Thursday, October 04, 2012

முஹம்மத்- யார் இவர்

முன்குறிப்பு :மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எப்படி தயாரிப்பது, எப்படி பிரிண்ட் செய்வது, தவறுகள் வந்தால் என்ன செய்வது போன்ற விஷயங்களால் அந்த ஆர்வம் பேச்சுடன் முடிந்து விடுகிறது. இஸ்லாம் பற்றி எப்பொழுதெல்லாம்  விமர்சனங்கள் வருகிறதோ அப்பொழுதெல்லாம் உடனே இஸ்லாம் பற்றிய உண்மைகளை மாற்று மதத்தவர்களுக்கு புரியவைக்க குறிப்பேடுகள் வழங்கும் விதமாக இஸ்லாமிய பெண்மணியும், பேஸ்புக்கில் இயங்கிவரும்  டீக்கடை குழுமமும் இணைந்து செய்யும் முயற்சியே இந்த பேம்லெட் வெளியீடு.  இதைத் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் பல தலைப்புகளில் இதே போன்ற குறிப்பேடுகளை வெளியிடும் திட்டமும் உள்ளது. அது வெற்றி அடைய துவா செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இந்த குறிப்பேட்டை யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் "admin@islamiyapenmani.com " என்ற மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புங்கள். பிரிண்ட் செய்ய முடியாதவர்கள், எங்களிடம் சொல்லவும்.  டீக்கடை குழுமத்தில் இருக்கும் ஒரு சகோதரர்  உங்களுக்காக அதை குறைந்த விலையில் அடித்துத் தர தயாராக இருக்கிறார். வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் விஷயத்தை நாங்கள் செய்து விட்டோம். இதை மாற்று மதத்தவர்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு நம் அனைவரிடமும் இருக்கிறது. இதற்காக உழைத்த , உழைக்கப் போகும் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாதா சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் நற்க்கூலி வழங்குவானாக. ஆமீன்."

முக்கிய அறிவிப்பு: (பிற்சேர்க்கை)

இந்த பேம்ப்ளெட் நாளை பிரிண்ட் செய்யப்பட இருக்கிறது. யாருக்கும் தேவை என்றால் அட்மின்களுக்கு மெயில் செய்யுங்கள்.. ஒரு காபி 1.70 பைசா வரும்.. 100 ன் மடங்காக சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைப்பார்கள். முடிந்த அளவு அதிகம் அடிக்க விரும்புகிறோம்..தனியாக அச்சடிக்க நிறைய காசு ஆகும்...சோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்... 1000 காப்பி 1700 ரூபாய் தான் வரும்...

அல்ரெடி 15,000 காபிகளுக்கு சகோதர சகோதரிகள் ஆர்டர் செய்துள்ளார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..                                                     முஹம்மத்- யார் இவர்?

முதல் மற்றும் 5ம்,6ம் பக்கம்
பெரிதாக பார்க்க படத்தை க்ளிக்கவும்
 இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை  இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது?  இக்கேள்விகளுக்கான  விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு...
சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...

நேர்மை :

இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருக்கும் ஒரு துண்டு பேரிச்சை பழத்தை தனது பேரன் வாயில் போட , இறைத்தூதரோ பதறிப் போய் வாயில் இருந்து பேரிச்சையை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து "அரசு பணத்தில்  எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல" என்று கூறினார்கள்.   கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

மதினாவில் தொழுவதற்காக பள்ளிவாசல் தேவைப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்காக இரு இளைஞர்கள் இலவசமாகவே இடம்  கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் இறைத்தூதரோ இலவசமாக வேண்டாம் என்று கூறி  பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். அவர் இலவசமாகவே அந்த இடத்தை பெற்றிருக்க முடியும்... செய்தார்களா?

ஏழ்மை வாழ்க்கை :

இறைத்தூதர் குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று நாட்க்களுக்கு எந்த உணவையும் வயிறாற உண்டதில்லை.  மற்றவர்கள் பரிதாபம் கொண்டு விருந்துக்கு அழைக்கும் நிலையிலேயே  தன் வாழ்நாளை பட்டினியுடன் கழித்துள்ளார்கள்.

இறைத்தூதரிடம் ஒரு பாய் விரிப்பு மட்டுமே இருந்துள்ளது. அதை பகல் நேரத்தில் படுக்கைக்கு விரிப்பாகவும், இரவு நேரத்தில் வீட்டை மறைக்கும் கதவாகவும் பயன்படுத்தினார்கள். பாயின் மீது எவ்வித விரிப்பும் இல்லாமல் படுப்பதால் அவரின் உடலில் பாயின் தடம் பதிந்திருக்கும். சாதாரண தலையணையே பயன்படுத்தினார்கள். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர், மாளிகையில் வாழ்ந்திருக்க முடியும். கருவூல பணத்தில் தன் வாழ்நாளை சுகபோகத்தில் கழித்திருக்க முடியும்... செய்தார்களா?


மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் :

 மக்களிடத்தில் எவ்வித மரியாதையையும், தனிப்பட்ட கவனிப்பும், சிறப்பும் பெற அவர்கள் ஒரு போதும் விரும்பியதில்லை. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான இறைத்தூதரை காண்பதும், கேள்வி கேட்பதும், பேசுவதும், பழகுவதும் , ஒன்றாக உணவு அருந்துவதும் அந்தப் பகுதி மக்களுக்கு பெரிய விஷயமாக இருக்கவேயில்லை.

முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்டு நபியை ஏசுகிறார் ஒரு யூதர். ஆனால் இவரோ பொருமையாக கடன்கொடுத்தவருக்கு உரிமை இருக்கிறது, அவரை துன்புறத்த வேண்டாம் என தன் தோழர்களுக்கு கட்டளையிடுகிறார். இறைத்தூதர் நினைத்திருந்தால் ஆட்சிதலைவராக தண்டனை வழங்கியிருக்கலாம். அதற்கான அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆனாலும் செய்தார்களா?

தனக்கு அன்பளிப்பாக வந்த  ஆட்டை வைத்து ஏற்பாடு செய்த விருந்திற்கு   பொதுமக்கள் அனைவரையும் அழைத்து  மக்களோடு ஒன்றாகவே அமர்ந்து உணவருந்தினார்கள்.
  "அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் அல்லாஹ் என்னை ஆக்கவில்லை" என்றார்கள். இத்தகைய ஆட்சியாளரைக் கண்டதுண்டா ? தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை தானே முழுமையாக அனுபவித்திருக்க முடியும்.  செய்தார்களா?

மரியாதை காரணமாக நடுக்கத்துடன் இறைத்தூதரை காண வந்தார் ஒரு நபர். "சாதாரணமாக இருப்பீராக. சாதாரண குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்" என்று கூறி சகஜ நிலைக்கு அந்த நபரைக் கொண்டுவருகிறார்கள் .

 பள்ளிவாசல் கட்ட கல் சுமப்பதும், அகழ் வெட்டுவதும் என மக்களோடு மக்களாக தாமும் இணைந்து செயல்பட்டார் இந்த மாமனிதர்! தன் ஆட்சிக்குட்பட்ட சாதாரண மக்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பவராகவும், குடும்பங்களில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நேராக அவர்கள் வீட்டிற்கே சென்று விஷாரிப்பதுமாக மக்களோடு ஒன்றிணைந்த வாழ்க்கை வாழ்ந்தார் இந்த உத்தம மனிதர்

அனைவரும் சமமே! :

பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்யக்கூடியவர் எங்கே? என கேட்க, அப்போது தான் அவர் இறந்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனை ஏன் எனக்கு முன்பே கூறவில்லை என கடிந்துக்கொண்டதோடு அந்த சாதாரண வேலையாளின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின்  பணியாளர் அனஸ் (ரலி) அவர்களின் பாட்டி  இறைத்தூதரை விருந்துக்கு அழைக்க, மறுப்பு சொல்லாமல் அந்த ஏழை வீட்டு விருந்தை ஏற்றுக்கொண்டார் இந்த வல்லரசின் ஆட்சியாளர்!

புகழுக்கு ஆசைப்படாத மாமனிதர்:

ஒரு நபர் இறைத்தூதரை புகழ்ந்துகொண்டிருக்க, அதை நிறுத்தச்செய்து, "என்னை வரம்பு மீறி புகழாதீர்கள், நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். மற்றும் அல்லாஹ்வின் அடியானும் , அவனது தூதரும் ஆவேன். அல்லாஹ் தந்த இந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார் அந்த அற்புத மனிதர்!

ஹியாரா எனும் பகுதி மக்கள் தன் தலைவருக்கு சிரம் பணிவதை கண்ட நபிதோழர் நபி (ஸல்)  "நாங்கள் சிரம் பணிந்திட அதிக தகுதியுடையவர் நீங்கள் தாம்" என்றார். அதை மறுக்கும் விதமாக "நான் இறந்த பின் என் அடக்கஸ்தலத்தில் சிரம் பணிவீரா?" என திருப்பிக் கேட்டார் இறைத்தூதர் அவர்கள் . அதற்கு அவர் "இல்லை... அவ்வாறு செய்ய மாட்டேன்" என்றார். ஆம்.. அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தமக்காக  தமக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென யார் விரும்புகின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை  நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் என்றும் கூறினார்கள்.  தான் வாழ்ந்த போதும் கூட அல்லாமல் தான் இறந்த பின்னும் கூட அடுத்தவர் தம்மை சிரம் பணிவதை விரும்பதவராக இருந்தார்  இந்த முன்மாதிரி  ஆட்சியாளர்.

ஏதேனும் மக்களுக்கு கட்டளையிடும் போது "நபியே நாங்கள் உங்களை போன்று இல்லை (அதாவது நீர் எம்மை விட சிறந்தவர் என கூறக்கூறுவது)" என கூறினால் கடுங்கோபம் கொள்பவர்களாக இருந்தார்கள். தானும் மற்றவர்களை போலவே என்று கூறிவந்தார்!

சலுகை பெறாத உத்தம மனிதர்:

அரசு பணியில் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை தனது மகன்களுக்கு கொடுக்க  சொல்லி இறைதூதரின் பெரியதந்தை கேட்க இறைதூதரோ அதை மறுத்தார்.

