உலகில் அன்றாடம் பெண்ளுக்கெதிரான வன்முறைகள் பெருகி வருவதையும் அவற்றைக் கவலையுடன் கடந்து செல்வதும் அப்போதைக்குப் போராட்டங்கள் நிகழ்த்துவதும் பாதுகாப்பினை மேற்கொள்வதும் நமக்கு வாடிக்கையாகி விட்டது.
உதவுவதைக் காட்டிலும் உழைப்பதற்கான வழிகளைக் காண்பித்துக் கொடுப்பதே உயர்வானதும் இன்றியமையாததுமாகும். அப்பொழுது தான் ஆண்கள் தரும் சொற்ப வருமானத்திற்காக அவர்களது கொடுமைகளைப் பொறுத்துப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறையும். மகளிர் பேருந்து, மகளிர் ரயில் இவற்றின் வரிசையில் இந்தியாவிலேயே முதல்முறையாகக் கேரள மாநிலத்தில் நவம்பர் 2013ல் ஷீ டேக்ஸி She-Taxi அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெற்றிகரமான பலன்கள் ஷீ பஸ் She-Bus என்ற புதிய பரிணாமத்திற்கு வழிவகுத்துள்ளது.
![]() |
5 ஓட்டுநர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஷீ டேக்சி ஓட்டுநர்களில் ஒரு பெண் முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது |
வாகன ஓட்டுனர் அருகிலும் பயணிப்பவர் அருகிலுமாகப் பொருத்தப்பட்டுள்ள இரு எச்சரிக்கை அலாரங்கள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கவை. பெண்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை என்பதால் வாகனக் கட்டணங்கள் அனைவரும் விரும்பும் வண்ணம் குறைவாகவே வகுக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் மாதம் ரூ. 15000 - 20000 வரை பொருளீட்டுகின்றனர். ஷீ டேக்ஸியின் வெற்றியைப் பாராட்டிய உலகவங்கி ஷீ பஸ்ஸின் She-Bus உருவாக்கத்திற்கு உதவுகிறது.
பல்வேறு மாநிலப்பெண்களுக்குக் கிட்டியிருக்கும் இந்த மகளிர் டேக்ஸி பாதுகாப்புச் சேவை, தமிழகப் பெண்களுக்குக் கிடைக்குமா? பெண் முதலாளிகள் உருவாக்கப்படுவார்களா? அரசு அக்கறை காட்டுமா?
உங்கள் சகோதரி,
பானு
-------------
தகவல்:
NDTV
She Taxi official website
Wikipedia
Tweet | ||||
வரவேற்கத்தக்க முயற்சி. இது மேன்மேலும் வளர்ந்தால் நல்லது
ReplyDeleteVery good initiative, Will appreciate if it spreads whole over india
ReplyDelete