Monday, June 04, 2012

ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்

அனைவரின் மீதும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


ஹிஜாப்.  முஸ்லீம்களை அதிகமாக தாக்கப் பயன்படும் ஒரு விஷயம் என்றால் ஹிஜாப் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்புத்தெரிவித்தும் வருகின்றனர்.


இப்படி ஒரு புறம் இருக்க, பெரும்பாலும் ஒரு விஷயத்திற்காக சமுதாயத்தில் போராட்டங்களோ, எதிர்ப்புக்குரலோ கிளம்பும் போது எதிர்ப்புக்குள்ளான விஷயம் படிப்படியாக மறைந்தோ தடைசெய்யப்பட்டோ விடும்.  அதனால் தான் சமூகத்தில் அநீதி இழைக்கப்படும் போது தங்கள் கண்டனங்களை தெரிவிக்க முற்படுகிறார்கள்.   இது இயல்பு.


ஆனால் இந்த இயல்புக்குநேர் எதிர் விளைவாக

எதிர்ப்புகள் அதிகம் வர வரத்தான் ஹிஜாப்பின் மதிப்பும் அதன் முக்கியத்துவமும் அனைவரிடத்திலும் பரவுகிறது. உதாரணத்திற்கு
 ஹிஜாப்பிற்கு என்று அதிகமாக எதிர்குரல் ஒலிக்க ஆரம்பித்ததோ அன்று முதல் இஸ்லாமியர்களிடையே ஹிஜாப் வேகமாக பரவிவருகிறது. இஸ்லாம் வலியுறுத்திய கன்னிய உடை  பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது.  முன்பு அணியாதவர்கள் கூட ஹிஜாப் பேண ஆரம்பித்தனர்.  தலை மட்டும்  மூடியிருந்தால் போதும் என்ற நிலை மாறி முழுமையான உடை அணிய ஆரம்பித்தனர். முன்பு ஊர்களில் கருப்பு ஹிஜாப் போட்ட பெண்களை பார்க்கவே முடியாது.

மாஷா அல்லாஹ்... இன்று நிலைமையே தலைகீழ். வெறும் தலையை மட்டும் மறைத்து வரும் பெண்களை காண்பது அரிதாகிவிட்டது . எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம் என்பது இது தானோ என்னவோ?அந்த வரிசையில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி....


வரும் ஜூலையில் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் UAE பழுதூக்கும் வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து பங்கேற்க சர்வதேச weightlifting கழகம் (IWF) அனுமதி வழங்கியுள்ளது.


இவ்வாறு ஹிஜாப்பிற்கு weightlifting  பிரிவில் அதிகாரப்பூர்வமாக  அனுமதி  வழங்கப்பட்டுள்ளது ஒலிம்பிக் சரித்திரத்தில் இது தான் முதல் முறை.


இதற்காக IWF விதிமுறைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.


அதாவத....


1.முஸ்லீம் பெண்கள் தலையை மறைத்தவாறு பங்குபெறலாம். (முகத்தை அல்ல)
2.இதற்கு முன்  காலர் இல்லாத முட்டிக்கை வரையில் தெரியும்படியான மேல் சட்டையும், கால் முட்டி தெரியும் படியான கீழ் ஆடையும் தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வருடம் முஸ்லீம் பெண்கள் இஸ்லாம் பரிந்துரைத்த  முழுமையான உடையான ஹிஜாப்  அணியலாம் என்று விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


சரி ஏன் இந்த திடீர் விதிமாற்றம் என்ற கேள்வி எழும் இல்லையா?


அமெரிக்காவை சேர்ந்த முஸ்லீம் பெண் ஹிஜாப் அணிந்து விளையாட கூடாதென்று தடுக்கப்பட்டார்.  அவர் அந்த தடையை எதிர்த்து போராடினார். அந்த தாக்கத்தின் தொடர்ச்சியாக ஹிஜாப் ஒலிம்பிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எங்கோ தனியொரு நபருக்கு ஏற்பட்ட பிரச்சனை கூட  எந்தளவுக்கு ஒட்டுமொத்த  இஸ்லாமியர்களுக்கே நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கு பாத்தீங்களா? :-) போன ஒலிம்பிக்கில் பல பெண்கள் ஹிஜாப் அணிந்தபடி பங்குபெற்றதும் பலரை திரும்பிபார்க்க வைத்திருக்கும்.


இந்த விதிமுறை கட்டாயமில்லை எனவும் விரும்பியவர்கள் பழைய விதிமுறைகள் படியே ஆடை அணியலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.


இந்த விதிமுறை மாற்றத்தின் காரணமாக இன்னும் நிறைய மக்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அருமையானதொரு வாய்ப்பு உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.


