Wednesday, May 16, 2012

இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!!


"சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்."

இப்புடி பாடப்புத்தகத்துல அச்சடிச்சு சாதி இல்லன்னு குழந்தைகளுக்கு பாடம் சொல்ற அதே அரசாங்கம்தான் சாதி வாரியா உங்களை பதிஞ்சுக்கங்க அப்போதான் இட ஒதுக்கீடு கெடைக்கும்ன்னும் சொல்றாங்க...!!

                   சரி நம்ம மார்க்கதுலதான் சாதி இல்லையே எல்லாரையும் முஸ்லிம்ன்னு பதிய சொல்லலாம்ன்னு பார்த்தா பொருளாதாரத்தில பின் தங்கி இருக்கும் சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கிடு கிடைக்காம போயிடுமே.. சோ அரசாங்கம் பொருளாதார அடிப்படைல பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள் அவர்கள் குல தொழில் மற்றும் வம்சாவழி பெயர்களை கொண்டு பிரித்து அறிவித்து உள்ளனர்.... அத முறைப்படி பயன்படுதிக்கோங்க மக்களேன்னு நம்ம ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவு எழுதுனா..... இஸ்லாத்த பத்தி எப்போ என்ன தகவல் கெடைக்கும் அத வச்சி அவதூறு பரப்பி இஸ்லாத்த அழிச்சுடலாம்ன்னு (???!!! )கண்ணுல வெளக்கெண்ணை ஊத்திக்கிட்டு தேடுற ஒரு சிலர் கண்ணுல இந்த விழிப்புணர்வு பிரசார பதிவுகள் பட வெறும் வாய்க்கு அவல் கிடச்ச கதையா  "இஸ்லாத்துல ஜாதி இல்லன்னீங்களே? இப்போ நீங்களே சாதிப்படி பிரிச்சு பதிய சொல்ரிங்களே?" அப்புடின்னு என்னமோ உலக மகா ஆதாரம் கெடச்ச மாதிரி வானத்துக்கும் பூமிக்குமா குதிக்க ஆரம்பிச்சுட்டாங்க...!!

இப்போ கூட சொல்றேன் கேட்டுக்கோங்க மக்களே... இஸ்லாத்துல ஜாதின்னு ஒன்னு இல்லவே இல்லங்க........... !! அந்த காலத்துல அவங்க முன்னோர்கள் செஞ்ச தொழில் அடிப்படையிலும் சிலரோட பரம்பரை பெயர்களின் அடிப்படையிலுமே முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்...


உதாரணத்துக்கு...

  1. லெப்பை பிரிவை சேர்ந்தவங்க ஹஜ்ரத் வேல செய்றவங்க ... 
  2. ராவுத்தர் பிரிவினரின் முன்னோர் குதிரை பராமரிப்பு, குதிரை வாணிபம் போன்றவற்றில் ஈடுபட்டவங்க... அவங்களோட வம்சம் ராவுத்தர் என்று சொல்லப்படுது 
  3. மரைக்காயர் என்று அழைக்கப்படும் பிரிவினரின் முன்னோர் கடல் வாணிபம் செய்தவர்கள்... 
  4. ஷேக் , செய்யது போன்ற பிரிவினர் அரபு வம்சாவளிகளை சேர்ந்தவர்கள்... 
  5. மாப்பில்லா பிரிவினர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்ட கேரளா வம்சாவளியினர்...
இந்த அடிப்படைலதான் அரசாங்கம் முஸ்லிம்களை சாதிவாரியா பிரிச்சு இருக்காங்க.....   அப்புடியே தொழில் ரீதியாக வம்சாவளி அடிபடைல சில பிரிவுகள் அரசாங்கம் குறிப்பிட்டு இருந்தாலும் யாரும் யார விடவும் உயர்ந்தவங்க இல்ல...! ஒருத்தரோட சாதியசொல்லி அவங்கள கேவலமா நடத்துறதும்,அவமானப்படுதுறதும் இஸ்லாத்துல இல்ல...!! இல்ல... இல்லவே இல்ல...!!!!

 இஸ்லாத்த பொறுத்த வர படைத்த இறைவன் முன் அனைவரும் சமமே...!! எப்புடின்னு கேக்க மாட்டிங்களா?

"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)
 இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் உள்ள கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது. 
எந்த பிரிவா இருந்தாலும் பள்ளிவாசல்ல தொழுக அனுமதி உண்டு..... நீ இந்த பிரிவை சேர்ந்தவன் நீ பள்ளி உள்ள வந்தா தீட்டு... அதனால நீ வெளிய நின்னுதான் தொழணும்ன்னு சொல்லி படைத்தவன் முன்னாடி கூட அவன ஒதுக்கி வைக்கிற கேவலமான செயல நாங்க ஒருக்காலும் செய்யவே மாட்டோம்.... இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் (தீண்டத்தகாதவர்கள் என்று  நம் சமூகத்தால்  கொடுமைப்படுதப்படும்)தலித்களுக்கும் சேர்த்துதான்...
நாட்டையே ஆளும் அரசரா இருந்தா கூட அவருக்குன்னு ராஜ மரியாதை எல்லாம் கெடையாது அவருக்குனு தொழுக தனி இட ஒதுக்கீடு எல்லாம் கெடையாது...
அரசனும் ஆண்டியும் அருகருகே தோளோடு தோளாக நின்று எந்த பாரபட்சமும் இல்லாமல் இறைவனை வணங்கும் சமத்துவம் இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்தில் உள்ளது??
இதுல ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை பார்த்த உடனே சட்டையை கழட்டி கக்கத்துல வச்சு கும்பிடு போட்டு தங்கள் மரியாதையை. (!!??) காட்ட வேண்டிய அவசியம் இல்ல....
தண்ணி கேட்டா தூரமா நின்னுக்கிட்டு ஊத்திவிடுறது இல்ல!
சபைல தான் இருக்கையிலும் தாழ்த்தப்பட்டவன் கோணிப்பை விரித்து மூலையிலும் உக்கார்ரது இல்ல! 

