பின்னூட்ட விதிகள்


அன்பான சகோதர சகோதரிகளே,

எல்லாம் வல்ல இறைவனின் கருணையும் அருளும் உங்கள் மீது உண்டாகுக.


இஸ்லாமிய பெண்மணி தளத்தை பார்வையிட்டதற்கும் பகிர்வுகளை படித்தமைக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பார்வையிடும் எல்லாரிடமிருந்தும் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம். எங்களை வளப்படுத்திக் கொள்ளவும், ஆழ்ந்த தேடலினால் பலப்படுத்திக் கொள்ளவும். இன்ஷா அல்லாஹ்.

கற்ற மனிதனொருவன் சமூகத்தில் பேசும்போது எந்த கண்ணியத்தை வெளிப்படுத்துவாரோ அதே கண்ணியத்தையே இங்கேயும் எதிர்பார்க்கிறோம். எனினும் சில விஷயங்களை வெளிப்படையாய் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லதல்லவா? எனவே இதோ, இந்த வரையறைகள்.

1.  அனாவசிய, அநாகரீக, ஆபாச வார்த்தைகள் / கருத்துக்கள் கொண்ட பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும். அவை பிரசுரிக்கப்படாது.

2. பதிவை / இஸ்லாத்தைப் பற்றிய கேள்விகளுக்கு விடை தரப்படும். எனினும் வீண் விவாதங்களுக்கும் வம்பை வளர்க்கும் விதமான பேச்சுக்களுக்கும் இடம் தரப்படாது.

3.விமர்சனங்களிலும் கேள்விகளிலும் கேலி / கிண்டல் / அநாகரீக வார்த்தைகள் இருந்தால் அத்தகைய பின்னூட்டங்கள் நீக்கப்படும். எத்தகைய கேள்வியானாலும் விமர்சனமானாலும் கண்ணியம் காக்கவும்.

4. தனிநபர் தாக்குதலோ, மதங்களை / சகோதர சகோதரிகளை இழிவுபடுத்தும் விதமாகவோ அமையும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படாது.


5. இவைகளன்றி இடம்/பொருள்/ஏவல் முன்னிட்டு மட்டுறுத்தப்படும் பின்னூட்டங்கள் குறித்த நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது.

புரிதலுக்கு மிக்க நன்றி சகோஸ்.