Wednesday, November 14, 2012

ஆண் பாவம்..




"ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
 ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்” 
"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு" [எதுக்கு?? ஒரு அடிமை சிக்கிட்டான்ன்னா]
”அடடே ஆண்குழந்தையா போயிட்டுபோகுது ஆத்தா 2 பொட்டப்புள்ள இருக்குன்னு நெனச்சேன் இதாவது ஆணா பொறந்துச்சே"

நீங்க ஹைடெக் சிட்டில இருக்குறவரா இருந்தா இந்த வாசகம்லாம் உங்கள் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் இன்றும் அதிகப்படியாக ஒலிக்கும் வசனங்கள் தான் இவையெல்ல்லாம்... ஒரு குழந்தை பிறந்தா அது பெண்ணாக இருக்க கூடாது என்பது இவர்களின் முதன்மை எண்ணம்... பொட்டப்புள்ளையா பொறந்தா எம்பூட்டு நல்லதுன்னு இவுகளுக்கென்ன தெரியும். அண்ணாவோடது தம்பியோடது அப்பாவோடது என எல்லா சொத்துக்களிலும் பங்கு வந்துருமுல்ல? பல அம்மாக்கள் சுரண்டியாவது கொடுத்திடமாட்டாங்க :-)
 

எங்க,எப்ப  புள்ள பொறந்தாலும் முதல் கேள்வி ஆணா? ஏன் எல்லா எடத்திலேயும் ஆணா? ஆணா?ன்னு கேட்கிறார்கள்????? அதன் ரகசியம் அறிந்தால் கண்ணா ஆணா பொறக்க ஆசையா இல்லையாங்குறது தெரியும்...எதுவா பிறக்கனும் என்பது நம்மிடத்தில்லை நல்லவேளை..

காதிர் இப்னு உபைத் அறிவிக்கிறார்கள்: ஆயிஷா ரலி அவர்கள் யாருக்காவது குழந்தை பிறந்தால் அது ஆணா, பெண்ணா என்று கேட்க மாட்டார்கள். மாறாக, அக்குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்றே விசாரிப்பார்கள். ஆம் என்று யாரும் பதில் சொன்னால், அல்ஹம்துலில்லாஹி ரப்பி ஆலமீன் என்று கூறுவார்கள் (சஹீ புகாரி: நற்பண்புகள் நூல் 1261)
 

விசயத்திற்க்கு வருவோம். ஆனானப்பட்டவர்கள் அனைவருமே முதலில் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள் [ஒரு சிலர்களைத்தவிர எங்களைபோல்] ஆண்மகனாக பிறப்பது அடுத்தவர்களுக்கு வேண்டுமெனில் ஆனந்தமாக இருக்கலாம் ஆனால்  பல ஆண்மகன்களுக்குள் இருக்கும் மனநிலை ஏண்டா ஆணாய் பிறந்தோம்மென்று  [சிலருக்குள் இல்லாமலிருக்கும்] ..
 

ஆண்கள் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பு மரியாதை....[சிலரைத்தவிர] ஏனென்றால்? 

ஆண் என்பவன் அதிகராம் செய்பவன்,ஆதிக்கம் செலுத்துபவன் ஆணவம் கொண்டவன் என்றெல்லாம் சொல்லி சொல்லி ஆண்கள் எல்லாம் பெண்களை அடக்ககூடியவர்களாக  ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது நம் சமூகம்!  இருக்கலாம், இருந்துவிட்டு போகட்டும். அதைமீறிய செயல்கள் அவர்களிடத்தில் இருக்கிறது. தந்தையாக! கணவனாக! மகனாக! ஒரு ஆண் எத்தனை பொறுப்புகள் வகிக்கவேண்டியிருக்கிறது? எத்தனை சிரமங்கள்,கஷ்டங்கள் சங்கடங்கள் துயரங்களென்று படவேண்டியிருகிறது?  உரலுக்கு ஒருபக்கம்தான் இடி ஆனால் மத்தளத்திற்க்கு? அதுபோல்தான் ஆண்களின் நிலை...
 

ஆண்குழந்தை வேண்டுமென்று ஆசைப்படுவதும் ஆண்குழந்தை வேண்டும் ஆண்குழந்தை வேண்டும் என்று வேண்டி உருகுவது எதற்க்கு? அவர்களை தனி கவனம் செலுத்தி வளர்ப்பதெதற்க்கு?  தங்கள் மகனை சீரும் சிறப்புமாய் கேட்பதெல்லாம் கொடுத்து வளர்த்து தங்கள் கிட்ட இல்லாட்டியும் கடன்வாங்கி மகனை நல்லபடியா படிக்கவச்சு, வெளிநாட்டில் வேலைக்கு போக உதவியும் செய்து ஆளாக்கிவிடுறாங்களே...  அது எதுக்கு? அவன் எதுவேணுமுன்னா செய்யட்டும்  எல்லாம் பெரியவனானதும் சரியாகிவிடும்..அது இதுன்னும் அளவுகடந்த செல்லமா வளப்பாங்களே....அதெதுக்கு?  ஆட்ட ஆசை ஆசையா எதுக்கு புல்லு புண்ணாக்கு (ஓ அது மாட்டுக்குதானே சரி சரி] இலை,தழை பால் பலகாரமுன்னு கொடுத்து வளர்ப்பாங்க.. இத நான் சொல்லிதான் தெரியனுமாக்கும்..]   பின்னால் அவர்களை வலுவிலக்கச் செய்வதற்கா?அவர்களை சுயமாக சிந்திக்கவிடாமல் தடுப்பதற்கா? இல்லை அவன் உடல் பொருள் அனைத்தும் இழந்து பித்துபிடித்து அலைவதற்கா?

தவறில்லை தான்! பெற்ற மகன், அனைத்திற்கும் தங்களை சார்ந்து இருக்கவேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை! அதேசமயம் அவனுக்கென்று ஒருமனம் இருப்பதை ஏன் அறிய தவறுகிறார்கள்? அதில் ஆசைகள் தனிப்பட்ட சில விசயங்கள் இருப்பதை ஏன் உணர மறுக்கின்றார்கள்?  


தான்பெற்ற குழந்தைகளிடம் தங்களுக்கில்லாத உரிமையா என்றெல்லாம் கேட்க்கக்கூடாது! இருக்கிறது... எல்லாம் ஒரு எல்லைக்குள்!!!! நீங்கள் பெற்றதாகவே இருக்கட்டும்! அதற்காக அவர்களின் விருப்பங்கள் எண்ணங்கள் எல்லாம் என்னாவது? திருமணம் ஆகும்வரை ஒரு ஆண் தன்மகனாக இருக்கிறான். ஆனபின்பு அவனும் அவனுடைய கடமை இன்னும் கூடுகிறது, இன்னொரு பெண்ணுக்கும், அவள் மூலம் பிறக்கும் தன் பிள்ளைகளுக்கும் அவன் பொறுப்பாளி ஆகின்றான்.

