Wednesday, March 18, 2015

"ஏன் ஹிஜாப்" - பரிசுப் போட்டியின் முடிவுகள் மற்றும் வெற்றியாளர்கள் அறிவிப்பு


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹம்துல்லாஹி வ பரக்காத்தஹு....

 கடந்த மாதம் பிப்ரவரி – 1 ஆம் தேதி உலக ஹிஜாப் தினத்தை முன்னிட்டு “ஏன் ஹிஜாப்” என்ற பிரம்மாண்டமான பரிசுப் போட்டியை இஸ்லாமியப் பெண்மணி வலைத்தளம் அறிவித்திருந்தது. மக்களின் எழுத்தை ஊக்குவித்து அவர்களின் எழுத்திற்கு அங்கீகாரம் அளிக்கும்  வண்ணமாக ரொக்கப் பணம் ரூபாய். 13,000/- பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டு போட்டி ஆரம்பமானது. போட்டிக்கான வெற்றியாளர்களை அறிவிக்கும் தருணமே இது.

இதில் மற்றுமொரு சிறப்பம்சம் எவ்வித பேதமின்றி அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு செய்ததே ஆகும். அல்ஹம்துலில்லாஹ்... எதிர்பார்க்காத அளவில் 45-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர். அடுத்த முறை இன்னும் அதிகமான போட்டியாளர்களை களத்தில் காணலாம், இன்ஷா அல்லாஹ்.

முதல் மூன்று இடங்களுக்குப் போட்டியில் அறிவித்த படி மூன்று பரிசுகளும் அடுத்த ஆறு இடத்தைப் பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசாக ஹிஜாப் பரிசும் வழங்கப்பட இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.. ஆம்!!! சகோதர சகோதரிகளே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். யார் என்று அறிய அனைவரும் ஆவலாக இருப்பீர்கள். அதற்கு முன்,


வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்த விதம் மற்றும் நடுவர்கள்:


 1.  இப்போட்டியின் நடுவர்களாக எழுத்தாளர். பிர்தவ்ஸ் ராஜகுமாரன்  மற்றும் வெல்ஃபேர் பார்ட்டியை  சேர்ந்த சமூகக்களப்பணியாளர் ஜரினா ஜமால் அவர்களும் செயல்பட்டனர். அவர்களின் நெருக்கடியான பல பணிகளுக்கு இடையில் நமது வலைத்தளத்திற்காக நேரம் ஒதுக்கி வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக. 
 2. கிடைக்கப் பெற்ற 46 கட்டுரைகளும், நடுவர்கள்  யாருடைய கட்டுரைக்கு மதிப்பிடுகிறோம் என்று சிறு அடையாளமும் தெரியாத அளவில்  ஊர், பெயர் இன்றி இஸ்லாமிய பெண்மணி குழுவால் கொடுக்கப் பெற்ற ஒரு எண் மூலம் அடையாளமிட்டு அனுப்பப்பட்டது. 
 3. ஒவ்வொரு நடுவரும் தலா 10 மதிப்பெண்ணுக்கு மதிப்பெண் இட்டனர்.
 4. மொத்த மதிப்பெண் 20-க்கு அதிக  மதிப்பெண் பெற்றவரின் வரிசைப்படி முதல் மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 
 5. முதல் மூன்று பரிசுகள் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமத்தால் இணைந்து வழங்கப்படுகின்றன. டீக்கடை குழுமத்திற்கு அல்லாஹ் அதிகம் நற்கூலி வழங்குவானாக.
 6. அதிக மதிப்பெண் பெற்ற அடுத்த ஆறு பேருக்கு சென்னை பிளாசா (https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975) நிறுவனத்தார் வழங்கும் ஹிஜாப் ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ், அவர்களது வியாபாரத்தில் நிறைந்த பரக்கத்தை வழங்குவானாக!!! 
இப்போது வெற்றியாளர்களைத் தெரிந்து கொள்வோமா!!! பங்குபெற்ற ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் எழுத்துத் திறமையில் சளைத்தவர்கள் அல்ல.....மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் முதல் மூன்று இடத்தை பிடித்த அந்த மூவர்.................

 •  முதல் பரிசான ரூபாய்.7000/-த்தை  தட்டி செல்லும் அந்த அதிர்ஷ்ட நபர்: 
 •  இரண்டாம் பரிசான ரூபாய்.4000/-த்தை தட்டி செல்லும் அந்த வெற்றியாளர்:
                           

          தனக்கு சம்மந்தமில்லாத தலைப்பு என்று ஒதுங்காமல் சிறப்பாக எழுதி                 இராண்டாம் இடத்தை வென்றவர் ஒரு ஆண் என்பதில் பெரும் மகிழ்ச்சி.
 • முஸ்லிமல்லாதவர்களுக்கான பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட மூன்றாம் பரிசான ரூபாய். 2000/-த்தை  வென்றவர்:                                                                                        
 • முதல் மூன்று போட்டி இடங்களையும் தட்டிச் சென்ற மூன்று சகோதர சகோதரிகளும் மாற்றுமத  நண்பர்கள் என்பது இப்போட்டிக்கு மிகவும் சிறப்பு சேர்த்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். 
அடுத்ததாக ஹிஜாபினைப் பரிசாக பெரும் ஆறு நபர்களின் வெற்றிப் பட்டியல்:

 1.  சகோதரி ஆசியா 
 2. சகோதரி பிஸ்மி ஜொஹரா 
 3. சகோதரி  ஜலீலா  கமால் 
 4. சகோதரி சில்மியா பானு 
 5. சகோதரர் ஷேக் நஸ்ருதீன்  
 6. சகோதரி உம்மு உமாரா  
அல்ஹம்துலில்லாஹ்.. இப்போட்டியில் பங்கு பெற்று சிறப்பித்த மற்றும் வெற்றி பெற்ற  அனைவருக்கும் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்....

முஸ்லிமல்லாத சகோதரர்களிடமும் ஹிஜாப் குறித்த அழகிய கண்ணோட்டம் இருப்பதையே இப்போட்டி முடிவுகள் அனைவருக்கும் எடுத்துரைக்கிறது. இன்னும் அதிகமாக  இஸ்லாத்தினைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை வழங்க வேண்டும் என்ற உற்சாகத்தை நமக்கு அளித்துள்ளது. 

முதல் மூன்று இடத்தில் வெற்றி பெற்ற மூவர்  உங்கள் வங்கிக் கணக்கையும், அடுத்த ஆறு இடத்தை பிடித்த ஆறு பேர் உங்கள் வீட்டு முகவரியை எங்கள் வலைத்தள மின்னஞ்சல் (admin@islamiyapenmani.com) முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உங்கள் விபரங்கள் உங்கள் அனுமதியின்றி எங்கும் வெளியிடப்பட மாட்டாது என்று இஸ்லாமிய பெண்மணி வலைத்தளம் உங்களுக்கு உறுதி அளிக்கிறது. 


இப்படிக்கு
இஸ்லாமிய பெண்மணி 


9 comments:

 1. அல்ஹம்துலில்லாஹ்.. இப்போட்டியில் பங்கு பெற்று சிறப்பித்த மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் டீக்கடை முகநூல் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்....

  ReplyDelete
 2. வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

  மாஷா அல்லாஹ் வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  சிறப்பாக இதை நடத்தி முடித்த இஸ்லாமிய பெண்மணி தளத்திற்க்கும், டீக்கடை குழுமத்திற்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ஒவ்வொருவரும் எழுதியவற்றை இங்கே பதியலாமே..

  ReplyDelete
 3. Alhamdulillah...parisu petra katturaihalai padhivittal nangalum padippome!

  ReplyDelete
 4. Alhamdulillah....parisu petra katturaihalai padhivittal nangalum padippome!

  ReplyDelete
 5. மாஷாஅல்லாஹ் .. போட்டியில் வெற்றிபெற்ற , கலந்துகொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ..

  ReplyDelete
 6. மாஷா அல்லாஹ் சூப்பர். இவர்கள் அனைவரது ஹிஜாப் குறித்த கருத்துக்கள் அடுத்தடுத்த கட்டுரைகளாக வெளியாகும் இல்லையா?

  பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அல்ஹம்துலில்லாஹ்.. இப்போட்டியில் பங்கு பெற்று சிறப்பித்த மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் டீக்கடை முகநூல் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்....

  ReplyDelete
 8. வாழ்த்துகள் அனைவருக்கும்...

  கூடிய விரைவில் ஒவ்வொரு பதிவாக கட்டுரைகள் இபெ குழுவினர் வெளியிடுவார்கள் இன்ஷா அல்லாஹ்.....

  ReplyDelete
 9. வெற்றி பெற்ற அதிர்ஷ்ட சாலிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete