Monday, August 13, 2012

திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்?

எல்லாம் வல்ல இறைவன் படைத்த இந்த உலகத்தில் அனைத்தும் அற்புதங்கள். அவற்றில் ஒன்று நம் மனித இனம். நம் மனித இனத்தில் ஆண் பெண் என்று இரு பாலராக இறைவன் படைத்து அவற்றுள் இரத்த பந்தங்கள், சொந்தங்கள் என்று பல பந்தங்களை ஏற்படுத்தி நம்மை இணைத்து இருப்பது மிகவும் அற்புதமான மற்றும் ஆறுதலான விஷயம்.

இப்படிப்பட்ட பந்தத்தில் கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவானதாக இறைவன் நமக்களித்துள்ளான். இந்த அழகிய பந்தத்தை நிக்காஹ் என்ற கடுமையான திருமண ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக் கொள்கிறோம்.

இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை பின்பவரும் ஹதீஸ் வலியுறுத்துகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திப்பெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இந்த திருமண நிகழ்வை நடத்துவது என்பது நம் இஸ்லாத்தின் அடிப்படையில் பார்க்கும் போது மிகவும் அழகிய, எளிய முறையில் நடத்தப்பட வேண்டிய
விஷயம். ஆனால் பல ஆண்டு காலங்களாக எப்படி நடக்கின்றது என்று நோக்கும் போது  பெயரளவில் தான் நாம் முஸ்லீம்களா என எண்ணத்தோன்றுகிறது. 


இஸ்லாம் வகுத்த திருமணமும் இக்கால திருமணமும் :

 பெண்ணை பெற்றவர்கள் என்றால் அப்பெண் பிறந்ததுமே, தங்களை தாய், தந்தை என்ற உயர்ந்த அந்தஸ்தை அடைய வைத்த பிள்ளை என்ற சந்தோசத்தை விட, இவளை எப்படி கட்டி கொடுக்க போகிறோமோ என்பது தான் அவர்களின் முதல் கவலை. இப்படி பெண்ணை பெற்றவர்கள் புலம்புவதற்க்கு காரணம் எப்படி இந்த பெண்களை நல்லபடியாக திருமணம் செய்து கொடுப்பது என்று நினைப்பதுதான். அதற்கு காரணம் இந்த சமுதாயத்தில் திருமணம் என்ற பெயரில் பல சடங்குகளை ஏற்படுத்தி,குறைந்த பட்சம் செலவுக்கு 3 லட்சம் மட்டும்  இல்லாமல் திருமணமே நடக்காது என்ற நிலையில்   நிக்காஹ் செய்வதையே சிக்கலான அமைப்பாக ஆக்கி வைத்துள்ளார்கள்!

எப்படி தேர்ந்தெடுக்கிறோம்?

ஒரு ஆணுக்கு, பெண் பார்க்கும் விஷயத்திலிருந்து திருமணம் முடிக்கும் வரை எவ்வளவு விஷயங்களை யோசிக்கிறோம்? அவள் நல்ல பெண்ணாக, சாலிஹானவளாக, மார்க்க கல்வியில் திறம்பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விட, பெண் நல்ல நிறமுள்ளவளாக, அழகானவளாக, படித்தவளாக, வசதியுள்ளவளாக இருக்க வேண்டும் என்று பல தரங்களை எதிர் பார்ப்பார்கள்.
   பெண்கள் அவர்களின் செல்வத்திற்காகவும், அவர்களின் அழகுக்காகவும், அவர்களின் பாரம்பரியத்திற்காகவும், அவர்களின் நன்னடத்தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர். நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவேளை தாங்கள் எதிர் பார்த்த மாதிரி கிடைக்காத பட்சத்தில் சீர், வரதட்சணை என பேர பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பணமும் அழகுமா ஒருவனுக்கு வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை தந்துவிட போகிறது? இவற்றையெல்லாம் கொடுத்தால்  மட்டும் அப்பெண் நல்ல நிறமுடையவளாக தெரிந்து விடுவாளோ கேட்பவர்களின் காமாலைக் கண்ணுக்கு...

