Tuesday, September 25, 2012

இஸ்லாமிய ஆண்மகன்!- எப்படியிருக்க வேண்டும்?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ...

என்னடா இது? இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரும்பி போயிடாதீங்க. இந்த பதிவு, ஒரு முஸ்லிம் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி! அதனால தான் பின்ன, எப்பவும் இஸ்லாத்தில் பெண்களுடைய உரிமைகள், கடமைகளை பத்தியே பேசிட்டு இருக்கோம். அதில உள்ள ஆண்களுடைய கடமைகளும், பெண்களுக்கு அவர்கள் மேல் உள்ள உள்ள உரிமைகள் பத்தி தெரிஞ்சுக்க வேண்டாமா?

ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும் தன்மகனையும் சமாளிக்குறதை பத்தி ரொம்ப பொலம்பிட்டு இருந்தாள் என் தோழி!  ஆனா, ஒரு பெரிய மிஸ்டேக் பண்ணிட்டாள்.... என்னன்னா, பொலம்பினது  தன் தம்பிக்கிட்ட! அவன் உடனே "அக்கா, டோன்ட் க்ரிப் அபௌட் திஸ்! இட் இஸ் ஒன்லி யுவர் ஜாப்"!! அப்படின்னான்! மவனே! வந்துச்சு பாருங்க கோவம்!

ஒரே ஒரு கேள்வி தான் அவனை கேட்டேன். கப் சிப். புள்ளை அதுக்கப்புறம் வாயே திறக்கல. இப்ப அதே கேள்வியை எல்லாருக்கும் கேட்கலாம்னு இருக்கேன்!

முஹம்மது நபி ஸல் அவர்கள் வீட்டிலிருக்கும்போது என்ன செய்வார்கள் தெரியுமா? மனித குலம் அத்தனைக்கும் மிகப்பெரிய தூது செய்தியைக்கொண்டு வந்து நமது அன்பு நபியவர்கள் வீட்டிலிருக்கும்போது, வீட்டை பெருக்குவதிலும், துணிகளை தைப்பதிலும் ஆட்டிடம் பால் கறப்பதிலும் உதவி செய்தார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா?! "உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே" என்ற ஹதீஸை எல்லோருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்!

ஆனா எத்தனை பேர் இதை கடைப்பிடிக்கிறீங்க சொல்லுங்க? வீட்டுக்கு வந்தவுடன், "நானே டயர்டா ஆஃபீஸ்ல இருந்து வந்திருக்கேன், என்னை தொந்தரவு பண்ணாத"ன்னு சொல்லாத ஆண்களை காட்டுங்க பாப்போம்! குளு குளுன்னு ஏஸியில உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் நீங்க, பொறுக்க முடியாத வெயிலில், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த நபி ஸல் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன?

வீட்டை நிர்வகிப்பதில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் கடமை, ஆணுக்கு அதில சம்பந்தமே இல்லைன்னு நினைப்பவர்கள் கொஞ்சம் நபி வழியையும் கடைப்பிட்க்கட்டும். இஸ்லாத்தை பொறுத்த வரை உங்கள் வேலையும் வீட்டில் தான் துவங்குகிறது. அந்த வீட்டை நடத்துவதற்க்கு தான் நீங்கள் வெளியே சென்று சம்பாதிக்கிறீர்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் வெளியில் சென்று பொருள் ஈட்டுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். அதுவும் பிள்ளை கொஞ்சம் அழுதாலும் போதும், எரிச்சல் வந்து விடுகிறது. 

ஒரு வீட்டில் உள்ள ஆண் தனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பொறுப்பாளி ஆகிறார். அவர்களின் உணவு, உடைமை, அனைத்திலும் செலவழிக்க வேண்டியது அவரது கடமையாகிறது. தனது தந்தை, மகன், கணவர், சகோதரர், இவர்களின் சம்பாத்தியத்தில் அப்பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. மாறாக, அப்பெண் எவ்வளவு தான் செல்வம் படைத்தவள் என்றாலும், வீட்டின்மீது செலவழிக்க அவளுக்கு கடமையில்லை, அவர்களுக்கு உரிமையும் இல்லை. எத்தகைய சூழ்நிலையிலும், ஒரு வீட்டுக்காக உழைத்து கொண்டு வருவது ஆணின் கடமையே. இதனால் தான் பெண்களுக்கு ஆண்களை அல்லாஹ் பொறுப்பாளி ஆக்கியுள்ளான்.

இவ்வாறு கடினப்பட்டு உழைத்துக்கொண்டு வந்த பணத்தை வீணடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம். இப்போது இந்த ஒரு பொறுப்பை பெரும்பாலானவர்கள் எப்படி தவறா பயன்படுத்துறாங்கன்னு பார்ப்போம்.


நம்மை சுத்தி நடக்குற விஷயங்களை பார்க்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சிக்கிறது நல்லது இல்லையா?

பெரும்பாலான முஸ்லிம் வீடுகள் பெற்றோர்கள் எப்படி இருக்காங்க தெரியுமா? வீட்டிலுள்ள ஆண்கள் நபிவழி பேணி தாடி வைக்கிறாங்களோ இல்லையோ, வேளா வேளைக்கு பள்ளி சென்று தொழுகிறார்களோ இல்லையோ பெண்கள் அபாயா போடக்கூடியவர்களாக இருக்காங்க. தன் மகள் பத்தாவது, பனிரென்டாவதோட படிப்ப நிறுத்தினா போதும்னு ஒரே புடியா புடிப்பாங்க. என்ன காரணம்னு கேட்டா: "ஆம்பளைங்க எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனா பொம்பளை புள்ளைக்கு ஒண்ணுன்னா ஊரு தப்பா பேசும்"னு வீட்டு பெரியவங்க சொல்வாங்க.

ஸுப்ஹானல்லாஹ்! இதுவா அல்லாஹ் நமக்கிட்ட கட்டளை? இந்த பதில்ல எங்கயாச்சும் தக்வான்னு ஒண்ணு இருக்கா? நாம முஸ்லிம் என்றால் என்ன அர்த்தம்? நம்முடைய வணக்கம், தொழுகை, ஈமான், செயல்கள், எண்ணங்கள் இது எல்லாமே அல்லாஹ் ஒருவனுக்காக மட்டும்தானே இருக்க வேண்டும்? இங்கே ஊர் தப்பா பேசும், பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும், ஆம்பளை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு பேசுவது வெட்ககேடு இல்லையா?