தனது பெரிய தந்தை ஜகாத் பணம் கொடுக்க மறுக்க, ஜகாக்கத்தை வசூலிப்பதோடு அதேயளவு தொகை அபராதமாக வசூலிக்கும்படி உத்தரவிட்டார்.  தன் உறவினர் என்பதற்காக எவ்வித சலுகையும் அவர் பெறவில்லை!தன் குடும்பத்தாருக்கும் கொடுக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தின் உரிமையாளருக்கும் அது பிடித்தமானது. "நீங்கள் விரும்பும் பொருளிலிருந்து செலவு செய்யாதவரை நன்மையை அடைய மாட்டீர்கள்" என்ற திருக்குர் ஆனின் வசனத்தைக் குறிப்பிட்டு, அதை நபியவர்களுக்கே பரிசளிக்க, அதை ஏற்காமல், உமது நெருங்கிய உறவினர்களுக்கே அதை வழங்குங்கள் என்ற நபியவர்கள் தனது சொத்துக்கள்  எல்லாவற்றையும் பொதுவுடமையாக்கிவிட்டு இறக்கும் தருவாயில் அடமானம் வைத்த தனது கேடயத்தை மீட்க வசதியில்லாதவராகவே இறந்தார்கள்.
பேம்லெட்டின் 2,3,4ம் பக்க தோற்றம்
பெரிதாக்கி பார்க்க படத்தை க்ளிக்கவும்

பிறமதத்தவர்களிடம் :


இறைதூதர் அவர்களை பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். உடன் இருந்தவர்கள் அது பிற மதத்தவரின் பிரேதம் என தெரிவிக்கப்பட்டது.  அதற்கு மாமனிதரோ "அதுவும் ஓர் உயிரல்லவா?" என பதிலுரைத்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்காத  எனது தாய் வந்திருக்கின்றார். அவரை நான் என்னுடன் வைத்துக்கொள்ளலாமா? என்று ஒரு பெண் இறைத்தூதரிடம் கேட்டபோது, "அவர் உம் தாயல்லவா? அவரை உம்முடன் வைத்துக்கொள்வீர்ராக!"  என்றார்கள்.

எதிரியிடத்திலும் நேர்மை :

தான் சாப்பிட்ட இறைச்சியில் விஷத்தை கலந்த யூதப் பெண்ணை, தான் வேதனையை அனுபவித்தபோதிலும் மன்னித்தார்கள்.
போரில் கைப்பற்றப்பட்ட கைபர் பகுதியை தனக்குரியதாக ஆக்கிக்கொள்ளாமல் அங்கு வசித்து வந்த யூத மக்களுக்கே உரிமை கொடுத்தார்கள்.

போர்க் களத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்ட இறைத்தூதர்... பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்கள். போரின் போது   முகங்களை தாக்கக்கூடாது, இறந்த உடலை சிதைக்கக் கூடாது, நீர்நிலைகள், நிழல் மற்றும் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தக் கூடாது என கடுமையான விதிகளை விதித்தார்.
                                                     **********************
வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு செயல்களிலும் எப்படி வாழ வேண்டும்  மக்களுக்கு வாழ்ந்துகாட்டியவர். அறிவுரையோடு நிறுத்தாது தன்னிலிருந்தே நடைமுறைபடுத்தி, தானும் கடைபிடித்து மக்களையும் கடைபிடிக்க செய்து நல்வழிபடுத்தியவர்!
                                                    **********************
வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத , அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத, அரசு சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளாத, தனது வாரிசுகள் கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத, தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத, மாற்றுமதத்தவரை மதித்த, பேதம் கடைபிடிக்காத, எல்லாவித மக்களையும் சமமாக பாவித்த, எதிர்களிடத்திலும் நேர்மையைக் கடைபிடித்த, போர்களத்திலும்  விதிமுறைகள் வகுத்த, தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே கழித்த, பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை அல்ல எனக்கூறி பெண்களை சிறப்பித்த, அப்பழுக்கற்ற, நற்பண்புகள் பொருந்திய இந்த மாமனிதரை . இஸ்லாமிய மக்கள் ஏன் தங்கள்  உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள் என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

78 comments:

 1. “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”

  ReplyDelete
  Replies
  1. //எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; //

   ஆமீன்

   ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ ரஹ்மான் சாதிக்

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோ. மாஷா அல்லாஹ்!!! எல்லாத் தலைப்புகளும் படிக்கும் போது கண்முன் நிற்கிறது. சூப்பர் டிசைன் அருமையாக உள்ளது.

  நல்ல சிந்தனைகள் நல்ல உருவாக்கம் இன்ஷா அல்லாஹ் உங்களின் சிறந்த பணி மென்மேலு வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   மிக்க நன்றி சகோ..

   Delete
 3. ஹை நான் தான் மொதோ கமென்ட்.

  ReplyDelete
  Replies
  1. இங்கேயே பாய் தலகாணி போட்டு தங்கிட்டீங்க போல :-)

   Delete
 4. உங்கள் முகமதைப் பற்றி நான் கேட்கும் கேள்விகளை நீங்கள் வெளியிடப் போவதில்லை. அதனால் எதற்கு வீண் வேலை.

  ReplyDelete
  Replies
  1. ஹா..ஹா...ஹா...

   நாகரிகமா கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்! அநாகரிகமா, கிண்டல் தொனியில் இருந்தால் குப்பைக்கு போய்டும்!

   //அதனால் எதற்கு வீண் வேலை.//

   எனக்கு ஏன் இப்ப சிரிப்பு சிரிப்பா வருது !
   ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆவாது :-)))))))))

   Delete
  2. நீங்க என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க ...உங்களுக்கு நான் பதில் தருகின்றேன் நண்பரே

   Delete
 5. //...............இஸ்லாமிய மக்கள் ஏன் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள் என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்//

  சான்சே இல்ல.

  ReplyDelete
  Replies
  1. //சான்சே இல்ல.//

   நல்ல முன்னேற்றம்...

   Delete
 6. அஸ்ஸலாமு அலைக்கும்....

  மாஸா அல்லாஹ்! சிறப்பாக இருக்கிறது.

