Thursday, July 02, 2015

இஸ்லாமிய உடையே சிறந்தது : ஏற்றுக்கொண்டது அமெரிக்கா

       மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் சமீபகாலமாகவே இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாப் பற்றிய நேர்மறையான விஷயங்கள் பரபரப்புச் செய்திகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில்  ஹிஜாப் அணியும் பழக்கத்திற்கு எதிரான கருத்துக்களை அடித்து நொறுக்க வந்துள்ளது இச்செய்தி. 

       அமெரிக்காவின் நியு ஜெர்சியில் Clifton high school ல் நடந்த சிறந்த ஆடை அணியும் தேர்வில் பாலஸ்தீனிய வம்சாவளியைச் சேர்ந்த அப்ரார் ஷாஹின் என்ற முஸ்லிம் பெண் சிறந்த ஆடை அணியும் சீனியர் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உடலையும், தலையையும் எளிமையாக மறைக்கும் விதத்தில் ஷாஹின் அணிந்திருந்த ஆடை அமெரிக்க உயர் நிலைப் பள்ளிகளில் ஒழுக்கமான உடைகளுக்கான ஆதரவு வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

      கிளிப்டன் ஹை ஸ்கூலில் இந்த அவார்டை வென்றதன் மூலம் ஷாஹின் அமெரிக்காவில் இஸ்லாமிய உடை நாகரிகத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். ''பொதுவாக சியர் லீடர்களும், புகழ் பெற்ற பெண்களும் வெற்றி பெரும் போட்டியில் ஹிஜாப் அணியும் நான் வெற்றி பெற்றுள்ளேன். இது எனக்கு மிகப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது'' என்று ஷாஹின் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்கர்கள் தன்னுடைய ஹிஜாபை மட்டும் பார்த்து, சமமாக நடத்துவது தனக்கென ஓர் அங்கீகாரத்தை அளித்துள்ளதாகவும் ஹிஜாப் அணியும் பெண்ணாக இருப்பதை என்றும்  பெருமையாகக் கருதுவதாகவும் கூறியுள்ளார் .
அப்ரார் ஷாஹின்
       3300 மாணவர்கள் படிக்கும் கிளிப்டன் ஹை ஸ்கூலில் 52 சதவிகிதத்தினர் இலத்தீன் அமெரிக்கர்கள் , 35 சதவிகித வெள்ளை இனத்தவர், 8 சதவிகித ஆசியர்கள், 5 சதவிகித கறுப்பின மாணவர்கள் படிக்கின்றனர் . ஷாஹின் மட்டுமல்லாது மற்றுமொரு முஸ்லிம் மாணவரான ஆபிரகாம் செய்டன், ஆண்கள் பிரிவில் சிறந்த ஆடை அணியும் மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இஸ்லாம் ஹிஜாபை வரையறுக்கப்பட்ட உடை நாகரீகமாக அன்றி , மத அடையாளமாகக் கூறவில்லை என்பது தெளிவாகிறது.
       சரி இதெல்லாம் போகட்டும்! ஹிஜாப் பரவலாக அனைவரிடமுடம் சென்று சேரும் அதே தருணத்தில் அல்லாஹ் வரையறுத்த ஹிஜாப் இதுதானா என்பதையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஹிஜாப் என்பது தலையை மறைத்தல் என்பதாக மட்டும் பலர் தவறாக கருதுகின்றனர். மாறாக அது உடை மட்டுமல்லாமல் உள்ளத்தோடும் சம்பந்தப்பட்ட விஷயம். அல்லாஹ்வின் கட்டளையை உள்ளச்சத்தோடு முழுமையாக நிறைவேற்ற வேண்டுமே அன்றி வெறும் கண்துடைப்பாகக் கடைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். என்னதான் உடலை முழுவதும் மறைத்தாலும் இறுக்கமான ஆடை உடல் அங்கங்களை வெளிபடுத்துவதால் ஹிஜாபின் வரைமுறையே மீறப்படுகிறது. ஹிஜாப் எனும் உடையை, உள்ளத்தோடு தொடர்புடைய ஒழுக்கமுறையாக ஏன் எதற்காக எப்படி பேண வேண்டுமென்ற ஆய்வை ஒவ்வொரு பெண்ணும், ஆணும் மேற்கொண்டு தீர்க்கமாகப் பின்பற்ற வேண்டும்.  எச்சூழ்நிலையிலும் எதற்காகவும் சமரசப்படுத்திக் கொள்ளக்கூடாது. அவ்வாறு அணிந்தாலே ஹிஜாப் நமக்களிக்கும் கண்ணியத்தை நாளடைவில் நாமே உணர்வோம்.
        இஸ்லாத்தைத் தீவிரமாக எதிர்ப்பதாகச் சித்தரிக்கப்படும் அதே உலக நாடுகளில் தாம், பொதுமக்களிடையே இஸ்லாமிய ஆடை குறியீடுகளுக்கு ஆதரவு பெருகியுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். 

உங்கள் சகோதரி

நதிரா

7 comments:

 1. மாஷா அல்லாஹ்... அருமை .


  //ஷாஹின் அமெரிக்காவில் இஸ்லாமிய உடை நாகரிகத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். '//

  சகோதரிக்கு அல்லாஹ் வெற்றிஅளிப்பானாக..

  ReplyDelete
 2. //அல்லாஹ்வின் கட்டளையை உள்ளச்சத்தோடு முழுமையாக நிறைவேற்ற வேண்டுமே அன்றி வெறும் கண்துடைப்பாகக் கடைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.//

  மிகச்சரி...

  இனிப்பான செய்தியுடன் கூடிய சிந்திக்க வைக்கும் பதிவு..

  ஜஸக்கல்லாஹ் ஹைர் நதீ!

  ReplyDelete
 3. மா ஷா அல்லாஹ்... அழகா சொல்லி இருக்கீங்க நதிரா...

  அங்கு பல நாகரீகமான அமெரிக்க பெண்கள் நம் ஹிஜாபுடன் கூடிய ஆடையை பார்த்து,
  நம் முஸ்லிம் பெண்களிடம் கிட்ட வந்து மெனக்கெட்டு, "உங்க ஆடை மிகவும் அழகா இருக்கு", என சொல்லிட்டு போவாங்க...

  ReplyDelete
 4. Masha Allah :) A really Gud article to read :)

  ReplyDelete
 5. Masha Allah. This is an enlightening article. Every Muslim woman needs to know how to differentiate between outrageously fashioned clothing and modest clothing. When you don't dress in ways that Islam suggests, you're defeating the purpose of covering yourself. May Allah bless us all with knowledge and grace. Good work. :)

  ReplyDelete
 6. Masha Allah. This is an enlightening article. Every Muslim woman needs to know how to differentiate between outrageously fashioned clothing and modest clothing. When you don't dress in ways that Islam suggests, you're defeating the purpose of covering yourself. May Allah bless us all with knowledge and grace. Good work. :)

  ReplyDelete