 இதுவா நம் இஸ்லாம் சொன்ன வழி???. இந்த விஷயத்தில் மணமகனாக இருக்க கூடிய ஒவ்வொரு ஆணும் தான் நல்ல மனநிலையிலும், உறுதியான மனநிலையுடனும் சிந்தித்து செயல் பட வேண்டும்.
 பெண்களை அவர்களின் அழகுக்காக(மட்டும்) மணமுடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம்.அவர்களின் செல்வத்துக்காக மட்டும் மணமுடிக்காதீர்கள். ஏனெனில் அவர்களின் செல்வம் அவர்களை வழி தவற செய்து விடலாம் எனினும் அவர்களின் நல்லொழுக்கத்துக்காக அவர்களை மணம்புரியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : இப்னு அம்ரு (ரலி)
அதற்காக அழகிய, நிறமுள்ள, வசதியுள்ள பெண்களை மணக்கவே கூடாது என்றும் சொல்லவில்லை. அந்த விஷயத்திற்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் மீதி உள்ளவர்களின் நிலை??? அல்லாஹ்வின் படைப்பில் அனைவரும் அழகு தான், அழகு என்பது காணும் கண்ணையும் மனதையும் பொறுத்தது.

 அந்த நடிகை போல வேணும், அவளை போல் வேண்டும், இவளை போல் வேண்டும் என்று கனவு காணும் உலகமாக இப்போது இருந்து வரும்  எண்ணத்தைதான் மாற்ற வேண்டும்.

தனக்கு வாழ்க்கைதுணையாய் வரப்போகிறவனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணிற்கு உண்டு  என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.  ஆணோ பெண்ணோ யாராக இருப்பினும் தனக்கு துணையாக வருபவர்கள் நல்ல எண்ணங்களுடன், வாழ்க்கை நடத்த போதுமான வசதியுடன் சாலிஹானவர்களாக இருந்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்தாலே இது போன்ற பிரச்சனைக்கு இடம் இல்லாமல் போய்விடும்.

சம்மதம் கேட்டீர்களா?

அடுத்து பார்த்தோமேயானால் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண், பெண் இவர்களின்  சம்மதம் கேட்பது.பொதுவாக ஒவ்வொரு ஆண் மகனும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்து சம்மதம் சொன்னால் தான் திருமண நிச்சயமே நடக்கும். ஆனால் பெண்கள் விஷயத்தில் அவர்களின் சம்மதத்திற்க்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமீபகாலமாக பெண்கள்  கல்வியறிவில் ஓரளவு முன்னேறி வருவதால் இந்நிலை சிறிது மாறியுள்ளது எனலாமே தவிர முழுமையாக மாற்றம் கண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும் சில வீட்டில் அதற்கான சந்தர்ப்பத்தையே தருவதில்லை. “அவள் என்ன சொல்ல போகிறாள், சின்ன பொண்ணு, நாமதான் அவளுக்கு நல்லது எது கெட்டது எது என பார்த்து செய்யணும்” என கூறிவிட்டு திருமண ஏற்பாடுகளில் இறங்கி விடுவார்கள். அவள் மனதில் என்ன உள்ளது என்பதை அவசியம் அறிய கூடிய காலக்கட்டத்தில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏனெனில் அவசர அவசரமாக எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு அதன் பின்னர் திருமணத்தன்றோ, இல்லை திருமணம் முடிந்த சில நாட்களிலோ பிரச்சனைகள் உருவாகி பிரிவதற்கான வாய்ப்புகள் உண்டு. அது போல் இன்று பல இடங்களில் நடப்பதையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கின்றோம்.
முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணம் பேசினார். அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்:முகீரா (ரலி). நூல்கள்: இப்னுமாஜா 1855
இதை எத்தனை பேர் செயல்படுத்துகிறோம்? திருமணத்தன்று தான் பார்க்க வேண்டும் என நமக்கு நாமே புதிய சட்டத்தை உருவாக்குவதால் தான் பல அசம்பாவிதங்கள் நிகழ்கிறது.

