Sunday, April 15, 2012

சிறகுகள் விரியட்டும்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பதிவுலகில் நிறைய பெண்கள் தனித்தனியாக பிளாக் வைத்து இருந்தாலும் அவர்களால் கவிதை , கட்டுரை, சமையல் குறிப்புகள் கொடுக்க முடிந்தாலும் பெரும்பாலும் இஸ்லாம் தவிர்த்த மாற்று மத சகோதர சகோதரிகளின் உள்ளத்தில் இன்னும் இஸ்லாமில் பெண்களுக்கிடையில் முழுமையான அளவுக்கு சுதந்திரம் இல்லை என்ற மனப்போக்கு இருக்கிறது . இதை பதிவுலகில் கேலி கிண்டலுடன் பல இடங்களில் ஒரு விவாதமாகவே நடந்தும் வருகிறது.
அத்தகைய மனப்போக்கிற்கு பெரும்பாலும் ஆண்களே அதிகம் பதில் கொடுத்து வந்தாலும், இஸ்லாமிய பெண்களால் மட்டுமே தனி குழுவாக தகுந்த பதில் கொடுக்க ஒரு பிளாக் தேவைப்பட்ட இக்காலத்தில் இந்த இஸ்லாமிய பெண்மணி வெளிவந்திருப்பது காலத்தின் அவசியம் ...!!
இதன் மூலம் இஸ்லாமில் பெண்களுக்குள்ள உரிமைகள் , அவர்கள்
நடந்துக்கொள்ளும் முறை இனி முழு உத்வேகத்தில் வெளிவரும் என்று நிச்சயமாக நம்பலாம் . இது பெண்களுக்காக பெண்களே முன்னின்று நடத்துவதால் அனானியாக , ஆண்கள் பெண்கள் பெயரில் போலியாக உலாவருவதும் தடுக்கப்படும்.
ஆக இது ஒட்டு மொத்த இஸ்லாமிய பெண்மணிகளின் ஓங்கிய குரலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் .இன்னும் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட அளவில் சிந்தனைகள் , நகைச்சுவைகள் , வரலாற்று பின்னணிகள் , விழிப்புணர்வு கட்டுரைகள் அனைத்தும் இந்த பிளாகில் வெளிவரும்.

முக்கிய குறிப்பு:  பங்கெடுக்க ஆர்வமிருக்கும் இஸ்லாமிய பெண்கள்  மெயில் மூலம் அல்லது பின்னூட்டம் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களின் ஆக்கங்களும் இதில் வெளியிடப்படும். இந்த முயற்சியை இறைவன் வெற்றியாக்க துஆ செய்யுங்கள். தெரிந்தவர்களிடத்தில் இந்த ப்ளாக்கை பற்றி அறிமுகம் செய்யுங்கள்

சிறகுகள் விரியட்டும்

வஸ்ஸலாம்

உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

al qur'an 03 :104


60 comments:

 1. அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்)

  மாஷா அல்லாஹ் ...!! தொடருங்கள் :-)

  ReplyDelete
 2. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அல்ஹம்துலில்லாஹ்!
  இந்த சிறந்த முயற்சியை அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா பொருந்திக்கொள்வானாக!

  ReplyDelete
 4. சலாம் சகோதரிகளே,

  மிக நல்ல முயற்ச்சியை தொடங்கி உள்ளீர்கள். இதற்க்கு நிச்சயம் நிறைய தடைகள் வரும். அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் ஆமினா, உங்கள் புதிய முயற்சி பெண்களுக்குரிய உண்மையான தேவையான உரிமைகளை சுதந்திரத்தையும் இனங்காணவும் அனைத்து பெண்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாகவும் அமையட்டும்

  ReplyDelete
 6. சிறகுகள் விரியட்டும் ///////

  ஸோ, இன்னமும் விரியவில்லை என்றுதானே அர்த்தம்! இதைத்தான் நாங்களும் சொல்கிறோம்! இன்னமும் உங்கள் சிறகுகள் விரியவில்லை! அடக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்..!! பார்க்கலாம் இனியாவது உங்கள் சிறகுகள் விரியுமா என்று???

  ” இன்னும் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்ட அளவில் சிந்தனைகள் , நகைச்சுவைகள் , வரலாற்று பின்னணிகள் , விழிப்புணர்வு கட்டுரைகள் அனைத்தும் இந்த பிளாகில் வெளிவரும்.”

  நாசமாப் போய்ச்சு...!! மறுபடியும் வரம்பா? அதுவும் “ மத” வரம்பா? இதுக்கு நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்காமலே இருந்திருக்கலாம்!

  குயில்களே கூவுகள்! உங்கள் “ சுருதியை” வைத்தே நாம் கணிப்போம்! -

  இயல்பாகக் கூவுகிறீர்களா? அன்றேல் -
  கூவச் சொல்லுக் கூவுகிறீர்களா? என்று...!!

  ஆ..... சொல்ல மறந்துட்டேன்! இங்கு ஐரோப்பாவிலும் நிறைய “ இஸ்லாமிய” பெண்மணிகள் இருக்கிறார்கள்!

  வட் இஸ் த ஃபூல் ஆஃப் த இடியட் ஆஃப் த கன்ரிபுரூட் ஆஃப் த பர்தா என்கிறார்கள்!

  ம்...... நாம் நிறையவே பேசலாம்! பதில்களைத் தயார்செய்து வைத்திருங்கள்!

