Sunday, June 17, 2012

இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!!

நாம் தனிமனிதராக தனிக் காட்டில் பிறந்து தன்னந்தனியாக வாழ்ந்து மரணிப்போமானால் அனேகமாக சொர்க்கம் செல்வது இலகுவாக இருந்திருக்க கூடும் .ஏனெனில் ,பாவம் செய்வதுக்குரிய சந்தர்ப்பங்கள் அப்பொழுது குறைவாகவே இருந்திருக்கக் கூடும். ஆனால், இறைவன் அப்படி நம்மை விடவில்லை. மாறாக உலகம், பொருள், மண், மக்கள் என்னும் பெரும் பெரும் காரணிகளை ஏற்படுத்தி நம்மை சோதனையிட்டுக் கொண்டே இருக்கிறான், பிறப்பிலிருந்து, இறப்பு வரை.  திருமறையில் வரும் வசனத்தைப் பாருங்கள்:



"ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன் உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது." (திருக் குர்'ஆன் 64:14-15)


இறைவன்  நம்மை சோதனைக்குட்படுத்தாமல் சொர்க்கம் எனும் மாபெரும் பரிசினை தந்துவிடப்போவதில்லை. நமது சோதனை நம்மைச் சூந்துள்ள சமுதாயத்தில்தான் உள்ளது. இதனை உணராத நாம் அதன் பிடியில் எளிதில் சிக்கிக் கொண்டு, சோதனைகளால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கொடுமை  என்னவென்றால் இவ்வாறு தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட நாம் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம்..


அனேகமாக நாம் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . நமது குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, பெற்றோருக்காக, சமுதாயத்துக்காக, ஏன் எதிரிகளுக்காவும் கூட நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இது போன்று அடுத்தவருக்காக வாழும் பொழுது தவறிழைக்காமல் இருக்க, வழி தவறாமல் இருக்க இஸ்லாம் ஒருவித சுயநலத்தை  வலியுறுத்தியிருகிறது . என்னது இஸ்லாம் சுயநலமா இருக்க சொல்லுதான்னு அதிர்ச்சி அடையறீங்களா?? ஆமாம், இஸ்லாம் சில விஷயங்களில் மிகுந்த சுய நலத்துடன் இருக்கச் சொல்கிறது.
இறைவனிடம் பிராத்தனை செய்யும் பொழுது முதலில் நமக்காக கேட்டு, அதன் பின்னரே பிறருக்கு கேட்க சொல்கிறது இஸ்லாம். குரான் மற்றும் நபி ஸல் அவர்கள் கற்றுத்தந்த பிராத்தனைகள் அனைத்தும் நமக்காகவே முதலில் கேட்க சொல்கின்றன.


 என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! 14:40


எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக 14:41


என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன் 21:89


எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன் 59:10


இந்த வசனங்களை கவனிச்சீங்களா? முதலில் தனக்கு கேட்ட பின் தான் மற்றவர்களுக்கு கேட்கப்பட்டிருக்கு இல்லையா?  பொதுவாக சுயனலமற்றவர்களாக, எப்போதும் பிறர் நலம் கருதியே வாழ வேண்டும் எனும் கோட்பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.

அவ்வாறு இருக்கையில் இஸ்லாம் தனக்காக முதலில் கேட்க சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். அவ்வாறு நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இது பற்றி சற்று சிந்தித்தால், இதில் ஆழமான கருத்துக்கள் பொதிந்திருப்பதைக் எளிதில் புரிந்து கொள்ளலாம்.


நாம் இறைவனிடம்  ஒரு விஷயம் வேண்டுவது,  மற்றவர்களிடம் கேட்பது போலல்ல. ஏனெனில் ,இறைவனின்  அருட்கொடைகள் எவ்வளவுதான் அள்ளித் தந்தாலும் குறையாதவை. கொடுப்பதற்கு அவன் தயாராக இருக்கிறான். நாம்தான் கஞ்சர்களாக இருக்கிறோம் .