நன்கு தெரிந்த ஒரு தம்பதியர். தன் மகளின் விருப்பத்தை கேட்காது திருமண ஏற்படு செய்ய, திருமணத்தன்றோ ஜமாத்தார்கள் திருமண ஒப்பந்தத்தில் கைய்யொப்பம் வாங்க வரும் போது முறையிட்டிருக்கின்றாள். இதை விட ஒரு மோசமான அவமானம் ஒரு பெற்றோருக்கு கிடைக்க முடியுமா??? சொல்லுங்கள்!!!. இந்த சங்கடங்கள் ஏற்படாமல் இருக்கதான்  நம் இஸ்லாம் இருவரின் மண ஒப்புதல் இன்றி திருமணம் முடிக்க கூடாது என்ற எளிய வழியை வலியுறுத்துகின்றது. எளிய விஷயத்தை கடைபிடிக்க மறுத்தால் பெரிதான விளைவுகளை சந்திக்க நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும். இது தேவையா?
கன்னி பெண்ணாயினும்,விதவையாயினும்  சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியபோது கன்னி பெண்(சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன்.அதற்க்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவளது மொளனமே அவளது சம்மதம் என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி), ஆதார நூல் : புகாரி   
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து இதை கூறியபோது அத்திருமணத்தை ரத்து செய்தார். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம்(ரலி), ஆதார நூல் : புகாரி
மேற்கண்ட ஹதீஸ்களை பார்க்கும் போது மணமக்கள் இருவரின் சம்மதமும் எவ்வளவு முக்கியம் என்றும், அப்படி விரும்பாத திருமண வாழ்க்கை செல்லாது என்றும் விளங்குகின்றது.

மஹர்ரா வரதட்சணையா? எது நபி வழி?


அடுத்து ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் விரும்பியவாறு வழங்ககூடிய மணக்கொடை எனும் மஹரை பற்றியும் நம் இஸ்லாம் மிகவும் அழுத்தமாகவே வலியுறுத்துகின்றது. மஹர் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும், அவளை திருமணம் முடிக்க போகும் ஆண் கட்டாயம் கொடுக்கவேண்டிய கொடையாகும். அது பணமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, பொருளாகவோ, இடமாகவோ அல்லது அவளின் இஷ்டப்படி எதுவாக வேண்டுமானாலும்  இருக்கலாம். மஹர் கொடுப்பதன் அர்த்தமே, அவளுக்கு பிற்காலத்தில் ஏதேனும் கஷ்டம ஏற்பட்டால் அதைக் கொண்டு அவள் வாழ்வியலை நடத்தி செல்ல உதவவே ஆகும். அதை யாரும் திரும்பி பெற இயலாது. முழுக்க முழுக்க அது அவளுக்கே சொந்தமானதாக இருக்கும்.
பெண்களுக்கு அவர்கள் மணக்கொடைகளை (மஹரை)கட்டாயமாக கொடுத்து விடுங்கள். அவர்களாக மனமுவந்து அதில் ஏதேயெனும் விட்டு தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் உண்ணுங்கள். (அல்குர்ஆன் : 4:4 )
ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்கு கொடுத்தாலும் அதை திரும்ப பெற இயலாது. ( அல்குர்ஆன் : 4:20 )
மஹர் தொகையை தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடுப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத்தரலாம். அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்.(அல்குர்ஆன்2:237      
எவ்வளவு அழகான விஷயத்தை நம் பெண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்தி தந்துள்ளது. இதை எத்தனை பேர் புரிந்து நடந்துக் கொள்கின்றார்கள்?அதிலும் மஹர் என்பது அவள் விருப்பமானதாக இருக்க வேண்டும் என்றும், அதை அவளிடமே கேட்க வேண்டும் என்றும் நம் இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் ஒரு காலத்தில் மஹர் தொகை என்பது ருபாய்.501 அல்லது 1001 என்று அவர்களே ஒரு தொகையை நிர்ணயித்து திருமணம் முடிப்பார்கள். இன்னும் சிலரோ “பெண்ணின் மஹர் விருப்பத்தை கேட்பாராம், பொண்ணு சொல்றதை மஹரா கொடுப்பாராம்!! அவ ஊரையே எழுதி கேட்பா, கொடுத்திடுவாரா?” என்றெல்லாம்  கூறி  ஆர்வத்தை குறைத்துவிடுவதும், தடைச் செய்வதும் பார்க்கவே செய்கிறோம். ஆனால் இன்று பெற்றோர் மற்றும் பெண்களின் மார்க்க கல்வியறிவால் மஹர் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு மாற்றம் அடைந்து வருகிறது என்பதில் சிறு மகிழ்ச்சி. உண்மையை சொல்ல வேண்டுமெனில் இப்போதெல்லாம் மஹர் என்பது பத்து பவுனுக்கும் மேற்பட்டதாகவே கொடுக்க முன்வந்துள்ளார்கள். ஒரு சில இளைஞர்கள் மட்டுமே தன் பெற்றோர்  மூலம் அப்பெண்ணின் விருப்பத்தை அறிந்து மஹராக கொடுக்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்

