Thursday, May 10, 2012

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

 "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)

இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!

பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்? உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..? இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே?? என்பது..! இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது..!உண்மையில் இஸ்லாத்தில் அப்படி பட்ட கருத்து சொல்ல பட்டு இருக்கிறதா என்றால் இல்லை இல்லை என்ற ஆணித்தரமான பதிலை தான் நாம் தர வேண்டி இருக்கிறது ..

அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கொள்ளலாம்.
மேலும்..
எம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.


 " ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)

"மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர" உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.அல்குர்ஆன் (58 : 11)

அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.அல்குர்ஆன் (2 : 269)

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)

மேற்காணும் குர்ஆன் வசனங்கள். மற்றும் ஹதீஸ்கள் கல்வியின் சிறப்பையும் அது இரு பாலாருக்கும் பொதுவானது என்பதையும் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி நிருபிக்கின்றன...!!! மேலும் பத்ரு போர்க்களத்திலே சிறைக்கைதியாகப் பிடிபட்ட ஒவ்வொரு கைதியும் விடுதலையாவதற்கான விலையாக மக்களில் பத்து பேருக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது வரலாற்றில் நாம் அறிந்த ஒன்றே!




அக்காலத்திய இஸ்லாமிய பெண்கள் பற்றி சில :
சஹாபிய பெண்களின் அறிவு திறன் பிரமிக்க வைக்கிறது .அவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள் ..
ஒருமுறை ஒரு சஹாபிய பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்பது இஸ்லாம் பெண் கல்வியை தடுக்கிறது என்று கூப்பாடு போடும்... ஒரு சிலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.. ( எப்புடி தெரியும்? இந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உங்க கண்ணுல படாது.. அப்புடியே பட்டாலும்,.. கண்டும் காணாம.. இஸ்லாதுல வேற எதைபத்திடா குறை சொல்லலாம்னு மட்டும்தானே யோசிப்பீங்க?? )
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை 2210 ஹதீஸ்கள் ஆகும்.(((நாயகம் (ஸல்) அவர்கள் தன் மனைவி கல்வி அறிவில் சிறந்து இருப்பதை தடை செய்யவில்லை . இதுலேயே புரிஞ்சி இருக்கும் இஸ்லாமியர்களின் ஆணாதிக்கம்..(???????!!!!!!!) ))
அலீ (ரலி) அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.

பாக்தாத்தில்வாழ்ந்த ஷெய்கா சுஹதாஅவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.


இது எல்லாவற்றுக்கும் மேலாக பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான \, முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய   நானா அஸ்மா என்ற புரட்சிப்பெண்... !!

இவ்வாறு வாழ்வில் பல்வேறு துறைகளில் கற்று தேர்ச்சி பெற்று ஜெயித்து காட்டிய இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை வரையறுத்து இவ்வளவு தான் என்று அறிதியிட்டு கூற முடியாது.. கல்வியின் மூலமாக அவர்கள் சமூகத்திலும் அவர்களால் முடிந்த பல்வேறு பணிகளை மார்க்கத்தின் வரைமுறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்..

உலகில் வேறு எந்த மதமோ,அல்லது சமுதாயமோ வழங்கிராத சிறப்பும்,மதிப்பும்,மரியாதையும்,கண்ணியமும்,உரிமையும்,இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு ..இதில் கல்வி கற்பது மட்டும் எப்படி விதி விலக்காகும்..? இங்கு கல்வி கற்பதில் ஆண் என்றும் பெண் என்றும் எந்த பேதமும் இல்லை..! ஆணுக்கு கல்வி கற்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு சம உரிமை பெண்களுக்கும் உண்டு!. குர் ஆனில் எங்கும் பெண்கல்வியை மறுத்த்தற்கான வசனம் இருக்காது. அதே போல மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் எந்த இடத்திலும் பிரித்து காட்டப்பட வில்லை.மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே உலக வாழ்க்கைக்கு தேவையான கல்வி தான். இந்த சம உரிமை சட்டம் 7வது நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம்  ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கிவிட்டது.
ஓதுவீராக! மேலும் உன் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்று கொடுத்தான்!'' (96;3-5)
இந்த வசனத்தில் ஓதுவீராக என சொன்னது ஆண் பெண் என இருவருக்கும் தான் .மார்க்கத்தில் பொதுவாக எது ஒன்றையும் குறிப்பிட்டு சொன்னால் அது இரு பாலாரையும் குறிக்கும்..ஆணுக்கு என்றும் அல்லது பெண்ணுக்கு என்றும் என தனித்தனியாக சொல்ல வேண்டும் என்றால் அது பிரத்தியேகமாக குறிப்பிட பட்டிருக்கும்.கல்வி கற்பதில்ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என எதுவும் கிடையாது..ஆனால் பெண் என்பதால் அவளின் பாதுகாப்பு கருதி மார்க்கம் அனுமதிக்க பட்ட விதத்தில் கல்வி கற்க வேண்டும். கோ-எஜுகேஷன்! இதை மட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்... இதை தவிர அவர்களுக்கு வேறு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட வில்லை.. !!

