எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம்துல்லாஹி வபாரக்காத்தஹு..
“ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்றொரு வாக்கு உண்டு. இன்று மனிதர்களில்
பலர் ஆடை அணிந்தும் ஆடை இல்லாத அரை மனிதன் போலத்தான்
காட்சியளிக்கிறார்கள் என்றால் மிகையாது. நாகரீகத்தின் வெளிப்பாடு என்று நமக்கு
நாமே சமாதானம் செய்து கொண்டாலும், ”ஒரு மனிதன் குறித்த மதிப்பீடு அவன் அணிந்திருக்கும் ஆடையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.
குறிப்பாக, பெண்களின் சுயமரியாதை காக்கப்பட, அவர்களின் உடையும் ஒரு காரணம்.
நமக்குப் பிடித்தமான ஆடைகளை அணிவதில்
தவறில்லை, அது நம் சுதந்திரம் என்றாலும்
மற்றவர் கண்ணை உறுத்தாமல் ஆடை அணிவது என்பது நமக்கே கண்ணியத்தை வழங்குகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை. அப்படிப்பட்ட
கண்ணியத்தையும், பாதுகாப்பையும் வழங்கவே இஸ்லாம், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஹிஜாப் என்ற கேடயத்தை வழங்கியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு அது இறையின் கட்டளை, கடமை என்றாலும் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டே பல முஸ்லிமல்லாத சகோதரிகளும் கண்ணியமான உடை அணிவதில் கவனம் கொள்கின்றனர். ஏன்
அவர்களுக்கு எல்லாம் சுதந்திரம்
இல்லையா??? சுதந்திரம் என்பது எது,
நம் உடல் அங்கங்களை வெளிப்படுத்தக் கூடிய ஆடை தான் சுதந்திரமா?? என் கற்புக்கே
பங்கம் வந்தாலும் என் சுதந்திரம், என் ஆடை என்றே பல பெண்கள் முழங்குகின்றனர். நம்
பாதுகாப்பில் நாமே அக்கறை கொள்ளவில்லை எனில் நம்மைத் தவறாக பயன்படுத்த நினைப்பவர்கள்
ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? என சிந்திப்பதில்லை.
சிலர் அணியும் அரைகுறை ஆடையால் ஒட்டு மொத்த பெண்களுக்கும் அவப்பெயர் என்றாலும்,
அதனால் ஏற்படும் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு வரும் விமர்சனங்களை ஏற்றுக்
கொண்டு தான் ஆக வேண்டும். நம்மை சரி செய்ய முயற்சி செய்து தான் ஆக வேண்டும்.
பெண்ணீயம் பேசுவது எல்லா இடங்களிலும் பொருந்தி வராது என்பதற்கு பெண்களின் ஆடை
விஷயத்திற்கும் பொருந்தும்.
அனைவரும் வழக்கமாக அணிவது போல் தானும் ஆடை அணிந்தும், மற்றவர்களின் ஏளனப்பேச்சிற்கும், கழுகுப் பார்வைக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளானதை
மிக வருத்தத்துடன் நம்முடன் மெயில் மூலம் பகிர்ந்துக் கொண்டு, நானும் இஸ்லாமியப் பெண்களைப் போல் உடை அணிய கற்றுக் கொண்டு, அதை பின்பற்றியும் வருகிறேன், இதை
மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக உங்கள் இஸ்லாமியப் பெண்மணி பிளாக்கில் வெளியிடுங்கள் என்று கூறுகிறார்
சகோதரி ராஜதிலகம்.
![]() |
என் முகம் மட்டும் காண நான் அனுமதிப்பதே என் சுதந்திரம். |
சகோதரி ராஜதிலகம் அவர்களின் மெயில்:
நான் ஹிந்துவாகப் பிறந்தேன், வளர்ந்தேன், இன்னும் ஹிந்துவாகவே
இருக்கின்றேன். தினமும் கோவிலுக்குப் போவேன், கடவுள் என்றால் ரொம்பப் பிடிக்கும்,
கோவில் தான் எனக்கு இரண்டாவது வீடு மாதிரி.
