Monday, September 17, 2012

இஸ்லாம் முஸ்லீம்களுக்கு மட்டும் சொந்தமானதா?

வல்லோனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்...

இறைவனை நேசிக்கின்ற அவன் ஒருவனையே வணங்கி வழிபட்டு, அவனது அன்பையும் அருளையும் பெற ஆசைப்படுகின்ற இவ்வுலக வாழ்க்கையை,  உண்மையான இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமைத்துக்கொண்டு மரணத்திற்கு பின் நிரந்தர சொர்க்க வாழ்வை அடைய விரும்பும் நாம் ஒவ்வொருவரும் அதே ஆதமுடைய பிள்ளைகளான ஒரு இறைவனை
பற்றிய செய்தி அறியாத மக்களை பற்றி நாம் நினைத்ததுண்டா???
 • இந்த இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் ஆனதா???
 • குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் இறக்கப்பட்டதா??? 
 •  நாம் உண்டு, நம் வேலை உண்டு என ஒரு முஸ்லிம் இருக்கலாமா???
 • இறுதி தூதரை மாற்று மதத்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினோமா???
இல்லை....இல்லை...இல்லவே இல்லை.....

இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்டது.... குர்ஆன் அகில உலகத்தாருக்கும் இறக்கி அருளப்பட்டது.... அழைப்பு பணி செய்வது அனைவர் மீதும் உள்ள கடமை....

கடந்த சில நாட்களாக மீடியாக்களிலும்,சமூக வலை தளங்களிலும்,
நபிகளாரின் படத்தை தவறாக சித்தரித்த அமெரிக்கர்களுக்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது.... ஆம்....எங்களின் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை அசிங்கமாக சித்தரிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதே நேரம், நபி (ஸல்) அவர்கள் எதற்காக அனுப்பபட்டார்களோ
எதை செய்ய சொல்லி அல்லாஹ்வும்,அவனுடைய தூதரும்
கட்டளை இட்டார்களோ அதனை நாம் செய்ய வசதியாக மறந்து விட்டோம்.

மார்க்கத்தை எத்தி வைப்பது நபிமார்களின் வேலை மட்டும் அல்ல. அவர்களுக்கு பிறகு நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து செய்ய வேண்டிய வேலை......

இந்த பணியை பற்றி அல்லாஹ் குர்ஆனில்
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்;தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்.
இன்னும் நபி ஸல் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் பற்றி வலியுறித்தி உள்ளார்கள்....
''இன்று நீங்கள் என்னுடைய மார்க்கத்தின் பேச்சுகளை கேட்கிறீகள். நாளை உங்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுக்கள் கேட்கப்படும். பிறகு, உங்களிடமிருந்து யார் மார்க்கத்தின் பேச்சுகளை கேட்டார்களோ, அவர்களிடமிருந்து மார்க்கத்தின் பேச்சுகள் கேட்கப்படும். எனவே, நன்கு கவனமாக கேளுங்கள். உங்களுக்கு பின்னால் வருவோருக்கு அதை ஏத்தி வையுங்கள், பிறகு அவர்கள் தங்களுக்கு பின்னால் வருவோருக்கு எத்தி வைக்கட்டும். இந்த காரியம் தொடர்ந்து இவ்வாறு நடைபெறட்டும்.
-அபு தாவூத்
தன்னை இறைவன் என்று சொன்ன கொடுங்கோல் மன்னன் பிர் அவ்னிடம் சென்று அழைப்பு பணி செய்ய மூசா (அலை) அவர்களை கட்டளையிடும் இறைவன் எப்படி செய்ய வேண்டும் எனவும் கட்டளை இடுகிறான்....
20:43. “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
20:44. “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.
கொடுங்கோல் மன்னனிடம் அழைப்பு பணி செய்ய வேண்டும்..... அதுவும் மென்மையான முறையில்.....

ஐந்து வசனம் கிடைத்த அபூபக்கர்(ரலி) அவர்களின் ஈமான் எவ்வாறு ஜொலித்தது??? ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட குர் ஆன் வசனங்களை
வைத்துள்ள நம் ஈமான் பலவீனமாக உள்ளது!

எதெற்கெடுத்தாலும் குர் ஆன்,ஹதீஸை பின்பற்றுகிறோம் என்று சொல்லும் நாம் இந்த விசயத்தில் பின்தங்கி விடுகிறோம்......

நபி ஸல் அவர்கள் காலத்தில் பிறநாட்டு மன்னர்களுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கு ஐநூறு கடிதங்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அனுப்பப்பட்டது....

தகவல் தொடர்பு மிக எளிதாக உள்ள இக்காலத்தில் சமூக வலை தளங்களில்
மற்றும் தினமும் இருநூறு,முன்னூறு மெசேஜ்கள் நமக்கு செல்பேசியில் உள்ளது.... அதை எல்லாம் இறை அழைப்பு பணிக்காக செலவிடலாமே.....

உலக மக்கள் அனைவரையும் சத்தியமார்க்கத்தின் பால் அழைக்கும் கடமை பெண்களுக்கும் உண்டு..... ஏன் எனில் குர்ஆன் வசனங்கள் ஆண்,பெண்
இருபாலருக்கும்தான் இறக்கபட்டது....
9:71. முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்;
அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்;
பெண் எனப்படுபவள் தாயாகவோ,மனைவியாகவோ,
மகளாகவோ,சகோதரியாகவோ,சிறிய தாயாகவோ ஜொலிக்க வேண்டியவள்..... வீட்டிற்கு வெளியில் அண்டை வீட்டுக்காரியாகவும்,
நல்ல தோழியாக இருக்க கடமைப் பட்டவள்..... பெண்ணுக்குறிய அத்தனை தொடர்பை பற்றி நாளை மறுமையில் விசாரிக்க படுவாள்... எனவே,எல்லா நிலையையும் சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.

இஸ்லாத்தின் தனித் தன்மைகளை எடுத்துரைக்கும் முஸ்லிம் பெண்கள்
அவற்றை தங்களால் முடிந்த அளவு வாழ்வில் அமல்படுத்த வேண்டும்.
வாய் சொல்லை விட செயல்படுத்தும்போதுதான் மிகுந்த பலன் உண்டு.

வீட்டில் இருக்கும் பெண்கள் கவனத்திற்கு.......

1.அண்டை வீட்டினருடன் இஸ்லாம் சொல்லும் முறைப்படி நடக்க வேண்டும்...
நாம் சமைக்கின்ற உணவை சிறிது அவர்களுக்கு கொடுக்கலாம். நம்மால் முடிந்த சிறிய உதவிகளை செய்ய வேண்டும்.அவர்களை சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக் கூடாது.

2.வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களிடம் மென்மையான முறையில் நடக்க வேண்டும். அண்ணலார் வீட்டு வேலை செய்பவர்களிடம் எவ்வாறெல்லாம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டார்கள்? வேர்வை உலர்வதற்க்கு முன் கூலியை கொடுக்க சொன்னார்கள். கடுமையான வேலையில் உதவி செய்ய ஏவி உள்ளார்கள் என்பதை சரியாக முறையில் பேணுவதும் அழைப்பு பணியே ஆகும்.

3.அண்டை வீட்டில் நோயுற்றால் நலம் விசாரியுங்கள்...

4.கஸ்டமான துக்க வேளைகளில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்.

5.நல்லவை நடந்தால் வாழ்த்து சொல்லுங்கள்.

6.தீயவை நடந்தால் அனுதாபம் தெரிவியுங்கள்.

7.நம் வீட்டு நிகழ்ச்சிகளில்,விருந்தில் கண்டிப்பாக அவர்களை அழையுங்கள்.

8.மார்க்கம் அனுமதித்த அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில்  கலந்து கொள்ளுங்கள்..

9. அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு பரிசுப் பொருளுடன் புத்தகங்கள், சிடிக்கள், நோட்டிஸ் போன்றவற்றை கொடுங்கள்....

10.பஸ்,ரயில் போன்ற பொது இடங்களில் அவர்களுக்கு இடம் கொடுப்பதும்,
அவர்களுடைய சுமையை அல்லது லக்கேஜை வாங்கி உதவுவதும் அழைப்பு பணியே ஆகும்.

11.வீட்டிலும் வெளியிலும் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடியுங்கள்.

12. நம் குழந்தைகளுக்கு போதிக்கும் நற்பண்புகள் அடுத்தவர்களை கவரும்.

13. நம் வீட்டுக்கு வெளியே சின்னதாக ஒரு சிலேட் அல்லது போர்டில்
தினம் ஒரு ஹதீஸ் எழுதி வைக்கலாம்....


உதாரணமாக

மனிதர்களுக்கு உதவி செய்பவனுக்கு இறைவன் உதவி செய்வான்....

மனிதர்களுக்கு இரக்கம் காட்டுபவனுக்கு இறைவன் இரக்கம் காட்டுவான்.....

ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்.....

போன்ற பிறர் நலம் பேண சொல்லும் பொன்மொழிகளை அவர்கள் கண்ணில்
படும்படி எழுதி வைத்து இறுதி தூதரை அவர்களுக்கு அறிமுகபடுத்துவது
ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணின் கடமையாகும். இவையெல்லாம் மற்றவர்கள் நம் மீது மதிப்பு ஏற்படுத்துவதோடு நம் இஸ்லாத்தை சார்ந்த மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும்.  நற்பண்புகளை மேலும் வளர்த்துக்கொள்ள செய்யும்!

உங்கள் சகோதரி
ஆஷா பர்வீன்

63 comments:

 1. சலாம் சகோ.ஆஷா பர்வீன்.
  அழுத்தமான கருத்துக்களுடன்
  ஆக்கப்பூர்வமான சிந்தைகளுடன்
  இனிமையான பதிவு..!
  நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம்
   சகோ.ஆசிக்
   தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   ஜசாகல்லாஹூ கைர்

   Delete
 2. சகோ ஆஷா பர்வீன்!

  எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன! அவற்றிற்கான பதில்களை / விளக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்! நீங்களோ, அல்லது வேறு சகோதரிகளோ பதில் சொல்லவும்! மாறாக, உங்கள் அண்ணன்களை எனக்கு பதில் சொல்லவேண்டாம் என்று சொல்லுங்கோ! ஓகே வா?

  ReplyDelete
  Replies
  1. சகோ.தங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நானே பதில் அளிக்கின்றேன்...

   Delete
 3. salam .....!
  masha allah mega arumaiyana aakam matrum aalosanai
  jazhkallahu kair

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம்
   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   வ இய்யாக்

   Delete
 4. கடந்த சில நாட்களாக மீடியாக்களிலும்,சமூக வலை தளங்களிலும்,
  நபிகளாரின் படத்தை தவறாக சித்தரித்த அமெரிக்கர்களுக்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது.... ஆம்....எங்களின் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை அசிங்கமாக சித்தரிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். ///////

  சரி நீங்கள் கண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும்! உண்மையில் இது கண்டிக்கபட வேண்டிய விஷயமும் தான்!

  அதேவேளை இந்தப் படம் வெளீயானதன் பின்னர், உலகில் பட இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன! அதில் உச்சமாக, உங்களைப் போன்ற ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்!( அமெரிக்க தூதுவர் )இதுவரையில் மொத்தமாக 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!

  உங்களைப் போன்ற ஒரு பெண், கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட போது, அதனை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? உங்களுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படவில்லையா?

  மேலும், தன்னை யாரேனும் அவமதித்தால், அவர் சார்ந்தவர்களைக் கற்பழிக்கும்படி அல்லாவோ, நபிகள் நாயகமோ, எங்கேனும் சொல்லி உள்ளார்களா? அல்லது இப்படியான வன்முறைகளை அவர்கள் விரும்புவார்களா?

  இந்த 6 பேரின் படுகொலையையும் எப்படி எடுத்துக் கொள்வது? இதற்கு இஸ்லாம் பதில் கூறுமா?

  இஸ்லாமிய பெண்மணிகளாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள்??

  ReplyDelete
  Replies
  1. இப்படிபட்ட வன்முறைகளை முஸ்லிம்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கிறோம்....

   தன் சகோதரன் தவறு செய்தாலும் அதை சரி காணக் கூடியவன் உண்மை முஸ்லிம் அல்ல....

   5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;

   இதைப் பற்றி நபிஸல் அவர்கள் கூறுகிறார்கள்:-

   ‘’ஒருவன் தன் சமூகத்து மக்களை நேசிப்பது இனவெறியாகுமா??என ஒருவர் கேட்டார்....

   இல்லை!மாறாக தன் சமுதாயத்தார் பிறர் மீது கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவது தான் இன வெறியாகும்.-அபூ தாவூத்


   படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பமாகும்.
   படைப்புகளுக்கு நன்மை புரிபவரே இறை நேசத்திற்க்கு உரியவராவர்.


   இப்படிப்பட்ட வன்முறைகளை செய்யுங்கள் என்று அல்லாஹ்வும்,நபிகள் நாயகமும் சொல்லவும் இல்லை...விரும்பவும் மாட்டார்கள்.

   ஒரு மனிதரை அநியாயமாக கொலை செய்தவர் ஒரு சமுதாயத்தையே கொலை செய்தவர் போல ஆவார் என
   அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்.


   4:115. எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.   கற்பழிப்பு நடந்தது உண்மையா பொய்யா என்று தெரியாது....
   உண்மை என்றே எடுத்துக் கொள்கிறோம்... அவ்வாறு செய்வதற்க்கு இஸ்லாத்தில் ஒரு போதும் அனுமதி இல்லை..அப்படி செய்தவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது..இறைவனின் பார்வையில் அவர் நரகவாதியே


   நீங்கள் கூறியிருப்பது போல் கொல்லப்பட்டது ஆறு பேர் அல்ல.. நான்கு பேர்...

   கற்பழிக்கப்பட்டதாக கூறப்பட்டது அமெரிக்க தூதுவர் அல்ல...
   செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் சகொதரரே...


   இஸ்லாமிய பெண்மணி தளத்தின் அட்மின்களில் ஒருவரான அன்னு தனது வலையில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
   http://mydeartamilnadu.blogspot.in/2012/09/blog-post_17.html


   Delete
  2. //அதில் உச்சமாக, உங்களைப் போன்ற ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்!( அமெரிக்க தூதுவர் )//

   அமெரிக்க தூதுவர்???? கற்பழிக்கப்பட்ட அந்த அமெரிக்க பெண் தூதுவர் பெயர் என்ன????

   லிங்க் தர முடியுமா?

   Delete
  3. குரான் 2:178

   ' ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண். ..'

   இதுக்கும் விளக்கம் கொடுங்கள்!

   Delete
  4. இது ஆட்சி செய்யும் தலைவருக்கு இடப்பட்ட கட்டளை....
   பொது மக்கள் அரசின் சட்டத்தை கையில் எடுக்க கூடாது....

   Delete
  5. கந்தசாமி அண்ணே. ஏக இறையின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக..!
   //2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.//

   இந்த வசனத்துக்கான விளக்கத்தை கேட்கிறீர்கள் இல்லையா?? (பதிவில் தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனத்தின் முழு வசனம் தான் இது...)

   கொலைக்காக பழி தீர்ப்பது என்றால் ஒருவர் அநியாயமாக கொல்லப்பட்டால் அதற்காக பழி தீர்ப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது..!