சாக்கடை அள்ளுவது மட்டும் தான் உன் தொழில்,  துணி துவைக்கிறது மட்டும் தான் உன் தொழிலா இருக்கணும்னு யாரும் வற்புறுத்துவதில்ல...
ஊருக்குள்ள நீ செருப்பு போட்டு நடக்க கூடாதுன்னு சொல்ற காட்டு மிராண்டித்தனம் இஸ்லாத்தில இல்ல...
சமதர்மமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பிரிவினை பார்ப்பதில்ல!
நாங்கள் உண்ணும் பருகும் அதே பாத்திரத்தில் உண்ணவோ பருகவோ அவர்களுக்கு எந்த பிரிவினருக்கும் எந்த தடையும் இல்லை.... நீ தாழ்ந்தவன் அதனால கொட்டங்கச்சில தான் குடிக்கணும்ன்னு சொல்லி மிருகத்த விட கேவலமா ஒரு மனுசன நடத்துற காட்டுமிராண்டித்தனம் இஸ்லாத்துல இல்ல...
எல்லாத்துக்கும் மேல ஒரு மனுஷன் வாழும் போதுதான் சாதி பார்த்து ஏற்றத்தாழ்வு உண்டாக்குறாங்கன்னு பார்த்தா அவன் செத்த அப்பறம் புதைக்க கூட விடாம சாதிய காரணம் காட்டி ஆதிக்க சாதியினர் புதைக்கும் இடத்தில தலித் சமூகத்தாரை புதைக்க
விடாமல் கலவரம் பண்ணிய அவலமும் தமிழ் நாட்டில் சில இடங்களில் நடந்துள்ளது..

ஆனால் ஒரு முஸ்லிம் இறந்தால் அவர் எந்த பிரிவை சார்ந்தவர் என்றாலும் புதைப்பதற்கு பொதுவான ஒரே இடம்தான்...

அவருக்கு நான் இறுதி தொழுகை வைக்க மாட்டேன் என்று எந்த இமாமும் சொல்வதில்லை..!!
இப்படி நிறைய இல்லைகள் சொல்லிக்கொண்டே போகலாம்.... !!!


தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமை கொடுமை குறித்து மதுரையில் இருந்து செயல்படும்  "evidence " அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது . ( மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகை,சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ) இல் 213 கிராமங்களில் நடத்திய ஆய்வு முடிவுகள். 
    24 . 09 . 2009 கள்ளகுறிச்சி அருகில் தச்சூர் கிராமத்தை சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ஆதிக்க சாதி பெண்ணை தொட்டதால் மானபங்க படுத்தப்பட்டார்.
      02 .01 .2011 தேனீ அருகில் உள்ள கூழயநூரில் ராஜி என்கிற பெரியவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். 27 .01 .2011 . அன்று சின்னாயி என்கிற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடி குண்டு வீசி கொல்லப்பட்டார் .  
      விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்கிற தலித் இளைஞர் பொது கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்க சாதி கும்பலால் தாக்கப்பட்டார். 
      மதுரை கீரிபட்டியை சேர்ந்த தலித் பெண் "வசந்த மாளிகை" என்கிற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட போது, அங்கு இருந்த ஊழியர் கொண்டை ஊசியால் குத்தி சேதப்படுத்தி இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரக குழாயில் ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருகிறது. 
      சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர். - இந்தியன் எக்ஸ்பிரஸ்
       2.2.2008 . திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர். - தி இந்து - 10.2.2008 
       மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.
       நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க  உயர் சாதி அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர். ‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், “அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார். - தி வீக் - 
      13.1.2008. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார். - தி இந்து - 4.2.2008
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை. (பஞ்சாயத்து தலைவருக்கே இந்த கதின்னா??? சாதாரண மக்களுக்கு?? ) - இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08
      இரட்டை குவளை முறை
      இது போன்ற எத்தனையோ விதமான வன்கொடுமைகள் சாதியின் பெயரால் நடக்கும் போது அதை தட்டிக்கேட்காதவர்கள்....
      வறியவர் நலன்கருதி உங்களை பிரிவு வாரியாக பதிந்து அரசின் உதவி தொகையை வாங்கி நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமா இருங்கன்னு இஸ்லாமிய மக்களுக்கு சொல்ல வந்தா.... அதுலயுமா உங்க இஸ்லாமிய எதிர்ப்பு வெறிய காட்டுவிங்க???  (போங்க பாஸ் போயி புள்ள குட்டியல படிக்க வைக்கிற வேலைய பாருங்க அப்போதான் இனி வர்ற சமுதாயமாச்சும் உருப்படும். அப்படியும் பொழுதுபோகலன்னா நியூஸ்பேப்பர்லாம் வாங்கி படிங்க...)

      நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனியுங்கள்


      பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
      மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
      (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)


      தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
      மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)


      இப்புடி சொல்லி சமூகப் பிளவுக்கும், நிற வெறிக்கும் , சாதி பாகுபாடுகளுக்கும் அன்றே முடிவு தந்து விட்டு சென்றார்கள்.
      நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிச்சென்ற இந்த வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு..!!

      நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.


      இஸ்லாத்தை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்னு யாருமில்லங்க யாரு இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். 
      பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது. .. !! இஸ்லாத்தை பத்தி நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கொஞ்சம் டவுட்டு வரும் இல்லையா? முஸ்லிமல்லாத பலர் இஸ்லாத்தின் இந்த சமத்துவம் குறித்து சொன்னவற்றில் சிலவற்றை கீழே சேர்த்து இருக்கிறேன் பாருங்கள்.. :)


      பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.
      -டாக்டர் அம்பேத்கார்.



      இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை.
      டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.] 



      எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது.
      கவிக்குயில்" sarojini-naidu



      இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது.
      தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது. 

      - அறிஞர் அண்ணா


      இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது.
      அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.
      ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.


       இஸ்லாத்துல சாதி இருக்குன்னு தவறான கருத்தை பரப்புற சில விஷமிகளோட கருத்தை படிச்சு இஸ்லாத்த பத்தி தப்பா புரிஞ்சிகிட்ட 
      எத்தனையோ நல்ல உள்ளம் கொண்ட சகோதரர்கள் இந்நேரம் உண்மைய புரிஞ்சிகிட்டு இருப்பாங்கன்னு நம்புறேன் .... இஸ்லாத்தில் ஜாதிகள் இருக்குன்னு கண்டுபிடிச்சுட்டோம்னு  ஆஹோ..ஓஹோ...ன்னு குதுகலமா இருந்தவர்களுக்கும் மூக்குடைபட்டிருக்கும் என நம்புகிறேன் :-)

      டிஸ்கி : கடவுளே இல்லன்னு சொன்ன பெரியார் கூட இஸ்லாத்தால் மட்டுமே ஜாதியை ஒழிக்க முடியும் என்று கூறி இருக்கிறார் அந்த உரை >> 
      இங்கே <<<
      அறிஞர் அண்ணாவின் இஸ்லாம் பற்றிய உரை. >> இங்கே <<


      என்றும் அன்புடன்
      உங்கள் சகோதரி
      ஷர்மிளா ஹமீத்


      நன்றி- எவிடென்ஸ் அமைப்பு
      பட உதவி- கூகுள் இமேஜ்

      38 comments:

      1. மாஷா அல்லாஹ், மிக அருமையான பகிர்வு...

