Monday, October 08, 2012

பஷீர் பாயும் பஸீராம்மாவும் (புதிய கலகலப்பு தொடர் -1)


தொடர் அறிமுகம் : இஸ்லாமிய பெண்மணியின் மற்றொருமொரு வித்தியாசமான முயற்சி! கணவன், மனைவி உரையாடல் நடையில் விறு விறு, சுறு சுறு தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. பஷிர் பாய் மற்றும் அவரது மனைவி பஸீராம்மா
க்கும் இடையில்  வீட்டில் நடக்கும் உரையாடல்கள் தான் இத்தொடரின் களம்.... ஏற்கனவே பல நிகழ்ச்சிகள் இதே முறையில்  இருந்தாலும் அவற்றில் இல்லாத வித்தியாசத்துடன் இத்தொடர் வர இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.... வழக்கம் போலவே இந்த புது முயற்சிக்கும் உங்கள் பேராதரவை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்...வாருங்கள், வந்து பாருங்கள் பஷீர் பாய் படப்போகும் பாட்டையும், வாங்கப் போகும் பல்புகளையும்....

_______________________________

பூப்புலரும் வேளை. அதிகாலை!  இனிய பாங்கு சத்தம் தொலை தூரத்திலிருந்தே கேட்டது. பஷீர் பாயின்  குறட்டை சத்தம் பாங்கொலியை குலைக்க, பல் விளக்கி, அழகாய் ஒளு செய்து, தொழுகைக்கு ஆயத்தமான  பஸீராம்மா, அவரை எழுப்ப சென்றார்.

பஸீராம்மா: ஃபஜ்ரு ஜமாத்’க்கு போகலியா?


பஷீர் பாய்
பாங்காயிடுச்சா....

பஸீராம்மா: அதென்ன காது கேக்குதில்லியா??


பஷீர் பாய்: 
இல்லம்மா... சரி நகரு... பல்லு வெளக்கிட்டு போவணும்...

பஸீராம்மா:
என்னது?


பஷீர் பாய்
என்ன என்னது?

பஸீராம்மா: இல்லே பல்லு விளக்கணுமின்னு சொன்னீகளே அதான் கேட்டேன்....


பஷீர் பாய்
ஏ... அதுல என்ன??

பஸீராம்மா: இல்ல...ஒன்னுமில்லாத நாள் கெணக்கா இன்னிக்கு மட்டும் என்ன ஃபஜ்ருக்கு முன்னாடி பல்லு வெளக்கப்போறீரு????


பஷீர் பாய்
அட.... ஒன்னோட காலையில பஞ்சாயத்தா போச்சே.... இன்னிக்கு என்னா நாளு...?

பஸீராம்மா:சனி...


பஷீர் பாய்
அதேன்.... சனிக்கிழமை காலை ஃபஜ்ருக்கு வாரம் ஃபுல்லா ஃபஜ்ரு வராதவுக வருவாக.... டாக்டர் காதரு, அந்த பேன்க் மேனேஜரு இல்யாஸு, நம்ம ஜனதா டெக்ஸ்டைல் மொய்தீனு.... எல்லாரும் இன்னிக்குதானே வருவாங்க.... மத்த நாளெல்லாம் வூட்டுலயே தொழுதுட்டு ஜோலியப் பாக்க போயிடுவாங்க....

பஸீராம்மா:அதனால???

பஷீர் பாய்: 
அதனாலேன்னா.... அட..... அவுகளோட எல்லாம் இன்னிக்குதான் கொஞ்சம் நேரம் பேச கெடைக்கும்.... பெரிய பெரிய வியாபாரிங்க அவிங்க முன்னாடி பல்லு வெளக்காம நாத்தத்தோடவா பேச சொல்றே......

பஸீராம்மா:அதானே பார்த்தேன்..... கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும்...கெழவிய தூக்கி மனைல வையின்னானாம்...அது மாதிரி.... தெனம் தொழுகப்போறப்ப பல்லு வெளக்க காணோம்.... வியாபாரிங்க கிட்ட பேசனும்ன்னா பல்லு வெளக்குவீகளோ??

பஷீர் பாய்: . . . . . . . . . . . . . !!!!!

