Tuesday, May 29, 2012

சாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை

சாதித்ததெல்லாம் மேலைத்தேய பெண்கள் தானா? இல்லை சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில் முஸ்லிம் பெண்களுக்கு என்ன இடம் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த பதிவு.
சாதனை என்றால் கிலோ எவ்வளவு கேட்பவர்கள் என்றா முஸ்லிம் பெண்களை நினைத்தீர்கள்? இல்லை முக்காட்டிற்குள் முடங்கி கிடக்கும்  முல்லை பூக்கள் என்று நினைத்தீர்களா?.அடுப்படியில் கருகி போகும் கரித்துண்டுகளா நாங்கள்? உரிமைகள் எதுவும் இன்றிய கானல் நீர் வாழ்க்கையா எங்கள் வாழ்க்கை? அனைத்திற்கும் பதில் சொல்லும் பின்வரும் பதிவு
யார் சொன்னார்கள் முஸ்லிம் பெண்கள் சாதிக்கவில்லை என்று.. அவர்களுக்கெல்லாம் இது வெறும் சாம்பிள் தான்...

எந்த துறையை எடுத்தாலும் இன்று எங்கள் பெண்கள் சாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.விஞ்ஞானம், கலை, வர்த்தகம், உளவியல், சமூக அபிவிருத்தி என இவர்களின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.இவ்வாறு சாதித்த முஸ்லிம் பெண்கள் தொடர்பான தரவுகளை நீங்கள் அறிய இந்த பதிவு.
மத்திய கிழக்கில் அண்மைய அபிவிருத்திகளில் பெண்களின் பங்கு குறித்துக் குறிப்பிட்ட, பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வரும் பாரசீக மொழியும் இலக்கியமும் விருத்திக்கான நிலையத்தின் போதனாசிரியர் நஸ்ரியான், 'ஈரானிய பெண்களின் சாதனைகள், உலகின் முஸ்லிம் பெண்களுக்கான சிறந்த முன்மாதிரியாகும்' என்றார்.

சேர்பியா தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், பிராந்தியத்தின் நாடுகளில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய விழிப்புணர்வு குறித்துக் கருத்துரைத்ததுடன், பிராந்தியத்தின் புரட்சியில் முஸ்லிம் பெண்களது பிரசன்னத்தின் பங்களிப்பு பற்றியும் வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்லாத்தின் பார்வையில், கலாசாரம், சமூகவியல் மற்றும் அரசியல் உள்ளிட்ட துறைகளிலான பெண்களின் பங்களிப்பு அவற்றிலான ஆண்களின் பங்களிப்பை விடவும் முக்கியத்துவமுடையது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஓர் ஆணும் பெண்ணும் சம உரிமையுடையவர்கள் என்றார்.
நஸ்ரியான் மேலும் தெரிவிக்கையில் ஈரானில் பெண்கள் பெருமளவான துறைகளில் பணியாற்றி கலாசாரம் மற்றும் கல்வியியல் துறைகளின் அபிவிருத்திக்கான மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர் என்றார். ஈரானின் பல்கலைக்கழ மாணவர்கள் மற்றும் நாட்டின் ஆசிரியர்களில் 65 வீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அடக்கி ஒடுக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது; ஃபர்தாவுக்குள் அவர்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறது" என்றெல்லாம் உலகெங்கிலும் பல கூக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.  எனினும் இத்தகைய கோஷங்களைப் பொய்ப்பித்து தாம் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையெல்லாம் வெற்றிகொண்டு சாதனைகளை நிலைநாட்டிவரும் முஸ்லிம் பெண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ஒருவர் என்ற வகையில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுஃப் அல் கர்ளாவியின் மகள் இல்ஹாம் அல் கர்ளாவியின் சாதனைகளைச் சுருக்கமாகநோக்குவோம்.
1981 ஆம் ஆண்டு கட்டார் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்ஸி பட்டம் பெற்ற இல்ஹாம், 1984 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்திலே பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்து அணுசக்தித் துறையில் எம்.எஸ்ஸி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு மின்னியல் துறையில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். தன்னுடைய கல்வியியல் நடவடிக்கைகளுக்குப் புறம்பாகப் பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகம், திட்டமிடல் முதலானவற்றுக்குப் பங்களிப்புச் செய்யுமுகமாகப் பல்வேறு செயற்குழுக்கள் அமைப்புக்கள் என்பவற்றிலும் இவர் அங்கத்துவம் வகித்துள்ளார். சிலவற்றில் செயற்குழுத் தலைவியாகவும் தன்னுடைய காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில் 2007 முதல் கட்டார் பல்கலைக்கழக ஆய்வுக் கொள்கைகள் தொடர்பான செயற்குழு உறுப்பினராகவும் 2005 முதல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினராகவும்  2004 முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆய்வுக் குழுத் தலைவியாகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.