மார்க்கத்தில் சொல்ல பட்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள் என்பது..
அதன் படி நாம் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து தெளிவு பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் கட்டாயம் கல்வி அறிவு அவசியம்.இதில் எந்த வித பேதமும் இல்லை. நன்கு கல்வி கற்ற ஒருவரால் தான் சரி எது தவறு எது என்பதை நன்கு சீர் தூக்கி பார்க்க முடியும். ஆக பெண்கல்வியை மறுத்து அறிவை மழுங்க செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எப்படி நம் இபாதத்துகளை நிறைவேற்றுவது கட்டாய கடமையோ அதே போல கல்வி கற்று தன் அறிவை மேம்படுத்தி கொள்வது கட்டாய கடமை ஆகும்..!!
எந்த ஒரு சமூகமும் அதன் தனித் தன்மையோடு மேலே எழும் போது அங்கு ஆண் பெண் சார்ந்த பணிகள் ,கடமைகள் ,தேவைகள் அவசியமான ஒன்று ..இதற்கு அடிப்படையாக இருந்து அதை மேம்படுத்தி செம்மைபடுத்துவதற்க்கு கல்வி அறிவு அவசியம் ..இதில் எந்த ஆண் பெண்  விதிவிலக்கில்லை ..அதிலும் எந்த சமுதாயத்தில் பெண்கள் அறிவோடும் பண்பாடோடும் செயல்பாடோடும் இருகின்றார்களோ அந்த சமுதாயம் மிக நல்லதொரு சமுதாயமாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..!!தன் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்தோடு சரி தவறுகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு ஆண்களை விட பெண்களிடம் தான் உள்ளது...!  எனவே பெண்கல்வி அவசியம் என்பதை இஸ்லாத்தில் பல இடங்களில் உணர்த்தப்பட்டு உள்ளது..!

முஸ்லிம்களில் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களுமே கூட சரியான முறையில் மேற்கல்வியை தொடர்வதில்லை என்பதுதான்  நிதர்சனமான உண்மை..!!!
ஏன் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்க வில்லை என்றால் அவர்களின் அறியாமையையும் கல்வி பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததும் தான் காரணமே தவிர இதற்கு மார்க்கம் ஒருநாளும் காரணமாக இருக்க முடியாது.. !!!

மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் காரணத்தினால் கல்விபயிலும் வயதிலேயே கல்வியை தூர தூக்கியெறிந்து குடும்ப சுமையை ஏற்கவேண்டியிருந்தது. ஆண்களின் குறைவான கல்விதகுதியை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்ததன் விளைவே இன்றைய இஸ்லாமிய சமூகம் கல்வியில் பின் தங்கிய நிலைக்கு காரணமாக அமைகிறது. அது போக பழமையின் பிற்போக்குதனத்தில் ஊறிய முந்தைய தலைமுறைகள்  சமுதாயத்தோடு ஒன்றாய் கலந்துவிட்ட பெண்ணடிமைத்தனத்தை இஸ்லாத்திலும் இஸ்லாத்தின் பெயரை கொண்டு ஒடுக்க நினைத்தனர். அதன் விளைவாக பெண்கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ்குர் ஆனும்  படிப்பதும் அரிது, மார்க்க கல்வியை சரியாய் செயல்படுத்துபவர்களும் குறைவு. எனவே பெண்கல்வி மறுப்பு என்பது தட்டிகேட்கப்படாமலேயே  இருந்தது.  ஆனால் இன்று காலம் மாறிவிட்டது.  1986க்கு பிறகு  தமிழகத்தில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெண்களின் கல்வி விகிதமும்  கூடிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் தன் சமுதாயத்தை கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறனர் என்பதே நிதர்சன உண்மை....!!

மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் தனி தனியாக ஒன்று இல்லை என்பதையும் இதில் ஒன்று இருந்து ஒன்று இல்லையென்றால் நாம் இதன் பொருட்டு இழப்புக்குள்ளாவோம் என்பதையும் ஆண் பெண் இருவருமே தங்கள் கல்வி அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் உறுதியாக வலியுறுத்துகிறது. இதை உணர்ந்து அதை சொல் செயல் இரண்டிலும் நிலைநாட்டி நல்லதொரு சமுதாயம் உருவாக நாம் முயற்சிக்க வேண்டும் அதற்கு நமக்கு கருணை காட்டி நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக எல்லாம் வல்ல இறைவன் நாடுவானாக.. ஆமீன்..

டிஸ்கி : கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது... அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை...!!!!!

சகோதரி.
ஆயிஷா பேகம்.

முக்கிய அறிவிப்பு:
முத்துப்பேட்டையில் நாளை (12-05-2012) பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்புரையாற்ற நாடறிந்த பெண் கல்வியாளர்கள்,சிறந்த சொற்பொழிவாளர்கள் கலந்துக்கொண்டு பெண்கல்வி எதற்காக?, முஸ்லீம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்,  இல்லங்களில் இஸ்லாமிய ஒழுக்கம், குடும்ப பொருளாதார நிர்வாகத்தில் முஸ்லீம் பெண்கள் என்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் . இஸ்லாமிய பெண்மணி தளத்தின் உறுப்பினர் சகோதரி மலிக்கா பாரூக் அதனை தொகுத்து வழங்க உள்ளார்.  மேலதிக தகவல்களுக்கு நீரோடைக்கு செல்லவும்.

38 comments:

  1. கல்வியின் அவசியத்தையும் அதன் மகத்துவத்தையும் நமக்கு இறைவன் அழகாய் கற்றுத்தந்துள்ளான் அதன்படி நமது செயல்பாடுகள் நடைமுறைகள் இருக்குமால் அதுவே நமக்கு சிறப்பை தரும்..

    மிக அருமையான் பதிவு..

    கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது... அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை...!!//

    உண்மையிலும் உண்மை..

    ReplyDelete
  2. அஸ் ஸலாமு அலைக்கும் ஆயிஷா சகோ,
    அருமையான பதிவு, மாஷா அல்லாஹ்.

    //இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!! //
    சூப்பர்... :))

    இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் கல்வி கட்டாயம் தேவை. ஆயிஷா (ரலி)யின் திருமணம் பற்றி பேசுபவர்கள் அவரின் சான்றான்மையும், அறிவுச் சுடரின் வேகம் பற்றியும் பேச மறுக்கிறார்கள் அல்லது மறந்து விடுகிறார்கள். இந்த ஆக்கம் கட்டாயம் அவர்களுக்கு அதை நினைவூட்டும்.

    அல்ஹம்துலில்லாஹ் இன்னும் இது போன்ற பல ஆக்கங்களை வழங்க து’ஆ செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

    வஸ் ஸலாம்.

    ReplyDelete
  3. சலாம் சகோ ஆயிஷா,

    மாஷா அல்லாஹ்...நல்லதொரு ஆக்கம்....உங்கள் பாணியில்... கல்வியின் அவசியத்தை இஸ்லாமிய மேற்கோள்களுடன் அழகாக கூறி உள்ளீர்கள்...
    இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பின் தங்கி உள்ளது என்பது உண்மையே....இப்பொழுது நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது...
    ஆயினும் இஸ்லாமிய இளைஞர் கள் மற்றும் பெண்கள் மத்தியில் இன்னும் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டி உள்ளது.
    அதற்காக உழைக்கும் தேவை நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாக உள்ளது.... இந்த கடமையில் தவறுபவர்கள் அல்லாஹ்வின் கேள்வி கணக்கிற்கு அஞ்சிக் கொள்ளட்டும்...

