அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு!
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே!
“பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை விட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்”
பச்சைப் பூண்டின் வாசனை பற்றிய மேற்கூறிய நபி மொழியும் அதனோடு ஒத்துப்போகும் மற்றும் அதனை மெய்ப்பிக்கும் அறிவியல் விளக்கம் பற்றியதே இப்பதிவு.
முதலில், எப்படி ஒரு பொருளின் வாசனையை நுகர்கிறோம் என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்:
பொருட்கள் வைக்கப்படும்போது அவற்றிலிருந்து சில இரசாயனக் கூறுகள் (odorent) வளியில் பரவுகிறது. அவை எமது மூக்கின் உட்பகுதியை போர்த்திக் கொண்டிருக்கும் மென்சவ்வினை அடைகிறது. அங்கேதான் ‘நுகர்வு வாங்கி’ எனப்படும் கலங்கள் உள்ளன. இரசாயன கூறுகள் இந்த நுகர்வு வாங்கிகளைத் தூண்டிவிடுகிறது. எனவே அங்கிருந்து நரம்பு கணத்தாக்கத்தின் மூலம் மூளையில் உள்ள ஒல்பெக்டரி கோர்டெக்ஸ் (olfactory cortex) எனும் பகுதிக்கு தகவல் அனுப்பப்படுவதால் மூளையால் அந்த வாசனையை நுகரக் கூடியதாக உள்ளது.
பொதுவாக எல்லாப் பொருட்களிற்கும் வாசனை உண்டு. என்றாலும் எம்மால் எல்லா வாசனையையும் நுகரமுடிவதில்லையே!??
இது ஏனெனில்,
ஒவ்வொரு பொருளில் இருந்தும் இரசாயனக்கூறு வெவ்வேறு அளவில் வெளிவிடப்படும். அதனால்தான் அவை வளிமண்டலத்தில் வெவ்வேறு செறிவுகளில் காணப்படுகிறது. ஆனால் அது குறித்த அடிப்படை செறிவைவிட அதிகமாக உள்ளபோது மட்டும்தான் அதை விலங்குகளால் நுகர முடிகிறது. அடிப்படை செறிவைவிட குறையும்போது நரம்புக் கணத்தாக்கம் இல்லாமல் போவதால் மூளைக்கு செய்தி அனுப்பப்படுவதில்லை.
வாசனையை அறிவதற்கு தேவையான ‘ஆகக் குறைந்த செறிவு மட்டம்’ (Threshold for olfaction) வெவ்வேறு விலங்கினங்களிற்கிடையிலும், அதேபோல வெவ்வேறு பொருட்களிற்கும் வித்தியாசப்படுகிறது. உதாரணத்திற்கு,
நாய்களிற்கு மனிதர்களைவிட நுகர்வு திறன் 2.5 log மடங்கு அதிகம். அதனாலேதான் மனிதனால் அடையாளம் காணமுடியாத மிகக் குறைந்த செறிவில் உள்ள வாசனைகளைக்கூட நாயால் அடையாளம் காணமுடிகிறது.
அதேபோல ஒரு குறித்த விலங்கினத்தை எடுத்தோமென்றால் வாசனையை அடையாளம் காணத் தேவையான threshold ஒவ்வொரு பொருட்களிற்கும் வேறுபடுகிறது. உதாரணமாக மனிதன் peppermint ஐ நுகர்வதற்கு அது வளி மண்டலத்தில் (குறைந்தது) 1 லீற்றரிற்கு 0.02mg என்ற அளவில் காணப்பட வேண்டும். அதேவேளை chloroform வாசனையை நுகரவேண்டுமெனில் அது ஆகக் குறைந்தது 1 லீற்றர் வளியில் 3.3mg அளவிற்கேனும் இருக்கவேண்டும்.
