Monday, April 23, 2012

பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க.
ஒருவர் முஸ்லீமல்லாதவர்.  இன்னொருவர் முஸ்லீம்.
இருவரும் கட்டுகோப்பான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். விளையாட்டு போட்டிக்காக வெளியூர் செல்ல அனுமதி வேண்டி வீட்டில் கேட்க, வீட்டினர் மறுக்கிறார்கள். பெண் குழந்தையை எப்படி துணை இல்லாமல்  வெளியூர்க்கு அனுப்புவது என்ற கவலை இரு குடும்பத்தினருக்கும்!


அடுத்த நாள் பள்ளியில் ஆசிரியரிடம்,
முஸ்லீமல்லாத  பெண்-  எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
ஆசிரியர்-ம் சரி போ!

முஸ்லீம் பெண்- எங்க வீட்டில் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க
ஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ..................................
இதுதான் இன்றைய நிலை!!!
இஸ்லாமிய பெண் என்றாலே  அடிமைப்படுத்தப்பட்டவள் என்று பரிதாபமாக பார்க்கப்படுகிறது. ஆக்சுவலி  முஸ்லீமல்லாத குடும்பத்தாருக்கு  தன் பெண் மேல் என்ன பயம் இருக்குமோ அதே தான் அந்த இஸ்லாமிய குடும்பத்திற்கும் இருக்கு... ஆனால் சமுதாயத்தின் பார்வையில்?????????!!!!!!!!

எங்களை பார்த்து நீங்க பரிதாபப்படுறீங்களா??? ஏன் படணும்? என்ன அவசியம் வந்தது??? கீழே உள்ளதெல்லாம் வாசிங்க.... அதுக்கப்பறம் முடிவு பண்ணுங்க!!!

சொத்துரிமை:

ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு! இதுதான் எல்லா எடத்துலையும் இருக்கே?? என்னமோ இவங்களுக்கு மட்டும்  இருக்குறமாதிரி எதுகெடுத்தாலும் மதம் மதம்னு ஏன் அலையுறீங்கன்னு கேக்குறீங்களா???? 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது!   2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி  தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது.  அதுக்கு முன்னாடிலாம்   "சீர் செனத்தி செஞ்சாச்சுல??? இனி என்னாத்துக்கு இங்கே வார்ரவ? எல்லாம் எம்மவனுக்குத்தேன்"ன்னு சட்டம் பேசிட்டிருந்தாங்க நம்ம பெற்றோர்ஸ்! ஆனால் 7ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது.  எவ்வித காத்திருப்புகளும் இல்லை! எவ்வித போராட்டங்களும் இல்லை! எவ்வித கெஞ்சுதல்களும் இல்லை!  இந்த பங்கீடு ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டாயக் கடமை ஆகும். இதை நிறைவேற்றியே ஆக வேண்டும். 

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். அல்-குர்ஆன் (4:11)
குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7)

திருமண சம்மதம் :

மனதிற்கு விருப்பமில்லாத ஒருவனை காட்டி திருமணம் செய்யும் படி பெற்றோர் எம்மை வற்புறுத்த முடியாது. திருமணத்திற்கு எம் சம்மதம் தான்  முதல் முக்கியமான விஷயம்.
விதவைப்பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறவேண்டும். கன்னி பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - ஆதார நூல்: புகாரி)

பெண்களின் சம்மதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க பாருங்க! பெண்ணை அடிமைபடுத்துவதாகவோ அல்லது உரிமைகளை  நசுக்கும் மதமாகவோ இருந்தா  இதில் ஏன் கவனம் செலுத்தி பெண்ணின் சம்மதத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? சிந்திப்பீர்களா?

இப்படிதான் ஒருமுறை ஒரு பொண்ணு வந்து நபி (ஸல்) அவர்களிடம்  "எங்கப்பா எனக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்து வைக்கபாக்குறாரு. எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை"ன்னு சொல்லிட்டாங்க. உடனே அதற்கு தீர்ப்பு சொன்ன நபி (ஸல்) அவர்கள் "இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல! இது செல்லாது! நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள்.
ஒரு பெண்ணின் சம்மதம் இல்லைன்னா கல்யாணமே ரத்தாம்! :-)

இது பெண்ணின் உரிமை! சமுதாயம் தான் கொடுக்கணும். ஏன் மதத்தை தூக்கிட்டு அலையுறீங்கன்னு கேக்குறீங்களா??? ம்ஹும்ம்ம்... எங்கம்மா அப்பா கொடுக்காத உரிமையை/சமுதாயம் மறுத்த உரிமையை குர் ஆனின் இறைவசனம் தான் வாங்கிகொடுத்துச்சு!

மறுமண உரிமை :

விவாகரத்தானாலோ அல்லது கணவன் இறந்தாலோ யாரும் எம்மை வெள்ளைபுடவை கட்டி அழகுபார்ப்பதில்லை! அதன் பின்னும் எம் பெண்களுக்கு வாழ்க்கை இருக்கு. அவளுக்கு மறுமணம் புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது சமுதாய உரிமை! இத மதம் தான் கொடுக்கணுமா? ஏன் மதத்தை உரிமையோடு கலக்குறீங்கன்னு கேக்குறீங்களா??? வேறொன்னும் இல்லைங்க... சமுதாயம் அவர்களை விதவைன்னு முத்திரைக்குத்தி, இயல்பை மாற்றி,  மூலையில் உக்கார வைத்தபோது  மதம் தான் "நீ நீயாகவே இரு"ன்னு சொல்லி கொடுத்துச்சு! இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கும் விதவை பெண்களின் நிலைக்கு  இஸ்லாத்தில் எப்போதோ தீர்வு சொல்லப்பட்டுவிட்டது!

பெண்கல்வி :

அடுத்ததாக படிப்பு! இஸ்லாம் பெண்கல்வி மறுப்பதாக பலர் கருதுகிறார்கள். இதுவும் கட்டுக்கதையே! இன்றைய காலகட்டத்தில் தான் படிப்பின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.  முன்பு பெண் கல்வி என்பது சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றுதான்!  அடுப்பூதுவதும் அப்பளம் சுடுவதும் தான் பெண்ணின் நிலை என்ற இழிநிலையை தடுத்து ஆணை போலவே பெண்ணிற்கும் கல்வி கற்கும் உரிமையை வழங்கியிருக்கிறது. அதுவும் 1400 வருசங்களுக்கு முன்பே...

கல்வியைத்தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என்பது நபி மொழியாகும். (ஆதார நூல்: இப்னுமாஜா)

பெண்களை கொடுமைபடுத்துகிறதா?

பெரும்பாலனவர்களின் எண்ணம் இதுவே! இஸ்லாம் பெண்களை கேவலாக நடத்துவதாகவும், அவர்களை சதைபிண்டமாகவும் மட்டுமே பாவிக்கிறது எனவும் பலவாறாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பெண்களை  ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்...

இதோ சில உதாரணங்கள் :
உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. (திர்மிதி)
 உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே." (திர்மிதி)
அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்அன் 4:19)
 எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்." (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள்  சங்கம் அமைத்து, ரோட்டில்  கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை!

இறைவன் கொடுத்த சிந்திக்கும் திறன் இன்னும் நம்மிடம் அப்படியே தான் இருக்கு. திறந்த மனதுடன் முன்முடிவில்லாது யோசிங்க.

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்54 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமீனா..