இதனை  பலர் புரிந்து கொள்ளாமல்  "சுயநலமற்ற மேதாவிகளாக" இருப்பதாகக் கருதிக் கொண்டு " நான் எனக்காக அல்லாஹ்விடம் எதையுமே கேட்பதில்லை. பிறருக்காகவும்,  என் குடும்பத்துகாகவும் மட்டுமே பிரார்த்திகின்றேன்" என்று சொல்கிறார்கள். இது உண்மையா??  நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் ஒரு கணமேனும் வாழ்ந்திட முடியுமா? நிச்சயம் முடியாது. இவ்வாறு கூறுபவர்கள் போலிகளே.


இறைவன்  ஏற்படுத்தியிருக்கின்ற சுயநலம் நமக்கு அவசியமானது. ஆனால் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிச் சுரண்டும் சுயநலமல்ல இது .மாறாக ,நம்மை இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் இரண்டிலுமே வெற்றி பெறச் செய்யும், மற்றவர்களையும் நம்மோடு சுவனத்துக்கு இழுத்துச் செல்லும் சுயநலம்.


சுயநலமா இருங்கன்னு சொல்லியாச்சு. அப்ப பிறர் நலம் பத்தி யோசிக்காமல் இருந்தால் அது தப்பு இல்லையா? அது ஒரு மோசமான முன்னுதாரணம் இல்லையா என்ற கேள்வி எழாமல் இருக்கப்போவதில்லை.

ஒருபுறம் நாம் சுயநலத்தை இஸ்லாமிய ரீதியாக நோக்கும் அதேவேளையில், இதன் மறுபுறமான "பிறர்நலம் கருதுவோம்" என்று கூறும் மனிதன்  தாமும் பாவத்தில் விழுந்து அடுத்தவரையும் பாவம் செய்ய தூண்டுகிறான்.  மனிதன் எவ்வாறெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அந்தளவுக்கு தன்னை மாய்த்துக்கொண்டு தனக்காகவும் ,மற்றவர்களுக்காகவும்  பாடுபடுகிறான்  என்பதை அன்றாடம் நாம் காண்கிறோம். மற்றவர்களுக்காக அதிகமாய் சம்பாதிக்க வேண்டி அவன் எத்தகைய குறுக்கு வழிகளில் செல்கிறான்?  இதில் எத்தனையோ பேர் மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்? பொய், களவு, மோசடி, வட்டி, இவை எல்லாம் எதற்காக?  நாம் எந்தளவு சம்பாதித்தாலும் ஒருவேளை  வயிற்றுக்குதான். ஒருசில  ஆடைகளைத்தான் அணியப் போகிறோம்.

நாம் யாராக இருந்தாலும், கோடி கோடியாக சம்பாதித்தாலும் மனிதனாகிய நமக்கு அடிப்படை தேவைகள் ஒன்றுதான். நாம் இவ்வுலகில் வாழப்போவதும் கொஞ்ச காலம் தான்.. நாம் சேர்க்கும் செல்வத்தை வேற யாரோ அனுபவிக்க போறாங்க.. அதற்காக நாம் தப்பான வழியில் அதை சேர்த்து வைத்து  பாவம் செய்ய வேணுமா?  நிச்சயம் தேவை இல்லை.

நாம் ஹலாலான(நேர்மையான) முறையில் சம்பாதித்து அன்றாட தேவைகள் போக மீதமானதை நமக்காக சேர்க்க வேண்டும். நம்மால் முடிந்தளவுக்கு நேர்மையாக, உண்மையாக, நீதியுடன் நடந்து செல்வம் ஈட்ட வேண்டும் .இப்படி செய்வது மற்றவர்களுக்கும் நன்மை செய்தது போல் அமையும். நம்மையும் சொர்க்கத்துக்கு இழுத்துச்செல்லும் இல்லையா?.

