அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
குடும்பத்தின் தலைவி, சொத்துரிமை, பேச்சு உரிமை, கல்வியில் உரிமை, திருமணத்தில் உரிமை என்று பலவற்றிலும் பெண்களுக்கு கண்ணியமான உரிமையை வழங்கி, மேன்மைபடுத்திய மார்க்கம் இஸ்லாமே தவிர வேறு மார்க்கமே இல்லை என்பதில் எந்த ஐயமுமில்லை.
இத்தகைய சிறப்பை வழங்கிய இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவில்லை என்றாலும் அவனுக்கு மாறு செய்யாமல் இருப்பது உகந்தது.
இதுபோன்ற செயல்களுக்கு இஸ்லாமிய அறிவை பெறாத பெற்றோரும் எப்படி காரணமாகிறார்கள் என்பதற்கும் பெண் பிள்ளைகளும் எப்படி பலியாகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்துடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.. இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ்....
குடும்பத்தின் தலைவி, சொத்துரிமை, பேச்சு உரிமை, கல்வியில் உரிமை, திருமணத்தில் உரிமை என்று பலவற்றிலும் பெண்களுக்கு கண்ணியமான உரிமையை வழங்கி, மேன்மைபடுத்திய மார்க்கம் இஸ்லாமே தவிர வேறு மார்க்கமே இல்லை என்பதில் எந்த ஐயமுமில்லை.
இத்தகைய சிறப்பை வழங்கிய இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவில்லை என்றாலும் அவனுக்கு மாறு செய்யாமல் இருப்பது உகந்தது.
ஆனால் இன்று பெண்களின் நிலையோ???!!! தவறான பழக்க வழக்கத்தாலும், ஊடகங்களின் ஈர்ப்பாலும், உலக வாழ்வின் ஆக்கிரமிப்பாலும், போதைப் பொருளாக, சுகம் கொடுக்கும் கருவியாக, விளம்பர பொருளாக, பெற்ற பெண் மக்களை பணத்திற்காகவும்,
வறுமையை நீக்கவும் கொடுங்கிழார்களுக்கு பெற்றோர்களாலேயே விற்கப்படும் பொருளாக, இது போன்ற இன்னும் பிற இழிநிலைகளில் வாழ்கின்றனர் என்று சிந்திக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
வறுமையை நீக்கவும் கொடுங்கிழார்களுக்கு பெற்றோர்களாலேயே விற்கப்படும் பொருளாக, இது போன்ற இன்னும் பிற இழிநிலைகளில் வாழ்கின்றனர் என்று சிந்திக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
இதற்கு, ஒரு புறம் உலக வாழ்வும், மேலை நாட்டு மோகமும், கூடா நட்பும் காரணமாக இருந்தாலும் மறுபுறம் பெற்றோரும் இவர்களின் தவறான வழிக்கு முக்கிய காரணமாகின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஒரு பிள்ளையை பெற்றெடுத்து அதை திருமண பந்தத்தில் இணைக்கும் வரை தாய்க்கும் தந்தைக்கும் பொறுப்புகள் பல இருந்தாலும், இதில் அதிக பொறுப்பும், அக்கறையும் தாய்க்கே உள்ளது என்பதை அனைவராலும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. இதையே நபி(ஸல்) பின்வருமாறு தெரிவிக்கிறார்கள்...
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) - நூல்:முஸ்லிம்
இப்படி பட்ட சூழ்நிலையில், இன்று பெண் குழந்தை என்றாலே வயிற்றில் நெருப்பைக் கொண்டு வாழும் விதமாக நம் கலாச்சாரமும், சூழ்நிலையும் மாறி உள்ள இந்த காலத்தில், அவர்களை சரியான முறையில் ஒரு சிறந்த மூமீனாக (இறையச்சம் கொண்டவராக) வளர்க்க முதலில் பெற்றோர்கள் தங்களது இஸ்லாமிய அறிவை பலப்படுத்திக் கொள்வதும், அதன் படி தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதும் மிக முக்கியமான ஒன்று.
