Saturday, April 28, 2012

பர்தா என்ன சாதிக்கவில்லை???

இது சகோ.ரஜினின், பதிவுக்கு எதிர் பதிவு இல்லை. துணைப்பதிவு என்று வைத்துக் கொள்ளுங்களேன். 

போன பதிவில் ஒரு சகோ, இப்படி கமெண்ட் எழுதியிருந்தார்.
 "அம்மைத்தழும்பை ஃபேரன் லவ்லி பூசி மறைக்கிற வேலை நல்லா நட்ந்திருக்கு....வாழ்த்துக்கள்....... "

எனக்கும் தற்புகழ்ச்சிக்கும் ரொம்ப தூரம் என்றாலும், சுய சொறிதல் மூலம் அதை வெளிக்கொணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் அந்த கமெண்ட் பார்த்த பின் வந்துவிட்டது. வேற வழியே இல்லாததால் கொஞ்சமேனும் தம்பட்டம் அடிக்க வேண்டிய நிலை.

இங்கே இருக்கும் முஸ்லிம், முஸ்லிமல்லாத அத்தனை சகோக்களையும் பார்த்து நான் கேட்கிறேன், இந்தப் பதிவின் கடைசியில், இஸ்லாமிய பெண்ணாக இருந்ததால் என்ன விதத்தில் என் வாழ்க்கை குறைந்து விட்டதென்று தெரியப்படுத்தவும்.எங்கள் வீட்டில் 3 பிள்ளைகள். இரண்டு சகோதரர்களும் நானும். மூவரில் யாருக்கும் பாரபட்சம் பார்த்ததில்லை எங்கள் பெற்றோர். எனினும் என் தந்தைக்கு, எல்லா தந்தைகளையும் போல மகளான என் மீது பாசம் ஜாஸ்திதான்.  அதனால் இஸ்லாத்தை விட்டுவிட்டாரா? இஸ்லாமில்லாமல் எங்களை ஒதுக்கி வைத்தாரா??? பள்ளிப்படிப்பில் சிறந்த படிப்பாளி என்று வெள்ளி மெடல் வாங்குவதற்கு நான் கஷ்டப்பட்டேனோ இல்லையோ, என் தந்தை மிகவுமே கஷ்டப்பட்டார். பெண்பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்றோ, வீட்டு வேலை கற்றுக்கொள் என்றோ பெற்றோர் இருவருமே ஒதுக்க வில்லை.

ஒன்று முதல் 5 வரை தமிழ் மீடியத்திலேயே படித்தாலும் 6வதை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்க வேண்டுமென்று அவ‌ர் விரும்பியதால் 5அம் வகுப்பின் முழுப்பரீட்சை லீவ் முழுவதும் என்னை ஆங்கிலம் கற்க ஒரு ஹிந்து வக்கீலின் வீட்டிலேயே விட்டுவிட்டார். அப்பொழுது கஷ்டமாக இருந்தது, இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறேன். அந்த வக்கீல் சாரும் அவரின் அண்ணன் பெண்ணையும் என்னையும் ஒன்றாகவே நினைத்தார். நான் முஸ்லிம் என்பதால் தனி சலுகையோ, தனி கண்டிப்போ கிடையாது. அவளுக்கு பழனிப்பிரம்பில் ஒன்று போட்டால் எனக்கும் அதே பிரம்பில் கிடைக்கும். கணக்கு சரியாக வரவில்லை என்றால் பாலில்லாத கடுங்காபி இருவருக்குமே உண்டு...!!!!

10வது எக்ஸாம் முடித்ததுமே என் தாய் என்னை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்றுதான் ஆசைப்பட்டார்கள். ஆனால் என் தந்தையோ கல்லூரிப்படிப்பு படிக்க வைத்தே தீருவேன் என்று நின்றார். என்னுடன் உடுமலையில் பள்ளிப்படிப்பை முடித்த ஒரு சிலரும் நானும் மட்டுமே கல்லூரி வரை படித்தோம். 10வது முடித்த பின் நிறைய தோழிகளை எங்கேயும் பார்க்க இயலாமலே போயிற்று. நான் பர்தா போட்டு வீட்டில் முடங்கியதால் அல்ல, அவர்களின் வீட்டில் கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று டீச்சர் படிப்பு அல்லது வீட்டிலிருந்தே படிப்பு என்று மாற்றிவிட்டதால். நான் படிப்பதை என் பெற்றோரோ, உற்றாரோ, தாத்தா பாட்டியோ யாரும் கண்டித்ததில்லை.

மற்ற வீட்டில் எப்படியோ, என்வீட்டில் ஒவ்வொரு உறவினரும் என்னை ஒவ்வொரு பணியில் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டனர். அதற்கான புத்தகங்களும் எனக்கு அன்பளிப்பாய் வரும். வக்கீலாக, டாக்டராக, எஞ்சினீயராக என... என் பெரிய மாமா அவர் பெண்ணுக்கு கூட அவ்வளவு என்கரேஜ்மென்ட் செய்திருக்க மாட்டார், என்னை எஞ்சினீயர் ஆக்குவது 100% அவர் ஆசையே. (கவனமாக படியுங்கள். இந்த ஸ்டேஜ் வரை ஒருத்தர் கூட முக்காடு போட்டுக்கொண்டு அது முடியுமா, நம் முஸ்லிம் பெண்ணை அவ்வளவு படிக்க, அவ்வளவு தூரம் அனுப்ப முடியுமா என கூறவில்லை. ) இத்தனைக்கும் நான் பிறந்து வளர்ந்தது கோவை என்றாலும், படித்ததெல்லாம் திருப்பூர், தஞ்சை, பொள்ளாச்சி, உடுமலை, இராமனாதபுரம் என பல்வேறு இடங்களில். இத்தனை தூரம் அனுப்பி வைக்கிறாயே, அதுவும் பெண்ணை, என்று யாரேனும் கேட்டால் என் தந்தை சொல்வார், வெளியிடங்களுக்கு போய் தனியாக பழகினால்தான் அவளுக்கு உலகத்தைப் பற்றிய ஞானம் வரும், தனியே நிற்கும் துணிச்சல் இருக்கும் என.

பாலிடெக்னிக்கில் படிக்கும்போது என்.சி.சியில் அந்த யூனிட்டின் லீடர் பதவி எனது. அவகாசமே தராமல் இரண்டு நாளில் நாக்பூருக்கு போக வேண்டும், டெல்லி போக வேண்டும் என்பார்கள். போவதற்கு முன் பணம் கேட்டு ஒரு போஸ்ட்கார்டு போட மட்டுமே நேரம் இருக்கும் என்னிடம். தந்தையோ தாயோ அதெல்லாம் வேண்டாம் என ஒரு தடவை, ஒரே ஒரு தடவை கூட சொன்னதில்லை. என் அம்மாவின் கவலையெல்லாம் இதைப் பற்றி இராது. பெரியாரின் வழி வந்த பாலிடெக்னிக் என்பதால் ரமதானில் சஹரே செய்யாமல், தண்ணீர் மட்டும் அருந்தி நோன்பு வைப்பதையும், ஹாஸ்டலில் ஹலால் ஹராம் குழப்பங்களால் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதும்தான் அவர்களின் பெரிய்ய்ய்ய்ய்ய கவலை. :))

பொறியியற் கல்வி படிக்கையில் வாழ்க்கையில் அதுவரை நினைக்காத அளவில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் என்.எஸ்.எஸ் சார்பாக அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு. தமிழ்நாட்டிலிருந்து 5 பேர் மட்டுமே. 2 ஆண், 3 பெண், அதிலும் என்னை லீடராக போட்டிருந்தனர். ஃபார்ம் எல்லாம் பூர்த்தி செய்து அனுப்பிய பின், அம்மா அப்பாவிற்கு து'ஆ செய்யுங்கள் என ஃபோன் செய்துதான் செய்து சொல்கிறேன். என் கல்லூரியும் இஸ்லாமிய மேனேஜ்மென்ட் தான். யாரும் இதை எதிர்க்கவில்லை, மாறாக என்னை விட அவர்கள் மகிழ்ச்சியானார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.   

அதன் பின்னும் மாநில அளவில் அரசின் விருதுகள் வாங்கியபோதும் அதே இஸ்லாம்தான், அதே முக்காடிட்ட முஸ்லிம்பெண்தான்.....

