Saturday, October 20, 2012

உன்னை தேடி வந்துவிட்டேன் இறைவா...


லப்பைக்....அல்லாஹும்ம லப்பைக்...
லப்பைக்....அல்லாஹும்ம லப்பைக்...

இதோ நான் வந்து விட்டேன் அல்லாஹ்.... இதோ நான்.... ஹஜ்ஜை நிறைவேற்ற செல்லும் ஒவ்வொரு யாத்ரீகரின் இதயமும் இறையச்சத்தில் சங்கமித்து, இதயம் நிறைய வெளிப்படுத்தும் ஒரே உணர்வு.... ஒரே கேவல்..... யா அல்லாஹ்...இதோ நான் வந்து விட்டேன்.... உனக்காக..... உன் கருணைக்காக, உன் அருளுக்காக... உன் தயவுக்காக... நான் வந்து விட்டேன் யா அல்லாஹ் நான் வந்து விட்டேன்...


மீண்டும் ஒரு ஹஜ்...
மீண்டும் ஓர் உம்ராஹ்...
மீண்டும் ஓர் பயணம...
மெய் உலகிலிருந்து கிட்டத்தட்ட இன்னோர் மெய் நிகர் உலகிற்கு..!!

எப்படி ஹஜ் செய்வது, என்ன வழிமுறை என்பது முதல் திரும்பி வருகையில் என்ன கொண்டு வர வேண்டும், நகையா, பொருளா, அஜ்வா பேரிச்சையா? என்னும் லிஸ்ட் வரை எல்லாமே குறித்துக் கொள்கிறோம்... ஆனால் ஹஜ்ஜில் கிடைக்கும் மிக முக்கியமான ‘ரிஜ்க்’கை கொண்டு வருகிறோமா????

...(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!. (2:197)
ஹஜ்ஜிலிருந்து திரும்பிய பின் நம்முள் என்ன மாற்றம் வேண்டும் என்பதை குறித்துக் கொண்டோமா??? அல்லது, ஒவ்வொரு வருடமும் ”இந்த வருடம் கண்டிப்பாக எடை குறைத்து விடுவேன்”  என்று சூளுரைப்பது போல ஒவ்வொரு ஹஜ்ஜின் பின்னேயும் தூசி தட்டப்படாத ஒரு சபதம் இருக்கிறதா??? என்ன செய்வதாக உள்ளோம் நாம், ஹஜ்ஜின் காலத்திலும், அதிலிருந்து திரும்பிய பின்னரும்?

இதுவரை இப்படி சிந்திக்கவில்லை என்றாலும் இப்பொழுது சிந்திக்கலாம் வாருங்கள். ஹஜ் என்பது தொலைதூரம் பயணப்பட்டு, ஆடை ஆபரணங்களை தவிர்த்து, வெயிலிலும் தாகத்திலும் உடல் வருந்தி செய்யப்படும் ஒரு சம்பிரதாயமல்ல.....ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகனை அல்லாஹ்வின் கட்டளைக்காய் பலிகொடுக்க முன்வந்த அருமை நபி இப்றாஹீமின் வழியில், அவரின் வாழ்க்கையை சற்றே வாழ்ந்து பார்க்கவும், ஆசாபாசங்களை மறந்து, செல்வ சுகத்தையும், செல்லச்செல்வங்களையும் பிரிந்து மனம் வருந்த உடல் வருந்த இன்னோர் உலகில் சில நாழிகை வாழ்ந்து பார்க்கவும், எம் தந்தை இப்றாஹீமின் (அலைஹ்) அழைப்பிற்கு பதிலளித்தவர்களாகவும் செல்லும் ஓர் புனிதப் பயணம். அத்தகு சிறப்பான பயணத்தின் இறுதியில் வெறும் நினைவுகள் மட்டுமே மிஞ்சினால்? சில நாட்களில் வீணாகிப் போகக்கூடிய வெறும் பொருட்கள் மட்டுமே எஞ்சினால்?? இதற்காகவா ஆர்ப்பர்க்கிறோம்??? வாருங்கள் சிந்தனை செய்வோம்...