        சக மனிதர்களுக்கு இடையில் பாகுபாடும் காட்டும் இந்த மனிதாபிமானமற்ற செயல் என்று தான் மாறப் போகிறதோ...

        பாகுபாடற்ற இஸ்லாத்தை ஏற்றால் மட்டுமே இந்த நிலை மாற வழி உள்ளது...

        அனைவரும் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வல்ல இறைவனிடம் துவா செய்வோம்... (இப்பொழுது அதிலும் பிரிவினையை உண்டாக்க அல்லவா இவர்கள் பெரும் முயற்சி செய்கிறார்கள்....)

        ReplyDelete
      2. அஸ்ஸலாமு அலைக்கும்,

        என்ன? இஸ்லாத்தில் சாதியா? ஒ எதுவுமே வேலைக்கு ஆகலைன்னு இப்ப இப்படி ஆரம்பிச்சிட்டாங்களா?

        முஸ்லிம்களிடத்தில் ஜாதி இருக்கின்றது என்று காமெடி செய்பவர்கள் அந்த ஜாதி பெயர்களை எங்கிருந்து எடுப்பார்கள்? :) குர்ஆன் மற்றும் நபிமொழியில் இருந்தா? ஸ்ப்பா...

        அடிமையாக இருந்த பிலால் (ரலி) அவர்கள் தான் காபா மேலேறி தொழுகை அழைப்பு செய்த முதல் முஸ்லிமாவார். வரலாறு முழுக்கவே கூட சாதிய கொடுமைகளை இஸ்லாமிய சமூகங்களில் பார்க்க முடியாது.

        மற்ற சில கொள்கைகளை கவனித்தால் அவை காலத்திற்கு ஏற்றவாறு சாதிய நடைமுறைகளை மாற்றிக்கொண்டு/பின்பற்றியே வந்திருக்கின்றன. ஹிந்து மதத்தில் இன்றளவும் சாதிய கொடுமைகள் மிக அதிகமாகவே இருக்கின்றன. நாத்திக கொள்கையும் டார்வீனிய கோட்பாட்டின் வாயிளாக இனவெறியை ஆதரித்தே வந்துள்ளது. இஸ்லாமோ அது தோன்றிய காலத்தில் இருந்தே சாதிய கேவலத்தை எதிர்த்து வந்துள்ளது. ஒரு கொள்கை தன் நிலைப்பாட்டை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதற்கும், மற்றொரு கொள்கை அது தோன்றியதில் இருந்தே ஒரே நிலைப்பாட்டில் இருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு.

        அட, இதை எழுதும் எனக்கோ அல்லது எழுதிய உங்களுக்கோ அல்லது படிக்கும் முஸ்லிம் வாசகர்களோ (அரசாங்கம் வகைப்படுத்தியத்தில்) எந்த பிரிவு நாம்/நீங்கள் என்று தெரியுமா? நான் எந்த பிரிவு என்று எனக்கு தெரியாது (பள்ளி காலங்களில் ஜாதி என்ற இடத்தில் கண்டிப்பாக பெயர் போட வேண்டும் என்பதற்காக எதையோ போட்டதாக நினைவு). இது குறித்து பேச்சு அடிப்பட்டு கூட நான் வீட்டில் பார்த்தது கிடையாது. திருமணங்களோ அல்லது வேறு எந்த நிகழ்வோ இதன் அடிப்படையில் நடப்பது கிடையாது.

        சரி அப்படியே முஸ்லிம்கள் தங்கள் வம்சாவழி சார்ந்து அரசாங்கம் அவர்களுக்கு பிரிவுகளை வைத்திருந்தாலும், (முஸ்லிம்களிடையே சாதிகள் இருந்தால்) எந்த பிரிவை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள் என்றா பிரச்சாரம் செய்வார்கள்? ஒரு ஹிந்து தன் சாதியை விட்டு இன்னொரு சாதியை போட மாட்டார். ஆனால் (இந்திய அரசாங்கத்திற்காக) எந்த பிரிவையும் போட்டு கொள்ளுங்கள் என்றல்லவா முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்கின்றார்கள்? சாதி இருந்தால் அந்த சாதியை தவிர வேறு சாதியை போட சொல்லி சொல்ல மாட்டார்கள். இந்த அடிப்படை விசயம் கூட புரியாமலே இஸ்லாத்தில் சாதி உண்டு என்றால் அப்படி சொல்பவர்களின் கூர்ந்து நோக்கும் திறனை என்னவென்று சொல்வது.

        அசத்தலான கட்டுரை. ஜசாக்கல்லாஹ்.

        வஸ்ஸலாம்,

        உங்கள் சகோதரன்,
        ஆஷிக் அஹமத் அ

        ReplyDelete
      3. மிக அருமையான பதிவு இந்திய மக்களுக்கு இப்போது இது பிரயோசனமாக இருக்கும்.அவர்களின் தற்போதைய நிலையினை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

        ReplyDelete
      4. அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ),

        இதை எழுதிய ஆசிரியருக்கு என்னுடைய வண்மையான கண்டனங்கள் ...யார் சொன்னது இஸ்லாமில ஜாதிகள் இல்லை என்று ஆண் ஜாதி , பெண் ஜாதின்னு ரெண்டு சாதி இருப்பதை எத்தனையோ ஹதிஸ், குர்ஆன் மூலம் என்னால ஆதாரம் காட்ட முடியும் :-)).

        மற்றபடி பாயிண்ட் டூ பாயிண்ட் சூப்பர் :-)

        ReplyDelete
      5. சின்ன தகவல்:

        பத்தாம் வகுப்பு வரை நான் லப்பையாம், அதற்கு பிறகு நான் ராவுத்தராம். இதை சான்றிதழ் சொல்கிறது.

        :) :) :)

        ReplyDelete
      6. அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ),

        //இதை எழுதிய ஆசிரியருக்கு என்னுடைய வண்மையான கண்டனங்கள் ...யார் சொன்னது இஸ்லாமில ஜாதிகள் இல்லை என்று ஆண் ஜாதி , பெண் ஜாதின்னு ரெண்டு சாதி இருப்பதை எத்தனையோ ஹதிஸ், குர்ஆன் மூலம் என்னால ஆதாரம் காட்ட முடியும் :-)).//

        சகோ ஜெய்லானியின் கருத்தை வழி மொழிகிறேன். அருமையான பதிவு சகோதரி. வாழ்த்துக்கள்.

        ReplyDelete
      7. மாஷா அல்லாஹ்... திருப்திகரமான பதிவு,,,,

        ReplyDelete
      8. கட்டுரை அருமை.. நீங்கள் டிஸ்கியில் கொடுத்திருக்கும் பெரியார் உரையின் YOUTUBE ஆடியோவின் நம்பகத்தன்மையில் சந்தேகமாக இருக்கிறது...