இது போன்று நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழி முறையில் பெண்ணிற்கு தகுந்த மஹரை  கொடுத்து, வரதட்சணை ஏதும் வாங்காமல் விருந்து உபசரிப்புகள் மட்டுமே கொண்டு எளிய முறையில் திருமணம் முடிப்பவர்களை மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும். இதே போன்று நாமும்செய்து, நம் சந்ததியர்களும் செய்ய நிய்யத்து வைக்க வேண்டும் என்று எத்தனை பேர் நினைக்கிறார்கள்? அதை இழிவான செயலாக பார்ப்பவர்கள் தான் இன்று நிறைய பேர் உள்ளனர். நம் மார்க்கம் திருமணம் முறையில் குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவு சலுகையுள்ள சட்டம் வகுத்து தந்துள்ளது. அதை நம் சமுதாயம் ஏன் ஏற்க மறுக்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

இவர்களிடத்திலும் மாற்றம் வேண்டும்! :

பவுன் அதிகம் கொடுத்து, சீர் வரிசை அதிகம் செய்து, இரண்டு அல்லது நாலு சக்கர வாகனம், வீடு, இதை விட நகைச்சுவை கூடுதலாக பணியார பணம், நாத்தனார் குடம், நாத்தானர் (மாப்பிள்ளை உடன் பிறந்த பெண்கள்) நகை மற்றும் ஆடம்பர மாலை சூடும் விழா, பேண்டு வாத்தியங்களோடு அரங்கேரும் திருமணம் தான் அழகிய திருமணங்களாக இன்றைய நம் சமுதாய மக்கள் கருதுகிறார்கள். அவ்வளவும் ஏன் நம் ஊர் நாட்டாமைகள், ஜமாத்தார்களே இப்படிப்பட்ட கல்யாணத்திற்க்கு மட்டுமே ஊர் ஓலை தருவோம். நாங்கள் திருமணத்தை நடத்தி கொடுப்போம் இல்லை என்றால் செல்லாது என்றெல்லாம் கூறி விடுகிறார்கள்.

ஊர் மக்களை தலைமை தாங்கி நடத்த வேண்டிய ஊர் ஜமாத்தும், சரியான வரைமுறையை பின்பற்றாமல் பின்பற்றுபவர்களை அலைக்கழிப்பது எவ்வகையில் நியாயம்???. இது போன்ற அலைக்கழிப்பு என் திருமணத்திலேயே நடந்தது. ஊர் ஓலை தரமாட்டோம் என்றும், அப்படி ஜமாத்தை மீறி இந்த திருமணத்திற்க்கு செல்பவர்களுக்கு அபராதம் என்றும், ஊர் ஒதுக்கி வைக்கப்படும் என்றும் வீடு வீடாக சென்று அறிவித்து விட்டார்கள். காரணம் என்ன தெரியுமா சீர் வாங்காமல், கருகமணி கட்டாமல், மாலை போடாமல் வெறும் விருந்து உபசரிப்பும் மட்டும் வைத்து நபி வழியில் திருமணம் செய்வதுதானாம். என்ன ஒரு இழிவான செயல் பாருங்கள். அல்லாஹ் தாலாவிடம் இன்று நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் நாளை மறுமையில்  பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நினைவில் கொண்டு எப்போது  நாம் மனதளவில் மாற போகின்றோம்?