  மஷாஅல்லாஹ் .கிரேட்மா.. இனி யாராச்சும் சொன்னாங்க ஏன் உங்கள அடிமைப்படுத்துறாங்கனு உடனே இந்த பதிவ பிரிண்ட் போட்டு கொடுத்துருவன்.
  "சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை!" அசத்தலான வரிகள்...
  அடிமைத்தனமா கிலோ எவ்வளவுன்னு கேப்பாங்க இனி நம்ம பொண்ணுங்க..
  அன்பு சகோதரி

  ReplyDelete
 2. கட்டுரையோட கன்டென்ட் பத்தி பேசுறதுக்கு முன்னாடி... அந்த கலரிங், பான்ட் சைஸ் மற்றும் தொகுக்கப் பட்ட விதம்..
  மாஷா அல்லாஹ்.. சிம்ப்லி சூப்பர்.... குட் வொர்க்....

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி...

  பெண்ணடிமை குறித்து பெண்களைத்தவிர அனைவரும் வாய்திறந்திருக்கும் வேலையில்,அனைவரது வாயடைக்கும் விதமாக இஸ்லாமியப் பெண்மணிகளே வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது..

  கட்டுரையும்,கோர்த்த விதமும் அருமை... கருத்துக்கள் நான் அறிந்தவை என்றாலும்,விமர்சகர்களுக்கு உங்கள் தரப்பில் இருந்து இவை வருவது புதிதாகவே இருக்கும்... அதற்கு தக்கவாறு அவர்களது விமர்சனங்களும் பொலிவு பெறலாம்...இன்ஷா அல்லாஹ் அனைத்தையும் தயங்காது எதிர்கொள்ளுங்கள்...

  வல்ல அல்லாஹ் துணையுடன்,,

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரி ஆமினா,
  நெற்றி பொட்டில் அடித்தார் போன்ற வைர வரிகளை உள்ளடக்கிய பதிவு. சங்கம் அமைத்து பெற்றதல்ல இந்த உரிமைகள். சங்கை மிகுந்த வல்லோன் மங்கையர்க்கு கொடுத்த உரிமைகள் தான் நீங்கள் மேலே சொன்னவை எல்லாம். மேலும் முக்கியமான ஒன்றை நீங்கள் குறிப்பிட மறந்து விட்டீர்கள் சகோதரி.

  உலக மாந்தர்கள் அனைவருக்கும் சிறந்தவர்களாக அன்னை மர்யம் (அலை) மற்றும் கொடுங்கோலன் பிர்அவ்னின் மனைவி அன்னை ஆசியா அம்மையாரை தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். எனவே இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று எவரேனும் சொல்லுவார்களேயானால் அவர்கள் உண்மை அறியாமல் பிதற்றுகிறார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்
  சகோ. ஆமினா,

  நல்ல கருத்துக்கள் அடங்கிய சிறந்த ஒரு பதிவு. அதை அழகிய முறையில் தந்து உள்ளீர்கள். மாஷாஅல்லாஹ்.

  ////இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு.////---பெண்களுக்கு பாராளு மன்றத்தில் 33% கேட்டு பெற இயலாதவர்கள்....

  யாரேனும் இதுபற்றி "எதற்கு 50% இல்லை..? இது சமநீதி இல்லையே...?" என்று கேட்ககூடும். அல்லது, 'அது பற்றி விளக்க வில்லையே' என்று எண்ணக்கூடும்.

  அடுத்து வருபவை அவர்களுக்குக்காக.....

  இஸ்லாத்தில் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொருப்போ சுமத்தப்படவில்லை.

  ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் வரை அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தை அல்லது அவளது சகோதரனின் கடைமயாகும்.

  அவளது திருமணத்திற்குப் பிறகு, அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது கணவன் அல்லது அவளது மகனின் கடைமையாகும்.

  இஸ்லாத்தில் குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு ஆண்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது.

  மேற்படி குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டே இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களைவிட சொத்தில் அதிக பங்கு அளிக்கப்படுகிறது.

  உதாரணத்திற்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு மக்களை உடைய ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இறந்து போன மனிதருக்கு ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் - இறந்து போனவருடைய மகனுக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், இறந்து போனவருடைய மகளுக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும் அவர்களது பங்காக கிடைக்கும்.

  இரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப்பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. அவருக்குக் கிடைக்கப்பெற்ற இரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது அந்த சொத்துக்களில் பெரும் பங்கையோ (ரூபாய் ஒரு லட்சம் மதிப்பள்ள சொத்துக்களை) - அவர் குடும்பத்திற்காக செலவு செய்துவிட்டு - எஞ்சியுள்ள ஒரு லட்சம் சொத்துக்களை மாத்திரம் அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். இன்றைய விலைவாசியில் இரு லட்சமும் செலவாகலாம்..!

  ஆனால் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் - அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது (ஏனெனில் இஸ்லாம் பெண்கள் மீது குடும்பத்தின் எந்த பொருளாதார சுமையையும் சுமத்தாத காரணத்தால்) முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்க முடியும்.

  இஸ்லாமிய சொத்துரிமையால் சமநீதி இல்லை என இப்போது யாராலும் சொல்ல முடியுமா..?

  மேலும்....

  ஒரு கணவர் அவர் பெற்றோரிடம் இருந்து இரு பங்கும்... அவர் மனைவி, அவர் பெற்றோரிடம் இருந்து ஒரு பங்கும் எடுத்து வருவார்.

  இந்த கணவரின் தங்கை ஒரு பங்கும், அந்த மனைவியின் அண்ணன் அவரவர்கள் வீட்டுக்கு இரு பங்கும் எடுத்து செல்வார்கள்.

  இப்படி பார்த்தாலும் எப்படி பார்த்தாலும் எல்லாமும் சமம்தான்..!

  இறை சட்டத்தில் ஓட்டை காண இயலாது..!

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

  மாஷா அல்லாஹ் மிக அருமையான ஆக்கம்!.

  "பெண்களை அடிமைப்படுத்தும் இஸ்லாம்!!!" தலைப்பும் அருமை!, பதிவும் மிக தெளிவாக இஸ்லாம் எவ்வாறு பெண்களை அடிமைப்படுத்தி (?!) வைத்திருக்கிறது என்பதை விளக்குகிறது.

  பார்ப்போம், இது போன்ற அடிமைத்தனத்திற்கு (?!) மாற்றாக வேறு கொள்கைகளை, யாரவது அவர்கள் பின்பற்றும் கொள்கை மற்றும் கோட்பாடுகளில் இருந்து காட்டுகிறார்களா என்று?

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் .
  அருமையான முயற்சி ...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. மாஷா அல்லாஹ்!!!!!! இஸ்லாம் பெண்களை பற்றி விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு வார்த்தை கோர்வையால் பதிலடி கொடுத்த சகோ ஆமினா விற்கு வாழ்த்துக்கள்... அல்லாஹ் இன்னும் உன்னுடைய சிந்தனை திறமையை மென்மேலும் வளர்ப்பனாக... பூந்து விளையாடிடிங்க சகோ...

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..அருமையாக ஆரம்பித்து உள்ளீர்கள் எல்லா தகவல்களும் தொகுத்து கொடுத்த விதம் அழகு..

  வாழ்த்துக்கள் ஆமீனா....:-))

  ReplyDelete
 10. மாஷாஅல்லாஹ், அருமையான பதிவு சகோதரி..,

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருமையான ஆக்கம் சகோதரி, ஒரு சில நபிமொழி படிக்கும் போது மண்டையில் கொட்டு விழுகிறாது. திருத்திக கொள்ள ஓர் வாய்ப்பு. நன்றி

  //இஸ்லாம் பெண்களை ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்...// முற்றிலும் சரியான Point. ஒர் பெண்க்கு கணவன் இடம் இருந்து சொத்துகள் மற்றும் மஹர். அடுத்து கட்டம் அம்மா/அப்பா இடம் இருந்து சொத்து. அடுத்த கட்டம் மகன்/மகள் இடம் இருந்து சொத்து. Bonusயாக உடன் பிறந்தா சகோதரா/சகோதரி வழியில் சொத்து.