அதுபோலவே பொருட்களிற்கு அருகில் உள்ளபோது வாசனை அதிகமாகவும் தூரம் செல்ல செல்ல அது குறைந்து இல்லாமல் போவதையும் பார்க்கிறோம். இதற்கு கூட செறிவு வித்தியாசம்தான் காரணம். பரவும் இரசாயனக்கூறு பொருட்களிற்கு அருகில் அதிக செறிவிலும் அப்பால் பரவிச் செல்லும்போது செறிவு குறைந்துக் கொண்டே வந்து THRESHOLD விட குறையும் இடத்தில் வாசனை அற்றுப் போகும்.
“The olfactory thresholds for substances shown in table 14-1 illustrate the remarkable sensitivity of the odorant receptors. For example, methyl mercaptan, one of the substances in garlic, can be smelled at a concentration of less than 500 pg/L of air”
(“அட்டவணையில் காட்டப் பட்டுள்ள, பொருட்களை நுகர்தலிற்கான Threshold ஆனது (மூக்கிலுள்ள) நுகர்வு வாங்கிகளின் குறிப்பிடத்தக்க உணர்திறனை விவரிக்கிறது. உதாரணமாக பூண்டிலுள்ள மீதைல் மேர்கப்டன் எனும் கூறானது 500pg/L செறிவில் உள்ளபோதே நுகர முடிகிறது”)
ஒரு லீற்றர் வளியில் 500 pg (5*10-6 mg) ??????????
கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத மிக நுண்ணிய அளவு……
மீதைல் மேர்கப்டன் வியக்கத்தக்க அளவில் குறைந்த Threshold எல்லையை கொண்டிருந்தமையால் prof.Ganong ன் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, தன் நூலில் விஷேடமாக அவரை குறிப்பிடத் தூண்டிய அதே ‘பூண்டு’ எனும் வார்த்தை என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. மாஷா அல்லாஹ்!
சரி இதற்கும் இப்பதிவிற்கும் என்ன தொடர்பு... பார்ப்போம்!
ஆண்கள் பள்ளியிலே தொழவேண்டும் என்ற கட்டளையின் முக்கியத்துவம் காரணமாக பச்சைப் பூண்டு, பச்சை வெங்காயம் உண்டவர்கள் கட்டாயம் பல் துலக்கியே ஆக வேண்டியுள்ளது. இல்லையெனில் வீட்டை விட்டு வெளியிறங்கியது முதல், பாதையில் கடந்து செல்பவர்கள் உள்பட பள்ளிவாயிலில் உள்ள அனைவரிற்கும் தொந்தரவை ஏற்படுத்தியவராக கணிக்கப்படுவார். சின்ன விடயங்களில் கூட இஸ்லாம் தனி மனித உரிமை மீறலை எவ்வளவு அழகாக கண்டிக்கிறதென்பதை பாருங்கள்….அல்லாஹு அக்பர்!
அதே வேளை தொழுகை தூய்மையான நிலையில் நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும். எனவே பச்சையாக பூண்டு, வெங்காயம் உண்டால், உண்ட பின் பல் துலக்குவது ஒரு சுத்தமான நிலை என்று இஸ்லாம் கற்று தருகிறது.
சில மாற்று மத நண்பர்கள் உங்களிற்கு நற்பண்புகளை பெற்றோர் கற்றுத்தரவில்லையா? இஸ்லாம் தான் கற்றுத்தந்ததா? என்று அடிக்கடி கேட்பதை நாம் காண முடிகிறது. அவர்களில் எத்தனை பெற்றோர் இவ்வாறு பல் துலக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அரிதாகதான் இருக்கும். ஆனால் எங்களிற்கும், எம் பெற்றோரிற்கும் நற்பண்புகளை போதித்தது இஸ்லாம்தான்! அதற்காக பச்சைப் பூண்டு சாப்பிட வேண்டாம் என்று இஸ்லாம் தடை செய்யவில்லை. பச்சைப் பூண்டை சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் வாசனையை போக்க முடியும் என நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள்.
