Sunday, August 05, 2012

ரமலானும், அந்த ஏழு நாட்களும்

அஸ் ஸலாமு அலைக்கும் நஸீமா எப்படி இருக்கே.....

அலைக்கும் அஸ் ஸலாம் பர்வீன்.... ஏதோ இருக்கேண்டீ.... நீ சொல்லு....

என்ன நஸீம்... ரமலான் மாசம்... கையில் பிடிக்க முடியாத குறையா பிஸியா இருப்பே... இப்ப என்ன சுரத்தே இல்லாம பேசறே??

இல்லடீ.... ரெண்டு நாளா நோன்பில்லை... அதான் டல்லா இருக்கேன்.... நோன்பில்லைன்னா என்னதான் செய்யறதுன்னு தெரியலை.... போரடிக்குது....
~~~ ~~~ ~~~
நன்றி: Dreamstime

நஸீமாவின் இடத்தை நம்மில் பலரும் கடக்க வேண்டி இருக்கிறது. மாதம்தோறும் வரும் உதிரப்போக்கினாலோ அல்லது பிரசவத்திற்கு பின் வரும் உதிரப்போக்கினாலோ ரமலானை, அந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும், வேகத்துடனும் கடக்க இயலாமல் போகிறது. ஆனால் வருத்தப்பட்டு இந்த மாதத்தை நாம் விட்டு விடலாமா? அதன் ரஹ்மத்தை1, பரக்கத்தை2, அதில் கிடைக்கும் அளவிலா நன்மைகளை?????????????? தொழுக முடியாத நிலையில் என்ன இபாதத்3 செய்து விட முடியும் என்று நினைக்கும் சகோதரிகளுக்காகவே இந்தக் கட்டுரை. இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் பல சகோதரிகள் பயன் பெறக்கூடும் என்னும் நிய்யத்துடன், பிஸ்மில்லாஹ்.... :)


முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரிகளே... எப்படி அல்லாஹ் கட்டளையிட்ட ஐவேளைத் தொழுகையை தொழுவதிலும், நோன்பு நோற்பதிலும், ஸகாத்4 தருவதிலும் நமக்கு கூலிகள் உண்டோ... அதே போன்றுதான், அல்லாஹ்வின் கட்டளையை மதித்து இந்த உதிரப்போக்கு காலங்களில் நாம் தொழுகாமல் இருப்பதற்கும் கூலி கிடைக்கிறது. ஆம், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றித்தான் நம் தொழுகையை விட்டிருக்கிறோம் அல்லவா.... எனவே அதுவும் ஓர் இபாதத்தே.... எனவே முதலில் அந்தக் கவலையிலிருந்து மீண்டெழுங்கள்.

இரண்டாவது, இது தீண்டாமை போன்றதொரு கொடிய நோயோ, தீட்டோ அல்ல. மாறாக, தஹாரா என்னும் தூய நிலையை வராத ஒரு இயற்கை/நிலை மட்டுமே. எவ்வாறுஜனாபா5நிலையை அடைந்தால் ஆண், பெண் இருவருக்குமேதூய்மைகட்டாயமாக்கப்பட்டுள்ளதோ அதே போல் இந்த நிலையும் வெளிப்புற அசுத்தமே தவிர அல்லாஹ்வின் முன் நிற்கக்கூடியவரின் அகத்தூய்மையை கேள்விக்குறியாக்கும் தீட்டல்ல. இதனையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஓர் ஹதீஸ்6சில் குறிப்பிட்டுள்ளார்.
'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவி த்தார். (புகாரி 1:6:297)

தீட்டாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இத்தகைய நிலையில் அன்னையின் மடியில் தலை வைத்து குர்ஆன் ஓத செய்திருப்பார்களா?

