Thursday, June 28, 2012

இந்த இழிநிலைக்கு யார்/எப்படி காரணமாகிறார்கள்? தீர்வு என்ன?

முந்தைய பதிவினை படித்துவிட்டு இதனை தொடருங்கள் சகோஸ்...
இந்த இழி நிலைக்கு யார் காரணம்??


பார்ப்பவர்களை எளிதாக கவரும் அழகுடைய 22 வயது பெண் ஆயிஷா. நடுத்தர குடும்பத்தில் இரு சகோதரிகளுடன் பிறந்தவள் என்றாலும் அவளின் பெற்றோர்கள் அதீத அன்புடனும், தெளிவற்ற அக்கறையுடனும் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக வளர்த்தனர். இஸ்லாம் பற்றி பெற்றோர்க்கு தெரியாத போதும் மகளுக்கு மார்க்க கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தனர். அங்கு கதீஜா என்னும் ஈமான் நிறைந்த பெண்ணின் நட்பும் அவளுக்கு கிடைக்கிறது.அவ்வப்போது கதீஜா கூறும் ஹதீஸ்களையும் ஆயிஷா காது கொடுத்து கேட்பதில்லை.


ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட பெற்றோர்கள் (அஸ்தஃபிருல்லாஹ்) அவளின் வருங்காலம் கணிக்க ஜோசியரிடம் சென்றார்கள். ஆனால் இஸ்லாம் இதில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட
ஒன்று என்பதை அறியவும் இல்லை, அறிய முயற்சிக்கவும் இல்லை..
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்:-
சூனியம் மற்றும் ஜோசியக்காரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென நம்புபவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது இறக்கப்பட்ட மார்க்கத்தை நிராகரித்துவிட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

யாரேனும் குறிகாரனிடம் வந்து ஏதேனும் கேட்டால் அவனது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது’. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.
உண்மையாகவே நாளை நடக்கப் போவதை இன்றே அறிந்தவன் போல் அந்த ஜோதிடனோ ஆயிஷா காதலித்தவனோடு வீட்டைவிட்டு ஓடிப்போவாள் என மிகப் பெரும் அதிர்ச்சி குண்டை வீசுகிறான்.
அதைக் கேட்டு திடுக்கிட்ட அவர்கள் கடவுளே வந்து வாக்கு சொன்னது போல் அதன் மேல் நம்பிக்கை கொண்டு ஆயிஷா மேல் புதிய கட்டுப்பாடுகள் விதித்ததோடு வெறுப்பாகவும் நடக்க ஆரம்பித்தனர்.புதியதாக இப்படி வெறுப்பைக் கண்ட அவள் திகைத்து போனாள்.

தனிமையிலும், கொடுமையிலும், வாழ்வை வெறுத்துப் போய் இருந்த அந்த சூழ்நிலையில் தான், சிறுவயதில் நட்பாய் இருந்த ராம் வெகு நாட்களுக்கு பிறகு திடீர் என்று அவள் கண்ணில் பட்டான். மன ஆறுதலுக்கு அவனுடன் பழக ஆரம்பித்தாள்., ராம்முடன் பழகியதையும் சந்தேகத்துடன் கண்ட குடும்பத்தினர் அவளை கடுமையாக கண்டித்தது, எங்கேயாவது ஓடிடலாம் என்று அவள் நெஞ்சில் நஞ்சை விதைக்க ஆரம்பித்தது.

அதனால் இது வரை தன் குடும்பம் அறிந்து செய்த அனைத்து காரியங்களையும் மறைவாக செய்ய ஆரம்பித்தாள். இதே போல் ராமுடனான சந்திப்பையும், பழக்கத்தையும் மறைவாக தொடர்ந்தாள்.


இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட ராம் "ஏன் உன்னை நம்பாதவர்களோட இருக்க வேண்டும்? தக்க பதிலடி கொடு என அவள் மனதில் நஞ்சை விதைக்க ஆரம்பித்தான், நான் இருக்கிறேன் உனக்கு, எதுவாக இருந்தாலும் தைரியமாக செய் என்று அவள் குடும்பத்திற்கு எதிராக அவளை செயல் பட தூண்டினான். அவன் இவ்வாறு கூறியதற்கு காரணம் அன்போ, காதலோ, அக்கறையோ இல்லை. மாறாக நீ மட்டும் இவள மடக்கி காட்டிடு மாப்ள, உன்னை திறமையானவன்னு ஒத்துக் கொள்கிறோம்என்ற நண்பர்களின் சவால் தான். ராமின் வார்த்தைகள் அவனை அவளது வாழ்க்கை துணையாக சித்தரிக்க துவங்கியது. அதற்கு ஒரே வழி இவர்களிடம் இருந்து தப்பி ஒரு புது வாழ்க்கை அமைக்க வேண்டும் என்று யோசித்தாள்.
ஒரு புறம் நாம் ஏன் ஓடி போக வேண்டும்? நம் மீது எந்த குற்றமும் இல்லை என்று புரிய வைக்க வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது. மற்றொரு புறம் இவர்கள் செய்யும் இந்த புரியாத கொடுமைக்கு நாம் எத்தனை நாள் தான் பொறுமையாக இருப்பது என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
அவன் மனதில் உள்ளதை அறியாத ஆயிஷாவுக்கு, அவன் கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. நாம் எங்கேயோ சென்று கஷ்டபடுவதை விட நம் மீது அன்பும், அக்கறையும், ஆறுதலாக இருக்கும் இவனுடன் போனால் என்ன?, இவனையே கல்யாணம் செய்து கொண்டால் என்ன? என்று ஆயிஷாவின் மனதில் ஒரு ஆசை தீப்பொறியிட்டு எறிய தொடங்கியது.
இவரை போன்றவர்களுக்கு தான் அல்லாஹ் தன் திருமறையில் பின் வருமாறு அறிவுரை கூறுகிறான்:-
"அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். (2:221)
அல்லாஹ்வின் கட்டளையையோ அல்லது இஸ்லாத்தை முற்றிலும் புரிந்திராத ஆயிஷா , அவனிடம் அவளது முடிவை தெரிவிக்க, வாய்ப்புக்காக காத்திருந்த அவனோ முதலில் மறுப்பது போல் மறுத்து, பின் ஒப்புக்கொள்கிறான். மேலும் ஆசைவார்த்தை காட்டி அவளை வீட்டை விட்டு வருமாறு அழைக்கிறான்.

அன்று இரவு, ஆயிஷா ஒருவித மனக் குழப்பத்துடன் வீட்டைவிட்டு ஓட தயாராகிறாள். நடு இரவில் அனைவரும் உறங்கியவுடன் போகலாம் என எண்ணியபடி படுத்திருந்த அவளுக்கு ஒரு உளறல் சத்தம் கேட்கிறது,
என்னருமை மகள் ஆயிஷாவே எனக்கு நற்பெயரை வாங்கி கொடு, நீ செய்யப் போகும் காரியத்தை நினைத்து, நாங்கள் நித்திரை இல்லாமல் தவிக்கிறோம், உன் சகோதரிகளின் வாழ்க்கையை சிந்தித்துப் பார்" என்று தனது ஆழ் மனதில் இருந்த ஜோதிடனின் வார்த்தை முற்றிய கவலையாக, புலம்பிய தாயின் குரல் அது.