மேலும் வெங்காயம், பூண்டு என்பன பல மருத்துவக் குணங்கள் நிறைந்த, அவசியம் உண்ணவேண்டிய உணவுகள் என்பதாலோ தொந்தரவு கொடுப்பதாகினும் தடை செய்யப்படாமல் வாசனை போக்கிக்கொள்ள வழிமுறையை சொல்லப்பட்டது!!! :-)
எனவே, பூண்டு சமைத்து உண்ணுங்கள். பச்சையாக உண்டால் பல் துலக்க மட்டும் மறந்துவிடாதீர்கள் please…………………
இவ்விடயத்தை என்கவனத்திற்கு கொண்டு வந்த Dr.Mathani Sir (Katankudy,Srilanka) அவர்களிற்கு ஜஸாக்கல்லாஹு கைர்!
வஸ்ஸலாம்.
உங்களில் ஒரு சகோதரி,
அஷ்பா.

பூண்டு பற்றி அறிவியல்:
‘Ganong Review Of Medical Physoilogy’ என்பது prof. Ganong ஆல் எழுதப்பட்ட, மருத்துவப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, மருத்துவம் சார்ந்த கற்கைகளிற்காக உலகளாவிய ரீதியில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகம். இந்நூலில் prof.Ganong குறிப்பிட்டுள்ள ஒரு வசனத்தை அறிய நேர்ந்தபோது என்னால் ஆச்சர்யம் தாங்கவே முடியவில்லை. எனவே இதை எல்லோரிடமும் பகிரவேண்டும் என்ற ஆவல் என்னை தூண்டிவிட்டது.Some olfactory thresholds:
Substance | mg/L of air |
Ethyl ether Chloroform Pyridine Oil of peppermint Lodoform Butyric acid Propyl mercaptan Artificial musk Methyl mercaptan | 5.83 3.30 0.03 0.02 0.02 0.009 0.006 0.00004 0.0000004 |
“The olfactory thresholds for substances shown in table 14-1 illustrate the remarkable sensitivity of the odorant receptors. For example, methyl mercaptan, one of the substances in garlic, can be smelled at a concentration of less than 500 pg/L of air”
(“அட்டவணையில் காட்டப் பட்டுள்ள, பொருட்களை நுகர்தலிற்கான Threshold ஆனது (மூக்கிலுள்ள) நுகர்வு வாங்கிகளின் குறிப்பிடத்தக்க உணர்திறனை விவரிக்கிறது. உதாரணமாக பூண்டிலுள்ள மீதைல் மேர்கப்டன் எனும் கூறானது 500pg/L செறிவில் உள்ளபோதே நுகர முடிகிறது”)
ஒரு லீற்றர் வளியில் 500 pg (5*10-6 mg) ??????????
கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாத மிக நுண்ணிய அளவு……
மீதைல் மேர்கப்டன் வியக்கத்தக்க அளவில் குறைந்த Threshold எல்லையை கொண்டிருந்தமையால் prof.Ganong ன் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி, தன் நூலில் விஷேடமாக அவரை குறிப்பிடத் தூண்டிய அதே ‘பூண்டு’ எனும் வார்த்தை என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. மாஷா அல்லாஹ்!
சரி இதற்கும் இப்பதிவிற்கும் என்ன தொடர்பு... பார்ப்போம்!
பூண்டு பற்றி முஹம்மத் (ஸல்) அவர்கள் :
“'பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அநேக துர்மணம் கொண்ட உணவுகளின் வாசனை எம்மை உடனடியாக சூழவுள்ள ஓரிருவரால்தான் உணரக்கூடியதாக இருக்கும். ஆனால் 500 pg/L செறிவென்பது ஏறத்தாள வெள்ளைப் பூண்டு உண்டவர் உள்ள மண்டபம் முழுதும் நுகரப்பட்டு ஒரு வித சங்கடத்தை உருவாக்கிவிடும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); நூல்: புகாரி (855)
ஆண்கள் பள்ளியிலே தொழவேண்டும் என்ற கட்டளையின் முக்கியத்துவம் காரணமாக பச்சைப் பூண்டு, பச்சை வெங்காயம் உண்டவர்கள் கட்டாயம் பல் துலக்கியே ஆக வேண்டியுள்ளது. இல்லையெனில் வீட்டை விட்டு வெளியிறங்கியது முதல், பாதையில் கடந்து செல்பவர்கள் உள்பட பள்ளிவாயிலில் உள்ள அனைவரிற்கும் தொந்தரவை ஏற்படுத்தியவராக கணிக்கப்படுவார். சின்ன விடயங்களில் கூட இஸ்லாம் தனி மனித உரிமை மீறலை எவ்வளவு அழகாக கண்டிக்கிறதென்பதை பாருங்கள்….அல்லாஹு அக்பர்!