மகனாக இருக்கும்போது அவன் செய்யும் சேட்டை, தவறு, குற்றம், அனைத்தும் செல்லமாய் தெரியும் குடும்பத்திற்க்கு, அவன் திருமணம் ஆனதும் யதார்த்தமாய் வாய் தவறி ஒரு சொல்லை சொல்லிவிட்டாலும் கொலைகுற்றம் செய்ததுபோல் தண்டிக்கப்படுகிறான்! பல குடும்பங்களில் தன் மனைவியிடம் சிறந்த கணவனுக்கான பெரும்மதிப்பு மிக்க நற்சான்றிதழ் வாங்க முடியாததற்கு இந்த சூழ்நிலையே முக்கிய காரணம்! மனைவியை சமாளித்து சமாதானப்படுத்திவிடலாம் என்று தெரியும் ஆணுக்கு நன்றாகவே தெரியும் தன் அம்மா, சகோதரிகளின் வசையிலிருந்து தப்ப முடியாது என்று! மனைவி மட்டும் கொடுக்கும் நற்சான்றிதழா அது???? நபி (ஸல்) அவர்கள் 'உங்களில் சிறந்தவர் மனைவியிடத்தில் சிறந்தவரே' என்று ஆணுக்கு சொன்ன தகுதியல்லவா அது??? 


வாரி வாரி கொடுத்தபோதும் வசைபாடப்படுகிறான். வருடமுழுவதும் அயராமல் அனுப்பியவன் ஒரு மாதம் அனுப்பத்தவறினாலும் அல்லோல்படுத்தபடுகிறான். இதைவிடக்கொடுமை, இருமகன்களாய் பிறக்கும் வீடுகளில் நடப்பது! ஒருகண்ணில் பால், மறுகண்ணில் சுண்ணாம்பு என்பதைபோல் கொடுக்கும் மகன் நடுவீட்டில்,கொஞ்சம் கொடுக்க இயலாத மகன் நடுத்தெருவில்! ஒருமகனை தாங்கோ தாங்கென்று தாங்கும் தாய் இன்னொரு மகனை ஏறேடுத்தும் பார்க்க மறுக்கிறது! அப்படியே பார்த்தாலும் அது ஊருக்காக! யாரும் எதுவும் சொல்லிவிடுவார்களோ என்று அதுவும் என் குழந்தைதான் என்கிறார்கள்.. யார் எது சொன்னபோதும்  தாங்கிக்கொள்ளும் ஒரு மகனால் தன் தாயே தன்னை மட்டம்தட்டும்போது கூனிக்குறுகிறான். சில பெற்றோர்கள் வசதியான மகனின் வீட்டில் தங்குவதை தான் விரும்புறாங்க...  இன்னொரு மகன் வசதியில்லாத காரணத்தால்!  ஏன் மீண்டும் சுமையை கொடுப்பானேன் என்ற உண்மையான நோக்கம் எனில் அல்லாஹ் நற்கூலி கொடுக்கட்டும்! ஆனால் தன் வசதி ஒன்றை மட்டுமே குறிகோளாய் கொண்டு வசதியற்றவனை ஒதுக்கும் போது வசதியற்றவனுக்கு வெறுப்பு தன் சகோதரன் மேல் தான் உண்டாகும்! அந்த வெறுப்பு பொறாமையை உண்டாக்கி உறவுக்குள் விரிசலை ஏற்படுத்தி வைக்கும்!
 நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் குழந்தைகள் உங்களை கவுரவப்படுத்த வேண்டும் என்பது உங்களின் உரிமையாக இருப்பது போல, தாங்கள் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்பது உங்கள் குழந்தைகளின் உரிமையாகும்" (அபூதாவுத்)
சிலவீட்டில் இன்னும் மோசம். எவ்வளவு கொடுத்தாலும் இல்லையென்றே தூற்றுவார்கள்! என்னத்தை செய்தான்? ஏதோ கொஞ்சம் தந்தான் என குறைபடுபவர்கள் அநேகர்! மகனுக்கு மணமுடித்து மருமகள் வந்தபின்பு  தன்மகளுக்கு [கட்டிக்கொடுத்துவிட்டாலும் ]தன்மகனிடமிருந்து வரும் பணம் மற்றும் பொருள்களில் முக்கால்பங்கு தன்மகளுக்கென்று ஒதுக்கிவிட்டு கால்பங்கில் குடும்பத்திற்க்கே பங்கிடுகிறார்கள்.. இதனாலேயே பலகுடும்பங்கள் பகையாளியாகி உள்ளுக்குள் புகைந்துகொண்டு வெளியில் சமாளித்த வாழ்க்கை வாழ்க்கிறார்கள்.

திருமணம் முடிந்து வெளிநாடுபோய் மாசப்பணம் அனுப்பும்போது முதல் மாசம் ஓகே... அடுத்தடுத்த மாதங்களில்  "சரி இப்படியே போனா எப்படி? எங்களுக்கும் தனியா அனுப்புங்க" என்று சிணுங்கிய குரல் ஆரம்பிக்கும். அங்கேயிருந்து ஆரம்பிச்சிடுமுங்கோ இந்த மத்தளத்துக்கு ரெண்டுபக்க இடி அதுபோல்... பாவம் மனைவிக்கு அனுப்பலன்னா மனைவிக்கிட்ட திட்டு! மனைவிக்கு அனுப்பினா "போனதடவ துபை போயிருந்தப்ப நல்லாதான் இருந்தான் ஆனா இந்த தடவ ஏனோ இப்படியிருக்கான்! மாத்திபுட்டாம்மா மாத்திபுட்டா....அவன மயக்கி முந்தானையில் முடிஞ்சிட்டா... அவதான் முடிஞ்சான்னா இவனுக்கெங்கே போச்சி புத்தி.. ஆக சுத்தி சுத்தி ஆணுக்கு வந்து விழும் தலையில் சுத்தி [டங்குன்னு சத்தம் கேட்குதா :)

ஆண்குழந்தை பெற்றெடுத்து அதனை தங்களோடவே வைத்துக்கொண்டு அவனின் சம்பாத்தியம்.மற்றும் அவனின் தேவைகள் அனைத்தும் தங்களோடே இருக்க விரும்பும் பெற்றோர்களுக்கு! . வளர்த்து படிக்கவைத்து ஆளாக்கி வெளிநாடோ அல்லது உள்நாடோ சம்பாதிக்க வழியும் தேடிகொடுத்துவிடும் நீங்கள். அவனுக்கு திருமணம் என்ற ஒன்றைமட்டும் செய்யாதீர்கள்[அஸ்தஃபிருல்லாஹ்...அப்புறம் வழி தவறிபோய்விட்டான் என்றெல்லாம் குற்றம் சொல்லி ஒப்பாரிவைக்கூடாது சொல்லிப்புட்டேன்]. ஏனெனில் அது உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் இடைவெளியை ஏற்படுத்துகிறது என்ற நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று அதற்காக சொல்கிறேன் திருமணம் செய்யாதீர்கள் என்று]


ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் போதாது அதற்குண்டான தேவைகளை நிறைவேற்றத்தான் இறைவன் தாயாக தந்தையாக படைத்துள்ளான். நாம் செய்த செய்யும் அத்தனைக்கும் கைமாறு எதிர்பார்த்தால் எப்படி? நாம் வளர்க்கும் நம்குழந்தைகள் நமக்கு நல்லது செய்யநினைக்கும் ஆனால் நம்முடைய சில செய்கைகள் அதனை தடுக்கவும் வழிவகுக்கும் என்பதை மறக்காதீர்கள்!
இறுதித்தூதர் மேலும் கூறினார்கள், "உங்கள் குழந்தைகளிடம் நீதியை கடைபிடியுங்கள்", இதனை மூன்று முறை திரும்ப சொன்னார்கள் (முஸ்லிம்)
ஆண் அவன் குடும்பத்தை தாங்கும் அரண். அவனை ஆட்டம் காணவைத்துவிட்டு குடும்பமே பூகம்பம் வந்துவிட்டதுபோல் ஆ[ட்]டிவிடாதீர்கள்.. பெண்களே உங்களைத்தான்! நீங்கள் தாயாக மனைவியாக மகளாக எதுவாக இருக்கும்பட்சத்தில் ஆண் என்ற அன்புக்கு அடைக்கலம் கொடுக்காவிட்டாலும் அணுசரனையாகவாவது நடந்துக்கொள்ளுங்கள்..[என்னது அடைக்கலம்கூட இல்லையா ஏண்டா இந்த பொறப்பு பொலம்புவது கேட்குது ஹா ஹா]... நாமெல்லாம் ஆறுதலாக இருக்க கூடியவர்கள் தானே... அவ்வாறு தானே இறைவனும் மனைவிக்கான கடமையாக குர்-ஆன்னில் கூறியுள்ளான்?
நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; (அல்குர்ஆன் 30:21) 
சம்பாதிப்பதும் அதனை தன் குடும்பத்திற்காக செலவு செய்வதும் ஆணின் கட்டாயக்கடமை! அதிலிருந்து ஆண் தவறிவிடுவானேயால் நாளை இறைவனிடத்தில் குற்றம் அவனைச்சார்ந்ததே! வசதியாக இருக்கும் தன்மகனை ஒரு மாதிரியாகவும் வசதியற்றவனை ஒரு மாதிரியாகவும் பார்ப்பது பெற்றோர்களுக்கு ஆகுமான செயல் அல்ல இறைவனிடத்தில் கட்டாயம் பதில்சொல்லவேண்டிவரும். அதேபோல் பாகுபாடுபார்த்து குடும்பசொத்துகளிலும் ஏமாற்றுவது பெரும்பாலான இடங்களில் நடைபெறுகிறது. உண்மையான அன்போடு அக்கரையோடு பெற்று வளர்த்திருப்பார்களேயால் அப்படி செய்யமாட்டார்கள். தான்பெற்ற பிள்ளைகளுக்கே துரோகம் இழைக்கமாட்டார்கள்.
நுமான் இப்னு பஷீர் அறிவிக்கின்றார்கள், "என் தந்தை, அவருடைய செல்வத்திலிருந்து எனக்கு பரிசு பொருட்களை அளித்தார். ஆனால் என் தாயார் அம்ரா பின்த் ரவாஹாவோ 'நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு சாட்சியாக இருக்கும்வரை இதனை நான் அங்கீகரிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டார். ஆகையால், என் தந்தை நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று அந்த பரிசுப்பொருளுக்கு சாட்சியாக இருக்கும்படி கேட்டார். அப்போது இறைத்தூதர் அவர்கள் 'இது போலவே உங்களின் அனைத்து குழந்தைகளுக்கும் செய்தீரா?' என்று கேட்டார்கள். 'இல்லை' என்று என் தந்தை பதிலளித்தார். 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம் நீதியை பேணுங்கள்' என்று இறுதித்தூதர் கூற, என் தந்தை திரும்பி வந்து எனக்கு அளித்த பரிசுப் பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டார்கள்" (புஹாரி, முஸ்லிம்)
அன்புள்ள குடும்பமே உங்கள் பிள்ளைதான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் உங்களைப்போன்ற ஒரு ஜீவனுக்கும் அவன் உறவான பின் நீங்கள் எப்படி உன் பிள்ளையிடத்தில் எதிர்பார்ப்பீர்களோ அப்படியே அவளும் உங்கள் பிள்ளையிடத்தில்  எதிர்பார்ப்பாள் என்பதை உணர்ந்தீர்கள் என்றால் ஆண் ஆணாக அன்பானவனாக இருப்பான். இல்லையென்றால்..... அத நான் வேறு சொல்லனுமா. அந்தர்பெல்டி அடிப்பான். பொய்வேசம் போடுவான். குரங்காட்டியிடம் மாட்டிய குரங்குபோல் ஆவான். செடுசெடு சிடுமூஞ்சியாவன்  சின்ன சின்ன பிரச்சனைக்கும் சிக்கிமுக்கியாகுவான். ஆகமொத்ததில் ஆண் பாவமாவான்..
ஆண்பாவம் பொல்லாததுங்கோ இது நாசொல்லல பின்னாடியிருந்து சொல்ல சொல்லுறாவோ.. ஹா ஹா

ஆணுக்கும் மனமுண்டு
அதில்
ஆத்மார்த்தங்கள் அடங்கிடப்பதுண்டு
----------------
அன்புடன் மலிக்கா
முத்துப்பேட்டை

42 comments:

  1. சகோ மலிக்கா....

    பெண்ணின் பார்வையில் ஆண்... நியாயமான பார்வை... அருமையான கட்டுரை தந்ததற்க்கு மனம் திறந்த பாராட்டுக்கள்.. நேரம் அனுமதித்தால் இன்னும் கருத்திடுகிறேன்....லைக்கும் இடுகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. அப்பது டைட்டில் கருத்தா சரி சரி விரிவாக கருத்துகளை எதிர்பார்க்கிறோம் பாவமான ஆண்களிடமிருந்து ஹா ஹா நன்றி சகோ சிராஜ்..

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    மாஷா அல்லாஹ் மிக சிறந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. எல்லாப்புகழும் அவன் ஒருவனுக்கே.. மிக்க நன்றி சகோ..

      Delete
  3. சகோதரி நீரோடை மலிக்கா ஃபாரூக்

    ////அவன் திருமணம் ஆனதும் யதார்த்தமாய் வாய் தவறி ஒரு சொல்லை சொல்லிவிட்டாலும் கொலைகுற்றம் செய்ததுபோல் தண்டிக்கப்படுகிறான்!////

    ஒரு ஆணின் மனநிலையில் நின்று ஆணின் ஆன்மாவை மிகச்சரியாக புரிந்துக் கொண்டு எழுதிய பதிவு அருமை! அருமை! அருமை!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சகோ. தனிப்படமுறையில் எனக்கு சில ஆண்கள்மீது கடுங்கோபம் உள்ளது.. ஆனால் பல ஆண்கள் நிலை இதுபோன்று உள்ளதால் இதனை எழுத தோன்றியது.

      ஆன்மாக்கள் பல ஆண்களுக்கு சிறப்பாய் இருக்கிறது சிலருக்கு இல்லவேயில்லை என்பதை எனதான்மா உணர்ந்தால் ஆண்பாவமாக தெரிகிறான் என் உணர்வுகளுக்கு.. தங்களின் உணர்தலான கருத்துகளுக்கு உளப்பூர்வ நன்றிகள்.சகோ

      Delete
  4. (http://kalaisaral.blogspot.com/2012/11/blog-post.html) மூலம் உங்கள் தளம் வருகை... சிறப்பான கட்டுரை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ..