எங்கள் கல்லூரி படிப்பு முடிந்ததும் பன்னாட்டுக் கம்பெனியில் எங்கள் பேட்சில் முதன் முதலில் வேலை பெற்றிட்டவளும், அடியேனே.... பெரிய நிறுவனம் ஆயிற்றே... முக்காடிட்டு போனால் இன்டர்வியூ செய்வார்களா? வேலை கிடைக்குமா என்று நானும் யோசிக்கவில்லை, அதற்கென என்னை சென்னை வரை தனியாக அனுப்பி வைத்த பெற்றோரும் யோசிக்கவில்லை. இறைவன் நாடியதை மட்டுமே எதிர்பார்த்தோம். அல்ஹம்துலில்லாஹ், பர்தாவை துளி கூட சட்டை செய்யாமல் அறிவுக்கு மதிப்பளித்து எனக்கு அந்த வேலை கிடைத்தது அல்லாஹ்வின் அருளன்றி வேறென்ன?? என்னுடன் மேக்கப்பிட்டு, அழகிய உடலை தெரியப்படுத்தும் இன்னும் அழகிய உடைகளை அணிந்த பெண்களும் வந்திருந்தார்கள், கோவையிலிருந்து, அட்டெண்ட் செய்த ஏழு பேரில் நான் மட்டுமே தேர்வாயிருந்தேன் (ஒரு வேளை பர்தா போட்டதால கிடைச்சிருச்சோ??)

அத்துடன் நிற்கவில்லை என் கற்கும் ஆர்வமும், என் தந்தையின் ஆதரவும், கோவை நகரில் பர்தா போட்டு ஸ்ப்லென்டர் ஓட்டிய ஒரே பெண் நானாகத்தான் இருக்க முடியும். அதுவும் எனக்கு சங்கோஜமாக இருந்ததால் நிகாப் போட்டு ஓட்டுவேன்...!!!!! இதனால் ஸ்ப்லென்டர் வர மாட்டேன் என்று சொல்லி விட்டதா அல்லது லைசன்ஸ் தரமாட்டேன் என்றுவிட்டார்களா?? நாகப்பட்டினத்தில் சுனாமி தாக்கிய போதும் தனியே என்னவருடன் போய் நிவாரண பணிகளை செய்திருக்கிறேன். அதே பர்தாவுடன், கம்யூனிச தோழிகளுடன் இணைந்து..... பர்தாவை கண்டதும் மீண்டும் சுனாமி வரவில்லையே??

இதில் எந்த இடத்தில் பர்தா பிரச்சினையாகிவிட்டது? என் புகுந்த வீட்டில் உள்ளோர் அனைவரும் இன்றும் பிராமணர்தான். அவர்களும் இது வரை பர்தாவை பிரச்சினையாக்கியதில்லை. இருந்த போதிலும் என் கணவர் அழகாய் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.

இன்றும் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்திலேயே பணி புரிகிறேன். ஆம், ஒரு முடி தெரியாத வண்ணம் போடப்பட்ட பர்தாவுடன்தான் பணிபுரிகிறேன். என்னுடைய குழுவில் இருப்பவர்கள் முதற்கொண்டு மேனேஜர் வரை யாரும் இது வரை இதை பிரச்சினையாக சொன்னதில்லை. எனக்கு தெரிந்து டிரெஸ் விஷயத்தில் மிக மிக கடினமாக இருப்பது எங்கள் அலுவலகமே. கோடைக்காலம் வந்தாலும் கால் தெரியும் ஸ்லிப்பரோ, முழங்காலுக்கு மேலான ஆடையோ, தோள்பட்டை இல்லாத உடையோ யாருக்கும் அனுமதியில்லை. (ஜீன்ஸ் கூட ஏதாவது ஒரு சமயத்தில் மெயில் அனுப்பி வைப்பார்கள். இன்ன காரணத்தை முன்னிட்டு இந்த தேதி ஜீன்ஸ் அணியலாம் என...!!!!) இப்படி இந்த எதிலும் பர்தா ஒரு பிரச்சினையாக யாரும் எடுக்காத நிலையில், அன்பர். திரு.தியாகராஜனுக்கு மட்டும் ஏன் ஃபேர் அன்ட் லவ்லி போட்ட மாதிரி ஆகிறது என்று புரியவில்லை.... ஒரு வேளை இப்படி இருந்தால் இன்னும் பலரை ரசிக்க முடிவதில்லையே, மனக்கோட்டையில் டூயட் பாட முடிவதில்லையே என்று இருக்குமோ??

இங்கே, அமெரிக்காவில் வேலைக்கான விசா கிடைத்ததும் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் கன்சல்டன்ஸி அனுப்புமே என்று கவலையுறும்போதும் என் கணவர் சொன்னது, என் அப்பாவின் வாக்கையே. “தனியாக ஒரு ஆறு மாதமாவது வேலை செய்தால்தான் அமெரிக்க நிறுவனங்களின் கல்ச்சர் புரியும், தனியே எங்கும் செல்ல, எதிர்கொள்ள துணிச்சல் கிடைக்கும்” என. ஆக இதுவரை எனக்கு இது வித்தியாசமானதாகவோ, பிரச்சினையாகவோ தெரியவில்லை. இது தடையாக தெரிபவர்களுக்கு அடி மனதில் ஆசைகள் வேறு விதம் என்றுதான் புரிகிறது.

இப்பொழுதும் இதே பர்தாவுடன் என் கணவரின் தாவாஹ் வேலைகளுக்கும் மஸ்ஜித் வேலைகளுக்கும் உதவுகிறேன். என் பிள்ளைகளின் வளர்ச்சியை மற்றவர் மெச்சும் வகையில்தான் வைத்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ். இதெல்லாம் பர்தா இல்லாமலும் செய்யலாமே என்று கேட்டால் என் பதில் ஒன்றே ஒன்றுதான். தன்னைப் படைத்தவனிடம் நேர்மையில்லாத எவரும் மற்றெவருக்கும் நேர்மையாய் இருக்க முடியாது. என் நேர்மை, என்னைப் படைத்த இறைவனின் வாக்குகளை மதிப்பதில் உள்ளது. அப்ப உங்களுக்கு???


55 comments:

 1. AL-HAMTHULILLAH YOU & YOUR FAMILY ARE ROLEMODEL
  GREAAAAAAAAD

  ReplyDelete
 2. கஷ்டம் என்னன்னு நீங்க தான் சொல்லனும் நான் என்ன சொல்ல..... நீங்க ஸ்ப்லெண்டர் ஒட்டுனீங்கன்ன எல்லா பொண்ணுகளாலயும் ஓட்டமுடியுமா? அதே கேள்வியை உங்களது எல்லா ஸ்டேட்மெண்ட்களுக்கும் கேட்டுக்கொள்ளவும்


  இது எப்படி இருக்குதுர்ரா விஜய் மல்லய்யா வந்து என்னிடம் சொந்தமாக ஒரு கிரிக்கெட் டீம் இருக்குது அதனால எல்லா இந்தியனுக்கும் இருக்கும் அப்படீன்னு சொல்றமாதிரி இருக்கு

  ReplyDelete
 3. //ஒரு வேளை இப்படி இருந்தால் இன்னும் பலரை ரசிக்க முடிவதில்லையே, மனக்கோட்டையில் டூயட் பாட முடிவதில்லையே என்று இருக்குமோ?? //

  ஹா..ஹா.. இதுதான் மெயின் கான்செப்ட் :-)). நச் கேள்வி :-)

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்,

  சகோதரி அன்னு,

  மாஷா அல்லாஹ்..

  தாங்களும் தங்கள் கணவரும் தாவாஹ் பணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மாஷா அல்லாஹ்

  சுயதம்பட்டமா? இதுதான் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை!

  என்னமோ ஹிஜாப் ஒன்றே சுதந்திரத்துக்கு முக்கியமான அடித்தளம் போல் ஊடகம் மக்கள் மனதில் ஊட்டிய விஷத்தால் ஹிஜாப்பின் மேல் வெறுப்பு வந்துவிட்டதே அன்றி வேறில்லை

  அருமை

  வழக்கம் போல உங்க ஸ்பெஷல் கமென்ஸ் அங்கங்கே போட்டது ரசிக்க வச்சது...சுனாமி திரும்பவந்துச்சா என்ன? ஹா..ஹா..ஹா...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் மகத்தான வாழ்வையும் நற்கூலியும் கொடுக்க பிரார்த்திக்கிறேன்...

