Saturday, January 12, 2013

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி - முடிவுகள்


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக...

அல்ஹம்துலில்லாஹ்... இறைவனின் மாபெரும் கிருபையால் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி அதன் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

ஆம் சகோஸ்.. வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் யார் யார் என அறிய மிகவும் ஆவலாய் இருப்பீர்கள் என்பதை அறிவோம். அதை தெரிந்து கொள்வதற்கு முன், இந்த போட்டி நடந்த விதம் குறித்து அறிந்து கொள்வது உங்களுக்கு ஒரு நல்ல புரிதலைத் தரும், இன் ஷா அல்லாஹ்.

டீக்கடை பேஸ்புக் குழுமத்தில் நம் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விவாதம் வந்தது. பலர் பலவித யோசனைகள் சொன்னார்கள், ஆனால் பெரும்பாலானவர்கள் கட்டுரைப் போட்டி நடத்தலாம் என்று கூறினார்கள். ஆகவே கட்டுரைப்போட்டி நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஒரு கொள்கைச் சகோதரர் ரூபாய் 10,000 பரிசாக அறிவிக்கச் சொன்னார். மேலும் இது 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தலாம் எனவும் உறுதிகூறினார்.அல்லாஹ் அவருக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

அதன் பின் 7 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டது. 4 ஆண்கள், 3 பெண்கள். எந்த தலைப்பில் போட்டி நடத்தலாம் என்று விவாதிக்கப்பட்டு, "கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?" என்ற தலைப்பு முடிவு செய்யப்பட்டது. அதில் 5 பேர் கட்டுரையை தேர்ந்தெடுப்பவர்களாகவும், இருவர் இதர வேலைகள் செய்பவர்களாகவும் இருக்கும்படி முடிவு செய்தோம்.

கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் :

1. மொத்தம் 22 கட்டுரைகள் போட்டிக்கு வந்தன. அல்ஹம்துலில்லாஹ். இது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம். அடுத்த போட்டியில் இதை விட அதிகம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன் ஷா அல்லாஹ்.

2. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டது.(TIP001 to TIP022).

3. கட்ரையில், எழுதியவரின் பெயர், இன்னபிற விவரங்கள் இருந்தால் அது அழிக்கப்பட்டு, யார் எழுதியது என்று தெரியாத அளவிற்கு தனி பைலில் சேவ் செய்யப்பட்டது.

4. அதன்பின் 22 கட்டுரைகளும் 4 நடுவர்களுக்கும் அனுப்பப்பட்டது.

5. யார் கட்டுரையை திருத்துகிறோம் என்பது தெரியாமலே, ஒவ்வொருவரும் தனித்தனியாய் மார்க் அனுப்பினார்கள்.

6. மார்க் 10 க்கு போட வேண்டுமா, 20 க்கு போட வேண்டுமா என்ற கண்டிஷன் நாங்கள் வைக்கவில்லை. ஆகவே, நடுவர்கள் அவர்களாகவே ஒரு அளவுகோல் வைத்து தேர்ந்தெடுத்தார்கள். இரண்டு நடுவர்கள் 10 ன் அடிப்படையில் திருத்தினார்கள். ஒருவர் 30 க்கு மற்றொருவர் 100 க்கு. ஆக மொத்த மதிப்பெண்களை 150 க்கு என்ற அடிப்படையில் பார்க்கவும்.

7. நடுவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தோம். அதற்கு பின்பற்றப்பட்ட வழிமுறை. அவர் பதிவுக்கு அவர் மார்க் போட முடியாது. மற்ற மூவரின் ஆவரேஜ் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒரு நடுவர் கலந்து கொண்டார். (நல்ல வேலை அவர் ஜெயிக்கல.... ஹா..ஹா..ஹா).