எங்கள் வீட்டில் உள்ள அனைத்து ஆண்களும் அல்லாஹ்வின் பேருதவியால் தான் நினைத்த படி இஸ்லாத்தின் வழியில் திருமணம் முடித்தார்கள். ஆனால் இரண்டே பெண்களை கொண்ட எங்கள் குடும்ப பெண் பிள்ளைகளுக்கு  இஸ்லாத்தின் வழியில் திருமணம் முடிக்க முடியவில்லை, காரணம் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை சரியாக அறியாத ஆணும், ஆண் வீட்டார்களும், தடைகல்லாய் ஜமாத்தார்களும்!

இது போன்ற தேவையற்ற எதிர்பார்ப்புகளை திருமணம் என்ற அழகிய பந்தத்தில் நிரப்பிய நம் சமுதாயத்தால், திருமணத்திற்கு ஏங்கி தவிக்கும் எத்தனை எத்தனை முதிர் கண்ணிகளை நம் கண் முன்னே முடிகிறது.  இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பெண்கள் தவறான வழியில் போக நம் சமுதாயமும், நாமும் வழி வகுகிக்கின்றோம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமும கூட.

இது போன்ற அனாச்சாரங்கள் மற்றும் போலி ஆடம்பரம் நிறைந்த திருமணங்களை ஒரு சிலர் நினைத்தால் மட்டும் மாற்றவோ, நிறுத்தவோ முடியாது. இஸ்லாத்தின் பால் பிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும்  நினைத்தால் மட்டும் ஒரு நிரந்த மாற்றத்தை கொண்டு வர முடியும் இன்ஷா அல்லாஹ்...  ஒரு கைதட்டினால் ஓசை  வராது என்ற பல மொழிக்கேற்ப ஒரு கையாக ஆண் சமுதாயமும், மறு  கையாக பெண் சமுதாயமும் செயல்பட்டால் மட்டுமே முழுமையான மாற்றத்தை இஸ்லாத்தின் திருமணங்களில் கொண்டு வர முடியும்..

எனவே இதுவரை நம் சட்டங்களை மதிக்காமல் இருந்த நாட்கள் இத்தோடு ஒழியட்டும். இனி வரும் காலங்களில் இஸ்லாத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் வகுத்த சட்டப்படி நம் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று நிய்யத்து (மன உறுதி) கொள்வோமாக.... நம் நிய்யத்து நல்லவிதமாக இருப்பின் அதை அல்லாஹ் நிச்சயம் நாடுவான் என நம்பிக்கை கொள்வோம்...

11 comments:

 1. //குறைந்த பட்சம் செலவுக்கு 3 லட்சம் மட்டும் இல்லாமல் //

  இதுல மூணு லட்சம்னு சொல்லிருக்கீங்களே, அது திர்ஹமா, ரியாலா அல்லது டாலரா?

  என்னது, ரூபாயா? அவ்வ்வ்வ்வ்.... நீங்க இன்னும் கருப்பு-வெள்ளை காலத்திலேயே இருக்கீங்க போலருக்கே!!

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இல்லையா... நான் தான் அப்படி சொன்னேன்!

   முன்னபின்ன செத்தாதானே சுடுகாட்டுக்கு வழி தெரியும் :-)))

   நகை,துணிமணிலாம் சேர்க்காம வெறும் கல்யாண செலவு 3 லட்சத்துல கூட பண்ண முடியாதா?? :-( அடகொடுமையே...

   Delete
 2. உங்கள் திருமணம் இஸ்லாமிய வழியில் நடந்தது, அல்ஹம்துலில்லாஹ், நல்ல விஷயம்.