        ReplyDelete
      9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

        சர்மிளா. அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றி

        சமீபத்தில் மகனை ஸ்கூலில் சேர்ப்பதற்காக போயிருந்தேன். அட்மிஷன் பார்ம்மில் மதம் என்ற இடத்தில் இஸ்லாம் என்றும் சாதி என்ற இடத்தில் எதுவும் போடாமல் கொடுத்திருந்தேன். அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள். கட்டாயம் போட்டே ஆக வேண்டும் என சொல்லிவிட்டார்கள். இஸ்லாத்தில் ஜாதியெல்லாம் இல்லைங்க என சொல்லியும் கேட்கவில்லை. உங்கள் புரட்சியால்(?!) எங்களுக்கு அதிகப்படியான வேலை மற்றும் நடைமுறை சிக்கல் இருக்கு. புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்...லெப்பை என போட்டுவிடுகிறோம் என சொல்லிவிட்டார்கள். வேறென்ன செய்ய முடியும்?

        லெப்பை என்பது ஜாதி என்றே நினைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது.. அது தொழில் அடிப்படையிலான பிரிவு என்பது! தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!

        ஆனால் நீங்கள் சொல்வது போல் 6 பிரிவுகளும் தொழில் அடிப்படையான பிரிவு என்றால் இன்றைய வர்ணாசிரம சாதிமுறை கூட தொழில் பிரிவின் அடிப்படையில் தோன்றியவை தானே :-) ஏற்றத்தாழ்வு ஒன்று மட்டுமே இஸ்லாத்தின் தொழில் அடிப்படையான பிரிவை மற்றவற்றிலிருந்து பிரித்து காட்டுகிறது என நினைக்கிறேன்.

        அப்பறம் உங்களுக்கு ஒன்னு தெரியுமா?
        இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தாங்கள் என்னமோ வானத்திலிருந்து குதித்துவந்தவர்கள் போல் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குவதும் நிகழதான் செய்கிறது. (இதுக்கு யாரும் மறுப்பு சொன்னா விவாதிக்க நான் தயார்)

        வயலுக்கு போய் வந்த களைப்பில் தண்ணீர் கேட்பவர்களுக்கு ப்ளாஸ்டிக் டம்ளரில் தான் தண்ணீ கொடுக்க வேண்டும் என எனக்கு கட்டளையிட்ட என் பெரியம்மாவையும் பார்த்திருக்கிறேன். தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்படுபவர்கள் வீட்டில் சரிசமமாக அமர்ந்து அவர்கள் கொடுக்கும் நீர் , மோர் அருந்தும் அம்மாவையும் பார்த்திருக்கிறேன்.

        சரியாக இஸ்லாத்தை விளங்கிக்கொள்ளாதவர்கள் இன்னும் இந்த இந்த சாதிய அமைப்பில் இருந்து வெளிவரவில்லை என்பது தான் கசப்பான உண்மை :(
        நாமும் ஒரு காலத்தில் இப்படியாக தான் நடத்தப்பட்டிருப்போம்/ ஒதுக்கப்பட்டிருப்போம் என்று தோன்றியிருந்தால் நிச்சயம் ஒதுக்கும் எண்ணம் நமக்கு வந்திருக்காது. மதம் மாறியதும் ஈசியா வரலாறு மறந்துட்டாங்க :-)

        இந்த கமென்ட் இப்ப ஏன்னு கேக்கலாம்.. ஹி..ஹி...ஹி... அதுக்கு 2 ரீசன் இருக்கு
        1.இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை.. ஆனா சில இஸ்லாமியர்கள்(பெயரில் மட்டும்) கடைபிடிக்கவே செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இங்கே பகிர்கிறேன். மேலும் இப்படியாக தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குபவர்கள் தன்னை முஸ்லீம் என சொல்லிக்கொள்ள தகுதியற்றவர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை.

        2. இந்த பதிவை 3 in 1 ஆக பார்க்கிறேன்.
        1. இஸ்லாத்தில் ஜாதி இருக்கு என சமீபத்தில் நிறுவ முயன்றவர்க்க தக்க பதிலடி கொடுக்கும் பதிவாக
        2. இஸ்லாமியர்களின் அறியாமையை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவாக
        3. முஸ்லீம்மாய் பிறந்ததால் தன்னை அப்பாடக்கர்கள் என நினைக்கும் சில ஜென்மங்களுக்கு நெத்தியடி கொடுக்கும் பதிவாக இதை பார்ப்பதால் இதை இந்த சந்தர்ப்பத்தில் கமென்ட்டுகிறேன்.


        ஜஸக்கல்லாஹ் ஹைர்

        ReplyDelete
        Replies
        1. உங்களது கருத்தை நான் வழிமொழிகிறேன்

          Delete
        2. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

          மிகச்சிறந்த பதிவுக்கான சிறந்த பின்னூட்டம்

          உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்

          இந்த கமென்ட் இப்ப ஏன்னு கேக்கலாம்.. ஹி..ஹி...ஹி... அதுக்கு 2 ரீசன் இருக்கு
          1.இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை.. ஆனா சில இஸ்லாமியர்கள்(பெயரில் மட்டும்) கடைபிடிக்கவே செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இங்கே பகிர்கிறேன். மேலும் இப்படியாக தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குபவர்கள் தன்னை முஸ்லீம் என சொல்லிக்கொள்ள தகுதியற்றவர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை.

          2. இந்த பதிவை 3 in 1 ஆக பார்க்கிறேன்.
          1. இஸ்லாத்தில் ஜாதி இருக்கு என சமீபத்தில் நிறுவ முயன்றவர்க்க தக்க பதிலடி கொடுக்கும் பதிவாக
          2. இஸ்லாமியர்களின் அறியாமையை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவாக
          3. முஸ்லீம்மாய் பிறந்ததால் தன்னை அப்பாடக்கர்கள் என நினைக்கும் சில ஜென்மங்களுக்கு நெத்தியடி கொடுக்கும் பதிவாக இதை பார்ப்பதால் இதை இந்த சந்தர்ப்பத்தில் கமென்ட்டுகிறேன்.

          நம்மைப் பார்த்து பிறரால் சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் தவறாக நடந்துகொள்ளக்கூடிய நம்முடைய சில சகோதரர்களின் நடவடிக்கையினால் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

          Delete
      10. அஸ்ஸலாமு அலைக்கும் ஷர்மிளா ஹமீத் நல்லா அருமையா விளக்கம் குடுத்து இருக்கீங்க அருமை............

        ReplyDelete
      11. Nalla Neththiyadiyaana Pathivu: Islaaththin Sagodharathuvaththai Marantha Islamiyargalukku Nalla Ninaivoottal!

