Monday, June 11, 2012

வேண்டாமந்த சுதந்திரம்??!!!
முக்காடென்னும் பர்தாயிட்டு
முஸ்லீம் பெண்மை
முடக்கபடுகிறதா? -அல்லது
முழுமையாக மூடியும்
முன்னுக்கு வந்து முன்னேறுகிறதா?

பூவைப்போன்ற பெண்ணை
பாதுகாப்பதெப்படி என்று
படைத்த இறைவனுக்கு தெரியாதா?
பூவுடலை மறைப்பதால்
பாவைக்குதான் நன்மையென்று
பதருக்கும் புரியாதா?போர் வீரனுக்கு
கவசம் எவ்வளவு முக்கியமோ?
அதைவிட பலமடங்கு
பெண்ணுக்கு பர்தா அவசியம்

”ஏனெனில்

கழுகுப்பார்வைக் கொண்டு
உடல்கொத்தும் பாம்புகளால்
பெண்ணின் மேனியை
பதம் பார்ப்பதிலிருந்து தப்பிக்க!
பாவத்திலிருந்த தன்னை பாதுகாக்க!

நாளுக்கு நாள்
அதிவேகமாய் பரவுகிறது
நவ நாகரீக ”தீ”
தீயிற்க்கு இரையாவதென்னவோ!
தினந்தோறும் பெண்மைதான்

உண்மையறியாமல்
உலறுகிறது உலகில் சில நாவுகள்!
அடிமையின் சின்னமாய்
அலைகிறது பர்தாவென!

அறிவார்களோ! அவர்கள்
பர்தா அணியும் பெண்மை
அசிங்களை அவமதித்து
அவதாரிகளாகிறார்கள்  
அழகிய பதுமைகாகவென்று!

அங்கங்களை காட்டி அலைவதில்தான்
சுதந்திரமிருக்கிறதென்றால்
வேண்டாமந்த முள்வேலி சுதந்திரம்!
அடிமையாகவே இருப்பதையே
அன்போடு விரும்புகிறோம்,

பர்தா அணிவதில் தவறேதுமுண்டோ!
இதனால்
பாதகங்கள் எவருக்குமுண்டோ!
படைத்தவனின் வாக்கை
படைப்பினங்கள் மீறுவது சரியோ!
பாழ்பட்டு போக நினைப்பதுதான் முறையோ!

முக்காட்டால்
முழுவதுமாக மூடியிருப்பது
உடலையே தவிர
உள்ளத்தையல்லவே! -அதனை 
செயல்படுத்தும் மூளையையும் அல்லவே!
முக்காடிட்டபடியே முன்னுக்கும் வரலாம்
முழங்கால் கட்டாமல் 
முகம் நிமிர்த்தியும் நிற்கலாம்.

முஸ்லீம் பெண்ணே!
முன்னேறி வா
முன்னோர்கள் வழிகெட்ட பாதையிலிருந்து
முள்ளகற்றி முன்னேறி வா!
முக்காடிட்டபடியே!
உன்னுடலை 
முழுமையாக மூடியபடியே!

டிஸ்கி: இக்கவிதை 12-5-2012 அன்று  முத்துப்பேட்டையில் நடைபெற்ற பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாட்டில் ஆயிஷா என்ற மாணவியால் வாசிக்கப்பட்ட எனது கவிதை.

இறைவா!
உன்னையே நாங்கள் உறுதியாய் வணங்குகிறோம்
உன்னிடம் மட்டுமே உதவியை கேட்கிறோம்.

42 comments:

 1. வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
 2. Masha allah nalla kavithai. wish all the best. Keep it up.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மாஷா அல்லாஹ்... ஒவ்வொரு வரியும் அருமை மலிக்கா அக்கா

  ஹிஜாப் பற்றி பேசுபவர்களுக்கு செம நெத்தியடி வரிகள்!