      ”பிறவாதிருக்க வேண்டும்”
      என்ற கருத்துகளில் [கலைச்சாரலில்]ஆதங்கம் தெரிகிறது..
      என்ன செய்வது பிறந்தாச்சி வாழ்ந்துக்காட்டுவோம்..

      தங்கைளின் வருகைக்கும் தமிழ்மண ஓட்டிற்க்கும் மிகுந்த நன்றிகள் சகோ..

      Delete
    2. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ.

      அன்பு சகோதரிக்கு,

      உண்மையிலேயே இது ஒரு நல்ல படைப்பு,

      அது எப்படி எங்கள் குடும்பத்தில் நடந்து கொண்டு இருப்பதை நேரில் பார்த்த மாதிரி அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.

      பாவம் என் கணவர், இவரின் நிலையும் உங்கள் கட்டுரை போலவே உள்ளது.

      நீங்களும் மற்றும் உங்கள் குழுவினரும் மேலும் மேலும் இது போன்ற ஆக்கங்களை தரவேண்டி எல்லாம் வல்ல அல்லாவிடம் துவா செய்கிறோம்.

      என் மனதை தொட்ட சில வரிகள்:-

      ஆணுக்கும் மனமுண்டு அதில் ஆத்மார்த்தங்கள் அடங்கிடப்பதுண்டு.

      ஆண் அவன் குடும்பத்தை தாங்கும் அரண்.

      ஆண் என்ற அன்புக்கு அடைக்கலம் கொடுக்கா விட்டாலும் அணு சரனையாகவாவது நடந்து கொள்ளுங்கள்.

      பல ஆண் மகன்களுக்குள் இருக்கும் மனநிலை ஏண்டா ஆணாய் பிறந்தோம்மென்று

      ஆண் என்பவன் அதிகராம் செய்பவன், ஆதிக்கம் செலுத்துபவன் ஆணவம் கொண்டவன் என்றெல்லாம் சொல்லி சொல்லி ஆண்கள் எல்லாம் பெண்களை அடக்ககூடியவர்களாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது நம் சமூகம்!

      உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி ஆனால் மத்தளத்திற்க்கு? அது போல் தான் ஆண்களின் நிலை...

      அவன் திருமணம் ஆனதும் யதார்த்தமாய் வாய் தவறி ஒரு சொல்லை சொல்லி விட்டாலும் கொலை குற்றம் செய்தது போல் தண்டிக்கப்படுகிறான்!

      உங்களைப் போன்ற ஒரு ஜீவனுக்கும் அவன் உறவான பின் நீங்கள் எப்படி உன் பிள்ளையிடத்தில் எதிர்பார்ப்பீர்களோ அப்படியே அவளும் உங்கள் பிள்ளையிடத்தில் எதிர்பார்ப்பாள்.

      மனைவியை சமாளித்து சமாதானப்படுத்தி விடலாம்.

      அவனுக்கு திருமணம் என்ற ஒன்றை மட்டும் செய்யாதீர்கள்.

      நாம் செய்த செய்யும் அத்தனைக்கும் கைமாறு எதிர்பார்த்தால் எப்படி?

      வசதியாக இருக்கும் தன் மகனை ஒரு மாதிரியாகவும் வசதியற்ற மகனை ஒரு மாதிரியாகவும் பார்ப்பது பெற்றோர்களுக்கு ஆகுமான செயல் அல்ல.

      ஒருகண்ணில் பால், மறுகண்ணில் சுண்ணாம்பு.

      உண்மையிலே ஆண் பாவம்.

      அன்புடன் சகோதரி
      மும்தாஜ் ஜமீல்பாபு
      தோகா, கத்தர்.

      Delete
    3. மனைவியை சமாளித்து சமாதானப்படுத்தி விடலாம்///

      ஹா ஹா அவள்தான் இளிச்சவாய், சொன்னதை கேட்டு தலையாட்டும் தலையாட்டிபொம்மை,விதிவிட்டவழியென பொருத்துக்கொள்ளும் பூமி,, இப்படியெல்லாம் சொல்லலாம்தான் ஆனா அது எல்லாரையும் அல்ல, இதற்க்கு நேருக்குமாறாக இருக்கவும்தான் செய்கிறார்கள் இக்காலத்தில்[ஏன் அக்காலத்திலும் தான்னு யாரோ சொல்வது காத்துவாக்குல கேட்குது]

      //வசதியாக இருக்கும் தன் மகனை ஒரு மாதிரியாகவும் வசதியற்ற மகனை ஒரு மாதிரியாகவும் பார்ப்பது பெற்றோர்களுக்கு ஆகுமான செயல் அல்ல.

      ஒருகண்ணில் பால், மறுகண்ணில் சுண்ணாம்பு.
      /// இந்த செயல்தான் எனக்கு அரவே பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. இறைவனை மறந்து இவர்கள் செய்யும் காரியங்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. வேண்டுமென்றே ஒதுக்கிவிட்டு சொத்துகளிலும் மோசடி செய்துவிட்டு, ஒரு நல்லது கெட்டதில்கூட ஓரவஞ்சனையாக நடப்பதும், அதேபோல். பெண்ணின் குழந்தைகளை தாங்கோ தாங்கியும், தன் தன் ஆணின் குழந்தைகளை கடமைக்கே பார்க்கும் பெற்றோர்களை மற்றும் அவர்கள் கூடப்பிறந்தவர்களை பார்த்தாலே எனக்கு கோபம் கோபமாக வரும். இறைவா இந்நிலைக்கு என்னையும் ஆளாக்கிவிடாதே என்ற பிராத்தனைதான் அப்போது என்னுள்ளம் இறைஞ்சும் [இது சத்தியம்].

      தயவு செய்து அப்படியான ஒரு காரியத்தை செய்யாதீக்கள். நாளை உங்களுக்கான செய்களுக்கு நீங்களே தண்டிக்கப்படுவீர்கள்..

      Delete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹீ.

    அன்பு சகோதரிக்கு,

    உண்மையிலேயே இது ஒரு நல்ல படைப்பு,

    அது எப்படி எங்கள் குடும்பத்தில் நடந்து கொண்டு இருப்பதை நேரில் பார்த்த மாதிரி அப்படியே எழுதி இருக்கிறீர்கள்.

    பாவம் என் கணவர், இவரின் நிலையும் உங்கள் கட்டுரை போலவே உள்ளது.

    நீங்களும் மற்றும் உங்கள் குழுவினரும் மேலும் மேலும் இது போன்ற ஆக்கங்களை தரவேண்டி எல்லாம் வல்ல அல்லாவிடம் துவா செய்கிறோம்.

    என் மனதை தொட்ட சில வரிகள்:-

    ஆணுக்கும் மனமுண்டு அதில் ஆத்மார்த்தங்கள் அடங்கிடப்பதுண்டு.

    ஆண் அவன் குடும்பத்தை தாங்கும் அரண்.

    ஆண் என்ற அன்புக்கு அடைக்கலம் கொடுக்கா விட்டாலும் அணு சரனையாகவாவது நடந்து கொள்ளுங்கள்.

