Monday, March 30, 2015

”ஏன் ஹிஜாப்?” போட்டி கட்டுரைகள் சிறு தொகுப்பு


சமீபத்தில் இஸ்லாமியப் பெண்மணி தளம் நடத்திய “ஏன் ஹிஜாப்?” போட்டியில் பங்கெடுத்து ஆறுதல் பரிசு வென்ற கட்டுரைகளின் முத்தாய்ப்பான ஒரு சில கருத்துகளின் தொகுப்பு:

சகோதரி ஆசியாAccording to my understanding HIJAB is not only a dress code,

Hijab is a total package that deals with clothing behavior and demeanor it emphasizes the concept of decency and modesty.

“Once I was in shopping mall, a guy wearing suit and coat who was working in the store came to me and asked if I was not feeling hot in that dress (hijab/veil). I asked him how about if the same ask to him a lady who is wearing a “SHORT SKIRT” because she feels hot in three pieces. He replied that since I am a manager, my company CEO wants to see this way. I smiled and answered him politely in the same way:

“I was instructed by my CEO my lord (Allah s.w.t) to full fill the concept of modesty. It gives me respect, protection and elevates my position”

He was so impressed and agreed with my answer. Once again I am proud to say happily that

“I AM A MUSLIM - HIJAB is my identity and armour to my beauty” 


சகோதரி பிஸ்மி ஜொஹரா 


இது ஒரு சாதாரண துணியினாலான உடை மட்டுமல்ல.. பெண்களுக்கான மிகப்பெரிய தற்காப்பு ஆயுதம். உடலை மறைத்து, அந்நியர்களின் அசிங்க பார்வை படாமல் காப்பதோடு, என் உள்ளத்தைத் தூய்மையாக வைக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

நான் ஒரு பொது இடத்தில் பணிபுரிபவள். இளைஞர்கள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என பலதரப்பட்ட ஆட்கள் வந்து போகும் இடத்தில் இருக்கிறேன். எந்நேரத்திலும் என்னுடைய ஹிஜாபை நான் கழற்றியதில்லை. அங்கங்கள் மறைத்து, இறுக்கமான பர்தாவை தவிர்த்து முழுமையாக முடியை மறைத்து அந்தஸ்தான உண்மையான ஹிஜாபை அணிகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

நான் சுமார் 4 வருடங்களாக இந்த இடத்தில் தான் பணிபுரிகிறேன். இதுவரையில் ஒருவர் கூட என்னிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதோ, என் உடல் கூசும்படியாக பார்த்ததோ கிடையாது. மேலும் சொல்லப்போனால் பலரால் நான் மதிக்கப்படுகிறேன். காமப்பார்வையோ, அசிங்கமான பார்வையோ இதுவரையில் என்மீது பட்டதே இல்லை. ஹிஜாப் என்னை கண்ணியப்படுத்தியுள்ளது.

ஒருவேளை நான் ஹிஜாப் அணியாமல் அந்தஸ்து அல்லாத உடையில் திரிந்திருந்தால், மற்றவர்களால் நான் தொந்தரவு செய்யப்பட்டிருப்பேன். என்னால் பணிபுரியவே முடிந்திருக்காது. என் வாழ்க்கையில் நான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நான் அழித்திருப்பேன். அல்லாஹ் பாதுகாவலன்.

இவ்வாறாக, ஹிஜாப் என்பது வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று எண்ணும் பெண்களுக்கு அந்நியர்களால் தொந்தரவோ எந்த சஞ்சலமோ ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கும் ஒரு ஆயுதம். அது இல்லையெனில், சாதனை கனவுகளை முறியடித்து முடங்கிக் கிடக்க வேண்டியது தான். இது அடக்குமுறை அல்ல. வாழ்வில் வெற்றி பெற கயவர்களால் ஏற்படும் தடையை உடைக்க வல்ல ஆயுதம்.

பேருந்தில் பயணம் செய்யும்போது இடப்புற இருக்கைகளில் தான் பெண்கள் இடம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பெரும்பாலான பெண்கள் புடவை தான் உடுத்துகிறார்கள். புடவையில் இடப்புறம் இடுப்பு, அங்கங்கள் தெரியும்படி உடுப்பவர்கள் பேருந்தில் இடப்புற பெண்கள் சீட்டில் ஜன்னல் பகுதியில் அமரும்போது, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பில் வரும்போதும் ஸ்டாப்பிங்கில் நிற்பவர்கள் ஒவ்வொரு பெண்களையும் எப்படி ரசித்து காம ஆசையுடன் பார்க்கிறார்கள் என்பது நின்றுகொண்டு பயணம் செய்பவர்களுக்குத் தான் தெரியும். அதை பார்க்கும்போது நமக்கே உடல் கூசும்.