ஹஜ்ஜின் காலத்தில்:

1. எந்நேரமும் நினைவில் வையுங்கள், நீங்கள் அருமை நபி இப்றாஹீமின் (அலைஹ்) அழைப்புக்கு பதில் சொல்லியவர்களாகப் போகிறீர்கள். ஒவ்வொரு துன்பத்திலும் அல்லாஹ், அவரை சரணடைய சொல்லியபோது, எதற்கு, ஏன், யாருக்கு என்ற ஒரு கேள்வியுமில்லாமல்... நின்னை முழுக்க முழுக்க சரண்டைந்தேன் என்றார். அப்படி அல்லாஹ்வின் மீது அளவிலா அன்பை வைத்தும், அதை செயலிலும் காட்டியதால்தான், அல்லாஹ் அவரை ‘கலீலுல்லாஹ்’வாக்கினான். அவரின் அழைப்புக்கு நீங்களும் பதில் கூறியிருக்கிறீர்கள் என்பதை நினைத்து மகிழ்சியுறுங்கள்.... பணிவு கொள்ளுங்கள்.
2:131. இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.

2. ஹஜ் செய்ய உங்களுக்கு வாய்ப்பளித்தான் என்பதற்காக ஏதோ கடன்பட்டவர்கள் போல நடந்து கொள்ளாதீர்கள்:

ஹஜ்ஜில் ஒவ்வொரு இடத்திலும் உங்களை விட ஏதாவதொரு விஷயத்தில் தாழ்ந்த அல்லது ஹஜ்ஜிற்கு வந்தும் கர்வத்தை விடாத சகோக்களை பார்க்க / பழக நேரிடும்.... அவர்களிடமும் இன்னும் அதிக மான பண்பையும் பணிவையும் காட்டுங்கள். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிட்டியது போல் செருக்கு கொள்ளாதீர்கள்.

(2:197)எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;

3. குறுக்கு வழி தேடாதீர்கள்:
இது ஒரு பெரிய்ய்ய பிரச்சினைதான். அது வாஜிபா? இது ஃபர்ழா? அப்ப இது செய்ய வேண்டாம்லே? இதை விட்டுட்டு அதைப் பார்க்கலாம்....இவற்றை தவிர்த்து நேரத்தை மிச்சப்படுத்தி இன்னொன்றில் சேர்க்கலாம்......சகோ... மீண்டும் நினைவில் வையுங்கள், ஹஜ் என்பது சம்பிரதாயமில்லை.... ஒவ்வொரு வினாடியையும் ஆழ்ந்து அனுபவித்து ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள்.... அரஃபா மைதானத்தில் முழு நாளை எப்படி கழிப்பது என்பதிலிருந்து முஜ்தலிஃபாவின் இருளில் ஐஃபோனை செக் செய்வீர்களா இபாதத்தை பெருக்குவீர்களா என்பதையும் சிந்தனை செய்யுங்கள்....

4. எந்த ரிஜ்க் முதன்மையானது என்பதை முடிவு செய்யுங்கள்:
மக்காவிற்கு செல்லும்போது அந்த ஆர்வத்திலும் பேரானந்தத்திலும் தக்வாவும், நல்லொழுக்கமுமே வழிந்தோடிக்கொண்டிருக்கும் நம்மிலிருந்து.... ஆனால் மக்காவை விட்டு திரும்பி வருகையில் செலவாகிப்போன பணத்தின் மேலேயே பாதி பேரின் மனம் இருக்கும்.... இதற்காகவா ஹஜ்???? இந்த ரிஜ்க்கிற்காகவா இந்த சோதனையை எதிர்கொள்கிறோம்?
(2:198) (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது “மஷ்அருள் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.
5. சோஷியலைஸிங்.... இங்கேயுமா????:
முகப்புத்தகத்திலும், கூகிள் பிளஸ்ஸிலுமாக செலவு செய்யும் நேரத்தை, மக்களோடு பழகுகிறோம் என்னும் பெயரில் இங்கேயுமா சிதறடிக்க வேண்டும்??? குழுவாக போவதும், வருவதும், சேர்ந்து சில சம்பிரதாயங்களை முடிப்பதும் என பலதும் நன்மைதான்.... ஆனால் தனியே இபாதத்தை செய்யவும் நேரமொதுக்குங்கள். கிடைக்கும் தருவாயிலெல்லாம் ஒரு காலியிடத்தை தேர்ந்தெடுத்து குர்’ஆன் ஓதவோ, என்ன செய்ய இயலுமோ அதை செய்யவோ முனைந்து விடுங்கள். மக்காவிலிருந்து மினா செல்லும்போதும், மினாவிலிருந்து மக்கா வரும்போதும் அதிகமான நேரத்தை ஏதேனும் ஒரு இபாதத்திலேயே செலவழியுங்கள். இந்த நேரங்களில்தான் சோஷியலைஸிங் என்னும் பெயரில் அதிக நேரம் செலவாகும்... கட்டுப்படுத்துங்கள்....இன்ஷா அல்லாஹ்.