  இதை இத்தோடு விட்டுவிடாமல்
  அனைவரிடமும் கொண்டுசேர்க்க
  வேண்டியபொருப்பு நம் முன் நிற்கிறது.

  இன்னும் விரைவாக செயல்படுவோம்.

  பகிர்வுக்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்..

   //இதை இத்தோடு விட்டுவிடாமல்
   அனைவரிடமும் கொண்டுசேர்க்க
   வேண்டியபொருப்பு நம் முன் நிற்கிறது.

   இன்னும் விரைவாக செயல்படுவோம்.//

   நிச்சயமாக சகோ...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ சகோ.... :)

  மாஷா அல்லாஹ் டிசைன்-னும் கருத்துக்களும் கச்சிதமா இருக்கு. சகோக்களின் உழைப்பு பாராட்டுக்குரியது. அல்ஹம்துலில்லாஹ்.படிப்பவர்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.இன்ஷா அல்லாஹ். இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக.

  அல்லாஹ்வின் அருளால் இந்த முயற்சி மாபெரும் வெற்றி அடையட்டும். இன்ஷா அல்லாஹ்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   //இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக.//

   ஆமீன்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 8. ஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோ. மாஷா அல்லாஹ்!!! எல்லாத் தலைப்புகளும் படிக்கும் போது கண்முன் நிற்கிறது. சூப்பர் டிசைன் அருமையாக உள்ளது.

  நல்ல சிந்தனைகள் நல்ல உருவாக்கம் இன்ஷா அல்லாஹ் உங்களின் சிறந்த பணி மென்மேலு வளர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   மிக்க நன்றி சகோ...

   Delete
 9. சலாம் சகோஸ்...

  இந்த பேம்ப்ளெட் நாளை பிரிண்ட் செய்யப்பட இருக்கிறது. யாருக்கும் தேவை என்றால் அட்மின்களுக்கு மெயில் செய்யுங்கள்.. ஒரு காபி 1.70 பைசா வரும்.. 100 ன் மடங்காக சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைப்பார்கள். முடிந்த அளவு அதிகம் அடிக்க விரும்புகிறோம்..தனியாக அச்சடிக்க நிறைய காசு ஆகும்...சோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்... 1000 காப்பி 1700 ரூபாய் தான் வரும்...

  அல்ரெடி 15,000 காபிகளுக்கு சகோதர சகோதரிகள் ஆர்டர் செய்துள்ளார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   அறிவித்தலுக்கு நன்றி.. இதை பிற்சேர்க்கையாக பதிவில் இணைத்துள்ளேன்..

   ஜஸக்கல்லாஹ் ஹைர்

   Delete
 10. சகோஸ்...

  திருவாரூர், நாகபட்டிணம் மற்றும் தஞ்சை மாவட்டம் முழுவதும் விநியோகப்படுத்த இருக்கிறார்கள்... வரும் ஞாயிறு அன்று கோவையில் நடக்கும் இஸ்லாமிய மாநாட்டிக் வினியோகம் செய்ய இருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்... அது தவிர பல சகோக்கள் அவர் அவர் ஊர்களில் விநியோகம் செய்ய இருக்கிறார்கள்...

  இதே போல் நீங்களும் உங்கள் ஊர்களில் விநியோகம் செய்ய முயற்ச்சி செய்யுங்கள்.. கடைகளில் வைக்கலாம், பொது இடங்களில் வைக்கலாம், தெரிஞ்ச மாற்று மத சகோக்களுக்கு கொடுக்கலாம்...

  இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இன்னும் அதிக தலைப்புகளில் இது போன்று வெளியிடும் திட்டம் இருக்கிறது.. இது குறித்த உங்கள் ஆலோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன....

  ReplyDelete
  Replies
  1. இது பத்தி யாராச்சும் தனிபதிவு போடுங்களேன் :-))) எவ்வளவுதான் நானும் பதிவுல பிற்சேர்க்கை சேர்க்குறது :-)

   Delete
 11. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மாஷா அல்லாஹ்...சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்..

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 12. அஸ்ஸலாமு அழைக்கும், தொடரட்டும் உங்கள் பணி. எல்லாவற்றிலும் ஒட்டு போட்டாச்சு. தமிழ் 10, இன்ட்லியில் ஒட்டு போட்டு முதன்மைக்கு கொண்டு வரவும். அதிகமாக facebook, google + சேர்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   மிக்க நன்றி சகோ.. ஜஸக்கல்லாஹூ ஹைர்

   Delete
 13. அஸ்ஸலாமு அலைக்கும்.
  அல்லாஹு அக்பர்!
  மிக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது!இந்த முயற்சி அநேக உள்ளங்களை அடைய அல்லாஹ் உதவி செய்வானாக!
  'தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
  [அல் குர்ஆன்-9:32 ]

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   //இந்த முயற்சி அநேக உள்ளங்களை அடைய அல்லாஹ் உதவி செய்வானாக!//

   ஆமீன்

   ஜஸக்கல்லாஹ் ஹைர் அஸ்பா...

   Delete
 14. நல்ல முயற்சி. இணைய வசதி இல்லாத எத்தனையோ பேருக்கு இது மிக உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...

   Delete
 15. மாஷா அல்லாஹ்....!
  தபாரகல்லாஹ்..........!
  அல்ஹம்துலில்லாஹ்.........!