   இந்த வசனம் இறங்கிய கால கட்டத்தில் இருந்த சட்ட திட்டங்களின் படி அடிமைகள் மற்றும் பெண்களின் உயிர்கள் மதிப்பில்லாததாக கருதப்பட்டு வந்து இருந்து இருக்கிறது எனவே ஒரு எஜமான் ஒரு அடிமையை அல்லது நிரபராதியான ஒருவனை அல்லது ஒரு பெண்ணை கொலை செய்து விட்டால் அதற்கு பகரமாக பழி தீர்க்க தன் அடிமையை , அல்லது தன் இடம் உள்ள பெண்களை முன் நிறுத்துவது வழக்கத்தில் இருந்து வந்து இருக்கிறது..! ஆனால் இஸ்லாம் இதை இந்த முறையை தவறு என்கிறது..!

   எஜமானன் ஒருவனை கொலை செய்தால் கொலை செய்த அந்த எஜமானனே தண்டிக்கப்பட
   வேண்டும்..! அவனுக்கு பதிலாக அவனுடைய அடிமையோ அல்லது வேறு பெண்களோ நஷ ஈடாக ஆக்கப்பட்டு பழி வாங்கப்பட கூடாது என்பதே இந்த வசனம் கூறும் செய்தி..!

   இதே போலவே ஒரு அடிமை கொலை செய்தால் கொலை செய்த அந்த அடிமையே கொலை செய்யப்பட்டவனுக்கு பகரமாக பழி வாங்கப்பட வேண்டும்..!!

   இந்த வசனம் மூலம் தவறு செய்பவன் தன்னை விட கீழ நிலையில் இருப்பவர்களை நஷ்ட ஈடாக கொடுத்து தப்பித்து கொள்ளும் நயவஞ்சகதனத்துக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்த்தது..!!

   அதே நேரத்தில் கொலையுண்டவரின் குடும்பத்தினர் பழி தீர்க்க விரும்பவில்லை எனில் அவர்களை மன்னித்து விடவும் என்று இஸ்லாம் அறிவுரை கூறுகிறது..!

   தங்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளித்து விட்டேன் என நம்புகிறேன் சகோ...! மாற்று கருத்துக்கள் இருப்பின் மற்றவை பிற.! :)   Delete
  6. //ஒருவன் தவறு செய்யும் வரை முஸ்லிமாக இருந்துவிட்டு, தவறு செய்தபின்னர் முஸ்லிம் அல்லதவனாக மாறுவது எங்ஙனம்?//

   சகோ, நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை வாழ்வில் முழுமையாக பின்பற்றுவேன் என்பவனே முஸ்லிம். அவர்வழி இல்லாமல் தன் இஷ்டத்திற்கு தவறு செய்பவர் (அல்லாஹ்வை அஞ்சி, செய்த தவறுக்கு பாவமன்னிப்பு தேடாத வரை) முஸ்லிமல்ல. அவர் தவறு செய்வது மட்டுமே நமக்கு தெரிகிறது. அவர் பாவமன்னிப்பு தேடினாரா, வல்லோனுக்கு மட்டும்தான் தெரியும். எனவே அதன்பின்னும் அவர் முஸ்லிமா இல்லையா என்பது அல்லாஹ்வே அறிவான், மனிதரல்ல. மனிதர்கள் கூறுவது ‘நிச்சயமாக இவர் முஸ்லிமல்ல’ எனும் ஃபத்வா அல்ல.... இப்படி ஒரு இழி செயலை செய்திருந்தால் இவர் எங்களைச் சேர்ந்தவரல்ல என்னும் ஒரு விளக்கம். Ok?

   //மேலும், முஸ்லிமாக இருக்கும் ஒருவனைப் பார்த்து, இன்னொருவன் “அவன் முஸ்லிமே அல்ல” என்று சொல்லிவிட்டால் போதுமா? உடனே அவன் முஸ்லிம் அல்லாதவன் ஆகிவிடுவானா?//
   இவ்வாறு சொல்வதற்கு அனுமதியில்லை. முஸ்லிமா இல்லையா என்பது அவனின் உள்ளத்திற்கும் இறைவனுக்கும் நடுவில் உள்ள விஷயம். இதில் மனிதர் தலையிட இயலாது. எனவேதான் சொல்கிறோம், “இறைவனின் பார்வையில் அவர் நரகவாதியே” என்று... Fine?

   அதன் பின்னுள்ள வரிக்காகவே நான் கமெண்ட்டை நீக்கினேன். பின்னூட்ட விதிகளை மீறுகிறீர்கள். தனிநபர் தாக்குதலோ அல்லது கேலியோ இங்கே இந்த தளத்தில் அனுமதியில்லை....Dont try. மீறினால் விளக்கம் குடுக்க எங்களுக்கு தேவையில்லை...எல்லா கமெண்ட்டையும் அப்புறப்படுத்த இயலும். இது இஸ்லாத்தை பெண்களின் வாயிலாக, பெண்களின் பார்வையில் பிரதிபலிக்கும் இடமே தவிர கேலி கிண்டல்கள் செய்யும் இடமல்ல. மீண்டும் ஒரு முறை பின்னூட்ட விதிகள் - பக்கத்தை படித்துவிட்டு பின்னூட்டமிடவும். Let this be the final comment from you or anyone else. We have a zero tolerance policy on these regards. Hope you will understand.

   //- அப்படியானால் இந்த 12 பேரையும் கொன்றவர்களும் முஸ்லிம்கள் இல்லையா??? //
   செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு தேடாமலே இருந்தால், இறைவன் அவர்களை மன்னிக்காமலே இருந்தால், அவர்களின் நிலையை இறைவன் முடிவு செய்வான். யார் அல்லாஹ்விற்கும், அவனின் கட்டளைகளுக்கும் மாறு செய்கின்றனரோ அவர்கள் முஸ்லிமல்ல. இது என்னுடைய / முஸ்லிம் மக்களுடைய தீர்ப்பல்ல. இறைவனின் வாக்கு. அவ்வளவே.

   அந்த கமெண்ட்டையும் நீக்கிய காரணம். ஒரு சமூகத்தை ஒரு சிலரால் மட்டும் எடை போடும் சூத்திரதாரர்களின் வாயில் அவலாகாமல் இருக்க. Thanks !


   Delete
  7. கொலைக்காக பழி தீர்ப்பது என்றால் ஒருவர் அநியாயமாக கொல்லப்பட்டால் அதற்காக பழி தீர்ப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது..! ///

   அதாவது "கண்ணுக்கு கண்!"

   இஸ்லாத்தை முன்னுறுத்தி தீவிரவாதம் செய்பவர்கள் எல்லோரும் சொல்வது இதை தானே!

   Delete
  8. /////இதே போலவே ஒரு அடிமை கொலை செய்தால் கொலை செய்த அந்த அடிமையே கொலை செய்யப்பட்டவனுக்கு பகரமாக பழி வாங்கப்பட வேண்டும்..!! ///

   "அடிமை" ...அப்பிடின்னா??

   Delete
  9. எனது கேள்விகளுக்குப் பதிலளித்தமைக்கு நன்றி! எனது கேள்விகள் மேலும் தொடர்கின்றன!

   “அவர்வழி இல்லாமல் தன் இஷ்டத்திற்கு தவறு செய்பவர் (அல்லாஹ்வை அஞ்சி, செய்த தவறுக்கு பாவமன்னிப்பு தேடாத வரை) முஸ்லிமல்ல.”

   இஸ்லாத்தில் பாவமன்னிப்பை எங்ஙனம் கோரலாம்? பாவம் செய்த ஒருவர், எப்படி அந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் தன்னை முஸ்லிமாக நிலைநிறுத்திக் கொள்வார்? உதாரணமாக, அந்த 12 வெளிநாட்டவர்களைக் கொன்றவர்களுக்கு, அல்லாஹ் எப்படி பாவமன்னிப்பு வழங்குவார்? அதற்கு அந்த குற்றவாளிகள் என்ன செய்ய வேண்டும்?

   ( இக்கேள்வி, பின்னூட்ட விதிகளை மீறியிருக்கவில்லை என்று நம்புகிறேன்! உங்களின் விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன் )

   Delete
  10. //அதாவது "கண்ணுக்கு கண்!"

   இஸ்லாத்தை முன்னுறுத்தி தீவிரவாதம் செய்பவர்கள் எல்லோரும் சொல்வது இதை தானே!// கந்தசாமின்னே... உங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் நீங்கள் அதற்கு சிறிதளவு கூட கோபப்பட மாட்டீர்களா??? சம்ம்மந்தப்பட்டவர்களை பாவம் என்று மன்னித்து விட்டு விடுவீர்களா? அல்லது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தருவீர்களா???

   இஸ்லாம் எந்த நிலையிலும் சட்டத்தை கையில் எடுக்க சொல்லவில்லை..!! ஒருவர் கொலையுண்டால் அவருக்கு பகரமாக கொலை செய்தவனே தண்டனை பெற வேண்டும்...! தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மரண தண்டனை..! அதுவும் நாமே எந்த முடிவுக்கும் வர இயலாது.. ஆட்சியாளரின் தீர்ப்பே இறுதியானது..!அதாவது சட்டத்துறை கையில் இருக்கு... ஆக இதை வைத்து தான் தீவிடவாதத்துக்கு பதில் சொல்றாங்க என்பதெல்லாம் ஒத்துக்க முடியாது...
   யாருக்காக சட்டம் இயற்றப்பட்டதோ அவங்களுக்கு தான் இந்த வாசகம் பொருந்தும்... ஆட்சியாளர் எவராக இருந்தாலும் அவருக்கு கட்டுப்பட்டு நடக்கவே சொல்லி தருகிறது..! அது புரியாத சிலர் சட்டத்தை கையில் எடுத்து வரம்பு மீறுவதால் ஒட்டு மொத்த சட்டத்திலும் குறை காண இயலாது சகோ..!

   மேலும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பம் விரும்பினால் கொலைகாரனுக்கு மன்னிப்பு வழங்கி விடலாம்..! அதற்கும் அனுமதி உள்ளது..!

   மாற்று கருத்துகள் இருப்பின் தொடரலாம்.!

   Delete
  11. //"அடிமை" ...அப்பிடின்னா??///


   நெஜம்மாவே தெரியாமதான் கேக்குரிங்கலான்னு தெரியல இருந்தாலும் விளக்கம் அளிக்க வேண்டியது எங்கள் கடமை சகோ..!

   பண்டைய காலத்தில் மன்னராட்சியில் போரில் ஜெயித்தவர்கள் தோற்றவர்களை சிறை பிடித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது..!அப்படி போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களே அடிமைகள்..!

   விளக்கம் போதும் என நினைக்கிறன் சகோ :)

   Delete
  12. @சகோ.கந்தசாமி கந்து,
   //அதாவது "கண்ணுக்கு கண்!"
   இஸ்லாத்தை முன்னுறுத்தி தீவிரவாதம் செய்பவர்கள் எல்லோரும் சொல்வது இதை தானே! //

   ஆமாம். கண்ணுக்கு கண் என்பதுதான் இஸ்லாமிய சட்டம். இதில் என்ன தவறு உள்ளது? தவறு செய்பவர்களுக்கு தக்க தண்டனையாகவும், இனிமேல் இது போன்று யாரும் செய்திடக் கூடாது என்பதற்கு ஒரு பாடமாகவும், தீங்கிழைக்கப்பட்டவர்களுக்கு தக்க நியாயமாகவும் உள்ளது. வேறு ஏதேனும் வழி இதை விட சிறந்தது உள்ளதா சொல்லுங்கள்??? நமக்கு ஒரு காயம் ஏற்பட்டு வலி தாளாமல் இருக்கும்போது யாரேனும் சிரித்தாலோ கேலி செய்தாலோ நாம் என்ன சொல்வோம்...’உனக்கு இது மாதிரி வரணும் அப்பத்தான் தெரியும்’ என்றுதானே.... இல்லையா??Sympathazing is itself difficult brother.. you can never sympathize 100% without any lacking...and talk about empathizing... baseless..!! எனவே போலியான நியாயங்களைக் கொண்ட தீர்ப்புகள் பற்றி கட்டுரைகளை பதிலில் தராதீர்கள்.

   இந்த சட்டத்தை தீவிர்வாதமாக நோக்குவது, நோக்கும் கண்ணில் கோளாறு என்பதற்கு சான்றாகும் :)


   சகோ.மாத்தி யோசி மணி,
   //இஸ்லாத்தில் பாவமன்னிப்பை எங்ஙனம் கோரலாம்? பாவம் செய்த ஒருவர், எப்படி அந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டு, மீண்டும் தன்னை முஸ்லிமாக நிலைநிறுத்திக் கொள்வார்? உதாரணமாக, அந்த 12 வெளிநாட்டவர்களைக் கொன்றவர்களுக்கு, அல்லாஹ் எப்படி பாவமன்னிப்பு வழங்குவார்? அதற்கு அந்த குற்றவாளிகள் என்ன செய்ய வேண்டும்?//

   Very simple. செய்த தவறுக்கு உளப்பூர்வமாக வருந்த வேண்டும். இனி இதுபோல் செய்ய மாட்டேன் / செய்யக்கூடாது என உறுதி பூண வேண்டும். சட்டப்படி சரணடைய வேண்டும். என்ன தண்டனையோ அதை ஏற்க வேண்டும். இறைவனிடம் தொழுது, அழுது மன்றாடி தன் பாவங்களை மன்னிக்க சொல்ல வேண்டும்.
   //அல்லாஹ் எப்படி பாவமன்னிப்பு வழங்குவார்?// இதை அல்லாஹ்தான் அறிவான்.

   Delete
 5. சலாம் சகோ ஆஷா,

  இந்த புகழ்ச்சியும் இல்லாமல், இதயத்தில் இருந்து சொல்கிறேன்.... இஸ்லாமிய பெண்மணியில் வந்த சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று... அழைப்புப் பணியில் நீங்கள் செலுத்தி வரும் அதீட ஆர்வமும், உங்கள் அனுபவமும் ஒருங்கே இந்த கட்டுரைகளில் தெருகிறது....

  மாஷா அல்லாஹ்... அற்புதமான கட்டுரை சகோ.. உங்கள் அழைப்புப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்..... கட்டுரை படித்து முடித்ததும் ஏனோ மனம் நிறைந்தது போல் ஒரு பீலிங்..

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ.சிராஜ்
   தஙகளின் முதல் வருகைக்கும்,
   மனமார்ந்த பாராட்டுக்கும் நன்றி.
   ஜசாகல்லாஹூ கைர்

   Delete
 6. சலாம் சகோ ஆயிஷா ஃபர்வீன்!

  அருமையான ஆழமான கட்டுரை. இது போன்று தொடர்ந்து பதிவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ.சுவனப்பிரியன்....
   என் பெயர் ஆஸா,ஆயிசா அல்ல....
   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
   ஜசாகல்லாஹு கைர்

   Delete
 7. அஸ்ஸலாமு அலைக்கும்

  சிறப்பான கட்டுரை சகோ
  மிக நேர்த்தியாக நயமாக சொல்லப்பட்டுள்ளது
  உங்கள் நலப்பணி சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  வஸ்ஸலாம்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ.
   தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

   Delete
 8. // 20:43. “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
  20:44. “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.//

  இந்த குரான் வனங்களை படித்ததும் கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது....வார்த்தைகளில் வரம்புமீறாவிட்டாலும் கருத்துக்களில் கடுமை வைத்து நானும் பல முறை பேசி இருக்கிறேன்... அது தவறுதான்... இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் கனிவான சொற்கள் கொண்டே பேச முயற்ச்சிக்கிறேன்... முடியாவிட்டால் கருத்து சொல்வதை தவிர்த்துவிடுகிறேன்...நபி ஸல் காட்டி தந்த பொறுமைதான் எந்த விஷயத்திலும் வெற்றியின் ரகசியம்... கனிவான பேச்சின் மூலமே இதயங்களை வெல்ல முடியும்...கடினமான பேச்சால் விவாதங்களை மட்டுமே வெல்ல முடியும்...

