Sunday, July 29, 2012

ஓடிப்போவது ஏன்? எதற்காக?


அப்பப்பா......விடிந்துவிட்டால் போதும்! ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள்.  அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்....  இப்படி ஓடி, ஓடியென ஓட்டத்திற்கே களைப்பு ஏற்படுவது போலாகிவிட்டது தற்கால சூழ்நிலை :(  கண்ட, கேட்ட, கேள்விப்பட்டவைகளில் பல 'சரியான காரணங்கள்', பல 'காராணங்களுக்காகவே சரியாக்கபட்டவை'கள்!

சரி நேடியாகவே விசயத்துக்கு வருவோம்....

முன்பெல்லாம் கன்னிப்பெண்கள் காதல் வலையில் வீழ்ந்துவிட்டதற்காக ஓடினார்கள். ஆனால் தற்போது திருமணமானவர்கள்,  குழந்தை பெற்றவர்கள் கூட ஓடிப்போவது வாடிக்கையாகி வருகிறதே??!!   இதற்கு காரணங்கள்தான் என்ன?

சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை  அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?

என்ன காரணமாயிருக்கும்..?? இவ்வுலக இச்சையா? இனக்கவர்ச்சியின் தாகமா?  இல்லை இல்லறத்தில் இனிமையில்லையா? இல்லை இல்லத்தில் மனக்கசப்பா? இல்லை கணவன் மனைவிக்குள் எவ்விதத்திலும் ஒத்துபோகவில்லையா? அல்லது அன்பின் பறிமாற்றங்கள் அணுவளவுமில்லையா? இதில் எது இல்லை?   எதில் குறை? இல்லை  எதில் பிழை????  கன்னியாய் ஒருபெண் படிதாண்டி சென்றாலே காலங்காலத்திற்கு ஒரு சொல்லாகிவிடும். அதேசமயம் சென்றவள் ஒன்று இனக்கவர்ச்சிக்காக சென்றிருக்கவேண்டும். அல்லது மனக்காதலுக்காக சென்றிருக்கவேண்டும். எதுவென்றபோதும் படிதாண்டுவது பாதகச்செயல் அவளுக்கு மட்டுமல்ல அவள் குடும்பதிற்கும் அவள் வாரிசுகளுக்கும் சேர்த்துதான். ஆனால்
 அதனினும் அநியாயச்செயல் கல்யாணம் முடிந்தும், குழந்தை பிறந்தும் ஒரு பெண் படிதாண்டுவது. சிந்திக்கத்தவறி, சிந்தனைகள் குழம்பி, சீரழிவிற்கு போகும் பெண்மக்களாய் மாறுவது ஏன்? அல்லது அவர்களை மாற்றுவது எது? என வினாக்களோடு புறப்பட்ட மனதுக்குள் விடைகளென்னும் வெளிச்சம் சிறு மின்னல் கீற்றாக தென்பட்டது. அவைகளிங்கே !

தவறுகள் ஆண்களிடமிருந்தே ஆரம்பமாகிறது :

தமது மனைவியரிடத்தில் அன்பாக நடங்கள்; அவளோடு உண்ணுங்கள்; பருகுங்கள்; அவளின் தேவையறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கட்டளையிடுகிறது இஸ்லாம். ஆனால் அதை சரிவர செய்கிறார்களா கணவர்மார்கள்??? 

மனைவியர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை மட்டும் கொடுத்துவிட்டு, மன நிறைவை  கொடுக்காது தவறிவிடுகின்றனர். பொன்னும் பொருளும் மட்டும் ஒரு பெண்ணிற்கு  போதுமென்றால் அது தன் தாய்வீட்டிலோ அல்லது தனது சம்பாத்தியத்திலோ பெற்றுக்கொள்ள முடியுமே? ஆனால் அதையும் தாண்டி பாசமென்ற  ஒன்றும், காதலென்ற அதீத அன்பும் அனைத்துப் பெண்களுக்கும் தேவைப்படுமென்பதை எத்தனை கணவர்மார்கள் அறிந்து வைத்துள்ளார்கள்???  கணவன் மனைவியென்றால் என்ன? புரிந்துணர்ந்து, ஈருடல் ஓருயிராய் வாழ்வதுதானே?

சரி அதுக்கும் ஓடி போவதற்கும் சம்பந்தம் என்ன என கேட்கலாம்.
மனைவியர்களைத் திருப்திப்படுத்த முடியாத ஆண்மைக் குறைவுள்ள கணவர்கள் தங்களின் பலவீனத்தை வெளிக்காட்டினால் தனக்கு கேவலமென்று மறைப்பதோடு மனைவின் தேவைகளை நிறைவேற்றத் தவறி, வீட்டிற்குள்ளே நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் குறைகளையும் குற்றங்களையும் மனைவி மீதே சுமத்தி அன்றாட வாழ்வையே அவதிக்குள்ளாக்குவது தனது பலவீனத்தை மறைக்க! இவர்களை போன்றவர்களை அல்லாஹ் எவ்வாறு கண்டிக்கிறான் எனப் பாருங்கள்...
ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்; அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்; இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்; எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள் - 2:231
தம் மீது எக்குற்றமும் இல்லை என  அனைத்திற்கும் மனைவி நியாயம் தேட முற்பட்டாலும்  'கல்லானாலும் கணவன்' என  முத்திரையையும் குத்தி விடுகிறது இச்சமூகம்.  இதை விடக் கொடுமையானது  இச்சமுதாயம் இந்த விஷயத்தில் ஆண்களின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்தி பெண்களின் மேல் பழி போடுவதுதான்!  குழந்தை பெறவோ, உடல் சுகம் கொடுக்க முடியாதவளோ உடனே கணவனால் விவாகரத்து கொடுக்க அனுமதிக்கும் சமூகம் பெண்களுக்கு மட்டும்  இதை மறுப்பதோடல்லாமல் மார்க்கம் கூறியபடி அக்கணவனுடன் வாழமறுத்து வேறொரு திருமண செய்ய எத்தனித்தாள் எனில் அவள் மீது அவதூறு கூறுகிறது....அஸ்தஃபிருல்லாஹ்.... 
 எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்- 24:4

அவதூறு செய்வோருக்கு இறைவன் கொடுத்த தண்டனையைப் பாருங்கள்! தேவையற்ற அவதூறுக்கு பயந்து தானே இஷ்டம் இல்லாத வாழ்க்கை வாழ நேரிடுகிறது?  இச்சமூகம்தானே அவள் தவறான பாதைக்கு செல்வதை தீர்மானிக்கிறது?

மேலும், நண்பர் என்று அதீத நம்பிக்கை வைத்து அதிகமாக வீட்டுக்குள் அனுமதிப்பது! கணவர் இல்லாத நேரத்திலும் தனியே வர அனுமதிப்பது, வெளியில் போக அனுமதிப்பது,  இதனால் கணவரை விட அதிகம் நேரம், நெருக்கம் நண்பருடன்  அதிகமாகிறது... அத்துடன் நண்பர்களின் குணாதிசயங்களை அதிகமாக மனைவியிடம்  கூறுவதால் காதல், பாசம் உள்ளுணர்வில் ஏற்பட ஆண்களே வழி வகுத்துக் கொடுக்கின்றனர். இதனாலும் தவறுகள் அதிகரிக்கிறது.

அடுத்து தனக்கான செல்வமொன்று வீட்டிலிருப்பதையே மறந்துவிட்டு,  செல்லென்னும் அழைபேசி வழியே ஆண்டுக் கணக்கில் உறவாடிவிட்டு பணம் பணம் என்று செல்வத்தின் பின்னேயே ஓடி ஓய்கின்றனர். இங்கே இவள்  சொல்லியழக்கூட ஆளில்லாமல், சாய்ந்து அழக்கூட தோளில்லாமல் வாட்டம் கண்டு, வாழ்வே ஆட்டம் கண்டதுபோல் உணருகிறாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல கணவர்கள் செய்யும் செயல்களை!

குறைகளை களைந்தெறிவோம்:

சிந்திக்க வேண்டும்! குறைகள் எங்கே என்று கண்டுபிடித்து களையவேண்டும். ஓடி போன பின்பு எப்படி களைவது குறைகளை என்கிறீர்களா? முன்னோடிகளை வைத்து பின்னோடிகள் தன் பாதைகளை மாற்றிக் கொள்ளவேண்டும். நேற்று பிறருக்கு நடந்தவைகள் இன்று அல்லது நாளை நமக்கு நடவாது பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி????

இன்றய காலகட்டம், ஆதாள பாதாளத்தின் மேல் கட்டப்பட்ட மெல்லிய கயிற்றின் மேல் நடப்பது போலாகும். ஆகவே உங்களில் ஒவ்வொரு செயல்களும் உங்களிருவருக்கானதாக இருக்கவேண்டும். உங்கள் மனைவியர்கள் மீது முதலில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வரவேண்டும். அடுத்து அவள் மீது அதீத பாசம், அன்பு கொள்ளவேண்டும்.
உங்களிடம் மட்டுமே தன் தேவைகளை நிறைவேற்ற நினைக்கும் அவளுக்கு தேவையானவைகளை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். அது வாங்கிக்கொடுக்கும் பொருள்களில் மட்டுமல்ல!  உங்களுக்கு [மார்க்கமும் அனுமதிக்காத] பிடிக்காத காரியத்தில் ஈடுபட்டால் கண்டியுங்கள் முடிந்தவரை அன்பாக! வெளியிலிருந்து வந்தால் மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். சிடுசிடுப்புடன் இருக்காதீர்கள். உப்பு சப்பு இல்லாத விசயங்களுக்கெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். அன்பொழுக பேசாவிட்டாலும் அணுசரனையாக பேசுங்கள்.

அவளின் சில விசயங்களுக்காகவும் விட்டுக்கொடுங்கள். வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் களைப்படைந்திருந்தால்  பரிவாக நடந்துக்கொள்ளுங்கள்.  அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்.  அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள். அவளுக்கு பிடித்தபடி உடையணிந்துக் கொள்ளுங்கள். வீட்டுப்பொறுப்பு, குடும்ப நிர்வாக விசயத்தில் அனைத்திலும் அவளை கலந்துக் கொள்ளுங்கள். அவளுக்குத் தேவையானவற்றிற்கு  கஞ்சத்தனம் பாராது செலவழியுங்கள். படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை உங்கள் உற்ற நண்பனிடம்கூட வெளிப்படுத்தாதீர்கள். அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்து இல்லறத்தில் உறவாடுங்கள். சிலருக்கு கண்ணியமான பேச்சுகள் பிடிக்கும், சிலருக்கு நகைச்சுவை பேச்சுப் பிடிக்கும், சிலருக்கு கொஞ்சம் கொஞ்சலாக பேசுவது பிடிக்கும். எது பிடிக்குமென்று உணர்ந்துக் கொண்டு அதுபோல் நடந்துக் கொள்ளுங்கள்.
அவர்களுடன் (பெண்களுடன்) சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்- 4:19
இவையனைத்தும் எங்கு தடைபடுகிறோ அல்லது தடைபடுவதுபோல் எண்ணப்படுகிறதோ அங்கே தவறுகள் உள்நுழைந்து மனக்கட்டுப்பாட்டை தட்டுக்கெட வைக்கிறது. அன்பையும் ஆறுதலையும் இனக்கவர்ச்சியையும் ஈர்ப்பையும் உணர்ச்சிகளையும் ஊக்கம் தரும் வார்த்தைகளையும் எதிர்ப்பார்க்கும் மனங்கள், அது கிடைக்காது ஏங்கித் தவிக்கும்போது அவையத்தனையும் ஒட்டுமொத்தமாய் கிடைக்கப் பெறும்போது, அதாவது கிடைக்கப் பெறுவதைபோல் உணர்த்தப்படுவதால்  ஓடிப்போக நினைக்கிறது... பின்வரக்கூடிய விளைவுகள் புரியாமல் அதோடு தன் வாழ்க்கை அர்த்தமற்றுப் போவதை உணராமல்!!

நீங்கள் படிக்கும் காலத்தில் பெண்களோடு பழகியதுபோல்தான்  தன் மனைவியும் பிற ஆண்களோடு பழகியிருப்பாள் என்ற வீணான தவறான சந்தேகத்தால் உங்கள் வாழ்க்கையின் அழகியலை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஒளிவு மறைவின்றி உங்களிடம் ஒப்படைத்த விசயங்களை வைத்து அவர்களை 'இடுக்கு கிடைக்கும்போதெல்லாம் கொடுக்கு' போடாதீர்கள். அப்புறம் உங்களிடம் அனைத்தையுமே ஒளிக்கக் கற்றுக்கொள்வார்கள்.. உங்களைவிட்டு ஒதுங்கியே வாழ நினைப்பார்கள்.. அப்படியே  உங்களுடன் ஒட்டியிருந்தாலும் மனதளவில் ஒட்டாமலே இருப்பார்கள்..
 மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்- நபிமொழி
அதுமட்டுமல்லாது நடத்தைகளில் பழக்க வழக்கங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களறியாது அவர்களை கண்காணியுங்கள். இக்காலகட்டத்தில் ஓடிப் போவோருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது செல் எனும் கைப்பேசியே! இனக்கவச்சியையும், இல்லாத ஒழுக்கங்களையும் காட்டிக்கொடுக்கிறது. சினிமாவும் சீரியல்களும். அதை அப்படியே செயல்படுத்த மன்னிக்கவும் கூட்டிக் கொடுக்கிறது கைபேசியும் கணினியும். அவற்றுடன் அவர்கள் அதிக நேரம் உரையாடல்கள் தொடர்ந்தால் அந்த நம்பரை செக் செய்துக் கொள்ளுங்கள்.. வீணாக சந்தேகப்பட்டு அப்புறம் வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

[ இவையனைத்தும் கணவர்கள் மனைவிமார்களுக்கு மட்டும் செய்யக்கூடியவைகள் அல்ல மனைவிகளும் கணவர்மார்களுக்கு செய்யக்கூடியவைகள் [சிலதைத்தவிர]. ஏனெனில் தவறுவது பெண் மட்டுமல்ல ஆணும்தான்! ஆனால் ஆணின் இச்செயல்கள் மட்டும் அழுத்தம் கொடுக்கப்படாமலே அமுக்கப்பட்டுவிடும். பெண்ணின் இவ்விழிச் செயல் ஆண்டாண்டு காலம் அசிங்கமாக பேசப்படும்..]

இவையெல்லாம் மீறி ஒன்றுமில்லாத காரணங்களுக்காக குடும்பத்தைவிட்டு குழந்தைகளை தவிக்கவிட்டு, யார் எக்கேடு கெட்டாலென்ன, மானம் காற்றில் பறந்து கந்தலானாலென்ன, தன் சுகம் மட்டுமே முக்கியம் என்று தறிகெட்டு தடம்மாறி போகிறவர்களை, உற்றார்களோ உறவினர்களோ அல்லது அந்த ஊர் ஜமாத்தோ ஊர்காரர்களோ ஏற்றுக்கொள்ளக் கூடாது. தண்டனை கடுமையானால் தவறுகள் குறையக்கூடும். என்ன செய்துவிடுவார்கள் நாளு நாட்கள் பேசுவார்கள், அப்புறம் 6 மாதமோ 1 வருடமோ ஒரு பிள்ளையை பெற்றுக்கொண்டு வந்தால் என்ன செய்யப் போகிறார்கள் என்ற நினைப்புதான் பலரை இத்தவறுகளுக்கு தூண்டுகோளாய் அமைகிறது. அதேபோன்று மனைவியிருந்தும், கணவர்கூடவேயிருந்து தவறு செய்பவர்களுக்கும் தக்க படிப்பினை தரவேண்டும். [தெரியாமல் அறியாமல் செய்துவிட்டேன், இனி அத்தவறுகளின் பக்கம் போகமாட்டேன் என்று இறைவன்மீது ஆணையிட்டு தவறை உணர்ந்தவரை தவிர]
9:106. அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பார்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அதைவிடுத்து இறைவனுக்காக ஏற்றுக்கொள்றேன் என்று பெயரளவில் சொல்லிவிட்டு உள்ளுக்குள் ஒரு ஒப்பாத வாழ்க்கை வாழ்வோர் நிறைய!  "நீ உனக்காக வாழ்! நான் எனக்காக வாழ்க்கிறேன்! ஆனால் நாம் இருவரும் இணைந்திருந்தபடியே!" என்று  வாழ்க்கை நடத்துவோருமுண்டு. நஊதுபில்லாஹி மின்ஹா. இறைவன் காப்பற்றவேண்டும். அவனே அனைத்தையும் அறிந்தவன்..