ஒரு பெண் தன்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டுதான் ஆடை அணிய வேண்டும் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளை; அதற்கு நாம் அடிபணிகிறோம். இதையல்லாது வேறு எந்த காரணம் சொன்னாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுமா? பெண்கள் கட்டுக்கோப்பாக இருக்கனும்னு கட்டளை போடும் ஆண்கள், தங்களுடைய ஒழுக்கத்தை பேணுவதில் கவனமா இருக்காங்களா? அவர்களின் பார்வைகளில் தவறிருந்து அதை சுட்டிக்காட்டினால் உடனே "ஆமா, அவ ட்ரெஸ் பண்ணினா, நாங்க அபப்டித்தான் பார்ப்போம், அதுக்குத்தானே பெண்களை புர்கா போட சொல்லிருக்கு?"ன்னு தெனாவெட்டா ஒரு பதில் வரும். அப்படியா? பெண்களை மட்டும்தான் புர்கா போட சொல்லிருக்கானா அல்லாஹ்? உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லையா? 
"நம்பிக்கை கொண்ட ஆண்களே, உங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள்" (அந்நூர், 24:30)
இதைவிட பெரிய விஷயம், அதுவும் குறிப்பா இந்த காலத்து இளைஞர்களிடம் அதிகமா காணப்படுவது வட்டி! பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க? நம்ம ஊருல க்ரெடிட் கார்ட் இல்லாத ஒரு இளைஞர காட்டுங்க பார்ப்போம்?
இஸ்லாத்தில கடன்படுவது என்பது அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று, அதிலிருந்து நமது நபி ஸல் அவர்கள் பாதுகாவல் தேடி அல்லாஹ்விடம் துவா செஞ்சாங்க. ஆனா இதை நம்மாளுங்க கிட்ட சொன்னா என்ன சொல்லுவாங்க?
'சும்மாதானே கிடைக்குது', 'ஆத்திர அவசரத்துக்கு உதவும்', 'வட்டி போட முன்னாடி கட்டிடுவேன்' இப்படி எத்தனையோ சப்பகட்டு கட்டுவாங்க. க்ரெடிட் கார்ட கொண்டு ஐ ஃபோனும், ஐ பேடும், 'சும்மா கிடைக்கிற' வங்கி கடனில் சொகுசு காரும் உங்களுக்கு தேவைதானா?  க்ரெடிட் கார்ட் என்பது கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு நம்மை ஆழ்துளை கிணற்றுல தள்ளிவிடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து, அது தெரிஞ்சிருந்தும் நம்ம சகோதரர்கள் அதில் சென்று விழுவது பெரிய வேதனை. கடன் என்பது நாம் மிகவும் முடியாத நேரத்தில் வாங்குவது, கடன் கொடுப்பதோ ஒரு தர்மச்செயல் போன்றது. நல்ல நிலையில் இருக்கும் நாம், பிறரிடம் தர்மம் வாங்குவதை விரும்பமாட்டோம், அப்படி இருக்கும்போது ஏன் இந்த க்ரெடிட் கார்ட் பின்னாடி ஓடனும்?

 இது போலத்தான் நம்முடைய சகோதரர்கள் பலர் இப்ப ரொம்ப சாதரணமா வங்கிகளிலும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிலும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வேலை செய்கிறார்கள். கல்யாணத்துக்குன்னு வரன் தேடும்போது தான் தெரியுது, நம் சமூகத்தவர்கள் வட்டியை எவ்வளவு தவறாக புரிந்துக்கொள்கிறார்கள் என்று. "வட்டி என்பது கந்து வட்டியைத்தான் குறிக்கும், சாதரணமா வங்கிகளில் நாம் வாங்கும் கடனுக்கு வட்டி கட்டலைன்னா அவன் எப்படி வங்கியை நடத்துவான்? இப்பல்லாம் வட்டியில்லாம வியாபரம் செய்யவே முடியாது'ன்னு சொல்றவங்களை பார்ப்பது நம் சமூகத்தில் ஒன்றும் அரிதல்ல.
 'யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்...' (அல்குர்ஆன் 2:275)
இதையெல்லாத்தையும் விட மிகவும் வேதனையான விஷயம் நம்முடைய வீடுகள்ல பெரும்பாலான ஆண்கள் தொழுவ பள்ளிக்கே போவதில்லை! தொழுவாதவங்களை தொழுங்க, தொழுங்கன்னு எவ்வளவு சொன்னாலும் பாங்கு சொல்லி முடிஞ்சதும் நைசா முசல்லாவை எடுத்துப்போட்டு வீட்டுலேயே தொழுது கடமை முடிஞ்சுதுன்னு நினைச்சுக்குறாங்க.

சுப்ஹானல்லாஹ்! சகோதரர்களே, நீங்கள் செய்யும் தவறை இனியாவது திருத்திக்கொள்ளுங்கள். நம் சகோதரரிகள் பலர் இப்பல்லாம் துணிவோடு புர்காவுடனும் நிகாபுடனும் வேலைக்கு செல்வதை பார்க்கிறோம். ஆனால் சகோதரர்கள் பலருக்கு இன்னுமே தாடி வைக்க தயக்கம். கேட்டா, ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. நிச்சயமா தாடி வைப்பது வாஜிபான காரியம். வெறும் சுன்னத்து தானேன்னு விட முடியாது. உங்கள் மேன்லினெஸை லேட்டஸ்ட் மாடல் செல்போன் வைத்திருப்பதிலும், பைக்கை வேகமாக ஓட்டுவதிலும், ஸ்டைலாக இருப்பதிலும் காட்டாதீர்கள்! நபி வழியை அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்க்காக மட்டுமே கடைப்பிடியுங்கள். உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள் நபிவழிபடி தான் நடந்துக்கொள்கிறோமா? அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடந்துக்கொள்கிறோமா என!  உங்களை நோக்கி கேள்விகணைகள் வரும் முன்பே உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் ஆண் தன் தோற்றத்திலும், ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.

இதை எனக்கும் ஒரு படிப்பினையாக்கிக்கொள்கிறேன். மார்க்கத்தில் பெண், ஆணுக்கு அடிமையில்லை, ஆண், பெண்ணுக்கு அடிமையில்லை. ஆனால் அல்லாஹ் இட்ட கட்டளைக்கிணங்க பெண்களாகிய நாம் திருமணத்துக்கு முன் நம் வலீயாகிய தகப்பனாருக்கு பணிந்து நடக்கிறோம். அதுபோல திருமணத்துக்கு பின் நம் கணவருக்கு பணிகிறோம். ஏனெனில் அவர்களை அல்லாஹ் நமக்கு பொறுப்பாளர்களாக்கியிருக்கிறான். இதை புரிந்து கொண்டு, நமது வீடுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அல்லாஹ் ஒருவனுக்காக அன்றி வேறெதற்காகவும் இல்லை என்ற நிய்யத்தின் படி நடக்க பழகிக்கொள்ள வேண்டும்.

உங்கள் சகோதரி
நாஸியா

45 comments:


 1. இதைவிட பெரிய விஷயம், அதுவும் குறிப்பா இந்த காலத்து இளைஞர்களிடம் அதிகமா காணப்படுவது வட்டி! பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க? நம்ம ஊருல க்ரெடிட் கார்ட் இல்லாத ஒரு இளைஞர காட்டுங்க பார்ப்போம்?
  //


  க்ரெடிட் கார்ட் எனக்கு இல்லை ...;சகோ உண்மை தான்

  ReplyDelete
 2. assalamu alaikum... arumaiyana pahirvu..

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  இஸ்லாமிய ஆண்கள் எப்படி எல்லாம் இருக்ககூடாது
  என்ற நல்லதொரு பதுவு

  சகோ நீங்க சொன்னது உண்மைதான்
  தற்கால நவ உலகில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களை வெறும் பெயரில்
  மட்டுமே இருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்
  இதை சொல்லும் நான் கூட

  இஸ்லாம் -ஈமான்
  இன்று ஈமான் பல பாதைகளில் பல நிறங்களாய் பயணிக்கிறது மறுக்க முடியாத உண்மை

  நீங்க சொன்ன எவ்வளவோ விஷயங்கள் அப்பட்டமான உண்மைகள்

  பெயரில் நாம் இஸ்லாமியன் என்று உறக்க சொல்வதைவிட
  இஸ்லாமியனாய் வாழ முபடுபவனே உண்மையான இஸ்லாமியன்


  நல்ல பதிவு சகோ


  வஸ்ஸலாம்

  ReplyDelete
 4. நாஸியா அருமையாக எழுதியிருக்கீங்க..இன்று காலை தான் இது பத்தியெல்லாம் யோசிச்சுட்டிருந்தேன் இப்போ உங்கள் எழுத்தை கண்டதும் ஆச்சரியம்.நீங்க வட்டி பற்றி சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி, ஜெஸக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
 6. இந்த வழி முறைகள் இஸ்லாத் ஆண் மகன் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பொருந்தும் வண்ணமே இருக்கிறது. அருமையான பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து ஊக்கமளித்து வருவதற்கு மனமார்ந்த நன்றி சகோ..