  உங்கள் சிறகுகள் விரிய ( ???? ) வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 7. ஆமினா சிறகுகள் விரியட்டும் நல்லதொரு முயற்சி என் ஆதரவை முழுமையாக குடுத்து விட்டேன் ஆமினாவிற்க்கு வாழ்த்துக்கள்!!!!!!! வாழ்க! வழமுடன்!....

  ReplyDelete
 8. ஆமினா சிறகுகள் விரியட்டும் நல்லதொரு முயற்சி என் ஆதரவை முழுமையாக குடுத்து விட்டேன் ஆமினாவிற்க்கு வாழ்த்துக்கள்!!!!!!! வாழ்க! வழமுடன்!....

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அழைக்கும்,சகோ

  சிறகுகள் விரிய பறக்கட்டும் ..இன்ஷால்லாஹ் .

  அல்லாஹ் வின் உதவியோடு நாம் தொடரலாம் ..என்ன தடைகள் வந்தாலும் சிறகை விரித்து .இன்ஷால்லாஹ் .

  ReplyDelete
 10. மாஷா அல்லாஹ் சகோதரிகளின் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எங்களுடைய ஆதரவுகள் என்றென்றும் உண்டு.அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் வெற்றிகளை தந்தருள் புரிவானாக.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி !!!!

  ReplyDelete
 13. மிஸ்டர் ஐடியா மணி நேறைய பேசுவோமா?

  ///ஸோ, இன்னமும் விரியவில்லை என்றுதானே அர்த்தம்! இதைத்தான் நாங்களும் சொல்கிறோம்! இன்னமும் உங்கள் சிறகுகள் விரியவில்லை! அடக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்..!! பார்க்கலாம் இனியாவது உங்கள் சிறகுகள் விரியுமா என்று???///

  ஒக்காந்து அதன் குழந்தைகளை கவனித்துக் கொண்டு அமைதியாக இருந்த பறவைகளை அதன் எதிரிகள் பறவைக்குஞ்சை அபேஸ் பண்னிட்டு போக வரும் போது கோபத்தோட சிறகை விரிச்சு கொத்த வரும் பாருங்க அந்த சிறகு விரித்தால் புரிந்தததா?

  கழுகு வராத வரை
  எந்த தாய்க் கொழியும்
  தன் சிறகை விரிப்பதில்லை
  சிறகை விரித்து விட்டால்
  கழுகையும் விடுவதில்லை

  ReplyDelete
 14. ஸலாம் சகோ..

  வாழ்த்துக்கள்...சிறந்த திறனை வெளிப்படுத்த நல்ல களம் வேண்டும்.இது மிகச்சிறந்த களம்..உங்களது திறனை எழுத்தில் வரையுங்கள்.. விமர்சிக்கும் உலகு இன்ஷா அல்லாஹ் வியக்கட்டும்...

  அருமையான முயற்சி..

  வல்லோன் காரியங்களை எளிதாக்கப் போதுமானவன்

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 15. தங்களது முயற்சிக்கு என் பிரார்த்தனைகள் தொடருங்கள்

  ReplyDelete
 16. Assalamu alaikkum
  நல்ல முயற்ச்சி அல்லாஹ் அதற்க்குரிய கூலியைத் தந்தருள்வானாக

  ReplyDelete
 17. @Ideamani

  //குயில்களே கூவுகள்! உங்கள் “ சுருதியை” வைத்தே நாம் கணிப்போம்! -

  இயல்பாகக் கூவுகிறீர்களா? அன்றேல் -
  கூவச் சொல்லுக் கூவுகிறீர்களா? என்று...!!//

  மேடை ஏறியாச்சு. சுத்தி இருக்கிறவங்களாம் முட்டாள்கள் இல்லைன்னு குயில்களுக்கு தெரியும். ஏன்னா குயில்களும் முட்டாள்கள் இல்லை :-)

  //ஆ..... சொல்ல மறந்துட்டேன்! இங்கு ஐரோப்பாவிலும் நிறைய “ இஸ்லாமிய” பெண்மணிகள் இருக்கிறார்கள்!

  வட் இஸ் த ஃபூல் ஆஃப் த இடியட் ஆஃப் த கன்ரிபுரூட் ஆஃப் த பர்தா என்கிறார்கள்! //

  உங்க அளவுக்கு உளவியல் தெரியலன்னாலும் ஒரு சிம்பிள் லாஜிக் சொல்லட்டுமா?
  உங்கள் உள்ளத்தின் முடிவு படியேதான் உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும் இருக்கும்!

  பிரான்ஸ்ல இருக்குறவங்க "வட் இஸ் த ஃபூல் ஆஃப் த இடியட் ஆஃப் த கன்ரிபுரூட் ஆஃப் த பர்தா" ன்னு பேசிய அதே அளவுக்கு "ஐ லவ் ஹிஜாப்"ன்னு எத்தனையோ தடவை நமக்குள் நடந்த விவாதத்தில் சொல்லியும் என் கருத்து எடுபடல பாத்தீங்களா? !
  உங்கள் முடிவுபடி
  *அவங்களும் முஸ்லீம் தான். நானும் முஸ்லீம் தான்.
  *அவங்க வெறுக்குறாங்க. நான் ஆதரிக்கிறேன்.