ஒலிம்பிக்கின் போது ஹிஜாப் அணிந்து விளையாட ஏற்கனவே ரக்பி விளையாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு படிப்படியாக இனிவரும் காலங்களில் ஒலிம்பிக்கில் ஹிஜாப் முக்கிய இடம் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


2008-ன் பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது    எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளை சார்ந்த வீராங்கனைகள் படகுபோட்டி, வில்வித்தை போட்டி மற்றும் இன்ன பிற போட்டிகளிலும் ஹிஜாப் அணிந்தபடியே பங்கெடுத்தார்கள். ஹிஜாப் அணிந்த விளையாட்டு வீரர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருந்தார்கள். இதன் மூலம் ஹிஜாப் அணிவது  வெற்றியை துளி அளவும் தடுக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


என் கேள்வி என்னவென்றால்


1. IWF கழகம் ஆணாதிக்கம் நிறைந்தவர்களா இருப்பாங்களோ?


2. ஹிஜாப் என்னும் மூட நம்பிக்கையை ஆதரிப்பதால் ஒலிம்பிக் அமைப்பும் மூடநம்பிக்கைவாதிகளின் அமைப்பாக இருக்குமோ?


3. ஹிஜாப்பை அனுமதிக்கும் அவர்கள்  கூட பிற்போக்குவாதிகளா இருப்பாங்களோ?


4. ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் என்றும், பெண்களை போகப்பொருளாகவும் முஸ்லீம்கள் சித்தரிக்கிறார்கள் என்றும் கூறுபவர்களே!,    ஒலிம்பிக் அமைப்பும் அப்படி தான் நினைக்கிறதோ?


கூறுங்கள்....பதில் அறிய ஆவல்


எதார்த்தம் என்னவென்றால் ஹிஜாப் என்றும், எப்போதும் அனைவருக்கும் பொருந்தும் பொதுவான உடை!


சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் நிச்சயம் படிப்பினை உண்டு ...


சொல்லின் அர்த்தம்: ஹிஜாப்- இஸ்லாம் அனுமதித்த கன்னியமான உடை. முகம், உள்ளங்கை, கால் தவிர அனைத்து உறுப்புக்களையும் மறைக்கும் படியான தளர்வான உடை.
நன்றி : Onislam

22 comments:

 1. ஸலாம் சகோ.ஆமினா,
  ஒலிம்பிக்கின் இம்மனமாற்றத்தை வரவேற்கிறேன்..! Something is better than nothing... and something more is always better than something..!

  ReplyDelete
  Replies
  1. @சகோ ஆஷிக்

   வ அலைக்கும் சலாம் வரஹ்..

   //Something is better than nothing... and something more is always better than something..! //

   உண்மை தான் சகோ

   வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

   Delete
 2. ஸலாம்,
  நச்சிண்டு ஒரு பதிவு, ஆணாதிக்கம் நிறைந்த IWF கழகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   //ஆணாதிக்கம் நிறைந்த IWF கழகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்//

   ஆமா ஆமா...

   நானும் எக்கசக்க்கமா, கன்னா பின்னாவென வன்மையாக கண்டிக்கிறேன்.. என்னா ஒரு ஆணாதிக்கம் பிடிச்சவங்க... பொன்னுங்கள இப்படியா இழிவு படுத்துறது??? ஹி..ஹி..ஹி....

   Joke aparts.... We must appriciate and thanks to IWE Foundation for this permission :-)

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 3. சலாம்! அழகிய பதிவு. ஒலிம்பிக்கில் சகோதரிகள் ஹிஜாபோடு பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...


   ஹிஜாப் ஒருதடையே இல்லை என மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டிய சகோதரிகள் ஹிஜாப்போடு பிரகாசிக்க பல வெற்றிகளை பெற நானும் என் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா

  நச்சுன்னு அடுத்த பதிவு.மாஷாஅல்லாஹ்.

  ஒலிம்பிக்கில் ஹிஐ◌ாப் வரும் என்று தெரிந்திருந்தால் பாடசாலை காலங்களில் விளையாட்டு பிரிவில் செய்த சாதனையை தொடர்ந்திருக்கலாமோ???????????? ஹிஹி

  இன்ஷா அல்லாஹ் சகோதரிகள் ஒலிம்பிக்கில் சாதனை புரிய வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்..