உங்கள் துணையோடு உங்களுக்கு சந்தேகமா? அல்லது உடன்படாமைகள் தொடர்கிறதா? தீர்க்கப் பாருங்கள்; அல்லது தீர்த்து விடுங்கள் [அச்சொ உயிரையல்ல] அவ[ரி]ளின் உறவை. கூடவே வைத்துக்கொண்டு குத்திக்குத்திக் காட்டுவதில் வாழ்க்கைதான் வலுவிழந்து போகும். குடும்பம்தான் நிம்மதியிழந்து தவிக்கும். ஒன்று சுமூகமான முடிவெடுங்கள்! அல்லது மார்க்கம் சொல்லித் தந்தவாறு பிரச்சனைக்கு  தீர்வு காணுங்கள். வல்ல இறைவனின் உதவியோடு இருவருமே நிம்மதி காணுங்கள்; இல்லறத்தை நல்லறமாக்குங்கள்; இல்லத்தை இனிமையாக்குங்கள்; சமுதாயத்தையும் நல்வழிப்படுத்துங்கள்!
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் 2:284

அன்புடன் மலிக்கா


120 comments:

 1. நல்லதொரு பதிவு...அழகாக விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிகுந்த மகிழ்ச்சி..சகோ..

   Delete
 2. நிரோடை இடம் மாறி வந்து செழுமைப்படுத்துகின்றது

  ReplyDelete
  Replies
  1. நீரொடை மாறாது அதன் நீரோட்டம் அனைத்து வழிகளிலும் ஓடிக்கொண்டிருக்கும் அதுபோலவே நானும்.. ஓடும் நீரோட்டம் தெளிவானதாகவே ஓட வல்ல இறைவன் துணைபுரியட்டும்..

   தந்தையின் அன்பு கருத்துகளுக்கு மிக்க சந்தோஷம்..

   Delete
 3. வரவேற்கிறேன் மலிக்கா உங்களின் கருத்தை....எல்லா பெண்களுக்குமே குறைகள் இருக்கிறது. முன்பு இருந்த பெண்கள் அனுசரித்துக் கொண்டார்கள் இப்போது நம்மிடையே அது குறைந்து வருகிறது. இதில் ஆண்களை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. இருவரிடமும் தவறு இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..

   Delete
  2. @அகிலா...

   //இதில் ஆண்களை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. இருவரிடமும் தவறு இருக்கிறது.//

   சரியா சொன்னீங்க. ஆண்களை மட்டும் குறை கூறுவதிலும், ஆண்களை விட்டுட்டு பெண்களை மட்டும் குறை கூறுவதிலும் ப்ரோஜனம் இல்ல! தவறு இருவரிடத்திலும் தான்...

   ஆனால் பெரும்பாலும் இந்த சமூகம் பெண்கள் மேல் **மட்டுமே** பழி போட்டு ஆண்களின் தவறை அவர்களுக்கு சுட்டிகாட்டாமல் விட்டு விடுகின்றனர். அதற்காக ஆண்களின் மேல் உள்ள தவற்றை அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.

   Delete
  3. இதே கருத்தைதான் சொல்லவந்தேன் ஆமி நீங்களே சொலிட்டீங்க சந்தோஷம்டா..

   Delete
  4. வாங்க அகிலா. தாங்கள் சொல்வதும் உண்மையே! இங்கே ஒரு சாராரைமட்டும் குற்றம் சாடவில்லை.குறைகள் இருபாலாரிடமும்தான் இருக்கிறது.
   மேலும் குற்றம் நிகழாதிருக்க! ஒத்துழைக்க ஒரு வலுவான சாராரிடம் வேண்டுகோள்வைக்கிறோம் அவ்வளவுதான்..

   தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி

   Delete
  5. //பெரும்பாலும் இந்த சமூகம் பெண்கள் மேல் **மட்டுமே** பழி போட்டு ஆண்களின் தவறை அவர்களுக்கு சுட்டிகாட்டாமல் விட்டு விடுகின்றனர்.//

   எவனாவது அவன் செய்யும் தவறை அவனாகவே ஒத்து கொள்வானா இல்லையே. ஆண்கள் தவறு செய்யும் போது பெண்கள் அதை சுட்டிகாட்ட வேண்டும் மேலும் அவர்களை தண்டிக்க வேண்டும் அதைவிட்டு விட்டு இந்த சமுகத்தை குறை சொல்லாதீர்கள் என்பது எனது கருத்து. எப்போதும் நமக்கு துணிவு வேண்டும் இல்லையென்றால் நாம் அடிமைகளாகத்தான் இருக்க லாயுக்கு குறை சொல்ல அல்ல

   Delete
  6. எவனாவது அவன் செய்யும் தவறை அவனாகவே ஒத்து கொள்வானா இல்லையே. ஆண்கள் தவறு செய்யும் போது பெண்கள் அதை சுட்டிகாட்ட வேண்டும் மேலும் அவர்களை தண்டிக்க வேண்டும் அதைவிட்டு விட்டு இந்த சமுகத்தை குறை சொல்லாதீர்கள் என்பது எனது கருத்து. எப்போதும் நமக்கு துணிவு வேண்டும் இல்லையென்றால் நாம் அடிமைகளாகத்தான் இருக்க லாயுக்கு குறை சொல்ல அல்ல.//

   உண்மைதான் யாரும் தன்தவறை ஒத்துக்கொள்ள முன்வருவதில்லை..

   சமூகம் என்பது யார் அந்த சமூகத்தில் நாமும் ஒருவர்தானே ஆகவே குற்றம் சமூகத்தின்மேல் அல்ல நம்மேல்தான் அதனை சரிசெய்துவிட்டால் சமூகம் தானாக சரியாகும்..

   மிக்க நன்றி தோழமையே!..

   Delete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு  இன்று நாம் அனைவரும் சிந்திக்க கூடிய தலைப்பு .இன்று நம்முடைய சமூகம் பின்னடைவுக்கு இதுவம் ஒரு காரணம் .சிறந்த ஆக்கம் .மேலும் தொடரனும் இன்ஷால்லாஹ்

  இது என்னுடைய கருத்து

  இன்று பெற்றோர் விடும் தவறுதான் திருமணம் செய்யும் ஆணினதும் பெண்ணினதும் வயது வித்தியாசத்தை கண்டுகொல்லாமை. பெண்கள் வீட்டை விட்டு ஓடிப்போவதுட்கும் வயது வித்தியாசமும் இதற்கு காரணமாக இருக்கலாம் .பொதுவா இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம் நிறைய இருக்கு .அப்பாவும் மகளுமா இருப்பார்களோ ?என்று யோசிக்கும் அளவுக்கு ..பெண்ணுக்கு தன்னுடைய ஆசை வளரும் போது அந்த ஆண் அந்தப் பெண்ணை கண்டுகொள்வது இல்லை இதுவும் ஒரு காரணமா இருக்கலாம் பெண்கள் வீட்டை விட்டும் குழந்தைகளை விட்டும் ஓடி போவதற்க்கு ............

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோதரி

   தாங்கள் சொல்வதுமொருவகை உண்மைதான் சகோதரி அதையும் யோசித்துதான் செயல்படவேண்டும்..

   மேலும்
   இதுபோன்ற செயல்களுக்காக மற்றும் வேறு சிலகாரணங்களுக்காக ஓடிப்போவது சரிதான் என்று சொல்வது அறிவீனம். அதை அழகியமுறையில் கையாளனும் மானிட வர்க்கம் மறையோன் வகுத்துதந்த பாதையின்படி. மங்கையராகட்டும் காளையராகட்டும். மனம்போனபடி வாழ்க்கை வாழநினைப்பது தவறிலும் தவறு. சிந்திக்கும் கூட்டத்தாருக்கு மட்டுமே இவ்வுலகில் வாழ்வின் அழகியல் புரியும் வாழவும் தெரியும்..

   மிக்க நன்றி சகோதரி பாத்திமா..
   Delete

   Delete
 5. நல்ல அலசல்...
  சந்தேகம் மிகப்பெரிய பேய் என்பதை விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்.
  அன்புடன் மல்லிகா (http://kalaisaral.blogspot.com/2012/07/blog-post_29.html) மூலம் உங்கள் தளத்திக்கு வருகை...

  Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன்...
  பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்....

  நன்றி...


  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரர் தனபாலன் அவர்களே! என் தளத்திற்க்கு வந்து தினமும் ஊக்கக்கருத்துகளைதருவதோடு! என் அழைப்பின்பேரில் இங்கும் வந்து கருத்துகளிட்டு தங்களின் பணியை சிறப்புற செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
  2. வாங்க சகோதரரே தங்களின் தொடர் வருகை இங்கும் தொடர்வதுகண்டு மனம் மிகவும் மகிழ்கிறது. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

   Delete
 6. தவறுகள் ஆண்களிடமிருந்து தான் முதலில் ஆரம்பமாகின்றன. ஆனால் பழி மட்டும் முழுக்க முழுக்க பெண்கள் மீது மட்டும்! இதனால் ஆண்கள் தங்கள் செய்யும் தவற்றை இறுதி வரை உணர முடியாத அளவுக்கு இந்த சமூகம் ஆக்கிவைத்துவிட்டது...


  பிரச்சனை ஆரம்பமாகும் சூழ்நிலைகளையும் சொல்லி அதற்கான தீர்வுகளையும் சொல்லியிருப்பது சிறப்பு!

  கணவனின் அதீத அன்பும் பாசமும் அக்கறையும் கிடைத்தால் எந்த பெண் தான் தவறான பாதைக்கு செல்வாள்???!!!

  அருமையான ஆக்கம் மலிக்கா

  வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மலிக்கா...
   மாஷா அல்லாஹ் அருமையானதொரு ஆக்கம் வாழ்த்துக்கள்...

   //சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்?////

   வெகு நாட்களாக என் மனத்தை அரித்து கொண்டு இருந்த ஒரு கேள்வி கண்ணுக்கு கண்ணான குழந்தைகளை விட்டு ஓடும அளவுக்கு பெண்களை நிர்பந்திப்பது எது என்பது .! அந்த கேள்விக்கு மிக தெளிவான பதில்கள் உங்கள் பதிவில் கிடைத்தது...!

   படி தாண்டி வேறு துணை தேடும் பெண்களின் நிலையை அழகாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்..!

   //உங்கள் துணையோடு உங்களுக்கு சந்தேகமா? அல்லது உடன்படாமைகள் தொடர்கிறதா? தீர்க்கப்பாருங்கள்; அல்லது தீர்த்துவிடுங்கள் [அச்சொ உயிரையல்ல] அவ[ரி]ளின் உறவை. கூடவே வைத்துக்கொண்டு குத்திக்குத்திக்காட்டுவதில் வாழ்க்கைதான் வலுவிழந்துபோகும். குடும்பம் தான் நிம்மதியிழந்து தவிக்கும்./// அப்பட்டமான உண்மை மலிக்கா..

   அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்க போதுமானவன்..!

   வஸ்ஸலாம்"
   உங்கள் சகோதரி
   ஷர்மிளா ஹமீத்

   Delete
  2. பிரச்சனைகளை கண்டுபிடித்தால் தீர்வுகள் மிக எளிது ஆமி..

   அதேபோன்று குற்றம் ஒருபக்கமட்டுமல்ல இருபக்கமும்தான் சில பல சந்தர்பங்களில் ஆகவே இருவருமே சரியாக நடக்காதவரை ஒருவருக்கு நியாயம்கிடைக்க வழியில்லை..

   ஆகவே எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே அவன் வழி நடப்போர் நன்மையின்பக்கமே நிலைநிருத்தப்படுவார்..

   ஆமி தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி..

   Delete
  3. //வெகு நாட்களாக என் மனத்தை அரித்து கொண்டு இருந்த ஒரு கேள்வி கண்ணுக்கு கண்ணான குழந்தைகளை விட்டு ஓடும அளவுக்கு பெண்களை நிர்பந்திப்பது எது என்பது .! அந்த கேள்விக்கு மிக தெளிவான பதில்கள் உங்கள் பதிவில் கிடைத்தது...!///

   அன்பின் சகோதரியின் கருத்துகளுக்கு முதலில் நன்றி..
   பலயிடங்களில் காரணம் கணவர்கள். அதேசமயம் பலயிடங்களில் காரணம் வாழ்க்கையை புரியமறுத்தலின் அறியாமை!இன்னும் சிலயிடங்களில் திமிர்தனத்தால். ஆக ஓடிபோதலுக்கு பலகாரணங்கள் இருக்கின்றன சகோதரி. எல்லாம் வல்ல இறைவன் அனைத்தையும் அறிந்தவன். அவனே மனிதமனங்களில் ஊசலாட்டங்களையும் உணர்பவன்..

   Delete
 7. இஸ்லாமிய வாழ்த்துகள் உரியதாகுக
  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  ஆக்கம் மிக்க நன்றாக இருந்தது. மேலும் உங்கள் ஆக்கம் கான வாழ்த்துகிறேன் இன்ஷா அல்லாஹ்

  அன்புடன்
  அசலம்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோதரர் அவர்களே தங்களின் வாழ்த்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இறைவன் துணையோடு மேலும் ஆக்கங்களைதர முயற்ச்சிக்கிறேன். இன்ஷாஅல்லாஹ்..

   Delete
 8. ஆணாதிக்க சமுதாயத்தில் நம் சமுதாயப் பெண்கள் வெளிப்படையாக துணிந்து எழுதுவதே பெரிய முன்னேற்றமாக நான் கருதுகிறேன். வாழ்த்துகள் மலிக்கா.

  ReplyDelete
  Replies
  1. அன்பு ஜெஸிலா நலமா? தங்களின் ஊக்கமான கருத்துகளுக்கும் அன்பு நிறைந்த வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 9. முதலில் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்

  இங்கே ஆணைமட்டும் குற்றம் சாடப்படவில்லை இருபாலரையுதான். ஏன் ஆணிடம் வேண்டுகோள்வைக்கப்படுகிறதென்றால் குற்றங்களின் பழிகள்மட்டுமே பெண்களுக்கானதாக்கப்டுகிறதே என்ற ஆதங்கத்தில்தான்..பலர் வெளியில்தெரியாமல் வீட்டுக்குள் நடத்தும் அத்துமீறல்களால் அமுக்கப்படுவதால்தான்..

  பெண்கள் மிக சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மென்மையானவர்கள் ஏமாறும் தன்மைகொண்டவர்கள்[விதிவிலக்கானவர்களைத்தவிர] ஆகவேதான் ஈசியாக எதிலும் மாட்டிக்கொள்கிறார்கள். பின்பு அதை நினைத்து [பயனற்றுபோனபின்]வருதப்படுகிறார்கள்.

  நல்லடியார்களே இறைவனை பயந்துக்கொள்ளுங்கள் ஈமானில் உறுதியாக இருங்கள். இவ்வுலக வாழ்வில் உங்களை தொலைத்து மறுமையில் நஷ்டவாளர்களின் கூட்டத்தில் நின்றும் ஆகிவிடாதீர்கள்..[இறைவன் காப்பாற்றுவானாக]

  ReplyDelete
 10. நல்ல கட்டுரைப்பா. உடல்தேவையவிட, மனசுக்கு ஒரு நட்பு தேவை என்பதுதான் காரணம்னு புரியவே மாட்டேங்குது!! “அவளுக்கென்ன, மாப்பிள்ளை வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புறான்; எல்லா வசதியும் செஞ்சு கொடுத்திருக்கான்; அப்புறமென்ன கொழுப்பு?”னுதான் பேசுறாங்களே தவிர, இதெல்லாத்தையும்விட ‘கூழேயானாலும் ஒரே கூரையில் குடிப்பதுதான் நிம்மதி தரும்’ன்கிறது புரியவே மாட்டேங்குது.