  நீங்க ஹிஜாப்பை வெறுக்குறதுனால ஹிஜாப்பை வெறுக்கும் அவங்க பக்கம் தான் நிப்பீங்க :-)
  ஆக யாருடைய முன்முடிவையும் என்னால் மாற்ற முடியாது. அது கஷ்ட்டம் !
  ஆனால் என் கருத்தை என்னால் சொல்ல முடியும்! அதற்காக தான் இந்த தளம் :-)

  //ம்...... நாம் நிறையவே பேசலாம்! பதில்களைத் தயார்செய்து வைத்திருங்கள்! //
  ஓரளவுக்கு பதிவுலக அரசியல் தெரியும் மணி :-) உங்க வருகை பலவகைகளில் எனக்கு உதவும் :-) maybe எனக்கும் பலதெரியாத விஷயங்களை புரிந்துக்கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் :-)

  //
  உங்கள் சிறகுகள் விரிய ( ???? ) வாழ்த்துக்கள்!!!! //

  உப்பில்லாத பண்டம் மட்டுமல்ல!
  மனதார கொடுக்காத பண்டங்களும் கூட குப்பையிலே! :-)

  உங்கள் வருகைக்கும் என்னை மேலும் அதிகமாக தூண்டி என்னை மேலும் மேலும் வீரியமாக செயல்பட வைத்த உங்கள் கருத்துக்கும் நன்றி மணி (மனதாரதான் சொல்றேன் :-)

  ReplyDelete
 18. அன்பு சகோ ஐடியா மணி உங்கள் மீது ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,

  ==வட் இஸ் த ஃபூல் ஆஃப் த இடியட் ஆஃப் த கன்ரிபுரூட் ஆஃப் த பர்தா என்கிறார்கள்! ==
  இருக்கலாம் இஸ்லாம் குறித்த அவர்கள் புரிதல் அப்படி...

  சகோதரிகள் புரிந்திருக்கும் இஸ்லாத்தை இங்கே ஆக்கமாக வரையட்டும். அப்போது உங்கள் கருத்துக்களை பதியுங்கள்

  உங்களின் ஆக்கப்பூர்வமான கேள்விகளையும் அதற்கு சகோதரிகளின் பதில்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.-இன்ஷா அல்லாஹ்

  இறைவனுக்கும்,சக குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி, இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் என போலியாய் சமத்துவம் பேசும் அறிவினர்களுக்கெதிராய் பதிவுலகில் விரியட்டும் உங்கள் எழுத்து சிறகுகள்

  உங்கள் சகோதரன்
  குலாம்.

  ReplyDelete
 19. நல்ல முயற்சி தொடங்குகள் அல்லாஹ் லேசகித் தருவானகா

  ReplyDelete
 20. சகோதரர் மணி,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக..

  முதலில் ஹிஜாப், பர்தா குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  ஹிஜாப் - இஸ்லாம் பெண்களை அணிய சொல்வது (அந்நியர்கள் முன்பாக முகம், கைமணிகட்டுகள் தவிர்த்து உடலின் மற்ற பாகங்கள் தெரியா வண்ணம் உடையணியும் முறை)

  பர்தா/புர்கா - இது இஸ்லாம் சொல்லாதது (முகத்தையும் மூடும் வண்ணம் உடையணிவது)

  பிரான்சில் புர்கா தடைசெய்யப்பட்ட போது சகோதரி அஸ்மா அருமையான பதிவு ஒன்றை எழுதினார்கள். விருப்பம் இருந்தால் பாருங்கள்
  http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_12.html

  என் உறவினர்கள் பலர் பிரான்சில் வசிக்கின்றனர் (சுமார் இருபது குடும்பங்கள்). அவர்கள் அனைவரும் ஹிஜாப் அணிவார்கள். இஸ்லாமிய அடிப்படையை புரியாமல் சிலர் இருந்தால் அதனை வைத்து அடுத்தவரை விமர்சிப்பது அறிவார்ந்த செயல் கிடையாது. இது அனைவருக்கும் எளிதான புரியக்கூடிய விசயம்.

  அதுமட்டுமல்லாமல், இன்னும் பல்லே கட்டவில்லை, அதற்குள்ளாக பக்கோடா சாப்பிட அவ்வளவு என்ன அவசரம்?

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 21. மாஷா அல்லாஹ்...... வலையுலகில் வெற்றிகரமாக உலாவர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. நான் மனதார வாழ்த்துகிறேனா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க, முதலில் இஸ்லாமிய பெண்கள் குறித்து எழுப்பப்பட்டும் கேள்விகளுக்கு, சில இஸ்லாமிய பெண்கள் சேர்ந்து பதிலளிக்க முன் வந்திருப்பது, நிச்சயமாக ( மனதார)ப் பாராட்டப் படவேண்டியதொன்றே! - இதைக் குப்பைக்குள் போட்டுவிடாதீர்கள் :-))

  மேலும், பெண்கள் பதில் சொல்லப் போகிறார்களாம் என்று கேள்விப்பட்டதால் தான் இங்கு வந்தேனே தவிர, ஆண்களின் பதில்களை எதிர்பார்த்து அல்ல! - ஏற்கனவே போதியளவுக்கு ஆண்களின் பதில்களைக் கேட்டாயிற்று! இருப்பினும் சகோதரர் குலாம் சொன்ன கருத்தை ஏற்கிறேன்! முதலில் சகோதரிகளைப் பேச விட்டு, பின்னர் கேள்விகள் கேட்பது பொருத்தம் தான் :-))

  மற்றும், சகோதரர் ஹைதர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு ஒண்ணுமே புரியல! விஜயசாந்தி படத்தில் பஞ் டயலாக் பேசியது போல இருக்கு! விட்டுவிடலாம்!:-))))

  ஆமினா - என்னுடைய வருகை உங்களுக்கு மேலும் உற்சாகம் தரும் எனில் அது எனக்கு மகிழ்ச்சி தான் :-)

  இங்கு நான் காணும் 95 வீதமான இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதில்லை! மேலும் பர்தா அணிவது பிற்போக்குத்தனம் என்று, இஸ்லாமிய பெண்களே தங்கள் வாயால் சொல்லும் வீடியோக்களை தேவைப்பட்டால் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்!