நாம் இவ்விடத்தில் இன்னுமொன்றை மறந்து விடுகின்றோம் .மற்றவர்களின் தேவை இல்லாத விடயங்களில் தலையிட்டு அவர்களின் குற்றம் குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து,,.... புறம் சொல்லி நம் நேரத்தை செலவு செய்கிறோம். கேட்டால் சமுதாய நன்மை என சொல்கிறோம். இதில் என்ன  இலாபம் நமக்கு? மற்றவர்கள்களின் குறைகளை பற்றியே புறம்பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன் வந்துவிட போகிறது என, கொஞ்சம் சுயநலமாக சிந்தித்தால் புறம் பேசாமல் இருப்பது நமக்கு நன்மை என்பது எளிதில் புரியும். மாறாக அதை தொடர்ந்தால் மறுமையில் மற்றவர்களுடைய தீமைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு  நம்மீது சுமத்தப்படும் என்பதை நாம் அறியாமல் இருக்கிறோமா? அநீதி இளைக்கப்பட்டவன் அல்லாஹ்விடம் முறையிட்டால், நம்மை நோக்கி குற்றம் சாட்டினால், படைத்தவனிடம் நீதி கேட்டால்??!! என்ன செய்வோம் நாம்?

அதற்கு அல்லாஹ் குற்றப்பரிகாரம் கொடுக்குமாறு நம்மை பணித்தால்... சொத்தோ, பொருளோ உதவிடாத அந்நாளில் நமது நன்மைகள் அவர்கள் மீது சாட்டப்பட்டு அவர்களின் தீமைகள் நம்மீது திணிக்கப்படும். (இந்த நிலைமையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்)அதற்கு நாம் சுயநலத்தையும், பிறர் நலத்தையும் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.


சில உதாரணம் பார்க்கலாம்:

எந்த மனிதரும் தாம் உயிரோடு இருக்கும் போது தன்சொத்து முழுவதையும் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தான் இறுதிகாலம் வரை அனுபவித்து பின்னர் தான் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற கூறுகிறது. இதில்  சுயநலம் இருப்பது போல் தெரியும்... ஆனால் இது ஒரு அற்புதமான சட்டம்.. பாருங்கள்....

இன்று பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் திருமணத்தின் போது தன்னிடம்  உள்ள அனைத்து சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்து விடுகின்றனர்.( பாகப் பிரிவினை இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் மாற்றமானது என்பது வேறு விடயம் ) பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து சொத்துடன் போய்விடுகிறார்கள்.... அதன் பிறகு இவர்களின் நிலை என்ன? மாற்றானிடம் கை நீட்டி பிச்சை கேட்கிற நிலை ஏற்படும் .தம் பிள்ளையிடமே கை நீட்டி கேக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும் ,இதன் காரணமாக பெற்றோரை மதிக்காத பிள்ளைகளால் பெற்றோர்க்கு நிகழும் சங்கடங்கள் எத்தனை எத்தனை? ஒருவேளை கணவன் மரணித்தால் மனைவி எந்த வசதியும் இன்றி தவிர்க்க நேரிடும். இதற்குத்தான்  இஸ்லாம் யாராலும் இயற்ற முடியாத சட்டங்களை கொண்டிருகின்றது. இந்த விஷயத்தில் சுயநலம் மிகுந்த நன்மையை தருகிறது...  இல்லையா?


அதேநேரம் மரணத் தருவாயில் செய்யும் மரண சாசனத்தில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் தானம் செய்ய தடை செய்துள்ளது இஸ்லாம். காரணம் குடும்ப உறுப்பினர்களை நடுத்தெருவில் விட்டுச்செல்லாமல் இருக்கவும், அவர்களிடம் மேலதிகமாக சொத்துக்கள் இருந்தால் இலகுவாக இருக்கும் என்பதற்க்குமே! சட்டமியற்றுவதில் அல்லாஹ்வை விட சிறந்தவர் யாராக இருக்க முடியும்.

அடுத்ததாக:

ஒரு தாய் தன் குழந்தைக்கு நல்ல கல்வி கிடைக்க வழிசெய்கிறாள் என்றால், அது அந்தக் குழந்தையின் நல்வாழ்வுக்காக மட்டுமல்ல. ‘தாய்’ என்ற தனது கடமையைச் சரியாகச் செய்வதன்மூலம் இரண்டு பலன்கள் அவளுக்கு: ஒன்று, ஒருவருக்கு நற்கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம், அவளது அக்கவுண்டில் நன்மை கூடுகிறது. இரண்டாவது, இறைவனிடம் மறுமைநாளில் தன் கடமையைச் சரியாகச் செய்துவிட்டாயா என்ற கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லி, நரகத்திலிருந்து தப்பிக்கவும் முடிகிறது. ஆக சுயநலமுடன் பிறர் நலமும் பேணப்பட்டு சமுதாயத்தில் சமமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. அதாவது இப்படி ஒரே கல்லிலே ரெண்டு, இல்லையில்லை மூணு மாங்காய் அடிக்க முடியுது...