  ஒவ்வொரு ஊரிலும் தம்பதிகளுக்குக் “கவுன்ஸ்லிங்” செய்வதற்கு தனி குழு அமைக்கலாம்.

  இன்னும் நிறைய குடும்பங்களில் மனைவி என்பவள், வீட்டு வேலைகளுக்காகவும், தன் பெற்றோரைக் கவனித்துக் கொள்ளவும், பிள்ளைகள் பெறவுமே வந்தவள் என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறாள். இந்தப் புறக்கணிப்புதான் முதல்படி. இதற்காகவே காத்திருக்கும் சில வல்லூறுகள் சரியாகத் தூண்டில் போட்டு விடுகின்றன!! தூண்டிலில் மாட்டிய பின்புதான் புத்தி வரும் அப்பெண்களுக்கு. ஓடியபின் குற்றம் முழுவதும் அப்பெண்ணின் மீதே சாட்டப்படுவதால், அவளின் கணவனுக்குத் தன் தவறு உணரப்படும் வாய்ப்பே இல்லாது போய்விடுகீறது!!

  இதற்கு இன்னொரு காரணம், பெண்களுக்கு தங்கள் உரிமைகள் என்னவென்றும் தெரியாமலிருப்பது. தெரிந்திருந்தால், இதுபோல தான் புறக்கணிக்கப்படும்போது உரிமைகளை எடுத்துச் சொல்லிப் பேசலாம்.

  சிந்தனையைத் தூண்டும் கட்டுரை.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு ஊரிலும் தம்பதிகளுக்குக் “கவுன்ஸ்லிங்” செய்வதற்கு தனி குழு அமைக்கலாம்.// அட இதுகூட நல்ல ஐடியாவாயிருக்கே ஆமா எத்தனை தம்மதிங்க இதுக்கு ஒத்துப்பாங்க ?

   ஹுசைனம்மா. குற்றங்கள் நிகழ்ந்துவிட்டபின் அதற்கான காரணங்களை தேடி அலையும் மனமும் மனிதர்களும் அதனை முன்கூட்டியே தடுப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் பயன்படுத்திக்கொள்ள தவறுகிறதே ஏன்னுதான் புரியலை.
   இதைக்கூட மீடியாக்களின் வாயிலாக கூறுவது தவறு என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகிறது..
   நன்மை ஏவி தீமையை தடுங்கள் என இறைவனே கூறுகிறான் அதன் வழியில் இதுபோன்ற பதிவுகளின் வாயிலாக ஏதோ நம்மால் முடிந்தவைகள் செய்வோமேன்னுதான்..இதன்பொருட்டு ஒருவர் செயல்பட்டாலே அதுவே ஆயிரம்பேர் செயல்பட்டதற்க்கு சமமாகுமென்ற சிறு ஆவல்தான்..

   மிக்க நன்றி ஹுசைனம்மா

   Delete
  2. //அவளுக்கென்ன, மாப்பிள்ளை வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புறான்; எல்லா வசதியும் செஞ்சு கொடுத்திருக்கான்; அப்புறமென்ன கொழுப்பு?”னுதான் பேசுறாங்களே தவிர///

   அப்படி பேசுவது பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்ற உண்மை ஏன் இங்கே மறைக்கபடுகிறது.

   எல்லோரும் வெளிநாட்டில் வேலைபார்க்கும் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று கட்டுகிறார்களே அப்போது அவர்கள் புத்தி எங்கே மபோனது.

   எல்லோரும் ஆண்களை இப்படிதான் குறை கூறுவார்கள் பாருடா கல்யானம் பண்ணி ஒரு மாசம் என் ஜாய் பண்ணிட்டு பொண்டாட்டியை ஊர்ல விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் ஜாலியாக இருக்கிறான் என்று.. வெளிநாட்டில் வசிக்கும் நீங்களே சொல்லுங்கள் ஹூசைனம்மா வெளிநாட்டில் இருக்கும் ஆண்கள் ஜாலியாக இருக்கிறார்களா அல்லது கஷ்டப்பட்டு உழைக்கிறார்களா என்று. இப்படி வெளிநாட்டில் உட்கார்ந்து வெந்ததை தின்னு வாயை கட்டி வைத்தை கட்டி உழைக்கும் ஆண்களும் தங்களுக்கு எழும் ஆசைகளை அடக்கிதானே வாழ்க்கிறார்கள் அப்படி வாழ்பவர்கள் எல்லோறும் என்ன தவறா செய்கிறார்கள்.

   அப்படி கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்த்தில் ராஜாத்தியாட்டம் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு தன் பெற்றோர்களுக்கோ அல்லது தன் கணவனின் பெற்றோர்களுக்கோ உதவி செய்வதில் என்ன கடினம் என்று எனக்கு புரியவில்லை தன் மனைவியுடன் பேச வேண்டுமென்று போனையும் கம்பிய்யுட்டரையும் வாங்கி கொடுத்தால் அதை வைத்து தனக்கு அறிமுகமில்லாத ஆண்களுடன் பழ்கி தப்பை செய்துவிட்டு அதன் பின் அதற்கு காரணம் இந்த ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயம் என்று கூறுவது எந்தவித நியாம்.

   தவறு செய்பவர்களில் இருபாலரும் உண்டு அவர்களைப் பற்றி இந்த சமுகம் தவறாக பேசுவதில் தப்பு இல்லை. அதைவிட்டு விட்டு ஆண்கள் தவறு செய்தால் அதிகம் பேசுவதில்லை பெண்கள் தவறு செய்தால் அதிகம் பேசுகிறது என்பதை சொல்லுவதைவிட அப்படி போண கழிசடைகள் ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும் அவர்களை பற்றி நாம் பேசாமல் ஒதுங்கி இருப்பததே நல்லது சாக்கடை பக்கம் போய்விட்டு அது இந்த பக்கம் கொஞ்சம் மணக்குது அந்த பக்கம் ரொம்ப மனக்குது என்று குறை கூருவதைவிட சாக்கடை பக்கம் நாம் போகாமல் இருப்பதே நல்லது.

   இங்கு வந்த அனைத்து இஸ்லாமியர்கக்கும் எனது அட்வான்ஸ் ரமலான் நல் வாழ்த்துக்கள்

   Delete
  3. போண கழிசடைகள் ஆணாக இருந்தாலும் பெண்னாக இருந்தாலும் அவர்களை பற்றி நாம் பேசாமல் ஒதுங்கி இருப்பததே நல்லது சாக்கடை//

   இல்லை சகோ!

   இருதரப்பில் யார் குற்றமற்றவர் என அவர்களின் தவறை நியாயப்படுத்தும் பதிவல்ல இது! ஆண்கள் எந்தந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை ஊட்டும் கட்டுரை அவ்வளவே

   வாழ்த்துகளுக்கு நன்றி சகோ

   Delete
  4. அப்படி கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்த்தில் ராஜாத்தியாட்டம் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு தன் பெற்றோர்களுக்கோ அல்லது தன் கணவனின் பெற்றோர்களுக்கோ உதவி செய்வதில் என்ன கடினம் என்று எனக்கு புரியவில்லை தன் மனைவியுடன் பேச வேண்டுமென்று போனையும் கம்பிய்யுட்டரையும் வாங்கி கொடுத்தால் அதை வைத்து தனக்கு அறிமுகமில்லாத ஆண்களுடன் பழ்கி தப்பை செய்துவிட்டு அதன் பின் அதற்கு காரணம் இந்த ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயம் என்று கூறுவது எந்தவித நியாம்.///

   அதுக்குத்தான் சொல்வது ஆண்டாண்டுக்கணக்கில் வலைகுடாவில் வாசம்கொண்டுவிட்டு அங்கிருந்துகொண்டே அலைபேசியின்வழியே குடும்பம் நடத்திக்கொண்டிருப்பதைவிட அடிக்கடி ஊர்வந்துபோகனும் அல்லது ஓரிரு அல்லது ஐந்தாறு வருடங்கள் என கணக்குவைத்துக்கொண்டு சம்பாத்தித்துவிட்டு ஊரோட தேசத்தோட வந்து செட்டிலாகுங்கன்னு. அல்லது மனைவியை அங்கே கொண்டுபோய் வச்சிக்கோங்கன்னு. எதுக்குமே ஒத்துவராதுன்னு சொல்லிட்டு நீங்க அங்கேயும் அவுக இங்கேயும் என்று காலாகாலத்தை ஓட்டிவிட்டு வந்துட்டு குத்தத்தமட்டும் அவுகமேல சொன்னா எப்புடி..

   ஆக இதுகெல்லாம் தீர்வு இருவரும் புரிந்துணர்ந்து செயல்படுவதே! அதாவது உள்ளதைக்கொண்டு நல்லதை செய்வதே! இருப்பதைக்கொண்டே வாழ்க்கையை வாழ்வதே!

   Delete
 11. அன்பு மல்லிக்கா,, இத்தனை நாள் உங்கள் எழுத்துகளை எப்படி தவறவிட்டேன்?
  அருமையாக வெளிப்படையாக எழுதியுள்ளீர்கள் எல்லா பெண்களின் மனதிலும் உறைந்துள்ள எண்ணங்களின் எழுத்துவடிவம்தான் இந்த பகிர்வு.நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அன்பின் உமா. தங்களின் வருகையே மிக்க மகிழ்ச்சி. இணையத்தில்வழியே பல நல்லௌள்ளங்களின் இணைப்புகள் கிடைத்துள்ளது தாயாய் சகோதரியாய் தோழியாய் .அதன் வழியே இது நீங்களும் இன்று.. தங்களீன் வருகைக்கும் அபுகூர்ந்த கருத்துகளுக்கும் மிகுந்த நன்றி..தொடர்ந்து எங்களின் படைப்புகளுக்கு உங்களின் ஊக்கமென்னும் உரம் வேண்டும்..

   நன்றி..

   Delete
 12. மிக மிக அருமையான பதிவு

  பெண்ணினத்தைச் சேர்ந்தவர் என்கிற முறையில் உங்கள் கோபத்தையும் அக்கறையையும், குழந்தைகள் வழிதவறக்கூடாது என்கிற உண்மை அக்கறைக் கொண்ட தாயுள்ளத்தையும் இப்பதிவில் காண முடிகிறது.

  சில இடங்களில் வார்த்தைகள் இடி போன்று இறங்கியிருக்கிறது.1 வயது குழந்தை மாமிசத்தை நல்லதேன நினைத்து முழுங்க முயலும்போது தாய் அடிதொண்டைவரை பலவந்தமாக விரலை விட்டு பிடுங்கி எறிவாளே அதற்கு நிகரானது

  வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டதோடு தொடர்கிறேன்..

   இடிபோன்ற வார்தைகளுக்கு காரணமிருக்கு சகோ சிலபலவிசயங்கள் கண்கூடாக காணும்போது அதைக்கேட்கும்போது ஏற்பட்ட மனத்தாக்கம்தான்.. என் எழுத்தால் பிறரின் வாழ்க்கை அல்லது அவர்களின் மனங்களோ சிறிதும் சிரமம் பட்டுவிடக்கூடாது என்றுதான் நான் சில சிலவிசயங்களைக்கூட மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளேன். எல்லோரும் தவறானவர்கள் அல்ல அதில் ஆணும் சரி பெண்ணும் சரி சூழ்நிலை அவர்களை அந்த சந்தர்ப்பத்திற்க்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. அந்த சூழலை முடிந்தவரை தடுத்துக்கொள்ளலாமே என்ற நல்லெண்ணத்தின்பால் எழுதப்பட்டதே இப்பதிவு..

   அன்பின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி..

   Delete
 13. பெண் ஓடிப்போனதை இந்த சமுதாயம் ஒரு பெருங்குற்றமாக பார்க்கிறது. ஆனால் மனைவியையும் குழந்தையையும் தவிக்க விட்டு எத்தனை ஆண்கள் ஓடிப்போகிறார்கள் ? அவர்களை என் இந்த சமுதாயம் ஒரு குற்றவாளியாக பார்க்க மாட்டேன் என்கிறது. அவனை ஏன் ஓடிப்போய்விட்டான் என்று இந்த சமுதாயம் சொல்லவே மாட்டேன் என்கிறது ?
  திருமணம் ஆன பெண் ஓடிப்போக முழுக்காரணமும் ஆண் (கணவன்) தான். ஆனால் திருமணம் ஆகாத பெண் ஓடிப்போனால் அதற்கு முழுக்காரணமும் பெற்றோரை தான் சேரும். சரியாக வளர்க்காதது, மார்க்கத்தை, ஒழுக்கத்தை போதிக்காதது. இதெல்லாம் விட சரியான நேரத்தில் திருமணம் செய்து வைக்காதது. ஒரு கவனிக்க வேண்டிய விஷயமும் இதில் உள்ளது. ஒரு ஏழைப்பெண் ஓடிப்போனால் ஒரே காரணம் தான் அது வரதட்சணை எனும் அரக்கன். தனக்கு தன் பெற்றோரால் திருமணம் செய்து வைக்க முடியாது என ஒரு பெண் முடிவெடுக்கும் போது ஓடிப்போக கண்டிப்பாக துணிவாள்.

  ReplyDelete
  Replies
  1. பெண் ஓடிப்போனதை இந்த சமுதாயம் ஒரு பெருங்குற்றமாக பார்க்கிறது. ஆனால் மனைவியையும் குழந்தையையும் தவிக்க விட்டு எத்தனை ஆண்கள் ஓடிப்போகிறார்கள் ? அவர்களை என் இந்த சமுதாயம் ஒரு குற்றவாளியாக பார்க்க மாட்டேன் என்கிறது. அவனை ஏன் ஓடிப்போய்விட்டான் என்று இந்த சமுதாயம் சொல்லவே மாட்டேன் என்கிறது ? //

   சத்தியமான உண்மை சகோ. இதன்வலி வேதனை அனுபவித்த பெண்களுக்கே தெரியும். அதிலும் இருகுழந்தைகளை வைத்துக்கொண்டு அவள்பட்டபாடும் வேதனையும் ஊராரின் பேச்சுக்களோடும் அவமானங்களை தாங்கியபடி. இன்றளவும் ஒழுக்கமாக தனது குழந்தைகளுக்காவே வாழும் வாழ்ந்துவருபவருக்கே புரியும்.

   இங்கே எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டாங்க சகோ. ஆணூக்கு கெட்டபெயர்வந்தால் அது அன்று அடுத்த நாளோ மறைந்துவிடும் ஆனால் பெண்ணுக்கு கெட்டபெயர்வந்தால்.அது அவளின் தலைமுறை தலைமுறையாய் பேசப்படுமென்பதை..

   தாங்கள் ஒரு ஆணாக இருந்துக்கொண்டும் பெண்ணின் பக்க நியாயங்களை எடுத்துரைப்பது சற்று நிம்மதியளிக்கிறது.. நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள் சகோ..

   Delete
 14. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அருமையான பதிவு, நல்ல அலசி ஆராய்ந்து நிதானமான எழுத்துக்கள். எங்களை சுயபரிசோதனை செய்ய இந்த பதிவு வாய்ப்பு, தொடருங்கள் ஜெஸக்கல்லாஹ் ஹைர் சகோதரி, இந்த தளத்தில் இருக்கும் ஓவ்வொரு பதிவும் பாதுகாக்கபடவேண்டியவை.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ. அலசி ஆராய்ந்து நிதானமாக எழுத எல்லாம் வல்ல இறைவனே கற்றுதருகிறான்..சகோ. உங்களுக்கு மட்டுமட்டுமல்ல எங்களையும்[பெண்களையும்] பரிசோதித்துக்கொள்ள ஒரு வாய்ப்பாக எண்ணிதான் இப்பதிவையே போட்டுள்ளோம் இப்பதிவுவில் இஸ்லாமிய பெண்மணிச் சகோதரிகளின் ஒத்துழைப்பும் உண்டு. தாங்கல் சொல்வதுபோல் இதிலுள்ள அனைத்தும் பாதுகாக்கப்படவேண்டியவைகளே.. மிக்க நன்றி சகோதரே.