  சரி அதெல்லாம் இருக்கட்டும்! ஆமினாவுக்கு ஏன் பர்தா பிடித்துள்ளது? - இந்த அடிக்கும் வெயிலுக்குள்???

  அறிய ஆசை.....!!!

  ReplyDelete
 23. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  பதிவுலகில் பிறந்த அன்றே பக்கோடா திங்க பல் தேவை படுது.
  கரும்பு தின்ன கூலியா? இஸ்லாம் பற்றி பேச எங்களுக்கு என்ன தயக்கம் என்று தெளிவாக சொல்லி இருக்குறீர்கள்

  ReplyDelete
 24. Assalamu alikum
  congirats aapa!
  Ungal pani menmelum sirapadaiya eraivanidam vendukiren!

  ReplyDelete
 25. இஸ்லாமியப் பெண்மணி ..?

  ReplyDelete
 26. அஸ்ஸலாமு அலைக்கும்

  நல்ல முயற்சி. எழுதுங்கள்!

  ReplyDelete
 27. தருமி

  //இஸ்லாமியப் பெண்மணி ..? //

  ஆமாம்

  (url ல உள்ளபடியே போட்டாச்சு)

  ReplyDelete
 28. மாஷா அல்லாஹ், விரியட்டும் சிறகுகள் :)


  "பொருமை" ‍ இதை அதிகம் கடைபிடியுங்கள் ...

  இந்த தளத்தின் உரிமையாளர் தவிர்த்து மற்றவர்கள் "கருத்து"க்கு கருத்து கூறுவதை தவிர்ப்போம், இருக்கும் இடுக்கைக்கு மட்டுமே நமது கருத்துகள் இருக்கட்டும் மற்றவற்றை இவர்களே பார்த்து கொள்வார்கள் ...

  ReplyDelete
 29. @ ஐடியாமணி,

  உங்கள் மீது அமைதி நிலவுவதாக...

  //இங்கு நான் காணும் 95 வீதமான இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதில்லை! //

  ஸ்ப்ப்பா...மறுபடியும் முதல்லேந்தா. அட அத என்ன நீங்க சொல்றது. அது நீங்க சொல்லாமையே எங்களுக்கு தெரியும் பிரதர். பிரஞ்சு அரசாங்க அறிக்கைப்படி பர்தா அணியும் சகோதரிகளின் எண்ணிக்கை தடையின் போது சுமார் 250 தானாம். இப்ப என்ன மேட்டர் என்றால் பர்தா என்பது இஸ்லாம் கூறக்கூடிய ஒன்றல்ல. ஆகையால் பர்தா அணியவில்லை என்றாலும் அவர்கள் இஸ்லாமிய வரையறையை மீறியவர்கள் இல்லை. முதலில் பர்தா ஹிஜாப் வித்தியாசத்தை தெரிந்துக்குங்க. அத விட முக்கியம், இஸ்லாம் பெண்களின் உடை குறித்து என்ன சொல்லுதுன்னு தெரிந்துக்குங்க..

  //மேலும் பர்தா அணிவது பிற்போக்குத்தனம் என்று, இஸ்லாமிய பெண்களே தங்கள் வாயால் சொல்லும் வீடியோக்களை தேவைப்பட்டால் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்//

  இன்னொரு ஸ்ப்பா...பர்தா இஸ்லாமிய வழிமுறை இல்லையென்று சொல்கின்றேன். அப்புறம் நீங்க வீடியோ கொடுத்தா என்ன கொடுக்கலேன்னா என்ன? சரி அத விடுவோம். ஒரு வாதத்துக்கு பர்தாவை ஆதரித்து பேசும் முஸ்லிம் பெண்களின் கருத்துக்களை நான் காட்டி விட்டால் டேலி ஆகிடுமா? இல்ல, நீங்க அவங்க கருத்துக்களை ஒத்துக்குவீங்களா?

  ரொம்ப கஷ்டம்.

  பெண்கள் எங்களை கமெண்ட்ஸ் பக்கம் வர வேணாம்னு சொல்றாங்க. நாங்களே பார்த்துக்குரோம்னு சொல்றாங்க. சோ நான் இனி அவசிய தேவை ஏற்பட்டால் ஒழிய வர மாட்டேன்..

  நன்றி.

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் நல்ல முயற்சி இஸ்லாமிய சகோதரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  Syed Abthayar
  Dubai

  ReplyDelete
 31. ///மற்றும், சகோதரர் ஹைதர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு ஒண்ணுமே புரியல! விஜயசாந்தி படத்தில் பஞ் டயலாக் பேசியது போல இருக்கு! விட்டுவிடலாம்!:-))))/////

  ஒவரா நீங்க பேசும் போதே நினைத்தேன் அதிகமாக தெலுங்கு படம் பார்க்கிறீர்கள் என்று இப்ப விசயசாந்தியை உதாரணம் காட்டி நீருபித்தீர்

  அப்புறம் ஆமினா சரியாக சொன்னார்
  /////உங்கள்உள்ளத்தின் முடிவு படியேதான் உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும் இருக்கும்!////

  அது ரோம்ப சரியாகத்தான் இருக்கிறது விசயசாந்தி படத்தை குறைத்து பார்க்கவும் சரியா?