  ReplyDelete
 6. //சுய சொறிதல் மூலம் அதை வெளிக்கொணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் அந்த கமெண்ட் பார்த்த பின் வந்துவிட்டது.// Punch punch :)

  ReplyDelete
 7. @சகோ மௌனகுரு

  //இது எப்படி இருக்குதுர்ரா விஜய் மல்லய்யா வந்து என்னிடம் சொந்தமாக ஒரு கிரிக்கெட் டீம் இருக்குது அதனால எல்லா இந்தியனுக்கும் இருக்கும் அப்படீன்னு சொல்றமாதிரி இருக்கு //


  நீங்க கேக்குறதும் அப்படிதான் இருக்கு :-)

  உங்க கமென்டை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும் :-)

  நீ ஒரு ஆள் சொன்னா மட்டும் போதாது. ஒவ்வொரு முஸ்லீம் பொண்ணும் சொன்னாதான் நம்புவேன்னு சொல்ற மாதிரி இருக்கு. உங்க கமென்ட்க்கும் மல்லையே பேச்சுக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை :)

  ReplyDelete
 8. Sister, wonderful narration with good amount of examples from personal front. may Allah accept the deeds of you and your family and make things easy for you in life..

  ReplyDelete
 9. //இது எப்படி இருக்குதுர்ரா விஜய் மல்லய்யா வந்து என்னிடம் சொந்தமாக ஒரு கிரிக்கெட் டீம் இருக்குது அதனால எல்லா இந்தியனுக்கும் இருக்கும் அப்படீன்னு சொல்றமாதிரி இருக்கு //

  எதுவும் பாயிண்ட் கெடைக்கலன்னா இப்டி கூடவா பேசுவாங்க :)

  ReplyDelete
 10. சலாம் சகோ அன்னு!

  //இப்பொழுதும் இதே பர்தாவுடன் என் கணவரின் தாவாஹ் வேலைகளுக்கும் மஸ்ஜித் வேலைகளுக்கும் உதவுகிறேன். என் பிள்ளைகளின் வளர்ச்சியை மற்றவர் மெச்சும் வகையில்தான் வைத்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ். இதெல்லாம் பர்தா இல்லாமலும் செய்யலாமே என்று கேட்டால் என் பதில் ஒன்றே ஒன்றுதான். தன்னைப் படைத்தவனிடம் நேர்மையில்லாத எவரும் மற்றெவருக்கும் நேர்மையாய் இருக்க முடியாது. என் நேர்மை, என்னைப் படைத்த இறைவனின் வாக்குகளை மதிப்பதில் உள்ளது. அப்ப உங்களுக்கு???//

  மாசா அல்லாஹ்! நெகிழ வைக்கும் பதிவு. உங்கள் கணவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பது எனக்கு புதிய தகவல். எனது சலாமையும் தெரிவியுங்கள்.

  ReplyDelete
 11. சலாம் அன்னு! வாழ்வின் எதார்த்ததில் நீங்கள் சாதித்ததைப் போன்று ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணும் ஒவ்வொரு வகையில் சாதிக்கவே செய்கின்றனர். அவை வெளி உலகுக்கு தெரியாததுதான் அதிகம். அருமையான பதிவு! 'சுய தம்பட்டம் அடிக்க வேண்டிய நிலை' என்று ஃபீல் பண்ணாதீங்கபா :)

  ReplyDelete
 12. @ மௌனகுரு

  //கஷ்டம் என்னன்னு நீங்க தான் சொல்லனும் நான் என்ன சொல்ல...//

  சகோ, ஃபர்தாவினால் கஷ்டம்னு ஒண்ணு எங்களுக்கு இருந்தாதானே அதை சொல்லணும் நாங்க? எங்களுக்கு இல்லாத கஷ்டத்தை இருப்பதாக நீங்களே கற்பனை செய்துக் கொண்டால் அது உங்களின் அறியாமையாக இருக்கலாம்.

  பூனை கண்ணை மூடிக்கிட்டு 'உலகமே இருண்டுவிட்டது'ன்னு சொன்னா அது பூனையின் தவறு சகோ. அறிவுக்கண் திறந்து பார்த்தால் ஃபர்தாவின் அருமை புரியும் :) இப்போதைக்கு எங்களுக்குதான் அதில் ஒளிரும் சுதந்திரமும் தெரியும் :)

  ReplyDelete
 13. இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் கதை நல்லா இருக்கு. உண்மையா இருந்தால் மகிழ்ச்சி பாராட்டுக்கள் !

  ReplyDelete
 14. ஒரு முஸ்லிம் பெண்ணின் கற்றலிற்கான தேடல், உழைப்பு, முன்னேற்றம் என்பன ஒ.கே. பர்தாவை விட்டுக்கொடுக்காமல் சமூகத்தை எதிர்கொண்ட துணிச்சலும் ஓ.கே. தான்.

  ஆனால் தனியாக செல்வதும், அலைவதும் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவும் என கூறும் தத்துவம் தவறானது. இதே பர்தாவை போட சொன்ன இஸ்லாம் தான் அஜ்னம், மஹ்ரம் எனும் சட்டங்களையும் சொல்கிறது. ஆகுமான ஆண் துணையுடனேயே பிரயாணிக்க முடியும், தரிக்க தங்க முடியும். அவ்வாறல்லாமல் தனியாக செல்வதும், தங்குவதும் ஹராம். இந்த விடயத்தில் அவதானம் தேவை. மற்றப்படி எல்லாமே ஒ.கே.

  நல்ல ஒரு தத்துவம் சொன்னீர்கள் “தன்னைப் படைத்தவனிடம் நேர்மையில்லாத எவரும் மற்றெவருக்கும் நேர்மையாய் இருக்க முடியாது”. கோல்டன் வார்த்தைகள் சகோதரியே. உங்கள் இம்மை மறுமை வாழ்க்கைக்கு இறைவனிடம் பிரார்த்தனையுடன் விடைபெறுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  விவரிக்க வார்த்தையில்லை.

  அல்லாஹ் உங்களளுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் புரிய போதுமானவன்.

  தாங்கள் மற்றும் தங்கள் கணவரின் தாவாஹ் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  உங்கள் சகோதரன்

  ReplyDelete
 16. Salam sis... Annu!
  Masha allah good post sis keep it up!

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும் அன்னு.

  மஷாஅல்லாஹ் சகோதரி.
  அருமையான பகிர்தல்.யாரு சொன்னா இது சுயதம்பட்டம் என்று..
  உங்கள் வாழ்வில் நடந்த சில விடயங்கள்.இன்ஷா அல்லாஹ் எனது எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாக இருக்கும்.உதாரணமாக நேர்முக தேர்வு மற்றும் பணியாற்றும் இடம்.அப்புறம் முக்கியமாக திருமணத்திற்கு பின்னரான சில நடைமுறைகள.

  அழுத்தமாக ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் கேட்கலாம் பர்தா என்ன சாதிக்கவில்லை என்று...

  உங்கள் சகோதரி
  பஸ்மின் கபீர்

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்!

  மாஷா அல்லாஹ்! இது தம்பட்டம் இல்லை, பெண்களிற்கு ஒரு பூஸ்ட்!

  இஸ்லாம் பெண்களிற்கு கல்வி கற்கும் உரிமையை வழங்கியிருந்ததால் எவ்வித சலனமும் இன்றி முஸ்லிம் பெண்களால் இந்தளவு முன்னேற முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

  உதாரணமாக தந்தை அனுமதித்தால் மட்டுமே ஊர் சுற்றிப் பார்க்கலாம். எங்கள் இறைவனே உரிமை தந்து விட்டதால் நாங்கள் உலகமே சுற்றி பார்த்திடுவோம்ல

  "பர்தா போடாததால் மட்டும் பெண்கள் ஸ்பெஷலாக எதனை சாதித்து விட்டார்கள்?" பர்தா எதிர்ப்பு வாதிகள் பட்டியலிட்டால் நாங்களும் அறிந்து கொள்வோமே...

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  பெண்களுக்கு பர்தா தடையில்லை என்பதை தங்கள் அனுபவம் தெளிவாகக் காட்டுகிறது.

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..

  மாஷா அல்லாஹ்..அருமையான பதிவு...முன்னுதாரணமான வாழ்க்கைக்குறிப்பு, கோர்வையான எழுத்து....
  ஒரு சிறந்த பதிவை படித்த திருப்தியும்,உங்களைபற்றிய புதிய செய்திகளையும் அறியத்தந்ததற்கு நன்றி..சகோ..

