ஆடைக்குறைப்பே உங்கள் நாகரிகமென்றால்...!
காட்டு விலங்குகள் தொன்று தொட்டு நாகரிகத்தின் உச்சியில்...!
போலியாக ஆர்ப்பரிக்கும் உங்கள் நாகரிகத்திலிருந்து விலகி...
பழம்பெரும்வாதியாக வாழ்வதே எங்கள் திருப்தி...!
என் ஹிஜாபை பற்றி உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை ...?
அந்தோ... ஆடு நனைகிறதென ஓநாய் அழுவது போல...!
பெண் விடுதலை என்ற பெயரில் பிதற்றிக்கொண்டு...
அரைகுறை ஆடை அணிவதல்ல உண்மை பெண்ணியம்...!
போகப்பொருளாக்கி பார்ப்பதே நீ திணிக்கும் பெண்ணியமா...?
போகப்பொருளாக்கி பார்ப்பதே நீ திணிக்கும் பெண்ணியமா...?
ஹிஜாபை அணிய வேண்டாமென சொல்ல உனக்கென்ன உரிமை...?
இச்சைப் பார்வைகள் உண்டு போட்டதன் மிச்சமாக இருக்க,
என் மனம் இசையாது போனதன் கோபமோ...?
வெளி அழகை பார்த்து நீ தூக்கித்தரும் அங்கீகாரத்தினை...
என் அறிவுக்கான வெற்றியென ஏமாற்றிக்கொள்ள மாட்டேன்...!
நீ விரும்புவதை நான் அணிந்து வலம் வருவதல்ல என் சுதந்திரம்...!
நான் விரும்பும் ஆடையே எனக்கான பாதுகாப்பு அரண்...!
நீ கூக்குரலிடுவது போல் என் ஆடை சிறுமைப்படுத்தவில்லை,
மாறாக என்னை பூரணமாக முழுமையாக்கியது...!
என்னை யார் பார்க்க வேண்டுமென்று தீர்மானிக்கும்
உரிமை, என்னை தவிர யார் கையிலுமில்லை...!
என் ஹிஜாப் என் உரிமை...!!!
அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!
ஆம்... அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!
உங்கள் சகோதரி
தாஹிரா பானு
Tweet | ||||
மாஷா அல்லாஹ்.. அருமை சகோதரி தாஹிரா
ReplyDeleteநன்றி... சகோதரர் பீர் முஹம்மத்...
Deleteஎன்னை யார் பார்க்க வேண்டுமென்று தீர்மானிக்கும் உரிமை, என்னை தவிர யார் கையிலுமில்லை...!
ReplyDeleteஎன் ஹிஜாப் என் உரிமை...!!!
அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!
ஆம்... அரைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!! மாஷா அல்லாஹ்.. அருமை சகோதரி
நன்றி... சகோதரர் ஷாஜஹான்...
Delete//நீ விரும்புவதை நான் அணிந்து வலம் வருவதல்ல என் சுதந்திரம்...!
ReplyDeleteநான் விரும்பும் ஆடையே எனக்கான பாதுகாப்பு அரண்...!//
இருவரிகளும் விபரீதப்பொருளையே தரும்.
அதாவது நீங்கள் விரும்பாப்பொருளது.
முதல் வரி சொல்வது, நான் பிறர் என்னை அணிய விரும்பும் ஆடையை அணிய மாட்டேன். (பிறர் என்பது அந்நிய ஆண்)
இரண்டாம் வரி சொல்வது: நான் நான் விரும்பும் ஆடையே அணிவேன். அதுவே எனக்கு பாதுகாப்பு.
இரண்டுவரிகளிலுமே என்ன மாதிரியான ஆடை என்று சொல்லப்படவில்லை.
முதல் வரியில் வரும் ஆண் உங்களை ஒழுக்கமான ஆடை அணியச்சொன்னாலும் அணிய மாட்டீர்கள்.
இரண்டாம் வரியில் வரும் நீங்கள். எப்படிப்பட்ட ஆடை உங்களுக்குப்பிடிக்குமோ, எப்படிப்பட்ட ஆடை உங்களுக்குப்பாதுகாப்பு என உணர்கிறீர்களோ, அதைத்தான் அணிவீர்கள்.
என்ன பொருள்? அதாவது நீங்கள் இறுக்கமான ஜீன்ஸ் போட்டுக்கொண்டு, அதுவே என்னைச்சீண்டுபவனை உதைக்க பாதுகாப்பான அல்லது வசதியான உடையென்று கருதினால், அதை அணிவீர்கள்? என்றுதானே சொல்கிறீர்கள்? எனக்கு எது பாதுகாப்போ அதைத்தான் அணிவேனென்றால், ஹிஜாப் மட்டுமா பாதுகாப்பு?
எனவே சேம் சைடு கோல் போட்டு விட்டீர்கள்.
உங்களுக்கு என்னால் உதவ முடியும். அவ்விருவரிகளையும் இப்படி எழுதுங்கள் சரியாகிவ்டும்.
நீ விரும்பும ஆபாச ஆடையை நான் அணிந்து வலம் வருவதல்ல என் சுதந்திரம்...!
நான் விரும்பும் ஒழுக்கமான ஆடையே எனக்கான பாதுகாப்பு அரண்...!
Now, the meaning is what you desire. Ok?
அடுத்தபடியாக, பிறரின் தவறான கருத்துக்களை மாற்ற நீங்கள் விரும்பினால், அடாவடித்தனமான தமிழ் எழுதக்கூடாது. நீ...உனக்கென்ன உரிமை?...உனக்கேன் அக்கறை? நீ கூக்குரலிடுவது...?
தவறு Ms Yasmin Riazdheen. Say all you want, forcefully, effectively and strongly, but only in a civil manner. Otherwise, people may be led to think that Islam teachers intolerance. We live in a civilised society: giving and taking respect to one another.
மாஷா அல்லாஹ்
சகோதரர் மலரன்பன்...
Deleteஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி...
நீங்கள் என் கவிதையை சரியாய் புரிந்துகொள்ளவில்லையோ என தோன்றுகிறது.
என் கவிதையை படித்தாலே விளங்கும் "பெண்ணியத்திற்கு பரிந்து பேசும் பொய் தோரணையில்...
ஆணாதிக்கத்தை எங்கள் மேல் திணிக்க எண்ணி... "கட்டாய ஹிஜாப் தடை சட்டம்" கொண்டு வர எண்ணும் அடக்குமுறை ஆண்களுக்கு & அரசாட்சியாளர்களுக்கு என்று.
// இரண்டுவரிகளிலுமே என்ன மாதிரியான ஆடை என்று சொல்லப்படவில்லை. //
---- என் கவிதையின் தலைப்பே "என் ஹிஜாப், என் உரிமை" தான்.
---- ஹிஜாப் தான் எங்கள் ஆடை என சொல்லி தெரியவேண்டியது இல்லை எல்லா வரிகளிலும்...
---- ஒவ்வொரு வரியிலும் 'ஹிஜாப்', 'ஹிஜாப்' என்பதை சுட்டிக்காட்டினால்...
---- பிறகு கவிதை போல இல்லாமல், கதை போல நீண்டு விடுமே...
//அதாவது நீங்கள் இறுக்கமான ஜீன்ஸ் போட்டுக்கொண்டு, அதுவே என்னைச்சீண்டுபவனை உதைக்க பாதுகாப்பான அல்லது வசதியான உடையென்று கருதினால், அதை அணிவீர்கள்? என்றுதானே சொல்கிறீர்கள்? //
---- இப்படி சந்தேகம் வந்துவிட்டது கூடாதென்று தான் தெளிவாக சொல்லி இருக்கிறேனே.
---- அதுவும் ஒன்றுக்கு இரண்டு முறையாகவே சொல்லி இருக்கிறேனே சகோதரரே...
/* என் ஹிஜாப் என் உரிமை...!!!
அறைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!!
ஆம்... அறைகுறை ஆடையல்ல என் அடையாளம்...!!! */
// அடுத்தபடியாக, பிறரின் தவறான கருத்துக்களை மாற்ற நீங்கள் விரும்பினால், அடாவடித்தனமான தமிழ் எழுதக்கூடாது. நீ...உனக்கென்ன உரிமை?...உனக்கேன் அக்கறை? நீ கூக்குரலிடுவது...? //
---- கவிதைக்கு ஒருமை அழகு... இதை சொல்லி தான் புரிய வைக்க வேண்டியதில்லை...
ஒருமையில் பேசுவது என்ன பிரமாதம்...!