"
நாம் இவ்வாறு நம் குடும்பத்தினரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து வீட்டை விட்டு ஓடிப்போனால், அதே ஏச்சையும் பேச்சையும், அவர்கள் ஊராரிடம் கேட்க வேண்டி இருக்குமே" என்று சிந்தித்தபடி நின்றிருந்தவளுக்கு, கதிஜாவின் போதனை நினைவுக்கு வந்தது,
ஒரு நாள் கதிஜா ஆயிஷாவின் பிரச்சனை பற்றி கேட்க, தன் குடும்பத்தினரின் சந்தேகப்பார்வைகளையும் திடீர் கட்டுப்பாடுகளையும் பற்றி கூறுகிறாள். அதற்கு கதிஜா உடனே ஒரு தக்க பதிலை சரியான நேரத்தில் உரைத்தாள்.
நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில் ஒருவரான அன்னை ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஒரு முறை அவதூறு ஏற்பட்டது. அப்போது அவர் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று யாரிடமும், ஏன் தன் சொந்த கணவன், நீதி தவறாத உத்தம தலைவரான நபி (ஸல்) அவர்களிடம் கூட அவர்கள் வாதாடவில்லை, அவர்கள் அல்லாஹ்வின் மேல் கொண்ட நம்பிக்கைக்கு அல்லாஹ் அவர் நிரபராதி என்று வேத அறிவிப்பு மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியப்படுத்தினான். அதைக் கேள்வியுற்ற ஆயிஷா(ரலி) அவர்கள் நான் அல்லாஹ்வுக்கே மட்டுமே நன்றி சொல்ல கடமைபட்டவள் என்று தெரிவித்தார்.
மேலும், அந்த ஆயிஷாவின் (ரலி) ஈமானும், நம்பிக்கையும், பொறுமையுமே அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் நீதி கிடைக்க வைத்தது. நீயும் பொறுமையாக இரு, உனக்கு வல்ல இறைவன் உதவி புரிவான் என்று கதீஜா அறிவுரை கூறுகிறாள். அவளின் அறிவுரையை நினைவுக் கூர்ந்த ஆயிசா "நானும் அந்த அல்லாஹ்வை மட்டுமே இப்பொழுது உதவிக்கு அழைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நாள் பொறுமை காப்போம், அவர்களுக்கு புரிய வைப்போம்" என்ற முடிவோடு ராமிடம் தனது மன மாற்றத்தை சொல்ல விரைந்தாள்.

அங்கு தான் அவளுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது, “டேய் மாப்ளே சொன்னத செஞ்சுட்டா, எப்படியவாது இவள வலைச்சு போட்டு காட்டுறேன்னு சொன்ன, செஞ்சுட்ட. ஹும்ம்... நீ கில்லாடி டா, சரி இப்போ என்ன பண்ணலாம்?"னு... ராம்மின் நண்பன் ஐடியா கேட்க "எங்கயாவது இழுத்துட்டு போய் கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணிட்டு கழட்டி விட வேண்டியதுதான்" என்ற ராமின் வார்த்தையை தொலைவிலிருந்தே கேட்ட ஆயிஷாவுக்கு இருதயமே வெடிப்பது போல் இருந்தது.

ஒன்றும் சொல்லாமல் அங்கு இருந்து திரும்பி வந்த ஆயிஷா மறுநாள் காலை பெற்றோரிடம் அவர்களின் செயல்கள் பற்றி மனம் விட்டு பேசினாள் பிரச்சனையின் ஆரம்பம் பற்றி அறிந்துக்கொண்டாள். அதற்கேற்றாற்போல் வெகு விரைவிலேயே ஜோசியக்காரன் போலியானவன் என தெரிய வந்ததும், ஆயிஷாவின் பெற்றோர்கள் தங்களது அறியாமையை எண்ணி தாங்கள் செய்த தவறை அவள் விட்ட கண்ணீரிலே கரைத்தனர்.

ஒரு நிமிடம் திகைத்து போன ஆயிஷா, கண்ணீர் மல்க தன் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லி, என் இறைவனே! இனி என் வாழ்வு உனக்காகவே என்று அவளது பெற்றோரை கட்டி பிடித்து அழுதாள், கதிஜாவுக்கு மனமார நன்றியுரைத்தாள் ஆயிஷா.