இதையே நபி (ஸல்) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:-
ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இனிய மார்க்கத்திலே பிறக்கிறது. அதன் பெற்றோர்கள் அந்த குழந்தையை யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி விடுகிறார்கள். அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) – நூல்:புஹாரி
ஆனால் இன்று எத்தனையோ பெற்றோர்கள் தன் பிள்ளையை சுதந்திரத்துடனும், வசதியுடனும் வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்கின்றனரே தவிர ஈமான் நிறைந்தவர்களாக வளர்க்க தவறிவிடுகின்றனர். மேலும் இதற்காகவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒரு குழந்தை ஏழு வயதை அடைந்தவுடன் தொழுமாறு ஏவுங்கள், பத்து வயதை அடைந்ததும் தொழுகையை தவறவிட்டால் அடியுங்கள். (அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) – நூல்:முஸ்லிம்)ஆனால் இன்று எத்தனை பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு மானக்கேடான செயலில் இருந்து தன்னை காக்கும் மிகப் பெரிய கருவியான தொழுகையை ஏவுகிறார்கள்??
அதை தவிர்த்துவிட்டு, கட்டுப்பாடும் வரைமுரையுமின்றி தன் பெண்பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற சுதந்திரத்தை அனுமதிக்கும் பெற்றோர்கள் இஸ்லாத்தையும், அதன் அழகிய வழி முறையையும் எடுத்து சொல்ல தவறிவிடுகிறார்கள். இதன் விளைவு இன்று எங்கு பார்த்தாலும், பள்ளி படிக்கும் மாணவி முதல் திருமணம் முடித்த பெண் வரை "காதலனுடன் ஓட்டம்" என்று செய்திகள் வெளியாவது கேட்பவர் நெஞ்சை பதை பதைக்கிறது.
இதுபோன்ற செயல்களுக்கு இஸ்லாமிய அறிவை பெறாத பெற்றோரும் எப்படி காரணமாகிறார்கள் என்பதற்கும் பெண் பிள்ளைகளும் எப்படி பலியாகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்துடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.. இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ்....
உங்கள் சகோதரி
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்
பிற்சேர்க்கை- இந்த பதிவின் அடுத்த பாகத்தை காண பின்வரும் சுட்டியை சொடுக்கவும். இந்த இழிநிலைக்கு யார்/ எப்படி காரணமாகிறார்கள்? தீர்வு என்ன?
யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்
பிற்சேர்க்கை- இந்த பதிவின் அடுத்த பாகத்தை காண பின்வரும் சுட்டியை சொடுக்கவும். இந்த இழிநிலைக்கு யார்/ எப்படி காரணமாகிறார்கள்? தீர்வு என்ன?
Tweet | ||||
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி
ReplyDelete////இதற்கு, ஒரு புறம் உலக வாழ்வும், மேலை நாட்டு மோகமும், கூடா நட்பும் காரணமாக இருந்தாலும் மறுபுறம் பெற்றோரும் இவர்களின் தவறான வழிக்கு முக்கிய காரணமாகின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.////
சிந்திப்பார்களா? அருமையான பதிவு வாழ்த்துக்கள்
ஏனிந்த இழிநிலை கூறுவீர்
ReplyDeleteஏனிந்த இழிநிலை கூறுவீர்
இது சரிதானா?
இது முறைதானா?
காதல்போர்வைகளில் பல இடங்களில்
கவிழ்க்கபடுகிறது கன்னியர்களின் கற்புகள்.
இதெல்லாம் இப்போது ஒன்றும்புரியாது தான் தாயாகி தந்தையாகி நிற்கும் வேலையில் உணரும்போது ஒன்றுக்கும் வழியிருக்காது..
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
ReplyDeleteமுதலில் அருமையான தலைப்பை தேர்ந்தெடுத்ததற்கு என் வாழ்த்துக்கள் யாஸ்..:-)
////இன்று எத்தனையோ பெற்றோர்கள் தன் பிள்ளையை சுதந்திரத்துடனும்,வசதியுடனும் வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்கின்றனரே தவிர ஈமான் நிறைந்தவர்களாக வளர்க்க தவறிவிடுகின்றனர்.////
உண்மையான வரிகள்..வசதியாக வளர்க்கிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்வில் நாமே மண்ணை அள்ளி போடுகிறோம் என்று தெரியாமலே இங்கு பல பேர் நடைமுறையில்..
நல்ல ஆக்கம்....இன்றைக்கு அவசியம் தேவை படும் ஒன்று..
