Monday, October 15, 2012

குழந்தை வளர்ப்பு - ஒரு இஸ்லாமிய பார்வை

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபக்குவபடுத்தும் வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்....

நாம் இவ்வுலகத்தில் எத்தனையோ இன்பங்களையும், அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்... அப்படிப்பட்ட இன்பங்களில் மிக சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல் ஒழுக்கமுள்ள மனைவியை.....

பிறப்பு முதல் இறப்பு வரை எத்தனையோ  உறவுகளையும், நட்புகளையும் கடந்து வந்தாலும்  மிக நுண்ணியமானதும், உணர்வுப்பூர்வமான  உறவு வாழ்க்கை துணையே. மற்ற உறவுகளை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.
ஆனால்,வாழ்க்கை துணை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு வாழும் உறவு ஆகும். அப்படிப்பட்ட உறவை சரியான முறையில்  தேர்ந்தெடுக்காவிட்டால் சொல்லொண்ணா நஷ்டம்தான்.

குழந்தை வளர்ப்புன்னு சொல்லிட்டு வாழ்க்கைத்துணையை  பற்றி ஏன் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்! குழந்தை வளர்ப்பின் ஆரம்பமே நல்ல வாழ்க்கை துணையை தேர்தேடுப்பதில்தான் உள்ளது.....

இன்னும் நாம் அனைவரும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் இந்த து ஆ வை அதிகமாக ஒவ்வொரு தொழுகையிலும்
கேட்க வேண்டும்....
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! 
இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.25 :74
இது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம அவர்கள் செய்த துஆ...
பயபக்தியாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியான அவர் செய்த
துஆவை நாமும் கேட்போம்.

சமுதாயத்தில் எத்தனை பேர் மனைவியிடம் அல்லது கணவனிடம் கண்குளிர்ச்சி இல்லாமல் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்....
மார்க்கம் இல்லாத அல்லது அரைகுறை மார்க்கம் தெரிந்த வாழ்க்கைதுணை
உள்ளவர்கள் வீட்டிற்கு உள்ளே ஏகப்பட்ட பிரச்சினைகளோடும்தான் வாழ்கிறார்கள்.

இவர்களிடம் வளரும் பிள்ளைகளும் அவர்கள் வழியேதானே வரும்.
வாழ்க்கைத்துணையிடம் பணமோ,அழகோ இருந்தால் மட்டும் போதாது.....
தக்வா உடைய வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்ததிகளிடம் கண்குளிர்ச்சியை பார்க்க முடியும். மார்க்கம் உள்ள தாய், தந்தையால் மட்டுமே சிறந்த குழந்தைகளை உருவாக்கமுடியும்.

அடுத்ததாக கர்ப்பிணியாக இருக்கும் பெண்ணுக்கு கணவனின் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை. கணவனின் பாசமான தொடுதலும், அன்பான பேச்சும்  பெண்ணிற்கு மனதளவில் தெம்பையும், நம்பிக்கையை கொடுக்க கூடியது.

எளிதாக குழந்தை பெற்ற பெண்மணிகளிடம் ஆலோசனை கேட்டு கொள்வது  தன்னம்பிக்கையையும்,தைரியத்தையும் கொடுக்கும். சுகபிரசவத்திற்க்கும், சாலிஹான பிள்ளையாக வளர்வதற்கும் நாள்தோறும் ஒவ்வொரு தொழுகையிலும் ரப்புல் ஆலமீனிடம்  பிரார்த்திக்க வேண்டும்.
எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னரும்(தனது அலட்சியப் போக்கின் காரணமாக)  மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லையென்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்த பாவம் அவனுடைய தந்தையைச் சேரும். பைஹகி-401
இப்போதுள்ள பெற்றோர்கள் அழகிய பெயர்களை வைப்பதை விட்டு விட்டு  ’’தஸ் புஸ்’’ என்று புதுமைபெயர்களாக கண்டுபிடிக்கிறார்களாம். இஸ்லாத்திற்காக தன் இன்னுயிரை நீத்த சுமையா (ரலி), பிலால் (ரலி) போன்றவர்களின் பெயரை நாம் எத்தனை பேர் நம் பிள்ளைகளுக்கு வைத்துள்ளோம்???

நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்க நாம் ஒவ்வொருவரும் அண்ணலாரின் பொன்மொழிகளை எளிய முறையில் கதைபோல சொல்லிக்கொடுப்பதும் அவசியமாகும். பிள்ளைகளுக்கு சரியான வயதில் திருமணம்செய்யாமல் இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்று பிள்ளைகளை நிர்பந்திக்கும் பெற்றோர்கள் எத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள் என இந்த ஹதீஸின் மூலம் தெரிந்து கொள்ளலாம்???

அடுத்து, குழந்தை பெற்ற பின் குழந்தைக்கு இரண்டு வருடம் தாய் பால் ஊட்டுவது  தாய்க்கு இறைவன் இட்ட கட்டளையாகும். தாய்ப்பாலுக்கு இணையான உணவு  இவ்வுலகத்தில் ஒன்றும் இல்லை. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்  இறைவன் கொடுக்கும் அருட்கொடையே தாய்ப்பால் ஆகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும், புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளதாக அறிவியல் கூறுகிறது. தாய்ப்பால் கொடுக்கும்போது தாயின் உடம்பில் உள்ள வெப்பமும், கதகதப்பும் குழந்தைக்கு மிகப்பெரும்நம்பிக்கையும், ஆற்றலையும் கொடுப்பதாக  உளவியல் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

இதனால்தான் அல்லாஹ் செவிலித்தாய் மூலமாகவது
குழந்தைக்கு பாலூட்ட கட்டளை இடுகிறான்.
ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால்  அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை;  ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - 
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.2;223
நமது குழந்தைகளை நாம் எப்படி நடத்த வேண்டிய முறை பற்றி 
கண்மணி நாயகம் ஸல் அவர்கள் கூறியதாவது....
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான)  ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள்.  அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள்.   ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை' என்றார்.  அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர்  அன்பு காட்டப்படமாட்டார்' என்று கூறினார்கள்.புகாரி-5997

முத்தம் என்பது பாசத்தின் வெளிப்பாடு.
அன்பின் வெளிப்பாடு.
கருணையின் வெளிப்பாடு.
நான் உன்மேல் பாசமாக இருக்கிறேன்.உன் உணர்வுகளை மதிக்கிறேன் என்பது போன்ற செயல்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறோம்....?
தோளில் தட்டி கொடுக்கிறோம்...?
தலையை வருடிக் கொடுக்கிறோம்.....?
மடியில் படுக்க வைத்து கொஞ்சுகிறோம்...?
செல்ல பெயர் வைத்து அழைக்கிறோம்...?
பிள்ளைகளின் தலையை வருடிக்கொடுப்பது அவர்களுக்கு நம்மீது இனம்புரியாத பாசத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும்.... இதெல்லாம் தாய் மட்டுமே செய்ய வேண்டிய செயல் அல்ல... தந்தைமார்களும் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
தன் உள்ளம் கடினமாக இருக்கிறது என முறையிட்ட சஹாபியிடம்நபி ஸல் அவர்கள் அநாதையின் தலையை தடவிக் கொடுப்பீராக என ஆலோசனை கூறுகிறார்கள்.(முஸ்னத் அஹ்மத்-293)
அநாதைகளின் தலையை தடவிக் கொடுப்பது அன்பை பரிமாற்றம் செய்யக்கூடிய செயலாக அண்ணலார் வழிக்காட்டுகிறார்கள். அதே போல், தலையை தடவிகொடுப்பதன் மூலமாக பெற்றோர்,பிள்ளை இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் பாசம் ரீசார்ஜ் செய்யப்படுகிறது.
நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:உங்கள் குழந்தைகள் ஏழு வயது எட்டும்வரைஅவர்களுடன் விளையாடுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியூட்டுங்கள்.அடுத்த ஏழு வயதில் அவர்களுடன் இணக்கமாகுங்கள்.#அஹ்மத்,நஸயி.

அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு அழகிய ஒரு வழிகாட்டலை குழந்தை வளர்ப்பில் ஒரு வரைபடம் போல காட்டிஉள்ளார்கள்...

குழந்தைகளுடன் விளையாட வேண்டுமாம்...
எத்தனை வயது வரை????
நன்றாய் கேளுங்கள்....?
7 வயது வரை.....!!!!

நாம் தான் 2 வயது ஆன உடனே குழந்தையின்  சேட்டைகளை ரசிக்காத கல் நெஞ்சம் கொண்டவர்கள் ஆயிற்றே!!!!! உடனே பிளே ஸ்கூல் எங்கே இருக்குனு தேடிப் பிடித்து கொண்டு போய் சிறை வைத்து விடுகிறோமே???

