வாடகைத்தாய் முறையில் வாடகைத்தாய்க்கும் பிறக்கும் குழந்தைக்கும் நேரும் அபாயங்கள் குறித்து விரிவாகக் கடந்த பதிவில் வெளியானது.
உலகளவில் வாடகைத்தாய் மையமாகக் கருதப்படும் இந்தியாவில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் கோடிக்கணக்கில் பண வர்த்தகம் நடைபெற்று வந்தது. இந்தியாவின் நவீன மருத்துவ முன்னேற்றம் மற்றும் குறைந்த விலையால் வெளிநாட்டவர் பலர் இந்தியாவை நாடி வருவதால் லட்சங்களுக்காக விதிமுறைகள் கட்டுப்படுத்த இயலா அளவில் மீறப்பட்டும் வந்தன.
தரகர்களாலும் மருத்துவமனைகளாலும்
வாடகைத்தாய்களால் லட்சங்கள் சம்பாதித்தாலும் உடலையும் உயிரையும் வருத்தி குழந்தை பெறும் வாடகைத்தாய் அதில் பொறியளவு வருமானம் பெற்று ஏமாறுகின்றனர்.
இச்சூழ்நிலையில்,
இத்தகைய அநீதிகளையெல்லாம் கண்டு வருந்திய மனிதாபமானமிக்க ஒருவர் தொடுத்த வழக்கால் சமீபத்தில் இந்திய
அரசு மிக முக்கியமான ஒரு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
”வெளிநாட்டவர் இனி
இந்திய வாடகைத்தாய்களை நாடி பயன் பெற இயலாது.” இது மிக மிக வரவேற்கத்தக்க சட்ட நடவடிக்கையாகும்.
ஐரோப்பியாவின்
பல நாடுகளில் இந்த வாடகைத்தாய் முறை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது போல், இந்தியாவிலும்
விரைவில் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும். உணர்வுகள் பணத்துடன் போட்டியிட்டு தோற்றுவிடும் முன் இந்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் மருத்துவ முன்னேற்றங்கள் இந்தியாவிற்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் நன்மையே பெற்றுத்தருவதாக இருக்க வேண்டும்.
http://www.bbc.com/
Tweet | ||||
Good
ReplyDelete