  அல்லாஹ் உங்களது பணியை இலகுவாக்கப் போதுமானவன்..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 21. பர்தா போடாததால் மட்டும் பெண்கள் ஸ்பெஷலாக எதனை சாதித்து விட்டார்கள்?" பர்தா எதிர்ப்பு வாதிகள் பட்டியலிட்டால் நாங்களும் அறிந்து கொள்வோமே...//

  சகோ அஷ்ஃபாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.... யாராவது சொல்லுங்களேம்ப்பா..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 22. என் நேர்மை, என்னைப் படைத்த இறைவனின் வாக்குகளை மதிப்பதில் உள்ளது. /// உண்மை!

  ReplyDelete
 23. ஸலாம்

  இந்த பதிவுக்கு பின்னூட்டம் இட்டு இருக்கும் எல்லா முஸ்லிம்களும் நேர்மறை கருத்தை தான் சொல்லி இருக்கிறார்கள் [ஒருவரை தவிர - ABU MASLAMA]

  அவரின் கருத்து இதோ

  //ஆனால் தனியாக செல்வதும், அலைவதும் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவும் என கூறும் தத்துவம் தவறானது. இதே பர்தாவை போட சொன்ன இஸ்லாம் தான் அஜ்னம், மஹ்ரம் எனும் சட்டங்களையும் சொல்கிறது. ஆகுமான ஆண் துணையுடனேயே பிரயாணிக்க முடியும், தரிக்க தங்க முடியும். அவ்வாறல்லாமல் தனியாக செல்வதும், தங்குவதும் ஹராம். இந்த விடயத்தில் அவதானம் தேவை.//

  இவரின் கருத்துக்கு இஸ்லாமிய பெண்களாகிய நீங்கள் கூறும் பதில் என்ன ??? உங்கள் பதிலை அறிய எனக்கு மிகவும் ஆவல் ..

  இது மேலும் என்னுடைய இஸ்லாமிய அறிவை வளர்க்கும் என நினைக்கிறன் .. இன்ஷா அல்லாஹ் ..

  மற்றவை உங்கள் பதிலுக்க்கு பின் ...

  ReplyDelete
 24. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  வேண்டுமென்றே சுயதம்பட்டம் அடிப்பதுதான் தவறேயொழிய பிறருக்கு புரியவைக்கவேண்டுமென்ற கட்டாயம் ஏற்படும்போது சுயதம்பட்டம் அடிப்பதில் தவறில்லை என்பது எனது கருத்து.கலக்குங்கள் சகோதரிகளே இனி மாற்று கருத்துடையவர்கள் மனதில் நல்ல‌ மாற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.அல்லாஹ்வே போதுமானவன்.

  ReplyDelete
 25. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி.... இஸ்லாம் பெண்களை அடிமைப்படுதவில்லை என்பதை உங்கள் வாழ்க்கை மூலமே அழகாக மிக தெளிவாக கூறி விட்டிர்கள்... வாழ்த்துக்கள்.... :)

  //ஒரு வேளை இப்படி இருந்தால் இன்னும் பலரை ரசிக்க முடிவதில்லையே, மனக்கோட்டையில் டூயட் பாட முடிவதில்லையே என்று இருக்குமோ?? // இதான் உண்மை ஹிஹிஹி அந்நிய பெண்ணை பார்த்து ரசிக்க முடியாமல் வயிறு எரிபவர்கள் தான் பெண்ணடிமைத்தனம் ஆணாதிக்கம் என்று விதவிதமா கிளப்பி விட்டு குழப்பத்த உண்டாக்குறாங்க...!!!!

  ReplyDelete
 26. //கஷ்டம் என்னன்னு நீங்க தான் சொல்லனும் நான் என்ன சொல்ல.../

  பார்க்கிற உங்களுக்குத்தான் ஏதும் தெரியலேன்னு கஸ்டம் இது புரிய கொஞ்சம் புத்தி வேணும். இஸ்லாம் எது சொன்னாலும் எது செய்தலும் அதில் கண்டிப்பாக மனிதனுக்கு நன்மை தவிர வேறு இல்ல. இது எல்லாம் படைத்த இறைவனாலும் அண்ணல நபி அவர்கலலும் வகுத்த ஒரு நிறைவான மார்க்கம்

  please be understand .. ...

  ReplyDelete
 27. பாராட்டுக்கள் சகோதரி

  ReplyDelete
 28. @ரிப்னாஸ்,
  அஸ் ஸலாமு அலைக்கும் சகோ,
  உங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக நன்றி :)

  @மௌனகுரு,
  சகோ, இந்த பதிவு இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து மிக கஷ்டப்படுகிறார்கள், அவர்களால் முன்னேற முடிவதில்லை என்னும் வெற்று விளம்பரத்துக்கு பதில். உங்க முதல் வாக்கியப்படி இந்த பதிவுல கஷ்டம் தெரியவில்லைதானே? அதேதான் இஸ்லாமிய பெண்களாகிய நாங்களும் சொல்கிறோம்.... எங்களுக்கு பர்தாவினால் கஷ்டமோ நஷ்டமோ இல்லை, பிறர் ரசிக்கும்படி உடலை எப்படி காட்டுவது என்கிற பிரச்சினையிலிருந்து விலகி, வாழ்வில் தேவையான முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிகிறது.

  விஜய் மல்லையா மட்டும் இல்லை... எல்லா மதங்களிலும் இனங்களிலும் வெற்றி பெறுபவர்களும் இருக்கின்றனர், தோல்வியுறுபவர்களும் இருக்கின்றனர், வெறுமனே வாழ்ந்து இறப்பவர்களும் இருக்கின்றனர். அதை விட்டுவிட்டு இஸ்லாத்தில் மட்டும் சந்தோஷமாக, சுதந்திரமாக வாழ்பவர்கள் எவருமே இல்லை என்னும் பொய்யை உடைக்கவே இந்த பதிவு. நன்றி :)

  @ஜெய்லானி பாய்,
  அஸ் ஸலாமு அலைக்கும் பாய்,
  கரெக்ட்டாக கண்டுபிடித்து விட்டீர்கள் பாயிண்ட்டை... புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி :)
  நன்றி :)

  @ஆஷிக்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  துஆவிற்கு மிக மிக நன்றி :)

  ReplyDelete
 29. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


  //என் நேர்மை, என்னைப் படைத்த இறைவனின் வாக்குகளை மதிப்பதில் உள்ளது. அப்ப உங்களுக்கு???//

  உண்மையான வரிகள்!.

  ஹிஜாப் அடிமைச் சின்னம் அல்ல, அது பாதுகாப்பு என்று உலகிற்கு பறைசாற்றும் பதிவுகளுக்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக...

  தாங்களின் அழைப்புப் பணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

  ReplyDelete
 30. @ஆமினா...,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு,
  கரெக்ட். இதுதான் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை. என்னை மட்டும்தான் இப்படி வளர்க்கிறார்களோ என்னும் பிரமை எனக்கு எப்பொழுதும் ஏற்பட்டதில்லை. இங்கே பதிவுலகிற்கு வந்தபின்தான் எப்படி நம்மை மற்ற மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ், இதை தகர்க்க ஒரு சாம்பிளே போதும்....

  ஊடகத்தைப் பற்றிய உங்கள் வியூகமும் மிகச்சரியானது..!! கருத்துக்கும் து’ஆவிற்கும் மிக நன்றி :)

  @பீர் முஹம்மது பாய்,
  அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்,
  வருகைக்கும், பாராட்டுக்கும், து’ஆவிற்கும் மிக நன்றி :)

  @சுவனப்பிரியன் பாய்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  அல்ஹம்துலில்லாஹ்.
  உங்களின் ஸலாமையும் தெரிவிக்கிறேன். நன்றி :)

  @அஸ்மா,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  ஆமாம் அஸ்மா. என்னைப்போல், என்னைவிட அதிகம் சாதிப்பவர்களாய் எத்தனையோ சகோக்கள் உள்ளனர். ஆனால் எல்லாரையும் தினத்தந்தியில் முன் பக்கத்தில் ஃபோட்டோவுடன் பார்த்தால்தான் பலர் ஒத்துக்கொள்வார்கள் போல!!! பல ஊர்களில் வசிக்கும்போது மார்க்க நிகழ்ச்சி ஏதாவது ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கையில் அங்கிருக்கும் சகோதரிகளின் படிப்பறிவையும், மார்க்க அறிவையும் கண்டு வாய் பிளந்ததுண்டு.... ஆனால் இந்த பதிவுலகில் வந்தபின்னர்தான் மக்கள் நம்மை ஏதோ எலிமெண்டரி ஸ்கூலை தாண்டாத மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்களே என யோசிக்க வைக்கிறது. அதனால்தான் சுய தம்பட்டம்....அதனால்தான் சோகம்.... வேறு எதுவும் இல்லை... நன்றி :)