  இந்த ப்ராஜெக்ட்டில் ஈடுபட்ட, ஈடுபட முடியாத நிலையில் து’ஆ செய்த, ஈடுபட்டிருக்கலாமே என்று மனம் வருந்திய, வருந்துகின்ற, இரவும் பகலும் இதற்கென பாடுபட்ட, பாடுபடப்போகின்ற, பனியிலும் வெயிலிலும் இதனை வினியோகிக்க முடிவு செய்திருக்கும் நெஞ்சங்களுக்கும் இன்னும் மாநபி (ஸல்) அவர்களை மனதார நேசித்து, அவர்கள் மீது இடப்பட்டுள்ள அவப்பெயரை இன்னுயிர் கொடுத்தும் நீக்கிட உழைத்த, உழைக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா அளவிலா அருளையும், ஈடிலா வெகுமதிகளையும் தந்தருள்வானாக. ஆமீன். ஆமீன். அல்லாஹும்ம ஆமீன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமின்

   Delete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  அருமையான டிஸைனில் அழகான கருத்துக்களை சுருக்கமாக வெளியிட்டிருக்கீங்க , மாஷா அல்லாஹ் :-).தொடரட்டும் .ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   கருத்துக்கள் அழகாய் வர பாடுபட்ட, திருத்தம் செய்த, பிழைகள் சரி செய்த சகோதர சகோதரிகளின் உழைப்பு பாராட்டுக்குரியது.. மாஷா அல்லாஹ்..

   நன்றி சகோ

   Delete
 17. ஸலாம்

  சிறந்த முயற்சி ..

  உங்களின் ஆக்கம் கிராமம் , பட்டி தொட்டியில் உள்ள அனைத்து மக்களுக்கும் போயி சேர இறைவனிடம் பிராத்திதவனாய் ...

  ஜசகல்லாஹ் க்ஹைர்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   துஆக்களுக்கு நன்றி சகோ

   ஜஸல்லாஹ் ஹைர்

   Delete
 18. இந்த ப்ராஜெக்ட்டில் ஈடுபட்ட, ஈடுபட முடியாத நிலையில் து’ஆ செய்த, ஈடுபட்டிருக்கலாமே என்று மனம் வருந்திய, வருந்துகின்ற, இரவும் பகலும் இதற்கென பாடுபட்ட, பாடுபடப்போகின்ற, பனியிலும் வெயிலிலும் இதனை வினியோகிக்க முடிவு செய்திருக்கும் நெஞ்சங்களுக்கும் இன்னும் மாநபி (ஸல்) அவர்களை மனதார நேசித்து, அவர்கள் மீது இடப்பட்டுள்ள அவப்பெயரை இன்னுயிர் கொடுத்தும் நீக்கிட உழைத்த, உழைக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா அளவிலா அருளையும், ஈடிலா வெகுமதிகளையும் தந்தருள்வானாக. ஆமீன். ஆமீன். அல்லாஹும்ம ஆமீன்..


  நல்லதொரு சிறப்பான முயற்ச்சி.. இறைவா. உன் உம்மத்தான எங்களுக்கு உம்மிநபியின் சிறப்பை உலகமே அறிந்திருந்தும் இன்னும் அதனை அறியாதவர்களுக்கும்.மேலும் அ்றியசெய்யம்படியான ஒரு வாய்ப்பை தந்துள்ளமைக்கு சிரம்தாழ்த்தி உனைத் துதிக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மலிக்கா...

   //மேலும் அ்றியசெய்யம்படியான ஒரு வாய்ப்பை தந்துள்ளமைக்கு சிரம்தாழ்த்தி உனைத் துதிக்கிறோம்//

   உண்மையிலேயே சந்தோஷமான மறக்க முடியாத பணிதான் இது... பிரிண்ட் பண்ணயதன் விடியோவை பார்க்கும் பொழுது மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... அல்ஹம்துலில்லாஹ்...

   இறைவனுக்கே புகழ் அனைத்தும்..

   இதில் ஈடுபட்ட, ஆதரவளித்த, ஊக்குவித்த, பிரார்த்தித்த அனைவருக்கும் அல்லாஹ் மகத்தான கூலி கொடுப்பானாக.. ஆமீன்

   Delete
 19. நான் ஸ்ரீ லங்கா வில் இருக்கின்றேன் எமது நாட்டிலும் இதனை விநியோகிக்க அசைபடுகின்றேன் எப்படி இதனை பெறுவது 5000 பிரதிகள் பெறுவதின் எப்படி, அல்லது இங்கு பிரின்ட் போடட்டுமா? எனக்கு பம்லேட் மாதிரியினை ஈமெயில் அனுப்பவும்

  ReplyDelete
 20. @சகோ. ஜாக்கி

  மெயிலில் தொடர்புகொள்ளவும்...

  admin@islamiyapenmani.com

  ஜஸக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
 21. tremendous efforts
  ஜஸக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
  Replies
  1. வ இய்யாக்கும்...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 22. அஸ்ஸலாமு அலைக்கும்
  உலகின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தமது பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை இந்த மாமனிதரின் வாழ்க்கையில் இருந்தே தேடுகின்றனர். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தமது தாய் தந்தை தமது பிள்ளைகள் மனைவி சகோதரர்கள் செல்வம் போன்ற எல்லாவற்றையும் விட முதன்மையானவர் இவர். கண்ணியத்திற்கும் புகழுக்கும் உரிய நபிகள் நாயகத்தை குறித்து முஸ்லிமல்லாதவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் கையேடு ஒன்றை தயாரித்த குழுவிற்கும் அதற்காக பாடுபட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஈருலகிலும் வெற்றியை கொடுக்கட்டுமாக.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   //கண்ணியத்திற்கும் புகழுக்கும் உரிய நபிகள் நாயகத்தை குறித்து முஸ்லிமல்லாதவர்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் கையேடு ஒன்றை தயாரித்த குழுவிற்கும் அதற்காக பாடுபட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஈருலகிலும் வெற்றியை கொடுக்கட்டுமாக. //