   Delete
 15. சலாம் மலிக்கா! தவறுகள் இருபக்கமும் இருந்தாலும் அந்த தவறான செயல்கள் பெண் பக்கம் சற்று அதிகமாக நடப்பதால், குற்றச்சாட்டும் ஒருபக்கமே பார்க்கப்படுகிறது. ஆணோ/பெண்ணோ அது கண்டிக்கப்பட வேண்டிய, மாற்றம் கொண்டு வரவேண்டிய தவறுதான் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், இந்த தவறுகளைச் செய்யும் பெண்களின் பின்னால் இருக்கும் காரணங்களையும், அதைத் தடுக்க/களைய ஆண்கள் பக்கம் செயல்படுத்த வேண்டிய முக்கிய செயல்முறைகளையும் கூறிய விதம் ஆண்கள் சிந்திக்க வேண்டியவை! இவை எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும் இஸ்லாத்தின் அறிவுரைகளோடு அமைந்தது, மாஷா அல்லாஹ் அருமை தோழி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தோழி.தாங்கள் கருத்துக்கள் மிக சரி. குற்றம் இருபக்கமும் சில சமயங்களில் ஒருபக்கம் மிகுந்திருக்கும். அதனை இருவருமே திருத்திக்கொல்ள அல்லது அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொல்ள முனையவேண்டும் இல்லையெனில் இனிமையாக பிரிந்து இருவருமே சுமுகமாகவேண்டும்..அதனைதான் வலியுருத்தியுளோம் அதாவது முடிந்தவரை ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பின் பறிமாற்றங்களால் இணைந்திருக்கவேண்டும் அதையே இறைவனும் விரும்புகிறான்..

   மிக்க நன்றி தோழி..

   Delete
 16. மாஷா அல்லாஹ் அழகான தேவையான பகிர்வு அக்கா

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஃபாயிஜா.. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி..

   Delete
 17. அப்பட்டமான உண்மை மலிக்கா..

  அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்க போதுமானவன்..!

  வஸ்ஸலாம்"
  உங்கள் சகோதரி
  ஷர்மிளா ஹமீத்//

  ஆமீன் ஆமீன் யாரப்பல ஆலமீன்.. மிக்க நன்றி சகோதரி..

  ReplyDelete
 18. சலாம்! சிறந்த பதிவை அழகாக கோர்வையாக கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்குமுஸ்ஸலாம் அன்பான வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 19. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மலிக்கா...

  மாஷா அல்லாஹ் அருமையான ஆக்கம்... பெண்களை குற்றம் காணும் இந்த உலகம் உண்மையை என்று அறியப் போகிறதோ... சரியான நெத்தியடி வார்த்தைகள்.. அருமையான வார்த்தை கோர்வைகள்...

  உங்கள் எழுத்துப் பயணம் தொடர பல நல்ல கருத்துக்கள் உங்களிடம் இருந்து கிடைக்கப் பெற வல்ல இறைவன் உதவி புரிவானாக!!

  ReplyDelete
 20. அஸ்ஸலாமு அலைக்கும்,

  உங்களின் பல கருத்துக்களில் உடன் படுகிறேன், பொருளீட்ட வேண்டி வெளிநாடு செல்பவர்கள் தங்களுக்கு குடும்பத்தை தங்களுடன் வைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தால் அதை கட்டாயமாக செய்ய வேண்டும், இயலாது என்றால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு முடியுமோ அதை கொண்டு உள்ளுரில் ஏதேனும் தொழில் தொடங்கி குடும்பத்தோடு வாழ வேண்டும்

  ReplyDelete
 21. மிக மிக அவசியமான கட்டுரை...
  இடையிடையே எழுதப்பட்டிருக்கும் நபிமொழி அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி தமிழ்திரட்டி

   Delete
 22. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),

  மிகவும் அருமையான பதிவு, கணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய, மனைவிகள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அடங்கிய உபயோகமான பதிவு.....

  ReplyDelete
  Replies
  1. அறிந்து புரிந்துகொண்டாலே வாழ்க்கை பூலோக சொர்க்கம்தான்.. மிக்க நன்றி சகோ ஜீனத்

   Delete
 23. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்),

  மிகவும் அருமையான பதிவு, கணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய, மனைவிகள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அடங்கிய உபயோகமான பதிவு.....

  ReplyDelete
  Replies
  1. மிஸஸ்.குரல்,

   வாங்க வாங்க :))

   அன்பான கருத்துக்கள், நன்றி.... ஆனால் வீட்டுல சொல்ற மாதிரியே இங்கயும் மறந்து போயி ரெண்டு தடவை சொல்லிட்டீங்களோ :))))))))

   Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் மிசஸ் ஆப்போசிட் வாய்ஸ் மச்சி அண்டு பிரபல சமூக சேவகி அன்னு சகோ :)))


   அவங்க முதல்ல ஒரு வாட்டி சொன்னாங்களா.. அப்புறம் சொல்லிட்டமா இல்லையான்னு ஒரு குழப்பம் சோ திரும்ப சொல்லி இருக்காங்க..!! ஹிஹிஹி..!

   Delete
  3. அடடா ஒருக்கா சொல்லி அத மருக்கா சொல்லிட்டாங்க விடுவீங்களா. அதவிட்டுட்டு அப்பாலிக்கா இப்பாலிக்கா போட்டு
   “சோ” வையெல்லாம் நியாயஞ்சொல்லச்சொல்லி கூப்பிடுவது நியாமில்லைங்கோ. ஹி ஹி

   Delete
 24. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற பதிவு..இந்த மாதிரி செய்திகளை கேட்கும் போது மனதில் எழும் கோபத்தையும்,வருத்தத்தையும் தாண்டி எப்படி ஒரு தாயால் தன் குழந்தைகளை விட்டு செல்ல முடிகிறது என்ற கேள்வியோடு அந்த குழந்தைகள் இதன் பொருட்டு சமுதாயத்தின் மூலமாக அடைய போகும் அவமானங்களும்,ஏளன பேச்சுக்களுமே எப்போதும் கண் முன் வந்து போகும்..

  இன்றும் என்னால் ஜீரணிக்க படாத விசயங்களுள் இதுவும் ஒன்று..அது எதன் பொருட்டு நடந்தாலும் சரியே..தவறு யார் மீது இருந்தாலும் பாதிக்க படுவதென்னமோ குழந்தைகள் தான்..தப்புகள் எப்போதும் நியாயத்திற்கு உட்படுத்தப்பட்டவை அல்ல..அவை எப்போதும் தண்டிக்க பட வேண்டியவை..

  ஆனால் தன் வீட்டை முக்கியமாக கருதும் ஒரு பெண் எல்லாவற்றையும் துறந்து வெளிறேறுகிறாள் என்றால் அவளுக்கு அந்த வீட்டில் ஏதோ மிகப் பெரிய குறை இருக்கிறது என்று அர்த்தம்..ஏனென்றால் வீட்டை விட்டு வெளியேறுவது என்பது ஒரு பெண்ணுக்கு சாதாரண விசயம் அல்ல..ஒரு சில பெண்களைத் தவிர..

  என்ன காரணமாக இருக்கும் அதை எவ்விதத்தில் களையலாம் என்பதை மிக அருமையாக மாறுபட்ட கோணத்தில் மார்க்கத்தின் அடிப்படையில் எடுத்து சொல்லியதற்கு நன்றி..

  முன்பு நம் அத்தம்மாக்களும்,நன்னீமாக்களும் குடும்பத்தில் பட்ட சிரமத்தையா இன்று நாம் படுகிறோம் என்று கேட்டால் இல்லை என்ற பதிலை தான் சொல்ல வேண்டி இருக்கும்..ஆனாலும் ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டால் ஒட்டுமொத்தமாகவே சமுதாயத்தில் சகிப்புதன்மையும்.பொறுமையும்,விட்டு கொடுக்கும் தன்மைகள் குறைந்து சுயநலமும்,எதிர்பார்த்தலும் அதிகமாகி விட்டது..இதில் ஆண்,பெண் வித்தியாசம் இல்லை..

  கணவன் மனைவி இருவருக்கும் ஆன பரஸ்பரம் புரிதலும்,அதிகமான நேசமும்,ஒருவர் மற்றொருவர் மேல் வைக்கும் நம்பிக்கையும் தான் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்..

  நல்லதொரு சமூக சிந்தனை உள்ள பதிவை கொடுத்ததற்கு நன்றி சகோ..:-)

  ReplyDelete
  Replies
  1. //கணவன் மனைவி இருவருக்கும் ஆன பரஸ்பரம் புரிதலும்,அதிகமான நேசமும்,ஒருவர் மற்றொருவர் மேல் வைக்கும் நம்பிக்கையும் தான் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்..//

   உன்மைதான் சகோதரி.. இருவருக்கும் ஒருவர்மேல் ஒருவர் ஆழ்ந்த அன்பும் பாசமும் விடுக்கொடுக்கும் மனப்பக்குவமும் இருந்தாலே அவர்களுக்குள் மனக்கசப்பென்பதே வருவதற்க்கு இடமிருக்காது. அப்படியே வந்தாலும் அது மருந்துபோன்று சிறிதுநேரம் கசந்துவிட்டு அப்புரம் சரியாகிவிடும்..

   தங்களின் விரிவான கருத்துப்பரிமாற்றத்திற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஆயிஷா..

   Delete
 25. அஸ்ஸலாமு அலைக்கும் மலிக்கா...நலமா?
  தங்களின் பதிவு இன்றைய காலக்கட்டத்தில் நடந்துக் கொண்டிருக்கும் தவறுக்களுக்கு ஆணி அடித்தாற்போல் இருந்தது உங்கள் எழுத்துக்கள்.நம் சமுதாயத்தில் இது போன்ற தவறுகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் இருக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்க்குரிய விஷயம்.
  உங்களுடைய கருத்தக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணவன் மனைவியரும் சிந்திக்க வேண்டியவை.எல்லாம் வல்ல இறைவன் இத்தவறுகளிலிருந்து அனைவரையும் காப்பானாக....

  மிகவும் நல்ல அவசியமான கட்டுரையை எழுதியமைக்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  ***கணவன் மனைவி இருவருக்கும் ஆன பரஸ்பரம் புரிதலும்,அதிகமான நேசமும்,ஒருவர் மற்றொருவர் மேல் வைக்கும் நம்பிக்கையும் தான் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்..***

  மிகவும் சரியாக சொல்லியிருக்கீங்க ஆயிஷா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அப்ஷரா நலமா?

   ஆணி எங்கப்பா இறங்குது. நாம ஒருபக்கம் அடிச்சா அது வேற ரூட்டுல போகுது. //தங்களின் பதிவு இன்றைய காலக்கட்டத்தில் நம் சமுதாயத்தில் இது போன்ற தவறுகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டேதான் இருக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்க்குரிய விஷயம்// அதைதான் கொஞ்சமேனும் குறைக்க வழிகள் சொல்லலாமுன்ன ஏன் சொல்றீங்க அது தானா சரியாகும். என்கிறார்கள். நன்மையின்பக்கம் வாருங்கள் தீமையினை தடுத்துக்கொள்ளுங்கள் என உரக்க சொல்வோம் கேட்ப்பவர்கள் கேட்டுக்கொள்ளட்டம். இறைவனின் நாட்டமிருந்தால் நம் அனைவரின் மனங்களும் நல்லவைகளின் பக்கம் மட்டுமே திரும்பட்டும்.

   தங்களின் அன்பான மற்றும் அறிவுரையான கருத்துகளுக்கு மிக்க நன்றி அப்ஷரா..

   Delete
 26. நல்லதொரு கட்டுரை. பல விஷயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுக்கள்.

  எனக்கு அளிக்கப்பட்ட ஓர் விருதினை தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
  http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
  இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.
  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. வாங்கய்யா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் தாங்கள் எனகளித்துள்ள விருதுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. தங்களைபோன்ற பெரியவர்களின் ஊக்கம என்றென்றும் வேண்டும் எங்களின் பதிவுகளுக்கு. மிக்க நன்றி அய்யா..

   Delete
 27. நிகழ்காலத்திற்கேற்ற அருமையான பதிவு...!

  Jazakallah சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் அன்பு கருத்துகளுக்கு நன்றி..

   Delete
 28. salaam

  சமுகத்தில் நிலவும் கேவலமான செயலை தடுக்க உங்கள் கட்டுரை ஓர் நல்ல முயற்சி.

  அன்பான வேண்டுகோள்:இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை(பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்) அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.

  Read more: http://tvpmuslim.blogspot.com/2012/07/baitul-maal-thiruvalaputhur-A-beautiful-model.html

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்குமுஸ்ஸலாம். கேவலைங்கள் இனியும் நடக்காதிருக்க இறைவன் துணையிருக்கவேண்டும்.. இறைவனின் கட்டளைகளை ஏற்று அதன்படி செயலாற்றவும் மார்க்கம் சொல்லித்தந்தபடி நல்லவைகள் ஏவி தீயவைகளைதடுக்க ஏதோ நம்மால் ஆன சிறு செய்கைகளே நாங்கள் பதியும் பதிவுகள்.. அல்லாஹ் போதுமானவன்.. அனைத்தும் அறிந்தவன்..

   மிக்க நன்றி திருவாளப்புதூர் முஸ்லீம்

   Delete
 29. இன்றைய கால பிரச்சினைக்கு ஏற்றார் போல நல்ல ஒரு கட்டுரை .! நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள் .

  - காயின் காதர்
  புருனை தாருஸ்ஸலாம்

  ReplyDelete
 30. இன்றைய கால பிரச்சினைக்கு ஏற்றார் போல நல்ல ஒரு கட்டுரை .! நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள் .

  - காயின் காதர்
  புருனை தாருஸ்ஸலாம்

  ReplyDelete
 31. இன்றைய கால பிரச்சினைக்கு ஏற்றார் போல நல்ல ஒரு கட்டுரை .! நல்ல முயற்சி ... வாழ்த்துக்கள் .

  - காயின் காதர்
  புருனை தாருஸ்ஸலாம்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ..

   Delete
 32. // தமது மனைவியரிடத்தில் அன்பாக நடங்கள்; அவளோடு உண்ணுங்கள்; பருகுங்கள்; அவளின் தேவையறிந்து நடந்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் கட்டளையிடுகிறது இஸ்லாம். ஆனால் அதை சரிவர செய்கிறார்களா கணவர்மார்கள்??? //

  அதாவது... மனைவியிடம் அன்பில்லாமல், கடுமையுடன் நடந்துகொள்கிறார்கள்; அதனால் பொறுக்கமுடியாத நிலையில் பெண்கள் ஓடிவிடுகிறார்கள்... ஆண்கள்தான் குற்றவாளிகள். இது உங்களின் ஒரு பார்வை.

  // நண்பர் என்று அதீத நம்பிக்கை வைத்து அதிகமாக வீட்டுக்குள் அனுமதிப்பது! கணவர் இல்லாத நேரத்திலும் தனியே வர அனுமதிப்பது, வெளியில் போக அனுமதிப்பது, இதனால் கணவரை விட அதிகம் நேரம், நெருக்கம் நண்பருடன் அதிகமாகிறது... அத்துடன் நண்பர்களின் குணாதிசயங்களை அதிகமாக மனைவியிடம் கூறுவதால் காதல், பாசம் உள்ளுணர்வில் ஏற்பட ஆண்களே வழி வகுத்துக் கொடுக்கின்றனர். இதனாலும் தவறுகள் அதிகரிக்கிறது. //

  மனைவியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, முழுச் சுதந்திரம் கொடுத்ததனால், அவள் வேறு பக்கம் ஈர்க்கப்பட்டுவிட்டாள். இங்கும் ஆண்கள்தான் குற்றவாளிகள். இது உங்களின் இன்னொரு பார்வை.