அதே வேளை தொழுகை தூய்மையான நிலையில் நிறைவேற்றப்படும் ஒரு வணக்கமாகும். எனவே பச்சையாக பூண்டு, வெங்காயம் உண்டால், உண்ட பின் பல் துலக்குவது ஒரு சுத்தமான நிலை என்று இஸ்லாம் கற்று தருகிறது.
சில மாற்று மத நண்பர்கள் உங்களிற்கு நற்பண்புகளை பெற்றோர் கற்றுத்தரவில்லையா? இஸ்லாம் தான் கற்றுத்தந்ததா? என்று அடிக்கடி கேட்பதை நாம் காண முடிகிறது. அவர்களில் எத்தனை பெற்றோர் இவ்வாறு பல் துலக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அரிதாகதான் இருக்கும். ஆனால் எங்களிற்கும், எம் பெற்றோரிற்கும் நற்பண்புகளை போதித்தது இஸ்லாம்தான்! அதற்காக பச்சைப் பூண்டு சாப்பிட வேண்டாம் என்று இஸ்லாம் தடை செய்யவில்லை. பச்சைப் பூண்டை சமைத்து சாப்பிடுவதன் மூலம் அதன் வாசனையை போக்க முடியும் என நபி (ஸல்) கூறியிருக்கிறார்கள்.
முஆவியா இப்னு குர்ரத்(ரலி) அவர்கள் தனது தந்தையிடமிருந்து கேட்டதாக அறிவிக்கிறார்கள்:
இரண்டு செடிகளைச் சாப்பிடுவதை விட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். மேலும் எவர் அவற்றை சாப்பிடுகிறாரோ அவர் தொழுமிடத்துக்கு (மஸ்ஜிதுக்கு) நெருங்கவேண்டாம் என்றும், அதனை சாப்பிடுவது யாருக்கு அவசியமாகிறதோ அவர் சமைப்பதின் மூலம் அவற்றின் வாடையை போக்கிவிடுமாறும் கூறினார்கள். அந்த இரண்டு செடிகள் வெங்காயமும், பூண்டுமாகும். ஆதாரம்: அபூதாவூத் (3331)
அறிவியலின் படி சமைப்பதன் மூலம் வாசனைக்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!
இவற்றிலுள்ள மீதைல் மேர்கப்டனில் அதிக எண்ணிக்கையில் டைசல்பைட்டு பிணைப்புகள் உள்ளமையினால் வெப்பத்திற்கு இலகுவில் ஆவியாகிவிடும் பண்பை கொண்டுள்ளது. எனவேதான் சமைக்கப்பட்ட வெள்ளைப்பூண்டில் இக்கூறுகள் அதிகளவில் ஆவியாகிவிட பெருமளவான துர்வாடை அற்றுப் போய்விடுகிறது. ஆக சமைக்கப்பட்ட பூண்டு எனில் சாப்பிட எத்தடையும் இல்லை! மேலும் வெங்காயம், பூண்டு என்பன பல மருத்துவக் குணங்கள் நிறைந்த, அவசியம் உண்ணவேண்டிய உணவுகள் என்பதாலோ தொந்தரவு கொடுப்பதாகினும் தடை செய்யப்படாமல் வாசனை போக்கிக்கொள்ள வழிமுறையை சொல்லப்பட்டது!!! :-)
எனவே, பூண்டு சமைத்து உண்ணுங்கள். பச்சையாக உண்டால் பல் துலக்க மட்டும் மறந்துவிடாதீர்கள் please…………………
இவ்விடயத்தை என்கவனத்திற்கு கொண்டு வந்த Dr.Mathani Sir (Katankudy,Srilanka) அவர்களிற்கு ஜஸாக்கல்லாஹு கைர்!