ஒருபோதும் இறைவன் மீது பற்றில்லாத அவளுக்கு, அவள் ஒரு நொடி கொண்ட ஈமானுக்கும்
, நம்பிக்கைக்கும் அல்லாஹ் அவளை நரக நெருப்பில் இருந்து காப்பாற்றி விட்டான்.

ஆயிஷா, ஒரு நொடி யோசிக்காமல் அப்படி ஒரு கேடு கேட்ட முடிவை எடுத்து இருந்தால் இன்று அவளுக்கும் அவளது குடும்பத்திற்கும் எத்தனை பெரிய அவமானம்? அவமானத்தை இம்மை வாழ்விலும், நரகத்தை மறுமையிலும் அடைந்து இருப்பாள். இதனையே உலக திருமறையாம் அல் குர்-ஆனில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,
அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல் குர்-ஆன் 14:4)
இன்று இவளைப்போலத்தான் எத்தனையோ பெண்கள் உண்மை காதல் என்றெண்ணி கயவர்களின் வலையில் வீழ்ந்து தான் அழிவது இல்லாமல் தன் குடும்பத்தையும் அழிக்கிறார்கள். எத்தனை எத்தனை செய்திகளில் பார்க்கிறோம்? பெண் பிள்ளைகளின் இது போன்ற தவறுகளால் வெளியில் தலை காட்ட முடியாமல் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்கிறது. அவர்களின் உடன் பிறந்தவர்களின் வாழ்க்கை பாதிப்படைகிறது.
இது போன்ற தவறுக்கு பெண் பிள்ளைகள் தனது பெற்றோர்களால் இஸ்லாமிய கல்வியறிவு ஊட்டப்படமால் வளர்ப்பது தானே முக்கிய காரணம்?
இன்று ஆயிஷாவின் பெற்றோர் வழி தவறி மாற்று மதத்தவர்களின் மூட நம்பிக்கையையும், அல்லாஹ்வுக்கு மாறு செய்ததும் தான் அவளையும், அவர்களையும் ஒரு மிகப்பெரிய பாதளாத்தில் தள்ளவிருந்தது. ஆனால் அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அவர்களுக்கு நேர்வழி கிடைக்கப்பெற்று இஸ்லாத்தையும், அவனின் மகத்துவத்தையும் முழுமையாக அறிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தான். அல்லாஹு அக்பர்...


ஒரு நாடு சுதந்திரம் அடைந்தவுடன் மக்கள் 'எப்படியும் சுதந்திரமாக வாழட்டும்' என அர்த்தம் இல்லை. பலரும் கூடி தனியாக சட்டம் வகுத்து, கடமையும் உரிமையும் தனித்தனியே பிரித்தளித்து அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரம் வழங்குகிறது இல்லையா? கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருக்கும் போது தான் நம்மால் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
பெற்றோர்களே! பெண்பிள்ளகளுக்கு கண்காணிப்போடும் கட்டுப்பாடுகளோடும் கூடிய சுதந்திரத்தையும், மார்க்க அறிவையும் அதன் சட்டதிட்டங்களையும் எத்தி வைக்க தவறாதீர்கள்.
இறையச்சம் கொள்ளும் குழந்தைகள் மட்டுமே நம் ஒவ்வொரு செயலுக்கும் நம்மை படைத்த இறைவனிடம் மறுமையில் பதில் சொல்லி ஆக வேண்டுமே என்றெண்ணி தீய வழிக்கு செல்ல நிச்சயம் தயங்குவார்கள்.
ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஊட்டச் சத்து மிக்க தாய்ப்பாலோடு ஈமானையும், இஸ்லாமிய வாழ்வியல் நெறியையும் சேர்த்து ஊட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமை என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஈருலகையும் நம்பிக்கை கொள்ளும் நாம் தான், நம் பிள்ளைகளை இஸ்லாமிய முறைப்படி வளர்த்து இரு உலகிலும் வெற்றிக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் இன் ஷா அல்லாஹ்....