   Delete
  2. சகோதரரே.. இஸ்லாம் முஸ்லீம்ஙளுக்காக கொடுக்கபட்ட மார்கம் அல்ல, அது மணிதர்களுக்காக கொடுக்கப்பட்டது....மணிதன் ஏண் படைக்கப்பட்டான் எப்படி வாழவேண்டும் என்பதை அதில் இறைவன் சொல்லிரிக்கிறான்...
   அதன்படி வாழ்ந்துகாட்டியவர் தான் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்.... நானும் இந்து தான்... இந்த உண்மையை தெறிந்த பிறகு நான் இஸ்லாதை பின்பற்ற ஆறம்பித்தேன்...இப்ப நானும் ஒரு முஸ்லிம்..

   Delete
 7. வ அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு..

  மாஷா அல்லாஹ்..அருமையான ஆக்கம் சகோ..

  சற்று உரிமையோடு சகோதரர்களுக்கு குட்டு விழுந்திருக்கிறது..

  மார்க்கத்தில் தெளிவு பெற்றவர்களுமே, தன் வீட்டில் பெண்களுக்கு ஒத்தாசை செய்வதை சற்று கௌரவ குறைச்சலாகத் தான் கருதுகின்றார்கள்..

  இதை பார்த்த பின்பாவது வீட்டில் பெண்களுக்கு முடியாத நேரத்தில் உதவிகள் செய்ய சகோதரர்கள் முன்வர வேண்டும்..:)

  வட்டி பற்றி சொன்னது மிக சரியே..இவ்வுலக வாழ்க்கை வசதிக்காக இச் செயல்களை செய்பவர்கள், மறுமை வாழ்க்கையை நினைத்து பார்த்து அஞ்சி கொள்ளட்டும்..

  //ஒரு முஸ்லிம் ஆண் தன் தோற்றத்திலும், ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.//

  நல்லதொரு பதிவை கொடுத்தமைக்கு நன்றி சகோ..:-)
  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும்
  இன்று முஸ்லிம்களில் அதிகமான விவாகரத்துகள் வீட்டில் நடைபெறும் சின்ன சின்ன விஷயங்களுக்கே!
  ”அல்லாஹ் அனுமதித்தவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது தலாக்” (நபிமொழி)

  இஸ்லாம் கூறிய முறையில் நம் வாழ்க்கை அமைந்தால் இப்பாவத்துகுரியவர்களாக இருக்க மாட்டோம். ஜசாக்கல்லாஹ் சிறந்த ஒரு ஆக்கம் . இன்ஷால்லாஹ் சிந்தித்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம் .

  ReplyDelete
 9. பதிவ படித்துவிட்டு கருத்திடுகிறேன்....

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  நாசியா.. செம பதிவு..

  மாஷா அல்லாஹ்...

  மார்க்க விஷயங்கள் குறித்தவரையில் பெண்களை நினைத்து ரொம்பவே பெருமைப்படவேண்டும்.. ஆண்களை விட நேர்த்தியாக இறைவனின் கட்டளையை நிறைவேற்றிவிடுகிறார்கள்...

  ஆண்களின் நிலை தான் கேள்விகுறி.. அவர்களும் தம் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த பதிவு ஒவ்வொரு ஆண்களையும் சுயபரிசோதனை செய்ய வைக்கும். தாம் இறைகட்டளை ஏற்று நபிவழி பின்பற்றும் உண்மையான நூறு சதவீத முஸ்லீம் தானா என்ற கேள்வியை எழுப்பி அவர்களின் நிலையை மாற்ற வைக்கும்...

  அருமையான பகிர்வுக்கு நன்றி நாஸியா :-)

  வாழ்த்துகள் மா

  ReplyDelete
 11. ம்ம்....ஆண்களுக்கான பதிவா. கருத்தை அழகாக சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. எல்லோரும் இப்படியா ??? இல்லையே நீங்க வாழும் சமூகத்தை வைத்து இவ்வாறு எல்லாரையும் குறிப்பிடுவது வேதனை அளிக்கிறது . இருப்பினும் நல்ல ஒரு ஆக்கமே . அல்லாஹ் மேலும் உங்களுக்கு அருள் பலிப்பனாக .
  """ இதைவிட பெரிய விஷயம், அதுவும் குறிப்பா இந்த காலத்து இளைஞர்களிடம் அதிகமா காணப்படுவது வட்டி! பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க? நம்ம ஊருல க்ரெடிட் கார்ட் இல்லாத ஒரு இளைஞர காட்டுங்க பார்ப்போம்?"""
  "" இது போலத்தான் நம்முடைய சகோதரர்கள் பலர் இப்ப ரொம்ப சாதரணமா வங்கிகளிலும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிலும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வேலை செய்கிறார்கள்""
  இதனை பொறுத்தவரை "வங்கிகளிலும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிலும் கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் வேலை செய்கிறார்கள்" அது வங்கியோ இன்சுரன்ஸ் கம்பனியோ வட்டி என்ற காரணத்தால் ஹராமாகும் அது ஒரு புறம் இருக்க இந்த தொழில் மட்டுமா ஹராம்??? எங்களில் எத்தனை பேருக்கும் தொழிலின் ஹராம் ஹலால் தன்மை தெரியும் ? எடுத்த எடுப்பில் வங்கியோ இன்சுரன்ஸ் கம்பனியோ இல்ல தானே அப்போ ஹராம் இல்ல எண்டு சொல்லுபவர்களும் உண்டு . சில நிறுவனகள் அதன் காலம் முழுவதும் அதன் முலதனம் முழுவதும் வங்கியின் கடனாகவே இருக்கும் இவ்வாறான நிருவனகளில் தொழில் செய்யலாமா? ( ஏன் வங்கி யா மட்டும் பேசுறிங்க ?) நான் அறிந்த மட்டில் எந்த ஒரு நிறுவனத்தில் அதன் முழு மூலதனத்தில் 31 % மேல் வட்டி அல்லது தடுக்கப் பட்ட வழியில் கிடைக்கப் பெறுகின்றதோ அவ்வாறான நிறுவனங்களில் தொழில் செய்யவும் முடியாது . தற் காலத்தில் பல் தேசியக் கம்பெனிகளே அதிகமாக இருக்கின்றன அக தொழில் செய்யும் போது கொஞ்சம் ஜாக்கிரதை ??? 'யார் வட்டி வாங்கித் தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்டவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாக) எழ மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கி இருக்கிறான்...' (அல்குர்ஆன் 2:275)
  ""தாடி வைக்க தயக்கம். கேட்டா, ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. நிச்சயமா தாடி வைப்பது வாஜிபான காரியம். ""
  இதனை வலியுருதாததிர் இதில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றது . , ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. உண்மையாகவே இவ்வாறு இருப்பின் தாடி வைக்காது விடுவதில் குற்றம் இல்லையே (???)
  ""ஒரு முஸ்லிம் ஆண் தன் தோற்றத்திலும், ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.""
  தோற்றம் என்றால் உடையா ??? செயல் என்றால் அக்காலத்தில் செய்த அணைத்து விடயுமாமா? கலாசாரம் அப்படியே பின்பற்றுவதா??

  ReplyDelete
  Replies
  1. //எல்லோரும் இப்படியா ??? இல்லையே நீங்க வாழும் சமூகத்தை வைத்து இவ்வாறு எல்லாரையும் குறிப்பிடுவது வேதனை அளிக்கிறது .//

   நாங்கள் வாழும் சமூகம் என எந்த அளவுகோலை வைத்து சொல்றீங்க ரிஹாம்? இனத்தின் அடிப்படையிலா அல்லது வட்டார அடிப்படையிலா? (நீங்க இலங்கைன்னு நெனைக்கிறேன்)

   ஆல்ரைட்.. இந்த பதிவு எல்லாருக்குமானது அல்ல! மார்க்கத்தின் வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கானது மட்டும்! :-))) சோ வேதனை படதேவையில்ல :-)

   _____
   //அதன் முலதனம் முழுவதும் வங்கியின் கடனாகவே இருக்கும் இவ்வாறான நிருவனகளில் தொழில் செய்யலாமா?//

   இங்கே எந்த வேலை ஹராம் ஹலால் என்பதை ஹதீஸ்ஸின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். இந்த ஹதீஸ் பாருங்க...

   இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சொன்னார்கள் : முஹம்மது (ஸல்) அவர்கள் வட்டியைச் சாப்பிட்டவன், அதை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியாக இருப்பவன், அதை எழுதுபவன் அனைவரையும் சபித்துள்ளார்கள் நூல்; திர்மிதி, நஸாயி.

   ஆக வட்டி கணக்கெழுதுவதற்கும் வட்டி வாங்குபவருக்கும் கொடுப்பவருக்கும் நாம் துணையாக சாட்சியாக இருப்பதும் ஹராமான செயல். ஹலால் ஹராம் தன்மையை அதற்கு நாம் எவ்வாறு துணைபோகிறோம் என்பதை வைத்து தான் நாம் தீர்மானிக்க வேண்டும்.

   ___

   //இதனை வலியுருதாததிர் இதில் சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றது . , ஆஃபிஸ்ல ட்ரெஸ் கோட்னு சொல்லிடுவாங்க. உண்மையாகவே இவ்வாறு இருப்பின் தாடி வைக்காது விடுவதில் குற்றம் இல்லையே (???)//

   சுன்னத்தான விஷயங்களை புறக்கணிப்பது குற்றம் இல்லையா சகோ? இணைவைப்பாளருக்கு மாறு செய்யும் படி தாடி வளர்க்க சொல்லி அதிகமாக வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தான செயலை எப்படி தன் சுயநலத்துக்காக விட்டுகொடுக்க முடியும்? அப்படியென்றால் ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நபிவழியை புறக்கணிக்கவல்லவா வேண்டும்?

   நடைமுறைக்கு ஒத்துவராது. ஆபிஸ் ட்ரஸ் கோட் ன்னு ஒன்னு இருக்கு என சொல்லி பெண்களும் அல்லாஹ்வின் கட்டளையையும் நபி சொன்ன வழிமுறைகளையும் மீறினால் ஹிஜாப் அணீயாது, ஹிஜாப் கடைபிடிக்காது விடுவதில் குற்றம் இல்லையே என சொல்வோமா? இல்லை தானே :-)

   மேலும் பல பெரிய நிறுவனங்களில் வேலைபார்க்க கூடிய எம் சகோதர்கள் சுன்னத்தான வழியை கடைபிடித்துதான் வருகிறார்கள்.
   _____
   //தோற்றம் என்றால் உடையா ??? செயல் என்றால் அக்காலத்தில் செய்த அணைத்து விடயுமாமா? கலாசாரம் அப்படியே பின்பற்றுவதா??//

   நமக்கு எது வழியுறுத்தப்பட்டதோ அதை பின்பற்ற வேண்டும். கடினமான மார்க்கம் அல்ல இஸ்லாம். எல்லாமே எளிமையானவை தான். நான் ஒட்டகத்தில் தான் பயணம் செய்தேன்.. நீயும் அப்படியே போ என நபி (ஸல்) கட்டளை இடவில்லை... நான் 3 நாட்களுக்கு மேல் வயிறார சாப்பிட்டதில்லை... நீயும் அப்படியே இரு என சொல்லவில்லை! ரொம்ப சிம்பிள்... நாம் செயல் மார்க்கத்தின் அடிப்படையில் இருக்கா என பார்க்க வேண்டும். அவ்வளவே!

   நம் நடைமுறைக்கேற்ப மார்க்கத்தின் அளவுகோல் உடன், அல்லாஹ்வின் கட்டளை எதுவோ அவற்றை ஏற்று, நபியின் வழியில் செயல்பட அல்லாஹ் உதவிபுரிவானாக..

   Delete
  2. அஸ்ஸலாமு அழைக்கும். உங்களின் பதிலுக்கு நன்றி ஜசகல்லாஹ் விவாதத்துக்காக கருத்தை இட வில்லை

   வட்டார அடிப்படை

   ""இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சொன்னார்கள் : முஹம்மது (ஸல்) அவர்கள் வட்டியைச் சாப்பிட்டவன், அதை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியாக இருப்பவன், அதை எழுதுபவன் அனைவரையும் சபித்துள்ளார்கள் நூல்; திர்மிதி, நஸாயி.""
   உதாரணமாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப் படுகிறது . அதன் மூலதனமாக அந் நிறுவனத்தின் உரிமையாளர் வங்கி கடன் பெறுகிறார் . இந்த நிறுவனத்தில் தொழில் செய்யலாம் என்று நீங்கள் சொல்லுகிரிர் (?)
   அத்தோட அந்த நிறுவனம் ஆண்டு தோறும் தனது வளர்சிக்காக அதன் அவ் வருடத்துக்கான மொத்த மூலதனத்தின் பெரும் (50 %) பங்கு கடன் பெறுகிறது எனில் இந்நிறுவனத்தில் தொழில் செய்ய முடியுமா??
   அதோடு ஏதும் நிறுவனத்தின் முலதனகள் ( பங்குகள் ) 31 % விட அதிகமாக இஸ்லாமிய வறையிட்க்கு இறக்கு அப்பாற்ட் பட்ட முறையில் ( காம்ப்ளிங் , மது , சூது ) கிடைக்கும் எனில் அந்நிறுவனத்தில் தொழில் செய்யலாமா?

   ""சுன்னத்தான விஷயங்களை புறக்கணிப்பது குற்றம் இல்லையா சகோ? இணைவைப்பாளருக்கு மாறு செய்யும் படி தாடி வளர்க்க சொல்லி அதிகமாக வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தான செயலை எப்படி தன் சுயநலத்துக்காக விட்டுகொடுக்க முடியும்? அப்படியென்றால் ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நபிவழியை புறக்கணிக்கவல்லவா வேண்டும்? ""
   சுய நலம் அல்ல அது நிறுவன கட்டளை எனில் அதை செய்வதில் தவறு இல்லை . தாடிக்காக தொழில்லை விட சொல்லவில்லை இஸ்லாம் .

   ""அல்லாஹ்வின் கட்டளையையும் நபி சொன்ன வழிமுறைகளையும் மீறினால் ஹிஜாப் அணீயாது, ஹிஜாப் கடைபிடிக்காது விடுவதில் குற்றம் இல்லையே என சொல்வோமா? இல்லை தானே :-)"""
   இதுவேறு தாடி வேறு இரண்டையும் ஒன்றாய் பார்க்க வேண்டாம் . தாடிக்கான காரணம் வேறு இது வேறு . நான் பல்கலைகழக மாணவன் நானும் கூட தாடி வளர்த்து தான் உள்ளேன் எனினும் நியாயமான காரணம் இருப்பின் அதில் தவறு இல்லையே . அவர் தாடி வைக்க விரும்புகிறார் எனினும் அவருக்கு அதற்கான வசதி இல்லை எனில் அல்லாஹ் போதுமானவன் அவருக்கு .

   """நம் நடைமுறைக்கேற்ப மார்க்கத்தின் அளவுகோல் உடன், அல்லாஹ்வின் கட்டளை எதுவோ அவற்றை ஏற்று, நபியின் வழியில் செயல்பட அல்லாஹ் உதவிபுரிவானாக.."""
   இங்கு "நபியின் வழி' எனக் குறிபிட்டுளிர் அது சுன்னாஹ் வா ஹதீஸ் ஆ?