பஸீராம்மா: ராசனுங்களெக்கெல்லாம் ராசன்....ராசாதி ராசன்.... அண்டத்தையும் அதிலுள்ளதையும் படைச்சவன், ரிஜ்க்கு தர்றவன்.... அவனுக்கு சுஜூது செஞ்சு, அவன் முன்னாடி நிக்கிறப்ப பல்லு சுத்தமா இருக்கணுன்னு தோணலை.... அவன் தந்த பணத்தை வெச்சு ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா தொழ வர்றவவிங்ககிட்ட பேச மட்டும் பல்லு நாத்தம் அடிக்கிதோ???


பஷீர் பாய்:  !!!!????!!!!


****************************
பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான். (ஆதாரம் - அல் பகரா : 222)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.(ஆதாரம்- புகாரி 7240)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் ஆவார். (ஆதாரம்- புகாரி 10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல் துலக்குவது வாய்க்கு சுகந்தத்தையும் இறைவனிடத்தில் பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது. (ஆதாரம்- நஸாயீ 5)
****************************


25 comments:

 1. பஜ்ர் வேளைத்தொழுகை பல் தேய்க்காமல் கூட தொழும் மூஃமீன் கூட இருக்கின்றனரா?

  ReplyDelete
  Replies
  1. ஆம் ... நான் MAXIMAM பல்லு தேய்க்கிரதிள்ள .... தப்பு லாம் ஒன்னும் இல்லை ... பல்லு தெயகாட்டிக்க ...

   Delete
 2. நல்ல ஆரம்பம்.. தொடருங்கள் கலகலப்புடன் சிந்திக்க வைக்கும் உங்கள் உரையாடலை...

  ReplyDelete
 3. ஹா ஹா. ஆரம்பமே பல்லுலயா தொடங்கியிருக்கு.. பின்னே பணத்தோடு பக்தியா பேசனுமுல்ல..அதை படைச்சவன்கிட்டே எப்புடி நின்னாயின்ன..

  காலையிலேயே பள்ளிக்கு புள்ளைகல அனுப்புறப்ப.. எக்கேடுகெட்டும் போகும்.. மூஞ்சி முகரகூட ஒழுங்க கழுவியிருக்காது.. போயி ஓதிட்டு வேகம ஓடியா. பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடும் சொல்லி அனுப்புவாக அதபோலதான்போல..

  பள்ளிக்குடம் போகும் புள்ளைகல பாருங்க பவுடர் என்ன அத்தர் என்ன.ஹூம் நம்ம பசீர்பாயும் அப்படித்தான் போல..

  ReplyDelete
 4. மாஷா அல்லாஹ் இது ஒரு நல்ல முயற்சி. பொதுவாக நல்ல கருத்தை நகைச்சுவை கலந்து சொல்லும் போது அது சிறப்பான வெற்றியை அடையும். இன்ஷா அல்லாஹ் வாழ்துக்கள் சகோஸ்.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  ஆமா பஷீர் பாயும் பஸீராம்மாவும் எந்த ஊர்க்காரவுகன்னு சொல்லவே இல்ல :-)


  பல பஷீர்பாய்களின் தல உருள போகுதுன்னு நெனைகிறேன் இந்த தொடர் மூலம்... வாழ்க உங்கள் சேவை :-)

  ஜஸக்கல்லாஹ் ஹைர்... அருமையான பதிவு.. மாஷா அல்லாஹ்... சுருக்கமா இருந்தாலும் நச்சுன்னு நடு மண்டைல எல்லாருக்கும் கொட்டு :-)

  ReplyDelete
 6. // வாருங்கள், வந்து பாருங்கள் பஷீர் பாய் படப்போகும் பாட்டையும், வாங்கப் போகும் பல்புகளையும்.... //

  ஆஹ... பஷீர் பாய் மட்டும் தான் பல்பு வாங்குவாரு... பஷீரம்மாவுக்கு பல்பு கிடைக்காது... ம்ம் 100% இட ஒதுக்கீட்ட நீங்களே எடுத்துகிட்டீங்க போல...

  நடத்துங்க....

  ReplyDelete
 7. முதல் பத்தி ஹைலைட் கண்ணு கூசுது ..ஸாஃப்ட் கலரில் டைட்டா போடுங்க . பல்லு விளக்காம போன பஸீர் பாய் போல படிக்காமலே கமெண்ட் பாக்ஸுக்கு நான் தாவிடுவேன் :-)))

  ReplyDelete
  Replies
  1. மாற்றியாச்சு சகோ...