மேலும் 2006-2007 ஆம் ஆண்டுகளில் கணித மற்றும் இயற்பியல் துறை வரவுசெலவுத் திட்டக்குழுத் தலைவியாகவும் 2005-2006 ஆம் ஆண்டுகளில் அதே துறையின் வெளியுறவுக் குழுத் தலைவியாகவும் இருந்து இவர் தன்னுடைய பொறுப்புக்களை மிகத் திறம்பட நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு அமைப்புக்களில் செயற்குழு உறுப்பினராகவும் செயற்திட்ட ஆலோசகராகவும் இவர் பங்களிப்பு வழங்கி வருகின்றார்.

பேராசிரியை இல்ஹாம் அல் கர்ளாவி துடிப்பும் செயற் திறனும் கொண்ட கல்வியியலாளராகவும் ஆய்வாளராகவும் திகழ்ந்தமைக்கு இவர் பெற்றுக் கொண்டுள்ள ஏராளமான பரிசுகளும் விருதுகளும் சான்றாக அமையும். அந்த வகையில், இவர் 2007 ஆம் ஆண்டு உலக அணுசக்திப் பல்கலைக்கழகம், பரிஸில் உள்ள அரபுலக நிறுவனம், கட்டார் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சரவதேச அமைப்புக்கள் முதலானவற்றினால் பரிசுகளும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய துறை சார்ந்து ஏராளமான ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர், அரபு முஸ்லிம் பெண் சாதனையாளர்களுள் தலைசிறந்தவராகப் போற்றப்பட்டு வருகின்றார்.

அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற பூமியதிர்ச்சி சுனாமி மற்றும் அணு ஆலைகள் வெடிப்பு என்பன தொடர்பில் அல் ஜெஸீரா ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு இவர் அளித்துள்ள பேட்டி இத்துறையில் அவருக்கிருக்கும் புலமையை உணர்த்தும்.அந்த பேட்டியினை இங்கு காணலாம்.

Dr Ilham al-Qaradawi, a professor of nuclear physics at Qatar University, talks to Al Jazeera about the risk of a nuclear meltdown in Japan.
அடுத்து முதல் முறையாக பாலஸ்தீனத்தை சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் முஸ்லிம் பெண் இவர் ஆவார்.
இவர் பெயர் சுசானே அல் கூபி. 44 வயதான இவர் பாலஸ்தீனத்தை சேர்ந்தவர் என்றபோதிலும்  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
இவர் முதன் முதலில் தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சரோ சிகரத்தில் ஏறி இந்த சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண் என்ற பெருமை பெற்றார். பிறகு பிரான்சில் உள்ள பிளாங் மலைச் சிகரம் ரஷியாவில் உள்ள எல்புரூஸ் சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார். இப்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தது இருக்கிறார். 

துபாயில் உள்ள போன் அண்ட் ஜாயிண்ட் மையத்தில் துணை தலைவராக பார்த்து வந்த வேலையை மலை ஏறுவதற்காக ராஜினாமா செய்தார்.
உலகத்தில் முஸ்லிம் பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். 

அடுத்து சர்வதேச பெண்கள் தினத்தில் அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்று உலகின் தைரியமிக்க பெண்கள் 150 பேரை தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. இந்த பட்டியலில் சவுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று போராடிய மனால் அல் ஷரிஃப். மற்றொருவர் சவுதி பெண்மணி அறிவியல் அறிஞர் ஹயாத் சிந்தி.