  அப்படியானால், ஆண்கள் எப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. //அதாவது... மனைவியிடம் அன்பில்லாமல், கடுமையுடன் நடந்துகொள்கிறார்கள்; அதனால் பொறுக்கமுடியாத நிலையில் பெண்கள் ஓடிவிடுகிறார்கள்... ஆண்கள்தான் குற்றவாளிகள். இது உங்களின் ஒரு பார்வை.//

   அதுவும் ஒரு காரணம் என்றே சொல்கிறோம். கணவன் மனையென்றால் அர்த்தமென்ன அன்பின் எடுத்துக்காட்டல்கள்தானே அதுவே அங்கே இல்லையென்னும்போது அது எங்கே கிடைக்கிறதோ அங்கே தாவுகிறது மனது. அதனை தடுப்பது யார்பொறுப்பு இறைவன் ஆணுக்கே அதிக வலுவையும் சக்தியையும் தந்துள்ளான் அதேபோல் அன்பில் அதிக கவனம் செலுத்தக்கூடியவனும் ஆணே [எல்லோரும் அப்படியல்ல] ஆகவேதான் அன்புகொள்ளச்சொல்லி வேண்டுக்கோள் விடுகிறோம் அதிலும் யாரிடம் உங்கள் மனையியரிடம் இது தவறா?

   //மனைவியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, முழுச் சுதந்திரம் கொடுத்ததனால், அவள் வேறு பக்கம் ஈர்க்கப்பட்டுவிட்டாள். இங்கும் ஆண்கள்தான் குற்றவாளிகள். இது உங்களின் இன்னொரு பார்வை.//

   முழு சுதந்திரத்தை என்பதை தவறாக எடுத்துக்கொள்ளும்போது அதன் அறிகுறிகள் நிச்சயம் தெரிந்துவிடும் அப்போதிலிருந்தே உசாராக இருக்கவேண்டுமென்றுதான் சொல்கிறோம். இஸ்லாம் அனுமத்துள்ளவற்றை பின்பற்றினால் நம்மில் பலருக்கு நண்பர்மூலமாலகே துரோகங்கள் இழைக்கப்படமாட்டாது. இது மனசாட்சியுள்ளவர்களுக்கு மட்டுமே உ[ண]ரு[த்து]ம் எல்லோரும் அப்படியல்ல எங்கேனும் இதுபோன்று நடக்கவே நடக்கக்கூடாது என்ற நல்நோக்கத்திற்காகவே இப்பதிவு..

   Delete
 33. // தனக்கான செல்வமொன்று வீட்டிலிருப்பதையே மறந்துவிட்டு, செல்லென்னும் அழைபேசி வழியே ஆண்டுக் கணக்கில் உறவாடிவிட்டு பணம் பணம் என்று செல்வத்தின் பின்னேயே ஓடி ஓய்கின்றனர். இங்கே இவள் சொல்லியழக்கூட ஆளில்லாமல், சாய்ந்து அழக்கூட தோளில்லாமல் வாட்டம் கண்டு, வாழ்வே ஆட்டம் கண்டதுபோல் உணருகிறாள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பல கணவர்கள் செய்யும் செயல்களை! //

  வெளிநாட்டு வாழ்க்கையால் தனிமைக் கொடுமையை அனுபவிப்பது பெண்கள்தான் என்ற தொனியில் எழுதியிருக்கிறீர்களே... வேடிக்கையாக இருக்கிறது. கணவனைத் தவிர மற்ற அனைத்துடனும் (குழந்தைகள், சுற்றம், நட்பு, சமூகம்) வாழ்கிறார்கள் மனைவிகள். ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தொலைத்துவிட்டு ஒற்றைப் பனைமரமாய் வெளிநாட்டில் வாழ்கிறார்கள் கணவன்கள். உண்மையாகச் சொல்லுங்கள்.. சொல்லியழ ஆளின்றி, சாய்ந்து அழத் தோளின்றி வாழ்பவர்கள் யார்? மனைவிகளின் தனிமை என்பது பொதுச்சிறை. கணவர்களின் தனிமை என்பது தனிச்சிறை. எது மிகவும் கொடுமையானது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டுமா?

  வெளிநாட்டு சம்பாத்தியம் என்ற சாபத்தின் சூத்திரதாரி யார்? வெளிநாடு போய்த்தான் ஆகவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்து, வருடக் கணக்காய் படுக்கையை வெளியே போட்டுவிட்டு, பின் விசா வந்ததும், ‘வாங்க மச்சான் உள்ளாற’ என்று சொல்லும் பெண்களைத் தாங்கள் அறியவில்லை போலும். முடிந்தால் ஒரு சர்வே எடுத்து அறிவியுங்கள், வெளிநாட்டு வாழ்வை முடித்துக்கொள்ள அதிகம் விரும்புவது ஆண்களா இல்லை பெண்களா என்று. அப்பொழுது தெரியும், இத்தனிமை முரணால் நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளின் ஆணிவேர் எங்கே தொடங்குகிறது எனபது.

  ReplyDelete
  Replies
  1. இதைநான் மறுக்கவேயில்லை வெளிநாட்டுவாழ்க்கை எப்படியிருக்குமென்று நானும் அனுபவித்துள்ளேன் பலபலவருடங்கள்.
   சம்பாத்தியம்மட்டுமே வாழ்க்கையில் நிறைவைதந்துவிடாது அதனை உணராத பெண்களுக்கு வேண்டுமெனில் நீங்கள்சொல்வதுபோலிருக்கலாம்.


   //Naazar - Madukkur30 July 2012 12:20

   அஸ்ஸலாமு அலைக்கும்,

   உங்களின் பல கருத்துக்களில் உடன் படுகிறேன், பொருளீட்ட வேண்டி வெளிநாடு செல்பவர்கள் தங்களுக்கு குடும்பத்தை தங்களுடன் வைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தால் அதை கட்டாயமாக செய்ய வேண்டும், இயலாது என்றால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு முடியுமோ அதை கொண்டு உள்ளுரில் ஏதேனும் தொழில் தொடங்கி குடும்பத்தோடு வாழ வேண்டும்.//

   இதை இதைத்தான் வலியுருத்துகிறோம் அல்லது வசயிருந்தால் அங்கேயே தன்னுடன் வைத்துக்கொள்ளவும் சொல்கிறோம்..

   மனையென்பவள் யார் உங்களின் உடமை நீங்கள் உங்களின் கஷ்ட நஷ்டத்தில் பங்கெடுக்கூடியவள் சொல்வதை சொல்லும்விதத்தில் சொன்னால் ஏற்க்கக்கூடியவள். .என்னைபோல் வாழ்க்கை யாருக்குமோ அல்லது யாரைபோல் வாழ்க்கை எனக்குமோ அமையமுடியாது அப்படியே அமைந்தாலும் அதில் சிறு குறைநிறைகள் இருக்கத்தான் செய்யும்.என்பதை புரியும்படி உணர்த்துங்கள். எவ்வகையிலும் ஏற்காவிட்டால் அது அவளின் திமிர்தனம்.மெத்தனபோக்கு. வரட்டுப்பிடிவாதம். பிறரைபோலவே தானும் வாழவேண்டுமென்ற அதிக ஆசை.அதனை சரிசெய்யவேண்டிய முறையில் சரிசெய்யுங்கள். அல்லது இறைவன் எதைச்சொல்லியுள்ளானோ அதை செய்யுங்கள்..

   Delete
 34. // சும்மா ஓடிப்போறா, ஓடிபோறான்னு குற்றம் சொல்லிகிட்டிருக்கோமே தவிர, அதுக்குக் காரணம் பற்றி யாரும் கண்டுக்குறதில்ல! கல்யாணமாகாத சின்னப் பொண்ணுன்னாகூட அறியாப் பருவம், இனக்கவர்ச்சின்னு சொல்லலாம். ஆனா கல்யாணமான பொண்ணும் போறாங்கன்னா ஏன் என யாரும் யோசிக்கிறதில்லையே ஏன்? உடல்சுகம் என்ற குறுகிய வட்டத்திற்குள்ளாகவே பிரச்சனையை பெண்பக்கம் திசைதிருப்பி ஆண்களின் தவறை அவர்களுக்கு கடைசிவரை உணர்த்தாமல் போய்விடுகிறோமே ஏன்? //

  ஒரு கல்யாணமான பெண் ஓடிப் போறான்னா அதுக்குக் காரணம் அவளுடைய கணவனின் கொடுமைதான் என்கிறீர்கள்; அவளுடன் சேர்ந்து ஓடிப்போகிறானே, அவனுக்குக் காரணம் யாராக இருக்கும்? அவன் மனைவியாக இருக்கலாமோ?

  ReplyDelete
  Replies
  1. @ சகோ ஜாபர் அலி

   ஓடிப் போகும் பெண்கள் உத்தமிகள் என்றும், அதற்கு முழு காரணமும் ஆண்களே என்றும் சொல்வதாக புரிந்துக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். நிச்சயமாக இங்கே அப்படி சொல்லவில்லை சகோ.

   ஓடிப் போகும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டிய கழிசடைகளே! ஆனால் கண்ணியமாக வாழவேண்டியவர்கள் கழிசடைகளாவதற்கு இருக்கும் பல காரணங்களில் முக்கியமானதாக இருக்கக்கூடிய ஒரு காரணத்தைப் பற்றி மட்டும் இங்கே அலசப்பட்டுள்ளது.

   அதாவது பெண்கள் மீது பொறுப்பும் கவனமும் செலுத்தவேண்டிய (சில) ஆண்கள் எவ்வாறு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதையும், அதை எப்படி களையலாம் என்பதையும் பல கோணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அன்பினாலும், அக்கறையினாலும், இஸ்லாம் கூறும் கட்டுப்பாடுகளினாலும் கடிவாளம் போடுங்கள் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொண்டு மீண்டும் படித்துப் பாருங்க சகோ, சொல்ல வந்தது உங்களுக்கு புரியும் இன்ஷா அல்லாஹ்!

   கூடுதல் விளக்கம் கொடுப்பதற்கு உங்களின் விமர்சனம் உதவியமைக்கு நன்றிகள் சகோ.

   Delete
  2. //ஓடிப் போகும் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டிய கழிசடைகளே! ஆனால் கண்ணியமாக வாழவேண்டியவர்கள் கழிசடைகளாவதற்கு இருக்கும் பல காரணங்களில் முக்கியமானதாக இருக்கக்கூடிய ஒரு காரணத்தைப் பற்றி மட்டும் இங்கே அலசப்பட்டுள்ளது.//

   இது உண்மையே உண்மையைத்தவிர வேறில்லை

   Delete
 35. நீங்க ஏன் கொடுமை கொடுமை என்கிறீகள் சகோ.
  மனைவிக்கும் கணவனும் கணவனுக்கு மனைவியும் துரோகம் இழைப்பது மாபெரும்குற்றம் இதை எண்ணாமல் அவரவர் சுகங்களுக்காக ஒருவரை மற்றவர் ஏமாற்றி துரோகமிழைத்து வாழ்வோரின் வாழ்க்கை நிம்மதியாக இருக்குமா என்றால் சத்தியமாக இருக்காது மனசாட்சியுடையோராக இருந்தால்.

  எதுவென்றபோதும் குற்றமோ தவறோ யார் செய்தாலும் தவறு தவறே.. ஆக நீங்கள் சொன்ன இருயிடத்தில் இருபாலரும் இருக்கிறார்கள்.

  //கைப்பிடித்தவன் கை தவறாமல்
  கண்ணாடிகள் உடைவதில்லை
  வேலிக்குள் இரை இருக்கும் வரை
  எந்த வெள்ளாடும் வேலி தாண்டுவதில்லை..

  இவ்வரிகள் தந்தமைக்கு நன்றி ஹைதர் அலியண்ணா..//

  ReplyDelete
 36. http://www.youtube.com/watch?v=Gd1onMRyX_Y&list=UUtm3KAhJCDMMcghS3BwCH7g&index=1&feature=plcp

  ReplyDelete
 37. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

  Alahaana theliwAana Padhiwu maleeka

  Inraya kaalathulu indha pirachanai sarwa saadhaaranamaahiwittathu
  Aanalum padithaandum pengalai wida
  Manasukkul kumuri wedhanai pattu wirakthiyai thanathaaakkiya Pengal thaanga adhiham.Idhu ewwalawu thooram unmai enbathu anufawiththawangalukkuthaan nalla Puriyum.

  Aangalin paaraa muhamthaan idhatku withthiduhirathu enbathu en karuththu.
  Welai welai endru panam sambaathippathil neraththai tholaiththu weedu wandhaal sidu siduppu.
  Pengal eththanai anbaaha nadandhaalum andha neraththil edupadaathu.
  Pengal adippadayil anbukku adimai.
  Aangal konjam karisanai kaatti pAarungal weettil narumanam kamalum waasanai mookkai thulaikkum.

  Sahodhari maleeka. Kooriyathoo sariye. Miha miha sariye.
  Thawaruhal nadandhaalum konjam. Wittukoduththal waalkai sufeetchame.

  [Mbl enbathaal tamil typing saathiyamillai. Yaarawadhu tamil ku maatrinaal waasikka ilahuwaaha. Irukkum]

  Wassalam
  F.Nihaza

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரர் அவர்களின் புரிதலான கருத்துகளுக்கும் அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம் ஆண்கள் பெண்கல்மேல் கரிசனம்காட்டி அன்பைபொழிந்தால் குடும்பம் ஆனந்தத்தில் திழைக்கும்.. என்பதுதான். சகோதரருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்..

   Delete
 38. இங்கே “ஓடிப்போவது” என்பதை நாம நியாயப்படுத்தவே இல்லை. அதன் காரண காரியங்களை ஆராய்கிறோம், அவ்வளவுதான். “நோய் நாடி, நோய் முதல்நாடி” என்பது போல், நோயை மட்டும் குணப்படுத்தினால் முழு நிவாரணம் இருக்காது. அதன் “மூலத்தையும்” - அடிப்படை காரணத்தையும், கண்டுபிடித்து மருந்து கொடுத்தால்தான், மீண்டும் நோய் தாக்காது!!

  ஒரு ஊரில் தற்கொலை நிறைய நடக்கிறது என்றால், ’தற்கொலை செய்யாதீங்க, அது ஹராம்’ என்று மட்டும் பிரச்சாரம் செய்தால் போதாது. தற்கொலைக்குத் தூண்டுவது எவை - பொருளாதாரக் காரணங்களா, மருத்துவக் காரணிகளா, குடும்பப் பிரச்னைகளா, கந்துவட்டியா இல்லை காவல்துறையின் அட்டகாசமா... இதுபோல காரணங்களையும் கண்டுபிடிச்சு அதையும் சரி செய்யணும். அதுதான் முழுதீர்வு!!

  அதைத்தான் இங்கு செய்கிறோம்!!

  ReplyDelete
  Replies
  1. விழிப்புணர்வு மாநாடுகள் போட்டாலும். எத்தனையோ வழிகளீல் பிரச்சாரம் செய்தாலும் பலவற்றிர்க்கு இன்னும் தீர்வுகள் கிடைக்காமலே சென்றுகொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

   ஆனால்

   இவைகளோ நம்மை நாமே சரி செய்துகொள்ள. நம்மை நாமே பரிசோத்தித்துக்கொள்ள நம்மிடமுள்ள குறைகளை கலைந்துதெறிந்து நிறைகளை அணியச்சொல்லியே சொல்கிறோம்.நம்மைச்சுற்றியுள்ளதை சரி செய்யும் முன்பு நம்மை சரிசெய்துகொண்டால் நம் வாழ்க்கையில் நிம்மதியென்ற ஒன்றை தெளிவாய் உணரலாம்..

   Delete
 39. நாயகம்(ஸல்) அவர்கள், “பெண்கள் விலா எலும்பு போன்று வளைந்தவர்கள். அவர்களை நிமிர்த்த முயலாதீர்கள். முயன்றால் ஒடிந்துவிடுவார்கள்” என்று சொன்னார்கள். அதாவது பெண் என்பவள் அத்தனை மெல்லியவள் என்று அர்த்தம்.