  ReplyDelete
 31. @கபிலன்,
  சகோ, உங்களின் லேட்டஸ்ட் பதிவில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லியுள்ளீர்கள். மற்ற இடங்களில் பார்த்ததை விட்டும் ஒரு கிராமப்பெண்ணின் வீட்டில் உண்மையான சந்தோஷத்தையும் மகிழ்ச்சியியையும் பார்த்ததாக எழுதியுள்ளீர்கள். அதேதான் இங்கேயும், எங்களின் வாழ்வை உற்று நோக்கினால்தான் அதிலுள்ள அழகும், அமைதியும் சந்தோஷமும் விளங்கும். அதை விட்டுவிட்டு நகர மனிதர்கள் போல எட்டி இருந்து பார்த்தால் கதையாகவே தோன்றும். உங்களின் அக அழகு, கமெண்ட்டிலேயே தெரிவதுபோல்தான் எனக்கு தெரிகிறது. அது அழகா அசிங்கமா அதையும் நீங்கதான் சொல்லனும்... நன்றி :)

  @அபூ மஸ்லமா சகோ,
  அஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்,
  பாராட்டுக்கு மிக நன்றி. :)

  //அலைவதும்// -- வார்த்தை தேவையற்றது, தவிர்த்திருக்கலாம்.
  “தனியே” என்னும் சொல் நான் உபயோகப்படுத்தியிருப்பது குடும்பத்தை விட்டு தனியே என்னும் பொருளில்தானே தவிர முழுக்க முழுக்க தனித்து விடப்பட்ட பொருளில் அல்ல. எங்கே மஹ்ரம் தேவைப்படுகிறதோ அங்கே என் சகோதரனோ அல்லது தந்தையோ அல்லது இஸ்லாம் அனுமத்திக்கும் உற்றாரோ இருந்திருக்கிறார்கள். தங்குவதும் பெண்கள் ஹாஸ்டல் அல்லது தகுந்த உறவினர் வீட்டிலேயே இருந்துள்ளது. இஸ்லாத்தை விட்டுவிடவில்லை என்றும், தன்னைப் படைத்தவனிடம் நேர்மை வேண்டும் என்றும் அதனால்தான் கூறினேன். மற்றபடி ஹராமான எல்லைக்கு அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் எங்களை போக விட்டதில்லை. நன்றி :)

  @குலாம் தம்பீ,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ,
  வருகைக்கும், வாழ்த்துக்கும் து’ஆவிற்கும் மிக மிக நன்றி :)

  ReplyDelete
 32. @ஜாஃபர் கான் பாய்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக மிக நன்றி பாய்.


  @பஸ்மின் கபீர்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  அல்ஹம்துலில்லாஹ், ஒருவரின் பயணம் இன்னொருவருக்கு உபயோகப்படும் என்பது நல்ல விஷயம்தானே சகோ, மிக்க மகிழ்ச்சி :)

  //அழுத்தமாக ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் கேட்கலாம் பர்தா என்ன சாதிக்கவில்லை என்று...//
  100% சரியாக சொன்னீர்கள். கல்பனா சாவ்லாவைப் பற்றி படித்துதான் ஹிந்துப் பெண்களை பற்றி புரிந்து கொள்வார்கள என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை. பத்திரிக்கையில் வந்து, ஃபோட்டோவுடன் வருடா வருடம் போஸ் குடுத்தால்தான் நம் சகோக்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள் என்றால் அது தேவையில்லை. சத்தியம் தாமத்திதே வந்தாலும் அது வென்றே தீரும். அசத்தியம் நிச்சயம் அழிந்து போகும். அல்ஹம்துலில்லாஹ்.
  நன்றி :)

  @அஷ்ஃபா மௌலானா,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு,
  சரியாக சொன்னீர்கள் சகோ. எங்கள் கல்லூரியில் விஷேஷ நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இரண்டு தோள்களிலும் சேர்த்து பின் செய்த துப்பட்டா கொண்ட சுடிதாரை தவிர வேறெதுவும் போட அனுமதியில்லை. அதற்கு காரணம் கேட்டபோது எங்களின் பிரின்சி அருமையான ஒரு விளக்கம் தந்தார். “வேற டிரெஸ் போட்டீங்கன்னா உங்க கவனம் எல்லா எதிலிருக்கும்??? அதை சரி செய்வதிலும் மடிப்பு கலையாமல் பார்த்துக்கொள்வதிலும், பசங்க கவனமும் எதிலிருக்கும்????????????? அதனால இந்த உடையே சிறந்தது” என்று. அவரின் வார்த்தைகளை இன்றும் வியக்கிறேன். பர்தா போட்ட காரணத்தினாலேயே தேவை எது, வெற்றியை அடைவது எப்படி என்று ஃபோகஸ் செய்வது எளிதாகிறது. அல்ஹம்துலில்லாஹ் :)
  //"பர்தா போடாததால் மட்டும் பெண்கள் ஸ்பெஷலாக எதனை சாதித்து விட்டார்கள்?" பர்தா எதிர்ப்பு வாதிகள் பட்டியலிட்டால் நாங்களும் அறிந்து கொள்வோமே... //
  ஹ ஹ ஹா.... செம கேள்வி... அப்படிப் போடுங்க.... நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :)
  நன்றி :)

  @அப்துல் பாஸித்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  சரியான கருத்தை புரிந்துள்ளீர்கள்.
  வருகைக்கு மிக நன்றி :)

  @ரஜின் பாய்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  வருகைக்கும் வாழ்த்துக்கும், து’ஆவிற்கும் மிக மிக நன்றி :)

  @நிலவன்பன்,
  ஆம் சகோ....எந்த மதம்/இனம்/சமூகத்தை சேர்ந்தவராயினும் அவரவர் இறைவாக்குகளை மதிப்பதில்தான் வெற்றியே.
  நன்றி :)

  @வழிப்போக்கன்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம்.
  சகோ.அபூ மஸ்லமாவின் கருத்துக்கு நான் பதில் கூறி விட்டேன். என் பதிவில் ‘தனியே’ என்னும் வார்த்தை அந்த எக்ஸ்ட்ரீம் பொருளை தருமாறு அமைந்ததில் வருத்தமே. அந்த வார்த்தையை மாற்ற முடியுமானால் கண்டிப்பாக மாற்றிக்கொள்வேன். மற்றபடி அவருக்கு தந்த பதிலை மேலே காணலாம். நன்றி :)

  @முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் பாய்,
  வ அலைக்கும் அஸ்ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,
  அல்ஹம்துலில்லாஹ், தங்களின் கருத்துக்கும், வருகைக்கும் :)
  நன்றி :)

  @ஷர்மிளா ஹமீத்,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹ்,

  நான் மட்டுமில்லை சகோ, ஆயிஷா (ரலி) அவர்களின் வாழ்க்கையிலிருந்தும் இன்னும் எண்ணற்ற முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்துமே வெற்றிகளை எளிதாய் கண்டுபிடிக்க முடியும். இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் பர்தா போட்ட பெண்கள் அடுப்படியில் பழியாக கிடக்கிறார்கள் என்பவர்களுக்கு....இதோ ஒரு சோற்றுப்பத சாம்பிள். இன்ஷா அல்லாஹ் திரை விலகி தெளிவு வந்தாலே போதும்.
  நன்றி :)

  @ஃபைஜல் பாய்,
  அஸ் ஸலாமு அலைக்கும்,
  மெய்ப்பொருள் காண்பதறிவு.... என்பதை பலர் எளிதாக மறந்து விடுகிறார்கள் இல்லையா..... கருத்துக்கு மிக நன்றி :)

  @ஜாஃபர் அலி பாய்,
  அஸ் ஸலாமு அலைக்கும்,,
  பாராட்டுக்களுக்கு மிக நன்றி :)

  ReplyDelete
 33. ////ஆனால் தனியாக செல்வதும், அலைவதும் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவும் என கூறும் தத்துவம் தவறானது. இதே பர்தாவை போட சொன்ன இஸ்லாம் தான் அஜ்னம், மஹ்ரம் எனும் சட்டங்களையும் சொல்கிறது. ஆகுமான ஆண் துணையுடனேயே பிரயாணிக்க முடியும், தரிக்க தங்க முடியும். அவ்வாறல்லாமல் தனியாக செல்வதும், தங்குவதும் ஹராம். இந்த விடயத்தில் அவதானம் தேவை.//

  இவரின் கருத்துக்கு இஸ்லாமிய பெண்களாகிய நீங்கள் கூறும் பதில் என்ன ??? உங்கள் பதிலை அறிய எனக்கு மிகவும் ஆவல் .. ///
  ''தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கின்ற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்ய மாட்டார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 2998).

