Monday, February 02, 2015

பெண்களை துரத்தும் கற்கால வாழ்க்கை-தி ஹிந்துக்கான பதில்

உலக ஹிஜாப் தினமான நேற்று இஸ்லாமிய நாட்டின் ஆடைகட்டுபாட்டை குறித்து வெளியிட திஹிந்துவிற்கு என்ன அவசியம் என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லவில்லை! நடுநிலை பத்திரிக்கை என நம்பக்கூடிய தி ஹிந்து சமயம் பார்த்து தாக்கும் பத்தோடு பதினொன்றான மற்றைய பத்திரிக்கைகள் போன்றது தானா என்ற யூகங்களுக்கும் செல்ல விரும்பவில்லை. ஆடை கட்டுபாடு துரத்துவதாக கவலைபட்ட கட்டுரைக்கான பதிலை தருவது  மட்டுமே என் நோக்கம்.

சகோதரி சுஜாதாவின் கட்டுரையைப் பார்த்ததும் சிரிப்பு தான் வருகிறது. கவலைப்படுவதற்கும் விவாதிப்பதற்கும் ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் இருக்கும் போது, மிஷேலின் ஆடை குறித்துப் பேசித் திரியும் உலகை என்னவென்று சொல்வது என்று சொல்லிவிட்ட சகோதரி தன் கட்டுரையுடனே முரண்பட்டத்தை எண்ணி நகைப்பை கட்டுபடுத்த இயலவில்லை.  ஒரு நாட்டிற்கு செல்லும் போது, அவர்களின் சட்ட, திட்டங்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த விஷயம் சகோதரிக்கு தெரியாமல் இருப்பது சற்று வியப்பாகத் தான் இருக்கிறது.

நம் நாட்டிலும் சில இடங்களில் பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பது போல, ஆண்களும் சட்டையோடு அனுமதிக்கப்படுவதில்லை. நாட்டின் பிரதமராகவே இருந்தாலும் சட்டையை கழற்றினால் தான் உள்ளே நுழைய முடியும். அங்கு போய் யாரும் நீதி பேசி கொண்டு இருப்பதில்லை. அந்த இடத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தான் நடக்கிறார்கள். அதே போல நம் நாட்டில் எந்த இடத்தில் குப்பை போட்டாலும் யாரும் கேட்க போவதில்லை. அதையே சில நாடுகளில் செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். இது போல அவரவர் நாட்டுக்கு என்று சில வரைமுறைகள் வைத்து உள்ளார்கள். அதற்கு மதிப்பு கொடுத்து தான் அங்கு செல்பவர் நடந்து கொள்ள வேண்டும். அது தான் சரியான முறையும் பண்பாடும்.

அது போல தான் சவூதி சென்ற அமெரிக்க அதிபரின் மனைவியின் உடையில் தெரிந்த மாற்றம். உடல் பாகங்கள் வெளி தெரியாத உடை அணிய வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம். இதில் எங்கு பிற்போக்கு எண்ணம் இருக்கிறது என்று புரிய வில்லை. உடலின் பாகங்கள் வெளி தெரிய உடை அணிவது தான் பெண்ணுரிமையா..? அதை தான் சகோதரி விரும்புகிறார்களா? அது போலவே அன்னியப்பெண்களின் கைகளைத் தொட வேண்டாம் என்பது இஸ்லாத்தில் உள்ள வழிமுறை. இது எந்த விதத்தில் அதிபரின் மனைவியை காயப்படுத்தியது. பெண்களை தேவை இல்லாமல் தொட்டால் கூச்சலிடும் நாம் தாம்.அவர்களின் கையை பிடிக்க வில்லை என்று குறை சொல்கிறோம்.. :) இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.குடியரசு தின விழாவிற்காக யாரோ ஒரு அமெரிக்கர் வருவதற்கு ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் பலகோடி மக்கள்  மூன்று தினங்களுக்கு அடிமையானதன் மத்தியில் என் நாட்டின் சட்டத்திற்கு கட்டுபடு என்ற சவூதியின் போக்கு நம் நாட்டில் நினைத்துபார்க்க முடியுமா?”பெண்ணுரிமைகளுக்கான போராட்டங்கள் வலுவடைந்து வரும் சவுதி அரேபியாவில், மிஷேல் அடிபணிந்ததன் மூலம் தவறான முன்னுதாரணமாகிவிட்டார்” என சகோதரி குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் சட்டத்திட்டங்களை மதிப்பது அடிமைதனத்தின் அடையாளமாக மாற்றப்பட்டுவிட்டதை என்னவென்று சொல்ல? சிந்தனை வரட்சியா? ஏதோ எழுதிட வேண்டுமென்பதற்காக எதையும் யோசிக்காமல் பக்கங்களை நிரப்பும் செயலா இது?. ”செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு பெண்கள் ஆடை மாற்றம் செய்துகொள்ள வேண்டிய சூழல் உலகம் முழுவதும் நிலவுகிறது. ஆனால் ஆண்கள் தங்கள் ஆடைகளிலேயே எந்த நாட்டுக்கும் எந்த இடத்துக்கும் சென்று வர முடிகிறது. ” என்ற சகோதரியின் ஆதங்கத்தில் வெளிப்படும் நகைச்சுவை இன்னும் சுவாரசியமானது. கண்ணியமான உடை அணிந்துவிட்டால் கேள்வி கேட்பார் யார்? இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் என்ன?.