  ReplyDelete
  Replies
  1. தன் தூதரைப் பார்த்து ரப்புல் ஆலமீன் சொன்ன வார்த்தைகள் இவை.
   நாமும் இதை பின்பற்றுவோம்.

   3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக.

   Delete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  ஆஷா மிக அற்புதமான கட்டுரை... எங்க ஊர் பொண்ணு இப்படி எழுதுறது பெருமையா இருக்கு மாஷா அல்லாஹ்... மாஷா அல்லாஹ்...
  (வட்டாரவெறி கூடாது என ஹைதர் அண்ணா என்னை திட்டுவாரோ ?? மன்னிச்சூ அண்ணா :-)

  தொடர்ந்து இது போன்ற கட்டுரைகள் எழுது ஆஷா. வாழ்த்துகள்

  ஜஸக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் ஆமி.....
   வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   வ இய்யாக்

   Delete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்
  சகோ ஆஷா மிகவும் அருமையான முறையில் தாவா களத்தில் முஸ்லீம் சகோதரிகள் படியாற்றவேண்டிய விதத்தைச் சொல்லியுள்ளீர்கள் இதுபோன்ற டிப்ஸ்களையெல்லாம் முஸ்லீம் பென்கள் சரியான முறையில் பின்பற்றினால் இஸ்லாம் வெகுவேகமாக மற்றுள்ளவர்களின் உள்ளங்களை வென்றெடுக்கும் இறைவன் நாடினால்
  தொடர்ந்து எழுத்தின் மூலம் அழைப்புப் பணியைத் தொடருங்கள்
  ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் .....
   வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   வ இய்யாக்

   Delete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,
  மாஷா அல்லாஹ்! அருமையான முறையில் எம் கடமையை தெளிவுபடுத்தி, அதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்!
  அல்லாஹ் அனைவரிற்கும் அதனை இலகுவாக்கி தரட்டும்!
  மென்மேலும் உங்கள் தஃவா பணி சிறக்க அல்லாஹ் அருள் புரியட்டும்!
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் .....
   வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   வ இய்யாக்

   Delete
 12. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,

  (1)முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.


  (2)அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

  (3) எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்


  ஆனால் இதையெல்லாம் நம்மில் பலர் மறந்துவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை . அண்டை வீட்டார் ஒரு முஸ்லீமாகத்தான் இருக்கனும் என்றே சொல்லவில்லை பொதுவாக அண்டை வீட்டார் என்றே ரஸுல் (ஸல் ) அவர்கள் சொல்லியதிலிருந்து இஸ்லாம் எப்படிப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளலாம்


  அருமையான அழகான பதிவு ஜஸாக்கலாஹ் க்கைர் :-)

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் சகோ.ஜெய்லானி.....
   வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   வ இய்யாக்

   Delete
 13. அஸ்ஸலாமு அலைக்கும்

  மாஷா அல்லாஹ் மிக அருமையான கட்டுரை
  அழைப்புப் பணி என்பது நம்மீது சுமத்தப்பட்ட அமானிதம் அடைக்காலப் பொருள்
  முகம்மது நபி ஸல் அவர்கள் தனது இறுதி உரையில் எனக்கு பிறகு நபிமார்கள் வரமாட்டார்கள் என்று கூறியபோது சாஹபாக்கள் இஸ்லாத்தை தொடர்ச்சியாக சொல்லும் பணியை யார் செய்வார்கள் என வினவியபோது நபி அவர்கள் சொன்னார்கள் என் உம்மத் செய்வார்கள் என்று.

  நபி அவர்களின் உம்மத் ஆகிய நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானித (அடைக்கலத்தை) முறையாக எப்படி செய்வது என்பதை சகோதரி அஷாவின் பதிவு அருமையாக விளக்குகிறது வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் .....
   வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி....
   ஜசாக்கல்லாஹு கைர்

   Delete
 14. அஸ் ஸலாமு அலைக்கும் ஆஷா சிஸ்டர்,

  மாஷா அல்லாஹ், மிக மிக அவசியமான ஆழமான கட்டுரை. அதுவும் தேவையான நேரத்துல தந்திருக்கீங்க. ஆமி, நாம இந்த கட்டுரையையும் ஒரு தனி பக்கமாக போடலாம சொல்லுங்கள். இன்னும் சில பாயிண்ட்ஸ் சேர்த்து.... பெண்களுக்காக மட்டும்னு....

  சிஸ்டர், சகோ சிராஜ் சொன்னது போல உங்களுடைய அறிவின் ஆழமும், பக்குவமும் கட்டுரையிலேயே வெளிப்படுகிறது. இன்னும் இதுபோல பல கட்டுரைகளை தர அல்லாஹ் கிருபை செய்வானாக. இதற்கான பன்மடங்கு கூலியை உங்களுக்கு தந்தருள்வானாக. ஆமீன்.

  வஸ் ஸலாம் :)

  ReplyDelete
  Replies
  1. //ஆமி, நாம இந்த கட்டுரையையும் ஒரு தனி பக்கமாக போடலாம சொல்லுங்கள். இன்னும் சில பாயிண்ட்ஸ் சேர்த்து.... பெண்களுக்காக மட்டும்னு....//

   இன்ஷா அல்லாஹ்... மற்ற சகோதரிகளின் டிப்ஸையும் சேர்த்து புது பக்கம் உருவாக்கிடலாம் அன்னு :-)

   இன்னும் சில புதுபக்கங்களும், தளத்தில் சில மாற்றங்களும் செய்ய வேண்டியிருக்கு.. இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் செய்திடலாம்..

   Delete
  2. வ அலைக்கும் அஸ்ஸலாம் அன்னு.....
   முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி...
   ஜசாக்கல்லஹூ கைர்

   Delete
 15. அழைப்பு பணியின் அவசியத்தை உணர்த்தும் அருமையான கட்டுரை
  உண்மையை சொல்லும் போது பல இடர்பாடுகள் வரும் அதை பொறுமையாகவும் சாமர்த்தியமாகவும் கையாள வேண்டிய வழி முறைகளை எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

  கட்டுரையில் பல நல்ல கருத்துகள் நிறைந்துள்ளது ஆனால் எழுத்து நடை இயல்பாக இல்லை ஏதோ உரைநடையை படிப்பது போல இருக்கிறது இயல்பான எழுத்து நடை யுடன் இருந்திருந்தா இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ரப்பானி

   தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துகளுக்கும் மிக்க நன்றி....

   தாங்கள் குறிப்பிட்டபடி எழுத்துநடையை மாற்றிக்கொள்கிறேன்...