கட்டுரைப்போட்டியில் நடந்த சுவாரஷ்யமான விஷயங்களும், படிப்பினைகளும் :


1. ஒரு சகோதரர் இந்த கட்டுரையில் குறிப்பிடுவதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசிடம் இருந்து சில தகவல்களை பெற்று இருக்கிறார். இத நாங்கள் இந்த போட்டியின் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். அல்ஹம்துலில்லாஹ். எங்கள் போட்டி ஒருவரை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது உண்மையிலே ஒருவித மன நிறைவை எங்களுக்கு தந்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

2. கடைசித் தேதி டிசம்பர் 15 என்று அறிவித்து இருந்தோம். டிசம்பர் பத்து முதல் நிறைய சகோதர, சகோதரிகள் நாங்கள் நிறைய ரெபர் செய்து எழுதிக்கொண்டு இருக்கிறோம், ஆகவே எங்களுக்கு இன்னும் அதிகம் நாள் வேண்டும் என்று கேட்டார்கள். மாஷா அல்லாஹ். உங்கள் ஆர்வம் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. சொன்னது போலவே பலர் தங்கள் கட்டுரைகளை பல விரிவான தளங்களில் எழுதி அனுப்பி இருந்தார்கள். குட் வொர்க் சகோஸ்.

3. அறிவிலும் ஆர்வத்திலும் நாங்கள் ஒன்றும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கும் விதமாக சகோதரிகள் பலர் கலந்து கொண்டார்கள். 22 பேரில் 12 பெண்கள். பெண்களே பெரும்பான்மை. இஸ்லாமியர்கள் பெண்களுக்கு சுதந்திரம் வழங்குவதில்லை என்ற வெத்து வாதத்தை சொல்பவர்களை சம்மட்டி கொண்டு அடித்துள்ளது இந்த கட்டுரைப்போட்டி.

4. பல நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் , ஐடியாக்களையும் சொல்லி இருக்கிறீர்கள். அவற்றை எப்படி பயன்படுத்துவது, யாரிடம் கூறினால் நடக்கும் போன்ற விஷயங்களை விவாதித்து, ஏதாவது ஒரு விதத்தில் அவை நம் சமுதாயத்திற்க்கு பயன்படும்படி செய்ய எங்களால் ஆன முயற்சிகளை செய்கிறோம், இன் ஷா அல்லாஹ்.

இனி வெற்றியாளர்கள் விபரங்கள்.....

கடும் போட்டிக்கு இடையே முதல் பரிசாக  ரூபாய் ஐந்தாயிரம்  தட்டிச் செல்பவர்...

சகோ. Dr. Captain. S.ABIDEEN, இளையான்குடி.
பெற்ற மதிப்பெண்கள் : 104.5

முதல் இடத்திற்கு வரும் எல்லா தகுதியும் இருந்து, வெறும் 4 மதிப்பெண்களில், நூலிழையில் முதல் இடத்தை தவறவிட்டு, இரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் தட்டிச்சென்றவர் :

சகோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.
பெற்ற மதிப்பெண்கள் : 100.5

வெறும் 3 மதிப்பெண்களில், நூலிழையில் இரண்டாம் இடத்தை தவறவிட்டு, மூன்றாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரம்  வென்றவர்:

சகோ. இப்னு முஹம்மது, கோவை.
பெற்ற மதிப்பெண்கள் : 97.5

ஆறுதல் பரிசு விபரங்கள் :

போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறாத மற்றவர்களுக்கு, எங்களின் உம்மத் குழு வெளியிட இருக்கும் "எதிர்க்குரல் (இஸ்லாமோபோஃபியா Vs இஸ்லாமிய பதிவர்கள்)" என்ற புத்தகம் ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீக்கடை - இஸ்லாமியப் பெண்மணி சார்பாக சான்றிதழ் வழங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிப்பெண் அட்டவணை :