        ReplyDelete
      12. சகோ ஷர்மிளா,

        அருமையான பதிவு.. இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை என்பதை நச்சுன்னு நடு மண்டையில் அடித்து சொல்லி இருக்கிறீர்கள். இதில் முஸ்லிம்களுக்கும் படிப்பினை இருக்கிறது... மனிதர்களில் யாரையும் பிறப்பின் அடிப்படையிலோ, அந்தஸ்தின் அடிப்படையிலோ பிரித்து பார்த்தார்களேயானால்..அவர்கள் இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொள்ள எந்த அருகதையும் அற்றவர்கள்..

        ReplyDelete
      13. /* மேலும் இப்படியாக தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்குபவர்கள் தன்னை முஸ்லீம் என சொல்லிக்கொள்ள தகுதியற்றவர்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. */

        சலாம் ஆமினா,

        இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டம் மேலும் வழு சேர்க்கிறது.... ஏற்றத் தாழ்வுகள் பார்த்து பழகும் சில முஸ்லிம்கள் இருக்கவே செய்கிறார்கள்..அப்படியெல்லாம் இல்லை, முஸ்லிம்கள் அனைவரும் நல்லவர்கள் என்று கூறி நாம் ஊரை வேண்டுமென்றால் ஏமாற்றலாம்...ஆனால் படைத்த இறைவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான்... இறுதித் தீர்ப்பு நாளில் அவன் நம் செயல்களை வெளிப்படுத்துவான் என்பதை நாம் அஞ்சிக் கொள்ள வேண்டும்...

        தாகத்திற்கு தண்ணீர் கேட்டவர் தன் மதத்தை சார்ந்தவர் அல்ல யாரோ ஒரு கீழ் சாதி(ஊர் வழக்கப்படி , முஸ்லிம்களுக்கு அனைவரும் சமமே) காரர் தானே என்று பிளாஸ்டிக் குவளை பயன்படுத்தும் உங்கள் பெரியம்மா பெயரவிலே முஸ்லிமாக உள்ளார்.... இறைவனின் பார்வையில் அவர் ஒரு நல்ல முஸ்லிம் ஆகா மாட்டார்.. அவரிடம் எடுத்து சொல்லி உண்மை இஸ்லாத்தை புரிய வைப்பது உங்கள் கடமை....

        அனைத்து சகோதர் சகோதரிகளும் இதை ஒரு பாடமாக எடுத்து தங்கள் வீடுகளில் இது போல் மனிதர்களை பிரித்து பார்க்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்ற முயற்ச்சிக்க வேண்டும்...
        அதை விடுத்து கமெண்ட் போட்டதுடன் நமது கடமை முடிந்தது என்றால், நிச்சயம் அல்லாஹ்வின் பார்வையில் நாம் வெறுக்கத் தக்கவர்கள் ஆகிவிடுவோம்....

        ReplyDelete
      14. தொடர்கிறேன்..

        ஆனால் அனைவரும் அப்படி அல்ல ஆமினா... உதாரணத்திற்கு எனது வீட்டை எடுத்துக்கொண்டால், எங்கள் வீட்டில் வேலை செய்யும் முனியமா அக்கா தான்(ஊர் உலகம் இவரை தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லும், எனக்கு மிக உயர்வானவர்) சமையல் வேலைகள் அனைத்தும் செய்யும்...எனக்கு தோசை சுட்டு தருவது, அம்மியில் துவையல் அரைப்பது,
        மீன் அலசுவது என்று அனைத்தும்...நாங்கள் யாரும் அதை சாப்பிட முகம் சுழிக்க மாட்டோம்...எங்கள் வீட்டு சமையல் அறையில் அனைத்து விதமான வேலைகளும் செய்வார்கள்...

        சோ, புரியாதவர்கள் இருக்கிறார்கள்..அனைவரும் அப்படி அல்ல... புரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லி திருத்த வேண்டியது நமது கடமை.... இந்த பதிவின் மூலம் யாராவந்து ஒரு முஸ்லிம் மாறினாலும் அது உங்களுக்கு(இஸ்லாமிய பெண்களுக்கு) கிடைத்த வெற்றி தான்...

        அருமையான ஆக்கம்..தொடரட்டும் உங்கள் ஆக்கப் பூர்வமான பணி.....

        ReplyDelete
      15. ஸலாம் சகோ.ஷர்மிளா,
        மீண்டும் மிக நல்லதொரு பதிலடி..! சரியான பதிவு..! நன்றி சகோ..!

        நான் பின்தங்கிய வகுப்பு சான்றிதழ் (BC certificate) வாங்க வட்டாட்சியார் அலுவலகம் சென்றிருந்த போது... எனது(?)சாதி 'இன்னதுதான்' என்று எனது 15-வது வயதில்... முதலில் என்(?)சாதியை எனக்கு எழுதியவர் பட்டுக்கோட்டை வட்டாட்சி அலுவலர்தான்.

        அரபி பெயரை பார்த்துவிட்டு என்னிடம் 'முஸ்லிமா' என்று கேட்டார்.
        'ஆம்' என்றேன்.
        'ராவுத்தரா.. மறைக்காயரா.. என்ன சாதி' என்றார்.
        'தெரியவில்லை' என்றேன் நான்..!
        அப்புறம் அவரே யோசித்து ஒரு பெயரை (?) தெரிவு செய்துவிட்டு சொன்னார். அதற்கு முன்னர் அந்த சாதி பெயரை என் வாழ்நாளில் நான் கேட்டதே கிடையாது..!

        ஆகவே, எனது சாதி(?)யை எனக்கு 'இன்னதுதான்; என நிர்ணயித்தது அரசுதான்..! அந்த அரசு அலுவலர்தான்..! இஸ்லாம் அல்லவே அல்லவே..!

        இல்லாத சாதியை இஸ்லாம் மீது திணிக்கும் அரசுக்கும், அது இஸ்லாத்தில் இருப்பதாக அவதூறு கூறும் பதிவர்கள் (திரு டோண்டு, திரு கோ.க... போன்றவர்களுக்கும்) எனது கண்டனங்கள்..!

        @Ashiq Ahamd,///சரி அப்படியே முஸ்லிம்கள் தங்கள் வம்சாவழி சார்ந்து அரசாங்கம் அவர்களுக்கு பிரிவுகளை வைத்திருந்தாலும், (முஸ்லிம்களிடையே சாதிகள் இருந்தால்) எந்த பிரிவை வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள் என்றா பிரச்சாரம் செய்வார்கள்? ///------அட..! அதானே...! இதைக்கூடவா சிந்திக்க இயலாதவர்களாக போய் விட்டார்கள் இவர்கள்..? அதீத மதஎதிர்வெறி அவர்களின் சிந்தனையை மழுங்கடித்து விட்டது போலும்..!