அடுத்த ஏழு வயதில் கல்வி கொடுக்கணுமாம்?!

அதற்கு அடுத்த ஏழு வயது அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பருவ வயது அல்லவா!! அந்த வயதில்தான் நாம் செல்போன்,லேப்டாப் தனியாக
வாங்கி கொடுக்கிறோம்..... அப்பொழுதுதான்  இணக்கமாக இருக்க ஒவ்வொரு பெற்றோருக்கும் அறிவுரை சொல்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு பொறுப்பாளிகள். உங்களின் பொறுப்பை பற்றி கேள்வி கேட்கப்படுவீர்கள்.
#புகாரி.
பருவ வயதில் நம் பிள்ளைகள் வழி தவறியதென்றால் பெற்றோர்களிடம் அல்லாஹ் விசாரிப்பான் என்ற அச்சம் நம் அனைவருக்கும் வேண்டும். இன்னும் நமது குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியவை ஏராளம்.
அன்பு, ஆதரவு, பாராட்டு, சுதந்திரம், வெற்றி என பல விசயங்கள் அதில் அடங்கும்... 

பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் முன்பே வீட்டிலேயே தாய் சிறிய துஆக்கள்,குட்டி குட்டி சூராக்கள், சலவாத் சொல்வது நற்பண்புகளை வளர்க்கும் ஹதீஸ்கள் போன்றவற்றை சொல்லி வளர்ப்பது கட்டாயமாகும்....

இன்னும் ஆண்களுக்கு நபி ஸல் அவர்கள் இடும் கட்டளை....
உங்கள் தொழுகைகளை சிலவற்றை வீட்டில் மேற்கொள்ளுங்கள். உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள்.#புகாரி


தந்தையும்,தாயும் வீட்டில் தொழுவதை பார்க்கும் பிள்ளைகள்அதே போன்று செய்ய உந்துதலாக இருக்கும். சம்பாதிப்பது மட்டும் தந்தையின் கடமை அல்ல. நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதும் கடமையாகும்.
ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும்,
நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.
#திர்மிதி-1952
இன்னும் சில பெற்றோர் பிள்ளைகளிடம் எப்போதும் கண்டிப்புடனும், அதிகாரத்துடனும்நடந்துகொள்வார்கள். குழந்தைகளை எப்போது பார்த்தாலும் அடிப்பதால் தற்காலிக தீர்வு கிடைக்குமே தவிர நிரந்தர வெறுப்பு உண்டாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.பூமியில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான் என்பது நபிமொழி மென்மையான முறையில் பிள்ளைகளை கண்டியுங்கள்.
தவறு செய்யும்போது அவனுக்கு கொடுக்க வேண்டிய
அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவன் விரும்பும் ஒன்றை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

பிறர் முன் (உறவினர்கள்,நண்பர்கள்) பிள்ளைகளை கேவலப் படுத்துதல் கூடாது. அது அவனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு குழந்தையும் தன் தாய்க்கும்  100 மார்க் போட்டு வைத்திருக்கும்.ஏன் என்றால் தாய்தானே குழந்தையை  இவ்வுலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார். தன் தாயின் ஒவ்வொரு அடி மற்றும் தண்டனைக்கும்  ஒவ்வொரு மார்க் ஆக குறைத்துக் கொண்டே வரும்...
இறுதியில் ஒவ்வொரு தாயும் பூஜ்ஜியம் மார்க்குடன் தீராத வெறுப்பையும்  சம்பாதித்து இருப்பார்.
உங்களிடம் கண்ணியத்துடன்  நடந்துகொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளை சமமாக நடத்துவது உங்களின் கடமை!-அபுதாவூத்.
குழந்தை வளர்ப்பை பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் எவ்வளவு ஒரு அழகிய வழிகாட்டலை கொடுத்துள்ளார்கள். நம் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களும் சக மனிதர்கள் என்ற விதத்திலே நடத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்காக பரிசளிக்க வேண்டும்.. மிரட்டல், உருட்டல் இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் உடனே நாம் அதனை மாற்றிக்கொள்வோம்.

