப்புக்களை காக்க வேண்டிய புஜங்கள் பாவம் சுமக்க வேண்டுமா?? சிந்திப்பீர்களா??

உங்கள் சகோதரி,
ஹுசைனம்மா
 
read more "ஹிஜாப் பெண்களுக்கு மட்டும்தானா?"