நூறு ஆண்களுக்கு மத்தியில் நான் நடந்தாலும் முன்னும் பின்னும் ஆயிரம் அண்ணன்மார்கள் ஒரு தங்கைக்கு தரும் பாதுகாப்பை அளிக்கிறது இந்த அன்பான ஹிஜாப். என் மூச்சு நின்று வெள்ளைத் துணி கட்டப்பட்ட பின்பே இது என்னை விட்டு விலக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்கிறேன். இன்ஷா அல்லாஹ்.


சகோதரி  ஜலீலா  கமால் 


ஹிஜாப்/புர்கா/பர்தா


ஹிஜாப் (hijab ) என்னும் வார்த்தை அரபியின் ஹஜபா ( hajaba) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. ஹஜபா என்றால் பார்வையில் இருந்து உடல் கன பரிணாமங்களை (conceals a figure) மறைத்துக் கொள்வது என்ற பொருள்படும்.

பெண்குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே அவர்களை நாகரீக உடை   அணிந்து அழகு பார்க்காமல் முழுமையான ஹிஜாபையே பேணும் வண்ணம் ஆடை அணிய கற்றுக் கொடுக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

 //ஒரு சின்ன சம்பவம்: ரோட்டில் தினம் நடந்து செல்லும் போது வண்டிகள் அதிகம் வரும் என்று சின்ன குறுக்கு சந்தில் நுழைந்து செல்வேன், தினம் அந்த வழி தான் செல்வேன், அங்கு நிறைய கம்பெனிகளில் பின்புற வழியில் சிலர் கண்டெயினரில் சாமான்களை ஏற்றி கொண்டு இருப்பார்கள்; சிலர் போர்க் லிஃப்டில் அட்டை பெட்டி சாமான்களை ஏற்றி கொண்டு இருப்பார்கள்; சிலர் கூட்டமாகப் பேசிக் கொண்டு இருப்பார்கள். இவை எதுவுமே என் கண்ணில் படாது. நான் இரவு உணவுக்கு என்ன தயாரிப்பது, அடுத்த வேலைகள் என்னென்ன இருக்கிறது?,  லான்ட்ரி கடைக்காக என்ன செய்யனும், யாருக்கு போன் செய்யவேண்டிள்ளது  என அதை பற்றி யோசித்து கொண்டு செல்வேன்.  திடீரென்று ஒரு நாள் நடந்து கொண்டு அதே வழியில் போய் கொண்டு இருக்கும் போது அந்த அனைத்து நினைவுகளும் கலைந்து ரோட்டில் கவனம் சென்றது. ஐய்யோ இத்தனை பேர் மத்தியிலா  நடந்து போகிறோம் என  திடுக்கிட்டாலும் , ஆம் நாம் தாம் முழு ஹிஜாபில் இருக்கிறோமே? என்ன பயம் என்று சட்டுன்னு ஒரு பெரிய தைரியம். அதுவும் ஒரு மாகாராணி போலவே நான் நடந்து செல்வதைப் போலவும் உற்சாகமாக நடந்தேன்.  ஹிஜாப் அணிந்து செல்வதின் பலனையும் முழுமையாக உணர்ந்தேன். இதே அரை குறை ஆடையில் சென்றிருந்தால் அனைவரின் பார்வையும் என்னை நோக்கி தான் இருந்திருக்கும். அன்று அந்த நிமிடம் அல்லாஹ்வே உலகில் உள்ள முஸ்லீம் பெண்களும் தங்கள் ஹிஜாபை முழுமையாக பேண கிருபை செய்வாயாக என்று துஆ கேட்டுக்  கொண்டு மீண்டும் என் நினைவுகளுடன் வீட்டைநோக்கி நடந்தேன்.//

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அல் குர் ஆன் (33: 59) 

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; 
அல் குர் ஆன்  ( 24: 31).


