Tuesday, May 29, 2012

சாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை

சாதித்ததெல்லாம் மேலைத்தேய பெண்கள் தானா? இல்லை சாதனை வரலாற்றில் பதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில் முஸ்லிம் பெண்களுக்கு என்ன இடம் என்று யோசிப்பவர்களுக்கு தான் இந்த பதிவு.
சாதனை என்றால் கிலோ எவ்வளவு கேட்பவர்கள் என்றா முஸ்லிம் பெண்களை நினைத்தீர்கள்? இல்லை முக்காட்டிற்குள் முடங்கி கிடக்கும்  முல்லை பூக்கள் என்று நினைத்தீர்களா?.அடுப்படியில் கருகி போகும் கரித்துண்டுகளா நாங்கள்? உரிமைகள் எதுவும் இன்றிய கானல் நீர் வாழ்க்கையா எங்கள் வாழ்க்கை? அனைத்திற்கும் பதில் சொல்லும் பின்வரும் பதிவு
யார் சொன்னார்கள் முஸ்லிம் பெண்கள் சாதிக்கவில்லை என்று.. அவர்களுக்கெல்லாம் இது வெறும் சாம்பிள் தான்...

எந்த துறையை எடுத்தாலும் இன்று எங்கள் பெண்கள் சாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.விஞ்ஞானம், கலை, வர்த்தகம், உளவியல், சமூக அபிவிருத்தி என இவர்களின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.இவ்வாறு சாதித்த முஸ்லிம் பெண்கள் தொடர்பான தரவுகளை நீங்கள் அறிய இந்த பதிவு.
மத்திய கிழக்கில் அண்மைய அபிவிருத்திகளில் பெண்களின் பங்கு குறித்துக் குறிப்பிட்ட, பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வரும் பாரசீக மொழியும் இலக்கியமும் விருத்திக்கான நிலையத்தின் போதனாசிரியர் நஸ்ரியான், 'ஈரானிய பெண்களின் சாதனைகள், உலகின் முஸ்லிம் பெண்களுக்கான சிறந்த முன்மாதிரியாகும்' என்றார்.

read more "சாதனைகள் முஸ்லிம் பெண்களுக்கும் தடையில்லை"

Tuesday, May 22, 2012

நபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு!
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே!



  “பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை விட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்
 
பச்சை
ப் பூண்டின் வாசனை பற்றிய மேற்கூறிய  நபி மொழியும் அதனோடு ஒத்துப்போகும் மற்றும் அதனை மெய்ப்பிக்கும் அறிவியல் விளக்கம் பற்றியதே இப்பதிவு.

முதலில், எப்படி ஒரு பொருளின் வாசனையை நுகர்கிறோம் என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம்:



read more "நபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்!"

Wednesday, May 16, 2012

இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!!


"சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்."

இப்புடி பாடப்புத்தகத்துல அச்சடிச்சு சாதி இல்லன்னு குழந்தைகளுக்கு பாடம் சொல்ற அதே அரசாங்கம்தான் சாதி வாரியா உங்களை பதிஞ்சுக்கங்க அப்போதான் இட ஒதுக்கீடு கெடைக்கும்ன்னும் சொல்றாங்க...!!

read more "இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா....!!!!"

Sunday, May 13, 2012

என்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்?



இஸ்லாமியப் பெண்ணே!
இஸ்லாமியப் பெண்ணே!
என்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்?
எதற்கு விழுகிறாய் துன்யா மோகத்தில்?

குருவிக்கும் கூட்டுக்கும்
காட்டுக்கும் மேட்டுக்கும்
வானுக்கும் மண்ணுக்கும்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அனைத்துக்கும் இறைவன்
அழகாய் வகுத்துவிட்டான்
வாழ்வியல் வழிமுறையை!

read more "என்ன இல்லை நம் இனிய மார்க்கத்தில்?"

Thursday, May 10, 2012

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

 "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)

இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!

பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்? உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..? இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே?? என்பது..! இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது..!உண்மையில் இஸ்லாத்தில் அப்படி பட்ட கருத்து சொல்ல பட்டு இருக்கிறதா என்றால் இல்லை இல்லை என்ற ஆணித்தரமான பதிலை தான் நாம் தர வேண்டி இருக்கிறது ..

அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கொள்ளலாம்.
மேலும்..
எம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.


 " ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)

"மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர" உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.அல்குர்ஆன் (58 : 11)

அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.அல்குர்ஆன் (2 : 269)

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)

மேற்காணும் குர்ஆன் வசனங்கள். மற்றும் ஹதீஸ்கள் கல்வியின் சிறப்பையும் அது இரு பாலாருக்கும் பொதுவானது என்பதையும் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி நிருபிக்கின்றன...!!! மேலும் பத்ரு போர்க்களத்திலே சிறைக்கைதியாகப் பிடிபட்ட ஒவ்வொரு கைதியும் விடுதலையாவதற்கான விலையாக மக்களில் பத்து பேருக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது வரலாற்றில் நாம் அறிந்த ஒன்றே!