  //முஹம்மத் ஆஷிக்// பின்னுட்டம் ஒர் Boost

  ReplyDelete
 12. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஒரு தடவை சொன்னாலும் 100 தடவை சொன்ன மாதிரி சொல்லிட்டீங்க ஆமினா
  கட்டூரை நல்லா மனதில் நாக்காளி போட்டு உக்காந்து விட்டதுன்னு கூட சொல்லலாம் (ஹி ஹி ஹி] அருமை அருமை

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஒரு தடவை சொன்னாலும் 100 தடவை சொன்ன மாதிரி சொல்லிட்டீங்க ஆமினா
  கட்டூரை நல்லா மனதில் நாக்காளி போட்டு உக்காந்து விட்டதுன்னு கூட சொல்லலாம் அருமை அருமை

  ReplyDelete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

  ஒரு தடவை சொன்னாலும் நூரு தடவை சொன்ன மாதிரி நல்லா நச்சுன்னு.....
  எல்லாருக்கும் புரியும் மாதிரி இருக்கு கட்டூரை

  ஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ.................................. இப்படிதானே எல்லாரும் நம்மலை வேதனை படுத்துனாங்க ஒரு மருந்தாக உங்கல் எழுத்து இருக்கு என்று என் கருத்து ஆமின்

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  /// இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள் சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை! ////

  நெத்தியடி சுப்பர்மா (சகோதரி)

  வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது பணிகள்.

  நன்றி
  செய்யது அப்தாயர்
  துபாய்

  ReplyDelete
 16. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

  ஒரு தடவை சொன்னாலும் நூரு தடவை சொன்ன மாதிரி நல்லா நச்சுன்னு.....
  எல்லாருக்கும் புரியும் மாதிரி இருக்கு கட்டூரை

  ஆசிரியர்- உங்க ஆளுங்களே இப்படிதான்... பொண்ணுங்கள் எங்கும் விடுறதில்ல, மொகத்த மூடுன்னு ஓவர்ரா கன்ட்ரோல் பண்ணி அடிமைபடுத்துறாங்க... எப்பதான் திருந்த போறாங்களோ.................................. இப்படிதானே எல்லாரும் நம்மலை வேதனை படுத்துனாங்க ஒரு மருந்தாக உங்கல் எழுத்து இருக்கு என்று என் கருத்து ஆமின்

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கு சகோ...
  நல்ல பதிவு....ஆனாலும் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களுக்கு அவர்களுக்கும் பயன்படும் விதத்தில் எழுதியிருந்தால் நன்றாக இருக்கும்...

  அவர்களுக்கான தெளிவுதான் எமக்கு முக்கியம்

  ReplyDelete
 18. பெண்உரிமை பற்றியும், பெண் வாழ்க்கைத் திட்டம் பற்றியும், பெண்ணியத்தின் கண்ணியம் பற்றியும் இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அழகாக அடித்தளமிட்டுவிட்டது

  ஆண், பெண் கலத்தல் மூலம் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கான வழிகளை இஸ்லாம் அடைக்கிறதே தவிர, பெண்களின் முன்னேற்றத்தையோ, சுதந்திரத்தையோ அல்ல.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோஸ்,
  யப்பா ...!! நம்ம சமூகத்து பெண்கள் இன்னமா ரோஷத்தோட எழுதறத பார்தீங்களா ....!!! இத இதத்தான் எதிர்பார்க்கிறோம் ...
  விட்டா... பூந்து விளையாடிடுவாங்க.....சபாஷ் அருமையான ஆக்கம் .

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு..

  சுண்டி இழுக்கும் தலைப்பு..
  அசத்தல் பதில்கள்! அல்ஹம்துலில்லாஹ்!
  வாழ்த்துக்கள்!

  //எங்களை பார்த்து நீங்க பரிதாபப்படுறீங்களா??? ஏன் படணும்? என்ன அவசியம் வந்தது??? கீழே உள்ளதெல்லாம் வாசிங்க.... அதுக்கப்பறம் முடிவு பண்ணுங்க!!! //
  முஸ்லிம் பெண்களான நாங்களே மனமுவந்து இஸ்லாத்தை ஏற்று பின்பற்றுகையில் ஏன் அதிகமான மாற்று மத சகோதரர்கள் (முதலை)கண்ணீர் வடிக்கிறனர் என்று தான் புரியவில்லை.....

  ReplyDelete
 21. இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள் சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை!
  நெத்தியடி வார்த்தைகள்!
  பாராட்டுக்கள் சகோதரி!

  ReplyDelete
 22. ///பெரும்பாலனவர்களின் எண்ணம் இதுவே! இஸ்லாம் பெண்களை கேவலாக நடத்துவதாகவும், அவர்களை சதைபிண்டமாகவும் மட்டுமே பாவிக்கிறது எனவும் பலவாறாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் பெண்களை ராணிகளாய் நடத்துவது ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்...////

  இன்னும் நிறைய எழுதுங்கள் அவர்கள் புரிந்து தெளியும்படி பொட்டில் அடித்தாற்போன்று எழுதுங்கள் அல்லாஹ் உங்களின் இந்த தாஃவா பணியை பொருந்திக்கொள்வானாக....

  சகோ. அபூஃபைஸல்

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete
 24. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  இஸ்லாம் பெண்களை அடிமைப்படுதவில்லை என்பதை ஆணித்தரமாக உலகிற்கு உணர்த்திட்டீங்க... மாஷா அல்லாஹ்.... வாழ்த்துகள் சகோதரி.... :)

  ReplyDelete
 25. அறிவியல் வளர்ச்சி பெருகி விட்ட தற்காலத்தில் கூட பெண்குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள்.. பெண் சிசு கொலைகளும் , கருவில் இருப்பது பெண்சிசு என்று தெரிந்தால் கலைத்து விடும் கொடுமையும் அதிகரித்து வருகிறது.....

  ஆனால் இஸ்லாம் பதினான்கு நூற்றாண்டுகள் முன்பே பெண்சிசு கொலைகளை தடை செய்துள்ளது.....!!!

  பெண்களை கருவிலேயே கலைத்து பெண்ணினத்தை வேரறுக்கும் கொடியவர்கள் உள்ள நாட்டில்....

  பெண்சிசு வதையை தடுக்க பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே சட்டம் இயற்றிய இஸ்லாத்தில் பெண்கள் வதைக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்.....

  இவர்களது அறியாமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது...!!!!

  ReplyDelete
 26. சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! ..This paragraph is very damaging others...without Struggle we can get nothing..mind you...You live in a small Circle that is your Religion...Come out & see...what all Indians got is not ...பிச்சை..You should regret for these words.

  ReplyDelete
 27. அஸ்ஸலாமு அலைக்கும்
  நெத்தியடியான விளக்கம் சகோ.பின்னூட்டத்தில் நெத்தியடியாரின் கருத்துகள் கட்டுரைக்கு கூடுதல் வலு சேர்க்கின்றது.

  மேலோட்டமாக பார்த்தால் பலாப்பழம் பார்ப்பதற்க்கு அருவறுப்பாகத்தான் இருக்கும்.உள்ளிருக்கும் சுலைகளை சாப்பிட்டவர்களுக்குத்தான் அக்கனியின் அருமை புரியும்.இஸ்லாமிய மார்க்கத்தையும் அப்படித்தான் மேலோட்டமாக பார்க்கின்றார்கள் அதனால் உள்ளிருக்கும் சுலைகளின் சுவை அறியாமலே இருக்கின்றார்கள்.நடுநிலையுடன் இம்மார்க்கத்தை அனுகினார்களேயானால் இம்மார்க்கம் பின்பற்றுவதற்கு இனியதும் எளியதும் என்பதை அறிந்துகொள்வார்கள்.