நல்ல பதிவை கொடுத்ததற்கு நன்றிகளும்,பல நல்ல ஆக்கங்களை தர வேண்டும் என்ற வாழ்த்துக்களோடும்..
இன்ஷா அல்லாஹ்..அடுத்த பதிவையும் எதிர்பார்த்து..:-))
சலாம் யாஸ்மின்,
ReplyDeleteஇன்றைய உலக நடப்பை அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்....
எல்லா பெற்றோர்களுக்கும் தெரியும் உலகம் போற போக்கு சரி இல்லைனு... ஆனா தன் மகன்/மகள் மட்டும் அப்படி போக மாட்டார்கள் என்ற குருட்டு நம்பிக்கை. அதனால் சரிவர கவனிப்பதில்லை... அதை விடுத்து உலகம் எப்படியோ போகட்டும், நான் என் மகன்/மகளை கட்டுப்பாடுடன் வளர்ப்பேன் என்று முடிவு செய்தால், இது போன்ற விஷயங்களி ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரலாம்....
salam sis!
ReplyDeletemasha allah
good awerness article keep it up!
allah with us!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
ReplyDeleteமுன்பெல்லாம் சில வீடுகளில் பெண்கள் மீது கட்டுப்பாடு விதிக்கும் தந்தையை பார்த்தால் செம எரிச்சலாக இருக்கும். ஏன் இப்படி இந்த காலத்திலும் காட்டுத்தனமா நடந்துக்குறாங்க? தன் பொண்ணு மேல தனக்கே நம்பிக்கை இல்லைன்னா மத்தவங்க எப்படி நம்புவாங்க? இந்த வயசுல அந்த பொண்ணு பிரன்ட்ஸ்கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலன்னா கெழவியா போன பிறகா பிரன்ட் கூட பேசுவா?..... இப்படியாக பல வகைகளில் கேள்வி எழுந்து கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர் மேல் வெறுப்பு உண்டாகியது. ஆனால் நாமும் பெற்றோராய் மாறிய பின் தான் அந்த கட்டுப்பாடுகளில் எவ்வளவு நன்மை அடங்கியிருக்குன்னு உணர முடியுது! சிறுவயதில் நம்மை கட்டுப்பாடோடு வளர்த்த பெற்றோரின் செயல்களும் இப்போது தான் உன்னதமாக தெரிகிறது.
தாய் தந்தையரின் வளர்ப்புக்கு ஏற்பதான் சமூகத்தில் குழந்தைகளின் வளர்ச்சி இருக்கும். நிச்சயமாக குழந்தையை நல்ல முறையில் பராமரிப்பதில் தான் அவர்களின் பொறுப்பு முழுமையடையும். அதை தவறும் பெற்றோர்க்கு அவமானம் நிச்சயம் உண்டு!
அழகான முறையில் சொல்லியிருக்கீங்க யாஸ்மின். மாஷா அல்லாஹ்
மேலும் பல ஆக்கங்கள் பகிர்ந்திட மனமார்ந்த வாழ்த்துகள்
இன்றைய காலத்திற்கு ஏற்ற அருமையான விஷயம். நன்றி சகோதரி
ReplyDeleteகாலத்தின் தேவை அறிந்து பதிந்த பதிவு.. நல்ல செய்தி. அல்லாஹ் எமது பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக வளர்க்க எமக்கு அருள் புரிவானாக...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteபெற்றோர்களூக்குத்தான் மார்க்க அறிவு இப்போதைக்கு தேவை என்பது நிதர்சனமான உண்மை.
அருமையான ஆக்கம்.
தொடருங்கள் சகோதரி!!
சலாம் சகோ.யாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன்,
ReplyDeleteமாஷா அல்லாஹ்..!
மிக
அருமையான
அவசியமான
விபரமான
தெளிவான பதிவு..!
ஜசாக்கல்லாஹு க்ஹைர் சகோ.
சிறியதொரு பதிவு. சிறப்பான பதிவு. அருமை.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ......
Deleteஜசக்கல்லாஹ் ஹைரன் உங்களின் ஊக்குவின்மைக்கு..
//சிறியதொரு பதிவு. சிறப்பான பதிவு.//
இந்த ஆக்கம் இத்துடன் முடியவில்லை.. இதனுடைய தொடர்ச்சி அடுத்த பாகத்தில் வெளியாகும்.. மறவாது படியுங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் யாஸ்மின்
ReplyDeleteஅருமையான பகிர்வு..
