இவ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்?” கட்டுரைப் போட்டியில் முஸ்லிமல்லாதவர்களுக்கான பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட மூன்றாம் பரிசான ரூபாய். 2000/-த்தை வென்ற சகோதரி பானுப்பிரியா அவர்களின் கட்டுரை:
ஏன் ஹிஜாப்?:
ஹிஜாப் என்பதை பெண்களை காக்கும் உடல் கவசம் என்று கூறலாம். ஏன் என்றால் நம் உடலை முழுவதும் மூடி மறைப்பதற்கு ஹிஜாப் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இக்கால சூழ்நிலையில் வெயிலில் இருந்தும் மற்றும் தூசு, மாசு ஆகியவற்றிலிருந்தும் நம்மை காத்துக்கொள்ளவும் உதவுகிறது. தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது. அவர்களுக்கு ஆபத்துகள் அதிகமாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் எவ்வளவு தான் வந்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் தான் காரணம் . அவர்கள் அணியும் ஆடைகள் தான் இதற்கு முழுமுதல் முக்கிய காரணம் என்று கூறலாம். முன்பெல்லாம் ஒரு பெண் செல்லும் பொழுது ஆண் அவள் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கக்கூடாது. அதுபோல் பெண்கள் செல்லும் பொழுது ஆண்கள் இருக்கும் பக்கம் செல்லக்கூடாது நிமிர்ந்தும் பார்க்க கூடாது. ஆனால் தற்போதைய நிலைமை வேறு! காலம் மாறமாற அவைகளும் மாறிவிட்டன. அவர்களின் பண்பு நலன்கள் ஒழுக்கங்கள் உடைகள் அனைத்தும் மாறிவிட்டன.
இத்தகைய எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எப்படி ஒரே இறைவன் இருக்கின்றானோ, அப்படி பெண்கள் அனைவருக்கும் ஒரே பாதுகாப்பான உடை ஹிஜாப்பாக இருக்க முடியும் என்பது என்னுடைய சிந்தனையின் சிறு கருத்து
-பானுப்பிரியா
-பானுப்பிரியா
Tweet | ||||
No comments:
Post a comment