   ஆமீன்

   வருகைக்கும் துஆவிற்கும் நன்றி சகோ

   ஜஸக்கல்லாஹ் ஹைர்

   Delete
 23. அஸ்ஸலாமு அலைக்கும் வாஹ்

  அல்ஹம்துலில்லாஹ்! நல்லதொரு முயற்சி
  இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நான் முஸ்லிம் தளத்திலும் இதன் டெம்லேட் இணைக்கப்பட்டுள்ளது
  ஜஸாகல்லாஹ் கைரா.,

  இந்த டெம்லேட் உருவாவதற்கு நேரடியாவும், மறைமுகமாகவும் பாடுபட்ட அனைத்து சகோஸ் களுக்கும் அல்லாஹ் அருள்புரியவானாக..!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம்

   //இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நான் முஸ்லிம் தளத்திலும் இதன் டெம்லேட் இணைக்கப்பட்டுள்ளது..

   மிக்க நன்றி சகோ. ஜஸக்கல்லாஹ் ஹைர்

   //இந்த டெம்லேட் உருவாவதற்கு நேரடியாவும், மறைமுகமாகவும் பாடுபட்ட அனைத்து சகோஸ் களுக்கும் அல்லாஹ் அருள்புரியவானாக..! //

   ஆமீன்

   Delete
 24. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மாஷா அல்லாஹ்...

  மிக மிக அருமையான பணி, இதை பொருந்திக்கொண்டு இறைவன் இதற்க்காக உழைத்தவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக....

  இப்பணியை மேலும் மேலும் வெற்றியாக்கி தந்தருள்வானாக....

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   //மிக மிக அருமையான பணி, இதை பொருந்திக்கொண்டு இறைவன் இதற்க்காக உழைத்தவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக....

   இப்பணியை மேலும் மேலும் வெற்றியாக்கி தந்தருள்வானாக....//

   ஆமீன்

   ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

   Delete
 25. 20,000 காபிகள் பிரிண்ட் ஆகிக் கொண்டு இருக்கிறது... அலஹம்துலில்லாஹ்...

  ReplyDelete
  Replies
  1. அல்ஹம்துலில்லாஹ்...

   அப்டேட் பண்றதுல கூட சோம்பேறித்தனமா? :-) அடுத்தடுத்துலாம் பண்ணல :-)

   ப்ரின்ட் வேலை முடிந்து கேட்டவர்களுக்கு அனுப்பும் பணி நடந்துக்கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்...

   ஈரோட்டுக்கு அனுப்பப்பட்டு ஞாயிறன்று கோவையில் நடந்த இஸ்லாமிய மாநாட்டிலும் விநியோகம் செய்யப்பட்டுவிட்டது அல்ஹம்துலில்லாஹ்...

   இதில் ஈடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் மகத்தான வெற்றியையும் நற்கூலியையும் கொடுப்பானாக!

   Delete
 26. அஸ்ஸலாமு அலைக்கும்,

  மாஷா அல்லாஹ்...

  மிக மிக அருமையான பணி, இதை பொருந்திக்கொண்டு இறைவன் இதற்க்காக உழைத்தவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக....

  இப்பணியை மேலும் மேலும் வெற்றியாக்கி தந்தருள்வானாக....

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்....

   //மிக மிக அருமையான பணி, இதை பொருந்திக்கொண்டு இறைவன் இதற்க்காக உழைத்தவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக....

   இப்பணியை மேலும் மேலும் வெற்றியாக்கி தந்தருள்வானாக....//

   ஆமீன்

   Delete
 27. அஸ்ஸலாமு அலைக்கும்.. ماشاء الله

  சூழ்நிலைக்கேற்ற மிக பயனுள்ள பதிவு. இந்த பதிவை என்னுடைய தளத்திலும் லிங்க் கொடுத்துள்ளேன். தொடரட்டும் உங்கள் சேவை.

  நண்பர் @univerbuddy பதில் உரைக்க தயாராக இருக்கும் போது, ஏன் கேள்வி கேட்க தயங்குகிறீர்கள். உங்கள் கேள்வி எதுவாக இருப்பினும் இங்கே நாகரிகமான முறையில் பதியுங்கள். பதில் உரைக்க நாங்க தயார்.

  நீங்கள் கேள்வி கேட்க "சான்சே இல்ல"னு நினைக்குறேன்...

  ReplyDelete
  Replies
  1. வ அலைகும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

   //சூழ்நிலைக்கேற்ற மிக பயனுள்ள பதிவு. இந்த பதிவை என்னுடைய தளத்திலும் லிங்க் கொடுத்துள்ளேன். தொடரட்டும் உங்கள் சேவை//

   ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

   Delete
  2. //நண்பர் @univerbuddy பதில் உரைக்க தயாராக இருக்கும் போது, ஏன் கேள்வி கேட்க தயங்குகிறீர்கள். உங்கள் கேள்வி எதுவாக இருப்பினும் இங்கே நாகரிகமான முறையில் பதியுங்கள். பதில் உரைக்க நாங்க தயார். //

   நல்லாச்சொன்னீங்க...