    பல ஆண் மகன்களுக்குள் இருக்கும் மனநிலை ஏண்டா ஆணாய் பிறந்தோம்மென்று

    ஆண் என்பவன் அதிகராம் செய்பவன், ஆதிக்கம் செலுத்துபவன் ஆணவம் கொண்டவன் என்றெல்லாம் சொல்லி சொல்லி ஆண்கள் எல்லாம் பெண்களை அடக்ககூடியவர்களாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது நம் சமூகம்!

    உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி ஆனால் மத்தளத்திற்க்கு? அது போல் தான் ஆண்களின் நிலை...

    அவன் திருமணம் ஆனதும் யதார்த்தமாய் வாய் தவறி ஒரு சொல்லை சொல்லி விட்டாலும் கொலை குற்றம் செய்தது போல் தண்டிக்கப்படுகிறான்!

    உங்களைப் போன்ற ஒரு ஜீவனுக்கும் அவன் உறவான பின் நீங்கள் எப்படி உன் பிள்ளையிடத்தில் எதிர்பார்ப்பீர்களோ அப்படியே அவளும் உங்கள் பிள்ளையிடத்தில் எதிர்பார்ப்பாள்.

    மனைவியை சமாளித்து சமாதானப்படுத்தி விடலாம்.

    அவனுக்கு திருமணம் என்ற ஒன்றை மட்டும் செய்யாதீர்கள்.

    நாம் செய்த செய்யும் அத்தனைக்கும் கைமாறு எதிர்பார்த்தால் எப்படி?

    வசதியாக இருக்கும் தன் மகனை ஒரு மாதிரியாகவும் வசதியற்ற மகனை ஒரு மாதிரியாகவும் பார்ப்பது பெற்றோர்களுக்கு ஆகுமான செயல் அல்ல.

    ஒருகண்ணில் பால், மறுகண்ணில் சுண்ணாம்பு.

    உண்மையிலே ஆண் பாவம்.

    அன்புடன் சகோதரி
    மும்தாஜ் ஜமீல்பாபு
    தோகா, கத்தர்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் வாங்க சகோதரி, முதலில் தங்களின் வருகைக்கும் நிதானமாய் படித்துவிட்டு நீண்டதொரு கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

      Delete
    2. அது எப்படி எங்கள் குடும்பத்தில் நடந்து கொண்டு இருப்பதை நேரில் பார்த்த மாதிரி அப்படியே எழுதி இருக்கிறீர்கள்///

      சகோதரி உங்கள் வீடுகலைபோல இங்கு பல வீடுகளில் நடந்தேறிக்கொண்டிருக்கும் பாவப்படும் கதைகள்தான் ஏராளம். என்ன செய்ய சிலர் வெளியே சொல்கிறார்கள் பலர் உள்ளுக்குள்ளேயே முழுங்குகிறார்கள் இன்னும் சிலரோ மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் திண்டாடி நிற்கிறார்கள்.. மேலும்.. இன்ஷாஅல்லாஹ் நாளை தொடரும்ம்

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    வித்தியாசமான கோணத்தில் நல்ல அலசல்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் வாங்க சபீர்காக்கா.

      இது கடமைக்காக போட்ட கருத்தா?

      ஏன் கேட்டேன்னா, உங்க சங்கதிகள் ஒன்னும் சொல்லாம போறியளே . மெய்யாலுமே ஆண்பாவமா? அப்படினெல்லாம் அதுக்குதான் கேட்டேன்..

      ஒற்றைவரி கருத்துகளுக்கும் வாழ்த்துகளுகும் மிக்க நன்றி.. காக்கா..

      Delete
  7. அல்ஹம்துலில்லாஹ்....அருமையான படைப்பு...

    ReplyDelete
    Replies
    1. எல்லாப்புகழும் அல்லாவுக்கே.. மிக்க நன்றி சகோ..

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    யககாவ் நீங்க இதுப்போல எழுதுவீங்கன்னு நான் நினைச்சே பார்க்கல , சூப்பர் நீரோடையின் அலைவீச்சு அழகாவே இருக்கு. கவிதையையே பார்த்து பழகிய கண்களில் அழகிய உரை நடை :-)

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம்.

      அடடே அண்ணாத்தே. வாங்க வாங்க.. நெனச்சிப்பார்க்காததுனாலதான் எழுதிட்டேன்போல. எப்போதும் அப்படியே நெனங்க அப்பத்தான் அடிக்கடி இப்படி உங்களயெல்லாம் பத்தி எழுதமுடியும்..

      ஆக கவிதையவிட உரைநடை ஒழுங்க இருக்குன்னு சொல்லுறிய..
      எனக்கு கவிதை நடையைத் தவிர வேறுநடை மிக சிரமமாகதானிருந்தது, ஆனா இப்பகொஞ்சம் கொஞ்சமாக எழுதவருது.. எல்லாம் அவன் செயல்.. அதோடு இ பெ யின் ஊக்கமும் ஒத்துழைப்பும்தேன்..

      அதுசரி உங்களைபத்தி இம்பூட்டு சொல்லியிருக்கேனே இதெல்லாம் உண்மையா? நெசமாலுமே நீங்களெல்லாம் பாவமுங்களா.

      அண்ணாத்தே நீங்களெல்லாம் நல்லவங்களா? கெட்டவங்களா?

      Delete
  9. உண்மையிலேயே இது ஒரு நல்ல படைப்பு

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த மகிழ்ச்சியும் நெஞ்சார்ந்த நன்றியும் சகோ..

      Delete
  10. சகோதரி மும்தாஜ் ஜமீல்பாபு சொன்னதையும்...
    ஜெய்லானி சொன்னதையும்...
    நான் அப்படியே வழிமொழிகிறேன்...

    ஆமா...

    ஃபாரூக் ரெண்டுநாளைக்கு முன்னாடி தங்க ஆரமோ... அல்லது வைர நெக்லசோ வாங்கிக் கொடுத்துருக்காருன்னு நினைக்கிறேன்... அதுனாலதான் இவிங்க... ஆண்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்காக அப்படீன்னு நினைக்கிறேன்...

    ஹிஹிஹிஹிஹிஹிஹி....


    ///ஆண் என்பவன் அதிகராம் செய்பவன்,ஆதிக்கம் செலுத்துபவன் ஆணவம் கொண்டவன் என்றெல்லாம் சொல்லி சொல்லி ஆண்கள் எல்லாம் பெண்களை அடக்ககூடியவர்களாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது நம் சமூகம்! இருக்கலாம், இருந்துவிட்டு போகட்டும். அதைமீறிய செயல்கள் அவர்களிடத்தில் இருக்கிறது. தந்தையாக! கணவனாக! மகனாக! ஒரு ஆண் எத்தனை பொறுப்புகள் வகிக்கவேண்டியிருக்கிறது? எத்தனை சிரமங்கள்,கஷ்டங்கள் சங்கடங்கள் துயரங்களென்று படவேண்டியிருகிறது? உரலுக்கு ஒருபக்கம்தான் இடி ஆனால் மத்தளத்திற்க்கு? அதுபோல்தான் ஆண்களின் நிலை... ////

    எல்லோர் குடும்பத்திலும் உள்ள எதார்த்த நிலையை விவரித்துள்ளீர்கள்... உண்மைதான்...