  இது ஆண், பெண் என இரு பாலருக்கும் பொதுவான அறிவிப்பு. இரவில் தனியாகப் பயணம் செய்வதில் கொலை, கொள்ளை போன்ற அபாயங்களைச் சந்திக்கவும், இருட்டு போன்ற சிரமங்களையும் மேற்கொள்ளவும் நேரும். எனவே தனிமைப் பயணம் சிரமங்கள் அடங்கிய ஆபத்தானது என்பதை மேற்கண்ட அறிவிப்பு உணர்த்துகின்றது.

  அதுவே தனிமையில் செல்லும் பெண்ணென்றால் ஒரு படி மேலே, கயவர்கள் அவளின் பெண்மையை சூறையாடும் ஆபத்திற்கான சாத்தியம் உண்டு. எனவே, உலக வாழ்க்கையில் பெண்கள் சுதந்திரமாக இயங்குவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஒரு பெண் தனியாக வாகனத்தை ஓட்டிச் செல்லலாம். அந்தத் தனிமை தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதை அந்தப் பெண் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தீமையைத் தாமாகத் தேடிக்கொள்ளும் தன்மை, பெண்கள் தனிமையை ஏற்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இருக்கிறது. மற்றபடி ஆண்களுக்கு நிகரான பெண்களின் சுதந்திரத்தில் இஸ்லாம் எவ்வித குறைபாடும் வைத்துவிடவில்லை.

  பெண்களின் மீதான தனிப்பட்ட அக்கறையால் அபாயத்தைச் சந்திக்கும் அளவுக்கான தனிமையைத் தவிர்த்துக்கொள்ளும்படி இஸ்லாம் அறிவுரை கூறுகிறது... இந்த விளக்கம் புரிந்திருக்கும் என நினைக்கிறன்.. திரு. வழிப்போக்கன் அவர்களே..!!!!

  ReplyDelete
 34. அஸ்ஸலாமு அலைக்கும்

  ஹிஜாப் அடிமை சின்னம் இல்லை அது முஸ்லிம் பெண்களாகிய நமக்கு பாதுகாப்பு சின்னம் ..இஸ்லாத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மனிதனின் கண்ணியத்தையும் சந்ததியையும் பாதுகாப்பது.ஹிஜாப் நம்மக்கு அல்லாஹ்வின் அருள் .உலகில் அனைத்து சட்டங்களும் எமக்கு இப்படி ஒரு பாதுகாப்பை வழங்க முடியாது ..அல்லாஹ்வுகே எல்லா புகழும்

  ReplyDelete
 35. ஒரு முஸ்லிமுக்கு இறையச்சம் மிக முக்கியம் அது தங்களிடம் மேலோங்கி காணப்படுவதால் அதுதான் தங்களின் வெற்றியின் ரகசியம். ஆனால் நீங்கள் செய்த செயல்கள், படிப்புகள் இறையச்சம் இல்லாமல் செய்திருந்தால் ஒரு முஸ்லிமான நிலையில் இந்த வெற்றியை அடைந்திருக்கவே முடியாது.

  ReplyDelete
 36. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..தன் சொந்த கதையையே எடுத்துக்காட்டாக சொன்ன விதம் அருமை சகோ..

  தன் சுயதம்பட்டம் அடுத்தவர்களுக்கு தெளிவை கொடுக்கும் என்றால் இதே போல நிறைய சுயதம்பட்டம் அடிக்கலாம் தப்பில்லை..:-))

  என் கணிப்பில் உண்மையில் பாராட்டபட வேண்டியவர்கள் உங்கள் பெற்றோர்..தன் பெண்ணை நல்ல இறையச்சம் உள்ள பெண்ணாகவும்,நல்ல கல்வி அறிவு உள்ள பெண்ணாகவும் உருவாக்கியதற்கு அவர்களின் பங்கு மிகுதியானது..

  இறை உங்களின் நற்செயல்களை இம்மை மறுமை இரண்டிலும் பொருந்தி கொள்ளட்டும்..ஆமின்..

  நல்லதொரு பதிவை கொடுத்ததற்கு நன்றி சகோ..:-))

  ReplyDelete
 37. மாஷா அல்லாஹ்.
  சிறப்பான பதிவு சகோதரி.
  சுயதம்பட்டமெல்லாம் இல்லை. சொல்லப்படவேண்டிய வாழ்வியல் உண்மைகள்.

  //தன்னைப் படைத்தவனிடம் நேர்மையில்லாத எவரும் மற்றெவருக்கும் நேர்மையாய் இருக்க முடியாது. // - மனதில் அழுத்தமாய் குறிக்கத்தக்கக் கருத்து

  ReplyDelete
 38. நிறைய விசயங்களை அள்ளிக்கொட்டியிருக்கிறீர்கள்.மொத்தத்திலும் எனக்குப் பிடித்தது உங்கள் அப்பாவின் தொலை நோக்குப் பார்வை.வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 39. பல சாதனைகள் புரிந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
  சில கேள்விகள்.

  1. நீங்க போட்டிருப்பது புர்காவா, நிகாப்பா?

  2. குர் ஆன் வலியுறுத்துவது நிகாப்தான், புர்கா அல்ல என்பது பற்றி உங்கள் கருத்து?

  3. புர்கா பிடிக்காத இஸ்லாமியப் பெண்கள் மீது அது திணிக்கப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  4. உங்கள் விருப்பப்படி வாழ உங்கள் குடும்பம் உறுதுணையாக இருந்தது/இருப்பது விளங்குகிறது. எல்லா இஸ்லாமியக் குடும்பங்களிலும் எல்லோரும் இவ்வாறுதான் உள்ளார்கள் என்று நிறுவுகிறீர்களா?
  இதை இங்கு உங்களை வாழ்த்திப் பின்னூட்டமிடும் அனைத்து இஸ்லாமிய ஆண்களும் ஒத்துக் கொள்கிறார்களா?

  ReplyDelete
 40. //ஒரு வேளை இப்படி இருந்தால் இன்னும் பலரை ரசிக்க முடிவதில்லையே, மனக்கோட்டையில் டூயட் பாட முடிவதில்லையே என்று இருக்குமோ?? //

  உண்மைதான். ஏன் முகம் காட்டும் முகமதியப் பெண்ணைக் காதலித்துக் கரம் பிடிக்கக் கூடாதா?

  இல்லை, எல்லோரும் காதலித்துப் பின் ஏமாற்றிக் கைவிட்டுவிடுவார்கள் என அஞ்சுகிறீர்களா?

  ReplyDelete
 41. //
  இந்தப் பதிவின் கடைசியில், இஸ்லாமிய பெண்ணாக இருந்ததால் என்ன விதத்தில் என் வாழ்க்கை குறைந்து விட்டதென்று தெரியப்படுத்தவும்
  //

  உங்களைப் போலவே எல்லா இஸ்லாமியப் பெண்களுக்கும் ஒரு blessed வாழ்க்கை அமைந்து விட்டால் யாரும் கேள்வி கேட்க முடியுமா என யோசிக்கவும்.

  ReplyDelete
 42. இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் அனைத்து இஸ்லாமிய ஆண்களும் சகோதரி அன்னுவின் குடும்பத்தைப் போலவே என் குடும்பப் பெண்களையும் வளர்த்து ஆளாக்குவேன் என்று உறுதி கூறுவார்களா?

  ReplyDelete
 43. //

  ஆமினா said...
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மாஷா அல்லாஹ்

  சுயதம்பட்டமா? இதுதான் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை!
  //

  எல்லா இஸ்லாமியப் பெண்களின் நிலைமையுமா?

  முக்தரன் மை (அல்லது முக்தரன் பிபி அல்லது முக்தர் மை) கேள்விப்பட்டிருக்கிறீர்களா மேடம்?

  இங்க பாருங்க.

  ReplyDelete
 44. //
  1. நீங்க போட்டிருப்பது புர்காவா, நிகாப்பா?

  2. குர் ஆன் வலியுறுத்துவது நிகாப்தான், புர்கா அல்ல என்பது பற்றி உங்கள் கருத்து?//

  நிகாப் என்பதை ஹிஜாப் எனக் கொள்ளவும்.

  ReplyDelete
 45. Gujaal

  //முக்தரன் மை (அல்லது முக்தரன் பிபி அல்லது முக்தர் மை) கேள்விப்பட்டிருக்கிறீர்களா மேடம்?