பெயர்
நடுவர்-1
நடுவர்-2
நடுவர்-3
நடுவர்-4
total

100க்கு
10க்கு
30க்கு
10க்கு

அப்துல் ஹமீது
20
2
10
7
39
இப்னு முஹம்மது
62
6
21
8.5
97.5
அஹ்மத் யஹ்யா
44
3
11
7.5
65.5
Peer Mohamed A.M.
62
4
19
7.5
92.5
உம்மு ஷாஜ்
38
4
12
7
61
ஃபாயிஜாகாதர்
43
2
7
7
59
எஸ். நிலோபர் ரஹ்மான்
58
5
10
8
81
அப்துல் நாசர்
37
4
12
7.5
60.5
P. அப்துல் ஹக்
53
7
16
8
84
நபிலா
34
4
11
7
56
Dr.  Captain.   S.ABIDEEN
66
8
22
8.5
104.5
உம்மு ஹனா
43
6
19
9
77
இப்ராஹிம் ஷா
45
4
14
8
71
பீர் முஹம்மத்
50
7
20
8.5
85.5
சா.உம்மு ஹபீபா
45
4
11
7.5
67.5
ஆமினா
49
7
16
8.5
80.5
எம். சகீனா பேகம்
43
6
10
7.5
66.5
பானு
54
5
17
8.5
84.5
ஹுசைனம்மா
48
8
16
8
80
ஆயிஷா பேகம்
38
3
10
8
59
ஸ்டார்ஜன்
35
2
6
7
50
உம்ம் ஒமர்
68
9
15
8.5
100.5நிறைய சகோதர, சகோதரிகள் 80 ல் இருந்து 100 க்குள் இருக்கிறார்கள். ஆகவே, இது ஒரு மிகச் சிறந்த போட்டி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை... எல்லாப் புகழும் இறைவனுக்கே.

நன்றி... நன்றி..நன்றி...:

1. வெற்றி பெற முடியாவிட்டாலும், அழகான, அற்புதமான பல கருத்துக்களைக் கூறிய போட்டியாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.

2. தங்கள் கடினமான பணிகளுக்கும் இடையில் நேரம் ஒதுக்கி இதை திறம்பட நடத்த உதவிய நடுவர்கள், போட்டி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

3. அறிவிப்பு வெளியிட்டதும் தத்தமது வலைதளங்களில்  அறிவிப்பு செய்தும், பேனர் வைத்தும்  இப்போட்டி பலரிடத்தில் கொண்டு சேர்த்த சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

4. சமூக வலைதளங்களிலும்,  மெயில்கள் மூலமாகவும் போட்டி பற்றிய தகவல்களை பகிர்ந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களால் தான் இவ்வெற்றி சாத்தியமானது! இறைவன் நம் அனைவரின் உழைப்பையும் பொருந்திக் கொள்வானாக... ஆமீன்...

இப்போட்டிக்கு நடுவர்களாக செயல்பட்டவர்கள் :

1. ஹுஸைனம்மா (http://hussainamma.blogspot.com)
2. அன்வர் சதாத் (http://engenaan.blogspot.in/)
3. முஹம்மத் ஆஷிக்(சிட்டிஸன் ஆப் வேர்ல்ட்) (http://pinnoottavaathi.blogspot.com/)
4. குலாம் (http://www.naanmuslim.com/)
5. உம்ம் ஓமர் (http://mydeartamilnadu.blogspot.in/), இவர் சொந்த அலுவல் காரணமாக மதிப்பெண் போடவில்லை.

மதிப்பெண்கள் பட்டியல் இந்த வரிசையில் இல்லை... ஹா..ஹா..ஹா .. சோ, யார் யார் எவ்வளவு மதிப்பெண் கொடுத்தாங்கன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணாதீங்க.

இப்போட்டியின் மற்ற வேலைகளை செய்தவர்கள் :

1. ஆமினா முஹம்மத்
2. சிராஜுதீன்

எதிர்கால திட்டங்கள் :

இறைவன் நாடினால்... இது போன்ற போட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில்(3 மாதங்கள்) நடத்தும் யோசனை உள்ளது. அவ்வாறே செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்யுங்கள்.

இறுதியாக, இன்ஷா அல்லாஹ் நீங்கள் கூறிய அனைத்து யோசனைகளையும் தொகுத்து இணையத்தில் வெளியிடுவோம். முடிந்தால் புத்தகமாகவும் வெளியிடுவது பற்றி யோசிக்கிறோம். புத்தகம் தான் உங்கள் கருத்துக்களை தமிழக முஸ்லிம்களிடம் கொண்டு செல்ல சரியான வழி என்று எங்களுக்கு தோன்றுகிறது.

குறிப்பு : முஸ்லிம் அல்லாத மாற்று மத அல்லது மதம் இல்லை என்று சொல்லும் சகோதர, சகோதரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது எங்களுக்கு சிறிது வருத்தத்தைத் தருகிறது. யாரும் கலந்து கொண்டிருந்தால், அவர்கள் வெற்றி பெறாத பட்சத்தில் ஆறுதல் பரிசு கொடுப்பது குறித்தும் யோசித்திருந்தோம். ம்ம்.. நடக்காமல் போய் விட்டது.