    ஆனால்...

    ஒன்றை நீங்கள் மட்டுமல்ல... எந்த பெண்மணியும் மறுக்க முடியாது...

    குடும்பத்தில் உள்ள ஓர் கணவன், தன் மனைவி குடும்பத்தாருக்கு உதவி செய்யும்போதும், தன் வீட்டுக்கு உதவி செய்யும்போதும் ஒரே மாதிரிதான் அவனது எண்ண ஓட்டங்கள் உழலும்... சரிசமமாய்தான் செய்வான்...

    அது ஏனென்று புரியவில்லை... விளங்கவில்லை...

    நல்ல குணம் கொண்ட... அடுத்தவருக்கு உதவிட வேண்டுமென்ற குணங்கொண்ட இல்லத்தரசியாய் உள்ள அக்கணவனின் மனைவி... தனது கணவன், கணவனது அம்மா, அப்பா அல்லது அவரது சகோதர, சகோதரிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் மட்டும்.. மனமுவந்து கொடுக்க சம்மதிப்பதில்லை... இது என் வீட்டில் இல்லை என்று மட்டும் தயவுசெய்து யாரும் “பொய்” மட்டும் சொல்லிவிடாதீர்கள்... இது எதார்த்தமான உண்மை...

    இது புரியாத புதிராய் உள்ளது.

    ஆனால்..

    அதேகணவன், தனது மனைவி குடும்பத்தாருக்கு செய்ய வேண்டுமெனில் மனமுவந்து மகிழ்ச்சியுடன் கொடேன் என்றுதான் சொல்வான்... ஆனால், அம்மனைவி “இவ்வளவு எதுக்கு?” என்றும், அப்படியே கொடுத்துத்தான் தீரவேண்டுமென்ற நிலைக்கு வரும்போது மட்டும் “கொடு” என்று பட்டும்படாமல்.... முழுமனதோடு அல்லாமல், அரைமனதாய் சம்மதிப்பது நடக்கிறது...

    இதுதான் ஏன் என்று புரியவில்லை...

    இது பெண்மணிகளின் இயல்பு என்று நினைக்கிறேன்... இயல்பை என்றும் மாற்ற முடியாது என்பது நியூட்டன்ஸ் விதிகள் மாதிரி உண்மை போலிருக்கிறது...

    “அப்படியெல்லாம் இல்லை” என்று, மலிக்காவும் மற்ற பெண்மணிகளும் தயவுசெய்து பொய் மட்டும் சொல்லிவிடாதீர்கள்...

    அதைப்போலவே மற்றொரு கருத்தையும் சொல்ல விரும்புகிறேன்...
    மனிதன் பிறக்கும்போதே தன்னுடன் பிறந்த கையில் உள்ள விரல்களே ஒரேசம அளவில் இல்லை.. ஆனால்... மனிதர்களில் நல்லவர்களும் உண்டு... கெட்டவர்கள் உண்டு.. நல்லவர்கெட்டவர் உண்டு... கெட்டவர்நல்லவர் உண்டு... அதோடு, மனிதன் “மிருக”த்தின் பரிணாம வளர்ச்சி என்பது பிராய்டின் தத்துவம்.. அதனால்.. அம்மிருகத்தின் குணங்கள் கொஞ்சூண்டாவது மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டுதானிருக்கும்... அட்லீஸ்ட்.. அந்த மிருக குணத்தின் கறையாவது மனதில் எங்காவது படிந்திருக்கத்தான் செய்யும்... இந்த மிருக குணம் எப்போதாவது... என்றாவது ஒருநாள் திடீரென வெளிவந்து தன் சேட்டையை செய்துவிட்டு, மீண்டும் ஆழ்மனதில் சென்று உறங்கிவிடும் அல்லது பதுஙகிக் கொள்ளும்.. இது இயல்பானது... எதார்த்தமான உண்மை... அதற்கு ஆண் என்றோ, பெண் என்றோ பாகுபாடெல்லாம் கிடையாது... அதனால்... ஆண்களில் யோக்கியனும் உண்டு, அயோக்கியனும் உண்டு... அதைப்போலவே பெண்களிலும் என்பது மறுக்கமுடியாத... மறைக்க முடியாத உண்மை...

    அதனால்... ஆண்தான் தப்பு செய்வான் என்றும், பெண்தான் தப்பு செய்வான் என்றும் சொல்வது தவறு எனும் கொள்கை கொண்டவன் நான்...

    ஓகே..ஓகே.. ரொம்பத்தான் அறுக்கிறேன்...

    மீண்டும் சொல்கிறேன்...
    அருமையான... அற்புதமான பதிவு...
    ஏன்னா.... “ஜெய்லானி”யே பாராட்டின பிறகு
    நா.. பாராட்டாம இருந்தேன்னா அது நல்லாயிருக்காது...

    வாழ்த்துக்கள் மலிக்கா... நல்பதிவு...

    இந்த பதிவு அருமை...





    ReplyDelete
    Replies
    1. சகோதரி மும்தாஜ் ஜமீல்பாபு சொன்னதையும்...
      ஜெய்லானி சொன்னதையும்...
      நான் அப்படியே வழிமொழிகிறேன்...//

      வாங்க வாங்க காஞ்சி முரளியாரே. முதலில் வருகைக்கும், மிகுந்த சிரப்பட்டு காணப்போன கருத்துக்களை மீண்டும் கொண்டுவந்து சேர்த்தமைக்கும் உளமார்ந்த நன்றியோடு வரவேற்கிறேன்..

      அப்புறம் நம்ம விசயத்துக்கு வருவோம்.. வழிமொழிஞ்சாச்சில்ல ஓகே ஓகே

      //ஆமா...

      ஃபாரூக் ரெண்டுநாளைக்கு முன்னாடி தங்க ஆரமோ... அல்லது வைர நெக்லசோ வாங்கிக் கொடுத்துருக்காருன்னு நினைக்கிறேன்... அதுனாலதான் இவிங்க... ஆண்களுக்கு வக்காலத்து வாங்கியிருக்காக அப்படீன்னு நினைக்கிறேன்...

      ஹிஹிஹிஹிஹிஹிஹி.//

      அல்லோ அதென்ன ரெண்டுநாளைக்குமுன்னாடி,, என்னவோ கூடவந்து எடுத்து தந்ததுபோல்,, எங்களுக்கு நகைவாங்கிகொடுத்துட்டா நாங்க உங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசிடுவோமா? அப்படிபார்த்தா எல்லார்வீட்டிலும் பீரோ கொள்ளாதுங்கோ எப்பபாத்தாளும் சபோட் பண்ணிக்கிட்டே இருப்பாங்கோ.[ஒரு கம்மல் வாங்கிக்கொடுத்தாக அது 20 நாளாச்சி ஹி ஹி]

      Delete
    2. //மீண்டும் சொல்கிறேன்...
      அருமையான... அற்புதமான பதிவு...
      ஏன்னா.... “ஜெய்லானி”யே பாராட்டின பிறகு
      நா.. பாராட்டாம இருந்தேன்னா அது நல்லாயிருக்காது...//

      ஹா..ஹா... இதுக்காகத்தான் நான் லேட்டா வரது . நல்லாத்தான் நம்மளை புரிஞ்சு வச்சிருக்காங்க :-)

      ///எங்களுக்கு நகைவாங்கிகொடுத்துட்டா நாங்க உங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசிடுவோமா? ///

      ஒரு முடிவோடத்தான் இருக்கீங்கப்போலிருக்கு அவ்வ்வ்வ் அதுக்காக அடுத்த பதிவுல போட்டு வறுத்து எடுத்திடாதீங்க :-)

      Delete
    3. ஒன்றை நீங்கள் மட்டுமல்ல... எந்த பெண்மணியும் மறுக்க முடியாது///

      நாங்க மறுக்கவேயில்லீங்கோ.. உண்மைகளை மறுக்கவோ மறைக்கவோ முடியாது..