  இங்க பாருங்க. //
  பாத்துட்டேன் சார்... கேள்விபட்டதில்ல... சரி அதவிடுங்க...
  அதன் மூலமா என்ன சொல்ல வரீங்க???????
  இல்ல எனக்கு சத்தியமா தெரியல... நீங்க சொல்லிட்டா அதுக்கான பதிலையும் சொல்லிடுவேன்...

  ReplyDelete
 46. @பாத்திமா சகோ,
  அஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்,
  ஆமாம் சகோ. பர்தா, கண்ணியம் காக்கும் ஒரு கேடயம். அதை புரிந்து கொள்வதில்தான் எத்தனை எத்தனை பிரசினைகள்...சுபஹானல்லாஹ்...
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  @நூருல் சகோ,
  அஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்,
  சரியாக சொன்னீங்க. இறையச்சமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவை. எல்லா நன்மைகளும் அதைப் பொறுத்தே நமக்கு கிட்டுகின்றன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  @ஆயிஷாக்கா,
  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு,
  என் பெற்றோருக்கும் உங்களின் பாராட்டை தந்தமைக்கு மிக மிக நன்றி.
  உங்களின் து'ஆவிற்கு ஆமீன்.

  @இப்னு ஹம்துன் பாய்,
  அஸ் ஸலாமு அலைக்கும்,
  அல்ஹம்துலில்லாஹ். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி:)

  @ராஜ நடராஜன் அண்ணா,
  அல்ஹம்துலில்லாஹ். அப்பாவை குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு மிக மிக நன்றி :)

  ReplyDelete
 47. @சகோ Gujaal ,
  உங்களின் கேள்விகளுக்கான பதில்கள்.
  1. நான் அணிவது புர்காதான். நிகாப் இப்போது இல்லை.

  2. ஹிஜாப் / புர்கா / பர்தா / அபயா / ச்சாதர் என்னும் அனைத்து வார்த்தைகளும் ஒரே உடையையே சுட்டிக் காட்டுகின்றன. சகோ.ரஜினின் தளத்தில் குர்'ஆன் கூறும் அந்த உடைக்கான அளவுகோல்களை மிக அருமையாக விவரித்துள்ளார். அதை அப்படியே நான் சொல்வதாய் எடுத்துக் கொள்ளவும்.

  3. இஸ்லாத்தில் கட்டாயம் என்பது அறவே இல்லை. ஆனால் ஒவ்வொரு இடத்திற்கும், வாழ்வியல் தன்மைக்கும் ஏற்ப மக்களின் எதிர்பார்ப்புக்கள், கொள்கைகள் உள்ளன. அதைப் பின்பற்றி வாழும் ஒரு பெற்றோர் தங்கள் மகளுக்கு எது பாதுகாப்பு என்று நினைக்கிறார்களோ அதை திணிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. உங்களுக்கு கணிதம் பிடிக்கவில்லை என்பதற்காக பள்ளிக்கூடத்திற்கே அனுப்பாமல் விட்டார்களா? திணிக்கப்பட்டதுதானே? அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறீர்கள்தானே? diaper அணியும் குழந்தைக்கு நடை பழக ஆரம்பித்ததும் potty trainingகை திணிக்கிறோம், அந்த குழந்தையின் எதிர்காலம் கருதிதான்? குழந்தைக்கு பிடிக்கவில்லை...அதனால் காலம் முழுதும் நான் diaper வாங்கித் தருகிறேன் என்று கூறுவீர்களா? அது போல்தான் பெற்றோர்களின் அறிவுரை. அதை திணிப்பாக எடுத்துக் கொள்வதும், அக்கறையாக எடுத்துக் கொள்வதும், அதன்படி செயல்படுவதும் அவரவர் மன நிலையைப் பொறுத்தது.

  4. என் விருப்பங்கள் என்று எதையும் நான் இங்கே குறிப்பிடவில்லை. என் படிப்பு நான் செய்ய வேண்டிய வேலை என எல்லாமே பெற்றோரும் உற்றாரும் நிர்ணயித்ததுதான், அல்ஹம்துலில்லாஹ் என்று ஏற்றுக் கொண்டது மட்டுமே நான். அதைப்போல் எல்லாரும் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, எல்லோராலும் முடியவும் செய்யாது. ஆனால் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் கருதி சிறந்த முடிவெடுப்பது அவரவர் கையில் உண்டு. தத்தம் சகோதரிகள் / பெண் பிள்ளைகளை இப்படித்தான் வளர்ப்போம் என முடிவெடுக்க வேண்டியது இங்கு உள்ள ஆண்கள் மட்டும் அல்ல, உலகில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் ஆன பொறுப்பு அது. அதனால்தான் இன்று வரை எல்லா சமூகங்களிலும் ஆணை குடும்பத்திற்கு பொறுப்புதாரர் ஆக்கியுள்ளனர்.

  ReplyDelete
 48. reply to Gujaal - continued..

  5. எதற்கு முஸ்லிம் பெண்ணை காதலித்து கரம் பிடிக்க வேண்டும்??? அந்தப்பெண் முஸ்லிம் என்று தெரியும்போதே அவளின் வாழ்வியல் தன்மை வேறு, அவளின் இறை நம்பிக்கையும் வேறு என்று தெரிகிறதல்லவா? பின் எதற்கு எல்லாவற்றையும் குழப்பி அவளின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்? அவள் முஸ்லிமாய் இருப்பது பிறப்பினால் அல்ல. இறை நம்பிக்கையினால். அந்த வித்தியாசத்தையே உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, அறிவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லையெனிள், அதன் பின் அந்த உறவு எதற்கு? நகமும் சதையுமாய் வாழ வேண்டிய உறவில் அடிப்படையே சரியில்லையே? அப்புறம் அதில் "ஏமாற்றி விடுவார்கள் என்கிற அஞ்சுதல்" எதற்கு? ஒரு பெண் முஸ்லிமாக, தண் மார்க்கத்தை புரிந்தவளாக, தன்னைப் படைத்தவனை நேசிப்பவளாக இருக்கும் பட்சத்தில் 100% கண்டிப்பாக இறைவனையல்லாத வேறு எதையும் வணங்குபவரை நேசிக்க மாட்டாள், கரம் பிடிக்க அனுமதிக்க மாட்டாள். அதைத்தான் நான் பதிவின் கடைசியில் கூறியுள்ளேன். தன்னைப் படைத்தவனுக்கு நேர்மையாய் இல்லாத எந்த உயிரும் வேறெவருக்கும் நேர்மையாய் இருக்க முடியாது. இன்றும் சில பேரை நீங்கள் காட்டலாம். இதோ இந்தப்பெண் முஸ்லிம், தொழுகிறாள், ஒதுகிறாள், பர்தா போடுகிறாள், ஆனால் கை பிடித்திருப்பது ஒரு ஹிந்துவை என. வெறும் சடங்குகள் இஸ்லாம் அல்ல. "யார் என்னை அவரின் ஊன் உறவை விட அதிகமாய் நேசிக்கவில்லையோ அவர் முஸ்லிமல்ல" என்னும் நபி மொழிக்கேற்ப அப்பெண்ணின் மணம் எதை நாடுகிறது என்பதிலேயே அவளின் மார்க்கமும் புலப்பட்டு விடுகிறது. {மற்றபடி...உங்களுடைய இந்தக் கேள்வி இன்னொரு பதிவுக்கு தலைப்பை தந்துள்ள்ளது. நன்றி நன்றி :))}

  6.எல்லோருக்கும் எல்லாமும் அமைந்து விடுவதில்லை. எல்லா சமயங்களிலும் சமூகங்களிலும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அறிந்து நல்வாழ்க்கை நடத்துபவர்களும் உள்ளனர். இறை வாக்கை குப்பையில் வீசி தன்னிஷ்டம் போல் வாழ்பவர்களும் உள்ளனர். பொதுவான இந்நிலையை முஸ்லிம் சமூகத்தில் மட்டும் இருக்கவே கூடாது என்றால் என்ன அர்த்தம்? ஒரு வகுப்பில் அத்தனை பேரும் நூற்றுக்கு நூறு எடுத்துவிடுவார்களா? இயலாது இல்லையா? அது போல்தான் வாழ்விலும். கடைப்பிடிப்பவர்களை விட்டு விட்டு கடைப்பிடிக்காதவர்களை மட்டும் கண்டெடுத்து இந்த வகுப்பே இப்படித்தான் என்றால்?????