  ReplyDelete
 32. முஸலிம் பெண்கள் இணைய உலகில் இன்ஷா அல்லாஹ் சிறந்த முன்னோடியாகத் திகழப்போகிறார்கள் என்னும் நம்பிக்கைச் சிறகுகள் விரியட்டும்

  ReplyDelete
 33. //இதைக் குப்பைக்குள் போட்டுவிடாதீர்கள் :-))//

  மனதார வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி :-)

  //ஆண்களின் பதில்களை எதிர்பார்த்து அல்ல!//
  என்ன பண்ண... தங்கச்சிக்கு ஒன்னுன்னா துடிச்சுடுறாங்க :-)

  //
  இங்கு நான் காணும் 95 வீதமான இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதில்லை! மேலும் பர்தா அணிவது பிற்போக்குத்தனம் என்று, இஸ்லாமிய பெண்களே தங்கள் வாயால் சொல்லும் வீடியோக்களை தேவைப்பட்டால் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்! //

  இதுக்கு எதுக்கு மணி ஆதாரம்? நானே முன்பு "இதென்ன முட்டாள்தனம்? சீ" என வெறுத்து ஒதுக்கியவள் தான்... போட்டபின் தான் அருமை தெரியுது. யார் மட்டம் தட்டினாலும் கோபம் பயங்கரமா வருது :-)

  ReplyDelete
 34. @ஐடியாமணி
  //சரி அதெல்லாம் இருக்கட்டும்! ஆமினாவுக்கு ஏன் பர்தா பிடித்துள்ளது? - இந்த அடிக்கும் வெயிலுக்குள்???

  அறிய ஆசை.....!!!//

  இந்த அடிக்கும் வெயிலில் தான் கழுத்து மேல் பட்டன் கூட போட்டு கழுத்தை நெறிக்கும் அளவுக்கு டை கட்டிவிட்டு
  இருக்கும் வெப்பம் பத்தாதுன்னு சூ அன்ட் சாக்ஸ் வேற... இப்படிதான் என் மகன் காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் இருக்கிறான். ஐரோப்பிய நாட்ல சரிதான்.. தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த மாதிரின்னு இத யாரும் இன்னும் எதிர்த்து போராடல ஏன் ஐடியாமணி :-) வெயிலுக்குள் எதுக்கு பெண்களுக்கு ஹிஜாப்ன்னா, வெயில் பிரதேச நாட்டில் ஏன் இந்த கோட் சூட் போட்டுட்டு அலையுறாய்ங்க??...... இப்படியே கேட்டுட்டே போகலாம்.... உதாரணம் முடியவே முடியாது :-)

  ஹிஜாப் என்பது ஒன்னும் ப்ளாங்கெட் இல்லையே? லேசான துணி மேலாக அணிந்துக்கொள்வதில் ஆமினாவுக்கும் வெயிலுக்கும் என்ன சம்மந்தம் ? :-)

  அப்பறம் தயவு செய்து ஒரு விஷயத்தை மனதில் நிறுத்திக்கோங்க. இஸ்லாம் பர்தா,புர்காவை அனுமதிக்கல! கண்ணை,முகத்தை மூடும்படி சொல்லல... ஹிஜாப் வேறு! பர்தா புர்கா வேறு! அடுத்த முறை விவாதிக்க உதவும்.

  அறிமுகப்பதிவிலேயே எல்லாமே பேசிட்டா ஹிஜாப் பத்தி பதிவில் பேசும் போது விவாதிக்க முடியாம போயிடும். புரிஞ்சிருப்பீங்கன்னு நம்புறேன்...

  நன்றி

  ReplyDelete
 35. அப்பறம் தயவு செய்து ஒரு விஷயத்தை மனதில் நிறுத்திக்கோங்க. இஸ்லாம் பர்தா,புர்காவை அனுமதிக்கல! கண்ணை,முகத்தை மூடும்படி சொல்லல... ஹிஜாப் வேறு! பர்தா புர்கா வேறு! அடுத்த முறை விவாதிக்க உதவும்.

  சுட்டிக்காட்டியதுக்கு மிக்க நன்றி ஆமினா! எனக்கு நிஜமாவே இந்த பெயர் வித்தியாசங்கள் தெரியவில்லை! அதில் தவறுகூட இல்லை! நான் வெளியில் இருந்து பார்க்கும் ஒருவன் தானே! ஆகவே நான் தவறாகக் கேள்வி எழுப்பினாலும், பொறுமையாகப் பதிலளிப்பது உங்களின் கடமை!

  மேலும்,

  இருக்கும் வெப்பம் பத்தாதுன்னு சூ அன்ட் சாக்ஸ் வேற... இப்படிதான் என் மகன் காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் இருக்கிறான். ஐரோப்பிய நாட்ல சரிதான்.. தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த மாதிரின்னு இத யாரும் இன்னும் எதிர்த்து போராடல ஏன் ஐடியாமணி :-)”

  இது 100 வீதம் உண்மை! ஒத்துக்கறேன்! ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே?

  அடுத்து,


  //ஆண்களின் பதில்களை எதிர்பார்த்து அல்ல!//
  என்ன பண்ண... தங்கச்சிக்கு ஒன்னுன்னா துடிச்சுடுறாங்க :-)

  ஹா ஹா ஹா அதென்ன தங்கச்சிக்கு ஒண்ணுன்னா ?? நான் உங்களிடம் கேள்வி கேட்டதைத் தவிர வேறெந்த தப்பும் பண்ணலியே? அப்புறம் எதுக்கு இந்தத் துடிப்பு? கொதிப்பு? உங்கள் அண்ணன்களை கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்கள்! நான் உங்கள் கருத்தை அறியத்தான் இங்கு வந்தேன்! மற்றும்படி எனக்கு இங்கு எந்த அலுவலும் இல்லை!