   Delete
  3. \உதாரணமாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப் படுகிறது . அதன் மூலதனமாக அந் நிறுவனத்தின் உரிமையாளர் வங்கி கடன் பெறுகிறார் . இந்த நிறுவனத்தில் தொழில் செய்யலாம் என்று நீங்கள் சொல்லுகிரிர் (?)
   அத்தோட அந்த நிறுவனம் ஆண்டு தோறும் தனது வளர்சிக்காக அதன் அவ் வருடத்துக்கான மொத்த மூலதனத்தின் பெரும் (50 %) பங்கு கடன் பெறுகிறது எனில் இந்நிறுவனத்தில் தொழில் செய்ய முடியுமா??
   அதோடு ஏதும் நிறுவனத்தின் முலதனகள் ( பங்குகள் ) 31 % விட அதிகமாக இஸ்லாமிய வறையிட்க்கு இறக்கு அப்பாற்ட் பட்ட முறையில் ( காம்ப்ளிங் , மது , சூது ) கிடைக்கும் எனில் அந்நிறுவனத்தில் தொழில் செய்யலாமா?\


   முதலில் ஒரு விஷயம். மார்க்க அடிப்படையில் ஏதேனும் கேள்விகளோ ஐயங்களோ இருந்தால் அதை மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்பதே நபிவழி. அதனால் நானும் பெரும்பாலும் எந்த சந்தேகம் இருந்தாலும் இந்த தளத்தில் தெளிவுபடுத்திக்கொள்வேன் http://www.islamqa.com/en/ref/83999/company%20that%20gets%20loans%20for%20funding

   தொழில் செய்யலாம் என்றால் வேலை செய்யலாமா என்று கேட்கிறீர்களா? அவர்களுடைய தொழில் ஹராமாக இல்லையென்றால் செய்யலாம். அனுமதி இருக்கிறது. உதாரணத்துக்கு துணிமணிகள் வாங்கி விற்கும் நிறுவனம் தன் முதலீட்டை வங்கிக்கடனின் மூலம் பெற்றது என்றாலும் அதில் சேல்ஸ்மேனாக வேலை செய்வது ஹராமாகாது. ஆனால் அத்தகைய நிறுவனங்களை சாத்தியம் இருந்தால் தவிர்க்கலாம்.

   மது, சூதாட்டம், ஹராமான உணவு விற்கும் இடங்கள்‍, இவற்றில் வேலை செய்வது ஹராம் என எல்லாரும் அறிவார்கள். நமது சகோதரர்கள் நேரடியாக ஒரு மதுகடையில் வேலை செய்யவில்லை என்றாலும் மதுவிற்கும் ஒரு ஹோட்டலில் மேனேஜராக இருப்பது மார்க்கத்துக்கு எதிரானதல்லவா? ஹலால், ஹராம் தொழில்களை இந்த சின்ன பின்னூட்டத்தில் விவரித்துவிட முடியாது. அல்லாஹ் நாடினால் குரான், ஹதீஸ் மற்றும் ஆதாரப்பூர்வமான ஃபத்வாக்களைக்கொண்டு தொடர்பதிவு ஒன்று எழுதலாம். இன்ஷா அல்லாஹ்.

   2. . அவர் தாடி வைக்க விரும்புகிறார் எனினும் அவருக்கு அதற்கான வசதி இல்லை எனில் அல்லாஹ் போதுமானவன் அவருக்கு .

   இதில் மறுப்பேதும் இல்லை. நான் இந்த இடுகையில் குறிப்பிடுவது அலுவலகத்தில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரே காரணத்தை காட்டி தாடி வைக்காமல் இருப்பவர்களைத்தான். கலர் கலராக முடியை ஆக்கிக்கொண்டும், டிசைன் டிசைனாக கிருதா, தாடி வைத்திருப்பவர்களால் ஆபிஸ் செல்ல முடிந்தால் நபிவழியை கடைப்பிடிக்கும் நமக்கு என்ன பயம்? அது போல வளைகுடா நாடுகளில் வேலை செய்பவர்கள் கூட தாடி வைக்க மாட்டேன் என்கிறார்களே? அதையும் விடுங்கள் சொந்த தொழில் செய்பவர்கூட தாடி வைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்?

   பாரிக்கல்லாஹு ஃபீக்

   Delete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ நாசியா..! அட அட அட சூப்பர் பதிவுங்க பின்னிட்டீங்க போங்க..... :))

  வீட்டு வேலை என்றாலே எல்லா வேலையும் பெண்கள்தான் செய்ய வேண்டும்..! ஆண் என்பவன் பெண்ணுக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருக்க தேவை இல்லை என்று அசால்டாக (ஆணாதிக்க திமிருடன்) இருப்பவர்களும் உண்டு.. அது போன்ற ஆண்களுக்கெல்லாம் நறுக்கென்று தலையில் கொட்டு வைத்தது போல் இருக்கும் உங்கள் பதிவை பார்த்தால்..! அதிலும் மனிதர்குல மாணிக்கம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்... அவர்களே வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருந்தார்கள் என்பதை படிக்கும் உண்மையான முஸ்லிம் ஆண்கள் இனிமேல் மனைவிக்கு, தாய்க்கு, சகோதரிக்கு உதவியாக இருக்க போட்டி போட்டு வேலை செய்வார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயம் இல்லை..!! :)

  வஸ்ஸலாம்..!

  ReplyDelete
 14. (ஸலாம் சகோ...இந்த பின்னூட்டம் போட்டபோது பதிவாகவில்லை...நெட் டவுன் எனகாட்டியது..
  ஒருவேலை வராமல் இருந்தால், இதை எனது பின்னூட்டமாக வெளியிடுங்கள்...

  http://www.islamiyapenmani.com/2012/09/blog-post_25.html )

  _________

  ஸலாம் சகோ..
  ஒரு அருமையான பதிவை தந்ததற்கு முதலில் நன்றி...
  அல்லாஹ் உங்களது அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்...

  பொருத்தமான கருத்துக்களும்,அதை உணர்த்தும் குரான் வசனங்களுமாய் கட்டுரை ஏகத்துக்கும் மின்னுகிறது...மாஷா அல்லாஹ்....

  இங்கு குறிப்பிட்டு இருக்கும் கருத்துக்கள் பெரும்பகுதி ஏற்புடையதே....

  வேலைக்கு செல்வோர் ஏசியில் வேலை பார்த்துவிட்டு,வீட்டில் ஓய்வது குறித்து சொல்லி இருந்தீர்கள்...

  அல்லாஹ் எனக்கு ஏசி ரூமில்தான் வேலையை கொடுத்துள்ளான் சகோ,நன்றிக்குறியவன்.. ஆனால் அங்கு உடலுக்கு வேலை துளியும் இருக்காது....8 மணி நேரமும் மூளைக்குத்தான் வேலை..மூளைக்கு மட்டும்தான் ஸ்ட்ரெஸ்...

  அது உடல் உழைப்பைக்காட்டிலும் கடினமானது...அதை கடந்து வருபவர்கள் வீட்டில் ஓய்வது இயல்புதான்..ஆனால் இது 100சதம் எல்லோருக்கும் இருக்காது...அல்லது எல்லா நேரமும் இருக்காது....

  அப்படி களைப்புடன் வருபவனை கனிவுடன் கவனிக்கவேண்டியது மனைவியின் கடமை..பலரும் வல்லுன்னு மனைவி மேல விழக்காரணம்...அவரது சூழல் தெரியாமல் வந்ததும் வராததுமா நொய் நொய்யின்னு படுத்திருவாங்க...அதான்....

  அதே சமயம் நல்லமுறையில் வீடு திரும்பினால் வீட்டு வேலைகளில் பங்கெடுக்கவேண்டியது கணவனின் கடமை..

  அடுத்து க்ரெடிட் கார்ட்..இது..பெரும்பாலும் நீங்கள் சொல்வது போல்தான் பயன்படுத்தப்படுகிறது...ஆனால் நானும் பயன்படுத்துகிறேன்...5 ஆண்டுகளாக..பெருமைக்காக சொல்லவில்லை...மாஷா அல்லாஹ் இதுவரை வட்டி கட்டியதில்லை...

  தேவைக்கு பயன்படுத்திவிட்டு..சம்பளம் வந்ததும் முதலில் கொடுக்கும் பணம் கார்டுக்காகத்தான் இருக்கும்...கத்தியையும் நெருப்பையும் கவனமாக கையாண்டால் கை பாதிப்படையாது....கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான்...
  தாருமாறா புடிச்சா....அவ்ளோதான்..நாஸ்தி பண்ணிடும்...

