அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்...!
ஏக இறைவனின் அன்பும் அருளும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக ஆமீன்...
பிப்ரவரி 1- உலக ஹிஜாப் தினத்தை
முன்னிட்டு வலையுக அன்பர்களுக்காக இஸ்லாமிய பெண்மணி நடத்தும் இந்த
வருடத்தின் முதல் போட்டியை இங்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறோம்... !!
உங்கள்
அறிவுக்கும் ஹிஜாப்பிற்கும் சம்மந்தமே இல்லையே என்று நிருபர் கேட்ட
கேள்விக்கு நோபல் பரிசு வென்ற இஸ்லாமிய பெண்மணியின் பதிலுக்கும் நம் போட்டிக்கும் தொடர்புண்டு என்றால் மிகையாகாது.
உடலை
மறைத்திருக்கும் பெண்கள் அறிவையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்ற பிம்பம்
இன்று பலர் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. ஹிஜாப் பேணும் சகோதரிகள்
ஒவ்வொருவரும் ஹிஜாப் குறித்தான கேள்விகளை கட்டாயம்
எதிர்கொண்டிருப்பார்கள். அவர்களின் அனுபவங்களை பகிரவும், தங்கள் வீட்டு பெண்கள் எதிர்கொண்ட கேள்விகளுக்கு ஆண்களின் பதில்களை பகிரவும் ஓர் அறிய வாய்ப்பு.
போட்டிக்கான கேள்விகள் மற்றும் பரிசுகள் விபரம் கீழ்க்காணும் படத்தில்:-
போட்டிக்கான கேள்விகள் மற்றும் பரிசுகள் விபரம் கீழ்க்காணும் படத்தில்:-
- உங்கள் பதில்கள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..
- நீங்கள் எழுதும் படைப்பு இதற்கு முன் வேறு எந்த தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருக்கக்கூடாது. காப்பி பேஸ்ட்டாகவோ யாரோ வேறொருவரின் பதில்களாகவோ இருக்கக்கூடாது. கட்டாயம் உங்கள் சொந்த பதிலை மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
- உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி: admin@islamiyapenmani.com
- உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள்:
- ஜனவரி 31-2015 என்ற போட்டியின் இறுதி தேதி வலையுக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி 15-2015 வரை போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் விருப்பமே எங்கள் விருப்பம்.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அனைவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பரிசினை வெல்லுங்கள்.
கவனிக்க: ஹிஜாப் என்பது நாகரீகமாய், ஒழுக்கமாய், இறுக்கமற்றதாக, முகம், கை மணிகட்டு, கால்பாதம் தவிர்த்து உடல் அங்கங்களை வெளிகாட்டாத எந்த உடையையும் குறிக்கும்.
வலையுக சகோதர
சகோதரிகளுக்கு அன்பான வேண்டுகோள்:
தங்கள் வலைதளங்களில் போட்டி குறித்த பேனரை பதிவு செய்து இந்த போட்டி அனைவரிடத்திலும் சென்றடைய உதவுங்கள்...
Tweet | ||||
அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )
ReplyDeleteபிப்ரவரி -1 உலக ஹிஜாப் தினத்தை முன்னிட்டு நீங்கள் அறிவித்த கட்டுரை போட்டியின் புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் . மேலும் ,
உலக அரங்கில் .., இஸ்லாத்திற்கெதிரான முக்கிய முழக்கத்தில் அதிக விமர்சனங்களோடு பங்கு வகிக்கும் " ஏன் ஹிஜாப் " என்ற தலைப்பை கொடுத்து விட்டு ... அதற்க்கு 20 வரிகளுக்குள் கட்டுரை எழுத சொல்வது சாத்தியம் இல்லாத ஒன்று .!
ஹிஜாபை சொல்வதற்கு முன்பு .., முந்தைய பெண்களின் ஆடை , பழக்க வழக்கங்கள் , அதனால் ஏற்பட்ட தொல்லைகள் , ஹிஜாப் என்பது என்ன , அதன் சட்டம் என்ன , ஹிஜாப் பெண்ணுக்கு மட்டும் தானா .. இவற்றிக்கு ஏற்ற ஆதாரங்கள் போன்றவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும் சகோஸ் .! இந்த சாப்டரில் இறங்கியபிறகு தான் புரிகிறது இவை பெரியதாக நீளும் என்று.!
நீங்கள் கூறும் , 20 வரிகளுக்குள் இவ்விசயத்தை முழுவதுமாக சொல்வது மிகக்கடினம் . சொல்லவரும் விஷத்தை தெளிவாக சொல்ல இயலாது என்பதை கவனத்தில் கொள்ளவும் . கடமைக்காக எழுதி அனுப்புவது யாருக்கும் பலனளிக்காது என்பது என் கருத்து .! சில மாற்றத்தை எதிர்பார்க்குறேன் .
வஸ்ஸலாம் .
கூத்தாநல்லூர்
- காயின் காதர்
21.01.15 / புருனை
வ அலைக்கும் சலாம்..
Deleteசரியாக சொல்லியுள்ளீர்கள். ஆனால் போட்டியின் நோக்கம் கட்டுரை எழுதுவதல்ல...
ஒரு மாற்று மதத்தவர் சட்டென ஒரு இஸ்லாமிய சகோதரியிடம் எதுக்கு ஹிஜாப் போடுறீங்க என கேட்டால் அவரிடம் பக்கம் பக்கமாக நாம் விவாதிக்க மாட்டோம்.. மாறாக சில கருத்துக்களைச்சொல்லுவோம் இல்லையா? இதுதான் போட்டியின் கான்சப்ட்.
அதற்குதான் தவக்குல் கர்மானின் பதிலை உதாரணமாக கொடுத்தோம். நிரூபர் கேட்ட்ட கேள்விக்கு சில வரிகளில் நச்சென பதில் சொல்லியிருப்பார். நாங்கள் எதிர்பார்ப்பதும் அதுவேதான். அதனால் தான் 20 வரிகளை வரம்பாக்கினோம் சகோ.
உங்கள் சந்தேகம் மூலம் மற்றவர்களுக்கும் கூட தெளிவு கிடைக்கும் என நம்புகிறோம்... ஜஸக்கல்லாஹ் ஹைர்.
குறைவான பக்கங்கள் கொண்ட கட்டுரைகளுக்கு வார்த்தைகள் வலிமையானதாக இருக்கவேண்டும். அது போலதான் இந்த கட்டுரை போட்டியை பார்கிறேன். எப்படி ஒட்டுமொத்த வாழ்விற்கும் வழிகாட்டி என்றால் "இஸ்லாம்" என்று பதிலாக எழுதுகிறோமோ அதுபோல் ..... பூட்டி சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் விதமாக அமையட்டும்
ReplyDeleteaboothahir.n
thiruvithamcode
kanyakumari district
விபரம் தரவும் இருபது வரிகளுக்கு மேல் . 30 வரிகளுக்குள் எழுதலாமா. எழுத எழுத இதன் விளக்கம் நீண்டுகொண்டே எதையும் சுறுக்கமுடிவதில்லை அதனால் கேட்கிறேன்..
ReplyDelete