ஆண்,பெண் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடு காட்டும் வகையில் உணவு,உடை விசயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது... அதிகமான வீடுகளில் ஆண்பிள்ளைக்கும் மட்டும் உணவு விசயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கபடும்.அது மிகத் தவறு.
ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும்,கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால்இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்.#அபுதாவூத்.

ஆம்.பிள்ளைகளை ஒழுங்காக வேறுபாடு காட்டாமல் வளர்த்தாலும் பெற்றோருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்படுகிறது....

ஒரு முஸ்லிம் தன் உயிரை விட அதிகமாக
அல்லாஹ்வை நேசிக்க வேண்டும்...
இரண்டாவது தூதரை நேசிக்க வேண்டும்.
மூன்றாவது தாயை நேசிக்க வேண்டும்....
நான்காவது இடம் யாருக்கு.....?
ஐந்தாவது இடம் யாருக்கு....?
அதுவும் தாய்க்குறிய இடம்
எனஅல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆறாவது இடம் தான் தந்தைக்கு......

மூன்று இடத்தை பெற்றுள்ள தாய் தன் பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும்.... இன்ஷா அல்லாஹ் அன்பின் மூலமும், நல்ல ஒழுக்கத்தின் மூலமும் சிறந்த மனிதனை உருவாக்கலாம். ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவது சிறந்த சமுதாயத்தைஉருவாக்குவதற்கு சமம்....

இன்ஷா அல்லாஹ்,
நாம் அனைவரும் இஸ்லாம் மட்டுமே கூறும் வாழ்வியல்கலையின் மூலம் சிறந்த சமுதாயத்தை உண்டாக்குவோம்.

உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்

25 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்...

    மாஷா அல்லாஹ் அருமையான பகிர்வு.. பல புதிய ஹதீஸ் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு கொடுத்தமைக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன்..

    """""""தன் தாயின் ஒவ்வொரு அடி மற்றும் தண்டனைக்கும் ஒவ்வொரு மார்க் ஆக குறைத்துக் கொண்டே வரும்... இறுதியில் ஒவ்வொரு தாயும் பூஜ்ஜியம் மார்க்குடன் தீராத வெறுப்பையும் சம்பாதித்து இருப்பார்."""""""""""...

    அருமையான பாயின்ட்...

    உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் வளர வல்ல இறைவன் துணை புரிவானாக!!!

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ்ஸலாம் சிஸ்....

      தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி....

      தங்களின் துஆக்களுக்கு மிக்க நன்றி...

      குழந்தை வளர்ப்பு என்னும் வகுப்பில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது....இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் பார்ப்போம்

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே

    குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கத்தோடு அமைந்த நல்ல வழிகாட்டி பதிவு வாழ்த்துகள்

    “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். 6:151

    மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.46:15

    இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” 14:41

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ்ஸலாம் ஹைதர் அண்ணா....
      வேத வரிகளை நினைவூட்டி கருத்து இட்டதற்கு மிக்க நன்றி

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
    பெற்றோரின் கடமையை அழகாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்...

    உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் வளர வல்ல இறைவன் துணை புரிவானாக!!!

    ஜஸகல்லாஹ் சகோ...

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ....

      தங்களின் துஆவிற்கும்,கருத்துக்கும் நன்றி.
      ஜசாகல்லாஹூ கைர்

      Delete
  4. மாஷா அல்லாஹ்! அருமையான பதிவு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோ.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
    பெற்றோரின் கடமையை அழகாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்...

    உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் வளர வல்ல இறைவன் துணை புரிவானாக!!!

    ஜஸகல்லாஹ் சகோ...

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
    பெற்றோரின் கடமையை அழகாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்...

    உங்கள் எழுத்துப் பணி மென்மேலும் வளர வல்ல இறைவன் துணை புரிவானாக!!!

    ஜஸகல்லாஹ் சகோ...

    ReplyDelete
  7. மாஷாஅல்லாஹ்..ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க..நீட்டி கஷ்டப்படுத்தாமல் அருமையாக விளக்கியிருக்கீங்க..படிக்கும் ஒவ்வொரு தாய் தந்தையருக்கும் நாம செய்வது சரியோன்னு தோண வைக்கும் விதமா இருக்கு..எப்படி இப்படி எழுத வருதுன்னு ஆச்சரியமா இருக்கு..ஜசகல்லாஹு கைரன்

    ReplyDelete
  8. இன்றைய தலைமுறைக்கு ஏற்றதொரு பகிர்வு சகோ இது போன்ற பயனுள்ள தகவல்களை பகிருங்கள்.