ஹயாத் சிந்தியின் ஆரம்ப பள்ளிப் படிப்பு சவுதி அரேபியாவிலேயே தொடங்கியது. அதன்பிறகு தனது கல்லூரி வாழ்க்கையை லண்டனில் தொடங்க ஆசைப்பட்டார். இவரது தந்தை ஒரு பெண் தனியாக நாடு விட்டு நாடு சென்று படிப்பதை விரும்பவில்லை. இருந்தும் இந்தப் பெண் தனது தந்தையை வற்புறுத்தி கல்லூரி படிப்பை லண்டனிலேயே தொடங்கினார். லண்டன் வந்த இவர் முதலில் சேர்ந்தது இங்கிலீஷ் கல்லூரி. அதன்பிறகு கேம்ப்பிரிட்ஜ் பலகலைக் கழகத்தில் சேர்ந்து கல்வி பயின்றார். லாப நோக்கமற்ற அமெரிக்காவில் இயங்கி வரும் ஒரு ஆராய்ச்சி பணியில் தன்னை தற்போது இணைத்துக் கொண்டுள்ளார் ஹயாத் சிந்தி. ஹயாத் சிந்தி ஏற்கெனவே 100 சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் சியோ மேகஸின் நடத்திய போட்டியிலும் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.
மேலும் இவர் அறிஞர்களின் கற்பனைகள் புத்தி கூர்மை போன்றவற்றை ஒருமுகப்படுத்தி அதனை தொழில் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.மேலும் வளைகுடாவில் உள்ள அறிஞர்களை பயன் படுத்தி இந்த பிராந்தியத்தில் சிறந்த மாற்றங்களை கொண்டு வரவும் முயற்சி எடுக்கிறார்.

'நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதில் பெருமைபடுகிறேன். எனது அடையாளத்தை நான் என்றுமே உதாசீனப்படுத்தியதில்லை. சில நேரங்களில் சில அறிஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்க்காக
அவர்களின் கலாசாரத்தை கைவிடுவர். ஆனால் நீங்கள் உங்கள் அடையாளத்தோடுதான் உங்களின் முன்னேற்றத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் உங்களுக்கு உண்மையான வெற்றி' என்கிறார் தனது வாழ்நாளில் அதிக நாட்களை அமெரிக்காவில் கழித்த சகோதரி ஹயாத் சிந்தி-நன்றி அரப் நியூஸ் 14:03:2012

இரண்டு சாதனை பெண்களின் வாழ்க்கை முறைகள் உங்களுக்காக.இன்னும் சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள் நம் பெண்கள்.
சாதனை பயணம் தொடர்கின்றது.
அவர்கள் எதில் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் என எனக்கும் தெரியவில்லை. இஸ்லாம் எந்த விஷயத்தில் அவர்களின் சாதனையை ஒடுக்கியிருக்கிறது என சொன்னால் எனக்கும் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் :-)

உங்கள் சகோதரி
பஸ்மின் கபிர்

23 comments:

 1. அருமையான தொகுப்பு... இஸ்லாத்தை புரிந்துக் கொண்டவர்களால் மட்டுமே அதில் உள்ள சுதந்திரத்தையும், புனிதத்தையும் உணர முடியும்...

  "பலா பழத்தை வெளியில் இருந்து பார்க்க முற்கள் மட்டும் தான் தெரியும் ஆனால், அதன் உள்ளே உள்ள கனியின் அற்புத சுவையை அதை உண்டவர்களால் மட்டுமே அறிய முடியும்.. உண்டு ரசிக்காது வெளியில் இருந்து காண்பவர்களால் அதை அறிய முடியாது...

  இஸ்லாமும் அதை போன்று தான்..

  அனைவரும் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை சகோதரி.. வல்ல இறைவன் அதற்கு துணை புரிவான்.....

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.. யாஸமின்

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ!

  சிறந்த பதிவு! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. சலாம் சகோ பாஸ்மீன்,

  இஸ்லாமிய பெண்மணியில் உங்களின் முதல் கட்டுரை.. அதற்க்காக முதலில் வாழ்த்துக்கள்... உங்கல் ஊர்(இலங்கை) நடையில் மிக இயல்பாய் இருந்தது.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

  மாஷா அல்லாஹ்..நமதான பெருமையை,சாதனையை கூறும் மற்றொரு அருமையான ஆக்கம் ..