நமது பிராத்தனைகள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப் படவேண்டும்.. அதற்கு நம்மை நாமே தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும். நம் துவாக்களில் உடல் நலத்தை மட்டுமன்றி வறுமை, கடன், சோம்பல் இவை அனைத்தையும் விட்டும் பாதுகாப்பு கேட்க வேண்டும்.. அப்போதுதான் நம்மை படைத்தவனை வணங்கவும் ,பிறருக்கு உதவவும் இலகுவாக இருக்கும்.இதன் மூலம் சொர்க்கம் செல்ல பாக்கியம் கிடைத்தால்.. எமது சகோதர்களுக்காகவும் அல்லாஹ்விடம் மன்றாட சந்தர்ப்பம் கிடைக்கும் அல்லவா? நாம் சிந்திப்போம் ,செயல்படுவோம் .


உண்மையில் இஸ்லாம் விதித்துள்ள பல கோட்பாடுகள் பற்றி சற்று அழுத்தமாக சிந்திக்கும் போது ,எம்மை வியப்பில் ஆழ்த்தும். அல்லாஹ்வின் மேம்பாட்டை உணரவைத்து அவனுக்கு சிரம் தாழ்த்த வைக்கும். அல்லாஹ் அக்பர் ;அவன் மிகப் பெரியவன்.


இஸ்லாம் சொல்லி கொடுக்கும் சுயநலத்தில் பிறர் நலமும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலமும் காண முடிகிறது இல்லையா? ஆகவே  இஸ்லாம் கூறியபடி சுயநலனோடு சிந்தித்து பிறர் நலனையும், சமுதாய நலனையும் பேணுவோம்.    



உங்கள் சகோதரி
Fathimah Muslimah Muslimah

15 comments:

  1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ்..மிக ஆழமான பதிவு..அருமையா சுயநலத்தை பற்றி புது கோணத்தில் எடுத்து சொல்லிருகிங்க ஃபாத்திமா சிஸ்.. நல்லா இருக்கு உங்க எழுத்து.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..

    அருமையான பதிவை பகிர்ந்ததற்கு நன்றி..:-))

    ReplyDelete
  2. சிறந்த பதிவு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. /* அனேகமாக நாம் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . */

    முற்றிலும் உண்மை...ஊழல் செய்யும் பலர்..தனது வாரிசுகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி தான் இப்படி கோடி கணக்கில் அடிக்கிறார்கள்....

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்.....

    நல்ல சிந்தனை....அருமையான பதிப்பு தொடர்ந்து இது போன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் .....ஜசகல்லாஹ் ஹைரன்........! சகோதரி.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்.....

    நல்ல சிந்தனை....அருமையான பதிப்பு தொடர்ந்து இது போன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் .....ஜசகல்லாஹ் ஹைரன்........! சகோதரி.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

    இந்த சுயநலங்களின் பின்னனியில் மிக முக்கியமானது ஒன்று இருக்கிறது சகோ , அது நாம என்னதான் நற்செயல்கள் செய்தாலும் அது மட்டுமே நமது கணக்கில் மறுமையில் வரும் . அங்கே பிறரின் சுமையை சுமக்க முடியாது .நம்மிடமிருந்து யாரும் அதை வாங்கவும் முடியாது .அது நம்மை பெற்ற பெற்றோராக இருந்தாலும் , பாசமுள்ள கணவன், மனைவியாக இருந்த போதிலும் :-).