அக்காலத்திய இஸ்லாமிய பெண்கள் பற்றி சில :
சஹாபிய பெண்களின் அறிவு திறன் பிரமிக்க வைக்கிறது .அவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள் ..
ஒருமுறை ஒரு சஹாபிய பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்பது இஸ்லாம் பெண் கல்வியை தடுக்கிறது என்று கூப்பாடு போடும்... ஒரு சிலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.. ( எப்புடி தெரியும்? இந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உங்க கண்ணுல படாது.. அப்புடியே பட்டாலும்,.. கண்டும் காணாம.. இஸ்லாதுல வேற எதைபத்திடா குறை சொல்லலாம்னு மட்டும்தானே யோசிப்பீங்க?? )
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை 2210 ஹதீஸ்கள் ஆகும்.(((நாயகம் (ஸல்) அவர்கள் தன் மனைவி கல்வி அறிவில் சிறந்து இருப்பதை தடை செய்யவில்லை . இதுலேயே புரிஞ்சி இருக்கும் இஸ்லாமியர்களின் ஆணாதிக்கம்..(???????!!!!!!!) ))
அலீ (ரலி) அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார்..அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.

பாக்தாத்தில்வாழ்ந்த ஷெய்கா சுஹதாஅவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.


இது எல்லாவற்றுக்கும் மேலாக பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான \, முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய   நானா அஸ்மா என்ற புரட்சிப்பெண்... !!

இவ்வாறு வாழ்வில் பல்வேறு துறைகளில் கற்று தேர்ச்சி பெற்று ஜெயித்து காட்டிய இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை வரையறுத்து இவ்வளவு தான் என்று அறிதியிட்டு கூற முடியாது.. கல்வியின் மூலமாக அவர்கள் சமூகத்திலும் அவர்களால் முடிந்த பல்வேறு பணிகளை மார்க்கத்தின் வரைமுறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்..

உலகில் வேறு எந்த மதமோ,அல்லது சமுதாயமோ வழங்கிராத சிறப்பும்,மதிப்பும்,மரியாதையும்,கண்ணியமும்,உரிமையும்,இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு ..இதில் கல்வி கற்பது மட்டும் எப்படி விதி விலக்காகும்..? இங்கு கல்வி கற்பதில் ஆண் என்றும் பெண் என்றும் எந்த பேதமும் இல்லை..! ஆணுக்கு கல்வி கற்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு சம உரிமை பெண்களுக்கும் உண்டு!. குர் ஆனில் எங்கும் பெண்கல்வியை மறுத்த்தற்கான வசனம் இருக்காது. அதே போல மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் எந்த இடத்திலும் பிரித்து காட்டப்பட வில்லை.மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே உலக வாழ்க்கைக்கு தேவையான கல்வி தான். இந்த சம உரிமை சட்டம் 7வது நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம்  ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கிவிட்டது.
ஓதுவீராக! மேலும் உன் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்று கொடுத்தான்!'' (96;3-5)
இந்த வசனத்தில் ஓதுவீராக என சொன்னது ஆண் பெண் என இருவருக்கும் தான் .மார்க்கத்தில் பொதுவாக எது ஒன்றையும் குறிப்பிட்டு சொன்னால் அது இரு பாலாரையும் குறிக்கும்..ஆணுக்கு என்றும் அல்லது பெண்ணுக்கு என்றும் என தனித்தனியாக சொல்ல வேண்டும் என்றால் அது பிரத்தியேகமாக குறிப்பிட பட்டிருக்கும்.கல்வி கற்பதில்ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என எதுவும் கிடையாது..ஆனால் பெண் என்பதால் அவளின் பாதுகாப்பு கருதி மார்க்கம் அனுமதிக்க பட்ட விதத்தில் கல்வி கற்க வேண்டும். கோ-எஜுகேஷன்! இதை மட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்... இதை தவிர அவர்களுக்கு வேறு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட வில்லை.. !!

மார்க்கத்தில் சொல்ல பட்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள் என்பது..
அதன் படி நாம் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து தெளிவு பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் கட்டாயம் கல்வி அறிவு அவசியம்.இதில் எந்த வித பேதமும் இல்லை. நன்கு கல்வி கற்ற ஒருவரால் தான் சரி எது தவறு எது என்பதை நன்கு சீர் தூக்கி பார்க்க முடியும். ஆக பெண்கல்வியை மறுத்து அறிவை மழுங்க செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எப்படி நம் இபாதத்துகளை நிறைவேற்றுவது கட்டாய கடமையோ அதே போல கல்வி கற்று தன் அறிவை மேம்படுத்தி கொள்வது கட்டாய கடமை ஆகும்..!!
எந்த ஒரு சமூகமும் அதன் தனித் தன்மையோடு மேலே எழும் போது அங்கு ஆண் பெண் சார்ந்த பணிகள் ,கடமைகள் ,தேவைகள் அவசியமான ஒன்று ..இதற்கு அடிப்படையாக இருந்து அதை மேம்படுத்தி செம்மைபடுத்துவதற்க்கு கல்வி அறிவு அவசியம் ..இதில் எந்த ஆண் பெண்  விதிவிலக்கில்லை ..அதிலும் எந்த சமுதாயத்தில் பெண்கள் அறிவோடும் பண்பாடோடும் செயல்பாடோடும் இருகின்றார்களோ அந்த சமுதாயம் மிக நல்லதொரு சமுதாயமாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..!!தன் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்தோடு சரி தவறுகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு ஆண்களை விட பெண்களிடம் தான் உள்ளது...!  எனவே பெண்கல்வி அவசியம் என்பதை இஸ்லாத்தில் பல இடங்களில் உணர்த்தப்பட்டு உள்ளது..!