இது போன்ற சீரழிவிற்கு சினிமா மோகம் காரணமாக அமைந்து விடுகிறது... காதலை மிகப்பெரிய விஷயமாக சித்தரிக்கும் சினிமாக்கள் நம் சமுதாயத்தின் சாபக்கேடு..!
பெற்றோர்களே இது போன்ற சினிமாவை வீட்டுக்குள் அனுமதித்து பிள்ளைகளுடன் பார்க்கும் நிலையில்.. இது போன்ற சம்பவங்கள் நடப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை..!!
பெற்றோர்கள் முதலில் மார்க்க விஷயங்களில் தெளிவு பெற்று அதை பிள்ளைகளுக்கும் எடுத்து சொல்ல வேண்டும்.. அப்பொழுதுதான் இந்த நிலை மாறும்..!!
//காதலை மிகப்பெரிய விஷயமாக சித்தரிக்கும் சினிமாக்கள் நம் சமுதாயத்தின் சாபக்கேடு..!
Deleteபெற்றோர்களே இது போன்ற சினிமாவை வீட்டுக்குள் அனுமதித்து பிள்ளைகளுடன் பார்க்கும் நிலையில்.. இது போன்ற சம்பவங்கள் நடப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை..!! //
சரியான பாயிண்ட் ஷர்மி. இது போன்ற அதிமேதாவி விஷயங்களை, பார்க்கவும் அதைப் பற்றி நிறைய டிஸ்கஸ் செய்யவும் விட்டுவிட்டு பின்பு குய்யோ முறையோ என்றால்.......????? பெற்றோர்களாக இருக்கும் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம். சரியான அலசல். ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteதவறான சிந்தனைக்கு அடிப்படை காரணம் அவர்கள் மார்க்கம் குறித்து தெளிவாய் அறியததே. அதற்கு அவர்களுக்கு இஸ்லாமிய அறிவை எத்தி வைப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் தலையாய கடமை என்பதை அழகாய் உணர்த்தும் ஓர் பாடம்..!
சிறந்த பதிவிற்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇஸ்லாமிய நிழலில் குழந்தை வளர்ப்பு இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு .ஆரம்ப முதலே பெற்றோர்கள் இஸ்லமிய அறிவுடன் தம் பிள்ளைகளை வளர்த்தால் .மறுமையில் நம்மை படைத்தவனிடம் குற்றவாளியாக நிற்க்க மாட்டோம் .இஸ்லாமிய அறிவுடன் உலக அறிவும் அவசியம் .தம் பிள்ளளைகளுக்கு உலக அறிவும் பொருளாதார வசதியும் மட்டும் இருந்தால் போதாது என்பதை உணர வேண்டும் .இஸ்லாத்தையும் போதிக்க வேண்டும் .அப்பொழுதுதான் சிறந்த ஒரு சமுதாயத்தை தோற்றுவிக்கலாம் இன்ஷால்லாஹ் .சிறந்த ஒரு பதிவு வாழ்த்துக்கள் சகோதரி .இன்ஷால்லாஹ் மேலும் தொடரனும்
சலாம் யாஸ்மின்,
ReplyDeleteஇன்றைய உலக நடப்பை அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்....
Good Post sister...jazakallah
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteஉண்மைதான் மார்க்க அறிவு உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் வழிதவறி போவது மிகக்குறைவு . காரணம் அவர்கள் பிள்ளைகளுக்கு இறைவனின் பயம் இருக்கும் .
’ தொழுகை வெட்கக்கேடானவற்றையும் , மானக்கேடானவற்றையும் விலக்கும் ‘ என்பது அனுபவபூர்வமர்ன உண்மை தான்
ஜஸாக்கல்லாஹ் க்கைர்
Assalamu alaikkum sister.
ReplyDeleteoru nalla seithi- hadees, isalam adipadaiyil - eluthi irukkeenga.
Ya Allah - engalin ilaya samuthayathai nal valigalil nadathu. Aameen.