    இதனால்தான் நன்மை செய்வதில் போட்டி போட சொல்கிறது இஸ்லாம் :-)
    மற்ற படி ஆழமான கருத்துக்கள் பொதிந்த பதிவு வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  7. அருமையான பதிவு
    //அனேகமாக நாம் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . நமது குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, பெற்றோருக்காக, சமுதாயத்துக்காக, ஏன் எதிரிகளுக்காவும் கூட நேரத்தையும் காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.// உண்மைதான்
    //எந்த மனிதரும் தாம் உயிரோடு இருக்கும் போது தன்சொத்து முழுவதையும் வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை,இன்று பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் திருமணத்தின் போது தன்னிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும் பிரித்துக் கொடுத்து விடுகின்றனர்.( பாகப் பிரிவினை இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் மாற்றமானது என்பது வேறு விடயம் ) பிள்ளைகள் பெற்றோரை பிரிந்து சொத்துடன் போய்விடுகிறார்கள்.... அதன் பிறகு இவர்களின் நிலை என்ன? மாற்றானிடம் கை நீட்டி பிச்சை கேட்கிற நிலை ஏற்படும் .தம் பிள்ளையிடமே கை நீட்டி கேக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும் ,இதன் காரணமாக பெற்றோரை மதிக்காத பிள்ளைகளால் பெற்றோர்க்கு நிகழும் சங்கடங்கள் எத்தனை எத்தனை// நம்மை சுற்றி நடக்கும் எதார்த்தம்
    //உண்மையில் இஸ்லாம் விதித்துள்ள பல கோட்பாடுகள் பற்றி சற்று அழுத்தமாக சிந்திக்கும் போது ,எம்மை வியப்பில் ஆழ்த்தும். அல்லாஹ்வின் மேம்பாட்டை உணரவைத்து அவனுக்கு சிரம் தாழ்த்த வைக்கும்// ஆமாம்

    இதுபோன்ற உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  8. அஸ் ஸலாமு அலைக்கும் ஃபாத்திமா சகோ,

    இந்த பதிவும், ப்ரிவீயுவிலிருந்தே என்னை ஈர்த்த ஒரு பதிவு. முழுதுமாக படித்து இன்புற தாமதமாகி விட்டாலும், மிக மிக விருவிருப்புடன் நம்மை இழுத்துச் சென்ற பதிவு. இதே டைட்டிலை வைத்து யாரும் எதிர் பதிவு இன்னும் போடலியா?? :))

    //இறைவன் நம்மை சோதனைக்குட்படுத்தாமல் சொர்க்கம் எனும் மாபெரும் பரிசினை தந்துவிடப்போவதில்லை. நமது சோதனை நம்மைச் சூந்துள்ள சமுதாயத்தில்தான் உள்ளது. இதனை உணராத நாம் அதன் பிடியில் எளிதில் சிக்கிக் கொண்டு, சோதனைகளால் தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இவ்வாறு தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூட நாம் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம்..//

    மிக மிக மிக மிக உண்மையான வார்த்தைகள் சகோ. என்னதான் தொழுகை வேளையிலும் பயான்கள் கேட்கும்போதும் அந்த நடுக்கம் இருந்தாலும், மீண்டும் மற்ற நேரங்களில் இந்த பயத்தை தொலைத்துத்தான் விடுகிறோம் நாம். அப்படி வீக்கான நம்மை மீண்டும்

    //என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! 14:40


    எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக 14:41


    என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன் 21:89


    எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன் 59:10//

    இந்த மாதிரியான து'ஆக்கள்தான் இயல்பிற்கு திரும்ப வைக்கின்றன. நம்முடைய உண்மை நிலையை நினைவுபடுத்துகின்றன. சின்ன வயதில் நானும் இது போன்றே யோசித்துள்ளேன், ஏன் நமக்கு நாமே து'ஆ செய்ய வேண்டும், நாம் மற்றவருக்குத்தானே அதிகம் கேட்க வேண்டும் என. ஆனால் வளர வளரத்தான் அந்த தாத்பரியம் புரிய ஆரம்பிக்கின்றது. அதிலுள்ள 'உன்னை நான் அறிவேன் -- என்று இறைவன்' சொல்லும் உண்மை தெளிவாகிறது. சுயனலம் என்பது மனிதனின் உள்ளத்தில் கலந்தோடும் ஒன்று என்பது தெள்ளென விளங்குகிறது, அதையும் தாண்டி பொது நலத்தையும் சேர்த்து நினைவிலிருத்துவது எப்படி என்பதை இஸ்லாம் அழகாக தெளிவுபடுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்... மிக மிக மிக நல்ல கட்டுரை சகோ. ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மாஷா அல்லாஹ்.. அருமையான ஆக்கம் சகோதரி பாத்திமாஹ்

