இஸ்லாமியப் பெண்ணே!
என்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்?
எதற்கு விழுகிறாய் துன்யா மோகத்தில்?
குருவிக்கும் கூட்டுக்கும்
காட்டுக்கும் மேட்டுக்கும்
வானுக்கும் மண்ணுக்கும்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அனைத்துக்கும் இறைவன்
அழகாய் வகுத்துவிட்டான்
வாழ்வியல் வழிமுறையை!
வாழ வழிவகுத்த
வாழ்வியல் மார்க்கம்,
நேர்மையை கடைபிடிக்கும்
நெறிகொண்ட மார்க்கம்,
தூய்மையை கற்றுத்தரும்
தூய மார்க்கம்,
அறியாமை அகற்றும்
அரிய மார்க்கம்,
அதற்கு அஞ்சி அடிபணிந்தால்
அதுவே காட்டும் நேர்வழியென்னும்
அழகிய சொர்க்கம்!
நேர்வழி செல்வதற்க்கும்
வழிகெட்டுப்போவதற்க்கும்
வித்தியாசங்களை
விபரித்த பின்பும்!
நன்மைக்கும் தீமைக்கும்
பகுத்தறியும் தன்மையை
கற்பித்த பின்பும்!
கல்நெஞ்சம் கொண்டு
கரைபடியத் துடிக்கும்
மானிடவர்க்கமாக
மாறுவதோ பெண்மை!
எதிராளி முன்னே -பலசாலியாக
எதிர்கொண்டு போரிட முடியாத வீரன்
புறமுதுகுகாட்டி ஓடுவது போல!
இஸ்லாத்தின் நெறியில்
இல்லாத வழியில்
இச்சைகள் கொண்டு
இணங்குவது முறையோ?
ஈமானில் உறுதி இல்லாது போக
ஈரமற்ற நெஞ்சாய்
ஈனமாய் வாழ்வதுதான் சரியோ?
வெளியுலகை நோக்கு
வெற்றியை இலக்காக்கு-தூய
எண்ணங்களைக் கொண்டு
தோல்விகளை தூளாக்கு!
இறைக்கு அஞ்சி நட
இகழ்ச்சிக்கும் அஞ்சி நட!
விழிப்புணர்வோடு இரு!
வீண் விபரீதங்களை
விழி'புணர்வ'திலிருந்தும்
விழிப்புணர்வோடு இரு
சமூகத்தில் சத்தான விதைகளை தூவு!
வழியெங்கும் முளைக்கட்டும்
சத்திய சன்மார்க்கத்தின் பூவு..
டிஸ்கி: இக்கவிதை 12-5-2012 அன்று முத்துப்பேட்டையில் நடைபெற்ற பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாட்டில் இன்ஷியா என்ற மாணவியால் வாசிக்கப்பட்ட எனது கவிதை.
இறைவா!
உன்னையே நாங்கள் உறுதியாய் வணங்குகிறோம்
உன்னிடம் மட்டுமே உதவியை கேட்கிறோம்.
**************************
**************************
சொல்விளக்கம்
ஈமான் - உறுதியான இறை நம்பிக்கை
துன்யா- இம்மை உலகம்Tweet | ||||
வாவ்...வாவ்....அருமையான கவிதை... மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.....
ReplyDeleteஇஸ்லாமிய பெண்மனியில் உங்கள் ஆரம்பமே அமர்க்களமாய் இருக்கிறது மலிக்கா(இப்ப பேர சரியா சொல்றனா????? ஹா..ஹா..ஹா...)
தொடரட்டும் உங்கள் நற்பணி....
ம்ம் சரியா சொல்லிட்டீங்க என் பேரை..
Deleteபடிங்க படிங்க இப்பவும் படிங்க..
சலாம் சகோ மலிக்கா,
ReplyDeleteமுத்துப் பேட்டை பெண்கள் இஸ்லாமிய மாநாட்டில் உங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி(முதல் முறையாக) செவ்வனே முடிந்ததா????
எனி காமெடீஸ்????? அவ்வ்வ்வவ்வ்வ்......
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteமலிக்கா
சொல்ல வார்த்தையே இல்ல...
