ஜூலை
25ம் தேதி யில் நடைபெறவிருக்கும் CBSE யின் அகில இந்திய மருத்துவ படிப்புக்கான
நுழைவுத்தேர்வு (AIPMT) க்கு முன்னதாக அதில் கலந்துக்கொள்ளும்
மாணவர்களுக்கான ஆடை வரம்பை நிர்ணயித்திருந்ததை முந்தைய பதிவில்
குறிப்பிட்டிருந்தோம் . பார்க்க
இந்த விதிமுறை இஸ்லாமிய உடை சட்டத்தோடு மோதுவதாக பல முஸ்லிம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இத்தேர்வை எழுதவிருக்கும் கேரளாவை சேர்ந்த நிதா ரஹீம் மற்றும் ஆசியா அப்துல் கரீம் என்ற இரு மாணவிகள் கடந்த 17ம் தேதி கேரளா உயிர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். AIPMT கொண்டு வந்த விதிமுறை உரிமை மீறல் என்றும், சட்டத்திற்கு புறம்பானது என்றும் இஸ்லாமிய ஆடை சுதந்திரத்தை பறிப்பதையும் சுட்டிகாட்டினர். தாங்கள் மத உரிமை அடிப்படையில் ஹிஜாப் அணிவதாகவும் அதனை அனுமதிக்க வேண்டும் என்றும் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
நீதிபதி வினோத் சந்திரன் முன் கடந்த செவ்வாய் கிழமை (17-7-15) விசாரணைக்கு வந்தது. காப்பியடிப்பதை தடுப்பதற்கான ஆடைக்குறியீடு விஷயத்தில் சிபிஎஸ்ஈ யின் முடிவில் முழுவதுமாக தலையிட முடியாது என்று குறிப்பிட்டது. ஆனால் மத கோட்பாட்டை பின்பற்றும் உரிமை அடிப்படையில் இரு பெண்களும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி அளித்துள்ளது. தேர்வு ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பெண் கண்காணிப்பாளரின் சோதனைக்கு சம்மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனடிப்படையில் சகோதரிகள் இருவரும் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத முடியும். அல்ஹம்துலில்லாஹ்..
சிபிஎஸ்சி கவுன்சிலைச் சேர்ந்த தேவன் ராமச்சந்திரன் இத்தீர்ப்பை பற்றி தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் , " மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. பாதுகாப்பு முறையில் பொதுத்தன்மையை கொண்டுவர விரும்புகிறோம்.ஆனாலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படும்" .
இதனை தொடர்ந்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தேர்வு எழுதவிருக்கும் சகோதரி மரியம் நசீர் , சகோதரி சபானா பானு , சகோதரி ஆயிஷா கான் இவர்களுடன் எஸ்ஐஓவின் தேசிய செயலாளர் லயீக் அஹமது கான் ஆகியோர் மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
உரிமைகள் மீறப்படும் போது புரட்சிகள் உண்டாவது நியதி. ஹிஜாப்க்கு எதிரான உரிமை மீறல்களின் நீட்சி, ஹிஜாப் குறித்தான இஸ்லாமியப் பெண்களின் தீர்க்கமான பார்வையையும் , தன் உரிமையின் மீதான அவர்களின் காதலையும் உரக்கச்சொல்லிக்கொண்டிருப்பது மிகப்பெரும் வெற்றிதான்... அல்ஹம்துலில்லாஹ்
நன்றி :
- zee news
- sio official website
- Times of India
சிபிஎஸ்இன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாரம்பரிய உடை அணிவதற்கும் மோசமான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் உடைக் கட்டுப்பாடு இல்லை என்றும் இத்தகைய மாணவர்கள் தேர்வு அறைக்குள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வருகை தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
indiatomorrow.net
இந்த விதிமுறை இஸ்லாமிய உடை சட்டத்தோடு மோதுவதாக பல முஸ்லிம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இத்தேர்வை எழுதவிருக்கும் கேரளாவை சேர்ந்த நிதா ரஹீம் மற்றும் ஆசியா அப்துல் கரீம் என்ற இரு மாணவிகள் கடந்த 17ம் தேதி கேரளா உயிர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். AIPMT கொண்டு வந்த விதிமுறை உரிமை மீறல் என்றும், சட்டத்திற்கு புறம்பானது என்றும் இஸ்லாமிய ஆடை சுதந்திரத்தை பறிப்பதையும் சுட்டிகாட்டினர். தாங்கள் மத உரிமை அடிப்படையில் ஹிஜாப் அணிவதாகவும் அதனை அனுமதிக்க வேண்டும் என்றும் தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
நீதிபதி வினோத் சந்திரன் முன் கடந்த செவ்வாய் கிழமை (17-7-15) விசாரணைக்கு வந்தது. காப்பியடிப்பதை தடுப்பதற்கான ஆடைக்குறியீடு விஷயத்தில் சிபிஎஸ்ஈ யின் முடிவில் முழுவதுமாக தலையிட முடியாது என்று குறிப்பிட்டது. ஆனால் மத கோட்பாட்டை பின்பற்றும் உரிமை அடிப்படையில் இரு பெண்களும் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி அளித்துள்ளது. தேர்வு ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பெண் கண்காணிப்பாளரின் சோதனைக்கு சம்மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனடிப்படையில் சகோதரிகள் இருவரும் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத முடியும். அல்ஹம்துலில்லாஹ்..
சிபிஎஸ்சி கவுன்சிலைச் சேர்ந்த தேவன் ராமச்சந்திரன் இத்தீர்ப்பை பற்றி தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் , " மத உணர்வுகளை காயப்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. பாதுகாப்பு முறையில் பொதுத்தன்மையை கொண்டுவர விரும்புகிறோம்.ஆனாலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்படும்" .
இதனை தொடர்ந்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தேர்வு எழுதவிருக்கும் சகோதரி மரியம் நசீர் , சகோதரி சபானா பானு , சகோதரி ஆயிஷா கான் இவர்களுடன் எஸ்ஐஓவின் தேசிய செயலாளர் லயீக் அஹமது கான் ஆகியோர் மனுதாரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
உரிமைகள் மீறப்படும் போது புரட்சிகள் உண்டாவது நியதி. ஹிஜாப்க்கு எதிரான உரிமை மீறல்களின் நீட்சி, ஹிஜாப் குறித்தான இஸ்லாமியப் பெண்களின் தீர்க்கமான பார்வையையும் , தன் உரிமையின் மீதான அவர்களின் காதலையும் உரக்கச்சொல்லிக்கொண்டிருப்பது மிகப்பெரும் வெற்றிதான்... அல்ஹம்துலில்லாஹ்
நன்றி :
- zee news
- sio official website
- Times of India
Follow-up :
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த உடைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ புதன்கிழமை அறிவித்துள்ளது முஸ்லிம் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வந்த கடுமையான எதிர்ப்பினாலும் ஊடகங்களின் விமர்சனங்களாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாரம்பரிய உடை அணிவதற்கும் மோசமான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும் உடைக் கட்டுப்பாடு இல்லை என்றும் இத்தகைய மாணவர்கள் தேர்வு அறைக்குள் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே வருகை தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
indiatomorrow.net
Tweet | ||||
No comments:
Post a Comment