வஸ்ஸலாம்.
உங்களில் ஒரு சகோதரி,
அஷ்பா.
Tweet | ||||
மாஷா அல்லாஹ் நல்லகருத்துக்கள் ..,
ReplyDeleteஅதே அளவு கோல்தான் சிகரெட் , பீடி பிடித்து விட்டு தொழுகையில் கலந்து கொள்வதுக்கும் (என்னதான் வாய் கொப்பளித்தாலும் நிறைய பேருக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கி விடும் )உள்ள அளவு கோல் . அரேபியர்கள் சலாட் என்ற பெயரில் வெங்காயம் அதிகளவில் சேர்த்துக்கொள்வார்கள். அதுக்காகவே வெங்காயம் , பூண்டை குறிப்பிட்டு சொன்னது :-)
வலைக்கும் ஸலாம் வரஹ்...
ReplyDeleteமாஷா அல்லாஹ் .அருமையான பதிவுமா..
அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கு இஸ்லாம் முன்னோடி என்பதை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அஷ்பா
ReplyDeleteபதிவுலகில் உங்களின் முதல் பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் மருத்துவ அறிவியல் துறை சார்ந்த விஷயங்கள் அதிகம் அதிகம் பகிர வாழ்த்துகள்.
//தடை செய்யப்படாமல் வாசனை போக்கிக்கொள்ள வழிமுறையை சொல்லப்பட்டது!!! :-)//
ம்ம்... சரி தான்
அதனால் தீங்கு அதிகம் என நினைத்து ஹராம் ஆக்கியிருக்கலாம். ஆனால் தக்க காரணம் வழிமுறை இருப்பதால் அறிவுறுத்தியும், சமைத்து உண்ணுபடியும் பணிக்கப்பட்டுள்ளது :-)
மாஷா அல்லாஹ்
வாழ்த்துகள் அஷ்பா
என்னது பச்சையா பூண்டு சாப்டுட்டு ஆண்களை பள்ளிக்கு வரவேண்டாம்னு சொல்றாங்களா? அப்ப பொண்ணுங்கன்னா பரவாயில்லையா? ? பொண்ணுங்க எப்படி போனாலும் பரவாயில்ல... ஆண்கள் பெர்பெக்ட்டா இருக்கணுமா??? என்ன ஒரு ஆணாதிக்கம் இது??
ReplyDelete//
ஹி..ஹி..ஹி..
இப்படியெல்லாம் கமென்ட் வரும்! அதான் முன்னாடியே ரிசர்வேஷன் பண்ணிக்கிறேன் அவ்வ்வ்வ்
அஷ்பா...
ReplyDeleteஇஸ்லாத்தோட இணைந்த அறிவியல் விஷயங்கள் அதிகமா அதிகமா அதிகமா இருக்கு. அதையும் எங்களோட பகிர்வீங்கன்னு நம்புறேன் :-) அடுத்தடுத்த இஸ்லாம்-அறிவியல் கட்டுரைக்காக வெயிட்டீங்குறேன் :-)
வஸ்ஸலாம்
ஸலாம் சகோ அஸ்ஃபா...
ReplyDeleteபூண்டு,அது குறித்த மார்க்க அறிவியல் சார்ந்த விடயங்களை ஒரு சேரக் கொடுத்ததற்கு நன்றி...
பூண்டால் வரும் சில சங்கடங்களும்,அதன் உட் கூறுகளையும்,அது சார்ந்த இஸ்லாமிய கொள்கைகளையும் தெளிவாக முன்வைக்கும் கட்டுரையை அளித்துள்ளீர்கள்...
அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்கப் போதுமானவன்...
அன்புடன்
ரஜின்
சகோதரி அஷ்பா,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
A truly mind blowing article. A Stunner. Masha'Allah.
ஒரு விசயத்தை எப்படி அணுக வேண்டும் என்பதை அசத்தலாக கூறி இருக்கின்றது இந்த கட்டுரை. ஜசாக்கல்லாஹ்.