நான் பல இடங்களில் ஒரு பெண்ணாகப் பல ஆண்களின் துன்புறுத்தலுக்கு நேரடியாகவும்,
மறைமுகமாகவும் ஆளாக்கப்பட்டேன். பஸ், ரயில், காலேஜ், ஹோட்டல், பீச், லைபரரி, ஏன்
பள்ளிச்சீருடை அணிந்து சென்றால் ஒரு சில ஆட்டோ ஓட்டுனர்கள் கூட தவறாகப் பேசுவர். இதை நான் யாரிடம் பகிர்ந்தாலும் என்னைத் தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக சொல்லுவாங்க.
என் வேலை சம்மந்தமாகச் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்தேன். தினமும் ஒரு மணி
நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டிய அந்த நேரங்கள் அனுதினமும் எனக்கு ஒரு அக்னி
பிரவேசம் பண்ற மாதிரி இருக்கும். அத்தனை பார்வைகள்..
ஒரு நாள் ஒருவர் என்னிடம் வந்து, இப்படி எல்லாம் ட்ரெஸ் பண்ணாதிங்க என்று
கூறிச் சென்றார். எனக்கு ஒண்ணும் புரியல.. இத்தனைக்கும் துப்பாட்டா போட்டு கவர் பண்ணி தான் இருப்பேன். காற்றில் பறக்கும் துப்பாட்டவைக்
கூட கண்களில் ஏந்தி நம்மை கொடூர பார்வை கொண்டு உடையைத் துளைத்து ரசிக்க வைக்கும் என்பதை அவரின்
அப்போதைய வார்த்தை எனக்கு உணர்த்தியது. அதிர்ச்சியாக்கியது.
அன்று முதல் துப்பட்டாவைத் தலையோடு சேர்த்து சுத்தி பின் பண்ணிடுவேன். என்னோட
கழுத்து கூட தெரிய வேணாம்னு அப்படி செய்ய ஆரம்பித்தேன்.
ட்ரைவிங் ஸ்கூல் போனால் அங்கேயும் ஒருவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றார். இத்தனையும் என்னை தற்கொலைக்குத் தூண்டும் அளவில் துன்புறுத்தியது.
இறுதியாக என் உடல் மொத்தத்தையும் மறைக்கும் அளவில் உடை அணிய ஆரம்பித்தேன்.
ஹிஜாப் (தலையை மறைக்கும் ஷால், துப்பட்டா) போடுவேன். ஷார்ட் ஸ்லீவாக இருந்தாலும் அதனை மறைக்க எக்ஸ்ட்ரா ஸ்லீவ் போட்டுப்பேன்..
என் இந்த உடை மாற்றத்தை பார்த்துத் தெரிந்தவர்கள் எல்லாரும் கிண்டல் பண்ணாங்க.
அதிலும் என்னை அதிகமா தெரிஞ்சவங்க தான் என்னை, என் உடையை கிண்டல் பண்ணாங்க.
ஆனால் என்னுடைய இந்த புதிய மாற்றத்தால் இப்போதெல்லாம் ரோட்டில் என்னை யாரும் தவறாக பார்ப்பதில்லை, பஸ்ல
யாரும் இடிக்கிறதில்லை, ஒரு மரியாதையோடு தான் பார்க்கிறார்கள்.