  ஆனால், இங்கு என்ன நடக்கிறது? பெண்தான் குடும்பத்தில் எல்லாரையும் அட்ஜஸ்ட் செய்து நடந்துகொள்ளணும் என்பதுதான் ஆரம்பம் முதலே அட்வைஸ்!!

  ReplyDelete
  Replies
  1. பல இடங்களில் ஒடிந்து மூலையில் கிடக்கிறார்கள் பயனற்றவைகளாக! சிலயிடங்களில் நிமிர்த்த முயல்பவர்களையே நிலைகுலையவும் செய்துவிடுகிறார்கள்.

   Delete
 40. அஸ்ஸலாமு அலைக்கும்,

  இந்த விசயத்தில் ஆணையோ பெண்ணையோ குற்றம் சொல்லி புண்ணியமில்லை, இதற்க்கான காரணங்களை அலசி அதை தீர்க்க வேண்டும்.
  - மாணவபருவத்தினரை நம்புங்கள் ஆனாலும் அவர்களின் மாற்றங்களை கவனிக்க தவறாதீர்கள்
  - ஆணோ பெண்ணோ திருமணத்திற்கு முன் அவர்களின் சம்மதத்தை பெறுங்கள்
  - ஆண்கள் தங்களின் துணைவியாரை நண்பராய் நடத்துங்கள், அவர்களும் தங்களின் எண்ணங்களை உங்களிடம் எந்த சங்கடமும் இல்லாமல் பேச பகிர அனுமதியுங்கள், ஊக்கபடுத்துங்கள்
  - திருமணம் முடிந்து உடனே வெளிநாடு வருபவர்கள், தினமும் அவர்களிடம் பேசுங்கள், அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று உணர்த்துங்கள்

  ReplyDelete
  Replies
  1. சகோவின் வரிகள் அனைத்தும் சரியே! எதுவென்றபோதும் அழகிய முறையில் பேசி சரிசெய்யுங்கள்..

   -// ஆண்கள் தங்களின் துணைவியாரை நண்பராய் நடத்துங்கள், அவர்களும் தங்களின் எண்ணங்களை உங்களிடம் எந்த சங்கடமும் இல்லாமல் பேச பகிர அனுமதியுங்கள், ஊக்கபடுத்துங்கள்.//

   நிச்சயமாக..

   மிக்க நன்றி சகோதரர் அவர்களே..

   Delete
 41. அஸ்ஸலாமு அலைக்கும்

  உண்மையான அலசல் சகோ
  ஒவ்வொரு விஷமும் அதன் காரண காரியங்களும்
  ரெம்ப தெளிவா சொல்லப்பட்டு இருக்கிறது

  பெண் ஓடிபோவத்ர்கு பெண் மட்டுமல்ல ஆணும் காரணம் ஆகிறான்
  நீங்க சொன்ன எல்லா விஷயங்களும் உண்மையே -வரவேற்கிறேன் சகோ

  குறிப்பா இந்த மாதிரியான நிகழ்வுகள்
  நடந்து வருவது வெட்ககேடான விஷயம்

  அதான் தவறுகளை காரண காரியங்களை சுட்டி காட்டி
  நல்ல ஒரு விழிப்புணர்வு கட்டுரை வழங்கிய உங்களுக்கு
  என் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்

  ஒரு விஷயம்

  இந்த கட்டுரை நம் தமிழ் நாளிதழ் வந்தால்
  நிறை பல மக்களை ஆன் பெண் இரண்டு தரப்பினரையும் போய் சேர்ந்தால்
  இன்னும் நிறைவாய் இருக்கும்

  கணினி மனிதர்களுக்கு மட்டும்மல்லாமல் எல்லா தரப்பிலும் கொண்டு செல்ல
  வேண்டும் -இந்த நவ காலத்தில் இது அவசியமும் கூட சகோ

  உங்களின் நல் சிந்தனைகள் தொடரட்டும்
  பாராட்டுக்கள் சகோ

  வஸ்ஸலாம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ தங்களின் வருகைக்கு முதலில் மகிழ்ச்சி..

   தங்களின் புரிதலான கருத்துகளுக்கு மிகுந்த சந்தோஷம்

   //இந்த கட்டுரை நம் தமிழ் நாளிதழ் வந்தால்
   நிறை பல மக்களை ஆண்பெண் இரண்டு தரப்பினரையும் போய் சேர்ந்தால்இன்னும் நிறைவாய் இருக்கும். கணினி மனிதர்களுக்கு மட்டும்மல்லாமல் எல்லா தரப்பிலும் கொண்டு செல்ல
   வேண்டும் -இந்த நவநாகரீக காலத்தில் இது அவசியமும் கூட சகோ.//

   இன்ஷாஅல்லாஹ் அதற்காக முயர்ச்சிசெய்கிறேன் சகோ..

   சகோவின் அன்பான கருத்துரைக்கும் என மனமாந்ர்த நன்றிகள்..

   Delete
 42. அஸ்ஸலாமு அலைக்கும் தங்கையே,

  நல்ல அலசல். சமூக அக்கறை தங்களுக்கான கூலியை இறைவனிடத்தில் பெற்றுத் தரும்.

  பெண்ணியம் பற்றிய என் நிலைப்பாடு கீழ்கண்ட தொடுப்பில் உள்ளது.

  http://adirainirubar.blogspot.com/2012/07/blog-post_17.html#comment-form

  ReplyDelete
  Replies
  1. வாங்க சபீர் காக்கா. தங்களின் துஆக்களுக்கும் அன்பான கருத்துகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..
   பெண்ணியம் பற்றி நல்லதொரு ஆக்கம்.

   Delete
 43. அருமையான கருத்துக்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் நல்லருள் புரிவானாக. (ஆமின்)

  ReplyDelete
  Replies
  1. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். சகோதரர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 44. நல்ல பகிர்வு சகோதரி!பெண்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. பெண்களை ஆண்களும் ஆண்களை பெண்களும் புரிந்துகொண்டால் வாழ்க்கை பூலோக சொர்க்கம்..

   புரிந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி சகோ..

   Delete
 45. வருத்தப்பட வேண்டிய விஷயத்தை கூறி இருகிறீர்கள் .. வாழ்த்த முடியாது .. ஒவ்வொரு பெண்ணும் இன்றைய வாழ்க்கை நிலையில் .. தனது கணவனுடன் புரிந்து கொள்ளாத வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .. கணவனும் தான் அதிகமாக நேசிப்பதாக கூறி கொண்டு .. விமர்சனம் என்ற பெயரில் அவளின் அடி மனதை காயபடுத்தி பார்கிறார்கள் .. இந்த வேதனையில் இருக்கும் போது தான் அருகில் இருக்கும் அந்நியர்கள் அல்லது வலைத்தளத்தில் இருக்கும் காமுகர்களின் வலையில் விட்டில் பூச்சி போல் விழுந்து விடுகிறார்கள் .. அவர்களின் வேதனைகளை நன்கு தெரிந்து கொண்டு .. அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது போல் பாசாங்கு காட்டி தங்களின் உடல் தேவைகள் முடிந்த பின் அவர்களை அம்போ என்று விட்டு விடுகிறார்கள் .. எல்லாம் முடிந்த பிறகு வாழவும் வழி தெரியாமல், திரும்பவும் முடியாமல் வாழ்கையை தொலைத்து இருப்பவர்கள் அதிகம் .. எவர் ஒருவர் தீன் வழியில் நடந்து கொள்கிறார்களோ அவர்களின் பாதுகாப்பிற்கு இறைவன் பொறுப்பு ஏற்று கொள்கிறான் .. புரிந்து நடப்பார்கள் என்று இனியாவது நம்புவோம் .. வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் கூற்றுக்கள் அனைத்தும் உண்மையே! கொடி படரும்போது பக்கத்திலிருப்பது முள்ச்செடியா மூங்கில் மரமா என்றேல்லாம் பார்ப்பதில்லை அதுபோலவே! புறக்கணிக்கபடும் மனதும் அல்லது புண்பட்ட மனதும். அல்லது கொழுப்பேரிய மனதும். தான் செய்வதரியாது படர்வதுபுரியாது படுகுழியில். அல்லது பட்டுகிழிக்கும் முள்ளில் விழுந்துவிட்டு எழத்தெரியாது. வாழ்க்கை புரியாது விழித்து நிற்க்கும்வேளை பலருக்கு வாய்த்துவிடுகிறது.

   இறைவா என் இனத்தை காப்பாற்று. என்று இறைஞ்சி வேண்டுவதை தவிர எனக்கு வேறு வழிதெரியவில்லை.. எல்லாம் வல்ல இறைவன் பெண்ணின் மானத்தை காக்கவேண்டும்.அதற்க்கு துணையாய் கணவனும் இருக்கவேண்டும்..


   தங்களின் ஆதங்க கருத்துக்களுக்கும் அன்புகூர்ந்த வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

   Delete
 46. வருத்தப்பட வேண்டிய விஷயத்தை கூறி இருகிறீர்கள் .. வாழ்த்த முடியாது .. ஒவ்வொரு பெண்ணும் இன்றைய வாழ்க்கை நிலையில் .. தனது கணவனுடன் புரிந்து கொள்ளாத வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .. கணவனும் தான் அதிகமாக நேசிப்பதாக கூறி கொண்டு .. விமர்சனம் என்ற பெயரில் அவளின் அடி மனதை காயபடுத்தி பார்கிறார்கள் .. இந்த வேதனையில் இருக்கும் போது தான் அருகில் இருக்கும் அந்நியர்கள் அல்லது வலைத்தளத்தில் இருக்கும் காமுகர்களின் வலையில் விட்டில் பூச்சி போல் விழுந்து விடுகிறார்கள் .. அவர்களின் வேதனைகளை நன்கு தெரிந்து கொண்டு .. அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது போல் பாசாங்கு காட்டி தங்களின் உடல் தேவைகள் முடிந்த பின் அவர்களை அம்போ என்று விட்டு விடுகிறார்கள் .. எல்லாம் முடிந்த பிறகு வாழவும் வழி தெரியாமல், திரும்பவும் முடியாமல் வாழ்கையை தொலைத்து இருப்பவர்கள் அதிகம் .. எவர் ஒருவர் தீன் வழியில் நடந்து கொள்கிறார்களோ அவர்களின் பாதுகாப்பிற்கு இறைவன் பொறுப்பு ஏற்று கொள்கிறான் .. புரிந்து நடப்பார்கள் என்று இனியாவது நம்புவோம் .. வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துகளுக்கு மேலே பதிலிட்டுள்ளேன்.பொருமையாக படித்து கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மீண்டும் நன்றி சகோ முஜிப் அகமத்

   Delete
 47. வருத்தப்பட வேண்டிய விஷயத்தை கூறி இருகிறீர்கள் .. வாழ்த்த முடியாது .. ஒவ்வொரு பெண்ணும் இன்றைய வாழ்க்கை நிலையில் .. தனது கணவனுடன் புரிந்து கொள்ளாத வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .. கணவனும் தான் அதிகமாக நேசிப்பதாக கூறி கொண்டு .. விமர்சனம் என்ற பெயரில் அவளின் அடி மனதை காயபடுத்தி பார்கிறார்கள் .. இந்த வேதனையில் இருக்கும் போது தான் அருகில் இருக்கும் அந்நியர்கள் அல்லது வலைத்தளத்தில் இருக்கும் காமுகர்களின் வலையில் விட்டில் பூச்சி போல் விழுந்து விடுகிறார்கள் .. அவர்களின் வேதனைகளை நன்கு தெரிந்து கொண்டு .. அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது போல் பாசாங்கு காட்டி தங்களின் உடல் தேவைகள் முடிந்த பின் அவர்களை அம்போ என்று விட்டு விடுகிறார்கள் .. எல்லாம் முடிந்த பிறகு வாழவும் வழி தெரியாமல், திரும்பவும் முடியாமல் வாழ்கையை தொலைத்து இருப்பவர்கள் அதிகம் .. எவர் ஒருவர் தீன் வழியில் நடந்து கொள்கிறார்களோ அவர்களின் பாதுகாப்பிற்கு இறைவன் பொறுப்பு ஏற்று கொள்கிறான் .. புரிந்து நடப்பார்கள் என்று இனியாவது நம்புவோம் .. வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 48. திருமதி. மலிக்கா பாரூக் அவர்களே...!

  நீங்கள் இப்பதிவில் சொன்னதெல்லாம் சரி...!

  ஓடிப்போவதில் ஆணுக்கு பெண்ணோ...! பெண்ணுக்கு ஆணோ...! சளைத்தவர்கள் இல்லை...!

  இதற்கு முழு காரணமே..!

  இன்றைய அகச்சூழல்கள்.... புறச்சூழல்கள்தான்...!

  நீங்கள் என்ன சொன்னாலும் வேலி தாண்டும் வெள்ளாடுகள்..... தாண்டிகொண்டுதான் இருக்கும்...!

  "உன்னைக் கேட்டுப் பாரு... நீ யாரென்று...?

  உனை நீ அறிவாயோ... நீ எவரென்று...?" என தன்னைத்தானே எவரும் "சுயபரிசோதனை"க்கு ஆளாக்கிட விரும்புவதேயில்லை...!

  அப்படி... தன்னைத்தான் யாரேன உணர்ந்தாலே இக்கேடுகள் நிகழா என்பது என் கருத்து...!

  ஆயினும்...

  தங்கள் இப்பதிவு அருமை...! வாழ்த்துக்கள்...!

  நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்திருக்றிரீர்கள்....! அது நிமிர்த்த முடியுமா? அல்லது நிமிருமா.....?  ReplyDelete
  Replies
  1. அடடா யாரிது நம்ம புலவரா இங்கே.. வாங்க வாங்க முரளியாரேெமற்றும் புலவரே உங்கள் கூற்றுக்கள் அனைத்தும் சரியே.

   //ஓடிப்போவதில் ஆணுக்கு பெண்ணோ...! பெண்ணுக்கு ஆணோ...! சளைத்தவர்கள் இல்லை...//

   உண்மைதான். மூச்சிரைக்க ஓடி ஓடி சேர்ந்த இடம் என்னவோ தெருக்கோடிதான்! அதை அறியமறுக்கும் கூட்டங்களாக மாறிவருவதுதான் வேதனைக்குறிய விசயமாக இருந்துவருகிறது.

   //உனை நீ அறிவாயோ... நீ எவரென்று...?" என தன்னைத்தானே எவரும் "சுயபரிசோதனை"க்கு ஆளாக்கிட விரும்புவதேயில்லை.//

   அதுவும் உண்மைதான் ஆனால் எல்லோரும் அப்படியில்லை என நானும் சொல்லப்போவதில்லை.இருந்தாலும் ஒரு சிலரும் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

   அப்புறம்.//நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்திருக்றிரீர்கள்....! அது நிமிர்த்த முடியுமா? அல்லது நிமிரும்/// நிமிர்த்தனும் என முடிவு செய்தாச்சி அது நாய்வாலா இருந்தா என்ன நரிவாலா இருந்தா என்ன. ஒரு கை பார்த்துடலாமேன்னுதான்..

   Delete
  2. புலவரே தங்களின் வருகைக்கும் ஆக்கப்பூர்வமான கேள்வி மற்றும் கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றி. அப்பப்ப வந்துட்டுபோங்க..ஆக்கப்பூர்வ கேள்விகள் கேட்கவாவது..

   Delete
  3. ஹய்...
   எங்களோட கேள்விக்கெல்லாம் பதில் போட்டிருக்கீங்க...
   நன்றி...

   இந்தளவுக்கு அறிவுப்பூர்வமாக சிந்தித்து...
   பதிவு போட்ட நீங்க ‘புலவரா’...
   இல்ல...
   நீங்க போட்ட பதிவெனும் குளத்தில்...
   ‘கமெண்ட்’கிற கல்லத் துக்கி போட்டுட்டு போற நாங்கள் ‘புலவரா’...?

