Tuesday, November 20, 2012

இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி

தேதி மாற்றம் குறித்து ஒரு முக்கிய மற்றும்  அவசர அறிவிப்பு :
 

அஸ்ஸலாமு அலைக்கும் சகோஸ்...

"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்புமாறு கேட்டு இருந்தோம்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட பலர்  கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் கோரி இருந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து டிசம்பர் 31 வரை தேதியை நீட்டிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏற்கனவே அனுப்பியவர்கள் மாற்றங்கள் செய்ய விரும்பினால்  தாராளமாக செய்து அனுப்பலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அனுப்பிய கட்டுரையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த போட்டியில் அதிகமானோர் கலந்து கொண்டு, உங்கள் கல்விக்கான ஆலோசனைகளை அள்ளி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

___________________________________


உலகெங்கிலும் வாழும் தமிழக முஸ்லிம்களிடையே புதைந்து கிடக்கும் பொக்கிஷமான எழுத்தாற்றலை வெளிக்கொண்டு வரவும், நம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை நம் சமூகத்திடம் இருந்தே பெரும் உயர் நோக்குடனும், உங்கள் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு!!

இன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு தலைப்புகளில் தமிழக அளவில் கட்டுரைப் போட்டி நடத்தி, இஸ்லாமியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வையும் நம் மக்களில் இருந்தே பெற்று, அந்த தீர்வை நோக்கி பயணம் செய்யும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லீம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?"

இதுதான் முதல் போட்டியின் தலைப்பு!

ஏன் இந்த தலைப்பு..???

இன்று உலக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உற்று நோக்கினால், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வது யாருக்கும் கடினமான ஒரு
பணியாக இருக்காது. உலகின் இந்த அசாதாரணமான வளர்ச்சியின் ஆணி வேர் கல்வியே ஆகும்! அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்வியில் நமது தமிழக இஸ்லாமிய சமுதாயம் எந்த அளவில் இருக்கிறது என்பதை உங்களில் இருந்தே அறியும் பொருட்டே இந்த தலைப்பு.

கட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன் எங்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை புரிந்துக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கக் கூடும்.....

* இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்
* கல்வியில் நமது சமூகத்தின் இன்றைய நிலை
* ஆக்கப்பூர்வமான கல்வி என்பது என்ன?
* அதை அடைய நம்மிடையே வசதி, வாய்ப்புகள் உள்ளனவா?
* வசதி, வாய்ப்பு இல்லை எனில் எவ்வாறு அதை உருவாக்குவது?
*  உருவாக்குவதற்கான சாதக, பாதகங்கள் என்ன?

இதுபோன்ற விஷயங்களை உள்ளடக்கி உங்கள் கட்டுரை வரும்படி முயற்சி செய்யுங்கள்.

* இதில் இல்லாத புதிய ஐடியாக்கள் இருந்தால் அவை பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

போட்டிக்கான விதிகள்:

1. கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.
2. இந்த போட்டிக்கு வயது வரம்பு கிடையாது. யார் வேண்டுமென்றாலும் கலந்துக் கொள்ளலாம்.
3. கட்டுரைகளை ஈமெயில் வாயிலாக மட்டுமே அனுப்பவேண்டும்.
4. 6 பேர் கொண்ட நடுவர் குழு கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்.
5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதை சொல்லவும் வேண்டுமோ???
6. எந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமை நடுவர் குழுக்கு உண்டு.
7. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31 , இந்திய நேரம் இரவு 11.59 வரை.
8. முடிவுகள் இன்ஷா அல்லாஹ்  ஜனவரி 7 முதல் ஜனவரி 10  இரவுக்குள்  இஸ்லாமிய பெண்மணி தளத்தில் அறிவிக்கப்படும்.
9. வெற்றியாளர்கள் ஃபோன் மற்றும் ஈமெயில் மூலம் தெரியப்படுத்தப்படுவார்கள்.
10. பரிசுகள் இன்ஷா அல்லாஹ், ஜனவரி 15  க்குள் வழங்கப்படும்.
11. முதல் மூன்று பரிசு பெரும் கட்டுரைகள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படும்.
12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.
13. இங்கு வரும் கட்டுரைகள் வேறு இடங்களில் வெளி வந்ததாகவோ அல்லது வெளியீட்டுக்காக அனுப்பப்பட்டதாகவோ  இருக்கக்கூடாது.
14. காபி, பேஸ்ட் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிசும் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தெரிய வந்தால், பரிசுத் தொகை வழங்கப்படமாட்டாது.
15. வெற்றி பெறுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்கள் விரும்பி , இஸ்லாமிய பெண்மணியின் அட்மின்களும் விரும்பும் பட்சத்தில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்மணி தளத்தில் கட்டுரைகள் எழுதிக்கொடுக்க அனுமதிக்கப்படுவார்.
பிற்சேர்க்கை : 16. இப்போட்டியில் முஸ்லீம் முஸ்லீம் அல்லாதோர் என யார் வேண்டுமென்றாலும் கலந்துக்கொள்ளலாம்.