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்..

    மாஷா அல்லாஹ்....
    அருமையாகவே இருக்கு சகோ....
    பெற்றோர்கள் அனேகமாக விடுகிற தவறு ஒன்று இ்ருக்கிறது...
    தன் பிள்ளைகள் அறியாத வயதில் மூச்சுமுட்டும் அளவு அன்பை வாரி வாரி இறைக்கிறாங்க....
    ஆனா அவுங்களுக்கு அன்பு..ஆருதல்..உதவிக்கரம் ... அத்தியவசியமாக தேவைப்படும் பருவ வயதுகளில் பாராமுகமாக நடந்துகொள்கிறார்கள்...
    நமது பெற்றோர்கள்தான் அப்படியென்றால்...இளைய தழைமுறைத் தாய்க்குலமும் அதே பாணியில் செல்ல முனைகிறார்கள்...

    ஒவ்வொரு பெற்றோருக்கும் தவறுமிடம் இதுவாகத்தானிருக்கும் என்பது என் பொதுவான கருத்து...
    சிந்தித்துச் செயல்பட்டால் ..நல்ல சந்ததிகளை உருவாக்கத் தேவையில்லை...தானாகவே உருவாகுவார்கள்

    வஸ்ஸலாம்....

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும்..

    பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி உலக கல்வி கிடைக்க வழி செய்துவிட்டால் போதும் நம் கடமை முடிந்து விட்டது என்று என்னும் பல பெற்றோர்கள் உள்ளனர். மார்க்க கல்வி அதை விட முக்கியம், இன்னும் என்ன கடைமகள் உள்ளன என்று எடுத்து உரைக்கும் விழிப்புணர்வு பதிவு.

    உங்கள் பணி சிறக்க துஆ செய்தவனாக..

    வேண்டுகோள் : Back to Top Button வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. காரணம் பின்னூட்டல்கள் நிறைய உள்ளதால் மேல செல்ல தாமதம் ஏற்படுகிறது. (கொஞ்சம் சோம்பேறி நான் அதான்!!!)

    ReplyDelete
  11. //மூன்றாவது தாயை நேசிக்க வேண்டும்....

    நான்காவது இடம் யாருக்கு.....?

    ஐந்தாவது இடம் யாருக்கு....?

    அதுவும் தாய்க்குறிய இடம்// இதை விட ஒரு தாயின் பொறுப்பை அழகாக உணர்த்திட முடியாது...பெண்களாகிய நாம் அனைவரும் அந்த பொறுப்பை அழகிய முறைவில் நிறைவேற்றி வெற்றி பெறுவோம், இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  12. அஸ்சலாமு அலைக்கும் சகோ
    அருமையான மற்றும் பயனுள்ள பதிவு

    Pleasing A Human Is Most Dificult. Pleasing Allah Is The Easiest. 

    People Sometimes Punish Me For The Mistakes I Have Not Done. Allah Ignores & Excuses The Ones That I Did. 

    That's ALLAH ! 

    The Greatest, The Allmighty, 

    The Most Beneficent, 
    The Most Merciful..

    ஜஸ்சகல்லஹ் ஹைர்.

    ReplyDelete
  13. சகோ ஆஷா....

    இந்த கட்டுரையை என்னால் பல இடங்களில் மனமொன்றி படிக்கவே முடியவில்லை.... பெற்றவள் என்னும் உரிமையில் குழந்தைகள் மீது கையை பல வேளைகளில் ஓங்கியுள்ளதால் அவமானமே மிஞ்சுகிறது. எப்படி நிவர்த்தி செய்வேன்... எப்படி அதை ஈடு கட்டுவேன் என்றே புரியவில்லை.... அதற்கும் சேர்த்து வழி கூறுங்களேன்..... யாரிடமும் குழந்தைகளை அடிக்காதீர்கள், திட்டாதீர்கள் என்று சொல்லும் நானே சில வேளைகளில் வேறு வழியே இன்றி அந்தப் பாதையில் நடந்துள்ளேன்.... இப்பொழுது அதை மாற்ற இயலாமல் வருந்தவும் செய்கின்றேன்... நான் என்ன செய்ய???

    ReplyDelete
  14. Masha Allah... Allah Ungalukku Rahmath Saiyattum...