   ஆத்தாடி இதென்ன அநியாயமா... இருக்கு...

   Delete
 49. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே...

  நல்ல பதிவு..

  ஆனால் இதில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பதித்து இருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. காரணம் இது ஒரு பெண் விஷயம் என்பது மட்டும் இல்லை. குடும்பம், மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட..

  ஆண்களும் காரணமாக இருக்கீறார்கள் என்று நான் ஒத்துகொள்கின்றேன்.

  திருமணமான பெண்கள் ஓடி போகிறார்கள் என்றால் முழு காரணமும் கணவனாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லையே? கணவின் மீதே தவறு இருக்குமேயானால், அவர்கள் பிரச்சனைகளை பற்றி பெண்ணின் தந்தை அல்லது தாயிடுன் எடுத்து கூறினால், சுமுகமான முடிவு ஏற்பட வாய்ப்பு உண்டல்லவா? வாழவே முடியாது என்று வருமேயானால் தலாக் கொடுக்கலாமே?

  பிரச்சனைக்கு தீர்வு ஓடி போவது மட்டும் தானா? பெண்கள் இதை சிந்திக்க வேண்டும்.

  //இங்கே ஆணைமட்டும் குற்றம் சாடப்படவில்லை இருபாலரையுதான். ஏன் ஆணிடம் வேண்டுகோள்வைக்கப்படுகிறதென்றால் குற்றங்களின் பழிகள்மட்டுமே பெண்களுக்கானதாக்கப்டுகிறதே என்ற ஆதங்கத்தில்தான்..பலர் வெளியில்தெரியாமல் வீட்டுக்குள் நடத்தும் அத்துமீறல்களால் அமுக்கப்படுவதால்தான்..//

  திருமணமான பெண்கள் ஓடி போக ஆண்கள்(கணவன்) காரணமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சரியே... கணவன் மீது தவறு இல்லாமல் வேறு ஆணுடன் திருமணமான பெண்கள் ஓடி போனால்? காரணம் பெண்ணுடன் ஓடி போன ஆணா? அல்லது பெண்ணா? பெண் என்றால் இதற்க்கு காரணம் என்ன? தீர்வு என்ன?

  என்னுடைய நோக்கம் ஆண்களை குறை சொல்றீர்கள் என்று நினைத்து நான் பதில் உரைப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். ஆணோ? பெண்ணோ? இப்பொழுது தேவை விழிப்புணர்வு. நம்முடைய மார்க்க பெண்கள் தவறான வழியில் போகிறார்களே என்ற ஆதங்கம் தான் உண்மையாக. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

  இங்கே முக்கியமாக கவனிக்கபடவேண்டிய விஷயம் நம்முடைய பெண்கள் மாற்று மதத்தினரோடு தான் அதிகமாக ஓடி போகிறார்கள். இந்த செய்தி இங்கே இடம் பெறவே இல்லை. பாசிசவாதிகளின் சூழ்ச்சியில் சிக்கி கல்லுரி பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை அனைவருமே வீழ்ந்துவிடுகின்றனர்.

  கார் ஆட்டோ டிரைவர், பால்காரன், மளிகைகடைக்காரன் போன்ற நபர்களிடம் நம்முடைய பெண்கள் நேரடி தொடர்பில் உள்ளனர். அதை தவறாக பயன்படுத்தி நம்முடைய பெண்களை மூலை கலவை செய்து சீரழித்துவிடுகின்றனர். செல்போன் நம்பர் கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும். அதை அவர்கள் தன்னுடைய நண்பர்களுக்கும் கொடுத்து நம்முடைய பெண்களை தொடர்புகொள்ள வைக்கின்றனர்.

  பெண்கள் ஓடி போவது ஏன்? என்பதற்கு நீங்கள் பதித்துஇருப்பது சரி தான்.

  எதற்காக?

  இதற்க்கான விடை பதிவில் இல்லை என்றே தோன்றுகின்றது.

  கணவினால் ஓடி போகிறார்கள் என்றால்? ஓடி போவது மட்டும் தான் தீர்வா? கணவன் மீது தவறு என்று ஆணித்தரமாக தெரியும் போது, தனது பெற்றோர்களிடம் அல்லது குடும்பத்தாரிடம் எடுத்து கூறாமல் பெண்கள் ஓடி போவது சரியா?

  //ஆனால் பெரும்பாலும் இந்த சமூகம் பெண்கள் மேல் **மட்டுமே** பழி போட்டு ஆண்களின் தவறை அவர்களுக்கு சுட்டிகாட்டாமல் விட்டு விடுகின்றனர். அதற்காக ஆண்களின் மேல் உள்ள தவற்றை அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.//

  சகோதரி ஆமினா.. பெண்கள் ஏன் சுட்டிக்காட்டவில்லை? ஆண்கள் மீதான தவறை அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது சரியே. பெண்கள் மீதுள்ள தவறு எங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது? எதற்காக? என்பதற்க்கு பதில் எங்கே சகோதரி?

  ஓடி போவதற்கு காரணம் தேடுவதை விட, ஓடி போவதை தடுக்க என்ன வழி என்று தேடுவதே சிறந்தது. முக்கியமாக மாற்றுமத நபர்களுடன் ஓடி போகும் கேவலமான நிலைமையே அதிகமாக உள்ளது. இதற்கு பாசிசவாதிகளின் சூழ்ச்சி இருப்பதை பள்ளி பருவத்து பெண்கள் முதல் திருமணமான பெண்கள் என அனைவர்களுக்கும் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்க்கான முயற்சியை செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

  உங்களுடைய இந்த பதிவு கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

  நான் பதித்தது எதுவும் குறை கூற அல்ல சகோதரி. நம்முடைய சமுதாயம் நல்லா இருக்கணும். நம்முடைய மார்க்க பெண்கள் நல்லா இருக்கணும். ஆணோ பெண்ணோ இரண்டு பேரும் ஒத்துழைத்தால் மட்டுமே குடும்பத்தை வழிநடத்த முடியும் என்பதே என்னுடைய கருத்து.

  என்னுடைய கருத்து யாருக்காவது கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்குமேயானால், என்னை மன்னித்துகொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்குமுஸ்ஸ்லாம் அன்பின் சகோதரர் அவர்களே.. தாங்களின் கருத்துக்கள அனைத்தும் ஏற்கப்படவேண்டியவைகளே.. என்றபோதும்.. இங்கே குறிப்பிடபட்டிருக்கும் அனைத்தும் இருபாலாருக்கும் சேர்த்துதான். அதில் ஆன்களை ஏன் அழுத்திச்சொல்லப்பட்டிருக்கிறது என்றால்.. ஆண்களுக்கு பொருப்புகள் அதிகம் அதைபோல் அவர்கள் எதை ஒன்றைச்சொன்னாலும் எளிதில் புரிந்துக்கொள்ளக்கூடியவர்கள்..[சிலர் புரியாதமாதரியே இருப்பார்கள் அவர்களை விடுங்கள்] அதனால்தான் அவர்களை மேற்கோள்காட்டி வலியுருத்தப்பட்டுள்ளது..

   //பிரச்சனைக்கு தீர்வு ஓடி போவது மட்டும் தானா? பெண்கள் இதை சிந்திக்க வேண்டும். //

   ஓடிப்போவது சரியென்றா? ்அல்லது ஓடிப்போவதுதான் தீர்வு என்றா இதில் சொல்லப்படிருக்கு இல்லையே சகோ.. அவர்களின் இந்த இழிநிலைக்கு ஒருகாரணம் ஆண்களாகவும் இருக்கிறார்கள் அதுவும் பலயிடங்களில் கணவன் உருவில் என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது..

   எந்த ஒன்றையும் சற்றே சிந்தித்துப்பார்த்தோமேயானால் அதன் உண்மைகள் புலப்படும்..

   ///பதித்தது எதுவும் குறை கூற அல்ல சகோதரி. நம்முடைய சமுதாயம் நல்லா இருக்கணும். நம்முடைய மார்க்க பெண்கள் நல்லா இருக்கணும். ஆணோ பெண்ணோ இரண்டு பேரும் ஒத்துழைத்தால் மட்டுமே குடும்பத்தை வழிநடத்த முடியும் என்பதே என்னுடைய கருத்து//

   தாங்கள் கருத்துகளில் குறையில்லை தங்களின் கண்ணோட்டத்தில் யார்யிருந்தாலும் இதைதான் சொல்வார்கள்.. கடைசியாக சொன்னீர்களே இருவரும் ஒத்துழைத்தால் என்று அதுதான் மிகச் சரி. ஒரு கைதட்டினால் ஓசை எழாது. இருவருக்குள் புரிந்துணர்வுகள் இருக்குமேயானால் குடும்பம் குதூகலிக்கும் இல்லையெனில் .குடும்மத்தில் பிறர் கும்மியடிக்கதான் நேரிடும்..


   Delete
 50. //அவளுக்கென்ன, மாப்பிள்ளை வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புறான்; எல்லா வசதியும் செஞ்சு கொடுத்திருக்கான்; அப்புறமென்ன கொழுப்பு?”னுதான் பேசுறாங்களே தவிர///

  *****அப்படி பேசுவது பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்ற உண்மை ஏன் இங்கே மறைக்கபடுகிறது.******
  (உண்மையான வார்த்தை)


  ///எல்லோரும் ஆண்களை இப்படிதான் குறை கூறுவார்கள் பாருடா கல்யானம் பண்ணி ஒரு மாசம் என் ஜாய் பண்ணிட்டு பொண்டாட்டியை ஊர்ல விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் ஜாலியாக இருக்கிறான் என்று.. வெளிநாட்டில் வசிக்கும் நீங்களே சொல்லுங்கள் ஹூசைனம்மா வெளிநாட்டில் இருக்கும் ஆண்கள் ஜாலியாக இருக்கிறார்களா அல்லது கஷ்டப்பட்டு உழைக்கிறார்களா என்று. இப்படி வெளிநாட்டில் உட்கார்ந்து வெந்ததை தின்னு வாயை கட்டி வைத்தை கட்டி உழைக்கும் ஆண்களும் தங்களுக்கு எழும் ஆசைகளை அடக்கிதானே வாழ்க்கிறார்கள் அப்படி வாழ்பவர்கள் எல்லோறும் என்ன தவறா செய்கிறார்கள்.

  அப்படி கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்த்தில் ராஜாத்தியாட்டம் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு தன் பெற்றோர்களுக்கோ அல்லது தன் கணவனின் பெற்றோர்களுக்கோ உதவி செய்வதில் என்ன கடினம் என்று எனக்கு புரியவில்லை தன் மனைவியுடன் பேச வேண்டுமென்று போனையும் கம்பிய்யுட்டரையும் வாங்கி கொடுத்தால் அதை வைத்து தனக்கு அறிமுகமில்லாத ஆண்களுடன் பழ்கி தப்பை செய்துவிட்டு அதன் பின் அதற்கு காரணம் இந்த ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயம் என்று கூறுவது எந்தவித நியாம்.///

  உண்மையில் கவனிக்க படவேண்டிய வார்த்தைகள். பெண்களை குறைகூறுவது போல் தோன்றலாம் இந்த வார்த்தைகள். இதில் உண்மை உள்ளது. \


  //அதுக்குத்தான் சொல்வது ஆண்டாண்டுக்கணக்கில் வலைகுடாவில் வாசம்கொண்டுவிட்டு அங்கிருந்துகொண்டே அலைபேசியின்வழியே குடும்பம் நடத்திக்கொண்டிருப்பதைவிட அடிக்கடி ஊர்வந்துபோகனும் அல்லது ஓரிரு அல்லது ஐந்தாறு வருடங்கள் என கணக்குவைத்துக்கொண்டு சம்பாத்தித்துவிட்டு ஊரோட தேசத்தோட வந்து செட்டிலாகுங்கன்னு. அல்லது மனைவியை அங்கே கொண்டுபோய் வச்சிக்கோங்கன்னு. எதுக்குமே ஒத்துவராதுன்னு சொல்லிட்டு நீங்க அங்கேயும் அவுக இங்கேயும் என்று காலாகாலத்தை ஓட்டிவிட்டு வந்துட்டு குத்தத்தமட்டும் அவுகமேல சொன்னா எப்புடி..//

  சகோதரி.. எல்லாருக்கும் ஆசை தான் குடும்பத்தோடு இருந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று. ஆனால் எல்லாருக்கும் ஒரு வருடத்தில் ஊருக்கு வருவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை, வாய்ப்பு கிடைக்குமேயானால் சம்பாதித்யம் போதுமானாதாக இல்லாமல் இருக்கும். ஒரு வருடத்தில் சேர்த்து வைத்த பணம் போதாமல் இருக்கும். நாம் ஊருக்கு போனால் பணம் செலவு ஜாஸ்தியாக ஆகும் இன்னும் ஒரு வருடம் கழித்து போவோம். அந்த ஒரு மாதம் சம்பளம் பணம், லீவ் பணம் எல்லாம் மிச்சம் ஆகும் என்று எத்தனை பேர் நினைத்து கொண்டு கஷ்டபடுகிறார்கள் தெர்யுமா?

  அதுபோல் எல்லாருக்கும் மனைவியை வெளிநாட்டிற்கு அழைத்து கொண்டு போகும் அளவிற்கு வசதிகளும் இருப்பதில்லை.

  நல்ல வசதியான வீடு ஊர்ல இருந்தும் ஒரு சிறு குறிவு கூட்டுல மூட்ட பூச்சி கடியோட, மதியத்திற்க்கு செய்த சமையலை அடுத்த நாள் மதியம் வரைக்கும் வைத்து அதையே சாப்பிட்டு கொண்டு கஷ்டத்திலும், நம்முடைய மனைவியும் பிள்ளையுமாவது கஷ்டபடாம இருக்கேரார்களே அல்ஹம்துலில்லாஹ் என்று சந்தோஷபடும் கணவன்மார்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் சகோதரி.

  ஐந்து அல்லது ஆறு வருடத்தில் சம்பாதித்து ஊர்ல செட்டில் ஆகிவிடனும் தான் எல்லாரும் ஆசையோட எதிர்ப்பர்போடு ஊர்லேந்து பிளைட் ஏறும் போது நினைச்சிகொண்டே பயணம் செய்கிறார்கள். ஆனால் சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும் நாம் நினைப்போது போன்று நடப்பதில்லை என்பதை உணரவேண்டும்.

  கொஞ்ச நாள் கஷ்டபட்டா இன்ஷா அல்லாஹ் பின்னால நல்லா இருக்கலாம்னு தான் ஒவ்வொரு ஆண்களும் உழைக்கிறார்கள் பாலைவன வெயிலில். இதற்க்கு பெண்களின் ஒத்துழைப்பும் அவசியம் வேண்டும் என்பதையும் உணர வேண்டும் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. சகோ,

   இங்கே யாருடைய செயல்களையும் நியாயம் படுத்த முற்படவில்லை என்பதை முதலில் புரிந்துக்கொள்ளவும்.

   பெண்கள் தடம்மாறி போனால் முழுக்க முழுக்க அந்த பெண்ணையும், அந்த பெண்ணின் வளர்ப்பையுமே தான் குற்றம் சாட்டிவிடுகிறது இந்த சமூகம்..

   *கணவனும் காரணமாகிறான்..
   *எப்படி...
   *அதற்கு தீர்வு என்ன....
   -இதை அடிப்படையாக வைத்தே இந்த கட்டுரையை பதிவர் மலிக்கா எழுதியுள்ளார்...


   எப்போதும் ஒரு பிரச்சனையை மேலோட்டமாக மட்டுமே பார்த்துவிட்டு, அதை சிலாகித்துவிட்டு , பின் அமைதியாகிவிடுவது தீர்வுக்கு உகந்ததல்ல சகோ... பிரச்சனை உருவாகும் விதத்தையும் ஆராய்ந்தால் தான் பிரச்சனை நடக்காமல் தவிர்க்க முடியும்.