6. ஹஜ்ஜின் முக்கிய நோக்கமே அல்லாஹ்விற்கு சரணடைவது என்பதை மறக்காதீர்கள்! :
வாழ்க்கையில் இது வரை பார்த்திராத, கேட்டிராத, ஏன்...உங்களின் வாழ்விலோ, ஹஜ்ஜிலோ இப்படி நடக்கும் என்று நினைத்தே பார்த்திராத எல்லா சம்பவங்களும் ஹஜ்ஜில் நடக்கும்.... அதற்கு காரணம் ...ஹஜ்ஜும் ஒரு பெரிய சோதனையே.... சோதிக்காமல் நம் ஈமானை மெருகேத்த முடியாதே...!!7. இறுதியாக, உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் பயணப்படுவதை, உலகிலிருந்தே பயணப்படுவதாக கற்பனை செய்யுங்கள்...!!:

உங்களின் பெருஞ்செல்வம், சொத்துக்கள், சொந்த பந்தங்கள், ஆருயிர் உறவுகள் என அனைத்தையும் ஒரு நாள் விட்டுப் போகத்தான் போகிறீர்கள்.... அதை மறக்காதீர்கள்.
(2:200)ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல்-இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்.....
ஹஜ் மப்ரூர் (இறைப்பொருத்தம்) ஆகிவிட்டதா என்பதை இறைவனே அறிவான். ஆனால் அதற்கான சில சாட்சிகளை நாமும் அறிய நேரலாம்.... ஹஜ்ஜிற்கு பிறகு நம்மில் உள்ள குணநலன்களே....
“அல்ஹஜ் அல் மப்ரூர் என்பது இவ்வுலகை நிராகரித்தும், மறுமையை விரும்பியும் வாழும் ஓர் நிலையாகும். இந்த நேர்வையையே அல்லாஹ்,
மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.” (47:17) என்கிறான்” -- அல் ஹஸன் அல் பஸரி(ரஹி)
இந்த ஹஜ், ஹஜ் மப்ரூரா? நம்மில் ஏதும் மாற்றம் கொண்டோமா?? அல்லது லப்பைக்...அல்லாஹும்ம லப்பைக் என்னும் வார்த்தைகள் இன்னும் நாவில் ஈரமாய் இருக்கின்றனவா??? இன்னும் அல்லாஹ்வின் அருளை நாடியவர்களாகவே நாம் உள்ளோமா?? எந்த நிலையில் இருந்தோம், எந்த நிலை அடைந்திருக்கிறோம், இந்நிலைக்கு நாம் தகுதியானவர்கள்தானா??? இதற்கெல்லாம் பதில், இப்பொழுதே உங்களில்...!!

இந்த நிலைதான் இப்றாஹீம் (அலைஹ்) அவர்களின் வாழ்விலும் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இறைப்பொருத்தத்தை நாடினார். இன்று அவரின் காலடித்தடங்களில் நீங்கள் உள்ளீர்கள்..... அதே அரஃபாவிலும், மினாவிலும், மக்காவிலும் ஒவ்வொரு காரியமும் செய்யும் முன்னர் நினைத்துப் பாருங்கள், இப்றாஹீம் (அலைஹ்) என்ன செய்திருப்பார் என...

அல்லாஹ் உங்களனைவரின் ஹஜ்ஜையும் எளிதாக்குவானாக. பாதுகாப்பானதாக்குவானாக. உங்களனைவரின் இபாதத்தையும் கபூல் செய்வானாக. சிறியதிலிருந்து பெரும்பாவங்கள் வரை அனைத்தையும் மன்னிப்பானாக.... அன்று பிறந்த குழந்தையைப்போல் தூய்மையாக்குவானாக. ஆமீன்.யாரெல்லாம் இந்த வருடம் ஹஜ்ஜுக்கு போக இயலவில்லையோ, இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையின் நோக்கத்தைப் புரிந்து, அறிந்து அதன் வழி செல்ல இப்போதிலிருந்தே தயாராகுங்கள். காலம் தள்ளிப்போட்டுக்கொண்டெ இருக்காதீர்கள். இப்பொழுது வசதியிருந்தால் முந்தி விடுங்கள்.... இன்ஷா அல்லாஹ்...!