   நேரா கீழ்பாக்கத்துல இருந்து வந்திருப்பார் போல... டெய்லி வந்து ஆன்லைக்கு வந்துட்டேன், ஆப்லைன்க்கு போய்ட்டேன்னு கமென்ட் பண்றாரே ஒழிய இன்னும் உருப்படியா ஒரு கேள்வியும் கேக்கல...

   Delete
 28. முகம்மது என்னும் மனிதருள் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு, நல்லவர் மட்டுமே என்றோ, கெட்டவர் மட்டுமே என்றோ சொல்வதை நான் ஏற்பதில்லை ..

  ReplyDelete
  Replies
  1. //முகம்மது என்னும் மனிதருள் நல்லதும் உண்டு,//

   ம்... உண்மை தான் சகோ.. அவரை பற்றி படிக்க படிக்க ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது... உண்மையில் உயர்ந்த மனிதர் தான்!

   //கெட்டதும் உண்டு,//

   அப்படியா? கெட்டதா?? அப்டி ஒன்னு இருக்கா?? இருந்தா சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம் :-)

   Delete
  2. இக்பால் செல்வன் கணடாவில் இருந்து கோவை வந்து விட்டதாக அறிந்தேன். ஆம இப்ப உங்கள் வலைப்பூ மூடப்பட்டு விட்டது போல் உள்ளதே களத்தில் இருக்கிங்கள இல்லையா தெளிவு படுத்துங்கள்.

   Delete
 29. பயனுள்ள நல்ல ஆக்கம்.... இதை என் ப்ளாக்கிலும் பதிவு செய்துள்ளேன்....

  Best Regards,
  Abu Nadeem
  ungalblog.blogspot.com

  ReplyDelete
 30. பயனுள்ள நல்ல ஆக்கம்.... இதை என் ப்ளாக்கிலும் பதிவு செய்துள்ளேன்...

  Regards,
  Abu Nadeem
  ungalblog.blogspot.com

  ReplyDelete
 31. Assalam Alaikum sister. I want 500 copies pleas say how to get it?

  ReplyDelete
 32. Assalamu Alaikum. andha copykalai perutatharkana vivaraththai sollunga sagothari. Nan athai peruvatharkku avalaga ullean

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   இப்பதான் உங்க மெயில் பார்த்தேன்... அதில் தகவல் அனுப்புறேன் சகோ...

   ஜஸக்கல்லாஹ் ஹைர்.

   Delete
 33. I need 500 copies and I'm now in Abudhabi. How to get it

  ReplyDelete
  Replies
  1. சகோ ப்ரோஸ்,
   வெளிநாடுகளுக்கு 500 காப்பி அனுப்புவதென்பது கொரியர் செலவே அதிகம் வரும்.. தமிழகத்தில் ஏதேனும் ஒரு முகவரி கொடுங்கள்... அங்கிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது அபுதாபியில் பிரின்ட் செய்ய முடியும் என்றால் ப்ரின்டபிள் சாப்ட் காப்பி அனுப்பி வைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்... இஸ்லாமியப்பெண்மணி மெயில் ஐடிக்கு தகவலை அனுப்புங்க.

   Delete
 34. இங்கு நான் படித்த நபிகள் பற்றிய செய்திகள் அனைத்தும் ஏற்கனவே நான் அறிந்தது தான். இருப்பினும் நபிகள் அவர்களை உங்களின் பார்வையிலேயே நீங்கள் பார்த்ததன் வெளிப்பாடும் இதில் தெரிகிறது.
  நபிகள் அவர்களை வறுமை,செழுமை,பாசம், பந்தம் இன்னும் மனித ஆசைகள் என்று நாம் சொல்லும் அத்தனைக்குள்ளும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாத மாமனிதர் என்று சொல்வதை விட அந்த நிலையில் இருந்து தன்னை உயர்த்திக் கொண்டு இறைத் தன்மையில் நிலைத்திருந்தவர் என்று சொல்லலாம்.
  அவர் இப்படி வாழ்ந்தார், என்று நீங்கள் சொல்வது உங்களின் வாழ்க்கையில் அனுபவித்த உணர்ந்த அறிவை வைத்து நபிகள் அவர்களை வரையறுக்கப் பார்க்கிறீர்கள் என்பதே ... அது நிச்சயம் முடியாது
  ஏனெனில் நீங்கள் சொன்ன நெறிமுறைகளின் படி உலகத்தில் நபிகளுக்குப் பிறகு அவரைப் பின்பற்றி பல இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல சமயங்களைச் சார்ந்தவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.
  நபிகளை இன்னும் நீங்கள் ஆழமாக உணர வேண்டும்.அவர் நம் மனதின் அறிவின் எந்தக் கோட்பாட்டிற்குள்ளும் அடங்காதவர். இதுவே அவரைக் காலத்தை தாண்டியும் நம் முன் அவரை நிலைநிறுத்துகிறது.எதெனும் ஒரு கோட்பாட்டில் அவரை நீங்கள் அடக்க முயன்றால் நீங்கள் அவரை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையென்று தான் பொருள்.
  அவரின் முக்கிய கோட்பாடே அன்பு, எளிமை. அந்த இரண்டிற்கும் விளம்பரங்கள் தேவையில்லை.

  தவறிருப்பின் திருத்தவும்.