கட்டுரைகளை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி : contest@islamiyapenmani.com

அனுப்ப வேண்டிய முறை : (இதில் வரும் விபரங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும், எனவே சகோதரிகள் பயப்பட வேண்டாம் )

உங்கள் பெயர்:
தந்தை/காப்பாளர் பெயர் :
வீட்டு முகவரி(விருப்பம் இருந்தால்):
ஃபோன் நம்பர்:
உங்கள் வயது(விருப்பம் இருந்தால்) :
ஊர் பெயர்:
அதன் பின் கட்டுரை


பரிசு விபரம்:‍‍‍‍

முதல் பரிசு: 5,000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3,000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 2,000 ரூபாய்

வேண்டுகோள்: சகோஸ்...! இது உலக அளவில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், உலகின் ஒவ்வொரு மூலை, முடுக்களில் இருந்தும் நம் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் செய்கிறோம். இது அனைவரையும் சென்றடைய உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஷேர் செய்யுங்கள். உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பங்குபெற ஊக்கப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துவதற்கான நன்மையை இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பானாக.. ஆமீன்...!

ஒரு குடும்பமாய் செயல்படுவோம்!!! புதிய மாற்றங்களை உண்டாக்குவோம்!!!!! இன்ஷா அல்லாஹ்!!!!!!!!

57 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்...
  அருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்...

  இந்த காலகட்டத்திற்க்கு இது மாதிரியான கட்டுரை போட்டிகள் மிகவும் அவசியம். மேலும் இதில் நம் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலமையையும் அறிய உதவியாக இருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

   Delete
 3. அருமையான முயற்சி வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. நல்ல செயல். நிச்சயமாக தமிழக் முஸ்லிம்கள், கல்வியில் மிக பின் தங்கியிருக்கிறோம். அதற்ஆன விழிப்புணர்வு உண்டாக்கும் இம்முயற்சி, இன்ஷா அல்லாஹ்.

  விதிகளில் ஒரு சந்தேகம்:

  //12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.//

  வெற்றி பெறாத கட்டுரையையுமா? பொதுவாக வெற்றி பெறாத கட்டுரை, எழுதியவருக்கே திருப்பித் தரப்படும். ஆனால் இங்கு இவ்விதியினால்,
  ஒருவேளை அவர், தம் கட்டுரையை இதுபோல வேறு போட்டிக்கோ, பத்திரிகைக்கோ அனுப்ப நினைத்தால் அது முடியாதே?

  ReplyDelete
  Replies
  1. சலாம் ஹுசைனம்மா....

   // //12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.//

   வெற்றி பெறாத கட்டுரையையுமா? பொதுவாக வெற்றி பெறாத கட்டுரை, எழுதியவருக்கே திருப்பித் தரப்படும். ஆனால் இங்கு இவ்விதியினால்,
   ஒருவேளை அவர், தம் கட்டுரையை இதுபோல வேறு போட்டிக்கோ, பத்திரிகைக்கோ அனுப்ப நினைத்தால் அது முடியாதே? //

   பரிசு அறிவித்த பின், வெற்றி பெறாத கட்டுரைகளை அதை எழுதியவர்கள் தம் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
   இஸ்லாமிய பெண்மணி, அதில் ஏதேனும் கட்டுரைகளை வெளியிட விரும்பினால், அவர்களிடம் அனுமதி கேட்டு வெளியிடும், அவர்கள் விரும்பினால்.

   இதற்க்கு காரணம், சில கட்டுரைகள் பரிசு பெறாவிட்டாலும் சில நல்ல தகவல்களை , ஆலோசனைகளைக் கொண்டதாக இருக்கலாம். அவற்றை நம் சமூக மக்களிடம்
   கொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கமே காரணம். அவர்களின் முயற்சி வீணாகிவிடக் கூடாது. இது போன்ற தளங்களில் வெளியிடுவதன் மூலம்,
   அவர்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.

   கட்டுரைகள் அனைத்தும் எழுதியவர் பெயரிலே வெளியிடப்படும்.