        ReplyDelete
      16. சலாம் சகோ முஹம்மது ஆசிக்,

        சில நாட்களுக்கு முன்னாள் ஒரு பதிவர் சந்திப்பின் போது, பேச்சு இஸ்லாம் பற்றி வந்தது. அப்பொழுது நான் சொன்னேன் இஸ்லாம் மனிதர்களுக்குள் எந்த ஏற்றதாழ்வும் காட்டாது...
        இஸ்லாத்திற்குள் ஒருவர் நுழைந்து விட்டால் அது அவரின் ஜாதியை மறக்க செய்துவிடும் என்று..அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை... அதற்கு நான் சொன்னேன் உதாரணத்திற்கு
        என்னை எடுத்துக்கொள்ளுங்கள்...எங்கள் மூதாதையர்கள் நிச்சயம் ஏதோ ஒரு மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்களாகவே இருப்பார்கள்..ஆனால் எங்களுக்கு நாங்கள்
        எங்கிருந்து வந்தோம் என்றே தெரியாது... இது தான் இஸ்லாம் என்றேன்.... அதை அவர் ஏற்று கொள்ளவே இல்லை..நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்றார்....பொய் சொல்கிறேன் என்பவரிடம் நான் என்ன சொல்ல முடியும்.???? அவர் அப்படி சொல்ல என்ன காரணம் என்றால்..அவரின் நண்பர் யாரோ ஒரு முஸ்லிம்(அவரும் பதிவர் தானாம்) , அவருக்கு அவர் எந்த
        ஜாதியில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தார் என்பது தெரியுமாம்..சோ இஸ்லாம் ஜாதியை ஒழிக்க வில்லை என்றார்... இவர்களின் புரிதல் இந்த அளவில் தான் உள்ளது...

        ஆனால், யோசித்து பார்த்தால் அவர் அப்படி பேச அவரின் முஸ்லிம் நண்பர் தானே காரணம் சகோ??? சோ நமது செயல்பாடுகள் அடுத்தவர்கள் எண்ணங்களில் ஏற்ப்படுத்தும் தாக்கத்திற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்....

        ReplyDelete
      17. மாஷா அல்லாஹ்! சிறந்த பதிவு! தொடருங்கள் உங்களின் எழுத்து பணியை...
        http://abuwasmeeonline.blogspot.com/

        ReplyDelete
      18. மிகவும் தேவையான கட்டுரை. வாழ்த்துகள். கருத்துரைகளும் மற்றும் அதற்கு தந்துள்ள பதில்களும் நன்றாக உள்ளது.

        ReplyDelete
      19. //எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.//

        இறைவன் மிகப் பெரியவன்!.

        ஒரு சாதரண சிறு கட்டளையின் மூலம் பல் ஆயிரம் ஆண்டுகள் நிலவி வந்த நிறவெறி/சாதியக்கொடுமையில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் இறைவனின் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

        இஸ்லாத்தின் கடமைகளில் உள்ள "தொழுகை" மற்றும் "புனித ஹஜ்" உலகிற்கு இதைப்பறை சாற்றிக் கொண்டிருக்கும் பொழுது நாம் எந்த அவதூறையும் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை.

        நான் என்ன சாதி என்றே தெரியாத பொழுது, அதைப்பற்றி நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்?.

        "சாதியத்தீ" மூட்டி குளிர்காய நினைப்போருக்கு இப்பதிவு ஓர் "தண்ணீர் லாரி" :)).

        ReplyDelete
      20. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
        மிகவும் தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள்.இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.ஆனால் அவர்களின் நோக்கம் ஏனைய மதத்தில் ஜாதிகள் உள்ளது போல் இஸ்லாத்திலும் ஜாதிகளை புகுத்திவிடுவதுதான்.
        "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்" (சங்கைமிகு அல்குர்ஆன் 49:13)
        குறிப்பு:மேற்கண்ட வசனத்தின்படி இஸ்லாத்தை நாங்கள் முழுமையாக பின்பற்றி கொண்டிருக்கும்வரை எங்களிடம் ஜாதிகளை ஏற்படுத்தமுடியாது.

        ReplyDelete
      21. //அந்த காலத்துல அவங்க முன்னோர்கள் செஞ்ச தொழில் அடிப்படையிலும் சிலரோட பரம்பரை பெயர்களின் அடிப்படையிலுமே முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்...

        //

        எல்லா மதத்திலும் சாதி இப்படித்தான் உருவானது என நினைக்கின்றேன் ...

        ReplyDelete
      22. எனக்கு என்ன வருத்தம் என்றால் எதற்கு எல்லாவறிற்கும் இந்து மதத்தை சுட்டிகாடுகின்றிர்கள் ?

        ReplyDelete
      23. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

        சாட்டையடி பதிவு!
        அதுவும் இஸ்லாமிய பெண்மணியிடமிருந்து...

        என்னை போன்ற கடலோர பகுதி மக்கள் இஸ்லாத்தை தழுவி சுமார் 500 அல்லது 600 வருடங்கள் இருக்கலாம்.

        ஆனால் பாருங்கள் இன்று என்னிடம் ஜாதி இல்லையென்பதோடு மட்டுமில்லை. எனது பூர்விக ஜாதி என்னவென்று கூட எனக்கு தெரியாது.

        என்னைப்போன்றே இங்கே அனேக முஸ்லிம்களுக்கு அவர்களின் பூர்விக ஜாதி என்னவென்பது கேள்விக்குறியே...

        அரசு பதிவேடுகளில் மட்டும் அச்சேறும் முஸ்லிம்களின் ஜாதிய நுழைவை இஸ்லாத்தின் ஜாதியாக காட்ட முயற்சிப்பது கயமையாளர்களின் அறியாமையே தான் காட்டுகிறது

        நல்ல பதிவிற்கு
        ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

        ReplyDelete
      24. “படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்" (நபிமொழி)

        “கருப்பரை விட வெள்ளையரோ வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர்கள் அல்லர். அரேபியரை விட அரபி அல்லாதவரோ , அரபி அல்லாதவரை விட அரேபியரோ சிறந்தவர்கள் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்." (நபிமொழி)

        எந்த இனமும் மற்றொரு இனத்தை விட மேன்மையானது கிடையாது. நாம் ஒரு தோட்டத்தில் உள்ள பல்வேறு மலர்கள். நாம் பார்க்கும் போது ஒவ்வொரு தோட்டமும் ஒவ்வொரு மலரும் ஒரு பங்களிக்கிறது என்று நாம் உணர வேண்டும் . ஒவ்வொரு பூவும் அதற்கான அழகிய நிறமும் மற்றும் நறுமணமும் பெற்றிருக்கலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது .
        Please visit
        http://seasonsnidur.blogspot.in/2012/05/blog-post_17.html

        ReplyDelete
      25. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

        மாஷா அல்லாஹ்..மிக அருமையான பதிவு ஷர்மி..