இறைவன் நாடினால், இனி வரும் போட்டிகளில் பங்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பங்கு கொள்ள வேண்டும் என்று எங்கள் அன்புச் சகோதரங்களை உரிமையுடன் அழைக்கிறோம்.

முதல் மூன்று இடங்களை பிடித்த சகோஸ், தங்கள் வங்கி கணக்கு விபரங்களை மெயிலில் அனுப்பி வையுங்கள். இன்ஷா அல்லாஹ் பத்து நாட்களுக்குள் பரிசுதொகை அனுப்பிவிடுகிறோம். (அனுப்பியதும் அதன் ரசீதை ஸ்கேன் செய்து  இப்பதிவிலேயே  அப்டேட் செய்கிறோம் இன் ஷா அல்லாஹ்)
47 comments:

 1. மாசா அல்லாஹ், மாசாஅல்லாஹ், வெற்றிபெற்ற மூவருக்கும் நெஞ்சார்ந்தவாழ்த்துகள்.

  மேலும் போட்டிக்கட்டுரைகளை அனுப்பிவைத்த நெஞ்சங்களுக்கும் பாராட்டுங்கள்.

  இன்னும் இதுபோன்ற நல்ல விழிப்புணர்வுள்ள விசயங்களை மேற்கொள்ளவேண்டும் இஸ்லாமியபெண்மணிகளின் சார்ப்பில், இஸ்லாத்தின் நெறிமுறையோடு இன்ஷா அல்லாஹ்..

  மீண்டும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

  ReplyDelete
 2. அடுத்தமுறை இறைவன் நாடினால் கலந்துகொள்ள முயச்சிகிறேன்..

  ReplyDelete
 3. போட்டியில் கலந்துகொண்ட ..வெற்றி பெற்ற
  சகோ. Dr. Captain. S.ABIDEEN, இளையான்குடி.
  மற்றும் .சகோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.
  மற்றும் ..எங்களின் கோவைக்கு பெருமை தேடி தந்த நம்ம அண்ணன்
  சகோ. இப்னு முஹம்மது, கோவை. ..அவர்களுக்கும் என்னுடைய வாழத்துக்கள்

  நானும் இந்த போட்டிக்காக நிறைய யோசிச்சு .எனக்கு அறிந்ததை எழுதினேன் ..எழுதி முடித்து ..அதை என் நண்பருக்கு படித்து காட்டினேன் ......என் நண்பர் கூறினார் ..மாப்ள இது நல்லாவே இல்லடா ....இது என்னமோ பத்தாவது படிக்குற பையன் ..பள்ளியின் ஆண்டுவிலாவுக்காக எழுதும் உரைநடை போன்று உள்ளது ..இதை நீ ..அனுப்பாத ..காமடியா போய்டும்னு சொன்னா ...அப்பவே எனக்கு..கலந்துகொள்ளும் ஆசை போனது ..என்ன பண்றது அல்லாஹு நாடவில்லை ..இன்ஷா அல்லாஹ அடுத்த போட்டியில் நான் இருப்பேன் என்று நினைக்கின்றேன் .இன்ஷா அல்லாஹ

  ReplyDelete
  Replies
  1. ஸலாம் சகோ ரினாஷ்,

   இது ஒரு பெரிய தப்பு. நீங்கள் எழுதியது ஒரு அவ்ரி என்றாலும் கூட நீங்கள் அனுப்பி வைத்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் நடுவர் அல்ல. நடுவர்களாக இருப்பவர்கள் என்றுமே கருத்தையும், சொல்லப்பட்ட விதத்தையும்தான் பார்ப்பார்களே ஒழிய, குறை கூற மாட்டார்கள். இன் ஷா அல்லாஹ், அடுத்த முறை கண்டிப்பாக அனுப்புங்கள்.