சமீபமாக என்னுடைய தோழனின் வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்தேன், அங்கயும் நான் ஒரு இஸ்லாமிய பெண் போல் உடை அணிந்து தான் போனேன். என்னை பார்த்து
என் பேரை கேட்டவர்களிடம் என் பெயரை சொன்னதும், நான் ஒரு ஹிந்து என்று அறிந்தவுடன் முகம்
சுழித்தனர். அவர்களைப் பொறுத்தவரை நான் என்னுடைய மதத்தை அவமதிக்கிறேன், ஆனால் எனக்கு
சிரிப்பு தான் வருகிறது. எனக்கு இப்படி
இருக்க பிடிச்சு இருக்கு என்று சொல்வதை எந்த தெய்வம் தப்பா எடுத்துக்க போகுது,
எனக்கு புரியல..
ஹிஜாப் எங்கு கிடைக்கும், எப்படி சரியாக அணிவது என்று தேடும் போது உங்கள் இஸ்லாமியப் பெண்மணி வலைதளத்தின் லிங்க் என் கண்ணில் பட்டது. என்னுடைய இந்த மாற்றத்தை உங்களுடன்
பகிர்ந்து என்னை போல் உள்ள அனைவருக்கும் உடையில் ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவே
என் சொந்த அனுபவங்களை உங்கள் பிளாக்கில் போட எழுதினேன்.
இப்போ என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம்
ஒரு முஸ்லிம் பொண்ணு என்று நினைக்கிற அளவில் என் உடை நேர்த்தியாக மாறி விட்டது.
என்னை அவமானங்களிலிருந்து காப்பாற்றிய ஹிஜாபிற்கு என் நன்றிகள்.
(சகோதரியின் பாதுகாப்பு கருதி அவரின் சில கசப்பான அனுபவங்கள் நீக்கப்பட்டுள்ளன)
திருத்தத்தை நம்மில் துவக்குவோம்
இந்த விழிப்புணர்வு சில சகோதரிகளுக்கு இல்லாதது மிகவும் வருத்தமே. பார்க்கும் கண்கள் மீது பழி போடும் இக்காலப் பெண்களின் மத்தியில் திருத்தம் நம்மில் இருந்தே துவங்க வேண்டும் என்ற இச்சகோதரியின் முதிர்ச்சியான அணுகுமுறை பிறருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறோம்.
உலகின் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ முஸ்லிமல்லாத பெண்களும் ஹிஜாபை விரும்பி முன்வந்து அணிவதைக் கேட்டிருப்போம். உதாரணத்திற்கு இப்பெண்மணி கூறுவதைக் கேளுங்கள். இன்று நம் முன்னே இதோ நம் தமிழகத்தில் பல ராஜதிலகங்கள் உலாவருகின்றனர். நம் கண்ணியம் காக்க நாம் அணியும் உடையை நேர்த்தி செய்து கொள்வதில் எந்த மதம் நம்மை தடுக்கிறது, எந்த கடவுள் நம்மை விலக்கி வைக்கிறது?
நல்ல விஷயங்களைப் பின்பற்ற மதம் ஒரு தடையல்ல, மனிதனின் மனமும் இந்த சமூகமும்
மட்டுமே!!!
உங்கள் சகோதரி,
யாஸ்மின் ரியாஸ்தீன்
Tweet | ||||
.
ReplyDeleteசரியானதையே சரியானது இதுதான்னு விளம்பரம் செய்யுமளவுக்கு தப்பானவைகள் மலிந்து விட்டன
இஸ்லாம் சொல்லுது என்பதாலேயே எதிர்ப்பவர்கள் பலராகி போனார்கள்
ReplyDeleteமாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஅவனே மாற்றங்களை மனதில் நிகழ்த்தக்கூடியவன்.
அன்பு சகோதரிக்கு என் நெஞ்சர்ந்த சலாத்துடன் வாழ்த்துகள்.....
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசெமையான பதிவு. எந்தவொரு விசயத்தையும் அறிவார்ந்த வகையில் நோக்குவதே சிறந்தது. அருமையாக விவரித்துள்ளார் சகோதரி ராஜதிலகம். வாழ்த்துக்கள் அவருக்கும் & இத்தளத்தினருக்கும். இஸ்லாமிய பெண்மணி தளம் அற்புதமாக செயலாற்றுகின்றது. தொடருங்கள்.
சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹமத் அ
அக்கா அதேதான் இங்கேயும் ஓட்டு போட்டாச்சு சாப்ட்டு வந்து படிக்கிறேன் அக்கா
ReplyDeleteஆர் திலகம்
ReplyDelete.
இப்படி பொய் பெயர் போட்டுதான் ஹிஜாப் க்கு முட்டு கொடுக்க வேண்டிய நிலைமை என்றால்
அல்லாஹ் பிச்சை எடுக்க போகலாம்
மானம் கெட்ட பிழைப்பு
சகோதரரே!!!
Deleteஇன்று உங்களை போல் தான் பலரும் இஸ்லாத்தின் மேல் வெறுப்புக் கொண்டு உண்மையைக் கூட பொய் என்று சிந்தித்து கற்பனையில் வாழ்ந்து வருகின்றனர்.
சகோதரியின் பாதுகாப்புக் கருதி அவர்களின் பெயரை வெளியிட மறுத்த எங்களை, மிக தைரியமாக அழுத்தமாக என் பெயருடனே வெளியிடுங்கள். எனக்கு எவ்வித பயமும் இல்லை என்று தெரிவித்தவர் சகோதரி ராஜ திலகம்.. அவர் பயப்படுவதற்கும், அவரது பெயரை மறைப்பதற்கும் அவர் எந்த தவறும் செய்யவில்லை. கண்ணியமிக்க உடை அணிவதை பகிரங்கமாக சொல்ல அவர் ஏன் பயப்பட வேண்டும்..
இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வு உங்களை பொது இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை மறக்க செய்திறது.. சிந்திக்கவும்..
கள்ளப் பெயரில் எழுதி வெளியிட்டு பெயர், புகழ் தேட வேண்டிய தேவை இஸ்லாமிற்கும், ஹிஜாபிற்கும், முஸ்லிம்களுக்கும் இல்லை.
அல்லாஹ் போதுமானவன் ... அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை வழங்குவானாக..
9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
நல்ல பதிவு...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி ராஜதிலகம்..
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல பதிவு...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி ராஜதிலகம்..
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteநடிகையாக இருந்து முஸ்லிமாக மாறிய நடிகை மோனிகா சொன்ன அனுபவம் நினைவுக்கு வருகிறது. தந்தை இறந்த பின் அனைத்து இடங்களுக்கும் தானே செல்ல வேண்டிய சூழலில், , ஏதோ ஒரு பில் கட்ட போனபோது புர்கா அணிந்து சென்றாராம். அப்போது அவருக்கு பார்வையாலும் உள்ளத்தாலும் கிடைத்த மரியாதையில் ஆச்சர்யப்பட்டு போய் புர்கா அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்....
இஸ்லாமியப் பெண்மணியின் - சாதனைப் பெண்மணி பகுதியில் இடம்பெற்ற சகோதரி சுமையா ( தாசீம்பீவி கல்லூரி முதல்வர்) சிறந்த சிந்தனையாளர். பிராமினாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர். ஹிஜாப்பை உயிரினும் மேலாக நேசிப்பவர்.
அணிபவர்களுக்குத் தான் அதன் இனிமை புரியும். :)
________________
2 மைனஸ் ஓட்டா.. பரவால்லையே.. இஸ்லாமியப் பெண்மணி தளத்தை பலரும் கவனிக்கத்தான் செய்றாங்க :)
ஹிஜாப் மட்டுமல்ல. இஸ்லாமிய நெறிகள் எல்லாமே மக்கள் ஏற்கவே விரும்புவார்கள். அதை சரியாக மக்களிடம் கொணடு செல்ல நமக்குத்தான் வழி தெரியவில்லை.
ReplyDeleteசிறந்த பகிர்வு வாழ்த்துகள்