   ஜசாகல்லாஹூ கைர்

   Delete
 16. இந்தக் கட்டுரை அருமையான நெறிமுறைகளைச் சொல்கிறது. நான் நபிகள் அவர்களின் வாழ்க்கையை முழுமையாகப் படிக்கவில்லையென்றாலும் ஓரளவு படித்திருக்கிறேன்.
  எனக்குத் தெரிந்து நீங்கள் சொன்ன பெண்களுக்கான நெறி முறைகளை எந்த சமயத்தவராக இருந்தாலும் பின்பற்றினால் சமூகம் நன்மை பெறும். நபிகள் அவர்களின் மருத்துவ அறிவைக் கண்டு நான் மிகவும் பிரமித்திருக்கிறேன். ஆனால் அதைப் பற்றிய கட்டுரைகளை எங்கும் காண இயலவில்லை. சற்று வருத்தமே...
  அமெரிக்காவில் நபிகள் அவர்களை அவமதிக்கும் வகையில் ஒரு திரைப்படத்தை எடுத்தது கண்டனத்திற்கு உரியது தான். எனினும் அவர்களுக்கு நபிகள் பற்றிய வரலாறு தெரியாததினால் அவர்கள் அப்படி எடுக்கிறார்கள். அரைக் குறை அறிவு எப்பொழுதும் அங்கிருக்கும் மீடியாக்களுக்கு இருக்கிறது. ஏன் இஸ்லாத்தை மட்டுமில்லை. பல சமயங்களையும் அவர்கள் கேலிச் சித்திரமாக ஆக்கிக் கொண்டு வருகிறார்கள்,
  இருப்பினும் இதற்கெல்லாம் கலவரம் தீர்வல்ல....
  நபிகளின் வழிமுறைகளை அவரின் ஆழ்ந்த வாழ்க்கைப் பற்றிய பார்வையை அனைவரும் அறியும் வண்ணம் செய்வதே ஒரே வழி. அப்துல ரகுமான அவர்களின் எழுத்துக்களில் சூஃபி என்றொரு பிரிவைப் பற்றி அடிக்கடி சொல்வார். அதைச் சார்ந்த கதைகள் நிறைய எடுத்துக்காட்டாக சொல்வார். எனக்கு பிரம்மிப்பாக இருக்கும்.
  இந்தியாவிற்கு இஸ்லாத் அளித்த மிகப் பெரிய அறிவுக் கொடை. சமயங்கள் தாண்டிய ஒரு தளத்தில் பார்க்கப்பட வேண்டியவர் மதிப்புக்குரிய நபிகள் அவர்கள். மனித சமுதாயத்திற்கான நெறிமுறைகளை வகுத்தவர் நபிகள்.
  அதை வலியுறுத்த வேண்டுமெனில் இதுப் போன்ற தவறுகளை வன்முறையின்றி எதிர்க்கும் அறிவுச் சார்ந்த வழி வேண்டும்
  தவறிருப்பின் தயவு செய்து திருத்தவும்....

  ReplyDelete
  Replies
  1. //இதுப் போன்ற தவறுகளை வன்முறையின்றி எதிர்க்கும் அறிவுச் சார்ந்த வழி வேண்டும்//
   எல்லாப் புகழும் இறைவனுக்கே. நடுத்தரமான உங்களின் எண்ணங்களை இங்கே பதித்தமைக்கு மிகவும் நன்றி சகோ.தமிழ்ராஜா.

   இஸ்லாத்தில் நீதி நியாயம் என்பது உண்மையிலேயே சமமானது. மேலோர், கீழோர், வெள்ளையர், கருப்பினர், ஆண், பெண், வயோதிகர், குழந்தைகள் என எந்த பாரபட்சமும் இல்லாதது. எனவேதான் எங்களில் தவறு செய்வோரையும் அது யாராய் இருப்பினும் எங்களால் சுட்டிக்காட்ட முடிகிறது, திருத்திக் கொள்ளவும் முடிகிறது. இவ்வழியே அறிவு சார்ந்த வழி என மெய்ப்பித்தமைக்கு மிக நன்றி சகோ. உங்களின் பின்னூட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது. நன்றிகள் பல.

   Delete
  2. சகோ.தமிழ்ராஜா.....

   இறைவனின் அருள் உங்கள் மீது இறங்கட்டும்....

   //சமயங்கள் தாண்டிய ஒரு தளத்தில் பார்க்கப்பட வேண்டியவர் மதிப்புக்குரிய நபிகள் அவர்கள். மனித சமுதாயத்திற்கான நெறிமுறைகளை வகுத்தவர் நபிகள்.//

   நபிகள் நாயகத்தை பற்றி மிக சரியாக கூறி உள்ளீர்கள்....

   //இதுப் போன்ற தவறுகளை வன்முறையின்றி எதிர்க்கும் அறிவுச் சார்ந்த வழி வேண்டும்//

   பிறருக்கு தீங்கிழைக்கும் இது போன்ற வன்முறைகளை நபி சல் அவர்கள் தடுத்துள்ளார்கள்....

   தங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
   Delete
  3. எனது பின்னூட்டத்தை உங்களின் தளத்தில் வெளியிட்டதற்கும், அதற்கு பதிலுரைத்ததற்கும் மிக்க நன்றி.

   பிறருக்கு தீங்கிழைக்கும் இது போன்ற வன்முறைகளை நபி சல் அவர்கள் தடுத்துள்ளார்கள்....
   இது போன்ற வன்முறைகள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் வரலாம் என்று அஞ்சப்படும் எந்த வன்முறையையும் நபியின் மொழிகள் தடுக்கவே செய்கிறது. அவருடைய மொழி அன்பின் மொழி என்பதை உணர்ந்தால் மட்டுமே விளங்கிக் கொள்ளவும் முடியும். விளக்கவும் முடியும்.
   என்னைப் பொறுத்த வரை குழந்தைகள் சிறு வயதில் கையில் வைத்துக் கொண்டு விளையாடும் பொம்மைப் போன்று தான் சமயங்கள். அவரவர் பெற்றோர்கள் தரும் பொம்மைகள் அந்தந்த குழந்தைகளுக்கு சிறந்தது என்று கருதிக் கொள்ளும். என் பொம்மை சிறந்தது என்று சண்டையிட்டும் கொள்ளும். ஆனால் குழந்தைகள் வளர வளர அந்த சண்டையிடும் குணம் மறைந்து குழந்தைகள் பொம்மைகளை மறந்து தோழர்களாக ஒன்றாக விளையாடுவதை நாம் பார்க்கலாம்.பிறகு பொம்மைகளை குழந்தைகள் கண்டுக் கொள்வதே இல்லை.
   அந்தக் கோட்பாட்டில் அமைந்ததே சமயங்கள்.
   இருந்தும் பல மனிதர்கள் இன்னும் குழந்தையாகவே பொம்மைகளுக்கு அடித்துக் கொள்வதுப் போல் சமயங்களை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள். இது அனைத்து சமயங்களுக்கும் பொருந்தும்.
   நபிகளின் கோட்பாடே இறைவன் உருவமற்றவர் என்பது. அப்படியிருக்க உலகத்தின் ஆழ்ந்த உண்மையைச் சொன்னவரின் சமயத்தில் அறியாமை எப்படி புகுந்தது. அவரின் ஆழ்ந்தக் கருத்தை விடுத்து வேறு எதையோ அல்லவா பற்றிக் கொள்கிறார்கள் இன்று பலரும்.
   இது இஸ்லாத்தில் மட்டுமல்ல... என்னை நபியின் மொழிகள் ஆக்ரமித்தது போல, புத்த மொழிகளும் மிகவும் ஆக்ரமித்தது. அங்கையும் அறியாமை இருள் பரவிக் கிடக்கிறது.
   பிற சமயத்தவரைக் காட்டிலும் அவரவர் சமயத்தவர்களே அவ்வழியை சரியாகக் கடைப்பிடிக்காததினால் வந்த பிரச்சினைத் தான் இதன் காரணம் என்று நான் எண்ணுகிறேன்.
   ஏனெனில் என் தாயை மதிக்கும் நான் இன்னொரு தாயை இழிவாக நடத்த மாட்டேன். அதுப் போல் தான் சமயமும்.

   தவறிருப்பின் திருத்தவும்


   Delete
 17. அஸ்ஸலாமு அழைக்கும் ஆஷா...!