  ReplyDelete
 28. அம்மைத்தழும்பை ஃபேரன் லவ்லி பூசி மறைக்கிற வேலை நல்லா நட்ந்திருக்கு....வாழ்த்துக்கள்.......

  ReplyDelete
 29. @Jagath

  ////without Struggle we can get nothing.//

  that was what I said... without struggle we got everything by Islam (Islamic Law):-)

  //You live in a small Circle that is your Religion...Come out & see...what all Indians got is not//
  in your point of view Islam is small circle!... alright!

  but in this small of circle we have more of Rights and Respect :-) this was not possible still now in our biggest circle of society like still we are begging for 33 percentage Quota or Dowry harassment or Female Infanticide or eve teasing.......... ooooops etc :-)))

  come out from your own Imagination about Islam! then you can realize 'they are proud to be a Muslim woman' :-)

  ///you should regret for these comment..///
  No way....nothing wrong in my words...

  ReplyDelete
 30. @சகோ தியாகராஜன்

  //அம்மைத்தழும்பை ஃபேரன் லவ்லி பூசி மறைக்கிற வேலை நல்லா நட்ந்திருக்கு....வாழ்த்துக்கள்....... //

  உங்களுக்குதான் அம்மைதழும்புன்னு தெரியுமே? நீங்க சொல்லலாமே :-)

  வாழ்த்துகள்

  ReplyDelete
 31. Hello ,

  Good article.

  But in the comparison between other religion ladies vs Islamic ladies, the society is changing fast and you can now see lots and lots of other religion ladies coming out of the closed circle and are more and more independent. After the IT boom many ladies now work in other cities , travel alone,,stay in hostel., I see many other religion ladies travel abroad without anyone help for studies or work. Although Islamic ladies are equally talented compared to other religion ladies if not more, the opportunities available to Islamic ladies are very limited because of the name of religion I believe. Thanks

  ReplyDelete
 32. thank you madam,

  i wondered how we do not understand the true freedom yet????....

  when you are prescribed one medicine to your client.. you are the responsible for side-effect right?
  As well as When you tell to a girl that this is the real freedom ... Maybe if that girl can act on the basis of...
  you are Responsible for good or evil. So you take some security measures and Too much focus on her security issues....

  Islam is the same as :-)

  There is no obstacle for us what you told as example....
  but we must make some security issues for enjoy the real freedom without any effects :-)

  Secure freedom Necessary to every one! that was islam what recommended to us :-)

  otherwise
  //, the opportunities available to Islamic ladies are very limited because of the name of religion I believe//
  இஸ்லாத்தின் பெயரை சொல்லி இல்லாத கட்டுப்பாடுகளை விதிக்கும் சில குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை... தனிமனித கட்டுப்பாட்டுக்கும் இஸ்லாத்தையும் முடிச்சு போடவேண்டிய அவசியம் இல்லை...முன்பு வீட்டை விட்டு வெளியே போகாமல் இருந்த நாங்கள் இன்று சுதந்திரமாக செயல்படுகிறோம் சரியாக குர் ஆன்னை விளங்கிக்கொண்டதால்... அதுபோல் விரைவில் அனைவரிடத்திலும் மாற்றம் வரவேண்டும் என்பதே எங்கள் ஆசையும்...

  Thanks for comment madam

  ReplyDelete
 33. அன்புச் சகோதரர் தியாகராஜன் அவர்கள் தமது இயலாமைத் தழும்பை மறைத்திருக்கிறார். (நான் சகோதரர் தியாகராஜன் அவர்களின் தனிப்பட்ட இயலாமையைச் சொல்லவில்லை)

  ReplyDelete
 34. நாடு எங்கே செல்லுகிறது? பெண்கள்மீதான வன்முறை அதிகரிப்பு

  சென்னை, ஏப்.25- பெண்கள்மீதான வன்முறை - பாலியல் தொல்லைகள் - கடத்தல் நாளும் அதிகரித்து வருகின்றன.

  கற்பழிப்பு, கடத்தல், மானபங்கம், வரதட்சணை கொடுமை போன்றவை, பெண்களை இன்னும் முடக்கிப் போட்டு விடுகிறது.

  என்னதான், பெண்கள் வன்கொடுமை சட்டம் இயற்றப் பட்டாலும், குற்ற வழக்குகள் ஆண்டு தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

  தமிழகத்தில் மட்டுமல்ல, படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, குறைவே இல்லை.

  கடந்தாண்டு ஜூன் மாதம் வரை, மானபங்கம் தொடர்பாக, 1,816 புகார்களும்; கணவன் கொடுமை தொடர்பாக, 2,679 புகார்களும், பதிவாகி உள்ளன.

  ஒருபுறம், பெண்கள் கல்வியறிவு மற்றும் வேலை வாய்ப்பு சதவீதம் அதிகரிப்பு தொடர்ந்த போதும், சமூக அளவில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து, இன்னமும் கிடைக்கவில்லையோ என்ற கேள்வி தொடரத்தான் செய்கிறது.

  தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தமட்டில், கற்பழிப்பு, மானபங்கம், கடத்தல், வரதட்சணை கொடுமை, பெண் குழந்தைகள் இறக்குமதி, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதியப்படுகின்றன.

  பெண்கள் வன்கொடுமைச் சட்டம் வந்த பிறகு, இதர சட்டப் பிரிவுகளுடன் சேர்த்து, இப்பிரிவின் கீழும் வழக்கு பதியப்படுகிறது.

  சினிமா மோகத்தில் உள்ள சிறுமியரை, வேறு மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சம்பவங்கள், அதிகளவில் நடந்தன.

  ReplyDelete
 35. அருமையான துவக்கம் மேலும் நல்ல செய்திகளை வழங்க அல்லாஹ் உதவி செய்வானாக! http://www.mpmpages.blogspot.in/

  ReplyDelete
 36. அஸ்ஸலாமு அலைக்கும் .
  அருமையான முயற்சி ...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. வாழ்த்துகள் சகோதரி.... நல்ல கருத்துக்கள் அடங்கிய சிறந்த ஒரு பதிவு. அதை அழகிய முறையில் தந்து உள்ளீர்கள்.

  நாம் எவ்வளவு தான் (பொதுவாக பேசாமல்) ஆதாரங்களை முன் வைத்து பேசினாலும் சிலர் நமக்கேன் என்பது போலவும் சிலர் தாங்கள் சொல்வதையே திரும்ப திரும்ப சொல்லும்போது சற்று வருத்தம் அளிக்கிறது.

  இவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது.....
  மற்றவர்கள் சொல்வது பல நேரங்களில் உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை காரணம்......
  விளங்கி கொள்ள வேண்டும் என்பதற்காக நீர் கேட்பதில்லை !
  மற்றவர்களுக்கு மறுமொழி சொல்வதற்காக கேட்பதனால் !!!

  மற்றவரின் கருத்துக்கும் மதிப்பளித்து அழகான முறையில் தங்கள் கருத்தை முன் வைத்தால் நன்றாக இருக்குமே !

  ReplyDelete
 38. Assalamualaikum

  Its realy the good ans for All...........May Allah bless all of us.......

  ReplyDelete
 39. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா.
  மிகவும் அருமையான கட்டுரை.ஹதீஸ்களை கொண்டும்,குர்ஆன் வசனங்களை கொண்டும் அழகாக எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  அப்சரா.