---- கவிதை/சொற்பொழிவுகளில் 'அவன்', 'இவன்' என - "கம்பன் ஏமாந்தான்", "பாரதி சொன்னான்", "காந்தி சொன்னான்" - இது போன்று நன்கு மரியாதை தெரிந்த பலரும் பேசுகிறோம்... இவற்களை இழிவாக சித்தரிக்கிறோம் என்று சொல்வீர்களா இப்படி பேசியவர்களை... கண்டிப்பாக கிடையாது...
---- அதே போல் தான் நான் எழுதியதும்...
// people may be led to think that Islam teachers intolerance. We live in a civilised society: giving and taking respect to one another. //
---- Brother, Islam never teaches intolerence. Islam is a religion of PEACE.
---- Never ever blame the whole religion by judging a single individual.
---- Civilised people will never do that.
// தவறு Ms Yasmin Riazdheen //
By the way, Sister Yasmin posted this.
But I'm the one who wrote that brother...
Please check the post once again...
Anyway Thank you so much for your comment...
That too ended with 'Maa Sha Allah".
May Almighty God (Allah) guide us all in straight path...
I think you gave good reply.
Deleteவெளி அழகை பார்த்து நீ தூக்கித்தரும் அங்கீகாரத்தினை...
ReplyDeleteஎன் அறிவுக்கான வெற்றியென ஏமாற்றிக்கொள்ள மாட்டேன்...!
நீ விரும்புவதை நான் அணிந்து வலம் வருவதல்ல என் சுதந்திரம்...!
நான் விரும்பும் ஆடையே எனக்கான பாதுகாப்பு அரண்்்...!// செெெெெம்்ம வரிிிிிகள்் சகோோதரிி மாாஷா அல்லாஹ்
மிக்க நன்றி சகோதரி ஷர்மிளா...
Deleteஜஸாக்கில்லாஹ் ஹைரன் கஸீரா...
மாஷா அல்லாஹ் ..
ReplyDeleteஅருமை..
நன்றி... சகோதரர் சீனி...
DeleteSuper
ReplyDeleteநன்றி... சகோதரர் லைலத் காதர்...
DeleteSuper sis. Nethile adiche maathiri! !!
ReplyDelete@ malaranpan! Force panne padupavangaluku varum aathangam apdi thaan velippadum ! Force pannaathacangale paarthu inthe varihal paesevillai. Oaese vaendiye thaevai illai!
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி... சகோதரர் ஜல்ஹா...
Deleteவெளி அழகை பார்த்து நீ தூக்கித்தரும் அங்கீகாரத்தினை...என் அறிவுக்கான வெற்றியென ஏமாற்றிக்கொள்ள மாட்டேன்...!
ReplyDeletesuper sis
நன்றி ஜைனப் ராலியாஹ்...
Deleteவெளி அழகை பார்த்து நீ தூக்கித்தரும் அங்கீகாரத்தினை...என் அறிவுக்கான வெற்றியென ஏமாற்றிக்கொள்ள மாட்டேன்...!
ReplyDeletesuper sis
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க தோழி தாஹிரா....
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க தோழி தாஹிரா....
மிக்க நன்றி சகோதரி அப்சரா...
Deleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteநன்றி... சகோதரர் மீரான் ஹசனி...
Deletemasha allah..
ReplyDeleteநன்றி... சகோதரர் ஷேக் மொஹிதீன்...
DeleteMashaallah superb... Jazakallahkhair sis
ReplyDeleteநன்றி... சகோதரர் ஜெங்கிஸ் கான்... வ இய்யாக்கும்...
DeleteMa shaa allah!..very well said..really proud of you ..may allah s.w.t shower his blessings more n more on you.aameen!
ReplyDeleteMa shaa allah! thahira...very well said..really proud of you friend...may Allah s.w.t will shower his blessings on you always..Aameen!
ReplyDeleteஜஸாக்கில்லாஹ் ஹைரன் கஸீரா சகோதரி ஆசியா மர்யம்...
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் தன் கருனையை பொழிவானாக... நேரிய வழியில் செலுத்துவானாக...
மாஷா அல்லாஹ்...
ReplyDeleteமிக அருமையா எழுதி இருக்கீங்க.. முதல் கட்டுரை போலவே தெரியவில்லை... நல்ல எழுத்தாற்றல் இருக்கு... தொடர்ந்து எழுதுங்க...
இன் ஷா அல்லாஹ்...
Delete// முதல் கட்டுரை //
கட்டுரை(?!?!)...
நன்றி