மாஷா அல்லாஹ்
கலாச்சார சீரழிவால் தடம் மாறும் இன்றைய நவநாகரிக மங்கைகளுக்கான விழிப்புணர்வு கவிதை அருமை. தொடரட்டும் உங்கள் பணி
@சிராஜ்
ReplyDeleteமொக்க வாங்க போறீங்க :-)
மலிக்காக்கா விடியோ அப்லோட் பண்றேன்னு சொல்லியிருக்காங்க இன்ஷா அல்லாஹ்
(ஆமா மெனக்கெட்டு லிங்க் கொடுத்தாங்களே! பாக்கலையா? சனிகிழமை லீவ் தானே? - மலிக்கா என்னான்னு கேளுங்க :-)
சிராஜ் said...
ReplyDeleteவாவ்...வாவ்....அருமையான கவிதை... மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.....
இஸ்லாமிய பெண்மனியில் உங்கள் ஆரம்பமே அமர்க்களமாய் இருக்கிறது மலிக்கா(இப்ப பேர சரியா சொல்றனா????? ஹா..ஹா..ஹா...)
தொடரட்டும் உங்கள் நற்பணி....
இப்படியெல்லாம் சொல்லி ரணகளமாக்கவா ஹா ஹா
இன்ஷாஅல்லாஹ் இறைவனின் நாட்டத்தோடு எனக்கு தெரிந்த இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்ட அனைத்தையும் அறியாதவர்களுக்கு எத்திவைப்பேன்.இன்னும் பலவற்றை அறியாத நானும் அறிய முற்ப்படுவேன் இன்ஷாஅல்லாஹ் நிச்சயமாக/
ஆத்தாடி அப்பவாவது சரியா சொன்னியளே ஹி ஹி
என்னது லைவ் பார்க்கலையா போங்கப்பா. உங்க கூட டுக்கா.. [நல்லவேளை பார்க்கவில்லை ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி ஹோ ஹோ]
சலாம் சகோ மலிக்கா,
ReplyDeleteமுத்துப் பேட்டை பெண்கள் இஸ்லாமிய மாநாட்டில் உங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி(முதல் முறையாக) செவ்வனே முடிந்ததா????
எனி காமெடீஸ்????? அவ்வ்வ்வவ்வ்வ்...//
வலைக்குமுஸ்ஸலாம் சகோ
முதல் தொகுப்பல்ல இது இராண்டாம் முறை முதல் முறை உ வே சாவின் 8 வது இலக்கிய மாநாட்டுக்கு தொகுத்து வழங்கினேன்..
//எனி காமெடீஸ்????? அவ்வ்வ்வவ்வ்வ்.//
அதெல்லாம் நிறைய இருக்கு பதிவபோடுவமுல்ல..
ஆமினா said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மலிக்கா
சொல்ல வார்த்தையே இல்ல...
மாஷா அல்லாஹ்
கலாச்சார சீரழிவால் தடம் மாறும் இன்றைய நவநாகரிக மங்கைகளுக்கான விழிப்புணர்வு கவிதை அருமை. தொடரட்டும் உங்கள் பணி //
வலைக்குமுஸ்ஸலாம் ஆமினா
நம்மவர்களுக்குள்ளே கலையவேண்டிய களையெடுக்கவேண்டி நிறைய களைகள் இருக்கு அதை முதலில் செவ்வன செய்யலாமென நினைக்கிறேன் இன்ஷாஅல்லாஹ் .
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே
ReplyDeleteகவிதை கட்டுரையேன இஸ்லாமிய பெண்மணி ஜொலிக்கிறார் வாழ்த்துக்கள்
ஆமினா said...
ReplyDelete@சிராஜ்
மொக்க வாங்க போறீங்க :-)
மலிக்காக்கா விடியோ அப்லோட் பண்றேன்னு சொல்லியிருக்காங்க இன்ஷா அல்லாஹ்
(ஆமா மெனக்கெட்டு லிங்க் கொடுத்தாங்களே! பாக்கலையா? சனிகிழமை லீவ் தானே? - மலிக்கா என்னான்னு கேளுங்க :-) //
அதானே லிங்கெல்லாம் கொடுத்து பார்க்கசொன்னா பார்க்காமல் கமெண்ட் வேறயா என்னாஆஆஆஅ ஒரு லொள்ளு.
சிராஜ் லைவ் பார்க்காம இருந்ததுக்கு இந்த பதிவுக்கு
100000. கமெண்ட் போடவும் எப்புடி ஆமி நம்ம பனிஸ்மெண்ட்...ஹா ஹா
ஹைதர் அலி said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே
கவிதை கட்டுரையேன இஸ்லாமிய பெண்மணி ஜொலிக்கிறார் வாழ்த்துக்கள் .//
வாங்க சகோ எல்லாம் அவன் செயல் ..