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்...
  அருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்.
  தாங்களின் செய்தியை நன்றியோடு மீள்பதிவு செய்திருக்கிறோம்.
  http://adiraipost.blogspot.in/2012/11/blog-post_20.html

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   மீள்பதிவு செய்து உதவியமைக்கு நன்றி சகோ

   Delete
 6. நல்லதொரு முயற்சி !

  வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete

 7. அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்...

  அருமையான முயற்சி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   நன்றி ஆயிஷா அபுல்

   Delete

 8. அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்...

  அருமையான முயற்சி வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   நன்றி சகோ

   Delete
 9. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ்,

  மாஷா அல்லா அருமையான முயற்சி.அல்லாஹ்வின் கிருபையால் உங்கள் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்

   நன்றி சகோ

   Delete
 10. அல்ஹம்துலில்லாஹ் .

  மிகவும் அருமையான முயற்ச்சி, இதன்மூலம் இன்னும்பல நல்ல விசயங்களையும் வெளிகொண்டுவரக்கூடிய வாய்ப்பும் உள்ளது..

  புதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அருமையான முயற்ச்சி, இதன்மூலம் இன்னும்பல நல்ல விசயங்களையும் வெளிகொண்டுவரக்கூடிய வாய்ப்பும் உள்ளது..//

   இன்ஷா அல்லாஹ்

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 11. அருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்

  ReplyDelete
 12. அல்ஹம்துலில்லாஹ் நல்ல

  ஏற்பாடு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 13. அல்ஹம்துலில்லாஹ் அருமையான ஏற்பாடு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. முஸ்லீம்கள் மட்டும் தான் கலந்துக்கனுமா?

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ.

   முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதோர் யார் வேண்டுமானாலும் கட்டுரை போட்டியில் கலந்துக்கொள்ளலாம். சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. இதை பிறசேர்க்கையிலும் சேர்த்துவிடுகிறோம்.

   வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...

   Delete
 15. உண்மையில் நல்லதொரு முயற்சிதான்.இனிவரும் காலங்களிலும் இதுபோல் இன்னும் பல நல்ல முயற்சிகள் தொடர அல்லாஹ் அருள்புரிவானாக.!!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமீன்...

   ஜஸக்கல்லாஹ் ஹைர் நிகாஷா

   Delete
 16. நல்லதொரு முயற்சி
  http://changesdo.blogspot.com/2011/11/blog-post_09.html

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும்
  மிக அருமையான முயற்சி , அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  //ஒரு குடும்பமாய் செயல்படுவோம்!!! புதிய மாற்றங்களை உண்டாக்குவோம்!!!!! இன்ஷா அல்லாஹ்!!//

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   நன்றி சகோ.ஜலீலா

   Delete
 18. அஸ்ஸலாமு அலைக்கும்

  நல்லதொரு முயற்சி!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

   Delete
 19. முஸ்லிம்கள் கல்வியில் விழிப்புனர்வு பெற நல்ல முயற்ச்சி. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 20. நல்ல முயற்சி. இந்த தகவலை எங்கள் வலை தளத்திலும் அறிவிப்பு செய்துள்ளோம்
  http://puthanatham.com/islamiya-penmani-competition/

  ReplyDelete
  Replies
  1. மீள்பதிவு செய்து உதவியமைக்கு நன்றி சகோ

   Delete
 21. அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்...
  அருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

   Delete
 22. அருமை! நல்லதொரு முயற்சி வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. வ அலைக்கும் ஸலாம் (வரஹ்...)

  மிக அருமையான முயற்சி, இது வெற்றி பெற்று நன்மை பயக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

  ReplyDelete
 24. சிறந்த முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. Excellent step. congrats. may allah reward you and the sponsor for the giant step taken at the right time.

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete
 27. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...
  அருமையான தலைப்பு .. இன்ஷா அல்லாஹ் முடியும் என்ற தன்மையை முன்னிறுத்தி முற்போக்கு நிலையும்,பிற்போக்கு அணியும் என்ற வரிகளுக்கு ஒப்ப நம் சமூகத்தின் மத்தியில் கல்வி என்ற மூன்றெழுத்தை கலக்கம் இல்லா வடிவில் பயில்வது பயிற்றுவிப்பது இன்று மட்டுமல்ல 1400 ஆம்டுகளுக்கு முன்னால் நபியவர்களுக்கு கல்விதான் ஆரம்பமாக போதிக்கப்பட்டது...இத்தலைப்பை இன்ஷா அல்லாஹ் என்னாலும் வரிசைக்கிரமமாக அமைக்க முடியும் என்ற எண்ணத்தை வல்லவன் அல்லாஹ் என் உள்ளத்திலும் உதிக்கச் செய்துள்ளான் .... ஜஷாக்கல்லாஹூ ஹய்ரா