  ReplyDelete
 40. //இறைவன் கொடுத்த சிந்திக்கும் திறன் இன்னும் நம்மிடம் அப்படியே தான் இருக்கு. திறந்த மனதுடன் முன்முடிவில்லாது யோசிங்க. //

  யோசிச்சா யாரும் இதுப்போல கேள்வியே கேட்க மாட்டாங்களே ஹா..ஹா.. :-)

  ஏகப்பட்ட விளக்கம் மாஷா அல்லாஹ் :-)

  ReplyDelete
 41. இவையெல்லாம் இஸ்லாமிய பெண்மணிகள் சங்கம் அமைத்து, ரோட்டில் கொடிதூக்கி, போராட்டம் பண்ணி, நீதிமன்றம் மனித உரிமை கழகம்ன்னு போராடி ஒவ்வொரு முறையும் பிச்சை கேட்டு வாங்கிய சுதந்திரம் இல்லை! இயல்பாகவே இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தி தந்தவை! //

  உண்மையிலும் உண்மை. தரப்பட்டிருக்கும் சுதந்திரத்தை தரமானதாக்கி தக்கவைத்துக்கொள்ள முனைவோமாக!

  நல்லதொரு பதிவு ஆமி [க்கா].. மாசா அல்லாஹ்

  ReplyDelete
 42. //சொத்துரிமை:

  1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி

  சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது! 2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி

  தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது.//

  இது ஓரளவுக்குத்தான் உண்மை. இந்தியாவில், எல்லாகாலங்களிலும், பெற்றோர்களின் சக்திக்கு ஏற்ப தகுந்த சீர் செய்யப் பட்டு வந்தது

  வருகிறது. இஸ்லாமில் இருப்பதைப் போல ஆண் வாரிசுகளுக்கு கிடைப்பதில் பாதிதான் பெண்களுக்கு என்ற அவலம் கிடையாது. இஸ்லாமில்

  பெற்றோர்களே தங்கள் வாரிசுகளுக்கு சமமாக பிரித்துக் கொடுக்கலாம் என்று நினைத்தாலும் முடியாது. சகோதரர்கள் விட்டுக் கொடுத்தாலும்

  முடியாது. இந்தியாவில் எந்த காலத்திலும் பெண் வாரிசுகளுக்கு சொத்தில் முழுப்பங்கு கொடுப்பதற்கு தடை ஏதும் இல்லை. பெற்றோர்

  விரும்பினால் தேவையான பெண் வாரிசுக்கு ஆண் வாரிசுகளை விட அதிகமாகக்கூட கொடுக்கலாம். இஸ்லாமின் பாகப் பிரிவினை பெண்களுக்கு

  மிகவும் அநீதியானது மட்டும் அல்ல. காலப் போக்கில் இதில் மாற்றங்கள் வருவதற்கான வழியும் இல்லை.மாறாக மற்ற மத சட்டங்களும்

  பண்பாடும் மனித நாகரிக வளர்சிக்கு ஏற்ப பண்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.

  To be continued...

  ReplyDelete
  Replies
  1. //இந்தியாவில், எல்லாகாலங்களிலும், பெற்றோர்களின் சக்திக்கு ஏற்ப தகுந்த சீர் செய்யப் பட்டு வந்தது //

   ஆம் சகோ. சக்திக்கு ஏற்ப நகையும் சீரும் செய்துவிட்டு அத்துடன் குடும்ப சொத்தில் உரிமை இல்லாதவளாக்கப்படுகிறாள்! ஆனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் தன் மகளுக்கு செய்யவேண்டிய விஷயங்களை போக குடும்ப சொத்தில் உரிமையும் கொடுக்கப்பட வேண்டும்! அது தான் நியாயமானது..

   சொத்தின் மதிப்பும் நகை,சீர்வரிசையின் மதிப்பும் ஒன்றில்லையே... நகை சீர்வரிசை கொடுத்ததும் மகளின் பிறந்தவீட்டு உரிமை போய்விட்டதே சகோ?

   ஒருவேளை பெண்களுக்கும் ஆண்களுக்கும் சொத்தில் சமபங்கு என வரும் பட்சத்தில் பலரும் முன்வைக்கும் கோரிக்கை
   பெண்களுக்கு சீர்வரிசை, நகை போட மாட்டோம். போட்டாலும் சொத்தில் இருந்து கழிக்கணும்!--> இதிலும் பெண்களுக்கு இரண்டில் ஒன்றுதானே கெடைக்குது சகோ :-)

   அடுத்த கோரிக்கை
   சமபங்கு கேட்டால் பெண்ணும் தாய் தந்தையை பராமரிக்க வேண்டும், குடும்ப கடனில் பங்கெடுத்துக்க வேண்டும். --> கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு பிடுங்குறதுன்னா இது தானே :-)

   ஆனால்,
   இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில்

   1. இரண்டில் ஒரு பங்கு கிடைக்கும் சொத்து பெண்ணுக்கே உரியது.

   2. அந்த சொத்துக்கு அவளே உரிமையாளவள். அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

   3. கிடைக்கும் சொத்தை எந்த வகையிலும் செலவு செய்யும் உரிமை அவளுக்கு கிடைத்துவிடுகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!

   4. அதிலிருந்து தானே மனமுவந்து கணவனுக்கு தர்மமோ (மனைவி சொத்தில் கணவனுக்கும் உரிமை இல்லை!) கொடுக்கலாம்.

   5. குடும்ப பொருளாதார தேவைக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாயம் அவளுக்கு இல்லை! பொருளாதார சுமை ஆண்களுக்கானது மட்டுமே!

   ஆக பெண்ணின் சொத்தும் அதில் அவளுக்கு இருக்கும் உரிமையும் அப்படியேதான் இருக்கு!

   -இஸ்லாமிய ஆண்கள் தான் அய்யோ பாவம் :-)))) 2 பங்கு வச்சுக்கிட்டு தாய் தந்தை பராமரிப்பு, சொத்து பராமரிப்பு, கடன், சகோதரிகளுக்கு பொருளாதார உதவி, மனைவி மக்களுக்கு பொருளாதார தேவையை பூர்த்தி செய்யணும்! ஆக இப்ப 2ஐயும் தராசு தட்டில் வச்சு பாருங்க... சமமா இருக்கா? :-)

   //பெற்றோர்களே தங்கள் வாரிசுகளுக்கு சமமாக பிரித்துக் கொடுக்கலாம் என்று நினைத்தாலும் முடியாது.//

   நேர்மையாய் இருக்கும் எந்த பெற்றோரும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணையும் வைக்க விரும்புவதில்லை. தன் மகளுக்கு சொத்தில் பாதியை மட்டும் கொடுத்து, அதே அளவு சொத்தை தன் மகனுக்கு கொடுத்து, அத்துடன் அதிகப்படியான சுமையை கொடுத்து அவதிப்பட விரும்புவதில்லை சகோ.

   //
   பண்பாடும் மனித நாகரிக வளர்சிக்கு ஏற்ப பண்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்.//

   ஏன் மனிதனால் முதலிலேயே சரியான சட்டத்தை இயற்ற முடியவில்லை? ஏன் அவனுக்கு தெரியாதா ஆணும் பெண்ணும் சமம் என்று? ஏன் முன்னொரு காலத்தில் அந்த உரிமையை பறிக்க வேண்டும்? பின் காலபோக்கில் கொடுக்க வேண்டும்? பாவம் முந்தைய காலகட்டத்தில் அவள் பெண்ணாக தெரியவில்லையா???

   இதுதான் மனித சட்டத்திற்கும் இறைசட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் சகோ. நீங்க மாறிவரும் காலத்துக்கு ஏற்ப பண்பாடுக்கு ஏற்ப, மனித நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப அடிக்கடி மாற்றம் கொண்டு வந்தாலும் சம நீதி என்ற நிலையில் யோசித்தால் இஸ்லாமிய சட்டம் சரியான ஒன்றே என்ற நிலைக்குதான் வர வேண்டும். வேறு வழி இல்லை!