   ஆமாம், நான் கோவையைச் சார்ந்தவளாக தெரியவில்லையா???? :))

   Delete
  2. ஆமா ரினாஸ்... அன்னு சொல்வது சரி தான்... நான் கூட போட்டி இறுதி தேதி அன்று தான் அனுப்பினேன்... ஏன் ஸ்டார்ஜன் அண்ணா கூட 4 மணி நேரத்தில் இறுதி நாளன்று எழுதினார்...

   இப்போட்டி வார்த்தை கோர்வை, எழுத்து திறமையை சார்ந்தது அல்ல.... மாறாக ஆலோசணைகள் திட்டங்களை பற்றியதே... அடுத்த முறை நிச்சயம் கலந்துக்கோங்க

   Delete
 4. மாஷா அல்லாஹ்!,

  வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. maashaa allaah. great work brothers and sisters. I have severe flu and i cant participate in this contest. Now its ok. Insha allah i will participate in forthcoming contests.

  ReplyDelete
  Replies
  1. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ ஹாஜா.

   இன் ஷா அல்லாஹ் தாங்கள் சீக்கிரமே குணமடையவும், முன்பை விட இன்னும் அதிக உடல் நலத்தோடும், ஈமான் பலத்தோடும் இணையத்தை ஆட்கொள்ள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம். கண்டிப்பாக அடுத்து வரும் போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் இன் ஷா அல்லாஹ்.

   Delete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்.

  மாஷாஅல்லாஹ். மிகச்சிறப்பாக இப்போட்டியை நடத்திக்காட்டி எல்லாருமே சிறப்பாக சாதித்து விட்டீர்கள்.

  தங்களின் கனமான ஆக்கங்களுடன் கலந்து கொண்டோருக்கும், அதில் வெற்றி பெற்றோருக்கும் எனது இனிய பாராட்டுகள் உரித்தாகுக.

  கட்டுரைகளை படிக்கும்போது பல புதிய விஷயங்களையும், சரியான புரிதல்களையும், அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பாக இப்போட்டி எனக்கு அமைந்து இருந்தது.

  இத்தனை அருமையானதொரு போட்டிக்கு என்னை நடுவராக தேர்ந்தெடுத்தமைக்கு, இத்தளத்தினர் அனைவருக்கும் மன்மார்ந்த எனது நன்றியை கூறிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 7. ஏதோ எனக்கு ஆறுதல் பரிசாவது கெடைக்குதேன்னு ஆறுதலாகிக்கிறேன்... (இல்லன்னா என் மவன், நான் ட்ராயிங் கான்டஸ்ட்ல வாங்கினேன் நீ வாங்கலையான்னு கிண்டல் பண்ணுவான் அவ்வ்வ்வ்வ்வ் )

  வெற்றிபெற்ற அனைத்து சகோஸ்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...

  ReplyDelete
 8. @அன்னு!

  அடுத்த முறை நீங்களூம் நானும் பார்ட்னரா இருந்து எழுதுவோமா? அட்வான்ஸ் புக்கிங்க் :-)))

  ReplyDelete
  Replies
  1. ஆத்தி...... நான் இரண்டாவது இடமாவது பெற்றது உங்களுக்கு பிடிக்கலியா..... ஷாம்....ஆனியை கவனீ..... :)))))))

   Delete
 9. மாஷாஅல்லாஹ்
  வெற்றிபெற்ற அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. மாஷாஅல்லாஹ்
  வெற்றிபெற்ற அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. masha allah yenaku ipadi oru potti nadaku thunu theriyama pochea

  ReplyDelete
  Replies
  1. இனி மூன்று மாதங்களுக்கொருமுறை நடைபெறும்.... அடிக்கடி வந்து பாருங்க சகோ... இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை கலந்துக்கொண்டு வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

   Delete
 12. masha allah yenaku ipadi oru potti nadaku thunu theriyama pochea

  ReplyDelete
 13. masha allah. ipadi oru potti nadaku thunu theriyama pochea.

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும்.. மாஷா அல்லாஹ் போட்டியில் கலந்துகொண்ட ..வெற்றி பெற்ற சகோ. Dr. Captain. S.ABIDEEN, இளையான்குடி.மற்றும் .சகோ. உம்மு ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.
  மற்றும் .சகோ. இப்னு முஹம்மது, கோவை. ..அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழத்துக்கள் ... எனக்கு கட்டுரையே சுத்தமாக எழுத வராது.. இருப்பினும் கலந்துக்கொண்டேன்.. போட்டியில் கலந்துக்கொண்டடே எனக்கு மகிழ்ச்சியினை தருகிறது.. போட்டியினை சிறப்பாக நடத்திய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்..