  வாழ்த்துகள் அக்கா

  ReplyDelete
  Replies
  1. அலைக்குமுஸ்ஸலாம். சகோதரி
   நெத்தியடி கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி..

   Delete
 4. Masha allah! Ovvoru variyum arumai! Keep it up!

  ReplyDelete
 5. நல்ல கவிதை..

  மாணிக்கம்...மரகதம்..முத்து...புதையல்..இப்படி பெறுமதியான அனைத்தும் இந்த உலகத்தில் மறைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.

  பெண்களும் அப்படி பெறுமதியானவர்களே...அதனால் தான் உடலை மறைக்குமாறு இஸ்லாம் வழியுறுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. //மாணிக்கம்...மரகதம்..முத்து...புதையல்..இப்படி பெறுமதியான அனைத்தும் இந்த உலகத்தில் மறைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன.//

   உண்மைதான் சகோ பொக்கிஷங்கள் பாதுகாப்படவேண்டும் சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்..

   Delete
 6. //முக்காட்டால்
  முழுவதுமாக மூடியிருப்பது
  உடலையே தவிர
  உள்ளத்தையல்லவே! -அதனை
  செயல்படுத்தும் மூளையையும் அல்லவே!
  முக்காடிட்டபடியே முன்னுக்கும் வரலாம்
  முழங்கால் கட்டாமல்
  முகம் நிமிர்த்தியும் நிற்கலாம்.// நச் வரிகள்

  ReplyDelete
 7. கவிதை வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி.. சகோ.

   Delete
 8. Nalla irukku thangachi. Vaaryhaikalai kuraiththu azuththathai kootti muyarchi seyyungalen.

  ReplyDelete
  Replies
  1. நவாஸண்ணா வாங்க வாங்க எப்படியிருக்கீங்க. இப்படியா மறந்துவிட்டு இருப்பீங்க எங்களை.. நலமா? ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆ நாளைக்கப்புறம் தங்களை இங்கே கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அண்ணா..

   குடும்பத்தில் அனைவருக்கும் சலாம் சொல்லவும்[அஸ்ஸலாமு அலைக்கும்].

   தாங்கள் சொல்லியதுபோல் இன்னும் அழுத்தம்கொடுத்து எழுதமுயல்கிறேன்.. முடிந்தால் இங்கு வந்து இதனையும் பார்க்கவும்..அண்ணா http://niroodai.blogspot.in/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

   Delete
 9. Replies
  1. அண்ணனின் அன்பு கருத்து பாச நன்றிகள்..

   Delete
 10. Replies
  1. எல்லாப்புகழும் இறைவனுக்கே!

   Delete
 11. முக்காடுக்குள் முடங்கியதல்ல பென்மை- அது அடங்கியது!-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது! - பூக்காடு தெரிய கூந்தல் வீசி!-பட்டுடையுடுத்தி மேனிகாட்டி! பற்கள் தெரிய புன்னகை பூத்து!- புருவத்தை கருமையாக்கி!-பருவத்தை சிறுமையாக்கி! பட்டனம் கானும் பென்மையல்ல பென்மை!- பர்தாவிற்க்குள் அடங்கி பார்! சிகரம் ஏறும் உன் பென்மை-இதுதான் உன்மை!

  ReplyDelete
  Replies
  1. அருமையான ஒப்பிடோடு அழகிய கவிதை நன்றிகள் சகோ..

   Delete
 12. முக்காடுக்குள் முடங்கியதல்ல பென்மை- அது அடங்கியது!-எக்கேடு கெட்டும் போகும் வேடதாரிகளின் கூச்சல் அது! - பூக்காடு தெரிய கூந்தல் வீசி!-பட்டுடையுடுத்தி மேனிகாட்டி! பற்கள் தெரிய புன்னகை பூத்து!- புருவத்தை கருமையாக்கி!-பருவத்தை சிறுமையாக்கி! பட்டனம் கானும் பென்மையல்ல பென்மை!- பர்தாவிற்க்குள் அடங்கி பார்! சிகரம் ஏறும் உன் பென்மை-இதுதான் உன்மை!