      ///இது பெண்மணிகளின் இயல்பு என்று நினைக்கிறேன்... இயல்பை என்றும் மாற்ற முடியாது என்பது நியூட்டன்ஸ் விதிகள் மாதிரி உண்மை போலிருக்கிறது...

      “அப்படியெல்லாம் இல்லை” என்று, மலிக்காவும் மற்ற பெண்மணிகளும் தயவுசெய்து பொய் மட்டும் சொல்லிவிடாதீர்கள்.//

      அதெப்படி சகோ ஒன்னு ரெண்டுபேர்க்கூடவா இதற்க்கு மாற்றமாக இருக்கமாட்டார்கள். நான் என்னையும் சேர்த்துகல இதில் பாத்துக்கோங்க இருப்பாங்கன்னு சொல்றேன்..

      நெக்ஸ்ட்.

      //அதனால்... ஆண்தான் தப்பு செய்வான் என்றும், பெண்தான் தப்பு செய்வாள் என்றும் சொல்வது தவறு எனும் கொள்கை கொண்டவன் நான்..// அண்ணன் தங்கச்சியல்லவா அதான் சேம் கொள்கை..

      நெக்ஸ்ட்
      ஓகே..ஓகே.. ரொம்பத்தான் அறுக்கிறேன்..//

      சேச்சே ஏன் இப்புடி.. சொல்லவேண்டியதை சொல்லித்தான் ஆகனும் சிலநேரம் சுறுக்கியும் சில நேரம் நீட்டியும். ஆகவே தாங்கலின் கருத்துகள் ஒவ்வொன்றும் சொல்ல்ப்படவேண்டியவைகள்.. அதற்கே பலபல நன்றிகள்..

      //மீண்டும் சொல்கிறேன்...
      அருமையான... அற்புதமான பதிவு...
      ஏன்னா.... “ஜெய்லானி”யே பாராட்டின பிறகு
      நா.. பாராட்டாம இருந்தேன்னா அது நல்லாயிருக்காது.//

      இதெல்லாம் ஓவரு ஏன்னா அண்ணாத்தே என்ன சொன்னாரு இல்ல சொல்லியிருக்காருன்னு இப்புடி வக்காலத்து வாங்குறீங்க.. ஓ ஒரேயினமுன்னா ஓகே ஓகே..

      சகோவின் ஆழந்த கருத்துகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் சகோ..

      Delete
  11. நம்மைப் பத்தி நாமே புலம்பிக்கொள்ள இருந்ததே ஒரு இடம்தான். அதுக்கும் இப்ப ஆப்பா.....

    ப்ளீஸ்... இதையே பேஸாக வச்சு ஒரு ‘இஸ்லாமிய ஆண்மகன்’ தளம் தொடங்கிடப் போறாங்க :))

    ReplyDelete
    Replies
    1. ஆப்பா அதெல்லாம் நமக்கு நாமே என்னிக்காவது வச்சிருக்கோமா நெஞ்சத்தொட்டு சொல்லுங்க,,


      அன்னு செல்லம் நமது பெருந்தன்மையை அவிங்க உணரவேண்டமா , அதிலும் நமக்கு சப்போட்டாப்பழமாக அப்பப்ப உதவுறாங்கள அதுக்குத்தேன் செல்லம்.. எப்படியெல்லாம் சொல்லி ஆணுக்காக இந்த பொண்ணுங்க கிட்ட சமாளிக்கவேண்டியிருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      என்னது அப்படியெல்லாம் செய்வாங்க. செய்துட்டுபோகட்டும் விடுங்க அன்னு, பாவம் அதிலாவது சுதந்திரமாக இருக்கட்டுமே! எழுதட்டுமே!.. ஹா ஹா

      Delete
  12. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  13. Niraya unmai irukku. Ellathaum solla mudiyadhu sis

    ReplyDelete
    Replies
    1. அடடா சொல்லமுடியா விசயங்கள் நெறைய இருக்கா.. அப்ப உண்மையிலேயே நீங்க பாவம் தான் என்ன செய்ய விதிவிட்ட வழி
      வாழ்ந்துகாட்டன்னு பூமிக்கு வந்துட்டோம் அதை வாழ்ந்து முடிச்சிட்டுதான் போகனும் எது வந்தாலும் சமாளிச்சிக்கலாம் துணிந்து நடைபோடுங்க..

      Delete
  14. ஸலாம் சகோதரி.... அருமையான பதிவு...நடுநிலையான எழுத்துக்கள்...

    //"ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
    ”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்”
    "அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு" [எதுக்கு?? ஒரு அடிமை சிக்கிட்டான்ன்னா]
    ”அடடே ஆண்குழந்தையா போயிட்டுபோகுது ஆத்தா 2 பொட்டப்புள்ள இருக்குன்னு நெனச்சேன் இதாவது ஆணா பொறந்துச்சே"//ஹிஹிஹி (ROFL)
    சில வீட்டில் 2 மாப்பளைகளையும் சேர்த்தால் 3 அடிமைகள்....ஹிஹிஹி

    //உரலுக்கு ஒருபக்கம்தான் இடி ஆனால் மத்தளத்திற்க்கு? அதுபோல்தான் ஆண்களின் நிலை... // நல்ல சொன்னைங்கா sister படிக்கும் போது மறுபடியும் அடிமை ஞாயபகம் வந்தாது (ROFL)

    //ஆணுக்கும் மனமுண்டு// உண்மை..

    மொத்ததில் நல்ல அலசல்... ஜெஸக்கல்லாஹ் ஹைர் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ROFL ஆகிகிட்டேயிருக்கா.. என்ன செய்ய
      . அப சமயல் அப்படிதான்..

      "//ஹிஹிஹி (ROFL)
      சில வீட்டில் 2 மாப்பளைகளையும் சேர்த்தால் 3 அடிமைகள்....ஹிஹிஹி//

      அதெப்படி சரியாகச்சொன்னீர்கள் சகோ.. நம்ம வீட்டில் அப்படித்தானோ சகோ மாமியார் வீட்டுக்கு இப்ப சொல்லியனுப்புறேன் இப்புடியெல்லாம் நடத்தாதீங்கன்னு ஓகே.ஹி ஹி.

      மிகுந்த சந்தோஷம் தங்களின் அன்பு வருகைக்கும் உண்மையைச்சொன்ன கருத்துக்கும்.. மிக்க நன்றி சகோ..

      Delete
  15. பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்காகவும் பெண்கள் குரல் கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என இக்கட்டுரையின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள் மலிக்கா :-).