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    பிரபலமான நான்கு இமாம்களில் ஒருவரான இமாம் அபூ ஹனிஃபா அவரின் மகளின் பெயராலேயே அழைக்கப்படுவதுக்கு காரணம் அவர் மகள் ஹனிஃபா சிக்கலான சில ஹதீஸுக்கு அழகிய தெளிவான விளக்கம் கொடுப்பதில் வல்லவர் .

    //வாழ்வில் பல்வேறு துறைகளில் கற்று தேர்ச்சி பெற்று ஜெயித்து காட்டிய இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை வரையறுத்து இவ்வளவு தான் என்று அறிதியிட்டு கூற முடியாது.. கல்வியின் மூலமாக அவர்கள் சமூகத்திலும் அவர்களால் முடிந்த பல்வேறு பணிகளை மார்க்கத்தின் வரைமுறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்..//

    ஹைலட்டில் போட வேண்டிய வரிகள் :-)

    ReplyDelete
  5. உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    மாஷா அல்லாஹ், மிக அருமையான கட்டுரை. ஜசாக்கல்லாஹ்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அறிவியல் முன்னேற்றம் குறித்து "புதிய அறிவியல் பொற்காலம்?" என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்ட பாரம்பரியமிக்க அமைப்பான ராயல் கழகம், முஸ்லிம் பெண் கல்வி குறித்து பின்வருவதை தெரிவிக்கின்றது.

    ====
    முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.

    இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம். அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.

    ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.
    ====

    மிக ஆச்சர்யமான தகவல்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கை குறித்த முழுமையான தகவல்களை இங்கே படிக்கலாம் http://www.ethirkkural.com/2012/01/blog-post.html

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  6. அஸ்ஸலாம் அலைக்கும்... சகோ ஆயிஷா,
    மாஷா அல்லாஹ்...நல்லதொரு ஆக்கம்..
    முஸ்லிம் ஆண், பெண்கள் யாவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு..
    ஜசக்கல்லா கைரான்

    ReplyDelete
  7. சலாம் சகோ!

    அருமையான ஆக்கத்தை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அருமையான பதிவு சகோ..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இஸ்லாம் பெண்கள் கல்வி கற்பதை எந்தளவுக்கு ஊக்கப்படுதுகின்றது என்பதை உங்கள் பதிவின் மூலம்அழகாக விளக்கயுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    ஆயிஷா.. அருமையான ஆக்கம். வாழ்த்துகள்

    அக்காலத்திலேயே பெண்களுக்கு கல்வியில் அளிக்கப்பட்ட சுதந்திரமும் பெண்களின் கல்வி அறிவும் வியக்க வைக்கிறது.

    இடைபட்ட காலத்தில் சிலர் பெண்கல்வியை மறுத்தனர் என்பது வேதனைக்குரிய விஷயம். அதற்கு அவர்கள் கூறிய காரணமும் வேதனைக்குரியதே! எல்லாத்தையும் இஸ்லாம் மேல் பழிபோட்டு "எங்க இஸ்லாத்தில் பெண்கள் அதிகம் படிக்க கூடாது" என சொன்னவர்கள் உண்டு!

    நீங்கள் சொன்னது போல் ஆணின் படிப்பறிவை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்துவந்தனர். இப்போது நிலமை மாறிவிட்டது. பலரிடையே இஸ்லாமிய விழிப்புணர்வு ஏற்ட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

    நம் தலைமுறையில் பெண்கள் கல்விகற்க தேவையில்லை என்ற மாறி வருகிறது. பல இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் படிக்க வசதியில்லாத ஏழைகுடும்பத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அடுத்த தலைமுறை 100 சதவீதம் கல்வி பயின்றவர்களாக ஆக்க பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ்

    உங்க பாணியில் அழகான ஆக்கப்பகிர்வு

    ஜஸக்கல்லாஹ் ஹைர் ஆயிஷா பேகம்

    ReplyDelete
  11. பெண்கல்வி பற்றி பெண்களை அடிமைபடுத்தும் இஸ்லாம் என்ற என் முதல் பதிவுக்கு ஒருத்தரு விமர்சனங்குற பேருல காமெடி பண்ணியிருந்தாரு! இஸ்லாத்திற்கு முன்பே பெண்கள் படிச்சவங்களாதான் இருந்தாங்களாம்!