  தொடர்ந்து, எனது கேள்விகளுக்கு உங்கள் அண்ணன்களே பதில் சொல்வார்களாக இருந்தால், நான் இந்தப் பக்கமே வரமாட்டேன்!

  மேலும் உங்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு இன்னொருவர் பதில் சொல்வது, தெளிவான ஒரு செய்தியைச் சொல்கிறது - அது என்னவென்றால், பதிலளிக்கும் உரிமைகூட உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது என்பது!

  சரி அதைவிடுங்க!

  இதுக்கு எதுக்கு மணி ஆதாரம்? நானே முன்பு "இதென்ன முட்டாள்தனம்? சீ" என வெறுத்து ஒதுக்கியவள் தான்... போட்டபின் தான் அருமை தெரியுது. யார் மட்டம் தட்டினாலும் கோபம் பயங்கரமா வருது :-)

  இதில் கோபப்பட என்ன இருக்கு ஆமினா? ஒவ்வொரு கேள்விக்கும் நியாயமாகப் பதிலளிக்க உங்களால் முடியும் எனும்போது, கோபம் எதுக்கு? கூல்!!

  சரி, நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் வரவில்லை! அதனால் திரும்பக் கேட்கிறேன்!

  ஆமினாவுக்கு ஏன் ஹிஜாப் பிடித்துள்ளது? அல்லது அவசியம்??

  ReplyDelete
 36. //ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே? //

  ம்ம் அப்படியா?
  வெயிலுக்கு ஏன் ஹிஜாப்ன்னு கேட்டதுனால சொன்னேன் :-)


  //ஆமினாவுக்கு ஏன் ஹிஜாப் பிடித்துள்ளது? அல்லது அவசியம்?? //

  *மற்றவர்கள் பார்வையில் காட்சி பொருளாய் நிற்க எனக்கு விருப்பமில்லை.

  *மற்றவர்களின் பார்வையில் கன்னியமாய் தெரிய விரும்புகிறேன்.

  *என் உடல் அங்கங்களை வர்ணிக்கும் கேலி செய்யும் சில பிறவிகளின் பார்வையில் இருந்து தப்ப நினைக்கிறேன்.

  இன்னும் சொல்லிட்டே போகலாம்... பிடித்த விஷயத்துக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லமுடியும் :-)
  அவசியம் ஏற்பட்டதால் பிடித்துள்ளது :-)

  மிச்சத்தை ஹிஜாப் பற்றிய பதிவில் தொடரலாம்

  நன்றி

  ReplyDelete
 37. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் இஸ்லாமிய பெண்மணிகளுக்கு,
  "சிறகுகள் விரியட்டும்" என்ற ஒற்றை வார்த்தையே ஆயிரம் விளக்கங்கள் சொல்கிறது. நபிகள் நாயகம் காலத்திற்கு பிறகு பல்வேறு தோழர்கள் தமக்கு ஏற்படுகிற சந்தேகங்களை அறிவுச்சுடராம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று தான் விளக்கம் கேட்டு தெளிவு பெறுவார்கள். இன்று களம் கண்டிருக்கின்ற உங்களுக்கு அன்றே அறிவுக்களம் கண்ட அன்னை ஆயிஷா (ரலி) போன்ற பல்வேறு சஹாபிய பெண்மணிகள் முன்மாதிரிகளாக இருக்கின்றனர். சகோதரிகளே உங்களின் அறிவுச் சிறகுகள் விரியட்டும். இஸ்லாமோபோபியாகாரர்களின் சந்தேகங்கள் நீங்கட்டும். வல்ல இறைவன் அருள் புரிந்து உங்களின் முயற்சிகளில் வெற்றியை தருவானாக.

  ReplyDelete
 38. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..),

  மிகவும் நல்ல முயற்சி சகோதரி, இறைவன் தங்களின் பணிக்கு நற்கூலி வழங்குவானாக...

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..),

  மிகவும் நல்ல முயற்சி சகோதரி, இறைவன் தங்களின் பணிக்கு நற்கூலி வழங்குவானாக ஆமீன்.

  தங்களின் சிறகுகள் தரமான படைப்புக்கள் மூலம் இன்னும் விரிவடையட்டும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. அல்ஹம்துலில்லாஹ்!
  நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 40. எனது கேள்விக்குப் பதில் சொன்னமைக்கு மிக்க நன்றி ஆமினா! உங்களின் பதிலில் இருந்து எனக்கு இன்னமும் பல நூறுகேள்விகள் பிறந்துள்ளன! அவற்றையும் கேட்டு பதிலறியவே விரும்புகிறேன்!:-)

  அவை ஹிஜாப் பற்றிய கேள்விகள் என்பதால், இங்கு வைத்துக் கேட்காமல், ஹிஜாப் குறித்த பதிவில் கேட்கலாம் என்று இருக்கிறேன்!

  நான் கேள்விகள் கேட்பதை நீங்கள் விரும்புவீர்கள் என்றே நினைக்கிறேன்! காரணம்,

  ’இஸ்லாமிய பெண்களால் மட்டுமே தனி குழுவாக தகுந்த பதில் கொடுக்க ஒரு பிளாக் தேவைப்பட்ட இக்காலத்தில் இந்த இஸ்லாமிய பெண்மணி வெளிவந்திருப்பது காலத்தின் அவசியம் ...!!’

  என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதால்.....!!