சகோதரி சில்மியா பானு 


கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் என்னை தொட்டதில்லை
உண்மையில் நானே சுதந்திர பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே "ஹிஜாப்"
அபயத்தை அளிக்கும் கவசமே "அபாயா"".

போலிஸ்: எல்ஜமால்

எல்ஜமால் என்ற பெண்மணி ஸ்வீடன் நாட்டில் ஹிஜாப் அணிந்த முதல் போலிஸ் பெண்மணி ஆவார். இவர் இஸ்லாமியப் பாரம்பரிய ஹிஜாபை  தன் எதிர்காலத்தின் தடையாக என்றுமே நினைக்காமல் அதனை எப்போதும் உயர்வாகவே நினைத்துவருகிறார்...

பைலட்: ஹனடி ஜகரியா ஹந்தி 

ஹனடி ஜகரியா ஹந்தி என்பவர் சவுதியின் பெண் பைலட் ஆவார். இவர் தன் கனவை வெளிப்படுத்தினார். அதனால் அந்த நாட்டு இளவரசர் அல் வலித் பின் தலால் ராஜ்யத்திற்கு தனியார் விமானத்தின் விமானியாக 10 வருட ஒப்பந்தம் இவருக்குக் கிடைத்துள்ளது..

டாக்சி டிரைவர்: ஆமி நடியானே

இவரும் இஸ்லாமியப் பெண்மணிதான்.  இவரின் சொந்த ஊர் செனிக்கல். இவர் டாக்சி டிரைவராக  வேலை செய்து வருகிறார்.. (ஹிஜாப் அணிந்தவராக).. 

ஹிஜாபால் கவரப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய முன்னாள் நடிகை மோனிகா

”ஹிஜாப் என்னை பாதுகாத்தது –இதுதான் எனது மன, மத மாற்றத்திற்குறிய காரணமாகும்” இஸ்லாத்தை தழுவிய பிரபல நடிகை மோனிகா – ரஹீமா.

டாக்டர் சனா அலி சொன்னது

”எனது நோயாளிகள் என் தலைக்குள் என்ன இருக்கின்றது என பார்க்கின்றார்களே தவிர என் தலைக்கு மேல் அல்ல.!

ஹிஜாப் என் அடையாளம்..”

கம்ப்யூட்டர் சயிண்டிஸ்ட்: பாத்திமா பின்த் கஃராஷ் 

பாத்திமா  இவர்  துனிசியா நாட்டை சேர்ந்தவர் (அறிவுக்கும் அழகுக்கும்) 2014ல் முஸ்லிம்  பெண்களுக்கிடையில் நடந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தை பிடித்தவர்...

பெண்களுக்குக் கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

பாருங்கள்  எங்கள் இஸ்லாம் கொடுத்துள்ள பாதுகாப்பையும் சுதந்திரத்தையும்.

சகோதரர் ஷேக் நஸ்ருதீன்  


மனிதனின் வாழ்க்கையில் மிகமுக்கியமானது  உடல்,உயிர், உடை உணவு ஆகியவையாகும். ஆனால் அவற்றைப் பாதுகாக்க கண்ணியமும் பாதுகாப்பும் மிகமிக அவசியமானது.  அனைத்து உறுப்புகளும் வெளியில் தெரியும்படி இருந்தால் என்ன? என்று ஒருவர் வினவினால் அது அவரின் அறியாமையின் வெளிப்பாடு. பென்சிலை ஏன் சீவுகிறீர்கள்? எழுதுவதற்கும் படம் வரைவதற்கும் பென்சிலை சீவினால்தான் சாத்தியமாகும்.

மனிதனின் புற உறுப்புகளைப்போன்று மறைவான உறுப்புகளும் உள் உறுப்புகளும் இருந்தால் மனிதனின் தோற்றம் விகாரமாக அவலட்சணமாகக் கண்ணியமில்லாமல் காட்சி தரும். உறுப்புகளை இயக்குவதற்கு உயிர் அவசியம், கண்ணியத்தைத் தருவதற்கு ஆடை அவசியம். பெண்ணிற்கு முழுமையாகத் தருவதற்கு பர்தா மிகமிக அவசியம்.