    நம்முடைய சுயநலம் கூட மற்றவர்களுக்கு நன்மை பயப்பனவாக இருக்கும் படி சொல்லித்தருகிறது மார்க்கம். அல்லாஹு அக்பர்

    //ஆனால் மற்றவர்களிடம் இருந்து பிடுங்கிச் சுரண்டும் சுயநலமல்ல இது//

    நிச்சயமாக இன்று தன் குழந்தை மனைவி சந்தோசத்திற்காய் பாவங்களை செய்து லஞ்சம் வாங்கும் சுயநலத்தில் என்ன பயன் இருக்க போகிறது? அதே சமயம் நம் குழந்தை, மனைவி, குடும்பம் சிறிது கஷ்ட்டம் அனுபவித்தாலும் பரவாயில்லை என ஹலாலான முறையில் சம்பாதித்து நன்மையை சேர்ப்போம் என்ற சுயநலத்தில் எத்தகைய நன்மையை நம் சமூகத்திற்கு நம்மால் கொடுக்க முடிகிறது?

    நம் எண்ணம் செயல்கள் ஒவ்வொன்றிலும் சுயநலத்தோடு மறுமையின் நன்மைகளை வேண்டி நல்ல நல்ல விஷயங்களை சமூகத்திற்கு விட்டுச்செல்வோம். இன்ஷா அல்லாஹ்

    அருமையான ஆக்கம் சகோதரி.
    மேலும் இது போல் பலவற்றை எங்களுடன் பகிரவும் மென்மேலும் உங்கள் பணி சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  10. மாஸா அல்லாஹ்......புதுமையான கோணத்தில் நல்ல கருத்துகள்

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. பதிவு நீளமாக இருந்தாலும், விரிவான அலசல். நம்மை நாமே உரசிப்பார்க்கவும் உதவும் என்பது உண்மை! ஜஸாக்கல்லாஹ் கைர்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு. நானும் சுயநல வாதியாக இருக்க விரும்புறேன். இன்ஷா அல்லாஹ்..

    ReplyDelete
  13. எனக்கும் இதுபோல் சுயநலமாக துஆ செய்ய மனம் வராது. (இதில் பந்தா எல்லாம் இல்லை....சுயநலமாக இருக்கிறோமோ என்று நினைத்து(பயந்து) பிறருக்கும் சேர்த்தே துஆ செய்வேன்). ம்.... நீங்கள் சொல்லியிருப்பதும் சரிதான். இனி நானும் மேற்சொன்னது போல் சுயநலமாக இருக்க முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்... ஜஸாக்கல்லாஹ் கைர்.

    ReplyDelete
  14. /* அனேகமாக நாம் அனைவரும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர்களுக்காகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . *//

    உண்மை சொல்லவேண்டும். பிறருக்காக 3 பங்கெனில் எனக்காக 4 பங்குதான் என்னளவில். ஏனெனில் முதலில் நம்மை நாம் உணர்வதிலோ! தெளிவதிலோ! நன்மைகள் செய்வதிலோ தீமைகளை தடுப்பதிலே!நமக்கே நமக்காக சேர்ப்பதிலோ முனைத்துவிட்டு பின்புதான் அடுத்தவர்களுக்காக செய்ய முனையவேண்டும் என நினைப்பவள்.அப்படியிருந்தால்தானே நாம் பிறருக்காக உதவமுடியும் இதில் நான் சுயநலவாதிதான் என்றால் ஒப்புக்கொள்கிறேன் நான் சுயநலவாதியே!..

    மிக அருமையான பதிவு சகோ..
    இன்னுமின்னும்
    தொடர்ந்து எழுதுங்கள்
    சமுதாயத்தில் சில
    களைகளையாவது கலைந்திடுங்கள்..

    ReplyDelete