  ReplyDelete
 15. மாஷா அல்லாஹ் , மாஷா அல்லாஹ் ரொம்ப சந்தோசம் அல்ஹம்துலில்லாஹ்....வெற்றி பெற்ற ,இன்னும் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்ககளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவத்து கொள்கிறேன். இதை நடத்திய டீகடை,இஸ்லாமிய பெண்மணி குழுமத்திற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதில் கலந்தது கொள்ளாமல் கவனகுறைவாக இருந்து விட்டோமேனு வருத்தமாக உள்ளது.

  ReplyDelete
 16. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...

  கலந்து கொள்ளாமல் இருப்பதை விட கலந்து கொண்டு தோற்பது மிக்க பெருமையானது.

  ReplyDelete
 17. மாஷாஅல்லாஹ்
  வெற்றிபெற்ற அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 18. அஸ் ஸலாமு அலைக்கும் சகோஸ்,

  மனம் முழுதும் நிரம்பி வழிகிறது.... மிக மிக மகிழ்ச்சியாய் உள்ளது. இந்தக் கட்டுரைப்போட்டி மூலம் எனக்கு இன்னோர் உலகத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் என்றால் மிகையாகாது. அல்ஹம்துலில்லாஹ்.

  சகோதரர்.கேப்டன் ஆபீதீன் அவர்களுக்கு என் ஸலாம். மாஷா அல்லாஹ் உங்களின் கட்டுரை முதல் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். :) தங்களின் கட்டுரையைப் படிக்கும் ஆவல் எல்லையற்று விரிகிறது. விரைவில் படிப்போம் இன் ஷா அல்லாஹ் :)

  சகோதரர். இப்னு முஹம்மத், அஸ் ஸலாமு அலைக்கும். கோவையைச் சார்ந்தவர்களின் அறிவுக்கு மற்றுமொரு உதாரணம் :). மாஷா அல்லாஹ். தங்களின் கட்டுரையையும் படிக்க மிக்க ஆவலாக உள்ளேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

  நடுவர்களுக்கும், புத்தக வேலை, வீட்டு/வெளி வேலை என அத்தனைக்கும் நடுவில் இதையும் சிறப்புற நடத்திய சிராஜ் பாய், ஆமினாவுக்கும் மனம் நிறைந்த து’ஆவும், நல் வாழ்த்துக்களும். ஜஸாக்குமுல்லாஹு க்ஹைர். :)

  ReplyDelete
 19. மாஷா அல்லாஹ், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், இது போன்ற போட்டிகள் நடத்துவது இணையத்தை ஆக்கபூர்வமான பாதையில் பயன்படுத்துவதை ஊக்கபடுத்துவதாய் உள்ளது. தொடர்ந்து இது போன்ற போட்டிகளை நடத்த இறைவன் நாடுவானாக..

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  அன்பு சகோஸ், மாஷா அல்லாஹ்

  நம் சகாக்களின் வெளியுலக அறிவை வெளிக்கொணர்வதற்கு அழகானதொரு போட்டி அல்ஹம்துலில்லாஹ்., சிறப்பானதொரு வாய்ப்பு எல்லோருக்கும் ஏற்படுத்தி தந்த இ.பெ நிர்வாக குழுவிற்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்,

  கைர், போட்டியின் நடுவர்களில் ஒருவன் என்ற முறையில்... சில வார்த்தைகள் உங்களோடு...

  சுஃப்ஹானல்லாஹ், எவ்வளவு நேர்த்தியாக தலைப்பிற்காக சகாக்கள் உழைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் கட்டுரைகளை படிக்கும் போது விளங்கிக்கொள்ள முடிந்தது..

  அதிலும் சிலர் கைளால் எழுதியதை ஸ்கேன் செய்து அனுப்பியும் இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வ மிகுதிக்கு இது ஒரு அழகிய சான்று..