   :-)

   Delete
 43. //
  திருமண சம்மதம்:

  மனதிற்கு விருப்பமில்லாத ஒருவனை காட்டி திருமணம் செய்யும் படி பெற்றோர் எம்மை வற்புறுத்த முடியாது. திருமணத்திற்கு எம் சம்மதம் தான் முதல் முக்கியமான விஷயம்//

  ஒரு ஆறுவயது பெண்ணோ (ஆயிஷா போன்றவர்கள்) அல்லது பத்து பன்னிரண்டு வயது பெண்ணோ (நிறைய முஸ்லிம் சிறுமிகள்) நிக்கா என்றால் என்ன என்று கூட அறிய மாட்டார்கள். அவர்கள் எப்படி சம்மதம் கொடுப்பார்கள்? இன்றும் இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலான பெண்கள் மிகவும் சிறு வயதிலேயே பெற்றோர்களால் மட்டுமே முடிவு செய்து நிக்கா செய்யப் படுகிறார்கள். இன்னும் கொடுமை என்ன வென்றால் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த சிறுமகளுக்கும் பெரும்பாலும் இதே கதி தான். அவர்கள் பார்த்தே இராத நாடுகளில் இருந்து பார்த்தே இராத நபர்களை கட்டாய நிக்கா தான நடக்கிறது.இதைப் பற்றி எல்லலம் வெட்கப படாமல் வேண்டும் இருக்கலாம். நீங்கள் பெருமைப் படுபவர் போலிருக்கிறது.எனது கேள்விக்கு பதில் சொல்வீர்களா?

  To be continued.

  ReplyDelete
  Replies
  1. சகோ ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு முன் உள்ள நிலையையும் அதற்கு பின் உள்ள நிலையையும் நீங்கள் புரிந்துக்கொள்ளவே இல்லை!

   சட்டம் வருவதற்கு முன்பு வரை அவர்கள் கலாச்சாரப்படிதான் வாழ்கிறார்கள். இறைவனிடத்திலிருந்து சட்டம் வரும் வரை அவர்கள் அறியாமை கால விஷயங்களையே தொடர்ந்து செய்து வருவார்கள். அதிலேயே அவர்கள் சார்ந்த சமூகம் செயல்படுவதால் அது அவர்களுக்கு தவறாகவே தெரியாது. எப்போது சட்டம் மூலம் தடை செய்யப்படுகிறதோ அதன் பின்னால் நடக்கும் மாற்றங்களை பற்றி மட்டும் தான் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

   உதாரணமாக
   தேவதாசி முறை, பாலியல் திருமணம்,உடன்கட்டை, பெண்சிசுகொலை, வர்ணாசிரமம் , முதலியை நம் தமிழ் சமூகத்தில் இருந்துவந்ததே... சொற்ப ஆண்டுகளுக்கு முன் இயற்றபட்ட சட்டத்தால் தான் இவையெல்லாம் மாறி வந்ததன! அதற்கு முன்பு வரை அவையெல்லாம் தவறென்று யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள்! சரி இதெல்லாம் விடுங்க... உங்க அக்கம் பக்கத்தில் பாட்டி எவரேனும் இருந்தால் கேட்டுபாருங்களேன்... பருவமடைவதற்கு முன் திருமணம் ஆனதாக சொல்லுவார்கள். அல்லது பருவமடைந்த சில தினங்களிலேயே திருமணம் செய்துவிட்டதாக சொல்லுவார்கள். சிறுமியை திருமணம் செய்தது நபி (ஸல்) மட்டுமா என்ன :-))))

   50 வருடங்களுக்கு முன்பு உள்ள நிலையே இப்படியென்றால் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகம் எப்படி இருந்திருக்கும்? 1400 வருடத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அவர்களிடையே தோன்றிய நாகரிகம் நாம் சமீபகாலத்தில் தான் பெற்றிருக்கோம். அவ்வொப்பீட்டை எளிதில் எல்லாரும் புறக்கணித்துவிடுகிறார்கள் :-)   சிறுமியை திருமணம் செய்யலாம் என இறைவன் கட்டளைவிதித்திருந்தால் நீங்கள் சொல்வதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் ஆயிஷா (ரலி) யை திருமணம் செய்த போது அவர்கள் அறியாமை கால கலாச்சாரத்தை தான் பின்பற்றி வந்தார்கள். அதன் பின் தான் இறைவனிடத்திலிருந்து சட்டம் இறங்குகிறது. பெண்ணின் சம்மதம் கட்டாயம் என!

   சம்மதம் தரும் பக்குவம் அவள் பருவ வயதில் தான் ஏற்படும். அதற்குள் அவளுக்கு கல்வி வழங்குவதும், சிறந்த முறையில் வளர்ப்பதும் பெற்றோர்க்கு கடமையாகிறது. ஆக ஒரு பெற்றோர் தன் கடமையை நிறைவேற்றிய பின் தான் அடுத்த கடமையான திருமணத்தை முடிக்கிறார்கள். சோ சிறுவயது திருமணத்திற்கு இஸ்லாத்தில் வேலையே இல்லை! பருவடைந்த, பக்குவமடைந்த வயதில் அவள் தரும் சம்மதம் தான் கணக்கு!

   //எனது கேள்விக்கு பதில் சொல்வீர்களா?//
   நாகரிகமான முறையில் வரும் அனைத்து கேள்விகளும் வெளியிடப்பட்டு பதிலும் கொடுக்கப்படும் :-)

   Delete
 44. அருமை சகோ. எனது மூன்று பின்னூட்டங்களையும் அனுமதித்து இருக்கிறீர்கள். நன்றி. நீங்கள் இஸ்லாமைப் பற்றிய ஒரு பொருளுள்ள வாதத்தை விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.அருமை. மிக்க மகிழ்ச்சி.நமது பகிர்வு தொடரும்.

  ReplyDelete
 45. என்ன சகோ நீங்க, பின்னூட்டங்களயும் பதில்களையும் இன்னும் அனுமதிக்காம இருக்கீங்க. ரெண்டு நாளா எனக்கு வேலையே ஓடல. ஏதேனும் பின்னூட்ட விதி மீறல்கள் இருந்தா அதை மட்டும் அழித்து விட்டு அனுமதிங்க சகோ. அப்பால நான் தெரிஞ்சுக்குவேன் இல்ல. அதுபடி கொஞ்சம் ஒழுங்க இருந்துக்குவேன் இல்ல. சீக்கிரம் செய்வீங்களா? அடிக்கடி வந்து பார்த்து பார்த்து என் கண்ணுங்களே பூத்திடும் போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. //என்ன சகோ நீங்க, பின்னூட்டங்களயும் பதில்களையும் இன்னும் அனுமதிக்காம இருக்கீங்க//

   சகோதரி ஆமினா முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் இப்போதைக்கு உங்கள் பின்னூட்டங்களை இன்னும் பார்த்துக்கூட இருக்கமாட்டார்கள்.

   //அடிக்கடி வந்து பார்த்து பார்த்து என் கண்ணுங்களே பூத்திடும் போல இருக்கு//

   ஸாரி சகோ, தாமதத்திற்கு மன்னிக்கவும். அதேசமய‌ம் ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள்! பலமுறை, பல சந்தர்ப்பங்களில் பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே நீங்கள் இங்கும் கேட்டுள்ளீர்கள். அதுவும் உங்களின் சொந்த(உண்மை)ப் பெயரோ, ஒரு முகவரியோ இல்லாமல்! உண்மையிலேயே உங்களுக்கு பதில் தெரியாமல், விளக்கம் பெறவேண்டிதான் கேட்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே கேட்கிறீர்களா என்பது எங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் கேட்கும் கேள்விகள் உங்களின் உண்மை முகத்துடன் கேட்கப்பட்டால், நாங்கள் பதில் தர எங்களுக்கும் சோர்விருக்காது. இல்லையேல் உங்கள் கேள்விகளை நாங்கள் அலட்சியப்படுத்தும் நிலை வரலாம் சகோ.