  பதில் சொல்வதற்காகவே ஒரு ப்ளாக் தொடங்கப்படும் போது :-), கேள்விகள் கேட்பதில் ஒன்றும் தவறு இல்லையே?? :-)

  எனவே, கேள்விகள் தொடரும்..........!!! :-)))

  ReplyDelete
 41. Ideamani - The Master of All

  //பதில் சொல்வதற்காகவே ஒரு ப்ளாக் தொடங்கப்படும் போது :-), கேள்விகள் கேட்பதில் ஒன்றும் தவறு இல்லையே?? :-)//

  நிச்சயமாக இல்லை.

  விவாதிப்பதற்கு தான் இந்த தளம்.

  //எனவே, கேள்விகள் தொடரும்..........!!! :-))) //

  வாழ்த்துகள்

  ReplyDelete
 42. சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டும்
  அன்பின் சகோதரர் ஐடியா மணி,
  இந்த தளம் ஆமினா என்ற தனி ஒரு சகோதரியால் நடத்தப்படுகின்ற தளமல்ல. மாறாக இஸ்லாமிய பெண்களின் கூட்டு முயற்சியால் உருவானதொரு தளம். எனவே உங்களின் கேள்விகளுக்கு ஆமினா தவிர்த்த மற்ற சகோதரிகளும் பதில் கொடுப்பதற்கான உரிமை உண்டு. இது ஒரு தகவலுக்காக மட்டுமே.

  @இஸ்லாமிய பெண்மணிகளுக்கு,
  கேள்விகள் மட்டுமல்ல கேட்கப்படுகின்ற மையப்பொருள் குறித்த தக்கதொரு தீர்வையும் கேள்வி கேட்பவர்களிடமிருந்து கேட்க வேண்டும் என்பது எனது நிலை. ஏனெனில் வெறுமனே கேள்வி மட்டுமே கேட்பேன் அது குறித்த எந்தவொரு தீர்வையும் எனக்கு சொல்ல தெரியாது என்பது கருத்து பரிமாற்றத்திற்கு வலு சேர்க்காது. எனவே யார் கேள்வியை முன்வைத்தாலும் அது குறித்த அவர்களின் தீர்வையும் சொல்ல சொல்லுங்கள். அதற்கு பின்னர் எந்த தீர்வு (இஸ்லாம் வழங்கும் தீர்வா அல்லது வேறொரு தீர்வா) இயல்பானதாக, சரியானதாக இருக்கும் என்பதை விளக்கி சொல்லுங்கள்.

  ReplyDelete
 43. அன்பின் சகோதரர் ஐடியா மணி,
  இந்த தளம் ஆமினா என்ற தனி ஒரு சகோதரியால் நடத்தப்படுகின்ற தளமல்ல. மாறாக இஸ்லாமிய பெண்களின் கூட்டு முயற்சியால் உருவானதொரு தளம். எனவே உங்களின் கேள்விகளுக்கு ஆமினா தவிர்த்த மற்ற சகோதரிகளும் பதில் கொடுப்பதற்கான உரிமை உண்டு. இது ஒரு தகவலுக்காக மட்டுமே. ////////

  தகவலுக்கு நன்றி சகோ ஷேக் தாவூத், எனக்கு ஆமினாவை மட்டும் தான் தெரியும்! அவர் எமது குழுமத்தில் நிர்வாகியாக இருந்ததால் :-)) ஏனைய சகோதரிகளை தெரியவில்லை!

  சரி யார் பதில் சொன்னாலும் எனக்கு ஓகே தான் :-))

  ReplyDelete
 44. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 45. wish you all the best i except perfect answer about women's questions

  ReplyDelete
 46. இன்ஷா அல்லாஹ் நானும் இதில் இணைகிறேன்.
  நல்லதொரு முயற்ச்சி ஆமிக்கா..

  இறைவன் வெற்றியைதருவானாக..

  மெயிலில் எனது கவிதையை அனுப்புகிறேன்.. ஏற்கனவே நான் அக்கவிதை எனது தளத்திலும் வெளியிட்டுள்ளேன்..

  ReplyDelete
 47. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
  வாழ்த்துக்கள் சகோதரி.. :) உண்மையிலேயே ஒரு நல்ல முயற்சி... :)
  எனக்குள்ளும் கடந்த சில நாட்களாய் மனதை உறுத்தி கொண்டு இருந்த விஷயம் தான் இது..
  மாற்று மத சகோதரர்களும் இஸ்லாத்தை பற்றி புரிந்து அதை ஏற்று கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆசையில் கடந்த சில நாட்கள் முன்புதான் பதிவுகளை எழுத ஆரம்பித்து உள்ளேன் ஹிஜாப் பற்றிய பதிவு ஒன்று இன்றுதான் எழுதி முடித்து உள்ளேன்....
  சகோதரர் idea mani நேரம் இருந்தால் இந்த பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... :)http://ariviyalputhaiyalalquran.blogspot.com/2012/04/blog-post_18.html
  நன்றி........
  தொடரட்டும் உங்கள் நற்பணி ... விரியட்டும் நம் சிறகுகள்..........

  ReplyDelete
 48. அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரிகளே!
  ஆரம்பமே அற்புதமாக அமைந்துவிட்டது. சிறப்பாக செயல்படுங்கள்! அல்லாஹ் துணையிருப்பான்.

  ReplyDelete
 49. மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 50. assalamu alaikkum,

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 51. இஸ்லாமிய பெண்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  உங்கள் அனைவருக்கும் நான் என் மனதில் பட்ட சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். அது சரியா தவறா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நான் ஓன்றும் அறிவு ஜீவி அல்ல ஒரு எளிமையான சாதாரண மனிதன் தான்.