முஸ்லிம்களில் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களுமே கூட சரியான முறையில் மேற்கல்வியை தொடர்வதில்லை என்பதுதான்  நிதர்சனமான உண்மை..!!!
ஏன் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்க வில்லை என்றால் அவர்களின் அறியாமையையும் கல்வி பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததும் தான் காரணமே தவிர இதற்கு மார்க்கம் ஒருநாளும் காரணமாக இருக்க முடியாது.. !!!

மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் காரணத்தினால் கல்விபயிலும் வயதிலேயே கல்வியை தூர தூக்கியெறிந்து குடும்ப சுமையை ஏற்கவேண்டியிருந்தது. ஆண்களின் குறைவான கல்விதகுதியை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்ததன் விளைவே இன்றைய இஸ்லாமிய சமூகம் கல்வியில் பின் தங்கிய நிலைக்கு காரணமாக அமைகிறது. அது போக பழமையின் பிற்போக்குதனத்தில் ஊறிய முந்தைய தலைமுறைகள்  சமுதாயத்தோடு ஒன்றாய் கலந்துவிட்ட பெண்ணடிமைத்தனத்தை இஸ்லாத்திலும் இஸ்லாத்தின் பெயரை கொண்டு ஒடுக்க நினைத்தனர். அதன் விளைவாக பெண்கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ்குர் ஆனும்  படிப்பதும் அரிது, மார்க்க கல்வியை சரியாய் செயல்படுத்துபவர்களும் குறைவு. எனவே பெண்கல்வி மறுப்பு என்பது தட்டிகேட்கப்படாமலேயே  இருந்தது.  ஆனால் இன்று காலம் மாறிவிட்டது.  1986க்கு பிறகு  தமிழகத்தில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெண்களின் கல்வி விகிதமும்  கூடிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் தன் சமுதாயத்தை கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறனர் என்பதே நிதர்சன உண்மை....!!

மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் தனி தனியாக ஒன்று இல்லை என்பதையும் இதில் ஒன்று இருந்து ஒன்று இல்லையென்றால் நாம் இதன் பொருட்டு இழப்புக்குள்ளாவோம் என்பதையும் ஆண் பெண் இருவருமே தங்கள் கல்வி அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் உறுதியாக வலியுறுத்துகிறது. இதை உணர்ந்து அதை சொல் செயல் இரண்டிலும் நிலைநாட்டி நல்லதொரு சமுதாயம் உருவாக நாம் முயற்சிக்க வேண்டும் அதற்கு நமக்கு கருணை காட்டி நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக எல்லாம் வல்ல இறைவன் நாடுவானாக.. ஆமீன்..

டிஸ்கி : கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது... அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை...!!!!!

சகோதரி.
ஆயிஷா பேகம்.

முக்கிய அறிவிப்பு:
முத்துப்பேட்டையில் நாளை (12-05-2012) பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்புரையாற்ற நாடறிந்த பெண் கல்வியாளர்கள்,சிறந்த சொற்பொழிவாளர்கள் கலந்துக்கொண்டு பெண்கல்வி எதற்காக?, முஸ்லீம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்,  இல்லங்களில் இஸ்லாமிய ஒழுக்கம், குடும்ப பொருளாதார நிர்வாகத்தில் முஸ்லீம் பெண்கள் என்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் . இஸ்லாமிய பெண்மணி தளத்தின் உறுப்பினர் சகோதரி மலிக்கா பாரூக் அதனை தொகுத்து வழங்க உள்ளார்.  மேலதிக தகவல்களுக்கு நீரோடைக்கு செல்லவும்.
read more "இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?"

Thursday, May 03, 2012

ஆம்!!! நாங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான்.......!!!




எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.....ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக ஆமீன்....!!
                                     ஏங்க இந்த கொலவெறி? இல்ல தெரியாமதான் கேக்குறேன் ஏன் இந்த கொலவெறி? யார கேக்குறா இவ' அப்டின்னு யோசிக்கிறீங்களா? வேற யார???  ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் மேல தீவிரவாதின்னு முத்திர குத்துற உங்கள மாதிரி ஆட்கள பார்த்துதான் கேக்குறேன்...!!! ஊர்ல உலகத்துல ஒரு குண்டுவெடிப்பு நடந்துட கூடாதே... உடனே எங்க இருந்துதான் இவங்களுக்கு தகவல் கிடைக்குமோ தெரியாது ...
இந்த தாக்குதலுக்கு இன்ன இஸ்லாமிய இயக்கம் பொறுப்பேற்றது

read more "ஆம்!!! நாங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான்.......!!!"