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோதரர் அவர்களே.

   Delete
 14. நல்ல கவிதை மலிக்கா.... எதிர்த்து பதில் சொல்லிட முடியாதவாறு ஒவ்வொரு வரியும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டுமென விரும்புகிறேன் சகோ. இன்ஷாஅல்லாஹ்..

   மிக்க நன்றி சகோ..

   Delete
 15. நல்ல இருக்கு கவிதை

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )
  //பூவைப்போன்ற பெண்ணை
  பாதுகாப்பதெப்படி என்று
  படைத்த இறைவனுக்கு தெரியாதா?
  பூவுடலை மறைப்பதால்
  பாவைக்குதான் நன்மையென்று
  பதருக்கும் புரியாதா? //

  அட்டகாசமான வரிகள் வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. யாராஆஆஆஆஆது நம்ம அண்ணாத்தேயா என்னாதிது புதிதா இருக்கு கருத்தெல்லாம் போட்டுகின்னு.. ஹா ஹா நான் யாருன்னாவாது நியாமகம் இருக்கா..

   ரொம்பாஆஆஆஆஆஆஆஆஆஆஅ நன்றிங்கண்ணாத்தே..

   Delete
  2. அலைக்குமுஸ்ஸலாம் அண்ணாத்தே!..

   Delete
 17. அஸ் ஸலாமு அலைக்கும் மலிகாக்கா,

  வழக்கமான உங்களின் 'நச்' கவிதை மீண்டும் விழி விரிய வைக்கிறது.

  //பூவைப்போன்ற பெண்ணை
  பாதுகாப்பதெப்படி என்று
  படைத்த இறைவனுக்கு தெரியாதா?//

  கரெக்ட்டான கேள்வி.... புரியாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும், இறைவன் அவர்களுக்கு வழி காட்டுவானாக. ஆமீன்.

  அழகிய, அருமையான கவிதைக்கு ஜஸாகுமுல்லாஹு க்ஹைர் அக்கா. :)

  ReplyDelete
  Replies
  1. அன்னு நலமா? தங்களின் அன்பான கருத்துகளுக்கும் துஆக்களுக்கும் நெஞ்சர்ந்த நன்றிகள்மா..

   Delete
 18. முக்காட்டால்
  முழுவதுமாக மூடியிருப்பது
  உடலையே தவிர
  உள்ளத்தையல்லவே! -அதனை
  செயல்படுத்தும் மூளையையும் அல்லவே!
  முக்காடிட்டபடியே முன்னுக்கும் வரலாம்
  முழங்கால் கட்டாமல்
  முகம் நிமிர்த்தியும் நிற்கலாம்.

  இதைவிட சிறப்பாக எழுதமுடியுமா என்ன? அற்புதமான கவிதை!

  ReplyDelete
  Replies
  1. இதைவிட சிறப்பாக இன்னும் அழுத்தமாக எழுத நினைத்துள்ளேன் சகோ இன்ஷா அல்லாஹ் விரைவில் அதுவும் வரும்..

   தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ..

   Delete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் !! சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் !! மேலும் இப்போது அதிகரித்துவரும் செயின் பறிப்பு, வழிப்பறி இதிலிருந்தும் சகோதரிகளை இந்த பர்தா பாதுகாக்கிறது என்பதும் ஒரு உண்மை !

  ReplyDelete
  Replies
  1. பெண்ணின் அகத்துக்கும் புறத்தும் சிறந்தது. ஆகமொத்ததில் அனைத்திற்க்கும் உகந்தது இந்த பர்தா. பெண்மையின் பாதுகாப்பில் முதன்மை வகிக்கக்கூடியது இதை உணர்ந்தவர்களே.இதன் உன்னதம் அறிவார்கள்..

   மிக்க நன்றி சகோ தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி

   Delete