  தலைப்பு ஒட்டி எத்தனை எத்தனை செய்திகள்..
  தெளிவான புள்ளி விபரங்கள்,
  விரிவான வரலாற்று சான்றுகள், அத்தோடு இடத்திற்கு இடம் தகுந்தார்போல் வேத வரிகளும், தூதர் மொழிகளும் பொருத்திய பாங்கு மிக மிக அருமை.

  சுருக்கமாக சொன்னால் இந்த போட்டிக்கு வந்த கட்டுரைகள் படிக்க படிக்க எனக்குள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியது. ஒரு சாதரண போட்டி என நினைக்காமல் எவ்வளவு விபரங்களை சேகரித்திருக்கிறார்கள் நம் சகாக்கள்.

  போட்டியில் பங்குக்கொண்ட, பங்குக்கொள்ள நினைத்தும் வாய்ப்புக்கிட்டாத யாவருக்கும் கல்வி ஞானத்தை அல்லாஹ் இன்னும் விசாலப்படுத்துவானாக..!

  ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு முதலில் என் வாழ்த்துகளையும், முதல் மூன்று இடங்கள் வந்தவர்களுக்கு அடுத்தப்படியாக வாழ்த்துகளையும் கூறி விடைபெறும்...

  உங்கள் சகோதரன்
  குலாம்.

  ReplyDelete
 21. masha allah masha allah veatri petra matrum kalanthu konda anaivarukum vazhthukal sago's

  ReplyDelete
 22. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..:)

  வெற்றி பெறாதவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..பங்கு கொண்டதற்காக...:)

  மிக அருமையான முறையில் தன் பல வேலைக்கிடையிலும் சிறப்பாக நடத்திய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை தருவானாக..ஆமீன்..

  புக் சும்மாவே கிடைக்குதா..நன்றி..:)


  ReplyDelete
 23. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 24. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. மாஷா அல்லாஹ் கலந்து சிறப்பித்த அனைவர்க்கும்..வாழ்த்துக்கள்....
  தலைப்புத்தான் கொஞ்சம்...

  நாடுகள் தாண்டிய தலைப்பாக .இருந்திருந்தால்...மாஷா அல்லாஹ்....இன்னும் ஹிட்ஸ் கிடைத்திருக்கும்...
  இது என் அபிப்பைிராயம்...
  தவறு என்றால் மன்னிக்கவும் சகோஸ்....

  ReplyDelete
 26. அஸ்ஸலாமு அழைக்கும்...

  மாஷா அல்லாஹ்..! இப்போட்டியை நடத்திய கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..!அல்லாஹ் அனைவர்க்கும் அருள்புரிய போதுமானவன்..!

  ReplyDelete
 27. its ok !! vetri petra en anbu annan maargalakkum, akka maargalukkum enadhu vaalthukkalayum, paaratukkalayum, menmelum ungalathu deen paanigal niraiveyra enadhu piraarthanaigal. ..

  ReplyDelete
 28. vetree petra en udan piravaa annankalukkum, sagodhareegalukkum,
  enadhu manamaarntha vaalthukkal, matrum paaratukkal,

  ungal ivvetriyin mudhal padiyey !

  so vaalga islam valarga deen panigal

  assalaamu alaikum

  ReplyDelete
 29. மாஷா அல்லாஹ்.. போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  திறம்பட நடத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 30. முதலிடம் பெற்றவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.

  பதிவை, தொடக்கம் முதல் கடைசி வரையிலான அனுபவங்களோடு அழகாக எழுதிருக்கீங்க ஆமினா. ஒரு நடுவராக, வந்திருந்த கட்டுரைகளில் இருக்கும் மிகுந்த ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கண்டு வெகு ஆச்சரியமாக இருந்தது. தேர்வு பெறாத கட்டுரைகளிலும் இருக்கும் குறிப்பிடத்தக்க நல்ல கருத்துகளும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே நடுவராக இருந்தபோது எனக்குத் தோன்றியது. அதற்கு ஆமினா & சிராஜ் ஆவன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
  Replies
  1. @ஹுசைனம்மா...

   புத்தகமாக வெளியிடும் எண்ணம் இருக்கிறது. நேற்று அன்னுவும் இதே கருத்தை கூறினார். அதற்கான வேலைகளும் தொடங்கவிருக்கிறது.