கண்டிப்பாக, நீங்கள் திரும்பி வந்ததும் உங்களிடம் வைக்கப்படும் முதல் கேள்வி, ஹஜ் எப்படியிருந்தது என்பதைப் பற்றித்தான்..... மனதொன்றி, இவ்வுலகின் கவலையற்று, ஆகிரத்தை(மறுமை வாழ்க்கை) மட்டுமே எதிர்பார்த்து ஹஜ் செய்திருப்பின், ‘அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது’ என்பதே உங்களின் பதிலாக இருக்கும்....

...அவ்வாறில்லாமல் ஹஜ்ஜை தொலைத்து விட்டிருந்தீர்களானால், “அந்த ஏஜென்சி வழியா மட்டும் போயிடாதீங்க...” என்பதே உங்களின் பதிலாககூடும்.... எந்த பதில் தருவது என்பது இப்போதே நீங்கள் திட்டமிடுவதில்தான் இருக்கிறது...!!

(47:19)ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக...
பட உதவி: நன்றி

18 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

  தேவையான நேரத்தில் தேவையான பதிவு :-)

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ் சகோ,

   வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாக்கல்லாஹு க்ஹைர். :)

   வஸ் ஸலாம் :)

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

  ஜஸாக்கல்லஹ் ஹைர்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ் சகோ,

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   வ இய்யகும்.


   வஸ் ஸலாம் :)

   Delete
 3. சலாம்!

  பயனுள்ள பதிவு!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ் சகோ,

   வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாக்கல்லாஹு க்ஹைர். :)

   வஸ் ஸலாம் :)

   Delete
 4. பயனுள்ள பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ் சகோ,

   வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாக்கல்லாஹு க்ஹைர். :)

   வஸ் ஸலாம் :)

   Delete
 5. நல்ல கட்டுரை.

  ஆனால், எனக்கு இந்த கடைசி வரிகளில் உடன்பாடில்லை:

  //...அவ்வாறில்லாமல் ஹஜ்ஜை தொலைத்து விட்டிருந்தீர்களானால், “அந்த ஏஜென்சி வழியா மட்டும் போயிடாதீங்க...” என்பதே உங்களின் பதிலாககூடும்.//

  இப்படிச் சொல்லக்கூடாது - சொன்னால், சொல்லுபவரின் ஈமான் - ஹஜ் சரியில்லை - என்பதான நம்முடைய கண்ணோட்டமே இத்தகைய ஏஜென்ஸிகளின் லாபமூலதனம்!!

  இதுகுறித்து நான் முன்பு எழுதிய பதிவு இதோ:
  வியாபாரமாக்கப்படும் புனிதப் பயணம்

  ReplyDelete
  Replies
  1. ஆமா அக்கா... நீங்க சொல்வதும் சரிதான்.... இதே காரணத்தை உங்க கட்டுரைய படிச்சப்பவும் நினைத்தேன்.... ஆனால் இங்கிருக்கும் வரிகள் என்னன்னா.... அத்தனை பிரச்சினையையும் தாண்டி நாம எதை எதிர்பார்த்திருக்கோம் என்பதுதானே.... see... இதுல ஈமான், ஹஜ்ஜில் ஒன்றி செய்வது குறைந்தது என்றர்த்தமில்லை.... நம் நோக்கம் எதன் மீது இருந்தது என்பதைப் பற்றியது. நமக்கு ஹஜ் கபூலாயிருக்குமா, ஏதேனும் குறை வைத்திருந்தோமா... ஹஜ்ஜின் பாடங்களை கடைசி வரை பின்பற்ற முடியுமா எனப்து போய் உலக வாழ்க்கையின் பிரச்சினையைப் பற்றி யோசிக்க முடியுமானால் அதுவே நம் வெற்றி தோல்வியின் அறிகுறி....

   உங்க கட்டுரை.... இதைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை.... அல்லாஹ்வின் பயம் அவர்களை நேர்வழியில் நடத்தினால்தான் உண்டு... து’ஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

   Delete
 6. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது’ ....
  “அந்த ஏஜென்சி வழியா மட்டும் போயிடாதீங்க...”