   சுட்டி காட்டியமைக்கு நன்றி :-)

   Delete
 8. அடுத்தவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல், பொருப்பின்றி இருப்பவர்களுக்கு ”நச்” என்று ஒரு கொட்டு.

  ReplyDelete
 9. ஸலாம் சகோ///
  நல்ல துவக்கம்...ஃபஜர்ல கதை ஆரம்பிக்குது...

  தொடருங்க.

  அப்ரம்.....ஆத்தர் (Author)யாருன்னே சொல்லலையே???

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 10. மாஷாஅல்லாஹ்..
  விறு விறு ன்னு போகுது..
  இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம்...

  பஸீராம்மா வின் நறுக் பதில்கள் சூப்பர்....
  தொடருங்கள்....

  ReplyDelete
 11. அஸ்ஸலாமு அலைக்கும்

  சுருக்கமாக இருந்தாலும் சொன்ன விதமும், கருத்தும் அருமை.

  ReplyDelete
 12. ஆமி இங்கியும் என்னதான் நடக்குது பாக்கலாம்னு வந்தேன். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியல்லேன்னாலும் மொத்தத்துல புரிஞ்சுக்க முடியுது.
  நல்ல ஆரம்பம்தான்.

  ReplyDelete
 13. ஸலாம்

  கதைல ட்விஸ்ட் இருக்கணும் ... யாரு பல்பு வாங்கறது நு ... பஷீர் பாயா பஷீரம்மா நு., வழக்கம் போல ஆணுக்கே பல்பு கொடுத்தீங்க ... இன்னம் எதனை பல்பு வாங்க போறாரோ பஷீர் பாய் ?

  ReplyDelete
 14. என்னாதூஊஊஊ.... பஷீர் பாய் சுப்ஹூ வழக்கமா தொழுறாரா?அதுவும் பள்ளிக்குப் போய்த் தொழுகிறாரா? அப்படிப்பட்ட உத்தமரை,நல்லவர,வல்லவரைக் கலாய்ப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.... ஹா...ஹா...ஹ....

  ReplyDelete
  Replies
  1. ம்ஹும்... இதுக்கு வந்த ரியாக்‌ஷனே தாங்க முடியல :-) :-) :-)

   Delete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  நல்ல தொடக்கம்!

  வித்தியாசமான கோணத்தில் ஹதிஸ் விளக்கங்கள். இன்னும் உரையாடலை நீள செய்திருக்கலாம். தீடிரென்று முடித்தது போல உள்ளது. கைர், இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகத்தை எதிர்ப்பார்த்து...

  உங்கள் சகோதரன்
  குலாம்.

  ReplyDelete
 16. தலைப்பு வித்தியசமாக இருக்கிறாது. அருமையனா தொடர்... வாழ்த்துக்கள்

  பல்பு வாங்கிறதுண்ணு ஆகிவிட்டது வாங்கிறது தான் வாங்கிறோம் சைனா பல்பும், குண்டு பல்பும் தவிர தமிழ்நாட்டு தக்கவாரு ஏமர்ஜென்சி பல்பா, பஷீர் பாய்க்கு நல்ல அள்ளி அள்ளி கொடுங்கா... பஸீராம்மா,

  ReplyDelete
 17. எனக்கு பதிவை விடவும், பதிவில் வந்த கமெண்ட்டுக்கள் மிக பிடித்திருக்கிறது.... ஹி ஹி ஹி :))

  பஷீர் பாயை காப்பாத்த யாரும் ‘இஸ்லாமிய ஆண்மகன்’ நு ஒரு வலைதளம் தொடங்காம விட்டால் சரி :))

  ReplyDelete
 18. நல்ல பயனுள்ள தொடக்கம்

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  நல்லா சொன்னிங்க மற்றவர்காகவே வாழும் யுகதிகளுக்கு (சொல்,செயல்,சிந்தனை) சிந்திக்க வைக்கிறது இத் தொடர் மாஷா அல்லாஹ்...

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  அருமையான ஆரம்பம்
  நான் கூட அதிகமா பஜ்ர்ல பல் தேய்பதில்லை,
  இனி திருந்துவோம்.

  ReplyDelete
 21. துவக்கமே நன்று !தொடரும் அப்படியே இருக்கணும்!

  ReplyDelete
 22. துவக்கமே நன்று!அதுபோல் தொடரணும் !

  ReplyDelete