   ஆலோசணைகளை பற்றியும் டீக்கடை பேஸ்புக் குழுமத்தில் விவாதித்து செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கவிருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

   இதுபோக அனைவரையும் சென்றடைய ஆவன செய்ய முயற்சிக்கிறோம் ஹுசைனம்மா... தங்கள் கருத்தும் எதிர்பார்க்கிறேன்

   நன்றி

   ஜஸக்கல்லாஹ் ஹைர்   Delete
 31. Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும்

   மாஷா அல்லாஹ்...

   வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

   சிறப்பாக நடத்திய அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை தருவானாக..ஆமீன்..

   Delete
 32. அல்ஹம்துலில்லாஹ்.... போட்டியை அருமையான விதத்தில் நடத்திக்காட்டிய, பங்கு பெற்ற,வெற்றி பெற்ற சகோதரர்கள் அனைவருக்கும் இறைவன் நற்கூலி வழங்குவானாக... கட்டுரையைக் கையால் எழுதி அனுப்புமளவிற்கு உற்சாகமளித்த நமது குழுவிற்கு பாராட்டுக்கள்.

  //யார் கட்டுரையை திருத்துகிறோம் என்பது தெரியாமலே, ஒவ்வொருவரும் தனித்தனியாய் மார்க் அனுப்பினார்கள்.// நல்ல உத்தி...பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. /யார் கட்டுரையை திருத்துகிறோம் என்பது தெரியாமலே, ஒவ்வொருவரும் தனித்தனியாய் மார்க் அனுப்பினார்கள்.// நல்ல உத்தி...பாராட்டுக்கள்.//

   நடுவர்களுக்கும் கூட இது யாருடைய மதிப்பெண்கள் என்பது தெரியாது... அனைத்துன் தனித்தனியாக பெறப்பட்டு தொகுக்கப்பட்டது :-)

   Delete
 33. அல்ஹம்துலில்லாஹ்.. நல்லதொரு முயற்சி! இதுபோன்ற நன்முயற்சிகள் தொடரவும், அதற்கு நிறைந்த பலன் கிடைக்கவும் இறைவன் உதவி செய்வானாக!

  ReplyDelete
 34. போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் எங்களுடைய வாழ்துக்களை தெரிவித்துகொள்கிறோம்...

  ReplyDelete
  Replies

  1. மஷா அல்லா , வெற்றி பெற்ற உங்கள் மூவருக்கும்
   (சகோ. Dr. Captain. S.ABIDEEN, மற்றும் அன்னு, அமெரிக்கா. ) பாராட்டுக்கள்.
   தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் பாராட்டுக்கள்.

   Delete
 35. போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

  ReplyDelete
 36. அஸ்ஸலாமு அலைக்கும்,

  வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  அடுத்த தடவை மதிப்பெண் கொடுக்கும்போது அதனை அப்படியே மொத்தமாக போடாமல் இத்தனை சதவீதம் என்றால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 37. போட்டியில் கலந்துகொண்ட முதல்யிடம் பெற்ற சகோதர Dr. Captain. S.ABIDEEN அவர்களுக்கும், மற்றும்
  போட்டியில் கலந்துகொண்ட இரண்டாம் இடம் பெற்று நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்று நிருப்பித்த சகோதரி கோவை அன்னு அவர்களுக்கு, மற்றும்
  போட்டியில் கலந்துகொண்ட மூன்றாம் இடம் பெற்று சகோதரார் இப்னு முஹம்மது அவர்களுக்கும். மற்றும்
  போட்டியில் கலந்துகொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எனது மணமறந்தா வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. என்னது ! ....போட்டீல வெற்றி பெராதவங்களுக்கும் ஆறுதல் பரிசு உண்டா.? அடுத்தமுறை ஒரு அஸ்ஸலாமு அலைக்குமாவது போட்டு அனுப்பி ஆறுதல் பரிசையாவது வாங்கிரனும்.. :-))

  ( இந்த ஐடியாவை காப்பி ரைட் வாங்கியிருக்கேன்..யாராவது காப்பி அடிச்சிங்க ...பிச்சி புடுவேன் ..பிச்சி ! )

  ReplyDelete