  நீங்கள் இஸ்லாத்தை பற்றி இங்கு பேசும் போது அல்லது கருத்து தெரிவிக்கும் போது அதை ஒரு போதனையாக செய்யாதீர்கள் அல்லது மாற்று மதத்தவரின் மீது தீணிக்க முயற்சி செய்யாதீர்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு எளிதில் புரியும்படி விளக்குங்கள். அதாவது வாழ்ந்து காட்டுங்கள்.

  உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் இஸ்லாத்தை வெறுக்கும் ஒரு குடும்பத்தார் இருப்பதாக வைத்து கொள்ளுங்கள். முதலில் மதம் அல்ல உங்களின் கண்ணியமான வாழ்க்கை அவர்களுக்கு உங்கள் மீது ஒரு ஈடுபாட்டை கொண்டு வர வேண்டும். அதற்கான முயற்சியை நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு அருகில் உள்ளவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் நீங்கள்தான் முதன் முதலில் சென்று உதவ வேண்டும் பரிவு காட்ட வேண்டும் ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படிபட்ட செயல்களின் மூலம்தான் நீங்கள் ஒரு உண்மையான முஸ்ஸிம் என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதை நீங்களும் மற்ற முஸ்லிம்களும் செய்தால் நீங்கள் யாருக்கும் போதனை செய்ய வேண்டியது இல்லை.


  நீங்கள் இந்த வலைத்தளத்தை நல்ல நோக்கில் ஆரம்பித்து இருப்பதால் நான் மேலும் ஓன்றை கூற விரும்புகிறேன். இங்கு பயனுள்ள விஷயங்களை பதிவது மட்டுமல்லாமல் பயனுள்ள கருத்துக்களூக்கு மட்டும் பதில் அளியுங்கள். மதத்தை மதமாக நினைத்து கேள்வி கேட்போரின் பின்னுட்டங்களுக்கும் கருத்துகளுக்கு கருத்து அளியுங்கள் ஆனால் மலமாக நினைத்து சாக்கடைடையை அள்ளி வீசுபவர்களுக்கு பதில் அளித்து சந்தனமாக மணம் வீசக் கூடிய இந்த வலைத்தலத்தை சாக்கடையாக ஆக்கிவிட வேண்டாம்.

  நான் மேலே கூறிய கருத்துக்கள் மனத்தையும் மனித நேயத்தையும் நேசிக்கும் ஒரு சாதாரணமான ஒருவனின் கருத்து.
  இதில் நான் தவறாகவோ அல்லது உங்கள் மனதை காயப்படுத்துவதாகவோ இருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்ள்கிறேன்.

  இஸ்லாம் பெண்களின் முயற்சி வெற்றி அளிக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 52. ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு'


  ஒரு முஸ்லிம் நல்ல விஷயங்களை பேசுவதற்கு இஸ்லாம் கட்டளை பிறப்பிக்கின்றது. அவ்வாறு நல்ல விஷயங்களை பேசுவதற்கும் நன்மையுண்டு.

  ReplyDelete
 53. சிறகுகள் விரியட்டும்....... go ahead.......

  ReplyDelete
 54. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

  ஒரு சில கிளைத் தீர்வுகளைத் தவிர ஆணுக்கும், பெண்ணுக்கும் இஸ்லாமியத் தீர்வுகள் பொதுவானது!

  இஸ்லாம் போதிக்கும் உண்மைத் தீர்வுகளை முன்னெடுத்துச் சென்று வெற்றி பெறுங்கள்!

  சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 55. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

  சகோஸ்....

  மாஷாஅல்லாஹ்....

  நல்ல பல கருத்துக்களை
  'நறுக்'கான தக்க வாதங்களுடன்
  'நச்' என தொடர்ந்து தர வேண்டிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 56. அட இந்த ஐடியா நல்லாருக்கே... வாழ்த்துக்கள். எனக்கும் ஒரு டோக்கன்....இன்ஷா அல்லாஹ் மெயில் செய்கிறேன்.

  அவர்கள் உண்மைகள் சொல்வது போல் கண்ணியமான கருத்துக்களுக்கு (அது மாற்று கருத்தாக இருந்தாலும்...ஆனா அது அழகான முறையில் பகிரப்பட்டதாக இருக்கணும்) மட்டும் பதிலளித்தால் புதிய தளம் ஜோராக ஜொலிக்கும்...... ஆரம்பத்தில் அனானிகளாக வருபவர்கள் பின்னாளில் வருகையை நிறுத்திவிடலாம்... அல்லது நல்ல முறையில் கேட்க பழகிக்கொள்ளலாம்....

  ReplyDelete
 57. جهود مبارك ، أسأل الله تعالى أن يتقبل منكم صالح الأعمال

  ReplyDelete
 58. جهود مبارك
  أسأل الله تعالى أن يتقبل منكم صالح الأعمال

  ReplyDelete
 59. Masha Allah.
  Assalaamu alaikkum varahmathullahi va barakathuhu.
  My dear Brothers and Sisters.
  Allah thaangalukku nallarul purivaanaka:)

  ReplyDelete
 60. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அல்லாஹ் தங்களுக்கு நல்லருள் செய்வானாக மேலும் அழகான கூலியையும் தந்தருள்வானாக. உங்களுடைய பாதங்களை தீனில் நிலைத்திருக்க செய்வானாக ஆமீன். ஜசக்கல்லாஹ் க்ஹைர்.

  ReplyDelete