  //எங்கள் வீட்டில் உள்ள அனைத்து ஆண்களும் அல்லாஹ்வின் பேருதவியால் தான் நினைத்த படி இஸ்லாத்தின் வழியில் திருமணம் முடித்தார்கள். ஆனால் இரண்டே பெண்களை கொண்ட எங்கள் குடும்ப பெண் பிள்ளைகளுக்கு இஸ்லாத்தின் வழியில் திருமணம் முடிக்க முடியவில்லை//

  இதுதான் பெண்ணைப் பெற்றவர்களின் நிலை. எனினும், மாற்றங்கள் இருக்கிறது. ஆனால், போதாது.

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  அப்சரா அருமையான ஆக்கம்! இன்றைய தேவையும் கூட.. கடைசியாக நீங்கள் சொன்ன தீர்வு அருமை! நிச்சயம் ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட்டால் இதுபோன்ற அர்த்தமற்ற சடங்கு மற்றும் வரதட்சணை ஒழிக்க முடியும்.

  காலம் மாறிக்கொண்டே வருகிறது. மக்களிடையே ஏற்பட்ட மனமாற்றம் இந்த நிலையை ஓரளவு மாற்றிக்கொண்டே வருகிறது, மகர் பெற்று திருமணம் என்றால் அதெல்லாம் உலக அதிசயமாய் இருந்த காலம் மலையேறி இப்பலாம் அவ்வபோது நபிவழியில் திருமணம் நடைபெற்று வருவது மகிழ்ச்சியான விஷயம்

  // எனினும், மாற்றங்கள் இருக்கிறது. ஆனால், போதாது. //
  ம்ம்ம்... இன்னும் தேவை தான்!

  //எங்கள் வீட்டில் உள்ள அனைத்து ஆண்களும் அல்லாஹ்வின் பேருதவியால் தான் நினைத்த படி இஸ்லாத்தின் வழியில் திருமணம் முடித்தார்கள். //
  மாஷா அல்லாஹ்

  //இனி வரும் காலங்களில் இஸ்லாத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் வகுத்த சட்டப்படி நம் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று நிய்யத்து (மன உறுதி) கொள்வோமாக...//
  இன்ஷா அல்லாஹ்... இது முழுமையான தீர்வை பெற்றுதரும்!

  அருமையான ஆக்கம்! வாழ்த்துகள் மா

  ReplyDelete
 4. சலாம் சகோ அப்ஸரா,

  அருமையான, நேர்மையான ஆக்கம்...

  //எனவே இதுவரை நம் சட்டங்களை மதிக்காமல் இருந்த நாட்கள் இத்தோடு ஒழியட்டும். இனி வரும் காலங்களில் இஸ்லாத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாம் வகுத்த சட்டப்படி நம் பிள்ளைகளுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று நிய்யத்து (மன உறுதி) கொள்வோமாக...//

  இன்ஷா அல்லாஹ்....

  இந்த விஷயத்தில் ஆண்களின் பங்களிப்பை விட,பெண்களின் மனமாற்றம் அதிகம் தேவை படுகிறது.. அல்லாஹ் அந்த மாற்றத்தை நம் சமூகத்தில் ஏற்படுத்துவானாக..

  ReplyDelete
  Replies
  1. //இந்த விஷயத்தில் ஆண்களின் பங்களிப்பை விட,பெண்களின் மனமாற்றம் அதிகம் தேவை படுகிறது.. அல்லாஹ் அந்த மாற்றத்தை நம் சமூகத்தில் ஏற்படுத்துவானாக..// true words. I accept this comment.

   Delete
 5. //எப்படி தேர்ந்தெடுக்கிறோம்? //
  //சம்மதம் கேட்டீர்களா? //
  //மஹர்ரா வரதட்சணையா? எது நபி வழி?//


  ஊர் மற்றும் குடும்ப பெரியவர்களிடம்
  கேட்கப்படவேண்டிய அற்புதமான கேள்வி.