சிந்தனைக்கு நல்லது. மிகவும் உண்மையானது. மேலைநாட்டு மோகம் எனும் பதம் பதியப்படாமலிருந்திருந்தால் நலமாயிருக்கும். ஏனென்றால் மேலைநாட்டுக்கு மேலைநாடு நாங்கள்தான்! நாங்கள் அவர்களை குறைகூற, அவர்கள் எங்களை குறைகூற முடிவில் பிரச்சினை தீர்ந்தபாடில்லை!
ReplyDeleteபிள்ளைகளின் வழிகேட்டிட்கு பெற்றோர் காரணம் என்பது உண்மை. அந்த பெற்றோரின் வழிகேட்டுக்கு காரணம் யார்? என்று ஆராய்ந்துகொண்டுச் செல்லும் போது, ஆதி மனிதன் ஆதம் அவ்வாவை தான் போய் சேர்கிறது. ஆக அங்கிருந்து தான் சீர்திருத்தம் ஆரம்பமாகவேண்டும்.
ஜஸாக்கல்லாஹ்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி..
ReplyDeleteஇன்றைய சூழ்நிலைக்குத்தேவையான மிகச்சிறந்த கட்டுரை..
ஜஸாக்கல்லாஹ்....
அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.யாஸ்மின்,
ReplyDelete//ஆனால் இன்று எத்தனையோ பெற்றோர்கள் தன் பிள்ளையை சுதந்திரத்துடனும், வசதியுடனும் வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்கின்றனரே தவிர ஈமான் நிறைந்தவர்களாக வளர்க்க தவறிவிடுகின்றனர். மேலும் இதற்காகவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-//
சரியாக சொன்னீர்கள் சகோ. உலக வாழ்க்கையும், அதிலுள்ள பெருமைகளும், மதிப்புக்களுமே தேவை என்பது போல பலர் வாழ்ந்து விடுகின்றனர். உண்மையான மதிப்பும், மேன்மையும், பெருமையும் நமக்கு அளிக்கப்பட்ட மார்க்கத்தை சரி வர கற்று, வாழ்ந்து பார்ப்பதில்தான் என்பதை பெற்றோரே சரியாக உணர்த்துவதில்லை. மிக அருமையான கட்டுரை, முழுதும் படிக்க காத்திருக்கிறேன் (!!! :) )
வஸ் ஸலாம்
SALAM,
ReplyDeleteதற்போதுள்ள காலசூழ்நிலைக்கு ஏற்ற நல்ல கட்டுரை.மார்கத்தை தெரிந்துகொள்வது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெற்றோருக்கும் அவசியமே,சமுதாயம் மாற வேண்டும் மாற்றத்தை நம்மில் இருந்து ஆரம்பம் செய்வோம் இன்ஷா அல்லாஹ் .......
புதிய வரவுகள்:
ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே! உங்களைத்தான்!,
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
ASSALAMU ALAIKKUM SIS........
ReplyDeleteKAALATHUKKU AETRA SIRANDHA KARUTHTHUKKAL THANDHAMAIKKU JAZAKKALLAH...PADIKKUM OVVORUVARUM PAYAN PERA ALLAH THUNAI PURIYA VENDUHIREN...........
வ அலைக்கும் சலாம் சகோஸ்.. அனைவரின் பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் ஜசக்கல்லாஹ் ஹைரன்....
ReplyDeleteஉங்கள் விலை மதிப்பில்லாத துவாவில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்... அஸ்ஸலாமு அலைக்கும்....
சிறியதொரு பதிவு. சிறப்பான பதிவு. அருமை.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteசரியாகச் சொல்லி இருக்கீங்க சகோ யாஸ்..
குழந்தை வளர்ப்பில் தாய் , தந்தை இருவருக்கும் பொறுப்புகள் பொதுவாக இருந்தாலும் தாய்க்கு தான் தனி இடம் .. தந்தை வெளி நாட்டில் வேலைப் பார்ப்பவராக இருந்தால் முழுப் பொறுப்பும் தாயையே சார்கிறது... பிள்ளை நல்ல முறையில் இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை.. பெரிய தவறுகள் வேண்டாம்.. சின்ன பிடிவாதம் இருந்தால் கூட போதும்.. பழி சொல்பவர்களில் பிறருடன் தந்தையும் சேர்ந்து விடுவார் என்பது உறுதி..
அருமையான பதிவு சகோ.. வாழ்த்துக்கள்!!!