உடலாலும் மனதாலும் தளர்ந்து போயிருக்கும் நம்மை கஷ்டப்படுத்தாமல் இபாதத்தை இலகுவாக்கவே அல்லாஹ் தந்த பரிசு என்பதை நினைவில் வையுங்கள். அதுவும் விட்டுப்போயிருக்கும் நோன்பை மட்டுமே நமக்கு மீண்டும் பிடிக்க கட்டளையுள்ளது. விட்டுப்போன தொழுகைகளையல்ல. அதையும் யோசித்துப் பாருங்கள். மார்க்கத்தை நமக்காக எத்தனை இலகுவாக்கி தந்துள்ளான் நம் இறைவன் என்பது புரியும். அல்லாஹு அக்பர்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறி இருப்பது போல, அனைத்து பொருட்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வரைமுறை உண்டு, ஒரு ஒழுங்கு உண்டு, அது போல நமக்கும் வைத்துள்ளான். எப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் அததற்கான ஆர்பிட் / வழி உள்ளதோ அதே போல பெண்களுக்கும் இந்த குறிப்பிட்ட காலத்தை ஒரு ஒழுங்காக அமைத்துள்ளான்.
(உஹதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால் அதே போன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ரு போரில்) காயம் ஏற்பட்டுள்ளது. அத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச்செய்கிறோம். இதற்குக்காரணம் நம்பிக்கை கொன்டோரை அல்லாஹ் அறிவதற்கும் உங்களில் உயிர்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும். அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.(ஆலெ இம்ரான்:140)

இன்னும் ஒரு விஷயம் உற்று நோக்கினால் புரிபடும். அது ரமதானை நாம் தராவீஹ்7 + தொழுகை + குர்ஆன் என்னும் மூன்று விஷயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை. தொழுகை இல்லாதபோதுதான் மற்ற விஷயங்களைப் பற்றி நமக்கு தெரியவும் வருகிறது, அதன் மேலும் நம் ஃபோகஸை கொண்டு போக முடிகிறது. உதாரணத்திற்கு
என்மீது அதிகமாக ஸலவாத்தை ஓதுபவர் கியாமத்து நாளில்  என்னை அதிகம் நெருங்கியிருப்பார்! என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவித்துள்ளார்.”
என்னும் ஹதீஸ்சை நினைத்துப் பாருங்கள். எந்தளவிற்கு நாம் ஸலவாத்8தை நினைக்கிறோம் அல்லது ஓதுகின்றோம்?? தொழுகையில் அத்தஹியாத்9திற்கு பிறகு ஓதுவதோடு பலர் நிறுத்திக் கொள்கிறோம். அதன் மகத்தான கூலியை மேலே படித்துப் பாருங்கள்.......
அதே போல்தான் நோன்பாளிகளுக்கு உணவளிப்பதும், திக்ரு செய்வதும், து செய்வதும்.
  • 'எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி)
  • து என்பது வணக்க வழிபாட்டின் சாராம்சமாகும்.” (அஹ்மத், திர்மிதி, ஹஸன் ஸஹீஹ்)
  • (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்என்று கூறுவீராக. (பகரா 2:185)
அல்லாஹ் எந்த இபாதத்தின் கூலியையும் குறைத்துக் கொடுப்பவனல்ல. ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்த நன்மைக்கான கூலியை வழங்குவேன் என்று வாக்களித்துள்ளான். அதுவும் அணுவளவும் குறையாமல். இன்னும் குர்ஆனை திலாவத்தாக மட்டும் அல்லாமல் மனனம் செய்யவோ, கற்கவோ, கற்றுக்கொடுக்கவோ கூட செய்யலாம். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு புதிதாக ஒரு சூறா / குர்’ஆனின் அத்தியாயம் கற்றுக்கொடுக்கலாம். அல்லது நீங்களே மனனம் செய்யலாம்.

இன்னும் ஈஈஈஈஸியான வழி, அவரவர் செல்ஃபோன் மூலமாகவோ, மடிக்கணிணி மூலமாகவோ, அல்லது டேப் ரிக்கார்டர், ஆடியோ சிஸ்டம் கொண்டோ எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்கள், மகிழுங்கள், மனனம் செய்யுங்கள். அல்லது மனனம் செய்து மறந்து போன சூறா எனில் அதை மீண்டும் சரி செய்து கொள்ளுங்கள். மாஷா அல்லாஹ்.... நினைத்துப் பாருங்கள், தொழும் நிலையில் இருக்கும்போது இத்தனை விதத்தையும் நாம் எண்ணிப்பார்க்கிறோமா??
தஃப்ஸீர்10 படிப்பதற்கும், படித்ததை பகிர்வதற்கும், அதற்கான கூலிகளும் உண்டு. எத்தனை விதமான தஃப்ஸீர்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் எத்தனை படிப்பினைகள் உள்ளன... எத்தனை எத்தனை புதிய செய்திகளை / ஹதீத்துக்களை / ரிவாயத்துக்களை அறிந்து கொள்ள முடிகிறது??? அதை பகிர்வதிலும் கிடைக்கும் நன்மையை நானோ நீங்களோ அளக்க முடியுமா??

எனவே இந்த காலத்தை (ஹைல் / நிஃபாஸ்) துவண்டு போகும் காலமாக அன்றி, நமக்கு ஒரு இடைவேளை தரப்பட்டுள்ளது, அதுவும் அல்லாஹ்விடமிருந்து, அதை மனதார ஏற்றுக்கொள்வதிலும் நமக்கு கூலியுண்டு என்பதை நினைவில் வையுங்கள். தொழுகையும், நோன்பும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் ஏனைய அமல்களிலும் திக்ரையும், இறையச்சத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த காலத்தை ஒதுக்குங்கள்.
இன்ஷா அல்லாஹ், இனி நடைமுறையில் செய்யக்கூடிய, நற்கூலியை பெற்றுத்தரும் செயல்களை ஒரு சேர பார்ப்போம்.
  1. நோன்பாளிகளுக்கு உணவு தயார் செய்யவும், பரிமாறவும், இஃப்தார் குழுக்களிலும் பங்கு பெறுங்கள்.
  2. இஃப்தார் முடிந்த பின் மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
  3. தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு நன்மை யோசியுங்கள். குழந்தையின் தாய்மார் மட்டுமல்ல. இன்னும் மற்றவர்களும் சிரமம் இன்றி தொழுகையில் ஒன்றி தொழுக முடியும். அதற்கான கூலியும்....மாஷா அல்லாஹ் :))
  4. இது வரை மனனம் செய்யாத சூறாக்கள், துஆக்களை மனனம் செய்யுங்கள்
  5. வீட்டிலுள்ள வயதானோருக்கு (எழுத படிக்க இயலாமல் இருப்பவர்களுக்கு) மற்றும் குழந்தைகளுக்கு சூறாக்களையும், துஆக்களையும் கற்றுக் கொடுங்கள். தஃப்சீர் உரக்க படித்துக் காட்டுங்கள்.
  6. உங்கள் வீட்டிலுள்ள / தெருவில் / அணுகக் கூடிய அருகாமையில் உள்ள நோன்பு வைக்கும் வயதானோருக்கு / ஏழைகளுக்கு / சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு / புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உணவுக்கும் / மற்ற தேவைகளுக்கும் உதவுங்கள்.
யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.”
அறிவிப்பவர்
: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரீ 2262, முஸ்லிம்
(உங்களின் வீட்டுக்கு இஃப்தாருக்கு அழைத்துப்பாருங்களேன்... இன்னும் அதிகமான மகிழ்ச்சி, கூலி மாஷா அல்லாஹ்)
  1. நிஃபாஸில் இருக்கும் தாய்மார்களே... உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் ஒவ்வொரு முறையும்(மற்ற எல்லா வேளைகளிலும் கூட:) ) ஒரு சூறாவோ/துஆவோ/திக்ரோ அதிகமதிகம் ஓதுங்கள். பக்கத்தில் ஒரு ஆடியோ பிளேயர் வைத்து குர்ஆனோ / தஃப்ஸீரோ ஒலிக்க வையுங்கள். உங்கள் மேலும், இன்ஷாஅல்லாஹ் உங்களின் குழந்தை மேலும் அதன் எஃபெக்ட்டை உணர முடியும் (இது சொந்த அனுபவமே....)
  2. அதிகமதிகம் திக்ரு செய்யுங்கள். இதுவரை மனனம் செய்யாத காலை மற்றும் மாலை திக்ருக்களை மனனம் செய்யுங்கள். ஃபஜ்ரிலும் அஸ்ரிலும் மற்றவர்கள் தொழும்போது நீங்களும் அமர்ந்து அந்தந்த வேளைகளுக்கான திக்ருக்களை ஓதுங்கள்.
  3. இரவில் தஹஜ்ஜுத் நேரத்தில் எழுந்து, உள்ளம் ஒன்றி, கண்ணீர் மல்க து கேளுங்கள். துஆவிற்கு முன்னும் பின்னும் திக்ரையும், ஸலவாத்தையும் அதிகப்படுத்துங்கள்.
  4. வீட்டில் பிரிண்டர் / சிடி ரைட்டர் இருந்தால் இலவசமாக துஆக்கள் / திக்ருக்களை பிரிண்ட் செய்தோ / சிடியில் காப்பி செய்தோ எத்தனை பேருக்கு இயலுமோ பகிருங்கள். (இதை அச்சிட்டது / காப்பி செய்தது...ஜனாப் / ஹாஜி/இன்னாரின் ஹக்கில் து---- என்னும் போஸ்டரெல்லாம் அடிக்காமல் இன்ஷா அல்லாஹ்.... :)) )
  5. தஜ்வீத் சரி செய்து கொள்ளவும், அதன் சட்டங்களை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும், தகவல்களை / பாடங்களை பகிர்ந்து கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்.
  6. அஸ்மா உல் ஹுஸ்னாவை மனனம் செய்யுங்கள். அதற்கான கூலியும் உண்டு...கூடவே உங்களின் துஆக்களின் போது அல்லாஹ்வின் எந்தப்பெயரை உபயோகிக்கலாம் என்பது தெள்ளென விளங்கும்.... 
அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6410, முஸ்லிம் 2677)
இன்னும் அதிகமாகவும் துஆவில் ஒன்ற வைக்கும்.
  • ஈத் பெருநாளைக்கான ஷாப்பிங்கையெல்லாம் இந்த நேரங்களில் வைத்துக் கொண்டால் தொழும் நிலை கிடைக்கும்போது அதைப்பற்றிய கவலை இருக்காது.
  • இன்னும் வேறு எந்த விதத்தில் நற்கூலி பெறலாம் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள்.... அதுவே உங்களுக்கு இன்னும் பல வழிகளைக் காட்டும் இன்ஷா அல்லாஹ். மனித மனம் எப்படிப்பட்டதெனில், ஒரு கதவு மூடப்படும்போதுதான் மற்ற வழிகளை தேட ஆரம்பிக்கும் :)
மிக முக்கியமாக, ஹலால்11-ஆன அமல்களை செய்வதை விடவும், ஹராம்12-ஆன செய்கைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வதே மிக மிக முக்கியமானது, மேன்மையானது. எனவே புறம் பேசுவதை விட்டும், அவதூறு சொல்வதை விட்டும், பொய்யிலிருந்தும், வீண் பேச்சுக்களிலிருந்தும், நேரத்தை வீணாக்கும் செயல்களிலிருந்தும் காத்துக்கொள்ளுங்கள். இந்த காலமானது உங்களை அல்லாஹ்விடமிருந்து தூரமாக்குவதில்லை, உங்களின் அமல்களில் குறை வைப்பதில்லை என்பதையும் ஆனால் வீண் செயல்களால் குறையேற்படக்கூடும் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இன்ஷா அல்லாஹ் இந்த இடைவெளியானது இன்னும் அதிக ஈர்ப்புடனும், சக்தியுடனும், பலமான ஈமானுடனும் உங்களை தயார் செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே மகிழ்ச்சியுடனும், ஒவ்வொரு அமலுக்கும் கூலி இருப்பதில் நம்பிக்கை கொண்டும் களத்தில் இறங்குங்கள்.

...அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)... (2:185)

அகராதி:

1. ரஹ்மத்- பேரளுள்
2. பரக்கத்- அபிவிருத்தி
3. இபாதத்- இறைவணக்க வழிபாடு
4. ஜகாத் - ஏழைகளுக்கு வழங்கப்படுவதற்கான  வரி / தூய்மையாக்குதல் என்னும் பொருளும் உண்டு
5. ஜனாபா- பெருந்தொடக்கு-சிறு தொடக்கு உடையவர்
6. ஹதீஸ் - நபிமொழி
7. தராவீஹ் - ரமதான் மாதத்தில் மஸ்ஜிதில் தொழும் இரவு நேர தொழுகை
8. ஸலவாத்-- நபிகள் நாயகம் அவர்களின் மீது அல்லாஹ்வின் ரஹ்மத்தும், பரக்கத்தும் இறங்க வேண்டி ஓதப்படுவது
9. அத்தஹியாத்து - தொழுகையின் கடைசி ரக்’அத்தில் ‘இருத்தல்’ நிலையில் ஓதுவது
10. தஃப்ஸீர் - திருக் குர்’ஆனின் பொருளுரை
11. ஹலால் -- இஸ்லாமிய சட்டப்படி ஆகுமாக்கப்பட்டது.
12. ஹராம் -- இஸ்லாமிய சட்டப்படி அனுமதிக்கப்படாதது.


( நன்றிகளும் துஆக்களும்: சகோதரிகள். ஷாஸியா நவாஸ், அஸ்மா பின்த் ஷமீம், ஹாஃபிதா. ரைஹானா ஒமர் )

.

36 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அன்னு அவசியமான பதிவு!

    இன்று பலர் அறியாமையில் உதிரபோக்கு ஏற்பட்டால் நோயாளி போல் ஒதுக்குவதும், தனியாய் முடங்கி கிடப்பதும், உடல் அளவில் சோர்வடைந்தவர்கள் என கூட பாராது தீண்டக்கூடாதவர்கள் போல் நடத்தி மீண்டும் மன அளவில் அவர்களை காயப்படுத்துவதும் என இருக்கும் இந்த சூழ்நிலையில் உங்கள் பதிவு பல சகோதரிகளுக்கு தெளிவை கொடுத்திருக்கும்.



    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் ஆமினா,

      கருத்துக்களுக்கு நன்றிப்பா. :)
      வ இய்யகும்.

      வஸ் ஸலாம்.

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

    மிக அருமையான, பயனுள்ள மற்றும் புத்துணர்ச்சி தரும் ஆக்கம். உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் அல்லாஹ் கிருபை செய்ய துவா செய்கிறேன். ஆமீன்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ் ஃபெரோஸ் சகோ,

      கருத்துக்களுக்கும், து’ஆவிற்கும் மிக்க நன்றி. பாரகல்லாஹு ஃபீஹ்.
      வஸ் ஸலாம்.

      Delete
  3. அருமையான , மிகவும் உபயோகமுள்ள பதிவு சகோ... எல்லோருக்கும் இந்த மன உளைச்சல் இருக்கத்தான் செய்கிறது...இன்ஷா அல்லாஹ் திக்ரு மற்றும் சலவாத்களை ஓதி அமல்களை பெருக்குவோம்...பகிர்விற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு மிக மிக நன்றி mum :)

      Delete
  4. அருமையான கட்டுரை சகோ , சில புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது,

    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு மிக மிக நன்றி சகோதரரே.
      வ இய்யகும்.

      வஸ் ஸலாம்.

      Delete
  5. அருமையான கட்டுரை சகோ , சில புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

    ஜஸக்கல்லாஹ் ஹைர்

    ReplyDelete
  6. சலாம் அன்னு! பெண்களுக்கு நிறைய ஆலோசனைகள் கொண்ட‌ பயனுள்ள பதிவு, ஜஸாகல்லாஹ் ஹைரா :)

    ReplyDelete
    Replies
    1. வ ஸலாம் அஸ்மா.
      கருத்துக்களுக்கு நன்றி. :)
      வ இய்யகும்.

      வஸ் ஸலாம்.

      Delete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
    மிகவும் பயனுள்ள பதிவு, உங்களுடைய அலசலுக்கு பிறகு ஒரு தெளிவு பிறக்க அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் ஜீனத் மேடம் :)

      உங்களின் து’ஆவிற்கு மிக மிக நன்றி, ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.

      வஸ் ஸலாம்.

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

    ஜஸாகல்லாஹ் ஹைரா அன்னு ..பல ஆலோசனைகள் கொண்ட‌ பயனுள்ள பதிவு,
    பெண்கள் பேசவும் கேடகவும் தயங்கும் விடயங்கள் இலகுவாக தெளிவு படுத்திவிடடீர்கள்.

    அல்லாஹ்வின் கிருபை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிடைக்க என்னுடைய தூஆக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஃபஸ்மின் சகோ,

      வ இய்யகும்.
      கருத்துக்களுக்கு மிக்க நன்றிப்பா. :)
      து’ஆவிற்கும் மிக மிக நன்றி. :)

      வஸ் ஸலாம்.

      Delete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ்..ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு..

    இயல்பாகவே இந்த நேரத்தில் தோன்ற கூடிய மனக்குறையை நீக்கக் கூடிய தெளிவான விளக்கங்கள்..

    தங்கள் பதிவு அதிக புரிதல்களை கொடுத்துள்ளது..ஒரு அருமையான பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் சகோ..:-))

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஆயிஷா சகோ,

      கருத்துக்கு மிக மிக நன்றி சகோ :)

      வ இய்யகும். வஸ் ஸலாம். :)

      Delete
  10. சலாம் சகோ! பெண்களுக்கு நிறைய ஆலோசனைகள் கொண்ட‌ பயனுள்ள பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ,

      கருத்துக்கு மிக மிக நன்றி :)

      வஸ் ஸலாம்.

      Delete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //தொழுகையும், குர்’ஆன் ஓதுவதும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் //---இதில் குர்ஆன் ஓதுதலும் தடுக்கப்பட்டுள்ளதோ என்ற எண்ணம் தோன செய்து விடுகிறது..!

    பெண்களுக்கு இந்நாட்களில் தொழுகைதான்-நோன்புதான் தடுக்கப்பட்டுள்ளதே அன்றி... அதிகமாக குர்ஆன் ஓதலாமே..!

    //தொழுகையும், நோன்பும் மட்டுமே இபாதத்தல்ல என்பதை புரிந்து கொள்ளவும் //---என்று வந்திருக்கலாம் சகோ.அன்னு.

    ஜசாக்கல்லாஹு க்ஹைர்..! மிக நல்லதொரு அவசியமான இடுகை..!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஆஷிக் பாய்,

      கருத்துக்கு மிக மிக நன்றி சகோ :)
      மாற்றங்களை செய்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கும், சுட்டிக்காட்டிய விதத்திற்கும், மிக மிக நன்றி ஆஷிக் பாய். பாரக்கல்லாஹு ஃபீஹ். :)

      வ இய்யகும். வஸ் ஸலாம். :)

      Delete
  12. அன்னு மிகவும் தேவையான பதிவு,பகிர்வுக்கு ஜஸாக்காலாஹ் ஹைர்

    ReplyDelete
    Replies
    1. வ இய்யகும் சகோ.
      கருத்துக்கு மிக நன்றி :)

      Delete
  13. Replies
    1. Salam Brother.

      Jazakumullaahu Khayr for your inputs.

      wa Salam.

      Delete
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

    இன்றும் நம் சகோதரிகள் நிறையப் பேர் இது விடயமாக இஸ்லாமிய சட்டங்களை அறியாதவர்களாக இருக்கிறார்கள் .இந்தப் பதிவு சகோதரிகளுக்கு பயனுள்ளதாக அமையும் இன்ஷால்லாஹ் .மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரி !

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சகோ.ஃபாத்திமா,

      கருத்துக்கு மிக மிக நன்றி சகோ :)

      வஸ் ஸலாம். :)

      Delete
  15. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.,

    " அந்த ஏழு நாட்கள் " ரமளானில் அவசியப் பதிவு .! அதன் பற்றிய முழு விளக்கங்களும் , அதற்கான தீர்வுகளும் மிக அருமை .!

    உங்கள் ஹய் லைட் சிந்தனைகளில் சில .!

    " நோன்பாளிகளுக்கு உணவு தயார் செய்யவும், பரிமாறவும், இஃப்தார் குழுக்களிலும் பங்கு பெறுங்கள்.

    இஃப்தார் முடிந்த பின் மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

    தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு நன்மை யோசியுங்கள். குழந்தையின் தாய்மார் மட்டுமல்ல. இன்னும் மற்றவர்களும் சிரமம் இன்றி தொழுகையில் ஒன்றி தொழுக முடியும். அதற்கான கூலியும்....மாஷா அல்லாஹ் :))

    வீட்டிலுள்ள வயதானோருக்கு (எழுத படிக்க இயலாமல் இருப்பவர்களுக்கு) மற்றும் குழந்தைகளுக்கு சூறாக்களையும், து’ஆக்களையும் கற்றுக் கொடுங்கள். தஃப்சீர் உரக்க படித்துக் காட்டுங்கள்.

    உங்கள் வீட்டிலுள்ள / தெருவில் / அணுகக் கூடிய அருகாமையில் உள்ள நோன்பு வைக்கும் வயதானோருக்கு / ஏழைகளுக்கு / சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு / புதிதாய் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு உணவுக்கும் / மற்ற தேவைகளுக்கும் உதவுங்கள். "

    இதுவரை..! அதன் யூசுவல் ப்ராப்ளம் பற்றியே தான் எல்லாம் எழுதி உள்ளார்கள் . முதன் முறையாக நீங்கள் தான், அந்த கால கட்டத்திற்கான , மாற்று " இபாதத் " களை , பொது நலத்தோடு சொல்லி உள்ளீர்கள் .

    பாராட்டுக்கள் .! முற்றிலும் புதிய அணுகுமுறை.

    - காயின் காதர்
    புருனை தாருஸ்ஸலாம்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சகோதரரே,

      கருத்துக்கு மிக மிக நன்றி சகோ :)

      வஸ் ஸலாம். :)

      Delete
  16. //மஸ்ஜிதில் சுத்தப்படுத்தும் வேலையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
    தராவீஹ் தொழுக வரும் தாய்மார்களின் குழந்தைகளை (Baby Care) கவனித்துக்கொள்ளுங்கள்//

    ஒரு சந்தேகம்ப்பா. அதாவது தொழாமல் இருக்கும் நிலையிலும், மஸ்ஜிதுக்குப் போகலாம் என்கிறீர்கள். இந்த விதி, மக்கா, மதீனா பள்ளிகளுக்கும் பொருந்துமா?

    ஏன் கேட்கிறேன் என்றால், ஹஜ்/உம்ரா செல்லும்போது பெண்களுக்கு தொழாத நிலை ஏற்பட்டால், ஹோட்டல் ரூமுக்குள்ளேயே இருந்துவிடுகிறார்கள். பள்ளி சென்று துஆக்களில் ஈடுபட்டால், இன்னும் உத்வேகத்தோடு செய்யலாமே.