        உங்களின் எழுத்து திறமை அனைவரும் அறிந்ததே..நம் மார்க்கத்தில் நமக்கு புலப்படாத விசயங்கள் எல்லாம் அடுத்தவர்கள் கண்ணுக்கு மட்டும் எப்படி புலப்படுதோ தெரிய வில்லை..வியப்பாக இருக்கிறது!

        அது குறித்தான தங்களின் தெளிவான விளக்கங்கள் அருமை..

        நல்லதொரு பதிவுக்கு நன்றி ஷர்மி...:-))

        ReplyDelete
      26. இஸ்லாத்தில் ஜாதி இல்லையென்று சொல்ல, இவ்வளவு நிளமான விளக்க பதிவு...அவரவர்களின் பங்குக்கு நிளமான பின்னுட்டம்...சரி அப்படியே எனக்கு நேர்ந்ததையும் ( அட.. என் கூத்தையும் ) கொஞ்சம் கேட்டுங்கோங்கோ ....
        நான் இஸ்லாத்தில் புதிதாக வந்த சமயத்தில், ஒரு வேலை விசயமாக ஜாதி சர்டிபிகட் தேவை இருந்தபடியால், மதம் மாறிய ஆவணங்களுடன் கிண்டி தாசில்தார் ஆபிசில் தாசில்தாரை சந்திந்தேன்..என் ஆவணங்களை பார்த்த அவர், உனக்கு எந்த ஜாதியில் சர்டிபிகட் வேண்டுமென்றார் அப்போ நா "ஷாக்"
        அடிச்சதுபோல "பே பே" என்று முழிப்பதை பார்த்து அவரே 'லெப்பை' அல்லது 'ஷேக்' ஜாதி போடட்டுமா என்று கேட்டார்...நானும் ஷேக் என்று போட்டுகிட்டால் துபாய் போவலாம் என்கிற ஆசையில் சரி சொல்லிவிட்டேன். ...பின்பு நான் இங்கே (குவைத்) வந்த பிறகு தான் புரிந்தது ஜாதியே தேவையில்லை என்று .....
        அன்றிலிருந்து இன்றுவரை "ஷேக்" ஜாதியின் அர்த்தம் (இப் பதிவு படிக்கும் வரை) உண்மையாக தெரியாதுங்க .....
        ஷேக் ஜாதின்னா "அரேபிய வம்சாவழியினர்" னு சொல்றிங்களே அப்படின்னா
        என் தாத்தா முனுசாமி நாயக்கர் மற்றும் என் முன்னோர்கள் அரேபிய ஷேக் வம்சமா ...??!!! தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கப்பா .......
        இஸ்லாத்துல ஜாதின்னாலே தமாசா கீது இல்ல .....அஹா அஹா

        ReplyDelete
      27. Nice informative article. Instead of discussing these things with us, we should mail these article to future-muslims

        ReplyDelete
      28. Kalakkal !!! vimarsanaglaukku sariyaan saataiyadi !!!

        ReplyDelete
      29. MASHA ALLAH well said,

        Also please note down "Rajapaatai's" comment

        ReplyDelete
      30. @"என் ராஜபாட்டை"- ராஜா

        மன்னிக்கவும் சகோ ராஜா... இதில் இடம்பெற்று இருப்பவை யாவும் எவிடென்ஸ் அமைப்பினர் வெளியிட்ட தகவல்கள் அடிப்படையிலேயே தொகுத்து உள்ளேன்...!! எந்த மதத்தையும் குறிப்பிட்டு குறை சொல்வதற்காக அல்ல..!!! ஆனால் மற்ற எந்த மதங்களை காட்டிலும் இந்து மதத்தில் தீண்டாமை கொடுமை அதிகம் என்பது மறுக்கவியலாத உண்மை சகோ... :)
        மாற்று கருது இருப்பின் தொடரவும்....

        ReplyDelete
      31. //ஆனால் மற்ற எந்த மதங்களை காட்டிலும் இந்து மதத்தில் தீண்டாமை கொடுமை அதிகம் என்பது மறுக்கவியலாத உண்மை சகோ... :)
        //
        உண்மைதான் .. ஆனால் ரொம்ப அதிகம் என்பதை என்று கொள்ள இயலாது . சாதி வெறி என்பது சிலரிடம் தான் உள்ளது அவர்கள் செய்யும் செயல் மதராஸ் அனைவரையும் தவறாக என்ன தோன்றுகின்றது . ஒசாமா திவிரவாதி ஒரு முஸ்லிம் என்பதால் முஸ்லிம்கள் அனைவரையும் திவிரவாதி என நினைப்பது எப்படி முட்டாள் தனமோ அது போலதான் இதுவும் . தயவு செய்து தேடி பாருங்கள் ஆயிரம் நல்ல விஷயங்கள் உள்ளது.

        ReplyDelete
      32. @ராஜா

        //எல்லா மதத்திலும் சாதி இப்படித்தான் உருவானது என நினைக்கின்றேன் ... //
        ஆம்... இப்படிதான் உருவானது. சமூகத்தில் தன்னை காட்டுவதற்கு சில அடையாளங்கள் தேவை தான். ஆனால் அந்த அடையாளங்கள் ஒரு மனிதனை இழிவுபடுத்துவதற்காகவும் உயர்த்தி காட்டுவதற்காகவும் அமைய கூடாது...
        மேலே சொல்லப்பட்ட இந்த தொழில் அடிப்படையிலான பிரிவை கூட முஸ்லீம்கள் உருவாக்கியது அல்ல! இந்திய அரசு முஸ்லீம் மக்கள் மீது திணித்தது... ஆனாலும் முயற்சி தோற்றுக்கொண்டு தான் வருது... சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பில் கூட எந்த பிரிவில் தம்மை சேர்ப்பது என தெரியாதவர்களாகத்தான் நாங்க இருக்கோம். எது பிடிச்சாலும் போட்டுக்க வேண்டியது தான்! ஹோட்டல் மெனு கார்ட் கைல கொடுத்தது போல் :-)

        ReplyDelete
      33. @ சகோ ராஜா..

        உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

        இந்த கட்டுரையில் எங்கும் குறிப்பிட்டு இந்து மக்களை தாக்கியதாக குறிப்பிடப்படவில்லை என நினைக்கிறேன். ஒட்டுமொத்த சமுதாயத்தில் நடக்கும் சாதியம் சார்ந்த வன்கொடுமைகளை பற்றி தான் சொல்லப்பட்டுள்ளது. இந்த வன்கொடுமைகள் இந்துவால் மட்டுமே செய்யப்படுவதாக எவராலும் நிச்சயம் சொல்ல முடியாது. அதனாலேயே கவனமாய் கட்டுரை எழுதப்பட்டது. அப்படியும் எங்கேனும் குறிப்பிட்டு இந்து மதத்தை மட்டுமே தாக்கி யிருக்கும் படியான வசனம் இருந்தால் சொல்லுங்கள். மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியர் அந்த வரிகளை நீக்கிவிடுவார் :-)

        //ஒசாமா திவிரவாதி ஒரு முஸ்லிம் என்பதால் முஸ்லிம்கள் அனைவரையும் திவிரவாதி என நினைப்பது எப்படி முட்டாள் தனமோ அது போலதான் இதுவும் . //

        சூப்பரா சொன்னீங்க ப்ரதர். நிச்சயமா ஒசாமா செஞ்சதுக்கு எல்லா முஸ்லீம்மும் தீவிரவாதின்னு முத்திரை குத்த முடியாது. ஏன்னா ஒருவன் முஸ்லீமாக இருப்பதற்கான அடிப்படை தகுதியை நிர்ணயிக்கும் குர்ஆன் ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. தனிமனித செயலுக்கு நிச்சயம் ஒரு மதம் எப்படி பொறுப்பேற்காதோ அதே போலவே தான் ஒரு சமுதாயத்தில் சாரார் தாழ்த்தப்பட்டவர்களை செய்யும் இழிவான,மட்டரகமான செயலுக்கு எப்பவும் ஒட்டுமொத்த இந்து மதத்தை தாக்குவது நிச்சயம் குற்றமே...

        இந்த கட்டுரையும் அது போலவே தான். ஒட்டுமொத்த இந்து மதத்தை தாக்காமல் இழிவானவர்கள் செய்யும் செயலை மட்டுமே சுட்டிக்காட்டியிருக்கிறது...


        வருகைக்கும் கருத்துக்கும் சுட்டி காட்டியமைக்கும் மனமார்ந்த நன்றி சகோ..

        ReplyDelete
      34. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நல்ல பதிவு சகோதரி. நன்றி

        மற்றும் இதுபோன்ற பதிவுக்கிடைக்க உதவிய கோ.கண்ணா டொன் ஐயா அவர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவர்கள் இஸ்லாத்தில் ஜாதிகளை கண்டுபுடித்தமைக்காக. மேலும் அந்த இருவார்க்கும் சொல்லிகொள்ளுவது என்னவென்றால், என் தாய்/தந்தை கிடைத்த பிரிவு (செய்யது). பத்தாம் வகுப்பில் ஆசிரியார் சான்றிதழில் எனக்கு எழுதியாது (இராவுத்தார்), பிறகு நான் திருமணம் முடித்தாது (லெப்பை) ஜாதி இப்பா என் மகனுக்கு எந்தா பிரிவு செத்தலாமுனு நானே சிந்துச்சிட்டு இருக்கறேன். இஸ்லாத்தில் ஜாதியை கண்டுபுடிச்சு குட்டு வாங்கறாங்களாமா.

        ReplyDelete
      35. அஸ் ஸலாமு அலைக்கும் ஷர்மி,

        மன்னிச்சுக்குங்க. நிறைய தாமதம் ஆகிடுச்சு, கமென்ட் எழுத :(
        பதிவுகளை உடனேவும் படிக்க முடிவதில்லை. ப்ளீஸ்....ஸாரி :(

        அருமையான பதிவு. ஆனால், சாதியை காரணம் காட்டி தலித் மற்றும் பிற தாழ்ந்த வகுப்பை சேர்ந்த பெண்களை மேல்துணி / ரவிக்கை / மார்பில் எந்த வித உடையும் உடுக்கக்கூடாது என்று ஒரு 'புரட்சி'யை செய்திருந்தார்களே.... அதை விட்டு விட்டீர்களே???? மேற்குல பெண்களுக்கு மட்டும் மார்பில் ஆடை என்பது உரிமை போலவும், பிற்படுத்தப்பட்ட பெண்களை கண்களின் மூலமே மேய்ந்து 'பசி தீர' இந்த அவலத்தை காலம் காலமாக தமிழ் நாட்டில் பின்பற்றியதையும் சேர்த்திருக்கலாம். என்ன சொல்ல. இதையெல்லாம் நினைவில் கொள்ளாமல், ஏதோ ஹிஜாப் அணிவதால் உடலின் வெப்பத்தில் கருகி பெண்கள் இறப்பதைப் போலல்லவா இஸ்லாமிய பாதுகாப்பை எதிர்க்கிறார்கள். இந்த மாதிரி கட்டுரைகள் இன்னும் வெகு ஜன ஊடகங்களிலும் வர வேண்டும். அப்பொழுதுதான் இந்த 'மாயை' அகலும், மக்கள் புரிவார்கள், இன்ஷா அல்லாஹ். மிக மிக நல்ல கட்டுரை ஷர்மி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

        அல்ஹம்துலில்லாஹ்,

        ReplyDelete
      36. ஆதிமனிதன் (ஆதாம்,ஏவால்)அதாவது,ஆதம் அலைஹிஸ்ஸலாம்,ஹவ்வா அலைஹிஸ்ஸலாம்,என்ற இருவரில் இருந்துதான்,முழுமனித சமுதாயமுமே உருவானது என்பதை நாம் எல்லோரும் அறிவோம், நாம் எல்லோரும் ஒரே தாய்,தந்தையிலிருந்து வந்தவர்கள். எம் உடம்பில் ஓடுவது ஒரே ரத்தம். நாம் எல்லோரும் சகோதரர்கள் . இதை நாம் உணர்ந்தோமானால் எமக்கிடையே ஜாதி,மத,வேற்றுமைகள் ஏன்!!!!!உயர்ந்த ஜாதி என்றும் தாழ்ந்த ஜாதி,என்றும் பாகுபாடுகாட்டி நீங்கள் பிரிந்துவிடுங்கள், என்று இறைவன் கூறியிருக்கின்றானா?... இல்லை!!!இல்லவே!!! இல்லை.எமது திருமறையாம் திருக்குர்ஆனில் அல்லாஹ்!!! நீங்கள் யாவரும் ஒரு உடம்பைப் போன்றவர்கள்.எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புகாட்டி நேசத்தோடும், பாசத்தோடும், உதவி செய்து வாழுங்கள்.அபபடியாயின் நீங்கள் சித்தியடைவீர்கள் என ஒற்றுமையைப் பற்றிக்கூறியுள்ளான். எனவே....அன்புச் சகோதர, சகோதரிகளே!!! நாம் யாவரும் ஒரே இறையின் கீழ் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்வோம். இன்சாஅல்லாஹ்!!!
        Mazaima Ismail Farook. (Akurana : Kandy, Sri Lanka)

        ReplyDelete