    /தனது கணவன், கணவனது அம்மா, அப்பா அல்லது அவரது சகோதர, சகோதரிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் மட்டும்.. மனமுவந்து கொடுக்க சம்மதிப்பதில்லை... இது என் வீட்டில் இல்லை என்று மட்டும் தயவுசெய்து யாரும் “பொய்” மட்டும் சொல்லிவிடாதீர்கள்... இது எதார்த்தமான உண்மை... / இது என் வீட்டில் இல்லை என்று உண்மையைச் சொல்லலாமா? உலகில் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை... :)

    ReplyDelete
    Replies
    1. பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்காகவும் பெண்கள் குரல் கொடுக்கத் தயங்க மாட்டார்கள் ).//

      அப்படிப்போடுங்க பானு. பாவம் அவங்களின் கொடுமைக்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நம்மினம் காரணமாக இருந்தாலும் அதனையும் தட்டிக்கேட்க நாமிருக்கோமுல்ல. அதுசரி இப்படி அவுகளும் இருப்பாங்களாந்னு கேட்கக்கூடாது. ஏன்னா அவுகளும் நமக்காக அப்பப்ப வந்து குரல கொடுக்கிறார்கள் இல்லையா..


      / இது என் வீட்டில் இல்லை என்று உண்மையைச் சொல்லலாமா? உலகில் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதில்லை... :)//

      உண்மையைச் சொன்னாலும் ஒத்துக்காத ஒலகமிது பானு..

      ஆனாலும் உங்களை நான் மனதார பாராட்டுகிறேன்..

      மத்தப்பொண்ணுங்களும் ஒங்களை பலோபண்ண கேட்டுக்கொள்கிறேன்..

      மிக்க நன்றி பானு..

      Delete
  16. எங்கள் சகோதரியே, எங்களுக்காக எளுதியதற்காக இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் !!!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

      வாருங்கள் சகோதரரே. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் பிராத்தனைக்கும் மிக்க நன்றி....

      Delete
  17. எங்கள் சகோதரியே,
    எங்களுக்காக எளுதியதற்காக இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் !!!!!

    ReplyDelete
  18. அக்கா, ஆனாலும் நீங்க இப்படிச் செஞ்சிருக்கப்படாது!! ”இஸ்லாமிய பெண்மணி”ன்னு பெயரை வச்சுகிட்டு, ஆணுக்குச் சாதகமா எழுதிருக்கீங்களே!!

    இஸ்லாத்தில் ஆணுக்குத்தான் குடும்பத் தலைவன் பதவியுடன் கூடுதல் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. “பதவி”, ”அதிகாரம்” என்றாலே பிரச்னைகள் இல்லாம இருக்குமா? இருக்கத்தான் செய்யும்!! பதவியும் வேணும், பவுசும் வேணும்னா முடியுமா? நாங்க அப்படிக்கா உக்காந்து மத்தள இசையை ரசிக்கிறோம்!! (என்னா வில்லத்தனம்!!) :-)))))

    ReplyDelete
  19. இஸ்லாமிய பெண்மணின்னா எல்லாருக்காகவும் வாதாடுவாள். எல்லாருக்காவும் குரல்கொடுப்பாள் எல்லோரையும் அன்பால் அரவணைப்பாள். பூவைப்போன்ற பெண்மை இரக்க குணமுடையவளுன்னு சொல்லிக்கிடா மட்டும் போதாதுல்ல [தேவைப்படும் நேரத்தில் புயலாவும் மாறுவோம் அதுவேறு விசயம்] அதை செயலிலும் காட்டனுமுல்ல அதுக்காகதானுங்க ஹுசைன்னம்மா ..

    இந்த பெண்ணுக்குள் அந்த ஆண் உண்டல்லவா அதனாலும்தான்..

    உண்மையிலேயே பாவமுங்க ஆணுங்க. இப்புடி பாரத்தை சுமத்திவிட்டு அதுக்குபேரு பதிவின்னு சொல்லுறதும். அதிசுமைய கொடுத்துபுட்டு அதிகாரமுன்னு சொல்லுறதும்..

    பதவியிருந்தா பவுச எதிர்பார்க்கிறது ஒரு குத்தமா அதுக்காக இப்புடியெல்லாமா பாடுப[டுத்தனும்]டனும்

    என்னா ஒரு வில்லத்தனம். அப்பாலிக்கா இருந்து இசைய ரசிக்கறியளாக்கும் பாத்துங்கோ இசை இடமாறி இசைச்சிடபோகுது. ஹா ஹா..

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..,

    அல்ஹம்துலில்லாஹ்

    பெண்களால் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் " பெண்ணின் " வலைத்தளத்தில் ....

    முதல் முறையாக " ஆண் சம்பந்தப்பட்ட " கட்டுரை . அதுவும் ., மத்தாலத்தின் அதவாது எங்களது வலியை சொல்வதாக இருந்தது . இத்தனை காலமும் ஆணின் மீது அடக்குமுறை , அராஜகம் , ஆணவம் என்றெல்லாம் பேசி பேசியே வந்த பல கட்டுரைகளுக்கு மத்தியில் இந்த " ஆண் பாவம் " பக்கா ஸ்பெசல் கட்டுரை தான் .

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம்.

      அன்பு சகோதரைன் வருகைக்கு முதலில் நன்றி..

      முதல் முறையாக " ஆண் சம்பந்தப்பட்ட " கட்டுரை . அதுவும் ., மத்தாலத்தின் அதவாது எங்களது வலியை சொல்வதாக இருந்தது .//

      வலிகளை உணர்வதும், அதை உணர்ப்படுவதும் உணர்தலைபொருத்தே,
      ஆனால் இதனை
      உணரபடுத்தப்பட்டபோது இதை எழுதத்தோன்றியது..

      //இத்தனை காலமும் ஆணின் மீது அடக்குமுறை , அராஜகம் , ஆணவம் என்றெல்லாம் பேசி பேசியே வந்த பல கட்டுரைகளுக்கு மத்தியில் இந்த " ஆண் பாவம் " பக்கா ஸ்பெசல் கட்டுரை தான்//

      ஆண் அராஜகமுடையவன் ஆதிக்கம் செலுத்துபவன், அடிமைப்படுதுபவன் இதெல்லாம் உண்மைதான் [எல்லாரும் அப்படியிருக்க வாய்பில்லை]ஆனால், அதையெல்லாமீறி அன்புக்காவும் ஏங்குபவன்.

      உண்மைகள் உண்மைகளாவும் சொல்லப்படவேண்டும் பல சமயங்களில் அது மறைக்கப்படுகிறது அல்லது மறையப்படுகிறது. இத்தனைகாலங்கள் எப்படியோ! இனிவரும் காலங்களிலாவது ஆண் மேற்சொன்னவைகளின்படி நடக்காதிருக்கட்டும். அதேபோல் ஆண்பாவமாக்கபடாமலுமிருக்கட்டும்..


      ஸ்பெசல்களுக்கு ஸ்பெசலாகத்தானே கொடுக்கவேண்டும்.
      தங்களின் வருகைக்கும் அழகான கருத்துகளுக்கும்மிக்க நன்றி சகோ..

      Delete