  அடுத்து தொழுகை...நீங்கள் சொன்ன வீட்டுத்தொழுகையில் பலநேரம் நானும் பொருந்திப்போகிறேன்...இன்ஷா அல்லாஹ் அத மாற்ற முழுமையாக பள்ளியில் தொழ முயன்றுவருகிறேன்...

  எனக்காகவும் துஆ செய்யுங்கள்..

  வாழ்த்துக்கள் - இஸ்லாமிய பெண்மணி குழும உறுப்பினர்களுக்கு..
  உங்களது ஊக்கமும் எழுத்தும், போற்றுதலுக்குறியது...

  அல்லாஹ் உங்களது செயல்களை பொருந்திக்கொள்வானாக...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்

   நிச்சயமாக ஏஸியில் வேலை செய்வதால் அதில் எந்த ஒரு சிரமும் இல்லை என்று சொல்லவில்லை. நானும் வேலை செய்திருக்கிறேன், பெண் என்பதால் நிறைய சலுகைகளை அனுபவித்திருக்கிறேன் (ஐந்து மணிக்கெல்லாம் டாண்ணென்று கிளம்பி விடுவது, முடியவில்லையென்றால் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வாங்குவது, இப்படி) ஆனால் ஆண்கள் அவ்வளவு சுலபமாக தப்பித்துவிட முடியாது என அறிந்தவளே. இன்றைய காலத்தில் மன அழுத்தம் கொடுக்கும் வேலைகளே அதிகம். கணவன் வீட்டுக்கு வரும்போது இன்முகத்தோடு ஸ்லாம் சொல்லுவது மனைவிகள் கடமை. இதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் நிச்சயமாக நாம் படும் கஷ்டமெல்லாம் நம் நபி ஸல் அவர்களும் அவர்களுடைய சஹாபாக்களும் பட்டவை முன் ஒன்றும் இல்லை என்பதே.

   வட்டியே கட்டவில்லை என்றாலும், க்ரெடிட் கார்ட் வைத்திருப்பது வட்டி என்ற ஒன்றை ஆமோதிப்பது போன்றல்லவா? அதை தவிர்த்துவிடுங்கள் சகோதரர்.

   ஜஸகல்லாஹு க்ஹைர்..

   வஸ்ஸலாம்

   Delete
 15. அஸ் ஸலாமு அலைக்கும் நாஸியா....,
  பின்னீட்டீங்க.... :)

  உண்மையிலேயே கிரெடிட் கார்டு எத்தனை பெரிய ஒரு பகிரங்க வட்டி வியாபாரம் என்று யோசித்துப் பார்த்தால்தான் புரியும். அதனால் நிம்மதியை, ஆரோக்கியத்தை, குடும்பத்தை ஏன் வாழ்க்கையே இழந்தவர்கள் எத்தனை எத்தனை பேர்.... சுப்ஹானல்லாஹ்.... அத்தோடு நில்லாமல் மறுமையிலும் வந்து வேதனை செய்யக்கூடிய இழிவல்லவா அது.... ப்ச்.... மக்கள் புரிந்து கொண்டால் சரி.

  இந்த கட்டுரையை ஆங்கிலத்துல மொழி பெயர்த்தாலும் எங்க ஊட்டுக்காரருக்கு தந்து படிக்க சொல்லலாம்.... ம்ம்.... நான் வேலையா இருக்கும்போது குழந்தைகளை பார்த்துக் கொள்வதும், காலையில் வேலைக்கு கிளம்பும் பல சமயங்களில் அவர்களுக்கு குளிக்க வைப்பதும், உணவு ஊட்டி விடுவதும், துணி போட்டு விடுவதும், இரவில் தூங்க வைப்பதும் என மெயின்ன்ன்ன்ன்ன்ன் ஜாபையே அழகாக என்னை தொந்தரவு செய்யாமல் செய்வதால்.... பரவாயில்ல... இந்தக் கட்டுரை அவருக்கில்ல :)) ஹி ஹி ஹி :))

  மிக அழகான ஆழமான கட்டுரை நாஸியா. பாரகல்லாஹு ஃபீஹ்
  வஸ் ஸலாம்.

  ReplyDelete
  Replies
  1. மாஷா அல்லாஹ்.. மாஷா அல்லாஹ்.. இது ரொம்ப பெரிய விஷயம். எனக்கு தெரிஞ்சு பெரும்பாலான சகோதரிகளுக்கு பிள்ளை வளர்ப்பதிலே தான் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டையே வருது. பிள்ளையை வளர்ப்பதில் தாய்க்கு தான் பெரும் பங்கு இருந்தாலும் தகப்பனுக்கு கடமையே இல்லை போன்று தான் நடப்பவர்கள் தான் அதிகம். அலுவலக்கத்தில் இருந்து வீடு வரும்போது அசதியாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் பிள்ளை எதற்க்காகவோ அழுதால் எரிந்து விழும் தகப்பன்மார்களை கண்கூடாக பார்த்திருக்கிறேன். பிள்ளைகள் வளரும் பருவத்தில் தாய், தகப்பன் இருவருமே பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்.

   Barikallahu Feek

   Delete
 16. காலமெல்லாம் உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது அதிகமாகவே உணர்கின்றேன்.
  “நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைக்க விரும்புகின்றேன்” என வாய் புலம்ப அந்த மூதாட்டி எனது வாயினை பொத்தி எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது என்று என்னை அமைதி படுத்துகிறாள் .
  காலமெல்லாம் நான் அவளுக்கு கொடுத்த ஆறுதல் ….!

  அவளின் தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி எனக்கு தந்த ஆறுதல் வார்த்தை… மிக்க சக்தி வாய்ந்ததாக இருந்து என் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது .

  எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக. (அல்குர்ஆன் 25:74)

  நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

  நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ (உன் மனைவிக்கு) செலவு செய்த எந்த செலவுக்கும், ஏன்? உன் மனைவிக்கு அன்புடன் நீர் ஊட்டிவிட்ட உணவுக்கும் அல்லாஹ் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பு: ஸஃது இப்னு அபிவக்காஸ் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

  மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
  வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.--திருக்குறள்

  தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
  சொற்காத்துச் சோர்விலாள் பெண்.--திருக்குறள்

  ReplyDelete
  Replies
  1. சலாம் அப்பா..

   மாஷா அல்லாஹ்.. ஒரு பெண் தன் கணவனுக்கு எவ்வளவு பக்கபலமாக இருந்தால் கணவன் சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பதற்கு அவங்களுடைய அணுகுமுறையை பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! என் சலாமையும் அவர்களிடம் சேர்த்துவிடுங்கள்.

   இருவருக்கும் அல்லாஹ் பேரருள் தருவானாக.. இதே அன்புடன் இறுதிவரை பயணிக்க செய்து அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க அல்லாஹ் உதவி புரிவானாக!

   Delete
 17. //ஒரு முஸ்லிம் ஆண் தன் தோற்றத்திலும், ஒவ்வொரு செயலிலும் நபிவழியை கடைப்பிடித்தால் மட்டுமே அவன் உண்மையான முஸ்லிமாகிறான்.//

  நல்லதொரு பதிவை கொடுத்தமைக்கு நன்றி சகோ..:-)

  ReplyDelete
 18. sako !

  nalla pathivu!

  maasha allah!

  naan kooda "aampillaiyentraal.....
  thalippil oru kavithai kooda ezhuthi ullen...

  ReplyDelete
 19. அஸ்ஸலாமு அலைக்கும்

  நல்ல ஆக்கமான பதிவு. வாழ்த்துகள்

  அன்புடன்
  அசலம்

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  பிரியாணி,இந்த ஒரு பதிவுடன் நிறுத்தி விடாமல் இன்னும் இதுப்போல நிறைய இங்கே பதியுங்கள இன்ஷா அல்லாஹ் :-).

  பெண்களை விட ஆணுக்கே நிறைய கடமைகள் இருக்கு .அதில் சிலவற்றை சுட்டி காட்டிய விதம் அருமை , ஜஸாக்கல்லாஹ் க்கைர்

  ReplyDelete
 21. அறிந்து கொண்டேன்... நன்றி...