   //நீங்கள் இஸ்லாமைப் பற்றிய ஒரு பொருளுள்ள வாதத்தை விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.அருமை. மிக்க மகிழ்ச்சி.நமது பகிர்வு தொடரும்//

   உண்மையிலேயே இஸ்லாமைப் பற்றிய‌ பொருளுள்ள வாதத்தைதான் நீங்கள் தொடர விரும்புகிறீர்கள் என்றால் உங்களின் முகமூடியை நீக்கிவிட்டு வந்தால் மட்டுமே இனி பதில் தரப்படும். எனவே "நான்தான் univerbuddy" என உங்களின் உண்மை பெயருடன், பதில் சொல்லத் தகுதியான அடையாளத்துடன் வந்து அறிமுகப்படுத்திவிட்டு பிறகு உங்கள் கேள்விகளை தொடரும்படி கேட்டுக் கொள்கிறோம். அதற்கு பிறகு நீங்கள் ஏற்கனவே கேட்டுள்ள கேள்விகளுக்கும் சேர்த்து பதில் தரப்படும். புரிந்துணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறோம்.

   Delete
 46. அஸ்மா அவர்களே,
  தங்கள் பதிலுக்கு மிகவும் மகிழ்ச்சி. நிலவரம் தெரியாமல் எதிர்பார்ப்புடன் காத்திருப்பது மிகவும் கடினமான ஒன்று. அந்த விதத்தில் உங்கள்

  பதில் எனது எதிர்பார்ப்பிற்கு விடை கொடுத்து விட்டது. தங்கள் அறிமுகத்திற்கும் மகிழ்ச்சி. எனது பின்னூட்டங்கள் இரண்டாவது நபரை

  அடைந்திருப்பதிலும் மகிழ்ச்சி.

  //சகோதரி ஆமினா முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பதால் அவர்கள் இப்போதைக்கு உங்கள் பின்னூட்டங்களை இன்னும் பார்த்துக்கூட

  இருக்கமாட்டார்கள்.//

  அவர் பார்க்கும் போது ஒருவேளை பதில் தரலாம் (அவர் அனுமதித்து இருந்த ஒரு பின்னூட்டத்தைக் கூட மறைத்து விட்டீர்கள். பரவாயில்லை)

  //பலமுறை, பல சந்தர்ப்பங்களில் பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே நீங்கள் இங்கும் கேட்டுள்ளீர்கள்.//

  எனது பின்னூட்டங்கள் ஆமீனா அவர்களின் பதிவில் வரும் வாதத்திற்கான பிரதிவாதம். நான் அதற்கான பதில்கள் வேறெங்கும் கான்பதற்கான

  வாய்ப்பே இல்லை.

  //சொந்த(உண்மை)ப் பெயரோ, ஒரு முகவரியோ இல்லாமல்!//

  நான் உங்களுக்கு அறிமுகமான உங்களை சோதிக்கின்ற நபர் இல்லை.உங்களைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரியவும்

  வேண்டியதில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் யாராயிருந்தாலும் வாழ்க.நான் ஒரு தமிழ்நாட்டு ஆண் தான். என் சொந்தப் பெயரைப்

  பயன்படுத்துவதால் எனக்கோ அல்லது என் பெயரைக் கொண்ட மற்றவர்களுக்கோ ஏதேனும் பாதகம் வராமல் இருக்கவே இவ்வாறு செய்ய வேண்டி

  இருக்கிறது. உங்களுக்கு சரியாக பதில் சொல்லத் தெரியும் பட்சத்தில் பதில் அளிப்பதற்கு என்ன சங்கடம். விளக்கத் தெரியாத கேள்விகளுக்கு

  என்னால் விளக்க இயலவில்லை என்று சொல்வதிலும் என்ன சங்கடம்.

  //உண்மையிலேயே உங்களுக்கு பதில் தெரியாமல், விளக்கம் பெறவேண்டிதான் கேட்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே கேட்கிறீர்களா என்பது

  எங்களுக்கு தெரியாது//

  உண்மையிலேயே விளக்கம் வேண்டித்தான் கேட்கிறேன். அல்லா மீது சத்தியம்.

  1.//உங்கள் கேள்விகளை நாங்கள் அலட்சியப்படுத்தும் நிலை வரலாம் சகோ. //

  2.//முகமூடியை நீக்கிவிட்டு வந்தால் மட்டுமே இனி பதில் தரப்படும்//

  3.//அறிமுகப்படுத்திவிட்டு பிறகு உங்கள் கேள்விகளை தொடரும்படி கேட்டுக் கொள்கிறோம்.//

  இனி நீங்கள் வாதத்தை தொடர முடியாது என்பதை,தலாக் தலாக் தலாக் என்று மூன்று முறை கூறுவது போல,மூன்று முறை, மூன்று முறைகளில் கூறிவிட்டீர்கள். அப்புறம் என்ன. இனிமேல் 'இத்தா' தான்.

  ReplyDelete
  Replies
  1. //அவர் பார்க்கும் போது ஒருவேளை பதில் தரலாம் (அவர் அனுமதித்து இருந்த ஒரு பின்னூட்டத்தைக் கூட மறைத்து விட்டீர்கள். பரவாயில்லை)//

   நேரமில்லாத அவசரத்திலும் தெளிவான பதிலை தோழி ஆமினா உங்களுக்கு ஏற்கனவே தந்திருக்கிறார். ஆனால் உங்களின் தொடர் விமர்சனங்கள் அனைத்துமே போலி பெயரில் மட்டுமே வருவதால், இனி அவர் வந்து பார்த்தாலும் பதில் தரமாட்டார், நீங்கள் முகமூடியுடன் இருக்கும் வரை!

   //எனது பின்னூட்டங்கள் ஆமீனா அவர்களின் பதிவில் வரும் வாதத்திற்கான பிரதிவாதம். நான் அதற்கான பதில்கள் வேறெங்கும் கான்பதற்கான வாய்ப்பே இல்லை//

   எங்கெல்லாம் இஸ்லாத்தின் பெருமை பறைசாற்ற‌ப்படுகிறதோ அங்கெல்லாம் உங்களைப் போன்றவர்கள் எடுத்து வைக்கும் விதண்டாவதங்களே அதிகம்! அதற்கெல்லாம் அவ்வப்போது பதில் சொல்லப்பட்டும் அதே தோரணையான கேள்விகள் உங்களிடமிருந்தும் வருவதையே சுட்டிக் காட்டினேன்.

   //என் சொந்தப் பெயரைப் பயன்படுத்துவதால் எனக்கோ அல்லது என் பெயரைக் கொண்ட மற்றவர்களுக்கோ ஏதேனும் பாதகம் வராமல் இருக்கவே இவ்வாறு செய்ய வேண்டி இருக்கிறது//

   நீங்கள் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்வது உங்களின் அளவில் மட்டும்தான் இருக்கவேண்டும் சகோ. எங்கள் தளத்துக்கு வந்தாலும் இப்படிதான் முகம் மறைத்து வந்து பேசுவேன் என்றால், இதோ அதற்கான பதில்:

   உங்களுக்கு பாதகம் வராமல் எப்படி முகமூடி போட்டுக் கொண்டு பாதுகாக்க (?) நினைக்கிறீர்களோ, அதுபோல்தான் எங்களின் தளத்திற்கோ, எங்களுக்கோ பாதகம் வராமல் நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டியுள்ளது. ஆனால் உங்களைப் போன்று போலிப் பெயரில் நாங்கள் மறைந்து இங்கே நிற்கவில்லை என்பது உங்களுக்கே தெரியும். நெஞ்சுரத்தோடு எங்கள் சொந்த பெயரில், அவரவரின் தெளிவான இணைய‌தள அடையாள‌ங்களோடு பெண்களாகிய நாங்களே பேசுகிறோம் என்றால், "தமிழ்நாட்டு ஆண்தான்" என சொல்லிக் கொள்ளும் நீங்களும் அதுபோன்ற தெளிவான அடையாளத்தோடு வந்து எந்த விமர்சன‌ங்களையும் வைத்தால் மட்டுமே அதை நாங்கள் அனுமதிக்க முடியும்! ஏன்னா, ஒரு நிழலோடு உரையாட இங்கே யாரும் V.O. (வெட்டி ஆஃபிஸர்) இல்ல சகோ :‍-) மன்னிக்கவும்!