மனிதனின் ஒவ்வொரு உறுப்புகளும் வெவ்வேறு தன்மையில் அவனைப் பாதுகாக்கிறது. அவ்வுறுப்புகளின் இருப்பிடமும் வெவ்வேறாகும். கண்,காது,மூக்கு,வாய்,தலை வெளிப்படையாகவும்,மறைவான உறுப்புகளை ஆடையினால் மறைத்தும் இதயம்,கிட்னி,மூளை,கல்லீரல்,கர்ப்பப்பை, போன்ற உள்ளுறுப்புகள் வெளியில் தெரியாவண்ணம் மிகமிக பாதுகாப்பாக மனிதனுக்குள் வைத்தும் பாதுகாக்கபடுகின்றன.அவ்வாறு இருந்தால்தான் மனிதனுக்குஅழகும்,கண்ணியமும், கம்பீரமும்,பாதுகாப்பும் தரும். இதற்கு மாற்றமாக எல்லா உறுப்புகளும் வெளியில் தெரியும்படி இருந்தால் கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாதவாறு விகாரமாக,அலங்கோலமாக இருக்கும்.

கண்ணியம் என்பது மேற்கத்திய நவநாகரீக ஆடையில் வருவதல்ல, எது கற்பையும் கண்ணியத்தையும் முழுமையாகப் பாதுகாக்கிறதோ அதுவே சிறந்த ஆடை..கல்வி இல்லாமல் கூட ஒருவன் உயிர் வாழலாம். ஆனால் ஆடையில்லாமல் நிர்வாணமாயிருப்பதும்,  பர்தா இல்லாமல் இருப்பதும் சிக்னலே இல்லாத ஹைவேயைப் போன்று ! என்றும் ஆபத்தாய் முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

சகோதரி உம்மு உமாரா  


ஹிஜாப் பெண்களை  அடிமைப்படுத்துகிறதாம்? அப்படி என்றால் அதை அணியக்கூடிய நாங்களல்லவா அதைச் சொல்லவேண்டும்? ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் இடங்களில், முதலில் அத்தடையை எதிர்ப்பவர்கள் யார்? ஹிஜாப் அணியும் பெண்கள் தானே? இதிலிருந்து புரியவில்லையா அதன் மகிமை ?

தேன் இருக்கும் பாத்திரத்தை மூடிவைக்காமல்   திறந்து  வைத்துக்கொண்டு  எறும்பு விழாமல் அதைக் காப்பது எவ்வாறு சாத்தியமற்றதோ அதை போன்றுதான் பெண்களின் அங்கங்களைத் திறந்து வைத்துக்கொண்டு  சீரழிவுகளிலிருந்து பெண்ணினத்தைப் பாதுகாப்பதும்  
சாத்தியமற்றது  என்பதை அறிவாளிகள் உணர்வார்கள். கண்ணிற்குள் தூசி விழுந்து விடாமல் அனுதினமும் காக்கின்றது கண்ணிமை. அது போல் சமுதாயத்தின் கண்மணியான பெண்மணியைக் காக்கின்றது ஹிஜாப். பெண்ணிற்கு ஹிஜாப் சுமை என்று சொல்பவர்கள் கண்ணிற்கு இமை சுமை என்று சொல்வார்களா?

படைத்த இறைவனுக்கே அல்லாமல்  எவருக்கும் தலை வணங்காத முஸ்லிம்களாகிய நாங்களா அடிமைத்தனத்தை விரும்பி எடுத்துக்கொள்வோம்? சிந்தியுங்கள் மக்களே! 

5 comments:

 1. வாழ்த்துகள் சகோஸ்

  ReplyDelete
 2. அனைத்து கட்டுரைகளும் வித்தியாசமான பார்வையில் தமது கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்த விதம் பாராட்டிற்குரியது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. அனைத்து கட்டுரைகளும் உண்மையான கருத்துகளை வௌ;வேறு கோணங்களில் பேசுகின்றன. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மற்ற முதல் மூன்று பரிசுகளை வென்ற கட்டுரைகளையும் கூட வெளியிடலாமே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சரண்யா.உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

   இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே வெளியிட்டுவிடுகிறோம்.

   தொடர்ந்து தொடர்பில் இருங்கள்...

   Delete
 4. அனைத்து கட்டுரைகளும் உண்மையான கருத்துகளை வௌ;வேறு கோணங்களில் பேசுகின்றன. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மற்ற முதல் மூன்று பரிசுகளை வென்ற கட்டுரைகளையும் கூட வெளியிடலாமே!

  ReplyDelete