  //ஒரு கையாக ஆண் சமுதாயமும்,
  மறு கையாக பெண் சமுதாயமும்
  செயல்பட்டால் மட்டுமே


  முழுமையான மாற்றத்தை
  இஸ்லாத்தின் திருமணங்களில்
  கொண்டு வர முடியும்..//


  மிகச்சரியாக சொன்னீர்கள்.


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சலாம் சகோ அப்ஸரா,
  மிக அருமையான அவசியமான ஆக்கம். நன்றி சகோ. இந்த அழகிய பதிவோடு மேலும் சில தகவல்களை இங்கே பதிய எண்ணுகிறேன்..!

  ஒரு பொற்குவியலையே கூட மஹராக தர அல்லாஹ்... அனுமதி அளித்து இருக்கிறான். தமக்குரிய மஹரை பெண்கள் கேட்டு பெறலாம். கையில் ஏதும் இல்லாமல் மதினா வந்து... வெறும் ஒரு வாரத்துக்குள் வணிகத்தில் தாம் சம்பாரித்த ஒரு செல்வத்தை (பேரிச்சங்கொட்டை அளவுக்கு தங்கம்) மஹராக தந்து திருமணம் செய்கிறார் ஒரு சஹாபி. அவரிடம்தான்... 'ஓர் ஆட்டையேனும் வலீமா தருவீராக' என்று சொன்னார்கள் நபி ஸல்.. அவர்கள்.

  தானே ஓர் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டு ஒரு திருமணத்தில் ஒரு ஆட்டை நபி ஸல் அவர்கள் வலீமா கொடுத்து உள்ளார்கள். இன்னொரு நபி ஸல் அவர்களின் விருந்தில் 300 பேர் வரை அழைக்கப்பட்டும் உள்ளார்கள். இதன் அடிப்படையில்தான் நாம் நமது திருமண செலவை அமைக்க வேண்டும்..!

  ஆனால்... இன்று நாம் சமூகத்தில் சிலர்... தமக்கு நெருங்கிய பத்து உறவினரை மட்டும் நிக்காஹ்-வலிமாவுக்கு அழைத்து... 1001 ரூபாய் மஹருக்கு நிக்காஹ் செய்து... ஆளுக்கு இரண்டு மேரி பிஸ்கட் வலிமா தந்து... 'இதுதான் நபி வழி திருமணம்' என்று கூறினால்... இவர்களும் தவறு செய்வோரே ஆவர்..!

  கேட்டால்...

  “குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள். நூல்: அஹ்மத் - 23388

  ...என்று சொல்வார்கள்..!

  இப்படி சொல்பவர்களின் மாச சம்பளம் ஆறு இலக்கத்தில் அமைந்திருக்கும்... உடையே ஓர் இலட்சம் ரூபாய் பெரும்..! பேசும் செல்ஃபோன் அரை லட்சம் பெரும். கையில் உள்ள புது வாட்ச் பல ஆயிரம் பெரும்..! காலில் உள்ள ஷூ சில ஆயிரம் பெரும்..! உடையில் உள்ள நறுமணம் பல நூறு பெரும்..! கையெழுத்து போடும் பேனா சில நூறு ரூபாய் மதிப்பு பெரும்..! திருமணம் முடிஞ்சு மனைவியுடன் வீட்டுக்கு செல்லும் சொந்த வாகனமோ சில லட்சம் தாண்டும்..!

  இவரின் மஹர் Rs.1001, வலீமா ஒரு பிஸ்கட் பாக்கெட்..!?!?!?!?!

  சகோஸ்..! அல்லாஹ் வலியுறுத்திய மஹர் மற்றும் நபி வலியுறுத்திய வலீமா இவற்றில் உங்கள் எளிமையை காட்ட வேண்டாம்..! திருமணத்தில் எவை சொல்லப்படாதவையோ அவற்றில் உங்கள் எளிமையை பேணுங்கள்..!

  உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண்விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
  (அல்குர்ஆன் 17:26,27)
  -----------------தூரே உள்ள உறவினர்... அண்டை வீட்டார்... ஊரில் உள்ள ஏழைகள் இவர்களுக்கு உரிமை இல்லையா உங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள..?

  செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­).நூல்: புகாரி -5177
  ----------------ஏழையை வலீமாவுக்கு அழைத்து, இரண்டு பிஸ்கட் தரவா சொல்லும் இஸ்லாம், ஒரு பணக்காரனிடம்..?

  இவர்கள் சிந்திக்கவும்..!

  ReplyDelete
 7. அழகான பகிர்வு. இனி வரும் காலங்களில் நடக்க இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் துணை புரிவான்.. நாமும் முயற்சி எடுப்போம்

  ReplyDelete
 8. சகோ.இர்ஷாத் அஹ்மத் பேஸ்புக் குழுமத்தில் பதிந்த கமென்ட் (சில தொழில்நுட்ப காரணங்களால் அவரால் நேரடியாக கமென்ட் போட முடியாததால் இங்கே காப்பி பேஸ்ட் செய்கிறேன்)

  மாஷா அல்லாஹ எனக்கு இன்று எல்லை இல்லா சந்தோசம் வல்ல ரகுமானுக்கே நன்றி ...ப்ளாக் எழுதகூடிய இஸ்லாமிய சகோதரிகள் பெரும்பாலும் இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் பரமக்குடி இந்த ஏரியா சேர்ந்தவங்களே இருக்காங்களே .... என் பகுதியை சேர்ந்த எந்த சகோ
  தரிகளும் இப்படி இல்லையே என்று சகோதரிகள் எழுதும் கட்டுரைகளை படிக்கும்போதெல்லாம் இந்த ஏக்கம் வந்து ஆட்கொள்ளும் ...அல்ஹ்மதுளில்லாஹ் இன்று இஸ்லாமிய பெண்மனியில் வந்த கட்டுரையை எழுதியவர் சகோதரி அப்சரா அவர்கள் என் பகுதியை செர்தவங்க என்று பார்த்த உடன் எல்லை இல்லா மகிழ்ச்சி ..அப்பாடா ரொம்ப நாள் உறுத்திய குறை இன்று சகோதரி அப்சரா மற்றும் இஸ்லாமிய பெண்மணியால் நிறைந்து விட்டது /.....

  arumai arumai arumai sakothari //ஒரு கையாக ஆண் சமுதாயமும், மறு கையாக பெண் சமுதாயமும் செயல்பட்டால் மட்டுமே முழுமையான மாற்றத்தை இஸ்லாத்தின் திருமணங்களில் கொண்டு வர முடியும்..///
  intha ennam thaan enakum... ellarum aangaley kutham solranga ....allah ungalauku immaiyilum marumayilum arul puriyattum

  //பெண்கள் தான் வரதட்சணை கேட்கிறார்கள் என்று பெரிய குற்றச்சாட்டு நம் மீது உள்ளது... இன்ஷா அல்லாஹ் அந்த எண்ணத்தை நம் தலை முறை யில் சரி செய்து விடுவோம்.. நம் பிள்ளைகளுக்கு வரதட்சணை இல்லாத நபி வழித் திருமண ம் செய்ய அல்லா நமக்கு துணை புரிவானாக!!!! ஆமீன்...///
  MAASHA ALLAH ARUMAI SAKOTHARI ORUMATHRI AAHIDUCHI PADITHAUDAN  https://www.facebook.com/irshath.ahmed.7

  ReplyDelete
 9. அருமையான ஆக்கம் .வாழ்த்துக்கள் .
  இன்று நம் சமூகம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை .அதுவும் பெண் பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள் .இன்று நம்மில் மாற்றங்கள் இருக்கிறது என்றாலும் மணப்பெண்ணின் மார்க்கப் பற்றுக்காக திருமணம் முடிப்பவர்கள் எத்தனை பேர் ? இன்னும் நம்மில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் .இஸ்லாம் என்றோ எமக்கு வழி காட்டி விட்டது .அதன் வழியில் நடப்பது நமது கையில் தான் .4:14 எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.  ReplyDelete