    பாவம் அவங்களுக்கு புரியல... பெண்கல்விக்கான சம உரிமை சட்டம் 7வது நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் ********கட்டாயக்******** கடமையாக்கிவிட்டது.

    அதாவது....
    ஒரு சட்டம் வெளிவந்து அதை கட்டாயமாக்கியதற்கும் (செய்தே ஆக வேண்டும்! வேற வழியே இல்ல),
    சட்டம் இல்லாத இயல்பான நடைமுறைக்கும் (படிச்சா படி! இல்லைன்னா கெட, ஆனாலும் நீ அடுப்பூத தான் லாயக்கு!) உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா இருக்காங்க! என்ன செய்ய? :-)

    உங்களின் அந்த வரிகளை பார்த்ததும் அந்த காமெடி பதிவு நியாகம் வந்து சிரிப்பை வர வச்சுடுச்சு! :-) :-) :-)

    வாழ்த்துகள் தோழி :-)

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோதரி... :)
    மாஷா அல்லாஹ் அருமையான தொகுப்பு.. வாழ்த்துக்கள் மா....
    பெண்கள் கல்வியில முன்னேறாமல்தான்... இப்புடி பதிவுலகுல வந்து எழுதுறோம் போல... ஹா ஹா ஹா :)
    மேலும் சிறந்த ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.. இன்ஷா அல்லாஹ்.. :)

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ..
    ஆக்கபூர்வமான பதிவு சகோ.. இஸ்லாமில் பெண்களின் கல்வி பற்றி ஆதரங்களுடன் விளக்கியதற்கு நன்றி... விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு புரிந்தால் சரி... வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  14. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி,

    மிக அருமையான பதிவு. முஸ்லிம் பெண்கள் பற்றி கருத்தாக்கம் செறிந்த சமூகத்தில் நிலவும் தவறான அபிப்பிராயங்களை உடைத்தெறியும் ஆக்கங்களை தொடர்ந்து வழங்குங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

    ReplyDelete
  15. எந்த சமுதாயமாக இருந்தாலும் கல்வி அறிவு அனைவருக்கும் தர பட வேண்டும்

    ReplyDelete
  16. ஒரு சின்ன வேண்டுகோள் :
    //கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை
    //

    இந்த வரிகள்தான் மதகளிடையே எது பெரிது என்ற சண்டை தோன்ற காரணம் என எண்ணுகின்றேன் .
    ..................

    ReplyDelete
  17. வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்..
    அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லி இருக்கீங்க. மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் சகோதரி

    //பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்?//
    உங்களை விட எங்கள் இறைவனும் எங்கள் நபியும் பெண்களான எங்கள் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.
    அதனால தான் விரும்பினா படியுங்கள் என்று சொல்லாம கட்டாயமா கல்வி கற்க சொல்லப்பட்டிருக்கிறது.

    //பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!! //
    ஹா...ஹா..

    ReplyDelete
  18. //"என் ராஜபாட்டை"- ராஜா said...
    எந்த சமுதாயமாக இருந்தாலும் கல்வி அறிவு அனைவருக்கும் தர பட வேண்டும்//// மறுக்க முடியாத உண்மை சகோ... :)

    ReplyDelete
  19. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    ஒரு சின்ன வேண்டுகோள் :
    //கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை
    //

    இந்த வரிகள்தான் மதகளிடையே எது பெரிது என்ற சண்டை தோன்ற காரணம் என
    எண்ணுகின்றேன் .///

    மேற்காணும் வரிகள் இஸ்லாம் பெண்கள் கல்வியை தடுக்கிறது என வீண் வதந்தியை சொல்லி திரியும் சிலருக்கு விளக்கம் கொடுப்பதற்காக மட்டுமே உபயோகபடுத்தப்பட்டு உள்ளது சகோ..!! இதை ஒரு தன்னிலை விளக்கமாக மட்டுமே அந்த சகோதரி எழுதி இருக்க வேண்டும்..!! மேலும் இதில் எந்த மதம் பெரியது என்ற கேள்வி எல்லாம் எழவே தேவை இல்லை...!!
    இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது என்று புலம்பும் சிலரது அறியாமையை களையும் நோக்கிலும், இஸ்லாத்தில் பெண்கள் நிலை பற்றிய உண்மையான தகவல்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் இந்த இஸ்லாமிய பெண்மணி தளம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன்..! மேலும் இஸ்லாம் பெண்கள் கல்வியை மற்ற வேற எந்த சமுதாயத்தை காட்டிலும் அதிகமாக ஆதரிக்கிறது என்று நாங்கள் கொஞ்சம் கர்வமாக சொல்லி கொள்கிறோம் அவ்வளவே...!!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...!!