இஸ்லாமிய பெண்மணி தளத்தின் இத்தகைய கட்டுரைகள் மேலும் பல சகோதரிகளை எழுத ஊக்கபடுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.
வெவ்வேறு விதமாக, சுவாரசியம் குறையாமல் இஸ்லாமை எடுத்து கூறும் இந்த தளத்தின் வெற்றி தொடர வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்..
வஸ்ஸலாம்
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
மிக மிக தெளிவான பதிவு..பிரயோசனமான பதிவு இன்று பூண்டு பற்றிய தெளிவு கிடைத்து விட்டது...பகிர்வுக்கு நன்றி ஜசாக்கல்லாஹூ ஹைர் இன்ஷா அல்லாஹ் நாளை டொக்டர் அவர்களின் ஒரு பயான் நிகழ்ச்சியுள்ளது...அதற்குப்போய் வர துஆ செய்யுங்கள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்..பல அறியாத தகவல்கள் அஷ்பா..
அழகான எழுத்து நடை..முதல் பதிவு என்றால் நம்ப முடிய வில்லை..
அல்லாஹ் உங்களுக்கு நல்ல கல்வி அறிவை கொடுக்க என்னுடைய துவா..
நல்லதொரு பதிவுக்கு நன்றி..:))
@ ஆமினா அக்கா,
ReplyDelete//அதனால் தீங்கு அதிகம் என நினைத்து ஹராம் ஆக்கியிருக்கலாம். ஆனால் தக்க காரணம் வழிமுறை இருப்பதால் அறிவுறுத்தியும், சமைத்து உண்ணுபடியும் பணிக்கப்பட்டுள்ளது//
மிகச் சரியாக சொன்னீங்க. இஸ்லாம் வெறும் மதம் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கைக் கலை. மேலும் எச்சில் உமிழ்வதில் கூட எவ்வாறு ஒழுக்கம் பேண வேண்டும் என்றும் மற்றவர்கட்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதிலும் காட்டும் அக்கறையில் தொடங்கி சமையலில் கூட அழகான வழியை இஸ்லாம் எல்லோருக்கும் காட்டித்தருகிறது
//என்னது பச்சையா பூண்டு சாப்டுட்டு ஆண்களை பள்ளிக்கு வரவேண்டாம்னு சொல்றாங்களா? அப்ப பொண்ணுங்கன்னா பரவாயில்லையா? ? பொண்ணுங்க எப்படி போனாலும் பரவாயில்ல... ஆண்கள் பெர்பெக்ட்டா இருக்கணுமா??? என்ன ஒரு ஆணாதிக்கம் இது??//
ஆண்கள் என்று குறிப்பிட்டு அந்த ஹதீஸ்களில் வரவில்லை. பொதுவாக தான் சொல்லப்படுகிறது. ஆனால் பள்ளிக்கு செல்வது ஆண்களிற்கு கடமை என்ற அடிப்படையில் தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். பெண்கள் விரும்பினால் சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்து கொள்ள முடியும். ஆண்கள் நினைத்தாலும் வீட்டில் இருந்து விட முடியாதல்லவா?
"(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.
தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே பொதுவாக துர்வாடையான உணவுகளை உண்டு விட்டு மக்களுடன் உறவாட/ உரையாட செல்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் பூண்டு, வெங்காயத்தின் செறிந்த துர்வாடை, மற்றும் பள்ளியில் அல்லாஹ்வை வணங்குபவர்க்கு எவ்வகையிலும் இடைஞ்சல் தரக்கூடாது என்ற இரு முக்கியத்துவமான காரணங்களினால் ரிக்வஸ்டுடன் நின்று விடாது மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன். அல்லாஹ் தான் அறிந்தவன்.
கருத்திற்கும், வாழ்த்துகளிற்கும், உதவிக்கும் மற்றும் இடைவிடாத ஊக்கத்திற்கும் ஜஸாக்கல்லாஹு கைர் சகோதரி!