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி..
அழகான கவிதையில் ஜொலிக்கிறாள் எங்கள் இஸ்லாமிய பெண்மணி..
ReplyDeleteஓ.. எழுதியது மலிக்காவா.. ரொம்ப நல்லாருக்கு. அருமையான சிந்தனையூட்டும் வரிகள்.
தொடரட்டும் இஸ்லாமிய பெண்மணி
கடைசி வரிகள் பிரமாதமாக சொல்லப்பட்டுள்ளது..
ReplyDeleteவிழிப்புணர்வோடு இரு!
வீண் விபரீதங்களை
விழி'புணர்வ'திலிருந்தும்
விழிப்புணர்வோடு இரு//
அருமையான வரிகள்
அப்புறம் எல்லோரும் சுகமா இருக்கிறயள் தானே...??
ReplyDeleteஅவ்வளவும் போதும்
சலாம் மலிக்கா!
ReplyDeleteவழக்கம்போல உங்கள் கைவரிசையைக் (கவிதையில்) காட்டிவிட்டீர்கள், மாஷா அல்லாஹ்! எங்களோடு தோள் கொடுப்பதற்கு ஜஸாகல்லாஹ் தோழி :)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ்..நல்ல விழிப்புணர்வூட்டும் கவிதை.. உங்கள் பாணியில்..:-)
அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ..:-))
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ் ..அற்புதமான வரிகள் சகோ
"சமூகத்தில் சத்தான விதைகளை தூவு!
வழியெங்கும் முளைக்கட்டும்
சத்திய சன்மார்க்கத்தின் பூவு.."
கிரேட்
அருமையான கவிதை சகோ. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....
ReplyDeleteமாஷா அல்லாஹ் மிக அருமையான கவிதை. புரிந்துக்கொள்ள மிக எளிமையாகவும் இருக்கின்றது. ஜசாக்கல்லாஹ்.
வஸ்ஸலாம்.
யக்கோவ் சும்மாவே கலக்குவீங்க இதுல பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடுன்னா கேட்கவா வேனும்...!!!. சூப்பர் :-)
ReplyDeleteமாநாட்டில நீங்க வாசிக்கலையா..? :-))
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteபெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாட்டிற்கு
உகந்த கவிதை...!
//விழிப்புணர்வோடு இரு!
ReplyDeleteவீண் விபரீதங்களை
விழி'புணர்வ'திலிருந்தும்
விழிப்புணர்வோடு இரு//
அஸ் ஸலாமு அலைக்கும் மலிக்காக்கா,
அருமையான, ஆழமான வரிகள். நெஞ்சை சுடும் எண்ணங்கள் உங்களின் கவிதை எங்கிலும் தெறித்துள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ் :))
கருத்துகள் தந்த அனைத்து நல நெஞ்சங்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.. உங்கள் அனைவரின் ஒத்துழைப்புகளையும் என்றும் வேண்டும் அன்புடன் மலிக்கா
ReplyDelete//மாநாட்டில நீங்க வாசிக்கலையா..? :-)) //
ReplyDeleteஅண்ணாத்தேஏஏஏஏஎ
வாசிக்கவில்லை ஆனால் வாசிக்கப்பட்டேன்
என் கவிதைகளின்
வாயிலாக பல மாணவிகளின் வழியாக..
என்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்!.... என்ற தலைப்பில் கவிதையுருவில் நமது இனிய மார்க்கத்தை அழகாகச் சித்தரித்திருக்கிறீர்களே?...மாஷா அல்லாஹ்!...ஒவ்வொரு வரிகளும் பொன் எழுத்துக்களால் பதியப்படக்கூடியவை!..அன்புச் சகோதரி மலிக்கா!....உங்களது முயற்சி மேன்மேலும் தொடர வல்ல அல்லாஹ்!... துணைபுரிவானாக!.. அல்ஹம்துலில்லாஹ்!...
ReplyDeleteஆமீன் .. மிக்க நன்றி சகோதரி. அது சித்தரிப்பு அல்ல சகோதரி உணர்வு மார்க்கத்தின் உண்மை... தங்களின் அன்புக்கும் துஆவிற்க்கும் மிக்க நன்றி
Deleteமன்னிக்கவும் ரொம்ப லேட்டா பதிலிட்டமைக்கு மீண்டும் மன்னிக்கவும்...
Delete