    ReplyDelete
    Replies
    1. ///இந்த விதி, மக்கா, மதீனா பள்ளிகளுக்கும் பொருந்துமா?///

      =====================மக்கா..!

      புஃஹாரி பாகம் 1, அத்தியாயம் 6, எண் 305

      ‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள், அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘ஏனழுகிறாய்?’ என்று கேட்டார்கள். ‘இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்’ என்றேன். ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அப்போது ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதை (தவாப்பை)த் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்’ என்று கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

      (இதிலே கஃபத்துல்லா உள்ளேயே வரக்கூடாது என்பதற்கோ.. ஏனைய ஹாஜ்ஜின் கிரியைகளான... சஈ, மினா, அரபா, முஜ்தளிபா, ஜமரா... இவற்றுக்கு எந்த தடையும் இல்லை என்பதையும் அறியலாம்)

      =======================மதினா..!

      புஃஹாரி பாகம் 1, அத்தியாயம் 6, எண் 333

      ‘எனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நான் தொழுவதில்லை. அந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் அருகில் படுத்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய பாயில் தொழுது கொண்டிருந்தார்கள். ஸஜ்தாச் செய்யும்போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என் மீது படும்” என்று மைமூனா(ரலி) அறிவித்தார்.

      (அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என் மீது படும் அளவுக்கு பள்ளிவாசலின் அருகில் நெருக்கமாக அமர்ந்து/படுத்து இருக்க முடியும் என்பதை உணர்துகிறது..!)

      //ஹஜ்/உம்ரா செல்லும்போது பெண்களுக்கு தொழாத நிலை ஏற்பட்டால், ஹோட்டல் ரூமுக்குள்ளேயே இருந்துவிடுகிறார்கள்.//---இது அவரவர் உடல் நிலை -கஷ்டம் -வலி -இயலாமை பொறுத்த விஷயம்..! ஆனால், அப்படித்தான் ரூமுக்குள்ளேயே இருந்தாக வேண்டும் என்று மார்க்கத்தில் ஏதும் இல்லை..!

      Delete
    2. @ஹுஸைனம்மா அக்கா,
      அல்ஹம்துலில்லாஹ் முஹம்மது ஆஷிக் பாயால் நான் காப்பாற்றப்பட்டேன். மக்கா மதீனா பள்ளிகளைப் பற்றிய விடயம் எனக்கு மிக புதிது. உங்களின் கேள்வியால் அறிந்து கொண்டேன். அதற்காக, ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.

      @முஹம்மது ஆஷிக் பாய்,
      எப்பொழுதும் போல் ஒரு புது விஷயத்தையும், ஹதீத்தையும் உங்களால் கற்றுக் கொண்டேன். ஜஸாகுமுல்லாஹு க்ஹைர் பாய்.

      வஸ் ஸலாம். :)

      Delete
  17. பயனுள்ள தகவல் !

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக மிக நன்றி சகோ.

      வஸ் ஸலாம்.

      Delete
  18. ஒவ்வொரு பெண்களுகும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கிய விசயங்கள். மென்மையானவர்கள் அவர்களுக்கு எத்துனை சலுகைகளை இறைவன் வழங்கியுள்ளான் அதிலொன்றுதான் இந்த ஹைல் [நிபாஸ்].[மாதவிடாய் பல நேரங்களில் பெண்கள் தானே ஓய்வு எடுத்துக்கொள்ள தவறிவிட்டாலும் இதன்பொருட்டால் ஓய்வுகொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைத்துள்ளான் ஆகவே அதன் விபரம் அறிந்து அறியாமையை ஒதுக்கி. மார்க்கம் கற்றுத்தந்து வழியில் நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும் அனைத்து பெண்களுக்கும். மிக அருமையான தேவையான பதிவு..

    ReplyDelete
    Replies
    1. மலிக்காக்கா,

      கருத்துக்கு மிக மிக நன்றி. :)

      வஸ் ஸலாம். :)

      Delete