   ஜஸக்கல்லாஹ் ஹைர் பஸ்மீன்

   //சாதனையை தொடர்ந்திருக்கலாமோ???????????? ஹிஹி//
   பஸ்மின்க்கு சாதனைக்கா பஞ்சம்??? :-)

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பஸ்மீன்

   Delete
 5. //எங்கோ தனியொரு நபருக்கு ஏற்பட்ட பிரச்சனை கூட எந்தளவுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கே நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கு பாத்தீங்களா? :-) //

  சிந்திக்க வேண்டிய கேள்வி இது :-) . அதே நேரத்தில் பூஸ்ட் , காம்ப்ளான் , ஹார்லிக்ஸ் கலந்து அடிச்ச சத்தான வருங்காலத்திய பெண்களுக்கு ஒரு டானிக் இது . :-)

  ReplyDelete
  Replies
  1. ம்ம்... நானும் ரொம்ப காலமா யோசிச்சுட்டே இருக்கேன்.

   எதிர்ப்புகள் வந்த பின் தான், எதிர்ப்பு பற்றி ஒன்றும் அறியாதவர்கள் இஸ்லாம் என்ன தான் சொல்கிறது என தேடி சென்று அறிய வேண்டும் என நினைத்து இஸ்லாம் பற்றி அறிய நினைக்கிறார்கள். சமீப காலமாக தான் பலத்த எதிர்ப்பு வருகிறது ஹிஜாப்பிற்கு. ஆனா இப்ப தான் முன்பை விட அதிகமான பெண்கள் ஹிஜாப் அணிகிறார்கள்...

   சிலர் பிரச்சனை ஏற்படுத்தி வெற்றிகொண்டதாய் நினைக்கும் நேரத்தில் தான் ,பலருக்கு இஸ்லாம் பற்றி அறிய/ அல்லது அதன் வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவுகிறார்கள் என்பது தான் இதுவரையில் நான் பார்த்தது.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஜெய்லானி

   Delete
 6. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  //ஹிஜாப்பிற்கு என்று அதிகமாக எதிர்குரல் ஒலிக்க ஆரம்பித்ததோ அன்று முதல் இஸ்லாமியர்களிடையே ஹிஜாப் வேகமாக பரவிவருகிறது.//

  உண்மை தான் ஆமீனா ..முன்பு எப்போதும் இல்லாத அளவு நம் ஊரில் அனைவரும் ஹிஜாப் அணிய ஆரம்பித்து விட்டார்கள்..பார்க்கவே சந்தோசமா இருக்கு.. இன்னும் கூட திருத்தங்கள் வரணும்..இறை அருளால் அதுவும் விரைவில் நடக்கும்..திறமைக்கும்,உடைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..அது எந்த விதத்தில் தடை கல்லாக இருக்கும் என்பதும் புரிய வில்லை..எப்படியோ உலக அளவில் மாற்றங்கள் வந்து கொண்டு இருப்பது நமக்கு எல்லாம் பெருமை தானே..

  அதில் பங்கேற்கும் சகோதரிகள் அனைவருக்கும் எனது
  மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  நல்லதொரு பதிவை படிக்க கொடுத்த ஆமீனாவுக்கும், வாழ்த்துக்களும்..நன்றிகளும்:-))

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்..

   //இன்னும் கூட திருத்தங்கள் வரணும்..இறை அருளால் அதுவும் விரைவில் நடக்கும்..//

   இன்ஷா அல்லாஹ்...

   //திறமைக்கும்,உடைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை..அது எந்த விதத்தில் தடை கல்லாக இருக்கும் என்பதும் புரிய வில்லை//

   அதான் ஆயிஷா எனக்கும் தெரியல... மேலே போட்டுக்கொள்ளும் ஒரு ஆடைக்காக மூளை வேலை செய்யாமல் போய்டுமா? சிந்தனைகள் இல்லாது ஜடமாக இருந்துடுவோமா?
   எக்ஸ்ட்ரா ஒரு உடையா நம்முடைய திறமைகளை இல்லாது ஆக்கிவிடும் :-)

   என்னமோ போங்க :-)

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயிஷா

   Delete
 7. why hide the face, cover it too..

  pls don't justify idiotic customs like these

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ராஜன்

   //why hide the face, cover it too..
   //

   முகம் மூட வேண்டிய அவசியம் இல்லாததால் முகத்தை மறைக்கவோ கவர் பண்ணவோ இல்லை சகோ. உடல் அங்கங்கள் தான் ஆண்களின் கவனத்தை திசை திருப்ப கூடியது, அலை பாய விடக்கூடியது என்பதால் அதை மறைக்கும் படி ஹிஜாப் உடுத்த இறை கட்டளை விடுக்கப்பட்டுள்ளது. முகத்தை மூட எந்த அவசியமும் இல்லை சகோ.

   வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

   Delete
 8. most ridiculous article ever read in my life....