   மத்தபடி தவறாய் போன பெண்களின் செயலை நியாயப்படுத்தும் நோக்கத்திற்கானதல்ல இப்பதிவு!   Delete
 51. அப்படி பேசுவது பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள் என்ற உண்மை ஏன் இங்கே மறைக்கபடுகிறது.******
  (உண்மையான வார்த்தை)

  // இதில் மாற்றுக்கருத்தில்லையென்றபோதும் ஆண்களும் இதுபோன்று பேசத்தான் செய்கிறார்கள். சொல்லப்போனால் இதைவிட மோசமாகவே..

  மேலும் உண்மைகள் மறைக்கப்படவில்லை சகோ.. எங்கள் மேல் குறைகளிருப்பின் அதை சொல்லப்படுபோது ஏற்றுக்கொள்ளவும் தயங்கமாட்டோம் சிலர் ஏற்றுக்கொள்ளவதில்லை. அது சிலரி மனம் குணம்பொருத்தது..

  மேலும்.. வெளிநாட்டுவாழ்க்கையை 11 .12 வருடங்கள் அனுபவித்து அங்கு ஆண்கள் படும் சிரமங்களையும் கஷ்டங்களையும் நேரில்கண்டு வருந்தியதோடு எனது வருத்தம் கவிதையாய் முதல் முதலில் மேடையேறியது .. கோடையென்ன வாடையென்ன? என்று பாலை வாழ்க்கையைப்பற்றியதுதான்..

  ஆண் சிரமப்பட்டு தன் குடும்பதை காப்பாற்றும்போது துணையாக வருபவள் தூணாக அவனைத்தாங்கி நிற்கவேண்டும். அதுதான் நல்லதொரு மனைவிக்கு அழகு..

  அதேபோல் கணவரும் தன்மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகளை சரிவரசெய்து அவளின் மனம் நிறைவடையும்படி நடக்கவேண்டியதும் கடமை..

  பெயருக்காக வாழும்போதுதானே பிரச்சனையே எழுகிறது..
  இஸ்லாம் ஓர் அழகிய மார்க்கம் அது வாழ்வியல் வழிமுறைகளை மிகத்தெளிவாக கற்றுத்தந்துள்ளது அதன்படி வாழ இருவரும் முனைந்தால் சிறப்பு.
  இல்லையென்னில் மார்க்கம் சொன்னபடி விலகிவிடுவதும் சிறப்பு இருவருக்குமே நல்லதும்கூட. என்பதைதான் இதில் விளக்கியுள்ளோம்..

  மேலும் ஒரு பிரச்சனையை வந்தபின் தீர்க்க நினைப்பதைவிட அது வருவதற்க்கு என்ன காரணம்? அதை வரவிடாமல் தடுப்பது எப்படி? என்று சிந்தித்தோமேயானால் பிரச்சனைகள் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை பதியவே முன்வந்தேன்..

  ஆகவே மீண்டும் சொல்கிறேன்.. இதில் ஆண்தான் குற்றவாளி பெண் நிரபராதி என்று எத்தருணத்திலும் சொல்லமாட்டேன். தம்பதியருக்குள் குழப்பமென்றால் அது இருவரையுமே சார்ந்தது. ஒருவர் பக்கம் மட்டுமே குறை சொல்லி ஒருவர் தப்பித்துக்கொள்வது சிறிதும் நல்லதல்ல..

  பரஸ்பரம் புரிதல் இல்லாத வாழ்க்கை வீணே..

  பிரிதலில்தான் வாழ்க்கை சுகப்படுமெனில் பிரிந்துகொள்ளட்டும்
  புரிதலில்தான் வாழ்க்கை வலுப்படுமெனில் வாழ்ந்துகாட்டடும்..

  கருத்துக்கள் பகிரும்போதுதான் குறைகள் களையப்படும்.
  நிறைகள் நிவர்த்திசெய்யப்படும்..

  அன்பின் சகோதர் அவர்களின் கருத்துப்பரிமாற்றங்களுக்கு நெஞ்சார்ந்த எனது நன்றிகள்..

  ReplyDelete
 52. அன்பு சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

  முதன் முறையாக தங்களின் வலைப்பக்கத்திற்கு வந்திருக்கிறேன். மாஷா அல்லாஹ். எனது நீண்ட கால கனவை சில சகோதரிகள் நினைவாக்கி இருக்கிறீர்கள். (எப்படி இத்தனை நாட்கள் தெரியாமல் போனது?) இது போல் நம் சமுதாயத்து பெண்கள் சிந்திக்க மாட்டார்களா? தங்களது திறமைகளை வெளிக் கொணர்ந்து எமது மார்க்த்தினை தங்கள் மூலமாகவே உலகறிய செய்ய மாட்டார்களா? காழ்ப்புணர்வின் ஒரு பகுதியாக பெண்ணடிமைதனம் நிறைந்தது இஸ்லாம் என்று இம்மார்க்த்தின் மீது சுமத்தப்பட்ட வீண்பழியை எம் சமுதாயத்து சகோதரிகளே உடைத்தெறிய மாட்டார்களா? (இன்னும் இன்னும் பல) என்று எத்தனையோ நாட்கள் ஆதங்கப்பட்டிருக்கிறேன். விதிவிலக்காக ஒரு சில சகோதரிகள் ஏற்கனவே உள்ளார்கள் என்பதை அறிவேன். இருப்பினும் ஒரு குழுவாக நீங்கள் முயற்சித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.

  வாழ்த்துக்கள். தொடர்ந்து செயல் படுங்கள். என் போன்ற சகோதரர்களின் துஆக்கள் என்றென்றும் உண்டு. அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் இன்னும் சத்தியத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் ஈருலகிலும் வெற்றிகளை தந்தருள்வானாக!!!

  இக்கட்டுரை சம்பந்தமாக நானும் சில வரிகள் கூற நினைக்கிறேன். அல்லாஹ் நாடினால் நேரம் கிடைக்கும் போது பதிகிறேன்.

  ReplyDelete
 53. வலைக்குமுஸ்ஸலாம்.
  அன்பின் சகோதரர் அவர்களை வரவேற்பதில் மிகவும் மகிழ்கிறேன்.

  நமது சமூகத்தில் பெண்கள் இன்னும் விழிப்புணர்வு அடையவில்லை என்பது வேதனைக்குறிய விசயமே அப்படியே விழிப்புணர் அடைந்தாலும் அதனை சரிவர செயல்படுத்த முடியாது தவிப்பது அதனைவிட வருத்தம் தரும் விசயம்.இன்னும் எழுச்சிப்பெற வேண்டும் மார்க்கத்தின் வரம்புகளை மீறாது மற்றவ்ர்களுக்கு எத்திவைப்பதில் முனைப்புக்காட்ட முன்வரவேண்டும் அதற்க்கு அவர்களின் வீட்டார்களும் துணை நிற்க வேண்டும்.

  உங்களைபோன்ற சகோக்களின் கனவு நிறைவேறும் காலம் வெகுதூரத்தில் இல்லை..இன்ஷாஅல்லாஹ்..

  இக்கட்டுரை சம்பந்தமாக தங்களின் கருத்தை வெகு ஆவலோடு எதிர்பார்க்கிறேன்[றோம்]..

  வருகைக்கும் அன்பார்ந்த கருத்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

  ReplyDelete
 54. நல்ல ஒரு படைப்பு,

  வெளிநாட்டு கணவன் தான் வேண்டும் என்று நினைக்கும் கிராமப்புற - மற்றும் நகர்புற குடும்பத்தினரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது, அப்படி வரும் வரன் தேடுவோர்கூட தற்பொழுது துணைவியினை தன்னோடு அழைத்து செல்லும் அளவுக்கு தம்பாத்திய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் நம் சமூக இளைஞர்கள், ஒரு சில இடங்களில் கதாநாயக - கதாநாயகி கனவு கண்டு இயல்பான வாழ்க்கைக்கு பயந்தும் அல்லது பத்தாம் பசலிதனம் என்று கூறிகொண்டு இருக்கும் சிலருடைய தவறு ( இது அனைத்து சமூகத்திலும் நிறைந்து உள்ளது), தனக்காக இருக்கும் மனைவியின் நடத்தையினை சந்தேகிக்க தூண்டும் ( பொருளாதாரம் மற்றும் அடக்கு முறையினால் ) மாமியார் - நாத்தனர் வார்த்தைகள், காலத்தின கட்டாயத்தால் நமது முந்தய சமூதய மக்கள் (சினியர் சிட்டிசன்களின்) படிப்பறிவு இன்மையால் மண்ணுலக - விண்ணுலக வாழ்க்கை வெற்றிக்கு பாடுபட்டு தூதரின் இவ்வுல வெற்றிக்கு வித்திட்ட கல்வி மற்றும் கலவியல் தொடர்ப்பான நுணுக்கங்களை எடுத்து இயம்ப தவறிவிட்டனர், வெளிப்படையான அன்யோன்ய வாழ்க்கையின் அவசியத்தினை உணராததின் தாக்கமே இத்தகைய இழிநிலைக்கு காரணம்.

  ஜமால் முகம்மது,
  சீசல்ஸ்
  இந்திய பெருங்கடல் நாடுகளின் கூட்டமைப்பு

  ReplyDelete
 55. நல்ல ஒரு படைப்பு,

  வெளிநாட்டு கணவன் தான் வேண்டும் என்று நினைக்கும் கிராமப்புற - மற்றும் நகர்புற குடும்பத்தினரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது, அப்படி வரும் வரன் தேடுவோர்கூட தற்பொழுது துணைவியினை தன்னோடு அழைத்து செல்லும் அளவுக்கு தம்பாத்திய வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் நம் சமூக இளைஞர்கள், ஒரு சில இடங்களில் கதாநாயக - கதாநாயகி கனவு கண்டு இயல்பான வாழ்க்கைக்கு பயந்தும் அல்லது பத்தாம் பசலிதனம் என்று கூறிகொண்டு இருக்கும் சிலருடைய தவறு ( இது அனைத்து சமூகத்திலும் நிறைந்து உள்ளது), தனக்காக இருக்கும் மனைவியின் நடத்தையினை சந்தேகிக்க தூண்டும் ( பொருளாதாரம் மற்றும் அடக்கு முறையினால் ) மாமியார் - நாத்தனர் வார்த்தைகள், காலத்தின கட்டாயத்தால் நமது முந்தய சமூதய மக்கள் (சினியர் சிட்டிசன்களின்) படிப்பறிவு இன்மையால் மண்ணுலக - விண்ணுலக வாழ்க்கை வெற்றிக்கு பாடுபட்டு தூதரின் இவ்வுல வெற்றிக்கு வித்திட்ட கல்வி மற்றும் கலவியல் தொடர்ப்பான நுணுக்கங்களை எடுத்து இயம்ப தவறிவிட்டனர், வெளிப்படையான அன்யோன்ய வாழ்க்கையின் அவசியத்தினை உணராததின் தாக்கமே இத்தகைய இழிநிலைக்கு காரணம்.

  ஜமால் முகம்மது,
  சீசல்ஸ்
  இந்திய பெருங்கடல் நாடுகளின் கூட்டமைப்பு

  ReplyDelete
 56. நல்ல படைப்பு,

  வெளிநாட்டு கணவன்தான் வேண்டும் நினைக்கும் போக்கு தற்பொழு நகர்புறம் போன்றே கிராமபுறங்ளிலும் இருக்கிறது, அப்படி நினைக்கும் வரன் தேடுவோர் துணைவியினை உடன் அழைத்து செல்லும் அளவுக்கு தம்பத்திய வாழ்க்கை அடிப்படையில் முன்னேற்றம் அடைந்து உள்ளனர் இன்றைய இளைஞர்கள்,

  அதோடு மட்டும் அல்லாது கற்பனை பட கதாநாயக - கதாநாயகி வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இயல்பான வாழ்க்கைதனை எற்க மறுக்கும், அதை எடுத்துகூறுவதை பத்தாம் பசலிகள் என்று கூறிக்கொள்ளும், அதையே முற்போக்கு தன்மை என்று வாழும் விட்டில் பூச்சிகளுமே இவர்கள்.

  மேலும் தனக்காக காத்து இருக்கும் மனைவியினை பற்றி பொருளாதர ஆசை மற்றும் அடக்கு முறை சிந்தனை உடைய மாமியார் - நாத்தனார் கதைகளினால் எற்படும் வாழ்க்கை முறை மற்றமும் ஒருகாரணம்

  முக்கியமாக விண்ணுலக மற்றும் மண்ணுலக வாழ்க்கையினை கற்றறிந்த நமது மூத்த சமுதாயம் ( senior Citizen ) காலத்தின் கட்டாயத்தால் எழ்மையால் படிக்காமல் விட்டதன் விளைவு தூதர் சொன்ன இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான பொருளாதரம், கலவியல், கல்வியலுக்கு தேவையான நுணுக்கமான அறிவுரைகளை எடுத்து கூற தவறிவிட்டனர்,

  இதுவே இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கை இருந்தும் வறுமை காரணம் அல்லது பொருளாதர அபிரிதமாக இருந்தும் கலவியல் தோல்வி, இதுவே இந்த இழிநிலைக்கு காரணம்.

  ஜமால் முகம்மது,
  சீசல்ஸ் ( SEYCHELLES )
  இந்திய பெருங்கடல் நாடுகளின் கூட்டமைப்பு

  ReplyDelete
  Replies
  1. அதோடு மட்டும் அல்லாது கற்பனை பட கதாநாயக - கதாநாயகி வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இயல்பான வாழ்க்கைதனை எற்க மறுக்கும், அதை எடுத்துகூறுவதை பத்தாம் பசலிகள் என்று கூறிக்கொள்ளும், அதையே முற்போக்கு தன்மை என்று வாழும் விட்டில் பூச்சிகளுமே இவர்கள்.
   //

   உண்மைதான் சகோ. பலரது வாழ்க்கை இப்படியான கற்பனைகளில் சீரழிவதும் உண்மை.

   //இதுவே இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கை இருந்தும் வறுமை காரணம் அல்லது பொருளாதர அபிரிதமாக இருந்தும் கலவியல் தோல்வி, இதுவே இந்த இழிநிலைக்கு காரணம்.// இதுவும் காரணம்தான்
   எதுவென்றபோதும் இருவரிடம் மனஒற்றுமை இருக்கவேண்டும். இருவருக்குள்ளும் பரஸ்பரம் இருக்கவேண்டும். ஒருவரைப்பார்த்து மற்றவர் அதேபோல் வாழவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்போது அதற்கான சூழல் அமையாதபோது இதுபோன்ற முடிவுகள் எடுத்து சீரழிகிறார்கள் என்பது வருத்ததிற்குறியது..

   தாங்களின் விரிவான கருத்திற்க்கு மிக்க நன்றி சகோ

   Delete
 57. Assalamu alaikkum varah

  oru aan(men) aangalaithan uyarvaga pesuvan, oru pen pengalaithan ryarvaga pesrval, athu pola neengalum oruthalai yagave sinthithu erukkirirgal,
  thavaru seivathil manithargal anaivarum ondruthan, pengal anaivarum nallavargalum alla kettavargalum alla, aangalum anaivarum kettavargal alla , oru seyalukku eruvarume poruppu

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரர் அப்துல் அவர்களே. தாங்கள் சொல்வதைபோல் எம்மினத்தை உயர்த்தி உம்மினத்தி தாழ்த்துவது எம் நோக்கமல்ல. இங்கே தவறுகள் யார்மூலம் தூண்டப்படுகிறது எதுமூலம் தூண்டப்படுகிறது என்பதும். அத்தவறுகளீன் இனி நடவாதிருக்க வழியென்ன என்பதையுதான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

   தவறிழைப்பது யாரானாலும் தவறு தவறுதான் இதில் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ செய்வது மடத்தனம்.

   இருபாலரிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் உண்டு ஆக அந்த நல்லவர்களை கெட்டவர்கள் கெடுக்கவேண்டாமென்றும், அல்லது கெடுதலுக்கான சமய சந்தர்ப்பங்களை ஏற்படுதவேண்டாமென்றும்தான் வழியுருத்துகிறோம்..

   தாங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி

   Delete