  ReplyDelete
 22. டபுள் ரைட் ....வண்டி ஜோராபோவுது .....வெரி குட் .

  ReplyDelete
 23. ஆண்களின் வீட்டுப் பொறுப்புகள் பற்றி இன்னுங் கொஞ்சம் எழுதிருக்கலாம்.

  சிலர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதுதான் இல்லை. பிள்ளைகள் படிப்பிலாவது உதவலாமே? அதுவும் அம்மாதான் பாத்துக்கணும். பணம் செலவழிச்சு ட்யூஷனுக்கு அனுப்புனாலும் அனுப்புவாங்களே தவிர, உக்காந்து சொல்லிக் கொடுக்கும் பொறுமை அப்பாக்களுக்கு... ஹும்ம்...

  (என் சின்னவனுக்கு பரிட்சை நடக்குது. எங்கவலை எனக்கு!! :-))))) )

  ReplyDelete
  Replies
  1. ஓஹ்.. அது வேற இருக்குல்ல? சொன்ன மாதிரி ஒரு தொடர்பதிவுக்கு உங்கள டேக் பண்றேன்.. 'ஆண்களின் அட்டகாசம்'னு.. ஓகே வா? (ஐயோ ஜன்னல் கண்ணாடி எல்லாம் உடையற மாதிரி இருக்கே, நல்ல வேளை இங்க ஆட்டோ கிடையாது)

   Delete
 24. உற்று நோக்குகிறாய் ஊடுருவிப் பார்க்கிறாய்,
  பார்வையில் உக்கிரம்;உன் மனதிலோ வக்கிரம்.
  ஹிஜாபிலும் என் உடல் கூசுகிறது.

  ஆண்களே.. உங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது "பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்" என்று.

  ReplyDelete
 25. இதைவிட பெரிய விஷயம், அதுவும் குறிப்பா இந்த காலத்து இளைஞர்களிடம் அதிகமா காணப்படுவது வட்டி! பெண்களை எப்பவும் வீண் விரயம் செய்பவர்கள் என்று குறை கூறும் ஆண்கள், உண்மையில் எப்படி இருக்காங்க? நம்ம ஊருல க்ரெடிட் கார்ட் இல்லாத ஒரு இளைஞர காட்டுங்க பார்ப்போம்?//

  வரவு தெரிந்து பெண்கள் செலவு செய்யும் குடும்பத்தில் இப்படி நடப்பது குறைவு, சில ஊதாரி பெண்கள் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதால் அவளை திருப்திபடுத்த அதிகமானவர்கள் கடன் படுகிறார்கள் இந்த ஒரு குற்றத்தை பொறுத்த வரை பெண்களே காரணமாகிறார்கள். அவர்கள் எளிமையாக வரவு அறிந்து (எந்த வீட்ல என்னா புதுசா வந்திருக்க எ்ன்று அலையாம இருந்தா) ஆண்கள் இவைற்றை தவிர்க்கவே செய்வார்கள். மற்றபடி தாங்கள் கூறும் அநேக தவறுகள் உள்ளன இது ஆண்களுக்கு சரியான சாட்டையடி.

  ReplyDelete
  Replies
  1. \இந்த ஒரு குற்றத்தை பொறுத்த வரை பெண்களே காரணமாகிறார்கள். அவர்கள் எளிமையாக வரவு அறிந்து (எந்த வீட்ல என்னா புதுசா வந்திருக்க எ்ன்று அலையாம இருந்தா) ஆண்கள் இவைற்றை தவிர்க்கவே செய்வார்கள். \

   பெண்கள் மட்டுமே காரணம் என்று சொல்வது தவறு சகோதரரே! அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். ஊதாரித்தனம் என்று வரும்போது தவறு இருபுறமும் இருக்கின்றது.

   வஸ்ஸலாம்

   Delete
 26. உண்மையில் இது மிக சிறந்த பதிவு. வாழ்த்துகள் சகோதரி.

  உங்களில் எத்தனை பேர் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பீர்கள் என எனக்கு தெரியாது. ஆனால் அதில் வரும் வட்டியை பற்றி எத்தனை பேர் யோசிக்கிறோம்.

  நமக்கு சொந்தம் இல்லாத ஒரு பொருளை பயன்படுத்துவது நமக்கு அனுமதிக்கபடவில்லை. எனவே நீங்கள் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தாலும் சரி அல்லது சீட்டு, வீடு ஒத்தி போன்ற விசயங்களில் இருந்தும் தவிர்த்து கொள்ளுங்கள்.


  மேலும் ஆடம்பரம், வீண் விரயம், ஆசை போன்ற மன இச்சையில் இருந்தும் தவிர்த்து கொள்ளுங்கள்.

  அல்லாஹ் நம்முடைய ஈமானையும், அறிவையும் வளர செய்வானாக.


  அஸ்ஸலாமு அலைக்கும்.


  - அப்துல்லாஹ்

  ReplyDelete
  Replies
  1. நன்றி.

   நீங்கள் சொல்வது உண்மை தான்.. நாம் வைத்திருக்கும் வங்கி கணக்குகளில் நாம் வேண்டாம் என்று சொன்னாலும் வட்டி தர தான் செய்கிறார்கள். அதை கவனமாக எடுத்து யாருக்காவது கொடுத்துவிட வேண்டும்.

   \மேலும் ஆடம்பரம், வீண் விரயம், ஆசை போன்ற மன இச்சையில் இருந்தும் தவிர்த்து கொள்ளுங்கள். \

   நிச்சயமாக தவிர்த்துக்கொள்வோம், இதில் ஆண், பெண் வேறுபாடு இல்லை.

   வ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்

   Delete
 27. @univerbuddy,
  ஹல்லோ..... என்ன சகோ....ஒரே நேரத்துல நான்கு கமெண்ட் பப்லிஷ் செய்தால் ஐந்தாவது கமெண்ட்டுல வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு போலவே.... ம்ம்....

  நீங்க உங்க கமெண்ட்டை பப்லிஷ் செய்து வைத்திருப்பதால் எல்லாவற்றையும் எனக்கு இங்கே பேஸ்ட் செய்யத் தேவையில்லை. correct???

  முஹம்மது நபி (ஸல்)அவர்களின் மீசையின் அடர்த்தி பற்றி மட்டுமல்ல அவரின் எல்லா செயல்களையும், அவரின் உயரம், அழகு, கம்பீரம் என எல்லா தகவல்களும் அவரைச் சுற்றியிருந்த் நபித்தோழர்கள் மூலமாய் பதியப்பட்டிருக்கிறது. உங்களுடன் எப்பொழுதும் இருக்கும் தோழன் என்ன உடை அணிகிறான், எப்படி சாப்பிடுகிறான், எப்படி மனிதர்களிடம் பழகுகிறான் என கவனிப்பீர்களா.... கவனித்து அது போலவே உங்கள் குழந்தைகளையும் வளர்த்த முனைவீர்களா... நம் நட்புக்களை நம் குழந்தைகளும் கவனித்து ஆராயும் என்னும் ரீதியில் யோசிப்பீர்களா.... இவையனைத்தும் கொண்டு, உயிரினும் மேலாக நபியவர்களை நட்பு கொண்டு, அவரின் ஒவ்வொரு நொடியையும் கவனித்த நபித்தோழர் இருந்தனரே.... அவர்களைப் போலவே நம் முன் இப்பொழுது இல்லாமல் இருப்பினும் அவரை மாதிரியே வாழ வேண்டும் என தன்னையும் தன் குழந்தைகளையும் அவர் வழி நடக்க வைக்கின்றனரே....அது போதாதா.... ஐன்ஸ்டீன் படமும்தான் ஆயிரம் கிடைக்குது நெட்டுல.... வீட்டுல வாங்கி ஒட்டி வெக்கிற ஆளுங்க அவரை மாதிரி மீசை வெக்கக்கூட யோசிப்பாங்ண்ணா... நீங்க வேற பேசுங்ண்ணா... ரைட்??

  அடுத்த பாரா படிக்கறதுக்குள்ள வாந்தி வந்தால் என்ன செய்யனும்னு நெட்டுல படிச்சிக்குங்க.... ஏன்னா உடல் சரியில்லைன்னா டாக்டரிடம் போகனும்னு புத்தியிருக்கும் மனிதன், ஒரு மார்க்கத்தை கத்துக்கவும் மார்க்கத்தை பேணுபவரிடம் போவான்... கூகுளிடமோ சி.என்.எனிடமோ இல்லை.... நீங் அப்டீங்களாங்ண்ணா???? உடம்பை கவனிச்சுக்குங் ப்ளீஸ்....


  ஆதி காலத்திலிருந்தே பெண்ணும் ஆணும் உணவு தேடினார்கள் என்பதற்கு ஆதாராம் இருக்கா சார்? மிக ஃபேமஸான ஆதி கால மனிதர்களின் கார்ட்டூன் The Flintstones கூட மனைவி வீட்டிலே ஹாயாக இருந்ததைத்த்தான் காட்டுகிறது. ஆதிவாசிகள் என்றழைக்கப்படும் நாகரீக சாயல் இல்லாத மனிதர்களின் ஃபோட்டொவிலும் மனைவி என்பவள் குழந்தைகளை சுமந்து கொண்டோ உணவூட்டிக் கொண்டோதான் காணப்படுகிறாள்... வேலும் அம்புடனும் அல்ல.... சரிங்களாங்ண்ணா....

  மேல ஒரு லைன், கீழே ஒரு லைன்.... அதன் பொருட்களும் அப்படித்தான் மேலேயும் கீழேயும்...
  //இங்கே தான் இஸ்லாமின் உண்மையான உருவம் வெளிவருகிறது. இஸ்லாம் முன் வைக்கும் குடும்ப அமைப்பு இயற்க்கைக்கு புறம்பான ஒன்று.//
  //ஒரு குடும்பத்திற்காகவும் அதன் குழந்தைகளுக்காகவும் உணவு தேடுவது என்பது ஆண் பெண் இருவரும் செய்து வருவது தான். இது ஆதி காலத்தில் இருந்தே நடந்து வருவது தான். //
  //ஒரு ஆண் துணை இல்லாமேலே கூட ஒரு பெண்ணால் தன குழந்தைகளை நன்றாக பராமரிக்க முடியும்.பல பெண்கள் செய்தும் வருகிறார்கள். இதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை என்பது தான் மிகவும் கொடூரமான விஷயம்.//
  இல்ல.... என்ன சொல்ல வர்றீங்க.... ஆண் துணையில்லாமலே பெண் தனியாக வாழ வேண்டும் என்றா.... அல்லது பெண் கண்டிப்பாக வேலைக்கு போக வேண்டும் என்றா அல்லது ஆணையும் வீட்டில் அமர்ந்து குழந்தைகளை கவனிக்க சொல்ல வேண்டும் என்றா.... முதல்ல் என்ன கேட்கணும் எனப்தை கவனமா யோசிச்சு, தப்பில்லாம நாலு தடவை எழுதிப் பார்த்துட்டு அப்புறம் இங்கே வந்து டைப் செய்ங்க....சரியா??

  ஹெல்லோ.... நிக்காஹ் செய்தாலும், செய்யாட்டியும் ஒரு பெண்ணுக்கு கல்வி கற்கவோ, வேலை செய்யவோ எந்த தடையுமில்ல.... அதே நேரம் அவளின் சம்பாத்தியத்தை தன் குடும்பத்தினருக்கு தந்தாக வேண்டிய அவசியமுமில்லே.... தெரிஞ்சிக்குங்க.... முழுசா ஒரு கட்டுரைய படிக்காம.... எப்பவும் குர்’ஆனை ஆராயறப்ப படிக்கிற மாதிரி...அங்கொன்னும் இங்கொன்னுமா படிச்சா இப்படித்தாங்ண்ணா.... சம்பந்தமில்லாம எழுத நேரிடும்... இனிமே கவனம்... ok???

  அடுத்து...கடைசியா எழுதியிருக்கீங்க பாருங்க மூனு லைன்.... அதைப் பத்தி எழுத என் கீபோர்டுல கூட நல்ல வார்த்தை வர மறுக்குது. Mister, you reap what you sow. If you want to be treated well, be well mannered yourself. There is nothing wrong in arguing.... till you are decent and good cultured.... If you have any shame, take this as the last warning else.....out !!!

  ReplyDelete
  Replies
  1. @univerbuddy,
   எங்களில் யார் உங்கள் கமெண்ட்டுக்கு பதிலளிப்பது என்பது நாங்கள் முடிவு செய்யும் விஷயம். நீங்களல்ல. அடுத்து, உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளை சீண்டலாக நீங்கள் புரிந்து கொண்டால் அது உங்களின் brainஇல் தொழில்நுட்பக் கோளாறு என்றே அர்த்தம். மனதையும் உடலையும் குணப்படுத்த இறைவனே போதுமானவன். :)

   Delete
 28. அன்னு அவர்களே,
  நான் பயன்படுத்திய வார்த்தை சீண்டுதல், சீண்டல் இல்லை. இவை இரண்டும் ஒன்று போல் இருந்தாலும் பொருள் சிறிது மாறு பட்டவை. நான் பயன் படுத்திய பொருள் நீங்கள் புரிந்து கொண்ட பொருள் இல்லை. பரவாயில்லை.

  யார் பின்னூட்டம் கொடுப்பது என்பதைப் பற்றி உங்கள் பதில் நான் எதிர் பார்த்தது தான். இதற்கு மேல் நான் உங்கள் நேரத்தை வீனடிக்கவோ எனது நேரத்தை வீனடிக்கவோ விரும்பவில்லை. சிறிது நாட்கள் கழித்து வருகிறேன். அல்லா நாடினால் ;-)

  ReplyDelete
 29. மாசால்லாஹ். மிக மிகருமையான விசயங்களை அழகாய் தொகுதுள்ளீர்கள் நாஸியா . ஆண்கள்மட்டுமல்ல இதை பெண்களும் படிதல் அவசியம். தன் மகன்களுக்கு சொல்லித்தர.. நம் அனைவரையும் இஸ்லாத்தின் வாழ்வியல்படி நடக்க வல்ல நாயன் அருள்பரிவானாக..

  ReplyDelete
 30. நல்ல பதிவு. அல்லாஹ் உங்களின் மார்க்க அறிவை மென்மேலும் வளர்ப்பானாக.
  உங்களின் இந்த இடுகையை எங்களின் தளத்தில் பதிய விரும்புகிறேன். அனுமதியுண்டா?

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ சுல்தான்...

   இங்கிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் இச்சமுதாயத்திற்கு பயன்படுத்துவதற்காகவே... ஏதவது ஒரு வகையில் மக்களீடத்தில் சேர்ப்பது தான் எங்களின் நோக்கமும்... தாரளமாக பதிந்துக்கொள்ளுங்கள்... தள முகவரியுடன் சேர்த்து கட்டுரை ஆசிரியரின் பெயரையும் மறக்காமல் குறிப்பிடுங்கள் ஊக்கமாக இருக்கும் :-)

   ஜஸக்கல்லாஹ் ஹைர்

   வஸ்ஸலாம்

   Delete
 31. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  //க்ரெடிட் கார்ட் என்பது கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு நம்மை ஆழ்துளை கிணற்றுல தள்ளிவிடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து//, 

  உண்மையான வரிகள்!.

  ReplyDelete
 32. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  க்ரெடிட் கார்ட் என்பது கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு நம்மை ஆழ்துளை கிணற்றுல தள்ளிவிடக்கூடிய ஒரு பெரிய ஆபத்து, 

  உண்மையான வரிகள்!.

  ReplyDelete