    ReplyDelete
  15. மாசா அல்லாஹ். மிகவும் சிறப்பாக தாய்மார்களுகும் மற்றவர்களுக்கும் புரியும்படியா அழகுற எழுதிய சகோதரி ஆஷாவுக்கு முதல் பாராட்டுகள்..

    குழந்தையை அடித்து வளப்பது சிறந்ததே அல்ல என்னும் உண்மை பலர் விளங்கிக்கொள்ளல் வேண்டும். சிலசமயம் நம்மையுமீறிய உணச்சிகளால் நம்முடைய கோழைத்தனைத்தை குழந்தைகளிடம் காட்டி அவர்களை மிரளவைத்துவிடுகிறார்கள். அதனோடு கணவர். மாமியார் மற்றும் வேறு ஆட்களின்மேல் உள்ள கோபத்தால் அவர்களை ஒன்றும் செய்யயிலா கையாளதனத்தால் குழந்தைகளை அடிக்கிறார்கள்.. அதை திருத்திக்கொள்ளுங்கள் என்றால் அதற்க்கும் சேர்த்துவிழுகிறது குழந்தைக்கு அடி..

    தாய்மார்களுக்கு பொருமை மிகவும் அவசியம்.குழந்தையின் மனமறிந்து செயல்பட்டால் நாளை நம் மனமறிந்து அது செயல்படும்..

    தற்காலத்தில் குழந்தைகளை கண்டும் காணாததுமாய் ஆனால் மிக நுண்ணிய நோக்கோடு கூர்ந்துகவனித்து வளர்க்கவேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம் என்பதையும் மறந்துவிட வேண்டாம்..

    ReplyDelete
  16. தேவையான தலைப்பை தேர்ந்தெடுத்து தெளிவான நடையில் திகட்டாமல் பதிவேற்றியிருக்கிறீர்கள்...பாராட்டுக்கள்!

    மிக முக்கியமான ஒன்றை நினைவூட்ட விழைகிறேன் ...ஆம்! குழந்தைகளுக்கு தொழுகையின் மேன்மையை உணர்த்துங்கள்...அவர்கள் உணரும்படியாக நீங்களே வழிகாட்டியாகவும் இருங்கள்..தொழுகையின் பூரணத்தை அவர்களுக்கு புரிய செய்யுங்கள்.
    "ஒளூ" எதற்காக செய்யப்படுகிறது என்பதையும், "ரக்-அத்" "ருகூவு" மற்றும் "ஸூஜுது" நிலைகளையும் தெளிவாக்குங்கள். ஈட்டும் பொருள் சொற்பமாகவே இருந்தாலும் "ஜகாத்" அவசிய கடமை என்பதை உணர செய்யுங்கள்.

    தொழுகையை தெரிந்து, தெளிந்து செய்கையில் இறை சக்தியை நிச்சயம் உணரமுடியும்..சகோதர மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அதன் தனித்துவத்தை நான் உணர்ந்திருக்கிறேன். அன்றாடம் தொழுகையின் மூலம் அந்த பேரின்ப நிலையை ஸ்பரிசிப்பதால் சத்தியமும்..அன்பும் அவர்களிடத்திலும் அவர்கள் சார்ந்த இடத்திலும் நிலை கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

    சமுதாய மேன்மைக்கு இனிவரும் சந்ததிகள் தான் ஒரே தீர்வாக இருக்க முடியும்!

    அல்லாஹு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக....ஆமீன்!

    ReplyDelete
  17. விளக்கமான சிறந்த கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்
    ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.
    மேற்கண்ட நபிமொழி குழந்தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடுவது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்பதும் தெளிவு

    ReplyDelete
  18. தங்களின் பிள்ளைகளுக்கு அடி கடி சலாம் கூருங்கள். சலாம் அன்பை பகிறும். நீங்கள் கோபத்தினால் தான் தங்களின் பிள்ளைகளை அடிக்க நேரிடுகிறது எனவே அதனை கட்டுப்படுத்த இறைவனை நினைவுகூருங்கள்.. அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் பொறுமை என்னும் பொக்கிஷத்தை அருள்வானாக ஆமீன்

    ReplyDelete
  19. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  20. அருமையாண பதிவு

    ReplyDelete
  21. அருமை... இறைவன் அருள்உண்டாகட்டும்...
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் பிராா்த்தனைகளும்...

    ReplyDelete