//ஆண்கள் என்று குறிப்பிட்டு அந்த ஹதீஸ்களில் வரவில்லை. பொதுவாக தான் சொல்லப்படுகிறது. //
ReplyDeleteஆஹா...
அந்த கமென்டை சீரியஸ்ஸா எடுத்துக்காதீக :-) சும்மா கலாய்ச்சேன் ஹா...ஹா..ஹா...
i know :-) :-) :-)
@ சகோ ஜெய்லானி,
ReplyDeleteஉண்மைதான் சகோ! முஹம்மத் நபி (ஸல்) எல்லா விடயங்களிற்கும் எமக்கு ஒரு சிறந்த வழி காட்டியாக இருந்துள்ளாங்க.
"(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.
தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
@ பஸ்மின் கபீர்,
ReplyDeleteடாக்டர். ஸாகிர் நாயக் சொல்வது போல இஸ்லாத்தை விளக்குவதற்கு இப்போதுள்ள அறிவியல் போதாதென்பது தான் உண்மை.
வாழ்த்துக்கு ஜஸாக்கல்லாஹு கைர் சகோதரி
@ சகோ ரஜின்,
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
வருகைக்கும் கருத்திற்கும் ஜஸாக்கல்லாஹு கைர்.
//அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்கப் போதுமானவன்// ஆமீன்!
ஜஸாக்கல்லாஹு கைர்
@ சகோ ஆஷிக் அஹமத்,
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
//இந்த தளத்தின் வெற்றி தொடர வேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்..// ஆமீன்
வாழ்த்துகளிற்கும், ஊக்கத்திற்கும், துஆவிற்கும் ஜஸாக்கல்லாஹு கைர்
@ Aayusha begum sister,
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
//அழகான எழுத்து நடை..முதல் பதிவு என்றால் நம்ப முடிய வில்லை..//
ஹி..ஹி..இங்குள்ள சில சகோதரிகளின் சென்சார் உதவியுடன் பதியப்பட்டது என்பதே உண்மை.
பிழைகளை சுட்டிக்காட்டி திருத்திக்கொடுத்து உதவி செய்த சகோதரிகளிற்கு ஜஸாக்கல்லாஹு கைர்
//அல்லாஹ் உங்களுக்கு நல்ல கல்வி அறிவை கொடுக்க என்னுடைய துவா// ஆமீன்!
வருகைக்கும் கருத்திற்கும் துஆவிற்கும் ஜஸாக்கல்லாஹு கைர் சகோதரி!
@ சிட்டுக்குருவி,
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் ஜஸாக்கல்லாஹு கைர்!
நான் அப்போதே துஆ செய்து விட்டேன்! :)
Prophet mohamed past life is merchant, he is not educated, how is possible, how to know,
ReplyDeletehe is not poet, how to write lovely poem in al-quran,
he is not scientist, how to present science secret in al-quran,
he dont know past history, how to present past history very clearly in al-quran,
al-quran is not medical book, not law book, not science book, not history book, not chemical book, not biology book, not research book, etc......
How to tell mohamed? Just think non-muslim people,
u find the answer,
how to get perfect and correct answer in al-quran, can't present mistake in al-quran,
al-quran is not mohamed words thats god words.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ.அஷ்பா மவுலானா,
மிக அருமையான ஆக்கம் சகோ..! எனக்கு சில செய்திகள் மிகவும் புதிது. கெட்ட வாசனை என்பதால்தான் நபி ஸல்... அவர்கள் அந்த பச்சை பூண்டு & பச்சை வெங்காயத்தை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு வர தடுத்து இருக்கிறார்கள் என்ற அளவிற்கு மட்டுமே தெரியும். மற்ற வாசனை செறிவு பற்றியன முற்றிலும் வித்தியாசமான புதிய செய்தி எனக்கு. ஜசாக்கல்லாஹு க்ஹைர்.
பூண்டுக்கு முக்கியத்துவம் தந்துவிட்டு, ஏனோ... வெங்காயத்தை பற்றி பதிவில் சொல்லாமல் விட்டு விட்டீர்கள்..! அதுவும் அதே கேட்டகரிதான்..!