    ReplyDelete
  20. அன்புடன் மலிக்கா said...
    //கல்வியின் அவசியத்தையும் அதன் மகத்துவத்தையும் நமக்கு இறைவன் அழகாய் கற்றுத்தந்துள்ளான் அதன்படி நமது செயல்பாடுகள் நடைமுறைகள் இருக்குமால் அதுவே நமக்கு சிறப்பை தரும்..//

    அஸ்ஸலாமு அழைக்கும் சகோ..
    ஆமாம் சகோ..தங்களின் வருகைக்கும்,அழகான கருத்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  21. அன்னு said...
    இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் கல்வி கட்டாயம் தேவை. ஆயிஷா (ரலி)யின் திருமணம் பற்றி பேசுபவர்கள் அவரின் சான்றான்மையும், அறிவுச் சுடரின் வேகம் பற்றியும் பேச மறுக்கிறார்கள் அல்லது மறந்து விடுகிறார்கள். இந்த ஆக்கம் கட்டாயம் அவர்களுக்கு அதை நினைவூட்டும்.
    அல்ஹம்துலில்லாஹ் இன்னும் இது போன்ற பல ஆக்கங்களை வழங்க து’ஆ செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

    வ அழைக்கும் சலாம் அன்னு சகோ..

    தங்கள் வருகைக்கும் தங்களின் அருமையான கருத்துக்கும், துஆக்கும் மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  22. சிராஜ் said...
    //இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாமிய சமுதாயம் கல்வியில் பின் தங்கி உள்ளது என்பது உண்மையே....இப்பொழுது நல்ல மாற்றம் ஏற்பட்டு உள்ளது...//

    வ அழைக்கும் சலாம் சகோ..

    அல்ஹம்துலில்லாஹ்..நீங்கள் சொல்வது சரி தான் பதிவின் நீளம் கருதியே அதிகம் சேர்க்க வில்லை..:)

    .தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  23. ஜெய்லானி said..

    //பிரபலமான நான்கு இமாம்களில் ஒருவரான இமாம் அபூ ஹனிஃபா அவரின் மகளின் பெயராலேயே அழைக்கப்படுவதுக்கு காரணம் அவர் மகள் ஹனிஃபா சிக்கலான சில ஹதீஸுக்கு அழகிய தெளிவான விளக்கம் கொடுப்பதில் வல்லவர்// .

    வ அழைக்கும் சலாம் வரஹ்..

    தங்களின் வருகைக்கும்,அருமையான தகவலுக்கும் ஊக்கத்திற்கும், நன்றி சகோ..:)

    ReplyDelete
  24. ashiq Ahamed said...
    /உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.//ஆமீன்

    //முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது இராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.//

    அஸ்ஸலாமு அழைக்கும் சகோ..

    இன்றைக்கு நம் பெண்களின் வளர்ச்சி பிரமிக்க தக்கதாகவும்,பெருமையாகவும் இருக்கிறது சகோ.ஆனாலும் இதை நன்கு தெரிந்து கொண்டே கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கிறது..//

    தங்கள் வருகைக்கும், தங்களின் கருத்துக்கும், அருமையான பகிர்வுக்கும், தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  25. Nasar said...
    //அஸ்ஸலாம் அலைக்கும்... சகோ ஆயிஷா,
    மாஷா அல்லாஹ்...நல்லதொரு ஆக்கம்..
    முஸ்லிம் ஆண், பெண்கள் யாவரும் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு..
    ஜசக்கல்லா கைரான்//

    வ அழைக்கும் சலாம் சகோ..
    தங்களின் வருகைக்கும்,ஊக்கத்திற்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  26. //சுவனப்பிரியன் said...
    சலாம் சகோ!
    அருமையான ஆக்கத்தை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.//