  இந்த இரண்டு பதிலையும் கேட்டிருக்கிறேன்...யதார்ததான ஆக்கம்..

  ReplyDelete
  Replies
  1. ஆமா சகோ. யதார்த்தம்தான்.... எனினும் முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ் அதை முறியடிக்க :)

   Delete
 7. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்,அன்னை ஹாஐரா அம்மையார் மற்றும் இஸ்மாயீல்அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் தியாகத்தை நினைவு கூறுவதாகவே இப்புனிதஹஜ் கடமை அமைந்துள்ளது.அவர்களின் தியாகங்களை எங்களால் மட்டிடத்தான் முடியுமா?.....ஸுப்ஹானல்லாஹ்!....அன்புச் சகோதர,சகோதரிகளே!.....நாம் கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போமா?.. ",லெப்பைக் அல்லஹும்ம லெப்பைக்! லெப்பைக் லாசரீக்கலெக லெப்பைக்" யா...அல்லாஹ்!......உன்னுடைய அழைப்பை ஏற்று நாங்கள் வந்துவிட்டோம். என்ற தக்பீரை முழங்கியபடி நாங்கள் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றியபின் எங்களைக் கூட்டிப்போன ஏஜென்சி சரியில்லை,அந்தக் குறை,இந்தக் குறை என்று நாங்கள் குறைகூறுவது தகுமா?....... அல்லாஹ் இதை விரும்புவானா!.... வசதி வாய்ப்பை நாம் எதிர்பார்த்து இப்பயணத்தை மேற் கொண்டிருந்தோமானால் பல இலட்சங்களை செலவு செய்ததில் எந்தப் பயனும் இல்லையே !....அல்லாஹ் பாதுகாப்பானாக!...எண்ணங்களை வைத்தே அல்லாஹ் மதிப்பெண் போடுகிறான்.எனவே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோமாக.யா....அல்லாஹ் எங்களது அமல்களை ஏற்றுக் கொள்வாயாக!......ஆமீன்!...

  ReplyDelete
  Replies
  1. சும்ம ஆமீன்...உங்கள் து’ஆவிற்கு. நன்றி :)

   Delete
 8. ஹஜ்ஜுக்கு போய் வந்த நிலை நெஞ்சில் ஈரமாய் இருக்க ஈமானின் பற்று மனதில் ஒட்டிக்கொள்ள வாழ்வே பசுமையாகி பசுமையை தண்ணீர் கொண்டு பாய்ச்ச தொடர் நினைக்கும் ஹஜ் அல்லாஹ் கொடுத்த அருட்கொடை .

  ஹஜ் பிரயாணத்தில் முக்கியமாக நம் ஊர் மக்கள் பார்க்க வேண்டியது பல நாட்டு மக்கள் பல விதமாக இறைவனை தொழும் முறையில் சில செயல்பாடு வித்தியாசங்களை பார்க்கலாம் . அதனை பார்த்த பின்பும் ஊர் வந்த பின் இப்படி செய்யாதே! அப்படி செய்யாதே! தொப்பி போட்டு தொழு !என ஏன் விவாதம் செய்து சண்டை போடும் அளவுக்கு போய் விடுகின்றார்கள் .அதுதான் புரியவில்லை !
  பலமுறை படித்து மனம் நெகிழ்ந்தேன் .எனது ஹஜ் யாத்திரை நினைவில் மூழ்கினேன்.

  ReplyDelete
 9. சகோதரி அன்னு,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!... அன்புச் சகோதரியே!..உஙகளுடைய இந்த ஆக்கம் சரியான சந்தர்ப்பத்தில்தான் வெளயிடப்பட்டிருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்!....அந்தப் புனித மண்ணில் காலடி எடுத்து வைக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்குத்தான் அப்பாக்கியம் கிடைக்கிறது.அப்படிக் கிடைத்தும் அதனை நாம் வீணாக்கி விடலாமா?.....அல்லாஹ்வின் அழைப்பையேற்று அல்லாஹ்வின் விருந்தாளியாக அல்லவா சென்று வந்திருக்கிறோம். குறை கூறலாமா???.இதை அல்லாஹ்!.விரும்புவானா??? அன்னு,...... சகோதரியே உங்கள் ஆக்கங்கள் மேன் மேலும்தொடர வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக!....ஆமீன்.

  ReplyDelete