  ReplyDelete
  Replies
  1. @ராஜன்

   இதில் என்ன அபத்தம் இருக்குன்னு சொன்னா நாங்களும் தெரிளிஞ்சுக்கிட்டு most ridiculous article ever write in my life....ன்னு சொல்லிக்குவோமே :-)

   செய்வீங்களா ப்ளீஸ்....

   Delete
 9. ஆகா ஹிஜாபுடன் நம் பெண்கள் விளையாட்டிலா ....எதுக்கும் சளைத்தவர்கள் அல்ல நம் சமுதாய பெண்கள்......ஹிஜாப் பெண்களை அடிமைபடுதுகிறது என்று வாய்கிழிய பேசுபவர்கள் இனி என்ன செய்வார்களோ?நம் பெண்கள் ஹிஜாபுடன் கோல்ட் மெடல் அடிச்சி இந்த உலகத்தையே திரும்பி பார்க்கவைப்பாங்க இன்ஷா அல்லாஹ்......

  புதிய வரவுகள்:
  பேஸ்புக்கால் கற்பை இழந்த சென்னை பெண்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?,கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

  எனது தள கட்டுரைகளில் சில:
  அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-தளத்திற்கு வந்து உங்க கருத்தை தெரிவியுங்கள்........www.tvpmuslim.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. //ஹிஜாப் பெண்களை அடிமைபடுதுகிறது என்று வாய்கிழிய பேசுபவர்கள் இனி என்ன செய்வார்களோ?//

   ஹிஜாப் உடுத்தி பெண்கள் சாதனைகள் படைக்கும் போது வாய் கிழிய இஸ்லாமிய பெண்ணுரிமைக்கும் அடிமைத்தனத்துக்கும் குரல் கொடுத்த நல்லுள்ளங்கள் என்ன செய்வாங்கன்னு நெனச்சா எனக்கும் என்னை மீறி சிரிப்பு வருகிறது சகோ. பாவம் :-) இருந்ததே அந்த ஒரு பாய்ன்ட் தான்! அதுவும் போச்சு!

   வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோ

   Delete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்,,

  என்ன சகோ. பதிவெழுதி நாள் ஆகிவிட்டது,புதிய பதிவுகளை காணும்...படிக்க ஆர்வமா இருக்கோம்.....

  புதிய வரவுகள்:
  மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்,10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?,இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   வாரத்திற்கு ஒரு முறை ஒரு பதிவு வெளிவரும் சகோ.

   உங்கள் ஆர்வத்திற்கு மனமார்ந்த நன்றி

   Delete
 11. அஸ் ஸலாமு அலைக்கும் ஆமி,

  கட்டுரை உங்களுடையதுதானா என மறுபடியும் செக் செய்ய வேண்டி இருக்கிறது. ஏனெனில் அதில் உங்களின் வழக்கமான 'நடை' இல்லை.... :((

  எனினும், சூப்பர் கேள்விகள், ஒலிம்பிக் கமிட்டி அட்ரஸ் கிடைச்சா எழுதி அனுப்பலாம். அயான் ஹிர்சி அலிக்குதான் பாவமாக இருக்கும். கஷ்டப்பட்டு விதவிதமாக ஹேர் ஸ்டைல் எல்லாம் வச்சு காசு பார்க்கலாம்னு பார்த்தால், ஒரு முடி கூட காட்டாமல் நம்ம சகோதரிகள் ஒலிம்பிக் வரை போயிட்டாங்களே... சோ சேட் ஆயான்.... ஐ அன்டர்ஸ்டேன்ட் :))

  எப்பொழுதும் போல 'நச்' கேள்விகள், அதிர வைக்கும் ஆதாரங்கள்.... மிக நல்லதொரு 'read'.... ஜஸாகுமுல்லாஹு க்ஹைர் ஆமி.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

   அன்னு. இதை வெறும் செய்தியாக மட்டுமே வெளியிட எண்ணியிருந்தேன். எழுதும் போதும் அப்படியே செய்தி வரிகளாகவே தான் எழுதி இருந்தேன். கடைசி நேரத்தில் எடிட் பண்ணி நம்ம ப்ளாக்கர் நடைக்கு கொண்டு வந்தேன். அதனால் அதிகமாக சேர்க்க முடியவில்லை// சமாளிபிகேஷன் :-)

   //சோ சேட் ஆயான்.... ஐ அன்டர்ஸ்டேன்ட் :))//

   நோ...நோ... வெந்த புண்ணுல ஆசிட்ட ஊத்தாதீங்க அன்னு :) பாவம் பயபுள்ள செவத்துல முட்டி முட்டி ஒப்பாரி வைச்சுட்டிருக்கும் அவ்வ்வ்வ்

   வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றி அன்னு

   Delete