கண்டிக்க வேண்டிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட ‘மிஷேல் நாகரிகமாகத்தான் உடை அணிந்தார்’ என்று விளக்கம் அளித்துள்ளன என்று சகோதரி கவலைபடுகிறார். புரிகிறதா சகோதரி? கண்டிக்காததன் பின்னணி அடிமைதனத்தை வேடிக்கை பார்ப்பதல்ல! நம் நாட்டை நாம் நேசிப்பது போலவே வேறொரு  நாட்டின் பண்பாட்டை போற்றவும் வேண்டும் என்ற நாகரிக பண்பு. ஆனால் நாம் தான் எல்லாவற்றையும் கோர்த்து முடிச்சு போட தவியாய் தவிக்கிறோம்! :)

பெண்களை வணிகப்பொருள்கள் ஆக்கி, அவர்களின் உடலையும், இளமையையும் சந்தைப்படுத்தும் உலகத்தின் மத்தியில் பெண்களை மதித்து அவர்களுக்கு உரிய மரியாதையையும், மதிப்பையும் கொடுக்கும் இஸ்லாத்தின் வழிமுறைகள் கட்டுப் பெட்டித்தனமாக தெரிவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

பெண்களின் முன்னேற்றம் அவர்கள் அரைகுறை உடையில் இல்லை. அவர்களின் திறமையில் இருக்கிறது என்பது சவூதி போன்ற இஸ்லாம் நாடுகளில் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தொழில்நுட்ப ஆய்வாராய்ச்சி, தேசியக் கண்காட்சி மையம் என பல இடங்களில் ஹிஜாப்போடு சுறுசுறுப்பாக பணிபுரியும் பெண்களே சாட்சி.

கூடுதல் தகவலாக சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பெண்களுக்கான பல்கலைக்கழகம் இருக்கிறது என்பதையும், இந்த பல்கலைக்கழகத்தில் 60 ஆயிரம் மாணவியர் படிக்க முடியுமென்பதையும் உலகத்திலேயே பெண்களுக்கான பெரிய  பல்கலைக்கழகம் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

உங்கள் சகோதரி,
ஆயிஷா பேகம்

------

11 comments:

 1. வார்த்தைகள் ஒவ்வொன்றும் அதன் நியாயத்தையும், எழுதியவரின் முரண்பாடுகளையும் சிரித்துக் கொண்டே கண்டனம் இடும் அழகிய பாணியில் பிரம்மிப்பூட்டுகிறது .

  முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி ..!!

  :அஹ்மது யஹ்யா அய்யாஷ்

  ReplyDelete
 2. மாஷா அல்லாஹ் தி இந்துவில் செய்தி பதிந்த சுஜாதா அவர்களுக்கு அருமையாக பதில் அளித்துள்ளீர்கள் சகோ.. Ayusha Begum .. தி இந்து போஸ்டை முன்னரே பார்த்தேன்.. பின்னர் அதன் பின்னோட்டங்களை பார்த்தேன். சகோ.. Hussain Amma அவர்கள் அருமையாக பின்னோட்டங்களை பதிந்துள்ளார்கள்.. மேலும், சில அருமையாக கருத்துக்களை அங்கிருந்து நீக்கப் பட்டு விட்டது. கருத்துக்களை எதிர் கொள்ள திராணியற்ற கோழைகளாக இருக்கிறார்கள்.

  ReplyDelete
 3. நான் இங்கே கமெண்ட் பண்றேன் வரவே இல்ல :( என் கமெண்டை காணோம்?? :o :o

  ReplyDelete
 4. மாஷா அல்லாஹ் எதார்த்த கருத்துக்களை எதிர் கருத்தாக எடுத்து சொன்ன விதம் மிக அருமை.நல்ல பதிவு சகோ வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 5. சாட்டையை வெகு நிதானமாக, எவரையும் காயப்படுத்தாதவாறு, சுழற்றி இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் முயற்சி!!
  --- அன்புடன் உங்கள் சகோதரன்:
  பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
  My BLOG: http://portonovocomputertech.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்)

  ReplyDelete
 6. சபாஷ் !

  தெளிவான விளக்கம், நல்லதொரு பதில்... எவரும் இலகுவில் புரிந்து சகித்துக் கொள்ளும் அளவுக்குரிய எழுத்து நடை..

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. மிகத்தெளிவான பதில். யாருக்காக இந்த கட்டுரை /விளக்கம் எழுதப்பட்டதோ அவர்கள் எல்லோரும் தெரிந்து தெளிய வேண்டும்

  ReplyDelete
 8. மாஷா அல்லாஹ் !!! வழக்கம் போல கலக்கிட்டீங்க ஆயுஷ்!!!

  ReplyDelete
 9. மாஷா அல்லாஹ் அருமையான பதில்.

  ReplyDelete
 10. Arumaiyanaan pathivu. vaahthukkal

  ReplyDelete