Friday, December 14, 2012

கட்டுரைப் போட்டிக்கான தேதியில் மாற்றம் - உங்கள் வேண்டுகோளுக்கிணங்க...

தேதி மாற்றம் குறித்து ஒரு முக்கிய மற்றும் அவசர அறிவிப்பு :

அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்...



"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்புமாறு கேட்டு இருந்தோம்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட பலர் கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் கோரி இருந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து டிசம்பர் 31 வரை தேதியை நீட்டிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏற்கனவே அனுப்பியவர்கள் மாற்றங்கள் செய்ய விரும்பினால் தாராளமாக செய்து அனுப்பலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அனுப்பிய கட்டுரையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த போட்டியில் அதிகமானோர் கலந்து கொண்டு, உங்கள் கல்விக்கான ஆலோசனைகளை அள்ளி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரை போட்டி பற்றிய மேலும் விவரங்களுக்கு : இங்கே அழுத்தவும்

இக்கட்டுரை போட்டிக்கான பேனர் உங்கள் தளங்களில் இணைக்க விரும்பினால் அதற்கான code :

<a href="http://goo.gl/6SlL7" target="_blank"><img border="0" src="http://3.bp.blogspot.com/-VcRWvvj_E7c/UMt3GKMjfoI/AAAAAAAADB8/-L5dpjackag/s1600/for+FB1.jpg" height="215" width="300" /></a>

No comments:

Post a Comment