  வாழ்த்துக்கள் பஸ்மின்..நல்லதொரு பதிவுக்கு நன்றி..:-)

  ReplyDelete
 6. மாஷா அல்லாஹ் !! அருமையான பதிவு

  ReplyDelete
 7. அருமையான பதிவு வாழ்த்துக்கள்..,

  ReplyDelete
 8. மாஷா அல்லாஹ்...பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் கணீரென்று உண்மைகளை உரத்துச் சொல்கின்றன.முஸ்லிம்கள் அதிலும் பெண்கள் உலகின் பல மூலைகளிலும் சாதனைகள் புரிந்து வருவது உண்மையே... அவை மறைக்கப்படுவதும் உண்மையே.... சில உதாரணங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய உங்களுக்கு நன்றி பஸ்மின்.

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

  மாஷா அல்லாஹ்... அருமையான ஆரம்பம் மா.

  பானு சொல்வது போல் ஊடகங்களால் பெரிதும் மறைக்கப்படும் விஷயம்மாக இந்த சாதனைகள் உள்ளது என்பது தான் வருத்தமான விஷயம்.

  அடுத்த சாதனை பெண்கள் தொடருக்காக (அடுத்த பாகம்) வெயிட்டிங் :-)

  ReplyDelete
 10. வலைக்கும் ஸலாம் வரஹ்
  சுவனப் பிரியன் சகோ ஐஸாக்கல்லாகைரா

  ReplyDelete
 11. வலைக்கும் ஸலாம் வரஹ்
  சிராஐ; சகோ ஐஸாக்கல்லாகைரா

  ReplyDelete
 12. Ayushabegum :- வலைக்கும் ஸலாம் வரஹ்
  ஐஸாக்கல்லாகைரா

  ReplyDelete
 13. வலைக்கும் ஸலாம் வரஹ்
  ஐஸாக்கல்லாகைரா
  Peer Mohamed ,thariq ahamed ,enrenrum16

  ReplyDelete
 14. வலைக்கும் ஸலாம் வரஹ்
  ஆமினா சகோ ஐஸாக்கல்லாகைரா

  இன்ஸா அல்லாஹ் மா இரண்டாம் பாகத்திற்கான தேடல் தொடங்கிவிட்டது .. சாதனை பெண்களின் விபரங்கள் தொகுத்ததும் பதிவிடலாம்.. இன்ஸா அல்லாஹ் மா

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும்!
  அழகான முறையில் தொகுத்துள்ளீர்கள் பஸ்மின்!
  ஆரம்பத்திலிருந்தே செம கலக்கல்.
  பிரட்சனை முஸ்லிம் பெண்களிற்கில்லை. அவர்களை பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கும் பர்தா போபியாக்களின் கண்களில் தான் உள்ளது என்று தெளிவாக்கி விட்டீர்கள்!

  ReplyDelete
 16. மிகவும் அருமையானதொரு ஆக்கம் பாராட்டுகள் சகோதரி..

  முக்காட்டால் மூடியிருப்பது
  உடலையே தவிர
  மூளையை அல்லவே!

  முக்காடிட்டபடியே
  முன்னுக்கும் வருவோம்
  முழங்கால் கட்டாமல்
  முகம் நிமிர்த்தியும் நிற்போம்
  இறைவனின் துணையோடு..

  ReplyDelete
 17. நல்லதொரு பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 18. வலைக்கும் ஸலாம் வரஹ்
  அஸ்பா சகோ ஐஸாக்கல்லாகைரா

  ReplyDelete
 19. வலைக்கும் ஸலாம் வரஹ்
  அன்புடன் மலிக்கா சகோ ஐஸாக்கல்லாகைரா

  ReplyDelete
 20. சிட்டுக்குருவி :-

  நன்றி :)

  ReplyDelete
 21. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.ஃபஸ்மின்,

  //இஸ்லாம் எந்த விஷயத்தில் அவர்களின் சாதனையை ஒடுக்கியிருக்கிறது என சொன்னால் எனக்கும் தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்கும் :-)//
  அதே....அதே..... என்னமோ ஹிஜாப் இல்லாம இருந்தால் மட்டுமே அறிவாளியாக இருக்க முடியும் என பல 'அறிவாளிகள்????????' நினைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கெல்லாம் இந்த கட்டுரையை பிரிண்ட் செய்து 24 மணி நேரமும் கண் முன் வைக்க வேண்டும். அப்பொழுதும் புரிதலும், தெளிவும் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே...!!!! சுப்ஹானல்லாஹ். மிக நல்ல கட்டுரை சகோ.ஃபஸ்மின். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. வலைக்கும் ஸலாம் அன்னு

  ஐஸாக்கல்லாகைரா சகோதரி...

  ReplyDelete