    வ அழைக்கும் சலாம் சகோ..
    தங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  27. //RMY பாட்சா said...
    அருமையான பதிவு சகோ..வாழ்த்துக்கள்.//

    அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்.
    தங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  28. ribnas said...
    //இஸ்லாம் பெண்கள் கல்வி கற்பதை எந்தளவுக்கு ஊக்கப்படுதுகின்றது என்பதை உங்கள் பதிவின் மூலம்அழகாக விளக்கயுள்ளீர்கள் வாழ்த்துக்கள்//

    அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்.
    தங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி சகோ..

    ReplyDelete
  29. ஆமினா said...
    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    இடைபட்ட காலத்தில் சிலர் பெண்கல்வியை மறுத்தனர் என்பது வேதனைக்குரிய விஷயம். அதற்கு அவர்கள் கூறிய காரணமும் வேதனைக்குரியதே! எல்லாத்தையும் இஸ்லாம் மேல் பழிபோட்டு "எங்க இஸ்லாத்தில் பெண்கள் அதிகம் படிக்க கூடாது" என சொன்னவர்கள் உண்டு!

    நீங்கள் சொன்னது போல் ஆணின் படிப்பறிவை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்துவந்தனர். இப்போது நிலமை மாறிவிட்டது. பலரிடையே இஸ்லாமிய விழிப்புணர்வு ஏற்ட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

    நம் தலைமுறையில் பெண்கள் கல்விகற்க தேவையில்லை என்ற மாறி வருகிறது. பல இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் படிக்க வசதியில்லாத ஏழைகுடும்பத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அடுத்த தலைமுறை 100 சதவீதம் கல்வி பயின்றவர்களாக ஆக்க பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ்//

    //ஒரு சட்டம் வெளிவந்து அதை கட்டாயமாக்கியதற்கும் (செய்தே ஆக வேண்டும்! வேற வழியே இல்ல),
    சட்டம் இல்லாத இயல்பான நடைமுறைக்கும் (படிச்சா படி! இல்லைன்னா கெட, ஆனாலும் நீ அடுப்பூத தான் லாயக்கு!) உள்ள வித்தியாசம் தெரியாதவர்களா இருக்காங்க! என்ன செய்ய? //

    வ அழைக்கும் சலாம் வரஹ்.

    அருமையான கருத்துக்கள் அமீனா..

    மாஷா அல்லாஹ்..நான் எழுதியதை விட நீங்கள் உங்கள் பாணியில் கூடுதலாக தகவல்களை சேர்த்து அழகான முறையில் தொகுத்ததற்கு மிக்க நன்றி..
    தங்கள் வருகைக்கும் அதிகபடியான ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றி..

    ReplyDelete
  30. ஷர்மிளா ஹமீத் said...
    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோதரி... :)
    மாஷா அல்லாஹ் அருமையான தொகுப்பு.. வாழ்த்துக்கள் மா....//

    வ அழைக்கும் சலாம் வரஹ்...சகோதரி..:)
    பாராட்டுக்கும்,தங்களின் ஊக்கத்திற்கும் துஆக்கும் மனமார்ந்த நன்றி....:)

    ReplyDelete
  31. mum said...
    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ..
    ஆக்கபூர்வமான பதிவு சகோ.. இஸ்லாமில் பெண்களின் கல்வி பற்றி ஆதரங்களுடன் விளக்கியதற்கு நன்றி... விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு புரிந்தால் சரி... வாழ்த்துக்கள் சகோ..//

    வ அழைக்கும் சலாம் வரஹ் சகோ..

    பாராட்டுக்கும்,தங்களின் ஊக்கத்திற்கும்,மனமார்ந்த நன்றி....:)

    ReplyDelete
  32. Peer Mohamed said...
    //அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி,

    மிக அருமையான பதிவு. முஸ்லிம் பெண்கள் பற்றி கருத்தாக்கம் செறிந்த சமூகத்தில் நிலவும் தவறான அபிப்பிராயங்களை உடைத்தெறியும் ஆக்கங்களை தொடர்ந்து வழங்குங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.//

    வ அழைக்கும் சலாம் சகோ..
    தங்கள் வருகைக்கும்,அழகான கருத்துக்கும்,பிராத்தனைக்கும் மிக்க நன்றி சகோ ..