நான் கல்லூரியில் வேதியியல் மாணவன் என்பதால்... Sulphur compound ஆன Mercaptan (-thiol)பற்றி ஓரளவு தெரியும். கெட்ட வாடை தரும் மீதேன் தையால் (மெத்தைல் மர்கப்டன்) பூண்டில் இருக்கிறது என்பதை பதிவில் சொல்லி உள்ளீர்கள். மிகவும் சரி.
ஆனால், இதே கெட்ட வாடைக்கு காரணமான 'மர்கப்டன் குடும்பத்தை' சேர்ந்த Allyl Mercaptan தான் வெங்காயத்தில் உள்ளது..! அதுவும் பயங்கர செறிவு கொண்டதுதான். ஆக மொத்தம் மோசமான வாசனைக்கு காரணம் மர்கப்டன்கள் தான்..! அவை இருக்கும் இரண்டும் தடை செய்யப்பட்டுள்ளது..!
இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது..! இந்த பூண்டு & வெங்காயம் பச்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளோருக்கு... சாப்பிட்டு விட்டு தொடர்ந்து பல்துலக்காமல் விட்டால்... physiologic halitosis என்ற நோய் வருமாம்..!
http://www.herbsandcures.com/blog/2010/07/18/halitosis-or-bad-breath/
மாஷா அல்லாஹ் .. வாழ்த்துக்கள்
ReplyDelete@ rahmanfayed,
ReplyDeleteThat's true brother! it is admirable to read Qur'an and lifestyle of our prophet. I feel sorry for those who don't realize the true taste of Islamic theories.
May Allah show us the straight path!
@ சகோ சிட்டிசன்- முஹம்மத் ஆஷிக்
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
" For example, methyl mercaptan, one of the substances in garlic, can be smelled at a concentration of less than 500 pg/L of air"
என்ற வசனத்தினால் தூண்டப்பட்டு உருவான பதிவு என்பதால் பூண்டிற்கு மட்டும் முக்கியத்துவம் தந்திருந்தேன்.
உங்கள் மேலதிக தகவல்களும் விளக்கங்களும் நிச்சயமாக சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
ஜஸாக்கல்லாஹு கைர்!
மாஷா அல்லாஹ்,,,,நல்ல தகவல்....
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteநல்ல கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்கள் பணி சிறக்க உங்கள் தளத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்,பயனுள்ள தகவல்களை தந்தமைக்கும் நன்றி.என் தளத்திற்கும் வாங்க...
எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com
அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.அஷ்ஃபா,
ReplyDeleteமன்னிச்சுக்குங்க. நிறைய தாமதம் ஆகிடுச்சு, கமென்ட் எழுத :(
பதிவுகளை உடனேவும் படிக்க முடிவதில்லை. ப்ளீஸ்....ஸாரி :(
இந்த பதிவை ப்ரிவியூ பார்க்கும் போதிருந்தே என்னுள் ஆவலும் ஆர்வமும் போட்டி போட்டு என்னை ஸ்தம்பிக்க வைத்தது என்றால் மிகையல்ல. எளிய ஹதீத்'தான் என்றாலும் எந்தளவு அறிவியலுடன் போட்டி போட்டு நிற்கின்றது என்றெண்ணும்போது........ மாஷா அல்லாஹ்..... அல்ஹம்துலில்லாஹ்.
//இல்லையெனில் வீட்டை விட்டு வெளியிறங்கியது முதல், பாதையில் கடந்து செல்பவர்கள் உள்பட பள்ளிவாயிலில் உள்ள அனைவரிற்கும் தொந்தரவை ஏற்படுத்தியவராக கணிக்கப்படுவார். சின்ன விடயங்களில் கூட இஸ்லாம் தனி மனித உரிமை மீறலை எவ்வளவு அழகாக கண்டிக்கிறதென்பதை பாருங்கள்….அல்லாஹு அக்பர்!//
உண்மை! உண்மை!! உண்மை...!!!
சுப்ஹானல்லாஹ்.... நல்லதொரு பகிர்வை தந்தமைக்கு மிக நன்றி சகோ.
ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.