   //உங்களுக்கு சரியாக பதில் சொல்லத் தெரியும் பட்சத்தில் பதில் அளிப்பதற்கு என்ன சங்கடம். விளக்கத் தெரியாத கேள்விகளுக்கு என்னால் விளக்க இயலவில்லை என்று சொல்வதிலும் என்ன சங்கடம்//

   இறைவன் உதவியால் நாங்கள் உண்மையின் பக்கம் இருப்பதால் உங்களின் எந்த விதமான விமர்சனத்திற்கும் எங்களிடம் மிகச் சரியான‌ பதில் உள்ளது சகோ. விளக்கத் தெரியாத கேள்விகளை இஸ்லாத்தை நோக்கி நீங்கள் வைக்கவே முடியாது என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள் :-) "என்ன சங்கடம்" என்ற உங்களின் கேள்விக்கு, எங்களின் சங்கடமே உங்கள் முகமூடிதான். ஆனால் உங்களின் சங்கடம்..? நேருக்கு நேர் வர ஏதோ ஒரு விதத்தில் அச்சம்! அது எந்தவித அச்சமென்பது உங்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரியக்கூடியது; எங்களுக்கு அது அவசியமில்லாதது :)

   Delete
 47. நமக்கிடையேயான 'இத்தா'(பிரிவுக்கு முந்தைய இடைக்காலம்) சுமூகமாக ஆரம்பித்திருக்கிறது என்று தோன்றுகிறது. எனது கடைசி பின்னூட்டத்தை அனுமதித்து இருக்கிறீர்கள். நன்றி. அப்படியே ஆமீனா அவர்களின் இரு பதில்களுக்கு நான் அளித்திருந்த இரு பதில்களையும் அனுமதித்து விட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஒருவேளை நாம் 'இத்தாவை' புறக்கணித்து விட்டு, பின்னூட்ட விதிகளுக்கு உட்பட்டு, விவாதத்தை தொடரவும் செய்யலாம். அன்புடன் நான்தான் 'univerbuddy'. :-)

  ReplyDelete
  Replies
  1. //நமக்கிடையேயான 'இத்தா'(பிரிவுக்கு முந்தைய இடைக்காலம்) சுமூகமாக ஆரம்பித்திருக்கிறது என்று தோன்றுகிறது. எனது கடைசி பின்னூட்டத்தை அனுமதித்து இருக்கிறீர்கள். நன்றி//

   முகமூடிக்காரர்களுக்கே உரித்தான‌ தேவையில்லாத சொற்பிரயோகம்! உங்களின் கடைசி பின்னூட்டத்தை அனுமதித்தது போலிப் பெயரிலோ, தெளிவான அடையாள‌மில்லாத புனைப் பெயரிலோ, பெயரே இல்லாத அனானியாகவோ வரக்கூடியவர்களுக்கு இனி பதில் தரப்படமாட்டாது என்ற எங்களின் நிலைபாட்டை தெரிவிக்கவே! பொதுவில் உங்களை அடையாளப்படுத்துவது பாதுகாப்புக் குறைவு என நீங்கள் அஞ்சுகிறீர்கள். வேண்டுமென்றால் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு உங்களின் உண்மை விபரங்களை அனுப்பிவிட்டு விமர்சனங்களை வையுங்கள். உங்களின் ப்ரைவேஸி நிச்சயம் பாதுகாக்கப்படும் (இன்ஷா அல்லாஹ்). நீங்கள் கொடுக்கும் விபரங்கள் உண்மை என அட்மின் குழு உறுதிசெய்யும் பட்சத்தில் உங்களின் நியாயமான/ஆரோக்கியமான‌ விமர்சனங்களுக்கு பதிலளிக்கப்படும். இதுவே இறுதி முடிவு!

   //அப்படியே ஆமீனா அவர்களின் இரு பதில்களுக்கு நான் அளித்திருந்த இரு பதில்களையும் அனுமதித்து விட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஒருவேளை நாம் 'இத்தாவை' புறக்கணித்து விட்டு, பின்னூட்ட விதிகளுக்கு உட்பட்டு, விவாதத்தை தொடரவும் செய்யலாம்.//

   மேலே சொல்லியுள்ள நிலைபாட்டினைப் புரிந்து நீங்கள் அந்த விதிகளுக்கு உட்பட்டு, பிறகு விவாதத்தை தொடரவும்! அப்போதுதான் நீங்கள் அளித்திருந்த இரு பதில்களும் அனுமதிக்கப்படும். இதற்குமேல் உங்களின் விமர்சனங்களுக்கு எங்க‌ளிடமிருந்து பதிலைப் பெறும் அருமையான‌ வாய்ப்பு உங்கள் கையில்தான். that's all!

   Delete
 48. எங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் எங்களுக்கு இறைவன் கொடுத்த பரகத். அவர்களை நாங்கள் மிக கண்ணியமானவர்களாக கருதுகிறோம். இஸ்லாமிய வீட்டில் சிசு கொலைகள் நடப்பது இல்லை. முதியவர்கள் குடும்பத்தின் முக்கிய மரியாதைக்குரிய நபராக உள்ளார். இதெல்லாம் இஸ்லாத்தின் கண்ணியதன்மையை காட்டுகிறது.

  பதிவு என்பது மனதில் பதிய வேண்டும் உங்கள் பதிவை போல.! வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 49. எந்த மதமுமே பெண்ணடிமைத்தனத்தை வரவேற்றதுமில்லை...வாழ்த்தியதுமில்லை...
  மிக நல்ல பதிவு..தங்களது! ஆனால் சகோதர மதத்தை ஒப்பீடு செய்வது...சரியாக இராது.
  1400 வருடங்களுக்கு முந்தையது என்று நாம் வேண்டுமானால் பெருமிதமும்...பெரு மகிழ்வும் கொள்ளலாம்...அதே கால கட்டத்தில் தான் எத்தனையோ பெண் புலவர்களும் இந்த சமுதாயத்தை திருத்த முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்! அகநானூறு...மற்றும் புற நானூறு படியுங்களேன்...அழகாய் புரியும்.... அகத்திலும்...புறத்திலும் உள்ள அருமையான பதிவுகள்!
  அற்புதமான திரு குர்-ஆன் சொல்லும் கடமைகளை இங்கு எத்தனை முஸ்லிம் சகோதரர்கள்..சகோதரிகள் நிறைவேற்றி கொண்டு இருக்கிறார்கள்? அன்றும்...இன்றும்...என்றுமே யாரும் பெண்ணடிமைத்தனத்தை வரவேற்றதுமில்லை...வாழ்த்தியதுமில்லை... இடையில் சுய லாபத்துக்காகவும்...சொந்த நலனுக்காகவும்...அவரவர் இயற்றிக்கொண்டது தான் இன்றைய அவலங்களுக்கெல்லம் காரணம்..
  இன்னுமொரு வருந்ததக்க விஷயம்....பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி! திரு குர்-ஆன் படிப்பவராயினும்...படித்து தெளிந்தவராயினும்....

  எல்லாம் வல்ல அல்லாஹ்-வின் பெருங்கருணைக்கு பாத்தியப்பட்ட ஒரு சில நல்ல பெண்மணிகள் தவிர....

  ReplyDelete