  ReplyDelete
  Replies
  1. //இங்கு நான் படித்த நபிகள் பற்றிய செய்திகள் அனைத்தும் ஏற்கனவே நான் அறிந்தது தான். இருப்பினும் நபிகள் அவர்களை உங்களின் பார்வையிலேயே நீங்கள் பார்த்ததன் வெளிப்பாடும் இதில் தெரிகிறது.
   நபிகள் அவர்களை வறுமை,செழுமை,பாசம், பந்தம் இன்னும் மனித ஆசைகள் என்று நாம் சொல்லும் அத்தனைக்குள்ளும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாத மாமனிதர் என்று சொல்வதை விட அந்த நிலையில் இருந்து தன்னை உயர்த்திக் கொண்டு இறைத் தன்மையில் நிலைத்திருந்தவர் என்று சொல்லலாம்// நபி(ஸல்) அவர்களின் இயல்பே இதுதான். ஆங் எங்கள் பார்வையில் எங்கள் ஊயிரை விட மேளானாவர். அப்படி என்ன சாதித்தார் என்ற கேள்வி உண்டா உங்களுக்கு தொடர்ந்து படிங்க.
   எனது கடைக்கு எதிரில் எனது நன்பர்களில் ஒருவர் அவரது அப்பா காலத்தில் இருந்தே சலூன் கடை நடத்திவருகிறார். இவர் நில புரோக்கராகவும் உள்ளார். மிகுந்த வசதியுடன் இருக்கும் நன்பர் நேற்று ஒரு இடம் கிண்டியில் உள்ளது ஆறு லட்சம் இடத்துக்காரர் கூறுகிறார். அதை முடித்துக் கொடுத்தால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என்று தகவல் சொல்லிய நன்பருடன். இடத்துக்காரரை சந்திக்க தமது காரில் சென்று இருக்கிறார். நிலத்துக்காரர் இவரை பற்றி விசாரிக்கும் போது நானும் நாற்பது வருடங்களுக்கு முன்பு இப்போது நீங்கள் இருக்கும் தெருவில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து இருந்தேன் என்று கூறி இருக்கிறார். நீங்கள் எந்த என்னில் கடை வைத்துள்ளீர்கள் என்று கேட்க இவர் கடையின் நம்பரை சொல்லி இருக்கிறார். ஓ அந்த சலூன் கடைக்காரர் பையனா நீங்கள் என்று கேட்க நன்பர் ஆமாம் என்று கூறிய உடன் எழுந்திடுங்கள் தம்பி நான் சலூன் கடைக்கார பையனிடம் என் வீட்டில்வைத்து பேச மாட்டேன். அடியே ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வந்து தம்பி உட்கார்ந்த இடத்தை கழுவிவிடு என்று அவர் மணைவியிடம் கூறி இருக்கிறார்.

   நன்பர் என்னிடம் மிகுந்த மனவருத்ததுடன் இந்த நிகழ்வைக் கூறி நான் எவ்வளவோ பொருளாதாரத்திலும் சமுகத்தில் உயர்கல்வி பயின்று இருக்கிறேன். இதற்க்கு என்னதான் தீர்வு என்றார். நான் கூறினேன் இதற்க்கு ஒரே தீர்வு நீங்கள் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக கடைப்பிடிப்பதே என்றேன். நீங்கள் எனக்கு குர் ஆனை தாருங்கள் என்றார். இஸ்லாம் பற்றிய மாற்று கொள்கை கொண்ட சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு. http://www.kaleel.net.in/2013/06/blog-post_11.html

   Delete
 35. மாஷா அல்லாஹ் உங்களது பனி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. Assalamu alaikum saodhara sagodharigale,
  en thozhi oruvar islathai etrukolla aarvamai irukirar avaruku udhavum vidamaga payanulla hadeesgalai anupi vaika mudiyuma...pls send at :sadhamdsgn@gmail.com

  ReplyDelete
 37. கருத்துரைகள் தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த பதிவை வழங்கியவர்களுக்கும் வல்ல அல்லா நன்மையை செய்வானாக ஆமீன்

  ReplyDelete
 38. அஸ்ஸலாமு அலைக்கும்
  சகோ நல்ல பதிவு
  மாஷா அல்லாஹ்


  உலகமே திரும்பி பார்த்த உன்னத மாமனிதர்
  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

  ReplyDelete
 39. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோ. மாஷா அல்லாஹ்!!!
  உங்களது பனி தொடர வாழ்த்துக்கள்..

  For Free Ads
  http://www.quicmedia.com

  ReplyDelete
 40. அஸ்ஸலாமு அலைக்கும் الحمدلله

  ReplyDelete
 41. அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் தஃவா பனிக்கு அல்லாஹ் ரஹ்மத் செயவானாக........

  ReplyDelete
 42. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே மிகவும் அருமையாக நபி வரலாறு மிக்க நன்றி இது போல் நிக்கள் நிறையவே வரலாறு முசிலீம் சமுதாதிர்க்கு தரவேண்டும் பனிவ்டன் கேற்கிறேன் இதில் ஏதாவது பிழைகள் இருந்தாள் எண்ணை மன்னிக்கவும்....

  ReplyDelete
 43. அஸ்ஸலாமு அலைக்கும்

  ReplyDelete
 44. Every clever leader chooses the 'trick' that works. Every leader knows how to goad the masses. For some, simplicity works.

  The masses in the Eastern countries like Arabia, India etc fall for the religious teachings.

  Once the leader establishes credibility by hook or crook, he then exploits the masses.

  Once he establishes credibility, it is easy to play the 'good' person to achieve his ambitions.

  Some leaders do not need money, but sex. Some leaders need power, not money.

  Religion is the opium of the masses. - A true statement for every one.  ReplyDelete
 45. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோ. மாஷா அல்லாஹ்!!!
  உங்களது பனி தொடர வாழ்த்துக்கள்..

  ReplyDelete