  //இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் அனைத்து இஸ்லாமிய ஆண்களும் சகோதரி அன்னுவின் குடும்பத்தைப் போலவே என் குடும்பப் பெண்களையும் வளர்த்து ஆளாக்குவேன் என்று உறுதி கூறுவார்களா? //
  நான் முன்பே சொன்னது போல அவரவரின் இறை நம்பிக்கையில் நேர்மையாய் இருக்கும் எவரும் இந்த உறுதியை கூற தயங்க மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இந்தப் பதிவுலகில் நீண்ட நெடுங்காலம் நாம் இருப்போமேயானால் அந்த உறுதியை செயலில் பார்த்து மகிழலாம் இன்ஷா அல்லாஹ்.

  வருகைக்கும் விளக்கங்கள் கேட்டமைக்கும் மிக நன்றி :)

  ReplyDelete
 49. மாஷாஅல்லாஹ் அருமையான பதிவு சகோதரி, கேள்விகளுக்கு விளக்கங்களும் அருமை

  ReplyDelete
 50. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
  பர்தா என்ன சாதித்துவிட்டது என்ற இன்றைய உலகின் கேள்விக்கு பர்தா என்ன சாதித்துக்காட்டியது என்று விளக்கியது அருமை நல்ல பதிவு,

  பெண்களை இஸ்லாத்தின் அடிமைகள் என்று எழுதிய ஒரு கட்டுரைக்கு என் மறப்பு இங்கே http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_24.html

  www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 to 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள் . அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

  ReplyDelete
 51. நாம், இந்த சமூகத்தில் வாழ்வதுக்கு, நாம், எந்த மதம் சார்ந்தோ எந்த கடவுளை சார்ந்தோ, இருக்கவேண்டிய அவசியம் இல்லை,
  பெரியார்

  ReplyDelete
 52. பர்தா போடுவது காரணம் என்ன என்று கேட்டால், எதிரே வரும் ஆண் மனம் பேதலித்து விடக் கூடாது என்று காரணம் சொல்கிறார்கள். அப்படியானால், ஒரு ஆணைப் பார்க்கும் பெண்ணுக்கு மட்டும் மனம் பேதலிக்காதா? அந்த ஆணுக்கும் கண்கள் மட்டுமே தெரியும்படி ஒரு புர்க்கா போட்டு விடலாமே? ஏன் செய்வதில்லை? பெண்ணை பெண்ணாக மதிக்காமல் ஒரு அடிமையாக, போகப் பொருளாக, விட்டால் வேறு ஒருத்தனுடன் ஓடி விடுவாள் என்ற சந்தேக புத்தி கொண்ட ஆண் வர்க்கம் செய்த கொடுமை பெண்ணை கண்ணை மட்டும் விட்டுவிட்டு மிச்சத்தை மூடும் செயல். I strongly condemn this.

  ReplyDelete
 53. //பர்தா போடுவது காரணம் என்ன என்று கேட்டால், எதிரே வரும் ஆண் மனம் பேதலித்து விடக் கூடாது என்று காரணம் சொல்கிறார்கள்./// சொன்னவங்க தப்பா சொல்லி இருக்காங்க சகோ ஜெயதேவ் டாஸ்
  இஸ்லாம் பெண்களை ஹிஜாப் (கவனிக்க புர்கா அல்ல ) அணிய சொன்னதன் காரணம் அவர்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படவும் மற்றும் மற்றவர்களால் தொல்லைகளுக்கு ஆகாமல் இருக்கவுமே அன்றி நீங்கள் புரிந்து கொண்டது போல அல்ல..

  நபியே!) உம்முடைய மனைவிகளுக்கும், உமது பெண் மக்களுக்கும் மூமின்களின் பெண்களுக்கும், அவர்கள் தலை முந்தானைகளை இறக்கிக் கொள் ளும்படியும் நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாமல் இருக்க இது எளிய வழியாகும். அல்லாஹ் மன்னிப்பவன் கருணையாளன் ஆவான். & அல்குர்ஆன் 33:59
  கண்ணியமான பார்வையும், துன்பம் ஏற்படாத நிலை ஹிஜாப் உடை மூலம் ஏற்படும் என்பதை இவ்வசனம் விளக்குகிறது.


  மற்றபடி இஸ்லாமிய ஆண் மற்றும் பெண்
  தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற
  கட்டளை இருவருக்கும் பொதுவானதே..!இறை அச்சமுள்ள ஆண் மற்றும் பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திகொள்வார்கள்

  (நபியே!) மூமினான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத் தலங்களை (கற்பை) பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு மிக பரிசுத்தமான செயலாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 24:30)


  முதலில் ஆண்களுக்கான பார்வைக்கட்டுப்பாட்டை விதித்து விட்டுதான் இஸ்லாம் பெண்கள் பக்கம் வருகிறது பாருங்கள்...

  மேலும் (நபியே) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடிய (முன்கை&முகத்)தைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
  (அல்குர்ஆன் 24:31)

  கற்பு பாதுகாப்பு, ஒழுக்கம் பேணல் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும்தான். ஒழுக்கப் பேணலில் ஹிஜாப் என்பது பொதுவானது. ஆனால் ஆடை வகுத்தலில் சற்று வித்தியாசத்தை ஆணுக்கும் & பெண்ணுக்கும் வேறுபடுத்திக் கூறுகிறது இஸ்லாம்.

  ஏன் இந்த ஆடை வித்தியாசம் ?? ஏன் என்றால் பெண்ணும் ஆணும் உடல் அமைப்பில் வேறுபட்ட உயிர்கள் இதை அறிவுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.. இல்லையா? மேலும் ஒரு ஆண் பெண்ணை கண்டு பேதளித்தால் அந்த பெண்ணின் விருப்பம் இன்றியே வலுக்கட்டாயமாக அவளை அடைய முடியும்.. இதில் அந்த பெண்தான் பாதிக்கப்படுவாள்.. அனால் ஒரு ஆண் மீது மனம் பெதளிக்கும் பெண்ணால் ஒன்றும் செய்ய இயலாது.. எனவே யாருக்கு பாதுகாப்பு தேவை என்பதை விளங்கிக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன் சகோ... :))

  ReplyDelete
 54. "தன்னைப் படைத்தவனிடம் நேர்மையில்லாத எவரும் மற்றெவருக்கும் நேர்மையாய் இருக்க முடியாது"
  மிக அருமையான வரிகள் என்பதை விட அனுபவங்களின் விடையாக இருப்பதால் இது இன்னும் அற்புதமாக இருக்கிறது.
  சகோதர மதத்தில் இறை உணர்வோடு கடமைகளை அனுசரித்து செல்பவர்களிடம் மலினமான கேள்விகளால் தங்களை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ள நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த மதத்தை தான் இழிவு செய்கிறார்கள் என்பதால் இவற்றிற்கு பதிலளித்து முக்கியத்துவம் தரவேண்டாம் என்பது என்னுடைய கருத்து.

  அல்லாஹு தாலா தங்களுக்கு ஆசீர்வதித்திருக்கும் பெருங்கருணையை அனைத்து இஸ்லாம் பெண்மணிகளுக்கும் வழங்க வேண்டுமென்பதே எனது து ஆ- வாக இருக்கும்.. ஆமீன்!

  ReplyDelete
 55. உண்மையாக சொன்னால் நவீன உடைகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தடுக்க முடிவதில்லை. அதற்கு மாறாக உள்ளே நீ ஜீன்ஸ் போட்டுக்கோ வெளியே புர்காவை மட்டும் போடு என்பதே அவர்கள் கூற்று. ஆகவே இது உண்மையில் உடலழகை மறைக்க அல்ல. நவ நாகரீக மோகத்தை மறைக்கவே ஆகும். நீ ஜீன்ஸ் போட்டுக்கோ ஆனால் கோயிலுக்கு போட்டு வராதே எனும் இந்து அடிப்படை வாதத்தோடு பொருந்தி போவதை பாருங்கள்.

  போங்கடா நீங்களும் ஒங்க கோயிலும் என்று விலகி சென்று விடலாம். ஆனால் இஸ்லாத்தில் பத்வா இருக்கிறதே. சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் என மத விலக்கம் தொடர்கிறதே. இந்த நிலையில் உள்ளதைக் கூட இஸ்லாமிய பெண்களால் சொல்ல முடிவதில்லை. பெனாசீர் பூட்டோ, கலிதா ஜியா போன்றோர் என்றுமே பொதுவாழ்வில் புர்கா அணிந்திருக்கவில்லை.
  ஹைய்யோ! ஹைய்யோ!!

  ReplyDelete