  மாஷா அல்லாஹ் அருமையான பதிவு..! தாவாவை நம் அன்றாட வாழ்கையில் எவ்வாறேல்லாம் எடுத்து செல்ல முடியும் என்பதை மிக தெளிவான முறையில் விளக்கி இருக்கே செல்லம்..!! ஜசாக்கல்லாஹு க்ஹைர்..!

  அல்லாஹ் மென்மேலும் உனக்கு மார்க்க அறிவை விசாலமாக்கி தருவானாக ஆமீன் ...!

  ReplyDelete
 18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  அன்பு சகோ ஆஷா.,

  மாஷா அல்லாஹ் நிகழ்கால ஒப்பிட்டுடன் எதார்த்த பதிவு.,

  == ஐந்து வசனம் கிடைத்த அபூபக்கர்(ரலி) அவர்களின் ஈமான் எவ்வாறு ஜொலித்தது??? ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட குர் ஆன் வசனங்களை
  வைத்துள்ள நம் ஈமான் பலவீனமாக ... = =

  உண்மையாகவே சிந்திக்க வைக்கும் வரிகள் சகோ.,
  அல்லாஹ் உங்கள் கல்வியறிவை விசாலமாகட்டும்...

  ReplyDelete
 19. @அன்பு சகோஸ் மாத்தியோசிக்கும் வகையறையாக்களுக்கு.,
  அதெப்படிங்க., நீங்க மட்டும் அதே கேள்விகளை எல்லோர்கிட்டையும் கேட்பீங்க பட் பதில் மட்டும் புதுசு புதுசா சொல்லணுமா...

  குறைந்த பட்சம் என்னைப்போன்றவர்களும் அறிந்துக்கொள்ளும் பொருட்டு உங்கள் கொள்கை குறித்து விளக்கும் ஒரு தளத்தை தொடங்கி எங்களுக்கு அழைப்பு விடுப்பீர்களா...?

  இங்கே என்னை போன்றவர்களிடம் உங்களுக்கு பதில் தேவை இல்லையென்பதால் விவாதிக்கும் எண்ணம் இருந்தால் நான் முஸ்லிம் வாருங்கள்.,

  உங்கள் சகோதரன்
  குலாம்

  ReplyDelete
 20. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. @univerbuddy,
   என்ன சகோ..., எல்லா பதிவிலும் போயி என் தளத்துக்கு வாங்க, என் பெயரை கிளிக் செய்ங்க, எனக்கு பதில் சொல்லுங்க ன்னு என்னதான் கூவி கூவி வித்தாலும் வியாபாரம் நடக்க மாட்டேங்குதா... சரி விடுங்க சகோ. உண்மையைக் கொண்டு பகுத்தறிவைக் கொண்டு எதாவது கேட்கப்பட்டாலும், பதிவாக எழுதப்பட்டாலும் பதில் சொல்லலாம்....ஒவ்வொரு பிளாக ஓப்பன் செய்து ஒரே மாதிரியான கேள்விகளை எத்தனை முறை நீங்களும் எழுதுவீங்க... நாங்களும் பதில் சொல்வோம் சொல்லுங்க.... Give us a break :)

   ஓக்கே.... உங்க கேள்விகளுக்கு வரலாம். பழைய குப்பையெல்லாம் கிளராம இந்தப்பதிவில், என் பின்னூட்டத்தில் எழுப்பப்பட்ட உங்களின் கேள்விகளுக்கு மட்டும் பதில் தர்றேன்...சரியா? கரெக்ட்டாதான் சொல்றீங்க... இஸ்லாம் எல்லாருக்காகவும்தான். அமெரிக்காகாரர் என்ன அமிஞ்சிக்கரைக்காரர் என்ன. எல்லாம் ஒன்னுதான். ஆனால் எல்லாருக்காகவும் தரப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர், ஏற்றுக் கொள்ளாதவர் என இரண்டு குழுக்கள் உள்ளன. அதில், ஏற்றுக்கொள்ளாதவர்கள், அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் பிரச்சினை இல்லையே.... ஏற்றுக் கொண்டவர்களின் நம்பிக்கையை சோதித்துப் பார்க்கும்படி, அவர்களின் உயிரினும் மேலான இறைத்தூதரை இப்படி கேவலமாகவா சித்தரிப்பது. அதில்தானே பிரச்சினை. அதற்காகத்தான் எதிர்ப்பு. புரிஞ்சதா?? Simple.

   அடுத்த உங்கள் குற்றச்சாட்டுக்கு பதில். எந்த வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை, எந்த இதழ்ல, எப்போ, யார், எந்த அறிஞரின் ஃபத்வாவை வைத்து, அது எந்த காலத்தில், எந்த காரணங்களுக்காக, யாருக்கு அப்படி ஒரு முடிவை தந்தது, அதன் மூல ஆதாரங்கள் எவை என எதுவுமே தெரியாமல், அதன் மேல் நான் எந்த முடிவையும் தர இயலாது.சரீங்களாங்ண்ணா??

   அட அதை விடுங்ண்ணா.... எங்க ஊர்ல வார்டு கவுன்சிலர் தேர்தல் நடந்தப்ப ஹிந்தி ஜாதியினரால் ‘தலித்’ அல்லது ‘சூத்திரன்’னு முத்திரை இடப்பட்ட ஒரு அண்ணன் போட்டியில நின்னாரு. எனக்கு ஓட்டு போடுங்கன்னு எங்க அப்பா, அண்ணன், தம்பி கையெல்லாம் கூட பிடிச்சி ஓட்டு கேட்டாரு. ஆனா எங்கூட்டுக்கு பக்கத்தூட்டுல இருக்கற கவுண்டர் வீட்டு வாசப்படி கூட மிதிக்கலிங்ண்ணா... அந்த கவுண்டரும் ஏதோ புழுவை மிதிக்கிற மாதிரி எங்க வூட்டுல இருக்கறவங்க அந்தண்ணனோட கை குலுக்கறதை பாக்கறாருங்ண்ணா.... அப்போ அந்த கவுண்டரும், ‘தலித்’ அண்ணாவும், பிறந்த, வளர்ந்த, பகுத்தறிந்து உணர்ந்த, வாழ்நாளில் கடைப்பிடிக்கும் ‘அந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்த்த’ மதத்துல சமத்துவம்ன்னா என்னங்ண்ணா??? நீங் சொல்லுங்ண்ணா...

   வர்ட்டா??
   :-)

   Delete
  2. oops.... ஒன் மினிட்... அது ‘ஹிந்தி’ ஜாதியினர் இல்லை.... ‘ஹிந்து’ மதத்தினர். தேன்க் யூ :)
   அப்புறம்ங்ண்ணா... உங்களுடைய எல்லா கேள்விகளையும் உங்க பதிவுல பதிச்சு வெச்சிருக்கீங்களே... சந்தோஷம்.... எங்க தரப்பிலிருந்து வரும் நியாயமான, உண்மையான பதில்களை ஏங்ண்ணா விட்டுட்டீங்க.... அப்பத்தானே வரும் தலைமுறை படிச்சு பக்குவமா நடந்துக்கும்??? என்ன சொல்றீங்?? :-)

   Delete
 21. அன்னு அவர்களே,

  எனது பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு பதில் சொன்னால் விவாதிக்க எதுவாக இருக்கும். இப்படி கேள்வியே இல்லாமல் பதில் கூறினால் மற்றவர்களுக்கு என்ன புரியும்? ஆரம்பத்தில் எனக்கும் கூட ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் நான் எனது பின்னூட்டதை குறித்து வைக்க வில்லை. அதனால் உங்கள் பதில்களைப் பற்றி கூறுவதற்கு ஒன்றுமே இல்லை.

  நேற்று எனது பதிவுகளை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. hits கூடியிருக்கிறது. பரவாயில்லை. எனது நோக்கம் நிறைவேறியிருக்கிறது.