உங்கள் சகோதரி
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்

8 comments:

 1. சிறந்த பகிர்வு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. SALAM,

  இஸ்லாம் சொல்லும் ஒழுக்கங்களையும்,பண்பையும் கற்று கொடுப்பதே ஓர் பெற்றோரின் முக்கிய கடமை ...இவ்வுலக கல்வியை படிக்கவைக்கு எடுக்கும் சிரத்தையை விட இஸ்லாத்தை சொல்லிகொடுக்க பெரும்பாலான பெற்றோர்கள் முன்வருவதில்லை..இந்நிலை மாற பெற்றோர்கள் இஸ்லாத்தை அறிய வேண்டும்

  புதிய வரவுகள்:
  கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

  கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?

  ReplyDelete
 3. சொல்லிய விதம் அருமை.

  ReplyDelete
 4. சகோதரியாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் அவர்களின் கட்டுரை அருமை. அல்லாஹ்வின் அருளால் மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. சகோதரியாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் அவர்களின் கட்டுரை அருமை. அல்லாஹ்வின் அருளால் மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. சகோதரி யாஸ்மின் அவர்களின் இந்த மடல் ஒரு கதை அல்ல.. இன்று நிகழ காலத்தில் சில இஸ்லாமிய இளம்பெண்கள் மார்க்க அறிவு பெற்றும்...உலக அறிவோ எதிரிகளைப் பற்றிய சிந்தனையோ இல்லாமல் அவர்களின் வலையில் வீழ்ந்து வருகிறார்கள் முச்ளிம்விரோத போக்கும் முஸ்லிம் பெண்களை எப்படியாவது நாம் அனுபவிக்கவேண்டும் என்கிற வக்கிரகப்புத்தியும் ,அதற்காக அவர்களுக்கு எல்லாவித உவிகளையும் செய்துவரும் ஹிந்த்த்துவா இயக்கங்களும் இன்று களத்தில் இரங்கி உள்ளார்கள். எனவே சகோதரியின் இந்த மடலை வெறும் மடலாக என்னிவிடாமல் நாம் நமது வீட்டுப்பெண்களிடம் தெளிவாக அதே சமயம் அன்பாக உணர்த்தி நல்ல ஒரு இஸ்லாமிய குடும்பமாக வாழ கற்றுக்கொடுக்கவேண்டும் ...
  சகோதரி யாஸ்மின் அவர்களின் எழுத்துப்பணியை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு இன்னும் நல்ல இல்மை கொடுப்பானாக ...ஆமீன்

  ReplyDelete
 7. சகோதரி யாஸ்மின் அவர்களின் இந்த மடல் வெறும் மடல் அல்ல..மாறாக இன்று நமது சமூதாயத்தில் நடந்துவரும் நிகழ்வு என்றுதான் நாம் நினைக்கவேண்டும் இன்று சில இஸ்லாமிய பெண்கள் மார்க்க அறிவு பெற்றும் உலக அறிவோ அல்லது எதிரிகளைப் பற்றிய சிந்தனையோ இல்லாமல் ..இன்று எதிரிகளின் தொலைப்பேசிக்கு அடிமையாகி அவர்களின் பின்னால் குடும்பத்தைவிட்டே ஓடிப்போகும் நிலை உருவாகி உள்ளது எனவே நம்வீட்டுப் பெண்களுக்கு எதிரிகளின் செயல்திட்டத்தை தெளிவாக , அன்பாக புரியவைத்து நல்ல ஒரு இஸ்லாமிய குடும்பமாக உருவாக்கவேண்டும் ..சகோதரி யாஸ்மின் அவர்களின் இந்த மடல் நம் சமூதாயத்தில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தும் இன்ஷா அல்லாஹ் ..அவர்களின் எழுத்துப்பணியை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ..

  ReplyDelete
 8. அருமையான பதிவு சகோ...
  பகிர்விற்கு நன்றீ சகோ..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete