Thursday, June 28, 2012

இந்த இழிநிலைக்கு யார்/எப்படி காரணமாகிறார்கள்? தீர்வு என்ன?

முந்தைய பதிவினை படித்துவிட்டு இதனை தொடருங்கள் சகோஸ்...
இந்த இழி நிலைக்கு யார் காரணம்??


பார்ப்பவர்களை எளிதாக கவரும் அழகுடைய 22 வயது பெண் ஆயிஷா. நடுத்தர குடும்பத்தில் இரு சகோதரிகளுடன் பிறந்தவள் என்றாலும் அவளின் பெற்றோர்கள் அதீத அன்புடனும், தெளிவற்ற அக்கறையுடனும் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக வளர்த்தனர். இஸ்லாம் பற்றி பெற்றோர்க்கு தெரியாத போதும் மகளுக்கு மார்க்க கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தனர். அங்கு கதீஜா என்னும் ஈமான் நிறைந்த பெண்ணின் நட்பும் அவளுக்கு கிடைக்கிறது.அவ்வப்போது கதீஜா கூறும் ஹதீஸ்களையும் ஆயிஷா காது கொடுத்து கேட்பதில்லை.


ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட பெற்றோர்கள் (அஸ்தஃபிருல்லாஹ்) அவளின் வருங்காலம் கணிக்க ஜோசியரிடம் சென்றார்கள். ஆனால் இஸ்லாம் இதில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட
read more "இந்த இழிநிலைக்கு யார்/எப்படி காரணமாகிறார்கள்? தீர்வு என்ன?"

Sunday, June 24, 2012

இந்த இழிநிலைக்கு காரணம் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

குடும்பத்தின் தலைவி, சொத்துரிமை, பேச்சு உரிமை, கல்வியில் உரிமை, திருமணத்தில் உரிமை என்று பலவற்றிலும் பெண்களுக்கு கண்ணியமான உரிமையை வழங்கி, மேன்மைபடுத்திய மார்க்கம் இஸ்லாமே தவிர வேறு மார்க்கமே இல்லை என்பதில் எந்த ஐயமுமில்லை.

இத்தகைய சிறப்பை வழங்கிய இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவில்லை என்றாலும் அவனுக்கு மாறு செய்யாமல் இருப்பது உகந்தது.

ஆனால் இன்று பெண்களின் நிலையோ???!!! தவறான பழக்க வழக்கத்தாலும், ஊடகங்களின் ஈர்ப்பாலும், உலக வாழ்வின் ஆக்கிரமிப்பாலும், போதைப் பொருளாக, சுகம் கொடுக்கும் கருவியாக, விளம்பர பொருளாக, பெற்ற பெண் மக்களை பணத்திற்காகவும்,
read more "இந்த இழிநிலைக்கு காரணம் யார்?"

Sunday, June 17, 2012

இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!!

நாம் தனிமனிதராக தனிக் காட்டில் பிறந்து தன்னந்தனியாக வாழ்ந்து மரணிப்போமானால் அனேகமாக சொர்க்கம் செல்வது இலகுவாக இருந்திருக்க கூடும் .ஏனெனில் ,பாவம் செய்வதுக்குரிய சந்தர்ப்பங்கள் அப்பொழுது குறைவாகவே இருந்திருக்கக் கூடும். ஆனால், இறைவன் அப்படி நம்மை விடவில்லை. மாறாக உலகம், பொருள், மண், மக்கள் என்னும் பெரும் பெரும் காரணிகளை ஏற்படுத்தி நம்மை சோதனையிட்டுக் கொண்டே இருக்கிறான், பிறப்பிலிருந்து, இறப்பு வரை.  திருமறையில் வரும் வசனத்தைப் பாருங்கள்:

read more "இஸ்லாம் கற்றுத் தரும் 'சுயநலம்' ??!!"

Monday, June 11, 2012

வேண்டாமந்த சுதந்திரம்??!!!
முக்காடென்னும் பர்தாயிட்டு
முஸ்லீம் பெண்மை
முடக்கபடுகிறதா? -அல்லது
முழுமையாக மூடியும்
முன்னுக்கு வந்து முன்னேறுகிறதா?

பூவைப்போன்ற பெண்ணை
பாதுகாப்பதெப்படி என்று
படைத்த இறைவனுக்கு தெரியாதா?
பூவுடலை மறைப்பதால்
பாவைக்குதான் நன்மையென்று
பதருக்கும் புரியாதா?

read more "வேண்டாமந்த சுதந்திரம்??!!!"

Monday, June 04, 2012

ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்

அனைவரின் மீதும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


ஹிஜாப்.  முஸ்லீம்களை அதிகமாக தாக்கப் பயன்படும் ஒரு விஷயம் என்றால் ஹிஜாப் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்புத்தெரிவித்தும் வருகின்றனர்.


இப்படி ஒரு புறம் இருக்க, பெரும்பாலும் ஒரு விஷயத்திற்காக சமுதாயத்தில் போராட்டங்களோ, எதிர்ப்புக்குரலோ கிளம்பும் போது எதிர்ப்புக்குள்ளான விஷயம் படிப்படியாக மறைந்தோ தடைசெய்யப்பட்டோ விடும்.  அதனால் தான் சமூகத்தில் அநீதி இழைக்கப்படும் போது தங்கள் கண்டனங்களை தெரிவிக்க முற்படுகிறார்கள்.   இது இயல்பு.


ஆனால் இந்த இயல்புக்குநேர் எதிர் விளைவாக

read more "ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்"