  ReplyDelete
  Replies
  1. //எனது பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு பதில் சொன்னால் விவாதிக்க எதுவாக இருக்கும். இப்படி கேள்வியே இல்லாமல் பதில் கூறினால் மற்றவர்களுக்கு என்ன புரியும்? ஆரம்பத்தில் எனக்கும் கூட ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் நான் எனது பின்னூட்டதை குறித்து வைக்க வில்லை. அதனால் உங்கள் பதில்களைப் பற்றி கூறுவதற்கு ஒன்றுமே இல்லை.//
   சகோ, உங்களின் பின்னூட்டங்கள் இதோ வெளியாகி விட்டன. தரமான, தகுதியான, யாரையும் காயப்படுத்தாத, காழ்ப்புணர்ச்சியில்லாத, அதேநேரம் வீண் பேச்சாகவும் இல்லாத பின்னூட்டங்கள் இங்கே மறுக்கப்படாது. :)

   நேற்று எனது பதிவுகளை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. hits கூடியிருக்கிறது. பரவாயில்லை. எனது நோக்கம் நிறைவேறியிருக்கிறது. //
   corp.westworlds.com -- இந்த ஐபி இருக்கா? அல்லது, Omaha, NE -இயிலிருந்து வாசகர் வந்தார் என்றிருக்கிறதா?? ஏன்னா எனக்கு உங்கள் தளத்தை எட்டிப் பார்க்க இதுவரை நேரம் கிட்டவில்லை.... இனிமேலும் கிட்டுமா...தெரியாது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் -- பழமொழி நினைவுக்கு வருகிறது. :)

   Delete
 22. //உங்களுடைய எல்லா கேள்விகளையும் உங்க பதிவுல பதிச்சு வெச்சிருக்கீங்களே... சந்தோஷம்.... எங்க தரப்பிலிருந்து வரும் நியாயமான, உண்மையான பதில்களை ஏங்ண்ணா விட்டுட்டீங்க.... அப்பத்தானே வரும் தலைமுறை படிச்சு பக்குவமா நடந்துக்கும்//

  நீங்கள் எனது பின்னூட்டங்களை பலவற்றை பிரசூரிக்கவில்லை. அனானியாக வந்தால் உங்களால் பதில் கூற முடியாது என்று பதில் சொல்லி இருக்கிறீர்கள் அந்த பின்னோட்டம் தான் ஏன் தளத்தில் இன்னும் பாக்கி. அதையும் போட்டு விடுங்கள் என்கிறீர்களா? சரி செய்து விடுகிறேன்.

  சந்தோசமா?

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் எனது பின்னூட்டங்களை பலவற்றை பிரசூரிக்கவில்லை. அனானியாக வந்தால் உங்களால் பதில் கூற முடியாது என்று பதில் சொல்லி இருக்கிறீர்கள்//
   ஆமாம் சகோ. தரம் தாழ்ந்த பின்னூட்டங்கள் இங்கே பிரசுரிக்கப்பட மாட்டாது. அது யாரிடமிருந்து வந்தாலும் சரி. அனானிக்கும் பதில் கிடைக்காது. :)

   Delete
 23. உங்கள் பின்னூட்டத்தை எனது தளத்தில் ஒரு பின்னூட்டமாக சேர்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 24. //எல்லா பதிவிலும் போயி என் தளத்துக்கு வாங்க, என் பெயரை கிளிக் செய்ங்க, எனக்கு பதில் சொல்லுங்க ன்னு என்னதான் கூவி கூவி வித்தாலும் வியாபாரம் நடக்க மாட்டேங்குதா//

  அதுக்குப் பேரு தாங்க தாவா (அல்லது தவா வா?. சரியா தெரியலே!)

  //ஒவ்வொரு பிளாக ஓப்பன் செய்து ஒரே மாதிரியான கேள்விகளை எத்தனை முறை நீங்களும் எழுதுவீங்க... நாங்களும் பதில் சொல்வோம் சொல்லுங்க.... Give us a break :)//

  நீங்க ஒண்ணுல கூட ஒரு எழுத்துக் கூட பின்னூட்டம் போடலியே. அதுக்குல்ல break கேக்கிறீங்க?

  தமிழ் தெரியாத அங்கிலம் தெரிந்த முஸ்லிம்களுக்கு ஒரு சைட். நம்மாளுங்களுக்கு ஒரு சைட்.அதுக்கு மேல என்னால முடியாது. இனிமே அரபி கத்துகிட்டு அரபியிளையும் கேக்கலாம் தான். பாக்கலாம். அல்லா நாடினால் முடியும். நானும் ஒரு smiley போட்டுகிறேன். :)

  ReplyDelete
  Replies
  1. //அதுக்குப் பேரு தாங்க தாவா (அல்லது தவா வா?. சரியா தெரியலே!) //
   தாவாஹ் -ன்னாலும், தவாஹ்-ன்னாலும் இரண்டுமே சரிதான். ஏன்னு கேட்கறீங்களா??
   தாவாஹ் - இஸ்லாமிய அகராதிப்படி நேர்வழிக்கான அழைப்புப் பணி....சகோதர சகோதரிகளை வழிகேட்டில் இருந்து காக்கவும், நேர்வழியில் வாருங்கள் என மனதார விரும்பி அழைப்பதுவுமாகும்.

   தவாஹ் - உருது மொழியில் ‘பிணி தீர்க்கும் மருந்து’ என அர்த்தம். உள்ளத்தில் உள்ள நோய்க்கும் மருந்து தரவேண்டிய கடமை சக மனிதனுக்கு உண்டல்லவா.. அந்த விதத்தில் அதுவும் எங்களின் மீது கடமை. இரண்டுமே ஒரு மனிதன், இன்னொரு மனிதனை நேர்வழிக்கு இட்டுச் செல்லவே தேவை. உங்கள் வலைப்பூவுக்கு இட்டுச்செல்ல, இது இரண்டுமே தேவையில்லை :)

   சகோ, எப்படி தரமான, எந்த வயதினராலும், இனத்தினராலும், சங்கோஜமில்லாமல் படிக்க முடியுமோ அத்தகைய கமெண்ட்டைத்தான் இங்கே பிரசுரிப்போம் என்ரு சட்டமிருக்கிறதோ...அதே போல பகுத்தறிவு கொண்ட, பண்பட்ட, படிக்க கூசாத பதிவுகளுக்கும், அத்தகைய வலைப்பூக்களுக்கு மட்டுமே என் பின்னூட்டமும் :) ரைட்..?

   Delete
 25. வணக்கம்

  வல்லோன் பெயரால் தொடா்கின்ற
  வலையைக் கண்டு வியக்கின்றேன்!
  நல்லோன் செயலை இவ்வுலகம்
  நாளும் வணங்கிப் போற்றிடுமே!
  வல்லோன் என்று வன்முறையில்
  வாழ்தல் அறத்தின் எதிர்பக்கம்!
  இல்லோன் எளியோன் பசிபோக்க
  ஏற்ற பண்யே இறைத்தொண்டு!

  கவிஞா் கி.பாரதிதாசன்
  தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
  http://bharathidasanfrance.blogspot.fr/
  kavignar.k.bharathidasan@gmail.com
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
 26. மாஷா அல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான கட்டுரை அல்ஹம்துலில்லஹ்
  இதை மற்ற நண்ர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன். ஆனால், உங்களின் பெயரை சேர்க்க வில்லை மன்னித்து விடுங்கள்

  ReplyDelete
 27. மாஷா அல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான கட்டுரை அல்ஹம்துலில்லஹ்
  இதை மற்ற நண்ர்களுக்கும் பகிர்ந்து கொண்டேன். ஆனால், உங்களின் பெயரை சேர்க்க வில்லை மன்னித்து விடுங்கள்

  ReplyDelete