    ReplyDelete
  33. என் ராஜபாட்டை"- ராஜா said...
    //எந்த சமுதாயமாக இருந்தாலும் கல்வி அறிவு அனைவருக்கும் தர பட வேண்டும்//

    ஆமாம் சகோ இதில் எந்த வித சந்தேகமும் இல்லை..:)

    ReplyDelete
  34. என் ராஜபாட்டை"- ராஜா said...
    ஒரு சின்ன வேண்டுகோள் :
    //கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை

    இந்த வரிகள்தான் மதகளிடையே எது பெரிது என்ற சண்டை தோன்ற காரணம் என எண்ணுகின்றேன்//

    சகோதரி ஷர்மிளா அவர்களே மிக அழகான முறையில் விளக்கம் கொடுத்து உள்ளார்கள்..

    நான் எந்த இடத்திலும் மதம் குறித்து குறை சொல்லி பேச வில்லை சகோ..பொதுவான குற்ற சாட்டு என வரும் போது வேறு எது ஒன்றிலும் கல்வி கற்பது கட்டாய கடமை என இல்லை என சொல்வதற்காக சொல்ல பட்டது.தான் அந்த வரிகள்...இங்கு பதிய படும் பதிவுகள் அனைத்தும் கேள்வி
    கேட்டவர்களுக்காகவும், எங்களை நாங்கள் நன்கு தெளிவு படுத்தி கொள்ளவும்,இன்னும் எங்களை மேம்படுத்தி கொள்ளவும்,எங்களை நிலை நிறுத்தி கொள்ளவுமே அன்றி வேறில்லை சகோ..

    தங்களின் வருகைக்கும்,அழகான முறையில் பகிர்ந்த கருத்துக்கும் மிக்க நன்றி சகோ..:)

    ReplyDelete
  35. வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்..
    //அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்லி இருக்கீங்க. மாஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் சகோதரி//

    //உங்களை விட எங்கள் இறைவனும் எங்கள் நபியும் பெண்களான எங்கள் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.அதனால தான் விரும்பினா படியுங்கள் என்று சொல்லாம கட்டாயமா கல்வி கற்க சொல்லப்பட்டிருக்கிறது.//

    வ அழைக்கும் சலாம் வரஹ்... சகோதரி

    மாஷா அல்லாஹ்..தங்களின் வருகைக்கும், மிக அழகான முறையில் தங்களின் விளக்கத்தை சொன்னதற்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ..:)

    ReplyDelete
  36. நான் என்ன நினைக்கிறேன்னா இந்த பதிவை ஒரு நோட்டீஸ் மாதிரி அச்சடிச்சு முதல்ல நம்ம முஸ்லீம் சமுதாயத்துக்கு கொடுக்கனும்..இந்த மாதிரி மிக பலமான கட்டுரை எழுதுற அளவுக்கு முஸ்லீம் தமிழ் பெண்கள் இருக்கிறாங்க அப்படிங்கறத மற்ற முஸ்லீம் தமிழ் பெண்கள் மற்றும் சமுதாயமும் தெரிஞ்சுகிறனும்..தமிழ் நாட்டை பொறுத்தவரை பள்ளி கல்வி முடிஞ்சு கல்லூரி செல்கிற முஸ்லீம் பெண்களின் சதவீதம் ரொம்ப ரொம்ப குறைவுங்கிறது மறுக்க முடியாத உண்மையா இருக்கு என்பது வருத்தத்திற்குரிய செய்தி..பெரும்பாலான வீடுகளில் பள்ளி கல்வி முடிஞ்சதும் மாப்பிள்ளை பாக்குறாங்க..சரி அதுவரை படிக்கட்டும் அப்புறம் மாப்பிள்ளை அமைந்தால் படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் செய்திடலாம் அப்படிங்கிறதுதான் பெற்றவர்களின் எண்ணமாக இன்னமும் இருக்கு..ஒரு உதாரணம் கீழக்கரையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இப்படிதான் நிறைய முஸ்லீம் பெண்கள் படிக்க வருகிறாங்க..

    ReplyDelete
  37. பெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம்

    ReplyDelete