  ReplyDelete
 28. //கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.// இதற்க்கு என்ன அர்த்தம் மேலும் நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை இஸ்லாம் பற்றி என்று குறிப்பிட்டு சொல்லிவிட்டு அதன் பின் கடைசியில் எல்லா மதத்தவரும் கலந்துகொள்ளலாம் என்கிறீர்கள் பிற மதத்தவர்கள் எழுதும் கட்டுரையை நீங்கள் எப்படி பரிசுக்குரியதாக அறிவிப்பீர்கள் வெறும் ஒப்புக்கு சப்பாக கூறுகிறீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. // பிற மதத்தவர்கள் எழுதும் கட்டுரையை நீங்கள் எப்படி பரிசுக்குரியதாக அறிவிப்பீர்கள் வெறும் ஒப்புக்கு சப்பாக கூறுகிறீர்களா ? //

   இங்கு ஒப்புக்கு சப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை சகோ... இஸ்லாமியர்களின் கல்வி அறிவு முன்னேற்றத்துக்கு இஸ்லாமியர்கள் தான் ஐடியா தர வேண்டும் என்று இல்லை... யார் தந்தாலும் ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது... நமக்கு தேவை நல்ல ஐடியாக்கள் தானே ஒழிய, யார் சொல்வது என்பதல்ல...

   // //கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.// இதற்க்கு என்ன அர்த்தம் //

   ஹதீஸ் மேற்கோள் காட்டுபவர்கள் சஹீஹான ஹதீஸ்களை (பலமானது) மட்டுமே மேற்கோள் காட்ட வேண்டும் என்பதும் இஸ்லாத்திற்கு மாற்றமான ஆலோசணைகள் சொல்லப்பட வேண்டாம் என்பதும் தான் இதன் பொருள். சஹீஹ் இல்லாத ஹதீஸ்களை (பலகீனமானது) மேற்கோள் காட்டினால் அது கட்டுரையின் வீரியத்தை குறைக்கும், நோக்கத்தை திசை திருப்பும் என்பதாலே இந்த முடிவு...

   உங்கள் அழகான கேள்விகளுக்கு நன்றி சிஸ்டர்.... நீங்கள் கேட்டதால் இது குறித்து மற்றவர்களுக்கு இருந்த சந்தேகமும் தீரும்...

   Delete
 29. hay, A.salaam.. i'm from sri lanka.. and i don't know how i visit this page. but this is wonderful program.. i ill share with my friends too... anyway wish u all the very best..

  ReplyDelete
 30. அஸ்ஸலாமு அலைக்கும்
  இணையதள வசதி இல்லாத நம் சகோக்கள் அஞ்சல் மூலம் அனுப்புவதென்றால் எப்படி ?ஏதேனும் முகவரி கொடுக்கலாம் தானே ?

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ் சகோ

   முகவரி கொடுப்பது என்பது சில நடைமுறை சங்கடங்களை கொடுக்க கூடும் என நினைக்கிறேன்.

   மேலும் இப்போது சிறு சிறு ஊர்களிலும் கூட ப்ரவுசிங் சென்டர் வந்துவிட்டது. அதனால் ஸ்கேன் பண்ணி அனுப்புவதற்கு சிரமமாக இருக்காது என நினைக்கிறேன். ஆகும் செலவும் ஒப்பீட்டால் சரிசமமே...

   ஆக ஸ்கேன் செய்து அனுப்புவது தான் வழி..

   ஜஸக்கல்லாஹ் ஹைர் சகோ

   Delete
 31. Assalam Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh,

  This competition is really awesome. I would like to know approximately how many pages the essay need to be?

  Thanks and Regards
  Nilofar

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்..

   அதிகபட்சம் எத்தனை பக்கங்களுக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம்... உங்கள் விருப்பமே...

   குறைந்தபட்சம் 3 பக்கங்களுக்கு மேல் இருந்தால் நலம் :-)

   வாழ்த்துக்கள் Nilofar

   Delete
 32. Assalamu alaimlum.now I am working in Gujarat. Important of education is now very much discussion among Muslim people's here.lot of trust are running school with good facilities. Hope in tamilnadu also same will happen.

  ReplyDelete